புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
85 Posts - 77%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
250 Posts - 77%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
8 Posts - 2%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 19, 2015 6:56 pm

நாயகன், பலரது உள்ளத்தில் இன்னும் நாயகனாகத்தான் உலா வருகிறார் நமது கமல். பலருக்கும் தெரியாத சிறந்த தகவலுக்கு எப்படி நன்னி சொல்லுவது என்று தெரியவில்லை டாக்டர் சார். வாழ்த்துகள் சார்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 19, 2015 6:58 pm

தொடரவிருக்கும் பாலும் பழமும் அலசலுக்காக காத்திருக்கிறோம், மெதுவாக தாருங்கள்,

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 19, 2015 6:59 pm

தொடரவிருக்கும் பாலும் பழமும் அலசலுக்காக காத்திருக்கிறோம், மெதுவாக தாருங்கள்,

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 22, 2015 3:49 pm

சுமார் ஒரு மாசமா நம்ம டாக்டர் சார் இங்க வராம இருக்காரு, ஏன், உடல் நலம் சரியில்லையாழ அவர் எந்த நோயும் நொடியுமில்லாமல் நலமாக இருக்க வேண்டும்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon Feb 23, 2015 7:44 am

அன்பு மிக்க திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு ,

முதலில் உங்களின் கடிதத்திற்கு மிக்க நன்றி !


நான் இங்கே : " திமிசு கட்டை " மாதிரி நன்றாகத்தான்

இருக்கிறேன் !

வழக்கம் போல ' நேரம் இல்லாத குறை ' தான் !

இடையில் நேரம் இருக்கும் போது "


" பாடிய முதல் பாட்டு "

என்கிற திரியில் பி. லீலா அவர்கள் பாடிய சில பாடல்களின்

தொகுப்பை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் !


" பாலும் பழமும் " கட்டுரை ஏராளமான புகைப் படங்களுடன்

5 பகுதிகளாக தொகுத்து :

" ஏக தம் " ஆக :

ஒரே சமயத்தில் கொடுக்கப் போகிறேன்,


வரும் " பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் 5 தொகுதிகளை

" ஒரே முட்டா" க கொடுக்கப் போகிறேன் ,

பெற்றுக்கொள்ளவும் !



தங்களின் அன்புக்கு என்றும் நன்றியுடன் ,





எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon Feb 23, 2015 7:44 am

அன்பு மிக்க திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு ,

முதலில் உங்களின் கடிதத்திற்கு மிக்க நன்றி !


நான் இங்கே : " திமிசு கட்டை " மாதிரி நன்றாகத்தான்

இருக்கிறேன் !

வழக்கம் போல ' நேரம் இல்லாத குறை ' தான் !

இடையில் நேரம் இருக்கும் போது "


" பாடிய முதல் பாட்டு "

என்கிற திரியில் பி. லீலா அவர்கள் பாடிய சில பாடல்களின்

தொகுப்பை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் !


" பாலும் பழமும் " கட்டுரை ஏராளமான புகைப் படங்களுடன்

5 பகுதிகளாக தொகுத்து :

" ஏக தம் " ஆக :

ஒரே சமயத்தில் கொடுக்கப் போகிறேன்,


வரும் " பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் 5 தொகுதிகளை

" ஒரே முட்டா" க கொடுக்கப் போகிறேன் ,

பெற்றுக்கொள்ளவும் !



தங்களின் அன்புக்கு என்றும் நன்றியுடன் ,





எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Feb 23, 2015 11:33 am

மெதுவாகவே தாருங்கள், முதலில் உங்கள் நேரம்தான் முக்கியம். உங்கள் பணி அப்படி? நன்றி டாக்டர் சார்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Feb 25, 2015 4:34 pm

தொகுப்பு எண் : 8





" பாலும் பழமும் " ( 1961 )




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 ZDmbfU7bTOSTH6Hm29NI+download



படமும்

பாடல்களும் !



ஓர் அலசல் !




] " ப" வரிசை படங்களின் பாடல்கள்

ஒவ்வொன்றும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும்

இரண்டறக் கலந்துள்ளன என்பது உண்மை !


எனவே நான் எழுதும் கடுரை , சில சமயங்களில்

உணர்ச்சிகரமாக அமைந்துள்ளதை நீங்கள்

கவனிக்கக் கூடும் !



இதோ , இப்போது நான் அடுத்து கொடுக்க

இருக்கும் படமும் , பாடல்களும் எங்கள்

குடும்பத்துடன் இணைந்திருப்பதை நிங்கள் படிக்கப்

போகிறீர்கள் !


]ஆதலால், இதுவும்

ஒரு ' குடும்பப் படம் ' தான்






புற்று நோய்க்கு ஆராய்ச்சி

செய்யும் -

டாக்டர் ரவி --


சிவாஜி கணேசன்,





அவரது வாழ்க்கைக்கும் ஆராய்ச்சிக்கும்

உறுதுணையாக இருக்கும்

நர்ஸ் சாந்தி -
------------

சரோஜா தேவி






இவர்களின் காதல் கதைதான்



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 RjyNxLrsQlGIAreabA6e+11734palum



" பாலும் பழமும் " ( 1961




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 VhfoB5sSmW5Yy1B4ujlU+download









" பாகப் பிரிவினை '"


' பாவ மன்னிப்பு '


' பாச மலர் '


அடுத்து......


" பாலும் பழமும் " !


இந்த படத்திற்கும் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பலத்த

எதிர்ப்பார்ப்பு !



" சரவணா பிலிம்ஸ் " ஜி வேலுமணி யின்

இரண்டாவது தயாரிப்பு !



இந்த படம் தயாரிப்பில் இருந்த போது

படத்திற்கு பெயரையே வைக்கப்பட வில்லை !


கடைசி நேரத்தில் :


" பாலும் பழமும் "


என்கிற பெயர் வைக்கப்பட்டது






சிவாஜி கனேசனுக்கு

முற்றிலும் நூதனமான வேடம் !



" டாக்டர் ரவி " !



புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி செய்யும்

டாக்டராக :



மாறுபட்ட " விக்"

மற்ரும்

உடையுடன்

தோன்றினார் , நடிகர் திலகம்


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 895YgCtQAGOW7hl4WVQQ+sg010



அவரது, சிறு அங்க அசைவுகளைக் கூட

கவனித்து கைதட்டும் ரசிகர் குழாம் கால கட்டத்தில்

உயர் மட்டத்து விஞ்ஞானி தோற்றத்தில்

சிவாஜியின் அளவான நடிப்பைக்கண்டு பலர் மெய்

மறந்து ரசித்தனர் !



அதே சமயத்தில்...


உயிருக்குயிராய் காதலிக்கும் தன் இலட்சிய மனைவியின்

மேல் அவர் அன்பை வெளிப்படுத்தும் :

அன்பு கணவனாகவும்

நடிகர் திலகம் ' வெளுத்துக்" கட்டினார் !





சரோஜா தேவி :





எம்ஜிஆர் படங்களில் " கிளாமர்" ஆகத் தோன்றும் சரோஜாதேவி




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 SAO4ieoySsKgJY0socoF+SarojaDevi




சிவாஜி கணேசனின் படங்களில் :

நடிப்பில் சிவாஜிக்கு போட்டியாகவும்

விளங்கினார் !


அழகுக்கு அழகு,

நடிப்புக்கு நடிப்பு !

இரண்டிலும் சரோஜாதேவி , தன் திறமையைக்

காட்டின படம் " பாலும் பழமும் " !



அதிலும் 60 களில் கொடுமையான நோயாக

விளங்கிய ' காச நோய் " பாதிக்கப்பட்ட

நோயாளியாக சரோஜாதே அற்புதமாக நடித்தார் !







இதற்காக அவர் பல நாட்கள் பட்டினி கிடந்து தன்

முகப் பொலிவை இழந்தவராக , ' டி பி ' யில் வாடும்

பெண்ணாக தன் முகத்தை மாற்றிக் கொண்டு

அற்புதமாக சரோஜாதேவி நடித்தார்.




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 WwqRWHSiOT1lj7TRfQca+hqdefault(7)



எம் ஆர் ராதா.





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 A5Gze6d1R4ONj22PeX3y+hqdefault(12)






" டாக்டர் ஆக இருப்பவன் ஒரு நர்ஸ் ஐத்

தான் கல்யாணம் கட்டிக்கணும் !


ஒரு என் ஜினீயர், சித்தாளைத்தான் கட்டிக்கணும் !


ஒரு ஆபிஸர் ஆக இருப்பவன் , ஒரு 'டைப்பிஸ்ட்' த்தான்

கட்டிக்கணும் !



அப்போத்தான் தொழில் வளரும் ! "





என்கிற எம் ஆர் ராதாவின் 'ஜோக்' புகழ் பெற்றது !


இன்னொரு கட்டத்தில் , படத்தில் ஒருவர் - நாகய்யாவோ

அல்லது பாலய்யாவோ , எம் ஆர் ராதாவுக்கு :


" ஆசிர்வாதம் "


என்று சொல்லும்போது, எம் ஆர் ராதா ' டக் ' என்று :



" ஆசி " எனக்கு, " வாதம் " உனக்கு ! "


என்று சொல்வது தமாஷ் !



இப்படி ஒரு சில காட்சிகளே எம் ஆர் ராதா

இந்த படத்தில் வந்தாலும் இவர் வரும் போது கலகலப்புக்கு

பஞ்சம் இல்லை என்று சொல்லலாம் !







இயக்குனர் ஏ பீம்சிங் :






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 ZW6DO1EIRbCfhLKwsOpN+IMG_20131126_200403182



மனித உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து

படங்களை இயக்குவது / எடுப்பது இவருக்கு வழக்கம் !



இவரது படங்களில் " மசாலா" இருக்காது !

சண்டைக் காட்சிகள் இருக்காது !

" Muscle Dance " அல்லது " ஐட்டம் " நடனங்கள் இருக்காது !


இவர் படம் எடுப்பதை இப்போது ' பீல்ட்' இல்

உள்ள மக்களைக் கேட்டால்.....


" Sentimental Feelings "


என்று அலட்சியமாக பேசுவர் !



அதனால்தான் " மங்காத்தா " வுக்கும் " பாலும் பழமும்" க்கும்

வித்தியாசம் ஆகும் !




இந்த " Sentimental Touch " உடன் இவர் படங்களை

இயக்கியதால்.....

53 வருடங்களுக்குப் பிறகும் இந்த படத்தைப் பற்றி இப்படி

இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம் !


" மங்காத்தாவும் " , " பிரியாணி" யும் விலாசம் தெரியாமல்

அமுங்கப் பட்ட 'சோன் பப்படி' ஆகிவிட்டன!



கதை வசனம் : ஜி பாலசுப்பிரமணி & பாசு மணி .





" பாலும் பழமும் "

ஏன் வெற்றி பெற்றது






கணவன் - மனைவி உறவு :



'அண்ணன் -தங்கை உறவை " பாச மலர்'

நல்ல முறையில் எடுத்துச் சொன்னதைப் போலவே....



கணவன் - மனைவியின் உறவை

- அன்பின் வெளிப்பாடு - பாசப்பிணைப்பு -

மனைவியைப் பிரிந்தால் கணவன் படும் பாடு....

கணவனைப் பிரிந்த மனைவி படும் வேதனை.......


இதனை : சிவாஜி கணேசன்,

சரோஜா தேவி

மெல்லிசை மன்னர்கள்,

டி எம் எஸ் - பி சுசீலா

மற்றும்

கவிஞர் கண்ணதாசன் இவர்களைக் கொண்டு

இயக்குனர் பீம்சிங்.....

மிகச் சிறந்த முறையில் படமாக்கியிருந்தார் !




" வாழ்ந்தால் இலட்சிய தம்பதிகள் :

டாக்டர் ரவி - நர்ஸ் சாந்தி

போல் வாழவேண்டும் ! "


என்று அந்த கால இளம் தம்பதியர்கள் உறுதி பூண்டனர்

என்றே சொல்லலாம் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 OGJ91IxyT7CByofRsLS6+DSC06931



பொதுவாக நடிகர் - நடிகையர்களின் பெயர்களை

தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு வைக்கும் உண்ட

இந்த நேரத்தில்...." பாலும் பழமும் " படம் வந்த போது

நிறைய குழந்தைகளுக்கு " ரவி" , " சாந்தி " என்றே

பெயர்களை வைத்து மகிழ்ந்தனர் !


எங்களின் குடும்பத்திலும் அவ்வாறே நிகழ்ந்தது !

எப்படி.....

இன்னும் கொஞ்சம் படியுங்கள்....சொல்கிறேன் !







சிவாஜி கணேசன்

சரோஜா தேவி !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 W81vZLSfeDP9khUYHrQm+pp5



'பாச மலர் "


" சிவாஜி - சாவித்திரி "



நிஜமான அண்ணன் -தங்கை !





" பாலும் பழமும் "


சிவாஜி - சரோஜாதேவி




நிஜமான கணவன் மனைவி




இவர்கள் இப்படித்தான் நடித்தனர் !


" கதையின் போக்கு அப்படித்தான் இருக்கிறது.....எனவே

இவர்கள் இப்படி நடித்தது ஒன்றும் புதுமையா ? "



என்று சிலர் கேட்கலாம் !




கதை அப்படித்தான் இருக்கிறது....

ஆனால் கதைக்கு :


' உயிரோட்டம் " கொடுத்தது யார் ?




இவர்களின் நடிப்பு / அர்ப்பணிப்பு - இவைகளை பாடல்களை

நான் கொடுக்கும் போது எழுதட்டுமா ?






மெல்லிசை மன்னர்கள்

கவிஞர்

டி எம் எஸ் - பி சுசீலா .






" பாலும் பழமும் " படத்தின் பாதி வெற்றிக்கு

மேற்கண்ட நபர்கள்தான் காரணம் !



பாடல்களைத் தரும்போது இவர்களைப் பற்றி

பேசலாம !





" பாலும் பழமும் "

படமும் , அந்த படத்தின் வெற்றியும்

அதன் விளைவுகளும் !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 9EVV7SFhQD2IcgStdlmx+DSC06930




" பாலும் பழமும் " படம் சென்னையிலும் மற்றும் பல

இடங்களிலும் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியது !




ஆனால் , அந்த படம் நம்

தமிழ் நாட்டு மக்களை எவ்வாறு பாதித்தது !






1 . 'பாலும் பழமும் ' சேலைகள்!





அதென்னப்பா, " பாலும் பழமும் சேலைகள் ?


" பாலும் பழமும் " படத்தில் சரோஜாதேவி

அணிந்து வந்த சேலையா ?


................இல்லையா !




அந்த காலத்தில் மக்களைக் கவர்ந்த

பெயர்களில் " புடவை டிசைன்" களை புதிதாக

அறிமுகப் படுத்தியதுண்டு !


" பாலும் பழமும் " என்கிற பெயர் மக்களிடையே மிகப்

பிரபலம் அடைந்ததால்...


ஒரு புடவையின் டிசைன் ஐ " பாலும் பழமும் '

என்று வைத்தனர் !





" பாலும் பழமும் " சேலைகள்

எப்படி இருக்கும் ?



இப்படித்தான் இருக்கும்





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 3KtL9yU2RXKftKejjmlz+DSC_2266




" பாலும் பழமும் " சேலைகள் என்றால்

'கட்டங்கள் " போட்ட டிசைன்

உள்ள சேலைகள் ஆகும் !


இன்றும் இணையதளத்தில் கூட இந்த சேலைகள்

விற்கப்படுகின்றன !



( பல வண்ணங்கள் உள்ள சேலைகளை அந்த

காலத்தில் 'டெக்னிக் கலர்' படமான

" கொஞ்சும் சலங்கை' படப் பெயரில்

" கொஞ்சும் சலங்கை சேலைகள் '

என்றனர் ! )






" இதெல்லாம் எப்படி ஐயா,

உங்களுக்குத் தெரியும் ? "




என்கிறீர்களா ?




எங்களை,,

அத்தான் , நான் சாந்திருக்கும் :

செளராஷ்டிரா சமுகத்தை :


நம் தமிழக அரசே

" பட்டு நூல் காரர் "

என்றே இன்றும் அழைக்கிறது !

என் தந்தையார் " பாலும் பழமும் சேலைகளை'

வடிவமைத்து , நெசவாளர்களை வைத்து கைத்தறிகளைக்

கொண்டு தயாரித்தார்......இது...எனக்கு இலேசான

ஞாபகம் !





2.





2 . 'பாலும் பழமும் 'சென்னையில்

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 DtDsUDjQCuTvQjfYYtVV+Paalum_Pazhamum




இந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் போது

இந்த படத்தை எப்படியாவது பார்த்துவிட

வேண்டும் என்ற என் தாயார்

விரும்பினார்களாம் !



ஆனால்.....


அப்போது அவர் நிறை மாத கர்ப்பிணி !


எனினும் தன் அம்மாவை ( என் பாட்டி )

அழைத்து சென்னை "உமா"

தியேடருக்கு ( இப்போது அந்த தியேடர் : 10 மாடி பிளாட்! )

சென்றுவிட்டார் !


அப்போது ......." நான் பேச நினைப்பதெல்லாம்"

சோகப் பாடல் படத்தில் வரும்போது என்

அம்மாவுக்கு பிரசவ வலி........

படத்தை அப்படியே " போட்டு விட்டு"

வெளியே அம்மா ஓடி வர...........

ஆஸ்பத்திரியில் என் தம்பி பிறந்தான் !



என் தம்பியின் பெயர் :


ரவி !


சரி, அப்போது நான் எங்கே இருக்கிறேன் ?


நானா !


என் பாட்டி என்னை தன் இடுப்பில்

" தூக்கி “


வைத்திருந்தாராம் !


படிக்க தமாஷ இல்லே !






3 .






3 . " பாலும் பழமும் " படத்தில் சிவாஜி

கணேசனுக்கு மேக் அப் போட்ட ஒப்பனையாளர்,

தன் கற்பனைத்திறனால் சிவாஜிக்கு மிக அழகான

" கெட் அப் " இல் மேக் அப் போட்டார் !


இந்த கால கட்டத்தில் அவரின் துணையாருக்கு ஓர்

ஆண்குழந்தை பிறந்தது !



அந்த குழந்தையின் பெயர் : ரவி !


அந்த குழந்தைதான் என்னுடன் மருத்துவம் படித்த

டாக்டர் ரவி






4.





4.






4 . நம் ஈகரை இல் யே :


" ரவி "

என்கிற பெயரில் பல மெம்பர்கள் இருப்பதை நீங்கள்

பார்த்திருக்கலாம் !

அவர்களில் பெரும்பாலானோர் 1961 களில் பிறந்தவர்களாக

இருந்தால் அதற்கு " பாலும் பழமும் " தான் காரணம் !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 M9aps015SvO4YZC5GT8K+Paalum_Pazhamum_300


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Feb 25, 2015 4:36 pm

" பாலும் பழமும் "


பாடல்கள் !






மெல்லிசை மன்னர்கள்.





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 KED2FjFIRumwHYY9JBeE+images(2)




" நாவல்டி.....புதுமை...அப்படி

ஏதாவது செய்யணும்னு வெறி இருந்தது.

ஆனால், பழைமை மாறாத புதுமை பண்ணணும்னு

நினைத்தோம்.

எந்த பாடலை எடுத்தாலும் ஒரு ராகம் இருக்கும்,....அதனை

கொஞ்சம் மாற்றி அமைத்து ......கொஞ்சம் வெஸ்டர்னைஸாக

பண்ணி .....இப்படி ஒரு விதமாக சேஞ்ச் பண்ணினோம் !



முழுக்க முழுக்க கிளாசிகலா இருந்ததை மாற்றி,

லைட் கிளாசிகலா பண்ணி

ஜனரஞ்சகமாக கொடுத்தோம் ! "



...........................சொல்பவர் :






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 HxgForXQpiIPyftClSoQ+images(1)




மெல்லிசை மன்னர்களின் பாடல்களைப் பற்றி

நான் சொல்லி உங்களுக்கு தெரியப் போவதில்லை !







ஆனால் இதனை நான் சொல்லியே ஆகவேண்டும்






" பாலும் பழமும் " இந்தியில்



" சாத்தி "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 DCESdWjMScOAJv9ayKbP+Saathi



என்கிற பெயரில் தயாரான போது அந்த படத்திற்கு இசையாமைக்க

மெல்லிசை மன்னரின் குரு :

நெளஷாத்

இசையமைக்க மறுத்து விட்டாராம் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 NEXLGGLxR1SeIwEp5RwY+rafi_baijubawra




( முகமது ரபி அழகாக பாடுவதை குமட்டில் ( ! ) கையை வைத்து

அவரின் இசையமைப்பை ரசிக்கும் நெளஷாத் !

கொடுத்துவைத்தவர் !

யார் ?

இருவரும்தான் ! )




என்னவாம் ?


மெல்லிசை மன்னர்களைப் போல

தன்னால் இசையமைக்க முடியாது என்று சொல்லி

விட்டாராம் !


எனவே, இந்தியிலும் மெல்லிசை மன்னர்களே

இசையமைக்க நெளஷாத் விரும்பினாலும், மெல்லிசை

மன்னர்கள் மறுத்துவிட்டார்களாம் !



இந்தியில் பாடல்கள் எப்படி ?


" நான் பேச நினைப்பதெல்லாம் " பாடலின் இந்தி வடிவத்தை

முகேஷ் - சுமன் கல்யாண்புர்ன் பாடியது

தவிர மற்றவை சுமார் ரகம்தான்!



TFMLover கொடுத்த இந்த விடியோ வில் இந்தியுடன் ,

தமிழ் " பாலும் பழமும் " ' நான் பேச நினைப்பதெல்லாம்"

சிவாஜி கணேசன் - சரோஜாதேவி

தோன்றி வருவதைப் பார்க்கும் போது எனக்கு

மெய்சிலிர்த்தது !


தமிழ்ப் பாடலுக்கும் இந்திப் பாடலுக்கும் என்ன வித்தியாசம்

பாருங்கள் - கேளுங்கள் !













பின்னணி :


T . M. செளந்திரராஜன்

P . சுசீலா




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 U5xtCcA7QzqxAOiwuCgU+DSC06935



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 LEGBFGTLQkKspTWbIXHT+09180705




இந்த படம் வந்த காலகட்டத்தில் வந்த

படங்களில் " பின்னணி பாடியவர்கள் "

என்றால்.....அது :


இவர்கள் மட்டும்தான் !


என்கிற அறிவிப்போடு பல படங்கள் !





" பாலும் பழமும் "

இதற்கு எடுத்துக்காட்டு !



மற்ற படங்களில் சில :


1. " தாய் சொல்லைத் தட்டாதே "


2. " தர்மம் தலை காக்கும் '


3. " தாயைக் காத்த தனையன் "






டி எம் எஸ்.



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 WM1awg0rR3yHx55UBjvQ+TMS052414



இவர் காட்டில் அப்போது அடை மழை !


எக்கச்சக்கப் படங்கள் !


ஏராளமான பாடல்கள் !


" பாலும் பழமும் " வெளிப் புறப் படப்பிடிப்பு

ஊட்டியில் !


படக் குழுவினர் போகவேண்டும் !


பாடல்கள் தயாராக வில்லை !


காரணம் :



டி எம் எஸ் க்கு சரியான ஜலதோஷம் !


அவரால் வழமையான குரலில் பாட முடியாத நிலை !


" என் உடல்நிலை சரியான உடன் பாடுகிறேனே ! "

.......................சொன்னவர் டி எம் எஸ் !




" பரவாயில்லை !

கதாநாயகன் ஊட்டியில் பாடும் காட்சிதான் !

......நீங்கள் ஜலதோஷத்துடன் பாடினால்

பொருத்தமாகத்தான் இருக்கும் ! "



...................சொன்னவர்கள் : தயாரிப்பு நிர்வாகிகள் : " பாலும் பழமும் " !



நேரம் காலம் நல்லா இருந்தா

தெய்வமும் கூரையை பீய்த்து

கொடுக்குமாம் !




டி எம் எஸ் " ஜலுப்பு" கொண்டு பாடிய

மிக மிக புகழ் பெற்ற பாடல் :


" போனால் போகட்டும் போடா ! "


பாட்டா ! ?






பி சுசீலா





1.. " ஆலைய மணியின் ஓசையை நான் கேட்டேன் "



2. " நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ! "



3. " காதல் சிறகை காற்றினில் விரித்து "



4. " இந்த நாடகம் அந்த மேடையில் "



5. " என்னை யார் என்று எண்ணி "



6. " தென்றல் வரும் சேதி வரும் " ( படத்தில் இல்லாத பாடல் ! )




ஆக மெஜாரிட்டி பி . சுசீலா அம்மாவுக்கு !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 MN22s4XFTOarXsSdt8cw+ps_husband1


( கணவருடன் பி. சுசீலா ! )



பி சுசீலாவின் கொடி உச்சத்தில் பறந்தது......


" பாலும் பழமும் " படத்திற்கு பிறகு !


பி சுசீலா, புகழின் உச்சிக்குப் போனார் !


என்ன செய்தார் பி சுசீலா ?


பாடுவதற்கு வாங்கும் ஊதியத்தை

கூட்டிவிட்டார் !


ஒரு பாடலுக்கு ரு 500 வாங்கியவர் ரு 1000 வாங்கியதாக

கேள்வி !



இதனால் கடுப்பான மெல்லிசை மன்னர், பின்னர் வந்த

" ஆலையமணி " , " சுமைதாங்கி " போன்ற படங்களின்

ஒரு சில பாடல்களை எஸ் ஜானகி க்கு

வழங்கினார் என்று சொல்லப் படுகிறாது !



குறிப்பு :


மேற்கண்ட செய்திக்கு உறுதியான ஆதாரம் என்னிடம்

இல்லை !



" ..........பாடிய பாடல்களுக்கு சுசீலாவால்

எதையோ கூட்ட முடிந்தது என்பதுதான் உண்மை ! "


.....................சொல்பவர் : திரு வாமனன் !..






கவிஞர் கண்ணதாசன்.





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 NSJOMVECQby1LVHOji80+DSC06714




" பாலும் பழமும் "

பாடல்களின் தலைவன் !




நான் தரப் போகும் இந்த படத்தின் பாடல்களில் :


கண்ணதாசன்


பெயரை எழுதாமல் என்னால் முடியாது !




கண்ணதாசனைத் தவிர வேறு

பாடலாசிரியரும் , தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களை

பாடங்களை, படிப்ப்பினைகளை தாங்கள் எழுதிய

பாடல்களை புகுத்தினர் என்பது கிடையாது !



[b]
எனவேதான் மற்ற கவிஞர்கள், கண்ணதாசனுக்கு

நிகராகவும் - சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் மேலாக

எழுதிய போதிலும் , :

இந்த வாழ்க்கை அனுபவப் பாடல்களில் கண்ணதாசன்

விஞ்சி நிற்கிறார் என்பது கண்கூடூ !
[/b


( கவிஞர் வாலி, தன் தாயார் இறந்த பிரிவை :

" உறவு என்றொரு சொல் இருந்தால் " பாடலை

எழுதினார் என்றும்...

" என்னைப் பாட வைத்தவன் ஒருவன் " என்கிற 'அரச கட்டளை'

பாடலை ஜெயலலிதாவுக்கு எழுதினார்

என்றும் அவரே எழுதியுள்ளார் ! )



[b] கவிஞர் கண்ணதாசன், எப்படி தன் வாழ்க்கை

அனுபவங்களை " பாலும் பழமும் " பாடல்களில்


எழுதினார் என்பதை இதோ....பார்க்கப் போகிறோம்




mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Feb 25, 2015 4:38 pm


பாடல்கள் :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 9tbH1N5qT16CQedeqnzE+download




எல்லா பாடல்களையும்

எழுதியவர் : கண்ணதாசன் !



எல்லா பாடல்களையும் பாடியவர்கள் :


டி எம் எஸ் & பி சுசீலா !








1. " ஆலையமணியின் ஓசையை நான்

கேட்டேன் ! "




http://picosong.com/2YbZ






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 Hv9yfxzaSE2RJjN5DIoc+hqdefault(8)





' பின் தூங்கி முன் எழும் பத்தினியாக '

நர்ஸ் சாந்தி விடியற்காலையில் எழுந்திருக்க, கணவன் டாக்டர்

ரவி இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, குளித்து விட்டு துளசி மாடம்

அருகே சாந்தி பாடும் பாட்டு !


இந்த பாடலின் சூழ்நிலையை நீங்கள்

அறிந்து கொண்டால், பாடலை இன்னும் அதிகமாகவே

ரசிக்க ஆரம்பிக்கலாம் !


மங்களகரமாகத் தோன்றும் சரோஜாதேவியின்

தோற்றமும்,

சுசீலாவின் குரலும்

நம்மை மயக்கும் !



1. முதலில் தொடங்கும் ஆலையமணியின் ஓசை, வேறு

எந்த பாடலிலும் கேட்கமுடியாது.


பொதுவாக மணியோசை என்பது

இசை அல்ல, ஓசை!


ஆனால் இந்த பாட்டில் மணியின் ஓசை கூட இசை மாதிரியே

அமைதியாக, அடக்கமாக ஒலிப்பது மிகவும் சிறப்பு !




2. அதற்கு அப்புறம் ஒலிக்கும் வயலின் களின் இசை , மெல்லிசை

மன்னர்களுக்கே உரியது !



3. பி சுசீலா !

இந்த பாடகிக்கு மிகப் பெரிய புகழைக் கொடுத்த பாடல் இது !

மிகவும் அமைதியாக இனிமையாக சுசீலா பாடும் இந்த

பாடல் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இனிமை !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 4fvFuMGAT2KDXfdBXVRA+2009072950010101




4. ஷெனாய் இசை !


இந்த பாடலின் இடைவெளி இசையில் இரு முறை வரும்

ஷெனாய் இசை அற்புதம் !




இந்த பாடலில் இடம் பெற்ற ஷெனாய் சோலோ இசையை

அழகாக வாசித்தவர் , மெல்லிசை மன்னரின் இசைக்குழுவைச்

சேர்ந்த சத்யம் என்பவர்.


சத்யம் எப்போதும் , மெல்லிசை மன்னரின் முகத்தைப்

பார்த்துக்கொண்டே ஷெனாய் வாசிப்பாராம் !


என்ன காரணம் ?

மெல்லிசை மன்னரின் முகத்தில் காணப்படும் முக மாறுதல்

களை வைத்தே தான் நன்றாக வாசித்தோமா இல்லைய என்பதை

அறிந்து கொள்வாராம் !


அப்படி ஒருநாள், இப்படி ஷெனாய் வாசித்து விட்டு வீடு

சத்யம் வீடு திரும்பும்போது மிகவும் மனம் நொந்தபடியே

சென்றாராம்.

அங்கே வீட்டில் தன் மனைவியுடன் சரியாக பேசவில்லையாம்,

சரியாக சாப்பிடவில்லையாம், சரியாக தூங்கவும் இல்லையாம்!


இதனைப் பார்த்த அவரின் துணைவியார், மெல்லிசை மன்னருக்கு

போன் செய்து நடந்ததை " என்ன நடந்தது அவருக்கு ? "

என்று கேட்கும் அளவுக்கு போய் விட்டதாம் !


மெல்லிசை மன்னரின் இசைக் குழுவில்

இப்படி எல்லாம் நல்ல மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் !



ஒரு முறை பிரபல ஷெனாய் வித்வான்

பிஸ்மில்லா கான், மெல்லிசை மன்னரை சந்தித்த போது

இந்த " ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேனே ! "

ஷெனாய் இசையை அவரே வாசித்துக் காட்டி மெல்லிசை

மன்னரை பாராட்டி மகிழ்ந்தாராம் !



( ஆதாரம் :

" என்றும் எம் எஸ் வி " - ராணி மைந்தன் - பக்கம் 206 )






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 FWF2DmXLRBiOdmGBpKdU+04009




இவர்தான் , " பொண்ணுக்கு தங்க மனசு " படத்தில் வரும்

" தேன் சிந்துதே வானம் " பாடலில் வரும் ஷெனாய் இசையை

வாசித்தவர் என்பதும் நான் படித்தது...


மேற்கண்ட செய்திகளில் தவறுகள் இருந்தால்

என்னைத் திருத்தவும் !


மெல்லிசை மன்னர், பிஸ்மில்லா கானை, " தீர்க்க சுமங்கலி

வாழ்கவே " - என்கிற " தீர்க்க சுமங்கலி " படப்பாடலுக்கு

ஷெனாய் வாசிக்க பிஸ்மில்லா கானை அழைத்தாராம் !






இந்த பாடலை கண்ணதாசன்

எப்படி எழுதினார் ?





1.


கவிஞர் வசித்து வந்த வீட்டுக்கு எதிரே ஒரு பெரிய பூங்கா

உண்டு.


விடியற்காலையில் எழுந்து விட்டால், கவிஞர் தன் வீட்டின்

வாசலில் வந்து நிற்பார், பொழுது புலரும் நேரத்தில் :

பறவைகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு மகிழ்வார்!



" அதிகாலை 6 மணிக்கு ஒரு நாள் ஏதோ ஓர் ஊரில் படுக்கையில்

புரண்டு படுக்கும் போது, பக்கத்து கோவில் மணியோசை

கவிஞர் காதில் விழுந்தது, அவரின் தூக்கம் கலைந்தது!


பறவைகள் ஓசை கேட்டது.


பக்தி மார்க்கம் அவரை இழுத்த நேரமாம், அவருக்கு!



சில மாதங்கள் கழித்து.......


" ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன் "

பாடல் கவிஞரிடம் பிறந்தது !




( ' எனது வசந்த காலங்கள் "

புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியது. )





2.


கவிஞர் , மதுரைக்கு இரயிலில் சென்று கொண்டிருக்கிறார்.

அதிகாலையில் கவிஞர் கண்விழித்து , இரயில் கதவோரமாக

சாய்ந்து கொண்டிருந்த வேளையில் :


அருள் வாசகமாக தோன்றியது :


" ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன் "


என்கிற வாசகம் !



' சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் '


என்கிற நூலில் கண்னதாசன் இதனை குறிப்பிடுகிறார் !




ஆக, கவிஞரின் சொந்த அனுபவம் /

அனுபவங்களில் உதித்த பாட்டு இது !






கணவனைப் பார்த்து / நினைத்து / நோக்கி


மனைவி பாடும் சில திரைப்படப் பாடல்களில்


எனக்குப் பிடித்தவை :





1. " மலர்கள் நனைந்தன பனியாலே " - " இதயக் கமலம் "



2. " வெள்ளிக்கிழமை விடியும் நேரம் " - " நீ "



3. " ஓர் ஆலையம் ஆகும் மங்கை மனது " - " சுமதி என் சுந்தரி "



4. "தண்ணிலவு தேன் இறைக்க " - " படித்தால் மட்டும் போதுமா "



5. " உன்னை அடைந்த மனம் வாழக " - " ஆனந்தி "



6. " கண்னுக்கு குலமேது கண்ணா " - " கர்ணன் "



7. " தங்கத்திலே குறை இருந்தாலும் தரத்தில் " - " பாகப்பிரிவினை"



8. " நாற்பது வயதில் " - " பாரத விலாஸ்"



9. " நான் நன்றி சொல்வேன் " _ " குழந்தையும் தெய்வமும் "


போன்ற பாடல்கள் !








2. " நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேசவேண்டும் ! "


மகிழ்ச்சி :





http://picosong.com/2YQc/



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 BSCU0BjSSiesFWAHb5xR+0




அந்த காலத்தில் காதல் 'டூயட்' பாட்டுக்கள்,

" மானே " , " தேனே " , " குயிலே " , " மயிலே "

என்றுதான் 'பாரம்பரியமாக' எழுதிவந்தனர் !

மெல்லிசை மன்னர்கள் இசையமைக்கத் தொடங்க ஆரம்பித்ததும்,

இதனை மாற்றி அமைக்க முனைந்தனர் !


முக்கியமாக மெல்லிசை மன்னர் - கண்ணதாசன்

மற்றும்

மெல்லிசை மன்னர் - வாலி

கூட்டணி இந்த 'வேலை' யை தொடங்கியது !



1. " கொடி அசைந்ததும் காற்று வந்ததா" ( " பார்த்தால் பசி தீரும் " )



2. " பறக்கும் பந்து பறக்கும் " ( " பணக்கார குடும்பம் " )



3. " இந்த புன்னகை என்ன விலை " ( " தெய்வத்தாய் " )



4. " குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான்

வரட்டுமா " ( " எங்க வீட்டுப் பிள்ளை " )



5. " நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் "

( " வாழ்க்கை வாழ்வதற்கே" )



6. " ஒடிவது போல் இடை இருக்கும் - இருக்கட்டுமே ! "

" இதயத்தில் நீ " )



7. " யாரது யாரது தங்கமா " - " என் கடமை "



8. " தொட்டால் பூ மலரும் , தொடாமல் நான் மலர்ந்தேன்"

- " படகோட்டி "



9. " போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் "


- ( " சர்வர் சுந்தரம் " )



போன்ற பல பாடல்கள் இப்படித்தான் விளைந்தன !



அந்த வரிசையில் உள்ள முக்கியமான

பாடல்தான் :


" நான் பேச நினைப்பதெல்லாம் " !





இந்த பாடல் எப்படி உருவானது ?




" பாரதி பிலிம்ஸ் "

என்கிற பெயரில் ஒரு புதிய படக் கம்பனியை யாரோ

துவக்கி இருந்தார்கள்.

தாங்கள் தயாரிக்க இருக்கும் முதல் படத்திற்கு பாடல்களை

எழுதித் தர வேண்டி நின்றார்கள், கண்ணதாசனிடம் !








ஒரு பாடலின் சூழ்நிலை:






படத்தின் நாயகி, தன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து கொண்டு

பூப் பறித்துக்கொண்டே பாடலைப் பாடிக்கொண்

டிருக்கிறாள் .


பக்கத்து வீட்டில் இருக்கும் கதாநாயகன், இந்த பாட்டைக் கேட்டு

அந்த பெண்ணிடம் தன் மனதை பறி கொடுக்கிறான் .


பின்பு அவளை நேரிலும் பார்த்து அவளின் அழகைப் பார்த்தும்

மனதை பறிகொடுக்கிறான் !



பின்பு.......


அடம் பிடித்து... தன் பெற்றோரிடம்

சண்டை போட்டு , அந்த பெண்ணை திருமணம் செய்து

கொள்கிறான் !


முதல் இரவு....

அப்போதுதான் தெரிகிறது அவனுக்கு....

தான் மணம் முடித்த பெண் :

ஓர் ஊமை என்பது !


கோபத்துடன் அவன் முதல் இரவு நடக்கும் அறையை விட்டு

வெளியே வருகிறான்.


வெளியே.......


நாயகியின் தங்கை அங்கே நின்று கொண்டு

அதே பாட்டை பாடுகிறாள் !


அப்போதுதான் தெரிகிறது அவனுக்கு !


பூப் பறிக்கும் போது அக்கா வெறும் வாயசைக்க

தங்கை " டப்பிங்க்" கொடுத்திருக்கிறாள் என்பதை !


பின்பு நாயகன் தன் ஊமை மனைவியுடுன் சேர்ந்து வாழ்வதற்கு

அந்த தங்கைக்கு போடும் நிபந்தனை என்ன தெரியுமா ?




" நான் உன் அக்காளுடன் சேர்ந்து வாழ

வேண்டும் என்றால் , நீ திருமணம் செய்து கொள்ளாமல்,

எங்களுடன் பாட்டு பாடிக்கொண்டே இருக்கவேண்டும் ,

நான் விரும்பியதோ நீ பாடும் பாட்டுத்தானே தவிர

உன் அக்காளை அல்ல! "




தங்கை சம்மதித்து கூடவே இருக்கிறாள்....

பாட்டு பாடிக்கொண்டே !



அக்காளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது !


அந்த தாயால் தன் குழந்தைக்கு தாலாட்டு பாட முடியவில்லை.



அந்தத் தாயால் பாடமுடியாத தாலாட்டுப்

பாட்டை, அவளின் தங்கை பாடுகிறாள் !



இதுதான் காட்சி அமைப்பு :



கவிஞர் எழுதுகிறார் :


" தாய் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும் !


தாய் தூங்க தாலாட்டு

நீ பாட வேண்டும் !

நீ பாடும் தாலாட்டைத்

தாய் கேட்கவேண்டும் ! - தன்

நிலை மாறி அவள் கூட

மொழி பேசவேண்டும் ! "



கதைக்கென்றே பிறந்த அழகான பாட்டு !


ஆனால்.......


" பாரதி பிலிம்ஸ் " மூடப்பட்டது.....

படம் வெளிவரவில்லை.....

பாட்டும் அப்படித்தான் !


இப்போது....

" பாலும் பழமும் "!



கண்ணதாசன், அந்த

தாலாட்டுப் பாட்டை, 'டூயட் '

பாடலாக மாற்றி விட்டார் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 W0yjXyR1iACw5CdDzhxA+hqdefault(1)





" நான் பேச நினப்பதெல்லாம்

நீ பேச வேண்டும் !


நாளோடும் பொழுதோடும்

உறவாட வேண்டும் ! "





காதலி, காதலனுக்கு உத்தரவுகளைப்

போடுகிறாள்....

காதலன் அவைகளை ஏற்றுக்கொள்கிறான் !

எப்படி ?

" ஹம்மிங் " பாடிக்கொண்டே !


இன்னொன்று :


ஒவ்வொரு வரிகளையும் ஒரு முறைக்கு

இரு முறை பாடுவதால்..

அந்த " உத்தரவு" கள் இருவருக்கும் பொருந்தும்

என்பதும் தெரிகிறதல்லவா !





ஒருவர் மீது இன்னொருவர்

காட்டும் உரிமை தான்

அளவற்ற காதல் !





" பாவை உன் முகம் பார்த்து

பசியாற வேண்டும் ! "




ஒரு தாய் தன் குழந்தையப் பார்த்து

சொல்லவேண்டியதை இங்கே,

மனைவி, கணவனைப் பார்த்து சொல்வது

மிகப் பொருத்தம் அல்லவா !






" சொல்லாத சொல்லுக்கு

விலை ஏதும் இல்லை ! "




அப்படி என்றால் என்ன ?



சொல்லை சொன்னால்தானே விலை !

இந்த பாட்டை நான் இன்னும் விளக்கி சொல்லாவிட்டால்

அதற்கு ஒரு விலை உண்டா !







" அன்பு மிகுந்திருக்கும் இடத்தில்

அமைதியிலேயே

பரிமாற்றங்கள் நடக்கும் !


" அருகருகே இருக்கின்றோம் "

என்கிற உணர்வு தரும் மன நிலையை விட


வார்த்தைகள் தேவையா, என்ன !





எண்ணங்கள் வெளிப்படையாக

இருக்கும் போது ,

சொற்கள் பயனற்றவைதான்......

எனவேதான் அதன் விலை " 0 " பைசாதான் !






The Untold Words

Has No Price ! "



என்று " பீடர் " மட்டும் பேசுபவர்களிடம் சொல்லிப்

பாருங்கள் !



" இந்த வரி எந்த

இலக்கியத்தில்

உள்ளது ? "



என்று கேட்பார்கள் !




திரை அரங்குகளை

இலக்கிய அரங்குகள் ஆக

மாற்றியவர் :

கண்ணதாசன் !






3 . " நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேசவேண்டும் ! "


சோகம் :






http://picosong.com/2YQj/





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 18 ENevKe9xTgSuAv9WJkct+naan--sad




இந்த பாடல் " நான் பேச நினைப்பதெல்லாம் " பாடலின்

சோக வடிவம்.


சோக வடிவம் இருந்தாலும், இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம்

மகிழ்ச்சியான

பாடலை நினைவூட்டுவதால் லேசான கிளர்ச்சி மனதில்

ஏற்படுகிறது என்பது உண்மை !





' பாடு, லீலா "



சிவாஜி கணேசன் பேசும் ( டி எம் எஸ் அல்லது சிவாஜி ? )

இந்த குரலை இப்போதும் கேட்டாலும் மெய் சிலிர்ச்சிறது !


மொத்தத்தில் அருமையான சோகப் பாட்டு !






இதோ , அடுத்த பகுதி !


எம்கேஆர்சாந்தாராம்


Sponsored content

PostSponsored content



Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக