புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
29 Posts - 58%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
14 Posts - 28%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 2%
Barushree
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 2%
nahoor
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
83 Posts - 74%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
4 Posts - 4%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
nahoor
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
Barushree
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 10 of 26 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Sep 04, 2014 4:47 pm

ராஜா wrote:அன்புள்ள டாக்டர் சாந்தாராம் ஐயா அவர்களுக்கு , மிக அருமையான ஒரு பொக்கிஷத்தை எங்களுக்கு வாரி வழங்கி கொண்டு உள்ளீர் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. தொடர்ந்து இது போல உங்களின் சிறப்பான பதிவுகள் ஈகரையை அலங்கரிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

-ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1080556  





 

  அன்புள்ள திரு .ராஜா அவர்களுக்கு ,

வணக்கம் !

எனக்கு நன்றி சொல்லவேண்டாம் , ராஜா சார் !

தொடர்ந்து படியுங்கள் !

அது போதும் எனக்கு !

தமிழ்த்திரைப்பட உலகம் ஒரு கடல் !

அதில் இருந்து சில துளிகள் தான் நான் தருகிறேன் ,

இன்னும் பல வருடங்கள் எழுதினாலும்

'இந்த கடல் '

வற்றாது !

என்ன,  எழூதுவதற்கு எனக்கு ஆயுசு மற்றும் " தாவு "  தேவை !

( " தாவு " =  சக்தி ! )

உங்கள் மடலுக்கு நன்றி , ராஜா சார் !  





எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 05, 2014 10:14 am

அன்பு நிறைந்த டாக்டர் சாந்தாராம் அவர்களே, உங்களுது இத்தொடர் அப்படியே நிற்கிறது, தயவு செய்து தொடருங்கள். நல்ல தகவல்கள் தொடர வேண்டும் உங்களது விருப்பமும் அதுதானே. தொடருங்கள், நன்றியுடன் காத்திருக்கிறோம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 05, 2014 6:43 pm

மாணிக்கம் நடேசன் wrote:அன்பு நிறைந்த டாக்டர் சாந்தாராம் அவர்களே, உங்களுது இத்தொடர் அப்படியே நிற்கிறது, தயவு செய்து தொடருங்கள். நல்ல தகவல்கள் தொடர வேண்டும் உங்களது விருப்பமும் அதுதானே. தொடருங்கள், நன்றியுடன் காத்திருக்கிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1085037

ஆமாம் ஐயா , தொடருங்கள் புன்னகை இது எங்களின் அன்பு கட்டளை புன்னகை

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Sep 06, 2014 8:04 am

ஜாஹீதாபானு wrote:அருமையான தகவல்கள் சாந்தாராம் அண்ணா... தொடர்ந்து இது போல அரிய தகவல்களை பதிவு செய்யுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1080701


 

   சகோதரி ஜாஹிதா பானு  அவர்களுக்கு ,

தங்களின் மடலுக்கு நன்றி !

எனது அடுத்த கட்டுரை இன்று மாலைக்குள் !

நன்றியுடன் !



எம்கே ஆர் சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Sep 06, 2014 8:07 am

ஸ்ரீரங்கா wrote:பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1080703



மிக்க நன்றி ,

திரு. ஸ்ரீ ரங்கா அவர்களே.




எம்கே ஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Sep 06, 2014 8:12 am

Dr.S.Soundarapandian wrote:காணக் கிடைக்காத புகைப்படங்கள் , கேட்டறியாத வரலாறுகள் , இளைய தலைமுறை அறிய வேண்டிய சமுதாய நுட்பங்கள் , இப்படிப் பலகோணங்களில் பயனுள்ளவை சாந்தாராம் அவர்களுடைய  பதிவுகள் !

இன்னும் தாருங்கள் சாந்தாராம் அவர்களே !  

 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 3838410834 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 1571444738 மீண்டும் சந்திப்போம் 
மேற்கோள் செய்த பதிவு: 1080721




 

   அன்புள்ள டாக்டர் . செளந்தர பாண்டியன் அவர்களுக்கு,

உங்களின் மடலுக்கு மிக்க நன்றி !

நீங்களும் என்னுடைய கட்டுரையை படித்து வருவது

எனக்கு பெருமையாக உள்ளது !

உங்களின் விருப்பம் போலவே  நான் தொடர்ந்து எழுதுவேன் !

தொடர்ந்து படித்து உங்களின் எண்ணங்களை எழுதினால்

மகிழ்ச்சி அடைவேன் !


நன்றியுடன்,



எம்கே ஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Sep 06, 2014 8:18 am

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அன்பு நிறைந்த டாக்டர் சாந்தாராம் அவர்களே, உங்களுது இத்தொடர் அப்படியே நிற்கிறது, தயவு செய்து தொடருங்கள். நல்ல தகவல்கள் தொடர வேண்டும் உங்களது விருப்பமும் அதுதானே. தொடருங்கள், நன்றியுடன் காத்திருக்கிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1085037

ஆமாம் ஐயா , தொடருங்கள் புன்னகை இது எங்களின்  அன்பு கட்டளை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1085214




   

   திரு . மாணிக்கம் நடேசன் ,

மற்றும்

திரு . ராஜா  அவர்களுக்கு ,


" சாந்தி " - " யார் அந்த நிலவு "  கட்டுரை சற்று

நீளமானவை .....

எனவே நேரம் அதிகம் எடுத்துக்கொண்டேன் !



தாமதம் செய்ததற்கு மன்னிக்கவும் !


இதோ இன்று மாலை .....


நன்றி !



எம்கே ஆர் சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Sep 06, 2014 5:07 pm

    தொகுப்பு - 5







    எனக்குப் பிடித்த

திரைப்படப் பாடல் :



" யார் அந்த நிலவு ,

என் இந்த கனவு ? "


(  படம் : " சாந்தி " ( 1965 )   )  





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 EsAVrRwzScKOzeBz2sBG+movieposter


தமிழ்த் திரைப்படங்களில் - சரியாக சொல்ல

முடியாவிட்டாலும் - ' குத்து' ( ! )  மதிப்பாக - கிட்டதட்ட :

60, 000  பாடல்களாவது தேறும் !


.....அவைகளில்.....



" யார் அந்த நிலவு - ஏன் இந்த கனவு ? "

பாடலை மட்டும் - அதுவும் ஒரே ஒரு பாடலாக நான் தேர்வு

செய்ய என்ன காரணம் ?



சொல்கிறேன் .....சொல்வதற்குத் தானே  இந்த தலைப்பைப்

போட்டு எழுதி உள்ளேன் !




இப்போது தமிழ்த் திரைப்படங்களில் வரும் பாடல்கள்

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாகத்தான்

வருகின்றன !


அதுவும் பாடல்களில் :

இனிமை - மற்றும் - ' மெலடி' போன்ற  என்றும் நிலைக்கும்

'ஐட்டங்களை' புறக்கணித்துவிட்டு :


" இந்த நடிகை பாடினால்......ஹி....ஹி ...மன்னிக்கவும் ...

வாயத் திறந்தால் போதும் ! "




' அந்த நடிகர் இந்த படத்தில் ஒரு பாடலைப் பாடலைப்

பாடுவது போல் " நடித்தாலே"  போதும் ! "


என்று நினைத்து செயல்படும் அளவுக்கு பாடல்களை

இசையமைக்கின்றார்கள் !



சில வருடங்களுக்கு முன்பு வந்த " கந்தசாமி " என்கிற படத்தில்

அனைத்துப் பாடல்களை பாடியவர் :

நடிகர் விக்ரம் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 ELpAxcMTRnCiu9kTfLbj+kandasamy_061




(  ' மிஸ். கந்தசாமி ' - விக்ரம் ! )  




நீங்களே சொல்லுங்கள் :    ' நடிகர் விக்ரம் அவர்களின் நடிப்பை

நாம் ரசிக்க முடியும் - ஆனால் அவர் பாடினால் - அதுவும் - அனைத்துப்

பாடல்களையும் - ரசிக்கவா முடிகிறது ! ?





(   " கந்தசாமி "   படத்தைக் கூட எங்களால் ரசிக்க

முடியலையே, ஐயா ! "

என்று  நீங்கள் அங்கலாய்ப்பத  எனக்கு கேட்கிறது - அது வேறு கதை ! )




 ஆனால் , அந்த காலத்தில் ?

அது வேறு 'கனாக் காலம் ! '


அந்த காலத்தில் பாடல்களை  வடிவமைப்பதில் ஓர்

ஆரோக்கியமான போட்டியே

இருந்தது !




" ஆரோக்கியமான போட்டி "   என்றால் என்ன ?


சொல்கிறேன் !






   %%%%%%%%%%%%%%%%%%%





       பாடல்கள் படத்தில் சிறப்பாக

வருவதில் , அந்த  பாடலில் பங்கு கொண்டவர்கள் எந்த வித:

தியாகமும்

செய்யத் தயாராக இருந்தார்கள் !








   எடுத்துக்காட்டுக்கள் !  




    1. " புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே !

தங்கச்சி கண்ணே ! "

- அண்ணன் , தங்கையை அறிவுரை சொல்லும் பாசமிகு பாடல்,

" பானை பிடித்தவள் பாக்கியசாலி "   படத்தில்.

திருச்சி லோகநாதன் பாடிய இந்த பாடல்  அவருக்கு பெரும் புகழைத்

தந்து.

இதே திருச்சி லோகநாதனை



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Z1JvafA3RPWXCbEvv1CO+hqdefault(5)



 (  திருச்சி லோகநாதன் )




இதே படத்தில் இன்னொரு பாடலான


" சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது "


என்கிற பாடலை பி சுசீலாவுடன் இணைந்து பாட மறுத்து விட்டார் !

காரணம் கேட்டபோது அவர் சொன்ன பதில் :



" தங்கைக்கு அண்ணன் அறிவுரை கூறும் என் குரலை

அதே  படத்தில் அந்த தங்கையின் காதலனுக்கு குரல்

கொடுத்தால் அது தவறு, எனவே இந்த பாடலை வேறு

பாடகரை வைத்து இசையமைத்துக் கொள்ளுங்கள் ! "



என்றாராம் !


( " பானை பிடித்தவள் பாக்கியசாலி " படத்தில்

அண்ணன் :  டி எஸ் துரைராஜ் - அவரது சொந்தப் படம்.

தங்கை  : நடிகைய்ர் திலகம் சாவித்திரி .

காதலன் : கே  . பாலாஜி .

காதலனுக்கு  குரல் கொடுத்தவர் : சீர்காழி கோவிந்தரராஜன் ! )




**********************





   2. " பதி பக்தி " - இந்த படத்தில் முதலில் அனைத்துப்

பாடல்களை  எழுத ஒப்பந்தம் ஆனவர் : கவிஞர் மருத காசி !

ஆனால் , படத்தின் கதை சூழலைக் கேட்ட  மருத காசி என்ன

சொன்னார் தெரியுமா ?




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Bm1VrGcFTEOON5Tzkzo5+maruthakasi


 (  கவிஞர் . மருத காசி )



" இந்த  ' பதி பக்தி '   படக் கதைக்கு பாடல்களை எழுத

பொருத்தமானவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்

பொருத்தமானவர்,  எனவே  அவரையே படல்களை எழுதச்

சொல்லுங்கள் ! "


ஆமாம், ' பதி பக்தி ' படத்தின்  அனைத்துப் பாடல்களையும்

' பாட்டுக் கோட்டையார்' தான் எழுதினார் !






&&&&&&&&&&&&&&&&&





     3. " மன்னாதி மன்னன் " - இந்த படம் ,

கவிஞர் கண்ணதாசனின்  சொந்தப் படம் .

அவர் நினைத்திருந்தால் இந்த படத்தில் இடம் பெற்ற

அனைத்துப் பாடல்களையும் அவரே எழுதி இருக்கலாம்,

ஆனால் , இந்த படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆர் - பத்மினி

போட்டி நடனப் பாடலை



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 FEYW9NB2RJOLXi9EqeRj+t0001444




தான் எழுதுவதை விட கவிஞர் மருதகாசியை

விட்டு எழுதினால் அந்த பாடல் எடுபடும் என்று கண்ணதாசன்

எண்ணினார்......ஆமாம் :

" ஆடாத மனமும் உண்டோ ! "

டி எம் எஸ் - எம் எல் வசந்தகுமாரி இணைந்து பாடிய ஒரே

'டூயட்'   பாடலை  எழுதியவர் : கவிஞர் மருத காசிதான் !




 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




 4. " பாகப் பிரிவினை " திரைப்படம் :

நடிகர் திலகம் நடித்தது. இந்த படத்தில் ஒரு சோகமான

தாலாட்டுப் பாட்டை  படத்தில் நடிகர் திலகம் பாடவேண்டும்.

பாட்டுக்கோட்டையாரை அணுகினார்  இயக்குனர் ஏ . பீம்சிங்.

பாட்டுக்கோட்டையார் அவரிடம் என்ன சொன்னார் தெரியுமா !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 PzeHE5QJ2rjqDUkBhExA+ar747pattukottai-kalyanasundaram




" தாலாட்டுப் பாடல் - அதுவும் சோகமாதாலாட்டுப் பாடல்

தாலாட்டுப் பாடலுக்கு  கவிஞர் கண்ணதாசன் தான் தகுதியானவர் !

எனவே இந்த பாடலை எழுத அவரையே  கூப்பிட்டிக்கொள்ளுங்கள் ! "

என்றாராம் !

இந்த காலத்தில் இது மாதிரி நடக்குமா, என்ன !

அப்படி கண்ணதாசன் எழுதிய பாடல்தான் :



" ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாய் ! "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 LFgl1w7bSDWGbiFnX7ST+hqdefault(6)



 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



     5. " சிங்கார வேலனே , தேவா ! "

இந்த பாடலை உங்களால் ......சே ! .... சே !   என்னையும் சேர்த்துக்

கொள்ளுங்கள் !


இந்த பாடலை நம்மால் மறக்க முடியுமா, என்ன !



காருகுரிச்சி  அருணாசலத்தின் இனிய நாதாஸ்வர இசையுடன்

" கொஞ்சம் சலங்கை "   படப் பாடல் !

இந்த பாடலை முதலில் பிரபல  இந்தித்திரைப்பட பாடகி :

லதா மங்கேஷ்கரை வைத்து பாட  வடிவேலு  சொல்வது போல

" ப்ளான்.......ப்ளான் "    பண்ணினார்  எஸ் . எம் . எஸ் - அத்தான் -

இந்த ' கொஞ்சும் சலங்கை ' இசையமைப்பாளர்  எஸ். எம். சுப்பையா

நாய்டு !



" ஹம்கோ  யெ  கானா  பஹுத்  முஷ்கில் ஹை ! "


புரியலை ? ....


" எனக்கு  இந்த பாடலைப் பாட மிகவும் கடினம் ! "


என்று லதாஜி  கை விரிக்க , பின்னர் மெல்லிசை மன்னரின்

குருநாதர் - அத்தான் - எஸ் . எம் . எஸ்  , பிரபல பாடகி

பி .லீலா வை  வைத்து பாட  ' வடிவேலு ' பண்ணினார் !

பி. லீலா  என்ன சொன்னார் தெரியுமா ?


( ' அட என்னய்யா !  இது தெரிந்தால் நான் ஏன்யா உன் கட்டுரையை

நாங்களபடிக்கப் போகிறோம் !  சொல்லித் தொலையும் , அய்யா !  "

என்கிறீர்களா !  சர்த்தான் !   )



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 CJ0dyia0TOKMV4HH8oDl+download

( பி . லீலா )




   பி. லீலா  :


" இந்த பாடலைப் பாடுவதற்கு முற்றிலும் தகுதியானவர் ,

எஸ். ஜானகி  தான் !  எனவே அவரையே நீங்கள்  வரவழைத்து

பாடவைக்கவும் ! "


இப்போதெல்லாம் இது மாதிரி நடக்குமா !





#################################





     6. பிரபல வீணை வித்வான் எஸ். பாலசந்தர்

படங்களில் பாடுவதிலிலும்  திறமை உள்ளவர். அவர் பல படங்களில்

அவர் நடிப்புக்கு அவரே பாடியுள்ளார். ( ' இது நிஜமா' , ' கைதி ' )

ஆனால்  , அவர் நடிகர் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த

" பெண் "    படத்தில்  இடம் பெற்ற " கல்யாணம் ...வேண்டும்  வாழ்விலே

கல்யாணம் ! "  என்கிற பாடலை  அவர் நினைத்தால் அவரே பாடி

இருக்கமுடியும் , ஆனால் அந்த பாடலின் அழகுக்காக தானே

பாடாமல் , பிரபல நடிகர் ஜே. பி . சந்திரபாபுவை  வைத்து  பாட

வைத்தார் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 UNblxpKUQb6QIHdH89o2+Veena_S_Balachandar_1950


(  இளமைக் கால ' வீணை'  எஸ். பாலசந்தர் - 1950 )  





(  சந்திரபாபு  பாடுவதற்கு முன்னர் இந்த பாடலை இசையமைப்பாளர்

ஆர். சுதர்சனம்   முதலில்  பாடவைத்த பாடகர் : டி எம் எஸ் ! )
/b]




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



    7.சரி, இசையமைப்பாளர்கள் எப்படி,

பாடல்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் ?


சர்த்தான் ! நீங்களும் அழகழகாய் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டீர்கள் !

சொல்றேன் !



" திருடாதே "  படம், இசை எஸ் எம் சுப்பய்யா நாய்டு !

இந்த படத்தில் ஓர் அழகான 'டூயட்' பாட்டு,



" என் அருகே நீ இருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன் ! "


பி பி எஸ் - சுசீலா பாடிய இந்த பாடலை இசையமைத்தவர்

எஸ் எம் சுப்பய்யா நாய்டு இல்லை !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 HE2bCAnRTzup1o8VO50X+SMSubbaiahNaidu



 ( இசையமைப்பாளர் எஸ் எம் எஸ் - எஸ் . எம். சுப்பையா நாய்டு ! )




பின்னே ?

மெல்லிசை மன்னர்கள் !

இந்த விஷயத்தை யாரும் , ஏன் , மெல்லிசை மன்னர்களே வாயைத்

திறந்து சொன்னதில்லை......எல்லாம் எங்களைப் போன்ற

' ஆராய்ச்சியாளர்கள் ' ( ! )     ஜாலி

கண்டுபிடித்தது !  



************************************



   8. "  மரகதம் " - இந்த பெயரில் நடிகர் திலகம் நடித்த

படம். இந்த படத்தின் இசை : எஸ் எம் சுப்பய்யா நாய்டு.

இந்த படத்தில் இருந்து ஒரு புகழ் பெற்ற பாடல் :



" குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவே, கண்மணி உன்னை கண்டதும்

இன்பம் பொங்குது தன்னாலே ! "



ஜே  பி சந்திரபாபுவுடன் கே ஜமுனாராணி பாடும் இந்த பாடலை

அதே நடிகர் திலகர் நடித்த  " சபாஷ் மீனா " படத்திற்காக பிரபல

இசையமைப்பாளர் டி .சலபதி ராவ்  இசையமைத்து வைத்திருந்தார் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 PUdP8vmWS9K5pR803lnV+48_copy



( மாலையுடன் கண்டசாலா !  அவரை ரசிப்பவர்தான் :

டி. சலபதி ராவ் - ஸ்ரீதரின் ' மீண்ட சொர்க்கம் ' படத்தின் இசையும்

இவர்தான் ! )  






இந்த பாடலை நிஜமாகவே  ( ! )  சந்திரபாபு  , களவாடிச் சென்று ' மரகதம் "

படத்திற்காக எஸ். எம் . எஸ் விடம்  கொடுத்து பாடினாராம் !

இது பற்றி சலபதி ராவ் ஒரு சொல் கூட  யாரையும் திட்டிப் பேசவில்லை !

தனது பாடல் ஏதோ ஒரு படத்தில் 'ஹிட்' ஆனால் போதும் என்கிற

நல்ல எண்னம்தான் அவருக்கு !


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




9. " கூண்டுக்கிளி " -  நடிகர் திலகமும்,

மக்கள் திலகமும் இணைந்து நடித்த ஒரே  படம் !

இந்த படத்தின் இசை : ' மாமா ' கே. வி . மகாதேவன்.

இந்த படத்தில் இருந்து மகாதேவன் ஒரே ஒரு 'டூயட்'  பாடலை

இசையமைத்தார். அந்த பாடலைக் கேட்டதும் எம் ஜி ஆர் உம்

சிவாஜியும் , ' திருவிளையாடல் '   படத்தில் முருகனும் , விநாயகரும்

" பழம் எனக்கு " என்று  அடித்துக்கொள்வதைப் போல



" இந்த 'டூயட்' பாட்டு படத்தில் எனக்காக பாடி படமாக்கவேண்டும் ! "


என்று இருவரும் ' அடித்துக்கொள்ளாத ' குறை !

பார்த்தார்  ' கூண்டுக்கிளி ' இயக்குனர் டி . ஆர். ராமண்ணா!

" பழம்......ஹி...ஹி..... பாடல் யாருக்கும் இல்லேப்பா ! "

என்று சொல்லி பாடலை தூக்கி 'கடாசி'  விட்டார் !

சிவாஜியும் எம்ஜிஆரும் 'கம்' என்று ஆகிவிட்டனர் !



ராண்ணாவி அடுத்த படம் : ' குலேபகாவலி'

எம்ஜிஆர், இந்த படத்தில் 'ஹீரோ' !

எம்ஜிஆர், ராமண்னாவுடம் சென்று 'கூண்டுக்கிளி'

டூயட் பாடலை இந்த படத்தில் தனக்கு வேண்டும் என்று

சொல்ல , காதும் காதும் வைத்தாற்போல  ராமண்னா இந்த

பாடலை எம்ஜிஆர் - ஜி. வரலட்சுமி ஜோடிக்கு தாரை வார்த்துக்

கொடுத்தார் !



அந்த பாடல்தான் :


" மயக்கும் மாலை பொழுதே போ போ !

இனிக்கும் இன்ப இரவே வா ! "


ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேனே !


" குலேபகாவலி ' படத்தின் இசை :

மெல்லிசை மன்னர்கள் !


இதைப் பற்றி ' மாமா ' கண்டுகொள்ளவே இல்லை !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 5cJ3O6u3T3Onp45CncF5+K.-V.-Mahadevan-Songs


( கே . வ. மகாதேவன் )



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




 10 . ' எதிர் நீசல் ' ( 1968 )   - நாகேஷ்

நடித்து பாசந்தர் இயக்கிய படம். இசை வி. குமார் !

இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் :


" என்னம்மா பொன்னம்மா பக்கம் வா வா வ வா ! "


நாகேஷ், நாடகம் ஒன்றுக்கு பாடும் பாட்டு !

டி எம் எஸ் - சுசீலா பாடியது !

ஆனால் இந்த பாடலுக்கு இசை : வி . குமார் அல்ல !

பின் யார் ?


மெல்லிசை மன்னர்கள் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 GzVRlp9nQGWja72M8Erp+0(1)




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



       இன்னும் சொல்வதற்கு நிறைய

உள்ளன !

ஆக மொத்தம் பாடல்கள் என்றும் நிலைக்க வேண்டும்

என்று அவர்கள் நினைத்ததால்தானே !

இதனால்தான் பழைய பாடல்கள்

என்றும் நம்மிடையே இன்றும்

வாழ்கின்றன !  

பழய பாடல்கள் என்றும் வாழும் !  


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




    இனி  விஷயத்திற்கு

செல்வோமா !



தொடரும்...


எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Sep 06, 2014 5:14 pm


 " சாந்தி " ' யார் அந்த

நிலவு " ........................தொட்ர்ச்சி !






     

 சரி, " யார் இந்த நிலவு ? "

பாடலின் சிறப்பம்சங்கள் என்ன ? "

என்றா கேட்கிறீர்கள் ?







 

 அந்த சிறப்பம்சங்கள்ளை நான் பட்டியலிடும்

முன்னர் , இந்த பாடல் , ' சாந்தி '  படத்தில்  இடம் பெற்ற கதையின்

சூழ்நிலையை  ( SITIUATION )   உங்களுக்குத் தெரியவேண்டும் !




அதற்கு.......

" சாந்தி" திரைப்படத்தின் கதையையும் ஓரளவு

தெரிந்து வைத்திருந்தால் நலம் !








%%%%%%%%%%%%%%%%%%%%%%%






    " சாந்தி "

கதை சுருக்கம் :






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Ilsba1eHRyucyxlj9Zlj+main-31837



   நடிகர் திலகமும் , எஸ் . எஸ் . ஆரும் இணை  பிரியாத நண்பர்கள் !







 " வாழ்ந்து பார்க்கவேண்டும் , அறிவில் மனிதன்

ஆகவேண்டும் ! "   என்கிற பாடலை அவர்கள் பாடி மகிழ்கிறார்கள் !






   அந்த பாடலை அவர்கள் கல்லூரி நாட்களில்

பாடி மகிகிறார்கள் !

அப்போது......

ஊரில் , எஸ் எஸ் ஆருக்கு திருமண ஏற்பாடு நடக்கின்றது !

அந்த ஊரில் தோழிகள் இருவர் :

தேவிகா - விஜயகுமாரி !

இந்த இருவரில் விஜயகுமாரி  இரு விழிகளை இழந்தவர்.

" தனக்கும் திருமணம் நடக்குமா ? "   என்று ஏங்கும்

தன்னுடைய பார்வை இல்லாத தோழியான தேவிக ,

விஜயகுமாரிக்கு  ஆறுதல்

சொல்லி பாடுகிறார் :






 " ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் !

வீடெங்கும் மாவிலைத் தோரணம் ! "

தேவிகா  பாடும் பாட்டு !







 விஜயகுமாரியின் சித்தப்பாவாக வரும்

' சூபர்' வில்லன் ( ! )   எம் . ஆர் . ராதா, அவர் விழிகளை இழந்தவர் என்கிற

உண்மையைச் சொல்லாமல் , எஸ் . எஸ் . ஆருக்கு  பெண் கொடுக்கிறார் !




சரி, அப்போ  தேவிகா ' செட் அப் ' யாரூ ? "

என்றா கேட்கிறீர்கள் !

வேறு யார் , நம்ம நடிகர் திலகம்தான் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 2X4hBTDS0CrM3qDTDmAi+2cp9fsp_5




   " நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் !

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் ! "

பாடலை தேவிகா பாட , அதற்கு  ' விசில்' அடிக்கிறார் நடிகர் திலகம் !






   

 தான் மணக்கப் போகும் பெண் இரு விழிகளை

இழந்தவர் என்கிற உண்மையை அறியாத எஸ் . எஸ் . ஆர்,  தான் பார்க்காத

எதிர்கால மனைவுக்கு.....' காதல் கோட்டை '  - அஜித் - தேவயானை

' ஸ்டைலில்'   கடிதங்களில்  கவிதைகளை எழுதி மகிழ்கிறார் !





 

   " செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு

சேதியை நான் கேட்டேன் ! "   பாடலை அங்கே  எஸ் எஸ் ஆர் பாடுவார்,

அதற்கு  'எசப் பாட்டு' விஜயகுமாரி இங்கே பாடுவார் !





தன் மனைவிக்கு  விழிகள் இரண்டும் இல்லை

என்று எஸ் எஸ் ஆர் க்கு தெரியாமல்  எம் ஆர் ராதாவின் சூழ்ச்சியால்

திருமணம் நடந்து விடுகிறது.




விஷயம் பின்பு அதாவது , திருமணம் ஆனபிறகு , அறிந்து கொண்ட

எஸ் எஸ் ஆர்  கோபம் கொள்கிறார்,  தான் ஏமாற்றப்பட்டதை

அறிந்து மனைவியை ஏறிட்டும் பார்க்காமல் அவரது ஒரே பொழுது போக்கான

காட்டில் மிருகங்களை வேட்டையாட  வெளியேறுகிறார்.






 " செந்தூர் முருகன் கோவிலிலே "

சோகப் பாடலை விஜயகுமாரி பாடுகிறார் !






 

   விஷயம் அறிந்த  நடிகர் திலகம் , காட்டுக்குள்

சென்று  எஸ் எஸ் ஆரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.

எப்படி ?


" உனக்கு திருமணம் ஆன பிறகு உன் மனைவிக்கு  கண்களை

இழந்திருந்தால் உன்னால் என்ன  செய்ய முடியும் ? அப்படி

நினைத்து நீ இந்த பெண்ணுக்கு வாழ்வு கொடு ! "

என்கிறார் சிவாஜி.


ஆனால்  இந்த அறிவுரையை  எஸ் எஸ் ஆர் கேட்கவில்லை, தொடர்ந்து

காட்டிலேயே தங்கிவிடுகிறார் !




இந்த சமயத்தில் விஜயகுமாரிக்கு  கண் ஆபெரேஷ நடக்கிறது !

ஆபெரேஷன் வெற்றி !

விஜயகுமாரிக்கு பார்வை வந்துவிட்டது !

தன் கணவனைப் பார்க்க மிகவும் விரும்புகிறார் , விஜயகுமாரி !



இந்த  நேரத்தில்.......


புலி ஒன்று தாக்கி  எஸ் எஸ் ஆரை இழுத்துச் சென்றுவிட்டது அந்த

களீபரத்தில்  எஸ் எஸ் ஆர்  இறந்து விட்டார் என்கிற சேதி ஊரில்

அடிபடுகிறது !


" எஸ் எஸ் ஆர்  மரணத்திற்கு  சிவாஜிதான் காரணம் ! "   என்கிற

செய்தியை  ஊரில்  பரப்புகிறார் எம் ஆர் ராதா !


மேற்படி  செய்தியை பயன்படுத்தி  :

' சிவாஜியை, விஜயகுமாரியின் கணவனாக நடிக்க வேண்டும்,

இல்லையென்றால்  எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம்

என்று  சிவாஜியை பயமுறுத்து கிறார், ராதா !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 S0yyjioHTq2nStaLpSCc+hqdefault(4)






வேறு வழி இன்றி  தன் நண்பனின் மனவிக்காக , கணவன் மாதிரி

நடிக்க ஆரம்பிக்கிறார் நடிகர் திலகம் !



சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?




இந்த சூழலில்  விஜயகுமாரியின் உண்மையான கணவன்

ஆன எஸ் எஸ்  ஆர் உயிருடன் ஊருக்கு  திரும்புகிறார்!

தன் மனைவிவுடன் தன் உயிர் நண்பன் " குடும்பம் "  நடத்துவதை

அறிந்து  மனம் வருந்துகிறார் !



இந்த சேதியை சிவாஜி அறிந்து கொண்டு மனம் வருந்துகிறார் !



சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?




இந்த ' கண்ணராவி' யை  தேவிகாவும் காண்கிறார் !

தேவிகா  அறிந்து விட்டதை  சிவாஜி அறிந்து மனம்

வருந்துகிறார் !



சிவாஜியின் மன நிலை எப்படி இருக்கும் ?






 

   " யார் அந்த நிலவு "

பாடல்  இந்த சூழலில்தான் நடிகர் திலகம்

பாடுகிறார் !









இப்போது, ' யார் இந்த நிலவு '

பாடல் படத்தில் இடம் பெற வேண்டுமான, சும்மா கானா பாலா

மாதிரி ஒருவரை அழைத்து வந்து ' கெக்கே - பிக்கே '  என்று

' துள்ளல் இசை ' என்று  படு நாகரீகமாக  சொல்லிக்

கொள்ளும் ' டப்பாங்குத்து ' பாடலைப் போட்டால் அது

நன்றாகவா இருக்கும் !



கதையின்  இந்த சூழ்நிலைக்கு , நடிகர் திலகம் ஏற்றிருக்கும்

கதாபாத்திரத்தின்  மன நிலையை அந்த பாடல்

வெளிப்படுத்தவேண்டும்......



சரி, அந்த கதாபாத்திரத்தின்  மனநிலை என்ன ?


சொல்றேன்!




1. தன் நண்பனின் மனைவுக்கு கணவன் ஆக , நிர்பந்த சூநிலையில்

நடிக்க வேண்டும்....

அது  :      


குற்ற உணர்வு  (  GUILTY   CONSCIOUS  )  




2. தான் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையை தான் காதலிக்கும்

பெண்ணுக்கு  தெரியவந்தால்    அதனால் ஏற்பட்ட :


அச்சம் - பய உணர்வு .




3.  தன்  வாழ்க்கை இப்படி  ஆகிவிட்டதே  என்கிற


சோகம் .





4. அதனால்  ஏற்படும்


விரக்தி




5. தன் நண்பனுக்கு விஷயம் தெரிந்தால் தன்னை தவறாக

எண்ணுவானே  என்கிற :


ஆதங்கம்




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 NdMknu7TGeSRG2SOROQ1+kathai






6. ஆக  மொத்தத்தில் , ' தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே ,

இன்னும் இதைவிட  என்ன ஆகணும் ! '

என்கிற :


 அலட்சியம் !






இந்த  மாதிரியான

உணர்ச்சிக் கலவை யை அந்த பாடலில்

வெளிப்படுத்த வேண்டும் !






இயக்குனர்  ஏ  பீம்சிங் க்கு  அந்த பாடலை

தான் நினைத்தபடி வெளிக்கொண்டு வர நினைத்தார்.



அதில் வெற்றி கண்டாரா ?


வெற்றி கண்டார்,  பாடலும் வெற்றி !







 ஆனால் , தான் நினைத்தவாறு ஒரு பாடலைத்

தர அவர் மட்டும் எண்ணிவிட்டால் அது நடக்காது.....

பாடலை  உருவாக்கும் :

" தாய்மார்கள் " ( ! )

அத்தான்,

1. பாடலாசிரியர்

2. இசையமைப் பாளர்

3. பாடகர்

4.  மற்றும்

பாடல் காட்சியில் நடிப்பவர் !






மேற்கண்டவர்கள் :

அதாவது :


1. பாடலாசிரியர் : கண்ணதாசன்,


2. இசையமைப்பாளர்கள் : மெல்லிசை மன்னர்கள்


3. பாடகர் : டி  எம் எஸ்


4. நடிகர் : நடிகர் திலகம் .....


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 WhuGGnGLSH9T0IipOBoT+SivajiGanesan_19620824


இவர்களின் ' ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத.....

ஆனால்.....ஆரோக்கியமான  பொறாமை இல்லாத

போட்டியால்  பாடல் வெற்றி பெற்றது !



எப்படி ?


சொல்றேன்     ஜாலி





   " யார் அந்த நிலவு "

பாடலை எழுதிய : கவிஞர்

கண்னதாசன் :





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 DccsD0oSHa67hsuAu9bW+f1fv


   " படகோட்டி "  பாடல்களுக்குப் பிறகு எம்ஜிஆர் இன்

அனைத்துப் படங்களுக்கும் பாடல்களை எழுதியர் :கவிஞர் வாலி !

( தேவர் மற்றும் ஜி என் வேலுமணி படங்களுக்கு மட்டும் இதற்கு

விதிவிலக்கு !  கண்ணதாசன் தான் பாட்டு எழுதுவார் ! )

எனவே, கண்னதாசன் நிறைய சிவாஜி படங்களுக்கும் மற்ற

நடிகர்கள் படங்களுக்கும் பாடல்களை எழுதி குவித்தார் !

அதிலும் சிவாஜி படங்களுக்கு - அதிலும் - " ப'  பட இயக்குனர்

பீம்சிங் இயக்கும் படங்களுக்கு அதிக கவனம் செலுத்தி பாடல்

களை எழுதி குவித்தார் !



" சாந்தி " படத்தில் " யார் அந்த நிலவு " பாடலுக்கான

சூழ்நிலையை இயக்குமர் பீம்சிங் இடம் இருந்து கேட்டு அறிந்து

பின்னர் அழகு தமிழில் சொற்களை அமைத்து பாடலை

எழுதினார் !



ஒண்ணும் வாணாம் !  ( சென்னை தமிழ் ! )

படத்தைப் பார்க்கவேண்டாம் !

பாடகரின் குரல் வளத்தில் கவனம் செலுத்த வேண்டாம் !

இசையமைப்பில் கவனம் செலுத்த வேண்டாம் !



வெறும் பாடல் வரிகளை மட்டும் கேட்டாலே போதும் ,

'சாந்தி '  படத்தின் கதையமைப்பை நீங்கள் புரிந்து

கொள்ளமுடியும் !  



எடுத்துக்காட்டுக்கள் :


" மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை "

இந்த வரிகளைப் படித்தாலே 'சாந்தி ' படத்தின்

கதை போக்கை ஓரளவு நாம் புரிந்து கொள்ளமுடியும் !



" காலம் செய்த கோலாம் இங்கு நான் வந்த வரவு ! "




மேற்கண்ட  வரிகளைப் படித்தாலே படத்தில்

நடிகர் திலகத்தின் சூழ்நிலை  புரிய வரும் !



"  உன் கோவிலின் தீபம் மாறியதை  நீ அறிவாயோ ! "


" தீபம் மாறியது " என்பது  எதனைக் குறிக்கின்றது என்பது உங்களுக்கு

புரியும் !



இப்படி வெறும் வார்த்தைகளால்நாகரீகமாக  எளிதாக சொல்ல முடியாத  

" கணவன் - மனைவி "   சமாச்சாரத்தை பாடல் வரிகளைக்

கொண்டே மிக அழகாக விளக்கிய பெருமை கவியரசர்

கண்ணதாசனையே சாரும் !  






 ' யார் இந்த நிலவு '

பாடலுக்கு இசை : மெல்லிசை மன்னர்கள் :





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 Xr9mO31XRLSK3oHR5rOi+DSC06712


 மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கும் மற்ற இசையமைப்

பாளர்களின் பாடல்களுக்கும் இருக்கும் :

 ஒரே  ஒரு வித்தியாசம்

என்ன தெரியுமா ?


சொல்றேன் !


" மெல்லிசை மன்னர்களின் ஒவ்வொரு பாடலும் அவர்கள் இசையமைத்த

வேறு எந்த பாடல்களுடன் ஒப்பிடாமல்

தனித்து

விளங்குவது தான் அந்த வித்தியாசம் !


( இந்த 'மேட்டரை' பின்னர் வேறு சமயத்தில் விரிவாக

சொல்கிறேன் ! )




" யார் இந்த நிலவு " பாடலும் இப்படித்தான், அவர்களின் ஏனைய

பாடல்களையும் தனித்தும்  இணை இல்லாததாகவும்

சிறந்து விளங்குகிறது !


முதலில் இந்த பாடல் இடம் பெறும் ' சிடுவேஷன்' ஐ கூர்ந்து கவனித்த

இசையமைப்பாளர்கள் , இந்த  பாடலுக்கு இசையமைக்க

மேலை நாட்டு இசை பாணியை பின்பற்றி இசையமைத்தால்

நல்லது என்று முடிவு எடுத்தார்கள் !


சரியாரைப் பாட வைப்பது ?





 இதில் என்ன குழப்பம் , ஸ்வாமி !

அந்த கால கட்டத்தில் நடிகர் திலகத்திற்கு பின்ணனி கொடுப்பவர் :

டி எம் எஸ்  தானே !


அதில்தானே குழப்பம் , ஸ்வாமி !


' என்னய்யா அந்த குழப்பம் '  ?

என்கிறீர்களா ?

" டி எம் எஸ் அவர்களுக்கு மேற்கத்திய பாணியில் பாட இயலுமா ? "

என்பதுதான் மெல்லிசை மன்னர்களுக்கு

குழப்பம் !

எனினும் வேறு பாடகரை வைத்து , தாங்கள் நினைப்பது போல்

மேற்கத்திய பாணியில் இந்த பாடலை தங்களால் பாட

வைத்து பாடலை வெற்றி பெற முடியும் !


ஆனால்.......நடிகர் திலகம் அதற்கு உடன்படாவிட்டால் ?


" விச்சு !   திரைப்படங்களில் என் பாடலுக்கு டி எம் எஸ் பாடினால்தான்

அது நான் பாடுவதாக நம் ரசிகர்கள் எண்னுவார்கள் !

அப்படி டி எம் எஸ் பாடாமல் வேறு ஒருவரை வைத்து பாடினால்,

படத்தைப் பார்க்கும் போது அந்த பாடலை நான் பாடுவதாகவே

ரசிகர்கள் நினைக்கமாட்டார்கள் , மாறாக அந்த பாடகர் பாடுவதாகவே

ரசிகர்கள் நினைப்பார்கள் ! "


சொன்னவர் நடிகர் திலகம் !



" ஒரு நாளிலே உறவானதே ! "

டி எம் எஸ் - சுசீலா பாடிய ' சிவந்த மண் ' படப் பாடலை மெல்லிசை

மன்னர் முதலில் சுசீலாவுடன் பாடவைத்த பாடகர் :

பால முரளி கிருஷ்ணா !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 P8yOfZicShaGeVGOqTOW+0


மேற்கண்ட பாடகர் பாடிய பாடலைக் கேட்டுத்தான் நடிகர் திலகம்

மேற்கண்ட வசனங்களை மெல்லிசை மன்னரிடம் நடிகர் திலகம்

சொன்னாராம் !


மெல்லிசை மன்னர் ரொம்ப ரொம்ப கடுப்பாகித்தான் பால முரளி

கிருஷ்ணாவை நீக்கி விட்டு டி எம் எஸ் வைத்து பாடவைத்தாராம் !



" சர்த்தான் ஸ்வாமி !   அந்த  பாடல் ' சிவந்த மண் ' படம் - 1970

வெளிய்யீடு !  ' சாந்தி ' படம் - 1965  படம் தானே ! "



என்கிறீர்களா ?


சொல்றேன் !


" சபாஷ் மீனா " படம் .  சந்திரபாபு அந்த படத்தில் இரட்டை வேடங்களில்

பின்னிப் ' பெடல் '  எடுத்துக்கொண்டிருந்தார்..... சிவாஜி கணேசனுக்கு

அந்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரையும் கொடுக்கும்

சந்தர்ப்பம் இல்லை !

இதனை இந்த படத்தின் இசையமைப்பாளரிடம் (  டி . சலபதி ராவ் )

சொல்லிப் புலம்பினார்,

நடிகர் திலகம் !


" இந்த படத்தில் உங்களுக்கு பேர் வாங்கித் தரும் அளவுக்கு ஓர்

அழகான ' டூயட் ' பாடலைத் தரப் போகிறேன், ஆனால் பாடலைப்

பாடப் போகிறவர்  டி எம் எஸ் இல்லை, வேறு பாடகரை  தேர்வு செய்ய

நீங்கள் எனக்கு  சுதந்திரம் தரவேண்டும், சம்மதமா ? "



சிவாஜியிடம் கேட்டவர் டி . சலபதி ராவ் !


" சரி ! "

வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினார் நடிகர் திலகம் !

அந்த பாடல்தான் :


" காணா இன்பம் கனிந்தது ஏனோ ! "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 XbUB0QYSB66uCIP1bNgd+hqdefault(1)





சுசீலாவுடன் சிவாஜிக்கு குரல் கொடுத்த  பாடகர் :


டி . ஏ. மோதி !

பாடல் சூபர் ஹிட் !



இன்னொன்று :


" குங்குமம் " படத்தில் " சின்னஞ்சிறிய வண்னப் பறவை எண்ணத்தை

சொல்லுதம்மா ! "

பாடல் !  இந்த பாடலை எஸ். ஜானகியுடன் பாடியவர் :

சீர்காழி கோவிந்தர ராஜன் !

ஆனால் நடிகர் திலகம்  அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை !

டி எம் எஸ் ஐ பாடச் சொல்லி இசையமைப்பாளர் கே . வி .

மகாதேவனிடம் சொல்லிவிட்டார் !

வேறு வழி !

சீர்காழி யை  விலக்கி விட்டு டி எம் எஸ் ஐ பாட வைத்தார்கள் !

சீர்காழிக்கு  , சிவாஜி மேல் செம கடுப்பு !



" ஐயா ! நீங்கள் எல்லோருக்கும் உணவு பறிமாருங்கள் !

ஆனால் எச்சில் உணவைப் பறிமாற வேண்டாம் ! "




நடிகர் திலகத்திடம்  , சீர்காழியார் சொன்ன வார்த்தை !

நடிகர் திலகம் அவரை சமாதானப் படுத்த  பெரும்

சிரமப் பட்டாராம் !



' கதை ' இப்படி இருக்க , மெல்லிசை மன்னர்கள் எப்படி

டி எம் எஸ் ஐ மாற்ற துணிவார்கள் !


அழகான, இனிய பியோனா  இசையுடன் .....வேகமாகவும்

இல்லாமலும், அதே சமயத்தில் மிகவும் மந்தமான கதியில்

இல்லாமலும்......துன்பமான பாடலும் இல்லாமலும் அதே சமயத்தில்

சோகம் மற்றும் தத்துவப் பாடலும் ஆக இல்லாமலும்,

பாடகர் சிரிக்காமலும் , அழாமலும் .....அதே சமயத்தில் ரசிகர்கள்

' டம் ' அடிக்க தியேடரை விட்டு வெளியே போகாமலும்....

மிகுந்த ' மெலடி'  வுடன் பாடலை  மிகவும் நேர்த்திவுடன்

இசையமைத்தார்கள் !


இந்த பாடல் இன்றும் வாழ்கிறது !






$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$







' யார் இந்த நிலவு ! '

பாடலைப் பாடிய

டி எம் எஸ் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 WwYNco4tQuqR8fCGiFqW+image







 சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ

எனக்குத் தெரியாது.....

டி எம் எஸ் முதலில் திரைப்படப் பாடல்களை பாட வரும் போது

அவர் ' காமடி '  - நகைச் சுவை  பாடல்களை மட்டும் பாடுவதறு

அழைத்தார்களாம் !


பின்னர் " தூக்கு தூக்கி " படம் மூலமாக  கிராமியப் பாடல்களைப்

பாடுவதில் வல்லவர்  என்று அறியப்பட்டார் !


அப்புறம் ?


" அம்பிகாதி " படம் மூலம் டி எம் எஸ் மிகச் சிறந்த கர்நாடக இசைப்

பாடகர் என்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டார் !



இந்த நிலையில் " பாவ மன்னிப்பு " படத்தில் " வந்த நாள் முதல் "

பாடலைப் பாட யாரைப் போட்டு பாடவைக்கலாம் என்று மெல்லிசை

மன்னர்கள் மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள் !

முதலில் ஜி. கே. வெங்கடேஷ் ஐ வைத்துப் பாட வைத்தார்கள் !

" சரி , இந்த ஆள் நம்ம சிஷ்யன் , படத்தில் சோகப் பாடலுக்கு

இவர் பாடியதை வைத்துக் கொள்ளலாம், ஆனால்

குழந்தையை சைக்கிளில் வைத்து சிவாஜி பாடும் பாட்டை

யாரை வைத்துப் பாட வைப்பது ? "


மீண்டும் மண்டை  +  குடைச்சல் +  கொண்டார்கள் !


பின்னர் வந்தார் டி . ஏ . மோதி !

பாடினால்....' வந்த நாள் முதல் '....

" ச்....ச் ... செ....ச் "    - அத்தான் " உச் " கொட்டினார்கள் அனைவரும் !



" அண்ணே !  நீங்க யார் யாரையோ வைத்து பாட வைக்கிறீர்கள் !

எனக்கு இந்த பாடலைப் பாடுவதற்கு 'சான்ஸ்' கொடுங்கள் !

ஊதித் தள்லிவிடுகிறேன் ! "


சொன்னவர் டி எம் எஸ் - மெல்லிசை மன்னரிடம் !


" ஐயா ! இந்த " வந்த நாள் முதல் " பாட்டு மேற்கத்திய பாணி !

இது உங்களுக்கு பாட வருமா என்று எங்களுக்கு தயக்கம்.....

அத்தான்.... ! "


சற்று தடுமாற்றத்துடன் டி எம் எஸ் விடம் சொன்னார் மெல்லிசை

மன்னர் !


" ' சான்ஸ்'  ஐ எனக்கு கொடுத்துப் பாருங்கள் , அண்ணே ! "

---- டி எம் எஸ்  !


டி எம் எஸ் பாடினார் !

" வந்த நாள் முதல் ",........... !

பாடல் சூபர் ஹிட் !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 10 ErwkYWzER261Vk32vmR0+download





டி எம் எஸ் ஆவர்களின் புகழ் இப்படி பரவி இருக்க ...

" யார் இந்த நிலவு " பாடலை  டி எம் எஸ் தவிர வேறு எவர்

நன்றாக பாடியிருக்க முடியும்...

சொல்லுங்கய்யா !  





தொடரும் ....




எம்கே ஆர் சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 06, 2014 5:24 pm

டாக்டர் ஐயா, உங்களது இந்த தொகுப்பு நன்றாகவே சூசூசூசூடு பிடிகிறது, படித்து முடித்து, பதிவும் செய்துக் கொண்டேன். மிக்க நன்றி டாக்டர் ஐயா. அருமையான இத்தொடரை தொடருங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 10 of 26 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக