புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
24 Posts - 53%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
14 Posts - 31%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 2%
Barushree
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 2%
nahoor
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
78 Posts - 73%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
4 Posts - 4%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 17 of 26 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Dec 11, 2014 5:05 pm

தங்களின் மடலுக்கு மிக்க நன்றி :

திரு. மாணிக்கம் நடேசன் அவர்களே !




" நா பொறந்த ஊரு, ஸ்கோலுக்கு போன

ஊரு, எரும்மாடு மாரி வளர்ந்து ஊரு , கண்ணாலம் கட்டிக்

கொண்ட ஊரு, பொழைக்க கஸ்டப்பட்டும் ஊரு, இப்டி

எத்தினி தபா சொன்னாலும் இந்த மெட்றாஸ் தான்

மாணிக்கம் நய்னா !

அப்பாலே, அப்டியே இங்கேயே குந்திக்கினு பொழப்பை

பார்த்த்க்கினி இருந்ததாலே நம்ம ஊரு பாஷை நா

கிறுக்கினு எழுத்திலே 'அசால்ட்' ஆ இருக்கும் !

கண்டுக்கோ, மாணிக்கம் நாய்னா !.......ஹு....ஹு,,,

வர்ட்டா ? "



மேற்படி எழுதியதை

" தமிழில் " தருகிறேன் !



 " நான் பிறந்த ஊர் , பள்ளிக்கு சென்ற ஊர்,

எருமை மாடு போல வளர்ந்த ஊர்,, திருமணம் செய்து

கொண்ட ஊர், பிழைப்புக்கு கடினப் படும் ஊர்,

இப்படி எத்தனை முறை சொன்னாலும் இந்த சென்னைதான்,

மாணிக்கம் ஐயா !


அப்புறம், இங்கேயே இருந்து கொண்டு பிழைப்பை கவனிப்பதால்

எங்களின் ஊர் மொழி நான் எழுதுவதில் சகட்டு

மேனிக்கு காணப்படும் !

கவனியுங்கள், மாணிக்கம் ஐயா !

உம்....உம் ....வரட்டுமா !   ? "  





நான் எழுதும் எழுத்துக்கள்

" சென்னை வட்டார வழக்கு மொழி "

'ஜாஸ்தி ' ........ஹி...ஹி.... ஐ மீன்...

அதிகம்

ஆக இருக்கும் !

" அட்ஜஸ்ட் "  பண்ணுக்குங்கோ !




 திரு. மாணிக்கம் நடேசன் கேட்கிறார் :





 " ஒரு கேள்வி டாக்டர் சார், ஜோட். தபா மற்றும் டப்பு, இது மூன்றுக்கும் என்ன அர்த்தம் டாக்டர் சார். எங்க நாட்ல இப்படி வார்த்தைகள் தமிழில் கிடையாது, அதான்.கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார் "  




ஐயா !

" மெட்ராஸ் பாஷை " என்பது  பல மொழி சொற்களின்

' சங்கமம் ' ஆகும் மொழி !

உருது, இந்தி , தெலுங்கு, ஆங்கிலம் கன்னடம், மலையாளம்

அராபிக், போர்துக்கீஷ், பாரசீகம் போன்ற சொற்கள் கலந்த

மொழி......



ஜோடு =   என்றால்  தமிழில்  " செருப்பு "  என்று சொல்லுவார்கள் !


" தபா "   என்றால் ?    இன்னொரு ' தபா ' சொல்லட்டுமா....

" தபா" என்றால் " தடவை " என்று பொருள் !



" டப்பு " என்றால் ..... தெலுகில் " பணம் " என்று பொருள் !





 நம்ம பெரீவர்....அத்தான்....சிவா எஜமான்

" எய்து....நாய்னா....கரீக்டா எய்து நய்னா "

என்னு எங் கையிலியே சொன்னாங்கிட்டின்னா

நா ' புல்' ஆ மெட்ராஸ் பாஷையிலே ஒரு கட்டுரையை

எய்த நா 'ஜூட் ' !




எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Dec 11, 2014 5:13 pm

P.S.T.Rajan wrote:பழைய  படங்கள் பண்பை வளர்த்தன . தற்போதைய படங்கள்  பண்பை குலைத்து  குற்றத்தை வளர்க்கின்றன @  படிக்கும் பிள்ளைப்   பருவத்திலிருந்தே.... நிர்வாக தூய்மைக்கு  முதல்வன் படம் பார்க்கனுங்க...மேலும்புதிய படங்கள் குற்ற   செயல் காட்சி  இன்றி எடுக்கனுங்க...........
மேற்கோள் செய்த பதிவு: 1108547




தங்களின் மடலுக்கு என் நன்றி திரு. ராஜன்  ஐயா !

நீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன் !

நீங்கள் இப்படி எழுதியதை நான் தக்க எடுத்துக்காட்டுகளுடனும்

மேற்கோள் களும் போட்டு என்னால் :

பல படங்கள்,

பல நடிகர் - நடிகையர்கள்

பல பாடல்கள்

பல பாடகர் பாடகியர்

பல இயக்குனர்கள்

என்று பல பிரிவுகளில் இன்றைய தமிழ்ப் படங்களைப்

பற்றி என்னால் எழுத முடியும் !


ஆனால்,

பலரின் கோபத்திற்கு நான் ஆளாகும் நிலையில்

வருவதற்கு எனக்கு உடன்பாடில்லை !


எனவே ......

" கப் - சிப் " !




எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Dec 11, 2014 5:15 pm

mbalasaravanan wrote:பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1108570



மிக்க நன்றி, திரு. பாலசரவணன் !


எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Dec 11, 2014 5:44 pm

M.Saranya wrote:நல்ல பதிவு...
மேற்கோள் செய்த பதிவு: 1108625



உங்களின் மடலுக்கு மிக்க நன்றி ..

சகோதரி சரண்யா அவர்களே !





" நாயகன் " உருவான கதை :

இரண்டாம் தொகுதி :

நாளை !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 IFh45vFQ2OqPKLLJe62L+santha


எம்கேஆர்சாந்தாராம்






mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Dec 12, 2014 5:12 pm

'நாயகன் ' உருவான கதை !.....

தொடர்ச்சி.........





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Mhjj2JqYRb6FwmUJ41Zq+narappadai


மணிரத்தினத்திற்கு ' நாயகன் ' படத்தை எடுக்கும்ம் 'ஐடியா'

எப்போது வந்தது ?

கமல் நடித்து பாரதிராஜா இயக்கிய :

' டிக் டிக் டிக் '

படத்தயாரிப்பாள, ஆர் . சி. பிரகாஷ் ,

சத்யராஜை வைத்து ஒரு படம் எடுக்க

மணிரத்தினத்தை அணுகியபோது, இவர்

'நாயகன்' படத்தின் 'ஒன் லைன் ஸ்டோரி ' யைத் தான்

சொன்னாராம் !

ஆனால் என்ன காரணத்தினாலோ பிரகாஷ் , அந்த படத்தை

தயாரிக்க முன்வரவில்லை !

மணிரத்தினமும் அந்த படம் கைவிடப்பட்டது குறித்து

எந்த வருத்தமும் கொள்ளவில்லை !





( ஒரு வேளை......சத்யராஜ் ஐ வைத்து ஆர். சி . பிரகாஷ்

இன் படத்தை 'நாயகன்' ' ஸ்டைலில்' எடுத்திருந்தால்

'சத்யராஜின் வேலுநாய்க்கர் இப்படித்தான் இருந்திருப்பாரோ

என்னவொ.....எனக்குத் தெரியாது, ஸ்வாமி !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 QQVWqcIMQf6sAraffPLq+sathya





மணிரத்தினம் 1985 ஆம் ஆண்டில் இயக்கிய " பகல் நிலவு "

படத்தில் சத்யராஜ் இன் 'கெட் அப் ! '

'நாயகன்' 1987 ஆம் ஆண்டு தயாரிப்பு ! )




மணிரத்தின்ம் தனது பட்டப் படிப்பை - 1975-77

வருடங்களில் மும்பை யில் தான் படித்தாராம், அப்போது

பம்பாய் வரதராஜ முதலியார் மிகவும் புகழ் பெற்றிருந்தார்.

பம்பாய் மக்கள் அவரை தெய்வமாகவே வழிபட்டனர் ! இதனை

நேரில் பார்த்த மணிரத்தினம் அந்த காட்சிகள் அவருக்கு

பசுமரத்தாணி போல பதிந்து விட்டது !

இதனையே நாம் படமாக எடுத்தால் என்று , மணிரத்தினம்

கமலை சந்திக்கும் போது ஏற்பட்டுவிட்டது ! "





கமல் :

" நாயகன் " கதையின் கரு என்ன ?



மணிரத்தினம் :




" ஒரு தமிழன் , தமிழ் நாட்டில் இருந்து

பம்பாய்க்குச் சென்று அந்த ஊரை ஆள்கிறான் ! "





கதையின் கரு கமலைக் கவர்ந்து விட்டது !

( க - க - க - க ! )



கமல் :


" மணி , 'நாயகன் ' படப்பிடிப்புக்கு வரும் டிசம்பரில் தேதிகளைத்

தருகிறேன் , சரியா ? "





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 OGBrmGNwTMSCdcHVW4Ns+04SM_NAYAKAN_JPG_1254879g



" சரி " !

இதனைச் சொன்ன மணிரத்தினம் மீண்டும் குழப்பத்தில்

ஆழ்ந்தார் !

என்னவாம் ?

அப்போதுதான் மணிரத்தினம் " அக்னிநட்சத்திரம் " படப்பிடிப்பை

அடுத்த செப்டம்பரில் ஆரம்பிக்கப் போகிறார் !

இந்த " அழகில்" எப்படி இரண்டு மாதங்களில் இன்னொரு

படத்தை - அதுவும் கமலை வைத்து - ஆரம்பிப்பது ?




ஒரே சமயத்தில் இரண்டு படங்களை இயக்குவது என்பது

ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதற்கு சமம் !



( தமிழ்த் திரைஉலகில் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில்.....

மன்னிக்கவும்.....இரண்டு படங்களில் இயக்கிய சம்பவங்கள் உண்டு !


" ஓர் உதாரணம் - அத்தான் - எடுத்துக்காட்டு - கொடுய்யா ! "

என்கிறீர்களா !


1962 ஆம் ஆண்டில் பிரபல பழம் பெறும் இயக்குனர் கே. சங்கர்....

ஒரே சமயத்தில் :

நடிகர் திலகத்தை வைத்து " ஆலயமணி " படத்தையும்

மக்கள் திலகத்தை வைத்து " பணத்தோட்டம் " படத்தையும்

வைத்து இயக்கினார் !

இரண்டு படங்களையும் மிகக் குறைந்த கால இடைவெளியில்

வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றார் ! )



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 HXyARfvDScGFXcqmkiji+aalayamani


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 YmjHBay1R4qczu0BkWI1+sankar



கமலின் 'கால் ஷீட் ' ஐ யார்தான் வீண் அடிப்பார்கள் !

மணிரத்தினம் யோசித்தார் !

" அக்னிநட்சத்திரம் " படத்தை ஒரு வருடத்திற்கு படம் எடுக்க

தயாரிப்பாளரிடம் " தடா " வாங்கினார் !

படத்தை ' நிப்பாட்ட ' தயாரிப்பாளரும் ஒத்துத் கொண்டார்ர் !

" என்னய்யா, செம ' புரூடா ' விடுகிறீர்கள் !

எந்த தயாரிப்பாளரும் அப்படி ' உட்காரு - நில்லூ ' என்று

உடனே ஒத்துக்கொள்வார்களா , என்ன ? "

என்கிறீர்கள்ளா !

ஒத்துக்கொண்டார் !

ஏன் ?

படத்தயாப்பாளர் , மணிரத்தினத்தின் அண்ணன் ஜி. வி ஆயிற்றே !

தன் தம்பி , ' நாயகன்' ஆவதை அண்ணன் தடுக்கவில்லை !



இந்த சமாச்சாரம், வேறு தயாரிப்பாளர் விஷயத்தில் மணிரத்தினம்

இப்படி நடந்து கொண்டிருந்தால் ?

" அம்மா" படத்தை எடுக்கச் சொல்லி இங்கே சில சில

நகராட்சிக்களில் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும்

நடக்கும் " டமால் - தொபால் " நிகழ்ச்சி போல் அல்லவா

மணிரத்தினம் விஷயத்தில் நடந்திருக்கும் !


சரி, ' அக்னிநட்சட்த்திரம் ' ஒரு வருடம் தள்ளிப் போடப்படது !


சரி, ' நாயகன் ' ஆவது உடனேதொடங்கப் பட்டதா ?


' லேது ' ஸ்வாமி, லேது !

என்னவாம் ?

கமல் ' சரி ' என்று சொல்லும்போது மணிரத்தினம் 'நாயகன்'

படத்தின் " ஸ்கிரிப்ட்" தயாராக இல்லையாம் !

இந்த விஷயம் கமலின் காதில் போடப்பட்டது !



இதற்கு கமலின் பதில் மணிரத்தினத்தையே வியப்பை ஏற்படுத்தியது !


கமல் என்ன சொன்னார் ?


" பரவாயில்லை !

உங்களின் " ஸ்கிரிப்ட் " ரெடியாகும் கால இடைவெளியில் நாம்

" டெஸ்ட் ஷூட் " ( TEST SHOOT )

செய்து பார்க்கலாம் ! "





அது என்ன " டெஸ்ட் ஷூட்? "




படத்தின் இயக்குனரும் பிற தொழில்நுட்ப

நிபுணர்களுடன் ( ஹீரோ உட்பட ) இணைந்து படம் செழிப்பாக

எடுக்க ஆயுத்தம் செய்து கொள்ள சில பல காட்சிகளை எடுக்க

செய்யும் " பிராக்டிஸ் " முயற்சிதான் அது !

கிரிக்கட் இல் " நெட் பிராக்டிஸ் " போலத்தான் இதுவும் !

அதுவும் தயாரிப்பாளரின் தலையில் ' மொளகாய் '

அரைத்து செய்யப்படும் வேலை இது !!

தயாரிப்பாளர் " என்னவோ பசங்க படம் எடுக்க ஆரம்பிச்சானுங்க

போலிருக்கே ! "

என்று 'கானல் நீர் ' காணும் வேலை !

தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனுக்கு இந்த 'டெஸ்ட் ஷூட்'

சமாச்சாரம் எல்லாம் அறிந்திருக்கவில்லை !






ஒரு வழியாக ' நாயகன் ' படப்பிடிப்பு தொடங்கியது !

எங்கே ?

அன்றைய பம்பாய் - இன்றைய மும்பய் - இல் ஒரு சில நாட்கள் - அதாவது -

கதை பம்பாயில் நடக்கின்றது என்பதை நமக்கு காடுவதற்கா மட்டும் அவர்கள்

மும்பாயில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்று சொல்ல

வேண்டும் !

மற்றபடி சென்னையில் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்றே சொல்ல

வேண்டும்.

மும்பையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் :

தாராவி பகுதியைப் போல்

ஒரு ' செட் ' ஐ சென்னை ' வீனஸ் ஸ்டுடியோ ' வில் உருவாக்கி

அங்கே படப்பிடிப்பு நடத்தினார்கள் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 0vZ8UxRAScu0VFjQU37m+Nayakan2

' நாயகன் ' இல் கமல்ஹாசனின் ' மேக் அப் ':




கமல் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல,

பல்வேறு தொழில்நுட்பங்களின் நிபுணரும் கூட !

மற்ற படங்களில் அவர் எப்படியோ, ' நாயகன் ' படத்தில் ஒப்பனை

அவரே போட்டுக்கோண்டதுதான் !

அது மட்டுமா !

படத்தில் மற்ற கலைஞர்களுக்கும் ஏதேனும் ஒப்பனையில் குறைகள்

இருந்தாலும் கமலே தானாகவே சென்று அந்த ஒப்பனை குறைகளை

'அட்ஜஸ்ட்' செய்து கொடுப்பாராம் !


இதில் என்ன ஒரு "கொடுமை " என்றால் , கமல் இந்த 'அட்ஜஸ்ட்மெண்ட் '

வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது, மணிரத்தினம் படத்தின்

மற்ற வேலைகளை முடித்துக் கொண்டே இருப்பாராம் !

'' நாயகன் "" படத்தில் ஜனாகராஜ், டெல்லி கணேஷ் ஆகியோர்களுக்கு

வயதான கெட் அப் தோற்றங்களை உண்டாக்கியவரும் கமல்தான் !

அது மட்டுமா !!

படத்தில் டெல்லி கணேஷ், ஜனகராஜ் ஆகியோருக்கு ஒட்ட முடி

வெட்டியவரும் கமல் தானாம் !

படத்தில் கமலின் மேக் அப் எப்படி ?

பிற படங்களில் கமல், வயதான தோற்றத்தில் வரும்போது சாம்பல் நிறத்தில்

' டோபா ' வைத்து நடித்திருப்பார்.

எடுத்துக் காட்டு : " சாகர சங்கமம் "





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 FpTiObogRTeAZE7WjZXJ+salangkai




" நாயகன் " படத்தில் எப்படி ?



1. கமலின் தலைமுடியின் நடுவில் முடியை வெட்டி விட்டு

அவர் அந்த வயோதிக தோற்றத்திற்கு :


வழுக்கை

என்று காட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர் !



2. நிஜ வாழ்வில் வரதராஜ முதலியார் எப்படி :

தாடியின்றி வருவாரோ , அப்படியே கமலையும் தன்

முகத்தை கொஞ்சம் கூட முடி இல்லாமல் ' பளிச்'

என்ற தோற்றத்தில் வலம் வரச் செய்தனர் !

முகத்தில் தாடி இருந்தால் அவரது தாடைகள் அவரது

இளவயதை மறைத்து விடும் என்று எண்ணினார் !

ஆனால் மணிரத்தினம் " தாடி பாலிசி " யை ஒத்துக் கொள்ளவில்லை !


எனினும் கமல் தாடி சமாச்சாரத்தில் மனம் கலங்கவில்லை !

தன் நடிப்பனால் " தன் முதுமை நடிப்பை " நிலை நாட்டினார் !




3. தூய்மையான வேட்டி சட்டை மட்டும் அணிந்து வந்தார் !




" நாயக்கன்" படத்தில் கமல் இப்படி வழுக்கை மனிதர் ஆக நடித்தார்

அல்லவா !

" நாயகன் " படப்பிடிப்பு முடிந்த வுடன் வழுக்கையை என்ன

செய்ய ?

மொட்டை அடித்துக் கொள்ளவேண்டும் !

ஆமாம் , மொட்டை அடித்துக் கொண்ட்டார் !

அடுத்து அவர் நடித்த படம் :




" சத்யா "


ஆயிற்றே !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Yxa8sMaFTua5finr6uDE+satha



சரி, ' மேக் அப் ஆயிற்று ! எனினும் கமலே மேகப் செய்து

கொண்டாலும் அதனை சரி படுத்துவதற்கு ஒரு நிபுணர் வேண்டுமே !

அதற்கும் கமல் தயார் செய்து கொண்டார் !

பிரபல ஒப்பனையாளர் சலீம் அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்

கொண்டு அவரின் ஆலோசனையை கேட்டுத்தான் கமல்

தன்னை ஒப்பனை செய்து கொண்டார் !

அது மட்டுமா !



அப்போது அவர் அருகே இருவர் இருந்தனர் !

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்,

மற்றும்

நடிகர் ஜனகராஜ் ஆகியோர் இருந்தனர் !



" என் மேக் அப் எப்படி இருக்கிறது ? "

கேட்டார் கமல்.


" உங்களை கொஞ்சம் கூட அடையாளம் கண்டுகொள்ள

முடியவில்லை, கமல் சார் ! "


சொன்னார்கள் ஸ்ரீராமும் ஜனகராஜ் உம் !

கமல் அவர்களை நம்பவில்லை !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 6QQyt9RGQaGm2XYQ8KmO+2004082001760106


ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமை அழைத்ட்துக் கொண்டார் !

வெளியே வந்தார் !


( உடன் ஜனகராஜ் அவர்களை அழைத்துச் சென்றால் " ரிஸ்க்"

அல்லவா ! )


வயதான கெட் அப் இல் வெள்ளை சட்டை - வேட்டி சகிதம் அவர்

சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஜங்சன் பக்கம் காலாற நடந்து

வந்தார்......யாரும் அவரை சட்டை பண்ணவில்லை - கமல் 'சட்டை'

அணிந்து வந்தாலும் கூட !

ஸ்ரீராமுக்கோ உதறல் !

ஒரு மிகப் பெரிய நடிகருடன் நாம் வெளியே வருகின்றோமே,

யாரோ ஒருவர் கமலை அடையாளம் கண்ட்டுகொண்டால் !

என்ன ஆச்சர்யம் !

ஒருவரும் கமலை - அத்தான் - வேலு நாய்க்கரை அடையாளம்

கண்டுகொள்ளவில்லை !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 A4zesxbuQaLOBAFQWCZA+NAYAGAN_15397f




" இப்போது நீங்கள் சொல்வதை நம்புலின்றேன் ,

ஸ்ரீராம் !

யாரும் என்னை அடையாளம் தெரியாதவாறு வேடம் பொருந்தி

உள்ளது !



கமல் திருப்தி அடைந்தார் !






மூன்றாம் பகுதி ......

விரைவில் .........................................





தொடரும்.



எம்கேஆர்சாந்தாராம்


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Dec 24, 2014 5:01 pm

" நாயகன் " உருவான கதை .....

தொடர்ச்சி !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 34IpAYt2QPmfjOIPFpT0+santha



' நாயகன் '

பிரபல ஆங்கில பத்திரிக்கை :

" TIMES " வெளியிட்ட உலகின்

மிகச் சிறந்த 100 திரைப்படங்களில்

ஒன்றாக இடம் பெற்றுள்ளது !


இதோ !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 A40gLmnSSUORivyoDSgc+ssss




Nayakan (1987)
Directed By: Mani Ratnam
Screenplay: Rajasri , Mani Ratnam
Cast: Kamal Hassan, Saranya, Janagaraj
Nayakan, an early, defining work in [Ratnam's] career, tells the Godfatherish tale of Velu, a boy who embraces a life of crime after his father is killed by the police. Velu (Kamal Hasan) has trouble juggling his family life with his life-and-death mob "family"; Ratnam has no such difficulty blending melodrama and music, violence and comedy, realism and delirium, into a two-and-a-half-hour demonstration that, when a gangster's miseries are mounting, the most natural solution is to go singin' in the rain.


தொடச்சி......[/h2][/center][/u]



' நாயகன் ' படத்திற்கு பின்னர் வந்த

" ஆளவந்தார் ", " தசாவதாரம் " போன்ற படங்களில் கமல்

தன் உடம்பின் எடையை :

' கண்டபடி சாப்பிட்டு '

கூட்டிக்கொண்டாராம் !

தினமும் தட்டு நிறைய எண்ணெய் யில் பொறித்த

" FINGER FISH FRY "

ஐ " லபக் " க்குவாராம் !

மீனில் உள்ள புரதமும், எண்ணெய் யும் அவர் உடல் எடையை

வெகுவாக கூட்டின !

" நாயகன் " படத்தில் எப்படி ?

ஒண்ணும் 'கம்ப சூத்திரம் ' இல்லை.......

பஞ்சுப் பொதியை கமலின் உடலை ' வூடு கட்டி' ...

அத்தான் ....சுற்றிக் கட்டி வளைத்து அவரை குண்டாக்கினர்!

முகத்தை எப்படி குண்டாக்குவது ?

பொய்ப் பற்களை வைத்து தாடையின் பகுதிகளை

" ஆர்த்தி " அல்லது ' பிந்து கோஷ் ' ஆக்கினர் !

ஆனால் மேற்காண்ட ' முஸ்தீபுகளை ' அவர்கள்

சிறிய அளவிலே மட்டும் தான் செய்தனர்......

மிகப் பெரிய அளவில் செய்தால் நம் மக்கள் :



" என்ன டா! நம்ம கமல் :

" GOD FATHER " - மார்லன் பிராண்டோ

மாதிரி இருக்கிறாரே ! "


என்ன்று கூறிவிடுவார்கள் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 Q90m41HSTn23bZEQkI79+godfather



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 7cW9OXIqTxSKhpWPgdHI+godfather





'


[center] [h2] வேலு நாயக்கர் '

கமலின் நடிப்பு :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 3Xjb5iXWSCyO6V3iOOmO+yyyyyyyyyy






" நாம் எதிர்ப்பார்ப்பதை விட பல மடஙகு திறமையை

வெளிப்படுத்தும் ஒரு நடிகர் எனக்கு ' நாயகன் ' இல் கிடைத்தார் !

அவர்தான் கமல் !

ஒட்டுமொத்தப் படத்தை மெருகேற்றுவதில் கமலின்

பங்கு மிக முக்கியமானது ! "



............................................................மணிரத்தினம்.








கமலின் நடிப்பைப் பற்றி நான் எழுதி அதனை

நீங்கள் படித்து அவரின் நடிப்பைப் பற்றி தெரிந்து கொள்வது

என்பது :

'சூர்ய ஒளியின் சிறப்பை 'டார்ச்' ஒளி அடித்து உங்களுக்கு

விளக்குவதற்கு சமம் !


( உவமை உபயம் : நடிகர் இரா. பார்த்திப்பன் ! )


ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு கமலின் நடிப்பைப் பற்றி

நான் ரசித்தைப் பற்றி :






1. " நான் சிரித்தால் தீபாவளி " பாடல் காட்சிக்கு முன்னர்

ஜனகராஜும் கமலும் அந்த " ஜிமிக்கி " இடத்திற்கு வருவார்கள், அப்போது

கமலுக்கு அந்த ' ஜிமிக்கி ' இடம் என்பது புதிது, ஜனகராஜுக்கு

அந்த இடம் பழகியது !

அப்போது ஜனகராஜ் அங்கே ' சில்மிஷங்கள் ' களைப்

பார்த்து கமல் முகம் சுளித்து :


" O SHIT ! "

என்று சொல்லுவார் !

அந்த காட்சியை எடுத்து முடித்தவுடன் ,மணிரத்தினம் கமலைப்

பார்த்து :

" என்ன கமல் ! இந்த இடத்தில் சுத்த 'ஆங்கிலேயத்தனம் ' இருக்கே !

என்றாராம் !

உடனே அடுத்த ' டேக் ' இல் தமிழில் ஒரு

" கெட்ட வார்த்தை " யை

உடனே சொல்லி அந்த காட்சியை மிக இயல்பாக்கினாராம்

கமல் !

எண்ணங்களுக்கு மிக எளிதாக செயல்படுத்தும் திறமையை

கமல் பெற்றிருந்தார் என்பதற்கு இந்த காட்சியே சான்று !'







( " ஜிமிக்கி " என்றால் என்னய்யா ? "

என்று நீங்கள் என்னைக் கேட்டால் ........

உடனே உங்களை ' லாலி பாப் ' வாங்கிக் கொடுத்து

" பால் வாடி ' க்குத்தான் அனுப்பியாக வேணடும் ! )









2. இன்னொரு காட்சி !

கமல் இந்த காட்சியில் ஒன்றுமே நடிக்கவே இல்லை, ஆனால்

அவர் தோன்றிய காட்சி, அவரின் நடிப்பை மிகவும் நிறைவாக

பேசப்பட்டது !

அது :

கமலின் வளர்ப்புத் தந்தை ஜெயிலில் தூக்கில் மாட்டி இறந்து

தொங்குவார். அந்த காட்சியைப் பார்த்து கமல் அதிர்ச்சியால்

உறைந்து நிற்கும் காட்சி.

இந்த காட்சியில் கமல் தோன்றி நடிக்கும் காட்சியைத் தவிர மற்ற

காட்சிகள் படமாக்கப் பட்டன !

கமல் வந்தார், அவருக்கு காட்சி விளக்கப்பட்டது.

பின்னர்.....

கமல் , சுற்றும் முற்றும் பார்த்தார், இரண்டு போலீஸ்காரர்கள்

ஆக நடிக்கும் இரண்டு துணை நடிகர்கள் இருப்பதைப்

பார்த்தார்...... தனது வலது பக்கம் நின்றிருந்த போலீஸ் நடிகரைப்

பார்த்து தன்னை, தன் தோளைப் பிடித்து உள்ளே பலவந்தமாக

தள்ள கேட்டுக்கொண்டார்.

கமல் போன்ற ஒரு பெரிய நடிகரை பிடித்துத் தள்ள அந்த

துணை நடிகர் தயங்கினார்....ஆனால் கமல் அவரை தேற்றி " தள்ள "

வைத்தார்.



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 GOYSUhcS6OlbamCjQsmJ+ttttttt




கமல் வந்தார்.......அவர் பார்வையில் மிரட்சி....

போலீஸ்காரர் கமலின் தோளை பலவந்தமாக பிடித்துத்

தள்ளினார்......கமல் நிலை தடுமாறி உள்ளே போய் விழுந்தார்..

ஆனால் அந்த தடுமாற்றத்தையும் மீறி கமல் , தன்னை

வளர்த்த தந்தை இறந்து தொங்கும் காட்சியைப் பார்த்து

அதிர்ச்சி அடையும் காட்சி மிக அருமையாக அமைந்து

விட்டது !





3. இன்னொரு காட்சி :

ஜனகராஜ் இன் 'டார்ச்சர்' ஆல், விபச்சார விடுதிக்கு வந்த கமல், அங்கே

பள்ளித் தேர்வுக்கு படிக்கும் சரண்ய வை சந்திக்கிறார்.

அந்த இடத்தில் , அந்த மாதிரியான " கணக்கு பரிட்சை எழுதவேண்டும் ! "

என்கிற வசனத்தை கமல் எதிர்ப் பார்க்கவில்லை !

எனவே கமல், சரண்யாவை ' கணக்கு பரிட்சைக்கு படிக்க '

விட்டுவிடுகிறார் !

ஆனால் அப்புறம் கமல் தான் என்ன செய்வது எனபது அவருக்கு

தெரியாது !

" கட்டிலில் படுத்துக் கொள்ளலாமா ? "

அல்லது

" நாற்காலியில்ல் உட்கார்ந்து கொள்ளலாமா ? "


என்கிறமாதிரி தவிப்பதை ........

கமலின் முகபாவம் நமக்கு உணர்த்துவது மிகவும்

அருமையாக இருக்கும் !

இந்த மாதிரியான முக பாவனையில் நடிப்பை வெளிப்படுத்தும்

திறமை கமல் போன்ற நடிகர் ஒருவரால்தான் முடியும் !






4. இன்னொரு காட்சி :

விரோதிகளால் தீயில் உடல் எரிந்து இறந்து கிடக்கும் தன் மகனின்

உடலை பார்க்க கமல் மாடியில் இருந்து கீழே இறங்கி

வருகிறார், அவர் நடையில் ஒரு திடம் இருக்கும்......ஒரு வேளை

அந்த உடல் தன் மகன் அல்லாத வேறு ஒருவரின் உடலாக

இருக்குமோ என்கிற உணர்வைக் காட்டுகிறது அந்த திடம் !

ஆனால் அவரால் அதனை நம்பமுடியவில்லை.....

எனினும் அவர் மனம் தளர்வதாக அவர் நடிக்கவில்லை....

மாறாக......

வேலு நாய்க்கர் தன் மகனின் உடலைப் பார்க்க கண்ணாடியை

அணிந்து கொள்வார்.

அங்கே உடன் இருப்பவர்கள் :

" பார்க்காதீங்க, நாய்க்கரே, பார்க்காதீங்க ! "

என்று அலறுவதை கமல் சட்டை செய்தமாதிரி காட்டிக்

கொள்ளமாட்டார்கள்...மாறாக இன்னும் வேகமாக அந்த

பிணத்தை நோக்கி செல்வார்.

காரணம் ?

வேலுநாய்க்கர், தன் வாழ்க்கையில் பல இன்னல்களை

சந்தித்தவர்.

பல இறந்தவரது உடல்களை நேரில் கண்டவர்.....

எனவே தன் மகன் இறந்த உடலைப் பார்க்க அவர்

அஞ்சவே இல்லை !

பின் எதற்காக , அந்த திடமான நடை ?

ஒன்றும் இல்லை.......


எப்படியாகிலும் தன் மகனின் உடலை ஒரு முறை

பார்த்துவிட வேண்டும்.....


என்கிற ஒரு தந்தை, தன் மகனைப் பார்க்க விரும்பும்

பாச உணர்வே கமலின் நடிப்பு !

இதனை உலக நாயகன் மிகச் சிறப்பாக செய்வார் !


இந்த காட்சியில் மற்றவர்கள் நடித்திருந்தால் அழுது அழுது

சோகத்தைப் பிழிந்து கொடுத்திருப்பார்கள்.......ஆனால்

கமலின் இந்த புதிய பாணி முற்றிலும் வித்தியாசமானது !





5. கமல் , விலை மாதுவாக வரும் சரண்யாவை திருமணம்

செய்து கொள்வார். கதாநாயகன் ஆக இருக்கும் ஒருவர், படத்தில்

கதைக்காக ஒரு விலைமாதுவை திருமணம் செய்து கொள்ளும்

அந்த காட்சி படத்தைப் பார்க்கும் எல்லோருக்கும் சற்று

அழுத்தத்தை கொடுக்கும் காட்சி !

படத்தின் கதாநாயகன் ஒரு விலைமாதுவை திருமணம் செய்து

கொள்வதை கமல் ரசிகர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொள்வார்

களா என்பது கேள்விக் குறியே !

ஆனால் இந்த மாதிரியான சங்கடத்தைக் கொடுக்கும் காட்சியை

கமலே , மணிரத்தினத்தின் அனுமதியின் உடன் நிறைய

கலகலப்பு மற்றும் சிரிப்பை வரவழைக்கும் காட்சியாக

மாற்றிவிடுவார்......அதுவும் முழுக்க முழுக்க இந்த காட்சி

கமலின் 'ஐடியா' வில்தான் உருவானது !


என்னது அது ?

கோவிலில் கமலை திருமணம் செய்து கொண்ட சரண்யா, ஆனந்தக்

கண்ணீர் சிந்துவார், கமலின் தோளில் இலேசாக சாய்வார்.




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 SwOTnSZGTJyg2RNcfNdz+zzzzzzzzzzzzzz


இந்த காட்சியைப் பார்த்த ஜனகராஜ் , சரண்யாவைப்

போலவே உணர்ச்சி வசப்பட்டு அழுவார் !

ஜனகராஜும் கமலின் தோளில் இலேசாக சாய்ந்து அழுவார் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 LjrYQVWiQ1Srt0vE8FM0+xxxxxx


அப்போது கமல் , ஜனகராஜ் ஐப் பார்த்து ஒரு பார்வை

பார்ப்பார், பாருங்கள் !

கமலின் அந்த பார்வை அருமையாக இருக்கும் !

அந்த பார்வை :


" அவள் அழுவதற்கு காரணம் இருக்கு !

ஆமா, நீ ஏனடா அழுறே ? "

என்று கமல், ஜனகராஜ் ஐப் பார்த்து கேட்பது போல்

இருக்கும் - அந்த கமலின் பார்வை !

சற்றே அழுத்தமான காட்சியை கலகலப்பாக ஆக்கியது

கமலின் " டைரக்ஷன்" தான் !

கமலும் ஜனகராஜ் ஜும் முன்கூட்டியே பேசிக் கொண்டு

இந்த காட்சியை அமைத்தார்களாம் !

இந்த மாதிரி " கமலின் கமால் வேலைகளால் "

மணிரத்தினத்திற்கு வேலை இலகு ஆகிவிட்டது என்பதும்

உண்மை !






[color=#FF0000]

6. இறுதிக் காட்சி :

கமல் இறந்து கிடக்கும் காட்சி.

' உயிர் இல்லாத கமலின் முகத்தில் ' , அவர் கையில்

ஈ மொய்க்கும் காட்சி !

கமல் உடம்பில் ஈக்களை மொய்க்க விடுவது என்பது

அவ்வளவு கடினம் இல்லை.

தண்ணீரில் சர்க்கரையை கலந்து கமலின் உடம்பில் தெளித்தாலே

போதுமே !

ஆனால் அந்த ஈக்கள் செய்ய்யும் ' டார்ச்சரை ' தாங்கிக் கொண்டு

உயிர் அற்ற உடல் போல கமல் " இறந்து கிடக்க "

வேண்டுமே, அது என்ன எளிதா, என்ன !

நாகேஷ் ( ' மகளிர் மடும் ' ) , மற்றும் கமல் போன்ற

திறமையான நடிகர்களால் மட்டுமே இப்படி

நடிக்கமுடியும் !

[/color





" நாயகன் " தயாரிப்பு

கை மாறியது !




" என்ன ஆச்சு ? "

" ஒண்ணுமில்லே, 'முக்தா' சீனிவாசனுக்கு

கையை கடிக்குது ! "


( பழைய ' அமிதாஞ்சனம் ' விளம்பர வசன ஸ்டைலில் எழுதிவிட்டேன் ! )


எப்போதும் சிக்கனத்தையே கடை பிடித்து படங்களை எடுத்து

பழகிய முக்தா பட அதிபர் சீனிவாசனுக்கு மணி யின்

" மணி " யை தாராளமாக செய்யும் பழக்கம்

பிடிக்கவில்லை !

'முக்தா சீனிவாசன், " அந்தமான் காதலி " படப் பிடிப்பில் சிவாஜி

கணேசனிடமே படத்தின் காலநேரம் நீண்டு போவதை விரும்பாமல்

அவருடன் சண்டை போட்டவர் !

இப்போ மணிரத்தினம் !

சீனிவாசன் ஒன்றும் சொல்லவில்லை !

படத்தை மணியின் சகோதரர் ' ஜீ வி பிலிம்ஸ் '

வெங்கடேஸ்வனிடம் " ஒரு தொகை பேசி "

விற்றுவிட்டார் !



" முக்தா பிலிம்ஸ் " " நாயகன் "


" ஜீவி பிலிம்ஸ் " - " நாயகன் "

ஆக மாறியது !





%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



" நாயகன் " உருவான கதை.......

அடுத்த பகுதி வுடன்

நிறைவு பெறும் !




தொடரும்




விரைவில் .....................

அடுத்த கட்டுரை !

இந்த காட்சி இடம் பெற்ற படம் பற்றிய கட்டுரை !





இந்த காட்சி எந்த படத்தில் இடம் பெற்றது ?






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 JTj3hNNIThSQYsL7CRim+untitled







" நான் எழுத

நினைப்பதெல்லாம்

நீங்கள்

எழுத வேண்டும் ! "




எம்கேஆர் சாந்தாராம்


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jan 16, 2015 8:13 pm

டாக்டர் சார், உங்களது அருமையான படைப்பு நீண்ட நாள்களாக அப்படியே கிடப்பில் இருப்பது போல் தெரிகிறது, ஓர் அன்பு வேண்டுகோள், ஓய்வு இருக்கும் போது தொடருங்களேன். உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Jan 17, 2015 7:24 am

அன்பு மிக்க திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு ,

வணக்கம் !

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !

தாங்கள் அடியேன் கொண்ட அக்கறைக்கு நான் தலை வணங்குகின்றேன் ,

நன்றி ஐயா !



இன்னும் 2 அல்லது 3 தினங்களில் " நாயகன் " இறுதிக் கட்டுரை

வெளியாகும் .


அடுத்த கட்டுரை முழுமையாக " ஒரே முட்டாய் " விரைவில்

தர முயன்று வருகிறேன் !


அடுத்த கட்டுரைக்கு அப்புறம் ஒரு மாறுபட்ட தலைப்பில்

ஒரு நீண்ட கட்டுரை எழுதிக்கொண்டு வருகிறேன் !

படிக்க படிக்க சுவை கூடும் வரையில் அந்த கட்டுரை

வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் !


நன்றி ஐயா !




எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jan 17, 2015 11:48 am

நன்றி டாக்டர் சார். உங்களது படைப்புகளை, ஒரு புதிய கோணத்தில் படைத்து வருகிறீர்கள், படிக்க சுவையாக, பலாச்சுலையில் தேன் கலந்தது போல் சுகமாக இருக்கிறது. உங்களது இந்தத் தகவல்களால் இனி வரும் சமுதாயமும் பயனடைய வேண்டும். இது உங்களது கனவு என்பது தான் உண்மை. எல்லாவற்றையும் பொறுமையாக இறக்குமதி செய்து சேமித்து வருகிறேன்.

மிக்க நன்றி டாக்டர் சார்.


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon Jan 19, 2015 5:22 pm

" நாயகன் " உருவான கதை :

நான்காம் தொகுதி :





அறிமுகம் :

சரண்டா :







பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 ZuEa0FIaSq27X2aRrJIq+saranya-1




படத்தின் ஆரம்ப நிலையில் இருந்தே இந்த படத்தின்

நாயகி ஒரு புதுமுகம் ஆக இருக்க வேண்டும் என்பதை

மனதில் 'முடிச்சு ' போட்டு வைத்திருந்தார் இயக்குனர் !

ஏன் எனில் ஒரு புதுமுகம் நடித்தால் அந்த பாத்திரம்

வலுப் பெறும், எளிதில் நம்பும்படியாக இருக்கும் !

இந்த விஷயத்தில் மற்றவர்களை சமாதானப் படுத்த

மணிரத்தினம் சிரமப்பட்டார் என்றே சொல்ல வேண்டும் !

எனினும் மணிரத்தினம் முழு சுதந்திரம் எடுத்துக்

கொண்டார் !

ஒரு புது முகத்தை தங்களின் படத்திற்கு போட

'முக்தா பிலிம்ஸ் ' பட நிறுவனம் இலேசில் மசிய

வில்லை !

எனினும் , புதிதாக ஒரு வெளியாளை ( மணிரத்தினம் ) தங்கள்

படத்திற்கு இயக்குனராக போட்டதையும் , தங்கள் படத்திற்கு

அதிக பொருட் செலவு செய்தது - இத்தனை காரணங்களால்

நாயகியாக முதன் முதலில் ஒரு புது முகத்தைப் போட

மணிக்கு முழு சுதந்திரம் கொடுத்தனர் !

சரண்யாவின் புகைப்படம் மணிரத்தினம் கையில் கிடைத்த போது

அவர் அந்த புகத்தைப் பார்த்து திருப்தி அடைந்தார்.

'முக்தா சீனிவாசனுக்கு சொந்தமான முக்தா கல்யாண மண்ட

பத்தில் சரண்யாவுக்கு ' மேக் அப் டெஸ்ட் ' நடந்தது !

தேர்வில் சரண்யா வெற்றி பெற்றார் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 MCkbqhgNRVuF6RSOCTI2+saranya2



சரண்யா நடிப்பு எப்படி ?

ஒரு மிகப் பெரிய நடிகருக்கு ஈடு கொடுத்து சரண்ய

நன்றாக நடிக்க சரண்யா தயங்கவே இல்லை !

எல்லாம் இயக்குனர் கொடுத்த தைரியம்தான் !

'ஒரு புதுமுகம் நடிக்கிறார்!'

என்கிற உணர்வே இல்லாமல் மிக அற்புதமாக சரண்யா

நடித்தார் !

இந்த படத்தால் சரண்யாவுக்கு மிகப் பெரிய புகழ்

கிடைத்தது !

எனினும் முதல் ரவுண்ட் இல் சரண்யா அவ்வளவாக

பரிமளிக்க வில்லை !

இப்போது.....

அழகான அம்மா ' ஆக இரண்டாவது ரவுண்ட் இல் "தூள் "

கிளப்புகிறார் !





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





" நாயகன் "

பாடல்கள் - இசை :

இளையராஜா !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 JSr66XgXSLuV5e2ctsan+Mani-Ratnam-And-Ilayaraja





மணிரத்தினம் - இளையராஜா - இவர்களுக்குள் ஓர்

ஒற்றுமை உண்டு !

அது என்ன தெரியுமா ?


இரண்டு பேர்களின் பிறந்த நாளும் ஒன்றுதான் !

அத்தான் - ஜூன் 2 !


( இது சரியா தவறா என்பதை யாராவது உறுதி செய்தால் நலம் !

பொதுவாக பல இணைய தளங்கள் தரும் செய்திகள் உண்மையாக

இல்லாமல் " புரூடா " வாக உள்ளன !

( ஆனால் நமது " ஈகரை இணையதளம் " அவ்வாறு அல்ல ! )

ஆனால் எந்த பத்திரிக்கைகளில்லும் இந்த பிறந்த நாள்

ஒன்று என்கிற செய்தியை நான் படிக்கவில்லை ! )


அது போகட்டும் !

" நாயகன் " படத்தில் இசை ஞானி இளையராஜா வின் பாடல்கள்

அனைத்தும் மிகப் பிரபலம் !

அந்த பாடல்களைப் பற்றி நான் சொல்லி நீங்கள் அறிந்து

கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை !

ஏதோ எனக்குத் தெரிந்ததை 'தோடா' , ' தோடா ' - அத்தான் -

கொஞ்சம் , ' கொஞ்சம் !





1. " தென் பாண்டிச் சீமையிலே "

பாடல் இளையராஜாவுக்கும் கமலுக்கும்


2. " அந்தி மழை மேகம் "

பாடல் டி எல் மகாராஜனுக்கும்


3. " நான் சிரித்தால் தீபாவளி "

பாடல் கே. ஜமுனாரானி - எம் எஸ் ராஜேஸ்வரி - இவர்களுக்கும்


4. " நீ ஒரு காதல் சங்கீதம் "

பாடல் மனோ - கே எஸ் சித்ரா இவர்களுக்கும்


5. " நிலா அது வானத்து மேலே "

பாடல் இசைஞானிக்கும்....

ஈடற்ற புகழைத் தந்தன என்பது உண்மை !





1. ' தென் பாணிடிச் சீமையிலே "

இந்த பாடல் படத்தில் , மொத்தம் மூன்று தடவைகள்

ஒலித்தன என்பது எனக்கு ஞாபகம் - தவறு இருந்தால் என்னை

உதைக்க வராமல் திருத்தவும் !


முதலில் வரும் பாடல் , இளையராஜா பாடுவார்.

இளையராஜா பாடும் போது :


" தென் பாணிச் சீமையிலே ......

...........................................யார் அடிச்சாரோ ! "

என்று பாடுவார் !


இதே பாட்டை பின்னர் கமல் பாடும்போது :


" யார் அடித்தாரோ "

என்று " இலக்கண சொச்சம " ( ! ) ஆக பாடுவது

ரசிக்கும்படியாக இருக்கும் !

இவர்கள் இருவருக்கும் இடையில் ஏன் இந்த வித்தியாசம் ?

தெரியலை !

ஒரு வேளை முதலில் ராஜா பாடும்போது கமலின் வாழ்க்கைத்

தரம் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும்,

பின்னர் கமல் பாடும்போது வேலு நாய்க்கரின் வாழ்க்கைத் தரம்

உயர்ந்து விட்டது என்பதை :


" சிம்பாலிக் "

ஆக காட்டுவதாக இருக்குமோ ? !

இந்த கேள்வியை இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம்

கேட்டால் அவர் என்ன சொல்கிறார் , தெரியுமா ?


" அதுவா ? அது அப்படித்தான் ! "


இது எப்படி இருக்கும் ?



" தேன் மழை " படத்தில் போலி டாக்டராக ' நடிக்கும் '

சோ, போலி நோயாளியாக நடிக்கும் நாகேஷுக்கு பரிந்து

பேசும் மனோரமாவின் கேள்விகளுக்கு

" அப்படித்தான், அப்படித்தான் "

என்று சமாளித்து சொல்லுவார்.....ஹி..ஹி.. அந்த காட்சி

எனக்கு காபகம் ....அத்தான் .....ஞாப்பகம் வருது !




ஆனால் ஒன்ற மட்டும் உண்மை !




" தென் பாண்டிச் சீமையிலே " பாடல் ' நாயகன் '

படத்தில் ஒரு :


SIGNATURE SONG

போல் ஆகிவிட்டது என்னவோ உண்மை !






2. " அந்தி மழை மேகம் "



இந்த பாடல் , படத்தில் மகிழ்ச்சியான தருணம் ஒன்றில்

வேலுநாயக்கர் குடும்பமும் ஊர் மக்களும் ஒன்றாகக் கூடி ஆடிப் பாடி

மகிழும் பாடல் காட்சி !

வடநாட்டில் கொண்டாடப் படும் " ஹோலி " பண்டிகையைப் போன்று,

வண்ணங்களை குழைத்து உடம்பில் அப்பி , தடவி , பாடி மகிழும்

காட்சி !

ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ராம் மேற்படி காட்சியினை அற்புதமாக படமாக்கிக்

கொண்டிருந்தார் .


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 9eOUZSgFTGOeYjvLABQF+m(3)




அந்த சமயத்தில் , அந்த காட்சியில் கமல் , தன்னை விரும்பும்

ஊர் மக்களை மகிழ்விற்பதற்காக ரூபாய் நோட்டுக்களை வானில் அள்ளி

வீசி பரப்பி விட்டு பின்னர் அந்த பணத்தை ஊர் மக்கள் எடுத்துக் கொள்ள

செய்வார் .

பொதுவாக " பண விஷயத்தில் " இந்த மாதிரியான ரூபாய் நோட்டுக்களை

பயன்படுத்துவதில் அசல் ரூபாய் நோட்டுக்களை யாரும் பயன்படுத்த

மாட்டார்கள் .......

காரணம் ?

அத்தான் உங்களுக்குத் தெரியாதா , என்ன .......

ரூபாய் நோட்டுக்களை " லூட் " கொடுத்து விடுவார்கள் !

எனவே ......

அசல் ரூபாய் நோட்டுக்களை வீசி பறக்கவிடாமல் அதற்கென

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட " போலி " ரூபாய் நோட்டுக்களை

பயன்படுத்துவது என்னவோ பழக்கம் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 R8KaYaXWSExKbSXNx3wH+IMG_8853





" அந்தி மழை மேகம் ' பாடலில் கூட இந்த மாதிரியான

போலி ரூபாய் நோட்டுக்களை பறக்க எற்பாடு செய்தனர் .......

அதுவும் அவத போலியான ரூபாய் நோட்டுக்கள் கூட இந்திய

அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தயாரிக்க

வேண்டும் என்பது விதி !



ஆனால் ......." ரூபாய் நோட்டுக்களை " விசிறி அடிக்க

கமல் உட்பட எல்லோரும் எல்லாமும் தயார் ........

ஆனால் .....


போலி ரூபாய் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்ட ஆள்

இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை .....என்ன ஆயிற்றோ அந்த

ஆளுக்கு !


கமல் தலையை சொறிந்தார் !


மணிரத்தினம் " கம் " என்று இருந்தார் !



ஸ்ரீராம் காமரா முன்பு ஒரு கையினை ' முட்டு ' கொடுத்து

தாடியை சொறிந்து கொண்டிருந்தார் !



" ஊர் மக்கள் " - அத்தான் - துணை நடிகர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் !




நேரம் கடந்து கொண்டெ இருந்தது !

கமல் யோசனையில் ஆழ்ந்தார் !




ஓர் 'ஐடியா ' கமலுக்கு உதித்தது !

உடனே அந்த 'ஐடியா ' ஐ செயல் படுத்தினார் !

'பணம் " வந்து சேர்ந்தது !

படப்பிடிப்பு நன்றாகவே முடிவடைந்தது !




பின்னர் எல்லாம் முடிந்து " பாக் அப் " ஆன

பிறகு கமல் , ஸ்ரீராமிடம் சென்றார் .....

சொன்னார் :


" ஸ்ரீராம் ! இப்போது நீங்கள் படப்பிடிப்பு நடத்திய இந்த

" பணம் விழும் ' காட்சி போலியான ரூபாயில் எடுக்கப்பட்டது

அல்ல !

உண்மையான அசல் 100 ரூபாய் நோட்டுக்களை வைத்தே எடுத்தது ! "



ஸ்ரீராம் திடுக்கிட்டார் !


" என்ன சொல்கிறீர்கள் , கமல் சார் ? "

- ஸ்ரீராம் , கமலை கேட்டார் !


கமல் மேற்கொண்டு சொன்னார் :


" போலி ரூபாய் நோட்டுக்கள் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை

என்பது உங்களுக்குத் தெரியும் !

இந்த " பண விஷயத்தால் " எல்லோருடைய உழைப்பு வீண்

ஆவது எனக்கு பிடிக்கவில்லை !

எனவே நான் ஓர் ஆளை ஆழ்வார்ப்பேட்டைக்கு அனுப்பி

ரூ.2,00.000 - இரண்டு லட்சம்

ரூபாயை வரவழைத்து படப்பிடிப்பு நடத்தினோம் !

உண்மையான ரூபாய் நோட்டுக்களை வைத்து படப்பிடிப்பு

நடத்தியது உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது !

படப்பிடிப்பு முடிந்த பின்னர் சில ரூபாய் நோட்டுக்கள் காணாமல்

போனால் அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்றும் சொன்னேன் ! "


என்றார் கமல் !


ஸ்ரீராம் வாயைப் பொழந்து கொண்டு நின்றார் !




சரி , உண்மையான ரூபாய் நோட்டுக்கள்

அனைத்தும் 'பொறுக்கி " எடுக்கப்பட்டதா , பணம் 2 லட்சங்கள்

சரியாக இருந்ததா !

இல்லை , ஸ்வாமி !

ரூபாய் 18,000 " காணாமல் " போய்விட்டது !

யார் எடுத்தது ?

தெரியலை !



ஒரு வேளை....



பல " எம்கேஆர்சாந்தாராம் " கள் அங்கே படப்பிடிப்பில்

கலந்திருக்கக் கூடும் !






3. " நான் சிரித்தாள் தீபாவளி "

கே. ஜமுனாராணி மற்றும் எம் . எஸ் . ராஜேஸ்வரி :





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 ZcKVP6fSjmM1eVEEcboO+maxresdefault




இந்த பாடலை இளையராஜா என் பழம் பெறும்

பாடகிகள் இருவரை வைத்து பாடவைக்க வேண்டும் ?


காரணம் ஒன்றும் இல்லை.....

" நாயகன் " படக் கதை ஒரு ' பீரியட் ' படம் போல் படம் பார்க்கும்

ரசிகர்களுக்கு தோன்ற வேண்டும் என்கிற 'ஐடியா ' மணிரத்தினம் மற்றும்

இளையராஜா வுக்கு தோண்றி இருக்க வேண்டும் என்று நிணைக்கிறேன்


இந்த பாடலைப் பாட எம். எஸ் . ராஜேஸ்வரி மற்றும் ஜமுனாராணி

இருவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 O6h9aJDNRpgHoLphLPYX+hqdefault


( கே . ஜமுனா ராணி )




இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இரு பாடகிகளுக்கும் ஒரே ஒரு

தயக்கம் !

என்ன தயக்கம் ?

என்ன தெரியுமா ?

" சென்னையில் இலவசமாக கிடைப்பது ஒன்றே ஒன்றுதான் ! "

அது என்ன என்று தெரியுமா ?


" அட்வைஸ் " - அத்தான் = அறிவுரை !


இருவரையும் " இலவசமாகவே " அறிவுரை செய்தனர் ....

என்ன அட்வைஸ் தெரியுமா ?



" நீங்கள் பழைய பாடகிகள் !

இளையராஜா உங்களுக்கு மரியாதை தரமாட்டார் !

அவர் உங்களை சரியாக நடத்த மாட்டார் ! "



இந்த அறிவுரையை கேட்டு மனம் கலங்கினர் இருவரும் !

எனினும் பாடல் ரிகார்டிங்க்க் கு சென்றனர் !


நடந்தது என்ன தெரியுமா ?


இளையராஜா அவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுத்தாராம் ,

அவர்களை கெளரமாக மதிப்பு கொடுத்து பேசினாராம் !



கே. ஜமுனாராணிக்கு இந்த " " நான் சிரித்தாள் " பாடல்

அவ்வளவாக புதிது இல்லை !

அந்த காலத்தில் " காளை வயசு கட்டான சைசு "

போன்ர பாடலை பாடியவர் ஜமுனாராணி அல்லவா !


1975 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை பாடுவதற்கே

'சான்ஸ்' இல்லாமல் தவித்த ஜமுனாராணிக்கு ' நான் சிரித்தாள்

தீபாவளி ' பாடல் மூலம் மறுபடியும் ஸ்டுடியோ வில் காலடி

வைக்கும் பாக்கியம் கிடைத்தது !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 KMQStAouRuiDFzpbDLNI+m(2)





எம் .எஸ் . ராஜேஸ்வரிக்கு ?


" பராசக்தி " படத்தில் வரும் " ஒ ரசிக்கும் சீமானே "

பாடல் டைப் தானே இந்த பாடல் !

ஊதித் தள்ளி விட்டார் ராஜேஸ்வரி !


அது மட்டுமா !


" பாசமழை " – ( 1989 )- மோகன் - ராதிக நடித்து மு. கருணாநிதி வசனம்


இந்த படத்திலும்

எம் .எஸ் ராஜேஸ்வரிக்கு இன்னொரு பாடல் பாட

வாய்ப்பு கொடுத்தார் , இளையராஜா !





டையில் பீஸ் " !


" நாயகன் " !

இளையராஜா இசையைத்த 400 ஆவபடம்








' நாயகன் " படம் வெற்றி !




நாயகன் ' படம் சென்னையில் 175 நாட்கள் ஒடி வசூலைக்

குவித்தது !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 IBnMkBwR8ygY2okmIEQQ+Nayagan175copy




" நாயகன் " படம் வசூலில் மட்டும் அல்ல , அதன் பின்னர்

வந்த பல தமிழ்ப் படங்களுக்கு முன் மாதிரியாகவும் அமைந்தது !

கமலின் " சத்யா "

ரஜினியின் " பாஷா "

கார்த்திக்கின் " அமரன் "

போன்றவை ' நாயகன் ' படத்தின் பாதிப்பே !



இந்த படம் பல உள் நாடு மற்றும் வெளிநாட்டு - இவைகளில் இருந்து

சிறந்த படம் என்று பல பரிசுகளை வென்று குவித்தது !


சிறந்த வெளிநா ட்டு படத்திற்காகான :


" ஆஸ்கார் '

பரிசுக்காகவும் ' நாயகன் ' தேர்வு செய்து அனுப்பப் பட்டது !

இதற்கு முன்னர் நடிகர் திலகத்தின் " தெய்வ மகன் " இவ்வாறு

தேர்வு செய்யப் பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கும் !

" ஆஸ்கார் " பரிசு வாங்க முடியாமல் போனாலும் அவார்டுக்காக

தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் வாசலைத் தொட்ட படம் :

" நாயகன் " !



மத்திய அரசின் சிறந்த நடிகர் - 1987 - பரிசை கமல் பெற்றார் !

ஒளிப்பத்வாளர் ஸ்ரீராம் - அந்த வருடத்திய சிறந்த ஒளிப்பதிவாளர்

பரிசை பெற்றார் !

சிறந்த அரங்க நிர்மாணத்திற்கு தோட்டா தரணி மத்திய அரசின்

பரிசை பெற்றார் !





அதைவிட கமலுக்கு கிடைத்த

மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா ?


கீழேபடியுங்கள் !
[/ u]






1987 ஆம் ஆண்டு - தீபாவளிக்கு முந்தின

நாட்களில் ஒரு நாள் - " நாயகன் " இன்னும் ரிலீஸ்

ஆகவில்லை !

" நாயகன் " படத்தின் " பிரிமீயர் " காட்சி !

வி ஐ பி களுக்கான காட்சி !

சிவாஜி கணேசன் படத்தை காண வந்தார் !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 QbrnlQUR6K0q8gcavzoq+m(4)




உடன் :

ரஜினி , மனோரமா , மற்றும் கே . பாலசந்தர் !


பிரிமியர் ஷோ முடிந்தது !



படம் முடிந்து எல்லோரும் வெளியெ வந்தனர் !



நடிகர் திலகத்தின் வருகைக்காக , அவரின் கருத்தைக் கேட்பதற்காக

கமல் கதவோடு கதவாக சாய்ந்து கொண்டு நடிகர் திலகத்தின்

வருகையை எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தார் !

கமலின் அருகே நடிகர் திலகம் வந்தார் !


கமலை அப்படியே கட்டி அணைத்தார் , நடிகர் திலகம் !

கமலின் காதில் மெல்ல ' கிசு கிசுத்தார் ' நடிகர் திலகம் !

என்ன சொன்னார் தெரியுமா ?



" எனக்கு ரொம்ப பெருமையாக இருக்குப்பா ! "


கமலின் கண்களில் கண்ணீர் பெருகியது !

ஆனந்தக் கண்ணீர் !

அதனை அடுத்து நடிகர் திலகம் சொன்னது ,

கமலை அழவைத்து விட்டது !

என்ன சொன்னார் நடிகர் திலகம் ?



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 XZeX3qOSS425lCR8ugsi+m(1)







" உனக்குத் தெரியுமா , கமல் !

இந்த வேலு நாயக்கர் காரக்டர் நான் பண்ண வெண்டிய காரக்டர் ,

புரியுதா ! "



கமல் அழ ஆரம்பித்துவிட்டார் !

அனைவருக்கும் புரியவில்லை !

பின்னர் கமல் அனைவருக்கும் சொன்னவுடன் மிகவும்

மகிழ்ந்தனர் !



ரஜினி ?

ஷோ முடிந்தவுடன் வேகமாக ஒடி விட்டார் !

அன்று இரவு .....ரஜினியின் போன் !


" வேலு நாயக்கர் இருக்கிறாரா ? "


ரஜினி , கமலிடம் இப்படி கேட்டாராம் .....

ரஜினியின் குரல் தழுதழுத்தது !





[u] இப்போது சொல்லுங்கள் ......

இதனை விட கமலுக்கு வேறு

' ஆஸ்கார் ' அவார்ட் ' வேணுமா , சார் !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 KMsbDhkTneddkEtxed1G+images







உங்களின் கருத்துக்களை

எதிர்ப் பார்க்கும் :




எம்கேஆர்சாந்தாராம்




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




அடுத்த கட்டுரை :






நடிகர் திலகத்தின் :



" பாலும் பழமும் " ( 1962 )





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 17 BwxXQgmNQdOdm64TjcVZ+DSC06930





படமும் & பாடல்களும் !



ஓர் அலசல் !


Sponsored content

PostSponsored content



Page 17 of 26 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக