புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
62 Posts - 34%
i6appar
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
62 Posts - 34%
i6appar
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:29 pm

First topic message reminder :


1. தியானம்

உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும்
ஒரு கரீய பெரீய முட்டையாய்.

உறங்காது
நானோ
உள்விழித்திருப்பேன்.

உள்திரளும் பரிதிக் குஞ்சின்
உதயம் தியானித்து.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:35 pm

11. உராய்வு

கோளங்கள் நகரும் போது
ஒன்றோ டொன்றுராய்ந்து
கீதம் ஒன்றெழுப்புகுதாம்.

மானுடரின் காதுகளை எட்டாத
கோளகீதம்
கடவுளர்க்கே கேட்கும் என்றார்
கிரேக்கர்.

ஞாலமே தூங்கும் ஓர் நள் யாமம்
தூங்காத ந‡த்திரங்கள்.
நான் முற்றத்தில் நிற்கிறேன்
மனமோ முகையவிழ்ந்து
பால் வழி முற்றத்தில் பவனிக்க.

திடீரென அதிர்ந்தன என்
உட் செவி நரம்புகள்
பேரண்ட ரீங்காரம்
உள்ளுராய்ந்ததே கோளகீதம்.

மனங்கிழிந்து போனேன்; அக்
கணங்களிலே நான்
மானுடன் அல்லன்
மானுடனே அல்லன்.

நீங்களும் நின்று பாருங்களேன்
ஓர் ந‡த்ர ராவில்
மனங்கிழிந்து போக
உள்ளுருவிச் செல்லும்
கோள முட்டிகளின் கள்ளிரைச்சல்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:35 pm

12. வெறுங் காற்றில் கலந்திடுமோ.....

முன்பு தமிழ்நாட்டில் ஒரு கீழ் வெண்மணி
இன்று பீகாரில் இன்னொன்று.

சாதி வெறிக்கேது திக்கு?
தெற்கிலே பற்றியது
வடக்கிலும் தீ நாக்குவளைத்தது.

பீகாரில் ஒரு கிராமத்தில்
சாதி வெறியர் எளியவர்களுக்கு
எரி கொள்ளிகளால் பதில் சொல்லியுள்ளார்.

கோயிலில் தீவட்டி ஏந்திய கைகள்
தாழ்த்தப் பட்டவரின் குடிசைகள் கொளுத்த
தீவட்டியோடு ஊர்வலம்போயின.

கொள்ளிவாய்ப் பேய்கள் சுற்றிவர
குழுமி நின்று உமிழ்ந்த தீ
பற்றிப் பிடிக்க குடிசைகளுள் துயின்ற
பதினான்கு உயிர் வெண் மணிகள்-
பிஞ்சுப் பாலகர், நேற்றுத் தான்
மஞ்சம் நுகர்ந்த மணமக்கள், முதியவர்-
பச்சை உடம்போடு பஸ்மீகரமாயின.

ஹரிஜனங்களை அவிர்ப் பொருளாக்கி
சாதி வெறியர் வேள்விகள் செய்ய
சந்நிதானங்கள், கோயில்கள், பீடங்கள்
குத்துக் கல்லாய் குந்தியிருந்து
ஸ்லோகம் சொரிந்தன.

ஆட்சி பீடங்களில் மாறி மாறி ஆள்வோர்
அமர்ந்தனர் போயினர்
'கீழ் வெண்மணிகள்' போயாவிட்டன?
சாதிவெறியரின் ஏவலால்
மன்னுயிர் தின்ற தீயே நீயும்
விண்ணெழுந்து வெறுமனே போகுதியோ?

தீயே!
ஆதிவேடன் பண்டொருநாள்
கல்லோடு கல்லுரசக் கனன்றதீயே,
உன்னை இங்கழைக்கிறோம்
மீள்க.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
சாதி வெறியை ஊதிவளர்த்த
தீயவர் கையில் நீ சேரற்க.

அக்கினியே! இடம்மாறு.
அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த
ஏழை எளியவரிடம் வந்து குடியேறு.
அவர்கள் கண்களில் ஜுவாலி.
நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி.
சொற்களில் சுடு சரமாகு.
செயல்களில் ஆலைக் கனல்பெருக்கு.
மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக.

ஆதிஜோதியே! அனற் கொழுந்தே!
நின்னை வேண்டினோம்
இந்த எளியவர் வாழ்வு வெளிச்சமுறும் பொருட்டாக.

தீயே உன்னை அழைத்தனம்
தீயவரைச் சென்றுதீண்டுதற்காக.

சாதி இன, மத நிற வெறி
எந்தெந்த மூலை முடக்கிலே காணினும்
அவற்றை
நீக்கமற எரிந்து நீறாக்கும் பொருட்டாக.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:36 pm

13. இந்தியாவே நீ எங்கு செல்கிறாய்?

மீண்டும் மனிதன் இருண்ட குகையுட் புகுந்தான்
வில்லும் அம்புமாய் வேட்டை விழையும் குணத்தினனாய்.
ஒரு வித்தியாசம்
இப்போது அவன்குறி சக மனிதனேதான்.

அஸ்ஸாமில் பாய்ந்த அம்புகள் அதற்குச் சாட்சி.
ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவலக்குரல்
விண்ணை நிறைக்க மீண்டும் மீண்டும்
தொண்டைக் குழியைத் துளைத்துப் போன அம்புகள்.
துப்பாக்கிக் குண்டுகள்-

பிஞ்சுகள், முதிர்ந்தவை-
பேதமின்றி எல்லாமே உதிர்ந்தன.

பிணக் காடு, இரத்த வெள்ளப் பெருக்கு
இவற்றின் நடுவே கழுகுகள் வேறு.

பிணம் பொறுக்கிகளாய்,
பிணக்குவியலினிடையே உயிராடும் ஏதும்
தலைநீட்டாவோ என
வாக்குப் பொறுக்க நத்தி வட்டமிடும்
கழுகுகள் என்றவை இருரகம்.

என்னே இவர் சிறுமை
பிணக் குவியலின் நடுவே சிம்மாசனமிட
விழையும் வேட்கை,
வேட்டையாடும் மனிதனின் உச்சம்.

இருபுறமும் ஈட்டியும் வாளும் ஏந்தியவர்
இடையே சமாதானம் வேண்டி நடந்த
காந்தியின் யாத்திரை எங்கே?
பிணக்காட்டில் தேர்தல் யாத்திரை செய்யும்
இவர்கள் எங்கே?

இந்தியாவே, நீ எங்கு செல்கிறாய்?
இமயமலை உச்சி எங்கே? இன்றைய உன்
வீழ்ச்சி எங்கே?
இமயத்தினின்றும் வழிந்தோடும் உன் புண்ணியநதிகள் இன்று
புலைமை குளிக்கிறதே அவற்றில் ஏனிந்த இரத்தவெடில்?

குடில்கள் தோறும் வளர்த்த அக்னியில்
வாழ்வு சுடர்த்திய உன் பண்டையரிஷிகள்,
அண்மைக் காலம் வரை இருந்த
ரமணர், அரவிந்தர் போய் மறைய

போலிகளும் பொய்மைகளும் அன்னக் காவடிகளும்
பொய்க்கால் குதிரையாட்டப் புது மன்னர்களும்
வாழ்வு தருவார் என்று வறுமை கொண்டாயே.

"மன்னும் இமயமலை எங்கள் மலையே" என்று
செருக்கோடு பாடிய நின் கவிகள் கருதியது
வெறும் மலையைப்பற்றி மட்டுந்தானா?
இல்லை யெனின்,
மாநிலமீதில் உன்னிலை இழிவதேன் இன்று?

உதறு! உன்சிறுமைகளை உதறிஎழு.
உன்னில் நீ உறுதி கொள்.

பண்டைய ஞானத்தை
இன்றைய காலத்தியல்புகளுட் பாய்ச்சும்
வித்தை பயில்! இருண்ட நின்
வீட்டுள் சுடரேற்று.

விடிகாலைக்கதிர் ஒளியெழுதச் சுடரும்
இமயத்தின் நெற்றியென
வாழ்வு சுடர்த்தும் வழியறிக இந்தியமே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:36 pm

14. விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்

பாரதி,
விடுதலை அவாவிய நின்
சிட்டுக் குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும்
மேய்தல் கண்டேன்.

விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குரலென்றால்
அதன் இதழ்களிலும்
'விடு விடு' என்ற அதே துடிப்புத்தான்.

முற்றத்தில் மேயும் போதும்
திண்ணையில் திரியும் போதும்
வீட்டு வளையின் மேலும்
விண்ணை அளக்கும் போதும்
'விடு விடு' என்ற ஒரே ஜபம்தான்.

துயிலும் கட்டிலில் தொற்றியும்
தூங்கும் குழந்தையின் தொட்டில்
கயிற்றினைப் பற்றியும்
'விடு விடு' என்றே ஜபிக்கிறது.

தானியம் பொறுக்கும் போதும்,
கூடுகட்டக் குச்சுப் பொறுக்கும் போதும்.
'விடு விடு' என்ற ஜபத்தை அது விடவில்லை.
அதன் சிற்றுடலே
விடுதலைத்துடிப்பின் வேக இயக்கமாயிருக்கிறது.

தலையை உருட்டுதலில்
சிறகைக் கோதுதலில்,
காற்று வெளியில் 'ஜிவ்'வென்ற சிறகுதைப்பில்
அதே துடிப்பு! சதா துடிப்பு!

நீ நேசித்த தேசத்திலும் அதன்
ஒவ்வோர் அங்கங்களிலும்
பெண்மையில், ஆண்மையில், பிணைக்கின்ற காதலில்
மொழியில், இசையில், கவிதையில், உரைநடையில்
அரசியலில், தொழிலில், ஆன்மீகத்தில்-
இதே துடிப்பை நீ உடுக்கொலித்தாய்.

"குடு குடு குடு நல்லகாலம் வருகுது" என்று
நாட்டுக்கு நல்ல குறி சொல்ல
தூக்கிய நின் உடுக்கின் ஒவ்வொரு முழக்கிலும்
விடுதலைக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது.
'கொட்டு முரசு'வின் அதிர்விலும் அதே
விட்டு விடுதலையாகும் வீச்சேதான்.

தூக்கம் எங்கெங்கு கௌவிற்றோ அங்கெல்லாம்
துயிலெழுப்ப இந்தத்
துடிப்புக் குருவியை நீ தூதுவிட்டாய்.
உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம்,
நின் விடுதலைக்குருவி.

அந்த விடுதலைக்குருவி
எங்கள் வீட்டுமுற்றத்திலும்
மேய்தல் கண்டேன்.

சோம்பித் துயின்ற என்குழந்தைகளை எழுப்பி
'துரு துரு' வென்ற குருவியைக் காட்டினேன்.
சோம்பலை உதறிய அவர்களில்
தொற்றிய துடிப்பின் உயிரொளி கண்டேன்.
குருவியின் பின்னால் ஓர் கூட்டமே இயங்கிற்று.

விடுதலைக் குருவியோடு
'சடுகுடு' ஆடும் சிறுவரின் கூத்து.
'விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலை'
என்றந் நாளில்
'சடுகுடு' ஆடிய இளமையின் வேகம்
என்னுள்
புதுநடை பயிலும்.

விடுதலைக் குருவி!
வீடுதேடி வந்தாய் நீ வாழி!
நின் அலகிதழ் முனையில் எம்
இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது.
மூலை முடக்குகள், நாடி நரம்புகள் தோறும்
விடுதலை வீச்சோட்டம் நிகழ்கிறது.

சிட்டுக்குருவீ!
எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல்
விட்டு விடுதலையானோம் நம்
கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று.
குறி சொன்னானே அந்தக்
குடுகுடுப்பைக் காரன்!
அவன்
காதிலும் மெல்ல இச் சேதியைப் போடு!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:37 pm

15. விமர்சக விகடங்கள்

நூல் வெளியீடு ஒன்று நிகழ்ந்தது.
நால் வகைக் கிரியைகளும் நடந்தேறியபின்
'நூலை இவர் விமர்சிப்பார்' என்னவும்
எழுந்தார் ஒருவர் எழுத்தாளர்.

வந்தார் அரங்கில் சபையை
வடிவாக நோட்டம் விட்டே
எங்கோ ஒரு மூலையில் இருப்போனை
இலக்கியத்தில் எளியோனாகச்
சிந்தையில் 'பாவம்' கொண்டு
சின்னச் செருமலோடு ஆரம்பித்தார்.

"...எளிமையாய் விளக்கப் போனால்
இதற்கொரு கதை சொல்வேன்" என்று
கதை சொல்லத் தொடங்கி மனுஷன் ஓர்
கழுதையின் மேலே தொற்றி
கழுதையை விட்டிறங்கிப் பின்னொரு
குதிரையின் பிடரி மயிர் பிடித்தேறியப்
பெருவெளிச் சவாரி செய்து பின்
குதிரை விட்டிறங்கி உடனே
குரங் கொன்றின் வாலைப் பற்றி....

இப்படியே
கதை கதையாம் காரணமாம்
காரணத்துக்கோர் கதையாம் என்று
பலகுட்டி ஈன்றபன்றியைப் போல
குட்டிக்கைகளை ஈன்ற களைப்பில்
குலைதள்ளி நின்றவேளை

குட்டிக் கதைகளின் கும்பலின் இடைநழுவி
விமர்சனம் மெல்ல எங்கோ விடை யூர்ந்தேகிற்று.

விடை பெறுகிறேன் என்று இவரும்
விமர்சனம் அன்று தமது
'விகடனம்' முடித்துக் கொண்டே,
கதிரையில் அமர்ந்தார் அல்லர்
தமது
கைவாகனம் இவர்ந்தாரன்றே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:37 pm

16. காற்றுள்ளபோதே....

தூற்றிக்கொள் நண்ப
காற்றோட்டம் சாதகமாய் உள்ள தருணமிது.

எத்தனை நாள்தான்
சுப்பற்ற கொல்லைக்குள்ளேயே புரட்சிச்
சுலோகங்கள் விதைத்தபடி.....?

போக்கையும் மாற்றி புதுச் சுலோகங்களும்
விதைக்கக் கற்போம் இல்லையெனில்
நாளை நமக்கெல்லாம் நாற்காலி யார்தருவார்?

வர்க்கக் கடலில் தூண்டிவிட்டு இதுகாறும்
வயிற்றைக் கழுவிவந்தோம்.
பிச்சைப் பிழைப்புத்தான்
அண்மையில்
பேரினவாதப் புயல்களினால் காலநிலை
சீரற்றுப் போயிற்றே என் செயலாம்?
'செவ்வானம்' கருக்கலிலே செந்திருள
பொய்மானாய்ப் போயிற்றே நம் 'வர்க்கப் புரட்சி'
இனியும்,
'முற்போக்கில்' வீணாய்
முதலி முடக்கிவைத்து
என்னபயன்?
சிந்தித்தாய்;
'நீண்டபயணம்' இடைநிறுத்தி வைத்துவிட்டு
முகமூடி வேறணிந்து முகாமினை மாற்றிக்கொண்டாய்.
'இரவல் தாய்நாடு' தான் இன்று,
எவர்க்கும் கை கொடுக்கிறதே!

காற்றுத் திசைமாறக் கடலோரம்
நீரோட்டம் பார்த்து
பாயிழுத்து விட்டீர் பக்குவமாய்;
உங்கள் போலித்தனங்கள், 'புனைகதைகள்' சகிதம்.

இக்கணம்
கலம் சேர்ந்திருக்கும் அக்கரையில்.
திரைகட லோடியுந் திரவியம் தேடுகென்ற
பழந்தமிழர் வரிசையில் நீவிரெலாம்
இன்றைய வாரிசென நானறிவேன்.
நிச்சயமாய் ஒருகால்
வங்கக் கடல் முழுதும்
கப்பல் விடுவீர் காண்!

எப்படி வியாபாரம்?
எழுத்து விலை போகிறதா?

இங்குதான் எம்மவர் கொட்டிய
செங்குருதியெலாம் குடம்குடமாய்ச்
சேமித்திருப்பாயே நனவோடையிலே.
உத்திகளில் வல்லவர் நீர்
இனியென்ன? உங்கள்
'செம்பொருள்' நன்றாய்ச் செலவாகும்.
ஊற்றுப் பேனையின் உட்பெய் தெழுத
காலம் முழுதும்தன் காணுமே எங்கள்
கட்டிபடாப் பச்சைரத்தம்.

ஏதோ எங்கள் அயற்புலத்தில் குடியேறி
ஏர்பிடித்தீர் ஏலேலோ எங்கள் பிரச்சினையை
விதைத்துப் பயிராக்கிப் போரடித்து,
பொலிஎடுத்துப் போஷாக்கோடு இருங்கள்.

மற்றுங்கள்,
ஏர்உழவர் பாட்டாளி இவரெல்லாம்
பேரினவாதக் குருதிச் சகதியில்தான்
நிதமும் புரள்கிறார்.
வாய்ஓயாமல் நீங்கள் எல்லாம்
பேசிய தேசீயம் வர்க்கப்போராட்டம்
இவையெல்லாம்
திகைத்துப்போய் நிற்கிறது.

வேறென்ன?
முன் கழற்றிவைத்துப்போன முகமூடிகள் வீட்டுக்
கோடியுள் பக்குவமாய்க் கொழுவிக் கிடக்கிறது.
பின்னொருகால்
திரும்பியும் அணிந்துகொள்ளத்
தேவைப்படுமென்ற உங்கள்
தீர்க்கதரிசனம் வாழ்க....வாழ்க...!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:38 pm

17. மின்னியக்கம்

நான் சந்தித்த ஒரு மானுட நேயன் -
மாற்றத்தை விரும்பும் என மனதுட் கழியோடி
போர்த்திய பொய்ம் மேலோடுகள் பொடியுதிர
'ஊற்றுக் கண் உனக்குள்ளே'
உற்றுப் பார் என்றவன்
இன்றென் புலனெதிர் இல்லையெனும் போது....

மூச்சடங்கிச் சாகிலும் முக்குளித்து ஆழ்கடலில்
முத்துக்களை முயல்வோம் எனக்
கத்தும் அலை கடலில் எனக்கோர்
கட்டுமரம் தாங்கியவன்
இன்றென் புலனெதிர் இல்லையெனும் போது.....

தொடுவானைத் தொடமுன்னம் படகின்
துடுப்புகளை இழந்ததென
நான் கொண்ட துயரின் நடுக்கடல்....
நீந்த முடியா நெடுந் தொலைவு....

நிரப்ப முடியா ஓர் இடைவெளி
நெஞ்சிலோர் பள்ளமாய்க் குழிய
ஏக்கம் ஒன்றெழுந்து என்னுள்
வெறுமை கடும் காற்றாய் திரிந்தலைய...

வான் கொண்ட ந‡த்ரங்களோடும்
வயல் கொணட வெளியோடும்

கண் சோர நின்று

விண்ணிழியும் தாரை வீழ்துகளில்
வேதனையின் ஊசவிட்டு....

விழுதுகளின் மேலுயரப் பழுத்திருந்த
அம் மானுடப் பழத்தை
நினைந்து நினைந்து நெஞ்சம் பிழிந்தது
சோகரசம்.

சோகம் பிழியவா அம்மானுடம் பழுத்தது?
நெஞ்சக் குழியில் வந்துதைத்தது ஒரு
மந்திரக் குரல் அதிர்வு.

'அல்ல' என்றடுத்த கணம்
ஞானந் தெறிக்க மனரேகைகள் பளிச்சிட
மேனிமுழுவதுமே ஓர் மின்னோட்டம் நிகழ்ந்ததென...

'மின்னுயிர்ப்பை' என்னுள் முடுக்கியதார்?
வெளிச்சமொன்று வெள்ளி வீதி கிழிக்க
பின் திரும்பினேன்
உலுக்கிற்று என்னை ஓர் உருவம்.

மீசை வருடியவாறு மின்னுயிர்க்கும்
தூய ஒளிவிகசிப்புக் கண்டேன்
கனவன்று;
நிதர்சனந்தான்.

(மு.தளையசிங்கம் நினைவாக.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:39 pm

18. எங்கள் வீதியை எமக்கென மீட்போம்

வீதியில் போகும்போது விபத்து நேராதிருக்க
விதிமுறை உள்ளன; விதிமுறை உள்ளன.

விதிமுறை இருந்தும் விதிமுறை இருந்தும்
ஒதுங்கியே செல்லும் பாதசாரிகளின்
உயிர்களுக்கு ஏதும் உத்தரவாதமே இல்லை.

உறுமியே செல்லும் ராணுவ உந்துகளின்
உள்ளிருந்து இயங்கும் துவக்குகளாலே
எந்தநேரமும் இவர்தலை சிதறலாம்
எந்தச் சமயமும் எம்தலை உருளும்.

ஒதுங்கியே செல்லினும் ஒதுங்கியே செல்லினும்
எம்முயிர்க்கு இங்கு உத்தரவாதமே இல்லை.

சேதிகள் வருவன நாள் தோறும்
வீதியின் நடப்புகள் விபத்துகள் அல்லவே.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:39 pm


2

இப்போதெல்லாம்
எமது நகரத்து வீதிகள்
காவற் கருவிப் பேய்களுக்கென்றே
எழுதப் பட்டதாய்ப் போனதே போலும்.

'எவரையும் சுடலாம் விசாரணையின்றியே
எரிக்கலாம் அன்றி புதைக்கலாம்' என்று
இயற்றப்பட்ட புதிய விதிகளால்
குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.

இருளுக்கும் இருட்புலையர்க்கும் என்றே
விடப்பட்டுப்போன எங்கள் வீதிகளில்
வெளிப்படுவோரெல்லாம்
சுடப்படலாம் தெருநாய்களைப்போல.
எக்கணமேனும் எக்கணமேனும்
எமக்கிது நிகழலாம்.

குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே
கொழுத்துப் போகும் இரவுகள் நீளலாம்;
கட்டித்த ரத்தமாய் இரவுகள் தடிக்கலாம்.

வீதிகளை இருளரக்கனே ஆள
மின்விளக்கு அணைத்தே வீட்டினுள்
கூடியிருந்து பீதி வளர்ப்பவர் மத்தியில்
எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?

குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே
கொழுத்துக் கிடக்கும் இருளரக்கனைத் தறிக்க
கோடரி ஏந்தி யார் வெளிவருவார்?

வீட்டினுள் பதுங்கி இருந்தே பீதியில்
ஓரிரா ஈரிராக் கழியலாம்;
எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?

எத்தனைக் காலம் எங்கள் பூமியை
இருளரக்கனிடமே ஒப்படைத்திருக்கலாம்?

அதோ
தூரத்தே வீழும் எரி நட்சத்திரமல்ல.
உன் அயலவன் வீட்டு முகட்டிலே அரக்கர்
வீசி எறியும் தீப்பந்தம்.

தூரத்து இடியல்ல
அதோ அடுத்த வீதி வளைவில்
அவன் தீர்க்கும் வேட்டொலி.

வீங்கிருள் நிகழ்வுகள் இவையே ஆக
வீட்டினுள் உயிரோடு எத்தனை நாட்கள்?
வீடு நிறைந்த பீதி விடுத்தே
கோடரி ஏந்தி அனைவரும் வருக.

எங்கள் இரவை எமக்கென மீட்போம்
எங்கள் வீதியை எமதே ஆக்குவோம்.

இன்றைய இரவை அவனிடம் இழந்தோம்.
இனிவரும் பகலும் எமதென்பதில்லை;
எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின்
எங்கள் முன்றிலும் எமதென்றில்லை.

எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய்
இன்புறு நாட்கள் எங்கே தொலைந்தன
இருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்?

வீடு நிறைந்த பீதி விடுத்தே
கோடரி ஏந்தியே யாவரும் வருக
விழுதுகள் ஊன்றிய இருளரக்கனைத் தறிப்போம்.

எங்கள் வீதியை எமக்கென மீட்போம்;
எங்கள் முன்றிலை நிச்சயம் செய்வோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:40 pm

19. தூது

நண்ப,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு;
நின்னினிய துணைக்காகவுந்தான்.

துன்பமேசூழ முகாமிட்ட
துயர்வதைக் கூடத்துள்
நெடுந்துயருறும்
விடுதலைநேசரின் நிலையெண்ணி
நெகிழும்என் நெஞ்சே

யாரொடு நோகலாம்?
யார்க் கெடுத்துரைக்கலாம்?

வீதியில் கண்ணுறும் நண்பரொடு
உம் துயர் பேசவும் வாயெழாது
குசுகுசுக்கும் எமக்குள்
உணர்வின் நசிவே உறுத்தும் பெரிதாய்.

நீட்டிய துவக்குகளின் நெருக்குறலில்
மூட்டுகள் தேடி முடங்கும் பூச்சிகளாய்
மானிடவர் நாமிங்கு மரணத்துடன் சம்பாஷிக்கிறோம்.

கூனிப் போன கொள்கையர் சொல்கிறார்
"மழை காலத்தில் நுளம்புகளோடு
பழக்கப்படுகிறது போல
படையினரோடும் பழக்கப்படுவோம்" என்று,
ஏதோ பெரிய பகிடி ஒன்றை உதித்தவர்
போல உரக்கச் சிரித்தபடி.

தெரியாமல் கேட்கிறேன் நண்ப,
நுளம்பின் கடியின் வலியா நுமக்கெலாம்?
கொன்று போடும் கொடுமைகள் இங்கெலாம்
கொசுக்கடி போல்வதொன்றா?
புகையிட்டு விரட்டினால் கலையுமோ
கொசுக்களைப்போல் இக்கொடுமைகள்?

தலைவரும் அவர்கள் சிறுமையும் சிறுமதியும்
இன்னும் இருந்தவாறே.

சிறையுளே வதைபடும்
விடுதலை நேசர் நிலை கண்டு
நெகிழாதார் இவர் செய்கை,
நெஞ்சுள் முள்ளாய் நெருடுமே.

நண்ப,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு;
நின்னினிய துணைக்காகவுந்தான்.

நின் துயர் நிகழ்வு என் செவியுறு
கணத்தில், நான்
துணுக்குற்றேன்
தொடர்ந்து நடுக்குறலாயிற்றென் நெஞ்சம்.
பேரினவாத ஒடுக்குமுறை அரசின்
இராட்சதக் கரம் இளைஞரின் தொடங்கி
மதகுருமார், கலைஞர், புத்திஜீவிகள் மேலும் வீழ்ந்தாயிற்று.
இனி என்ன?
"பத்துத் தலைகளும் இருபது கரங்களும்
திக்கெல்லாம் தேடிவரும்."


Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக