புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
107 Posts - 49%
heezulia
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
7 Posts - 3%
prajai
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
2 Posts - 1%
Barushree
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
234 Posts - 52%
heezulia
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_m10150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 5:33 am

எதிர்வரும் நவம்பர் 6ம் தேதி, தனது 150வது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழக பதிவுத்துறை, தன் விழாவுக்கு முன், பல்வேறு சவால்களை வெற்றி கொண்டு, பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசுக்கு, அதிகம் வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் முக்கியமானது பதிவுத்துறை. வருவாய் அதிகம் என்பதால், அதிகம் முறைகேடுகள் நடக்கும் துறை என்ற களங்கமும் இதற்கு உண்டு. இந்த அவப்பெயரை களையும் விதமாக, சமீபகாலங்களில், பல்வேறு சீர்திருத்தங்களை பதிவுத்துறை மேற்கொண்டது. இருப்பினும், குறைகளை முற்றிலுமாக களைய முடியவில்லை.

இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பலமிக்க சவால்களை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில், பதிவுத்துறை இருப்பது தெளிவானது.

சவால் 1: வருவாய் இலக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 2013 - 14ம் நிதியாண்டிற்கான, பதிவுத்துறை வருமான இலக்காக, 9,874 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பத்திரவுப்பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாக சரிந்த நிலையில், 652 கோடி ரூபாயை குறைத்து, 9,222 கோடி ரூபாயாக இலக்கு மாற்றியமைக்கப் பட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால், இந்நிலையிலிருந்தும், 1,200 கோடி ரூபாய் அளவுக்கு தற்போது வருமானம் சரிந்துள்ளதாக தெரிகிறது. கடந்த மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில், கிட்டத்தட்ட, 8,056 கோடி ரூபாய் வருமானத்துடன், 26.53 லட்சம் பதிவுகள் மட்டுமே நடந்துள்ளன. இதன் மூலம், 2012 - 13ம் நிதி ஆண்டு முதல், நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை அடைவதில், பதிவுத்துறை தடுமாறி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சவால் 2: வழிகாட்டி மதிப்பு வழிகாட்டி மதிப்புகளின் உயர்வு, பத்திரப் பதிவுகளின் எண்ணிக்கை குறைவுக்கு, மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.மொத்தம், 32 வருவாய் மாவட்டங் களுக்கு உட்பட்ட, லட்சக்கணக்கான தெருக்களையும், கோடிக்கணக்கான சர்வே எண்களையும் கொண்ட, திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை, ஏப்ரல் 1, 2012 முதல், பதிவுத்துறை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இம்மதிப்புகள், முந்தைய மதிப்புகளுடன் ஒப்பிடுகையில், மிக அதிகம்.இது ஒருபுறம் இருக்க, அரசாணை 74, 75, 76ன் படி, சந்தை நிலவரத்திற்கு ஏற்றாற்போல், வழிகாட்டி மதிப்புகளை அதிகரித்து கொள்ளும், அதிகாரம் பெற்றுள்ள மாவட்ட மதிப்பீட்டு குழுக்கள், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, சத்தமில்லாமல் வழிகாட்டி மதிப்பை ஏற்றி வருகின்றன. விதிகளின்படியே, இம்முடிவு எடுக்கப்படுகிறது என்றாலும், இது பற்றிய முறையான அறிவிப்பு வேண்டும் என்பது, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சவால் 3: போலிகள் நடமாட்டம் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களுக்கு மட்டுமே, பத்திரங்கள் எழுதுவதற்கு அனுமதி உண்டு. இவர்கள் தவிர, வழக்கறிஞர்களும் பத்திரங்கள் எழுதலாம். ஆனால், பெரும்பாலும், இவர்கள் இதில் ஈடுபாடு காட்டுவதில்லை. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிலர், வழக்கறிஞர்களின் கையொப்பத்தை மட்டும் வாங்கி வைத்து, போலி ஆவண எழுத்தர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் செயல்பாடுகள், உரிமம் பெற்றிருக்கும் ஆவண எழுத்தர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதோடு, 'பதிவுகளை சுலபமாக்கித் தருகிறோம்' எனச் சொல்லி, 'கமிஷன்' பார்க்கும் தரகர்களின் எண்ணிக்கை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. இவர்களின் ஆதிக்கம், பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 5:33 am

சவால் 4: கட்டண மோசடி ஆவண எழுத்தர்களுக்கான உரிம விதி 14(4)ன்படி, ஏப்ரல் 15, 2010 முதல், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களுக்கான கட்டணத்தை, அரசு மாற்றியமைத்தது. அதன்படி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு உட்பட்ட பதிவுகளுக்கு, 50 ரூபாய் கட்டணமும், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட பதிவுகளுக்கு, 400 ரூபாய் கட்டணமும் வசூலிக்கலாம். ஆனால், பல இடங்களில், இதன்படி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆவண எழுத்தர்கள், அவரவர் விருப்பத்திற்கேற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்கின்றனர். தங்களுக்கு புகார் வந்தால் தவிர, இது சம்பந்தமாக, பதிவுத் துறையும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. யானை வாங்க வருபவர்கள், இந்த செலவை பற்றி பெரும்பாலும் கவலைப்படுவதில்லை என்பதால், பெருமளவு புகார்கள் இன்றி, கனஜோராக இந்த பரிவர்த்தனை நடந்து கொண்டிருக்கிறது.

சவால் 5: முன்பதிவு வசதி கடந்த ஆண்டு, மே 13ம் தேதி, 110 விதியின் கீழ், தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'பொதுமக்கள் காலவிரயம் இன்றி, ஆவணப் பதிவை மேற்கொள்ளும் பொருட்டு, இணையதளம் மூலம், சார்-பதிவாளருடன், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆவணப்பதிவு செய்து கொள்ள, முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,நவ., 6, 2013ல் அமலுக்கு வந்த இந்த வசதி, எல்லா இடங்களிலும் வெற்றி பெறவில்லை.பத்திரப்பதிவு கணிசமாக குறைந்திருக்கும் சூழலில், இதற்கான தேவை பெரும்பாலான இடங்களில் இல்லை. தேவை இருக்கும் இடங்களில், இதை முறையாக அமல்படுத்த முடியவில்லை. காரணம், 'கேமரா' மூலம் புகைப்படம் எடுத்து, 'பயோமெட்ரிக்' மூலம் கைரேகை பதிவு செய்து, ஒரு பத்திரப்பதிவை முடிப்பதற்கு, கிட்டத்தட்ட, 20 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. இதை விரைவாகவும், சுலபமாகவும் செய்வதற்கென்று இருந்த, 'எல்காட்' நிறுவன ஊழியர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த பணிகளில் ஏற்படும் தாமதம், முன்பதிவு நேர வசதியை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இருந்தாலும், 575 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ள தமிழகத்தில், திருச்செங்கோடு சார்-பதிவாளர் அலுவலகத்தில் மட்டும், துவங்கிய நாள் முதல், இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக, பதிவுத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

சவால் 6: மின்தடை சென்னை நீங்கலாக, தமிழகம் முழுக்க, 'தொடர் மின்தடை' தலைவிரித்தாடத் துவங்கியுள்ள நிலையில், பதிவுத் துறையும், மின்தடையின் கொடூர விளைவுகளுக்கு இலக்காகியுள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக நிறுவப்பட்ட கேமராக்களும், கைரேகை பதிவுக்கான, 'பயோமெட்ரிக்' கருவியும், கணினிகளும், ஒருசேர உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள, 575 சார் - பதிவாளர் அலுவலகங்களில், இதுவரை 269 அலுவலகங்களுக்குமட்டுமே, 'ஜெனரேட்டர்' வசதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 21ம் தேதி, கொடைக்கானலில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகம், 7 மணி நேர தொடர் மின்தடைக்கு உள்ளானதால், அன்றைய பணிகள் அத்தனையும் முடங்கிப் போயின.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 5:34 am

சவால் 7: கலங்க வைக்கும் கணினி கடந்த 2000ல், கொஞ்சம் கொஞ்சமாக, கணினி வழி செயல்பாடுகளுக்கு பழகிய பதிவுத்துறை, 2009க்குப் பிறகு, முழுவீச்சில் இறங்கியது. இதைத் தொடர்ந்து, பதிவுத்துறை ஊழியர்களுக்கு, கணினிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆனால், தற்போது வரை, கணினிகளை லாவகமாக கையாளும் திறனில், ஊழியர்கள் தன்னிறைவு பெற்றிருக்கின்றனரா என்பது சந்தேகம் தான். சமீப காலங்களில், அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், பதிவுத் துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 377 பேர், கணினியை சுலபமாக கையாளும் நேரத்தில், மற்றவர்கள், இன்னமும் கற்கின்றனர்... கற்கின்றனர்... கற்றுக் கொண்டே இருக்கின்றனர். பல அலுவலகங்களில், கணினி சார்ந்த பணிகளை செய்வதற்கென்றே, சில பணியாளர்களை சார்-பதிவாளர்கள் நியமித்திருக்கின்றனர். 5,000 முதல் 7,000 ரூபாய் வரை, அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த பணியாளர்களுக்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில், இவர்களுக்கான ஊதியத்தை, சார்-பதிவாளரே வழங்குகிறார். அந்த அளவுக்கு அவரின், 'வருமானம்' இருக்கிறது! இப்படி, கணினி சார்ந்த பணிகள் பயமுறுத்துவதால் தானோ என்னவோ, 'பதிவுத்துறை கணினிமயம் ஆக்கப்படுவதற்கு முன்பதிவு செய்யப்பட்ட, ஆவணங்களின் அலுவலக நகல்கள், காகித வடிவிலிருந்து, மின்னணு மயம் ஆக்கப்படும். இதற்காக, ஆவணங்களை நுண்ணிய படம் (micro filming) பிடிக்கவும், மின்னணு மயம் ஆக்கவும் (digitisation), 140 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என, 13.05.2013, மே 13ம் தேதி, 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, இன்னும் அடுத்த கட்டத்தை எட்டாமலேயே உள்ளது.

சவால் 8: மோசடி பதிவுகள் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் சார்ந்த பதிவுகளால், 2,751 புகார்கள், 2012ல் பதிவாயின. இதை குறைக்கும் பொருட்டே, 'வெப்' மற்றும் இன்டர்நெட் புரோட்டோகால் கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள், கடந்த நவம்பர் 6, 2013 முதல்,

நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. என்றாலும், கடந்த 2013லும், 2,278 புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. ஆனால், இவை அத்தனையும், கேமரா பொருத்தப்படுவதற்கு முன்பு பதிவான ஆவணங்களோடு தொடர்புடையவை என, பதிவுத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

சவால் 9: இடைக்கால தடை ''மோசடி புகார்களை, பதிவுச்சட்டம் 82ன் படி, மாவட்ட பதிவாளரே விசாரித்து, ஆவணத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வகை செய்ய வேண்டும்,'' என, நவ., 3,2011அன்று, அப்போதைய பதிவுத் துறை தலைவராக இருந்த, தர்மேந்திர பிரதாப் யாதவ், உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி, புகார்கள் விசாரிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய ஆவணங்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், அந்த நடைமுறைக்கு, 2012 ஜூன் மாதத்திற்கு மேல், பல்வேறு, 'இடைக்கால தடை' உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கியதால், புகார்களின் மீதான மாவட்ட பதிவாளர்களின் விசாரணை, தற்போது தடைபட்டுள்ளது.ஆக, 'நீதி சாரா முத்திரைத்தாள்' (non judicial stamp)மூலமாகத்தான் பதிவுகள் நடக்கின்றன என்பதால், பாதிக்கப்பட்டோருக்கு தாமதமின்றி நீதி கிடைக்க, சட்டத்துடன் போராடியாக வேண்டிய கட்டாயத்தில், தற்போது பதிவுத்துறை இருக்கிறது.

சவால் 10: மிரட்டும் சீரமைப்பு சொத்து பரிவர்த்தனை, சங்க பதிவு, திருமண பதிவு, நிதி நிறுவன பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழகம் முழுக்க, 575 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க, 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்களும், பதிவுத்துறை துணைதலைவர்களை கொண்ட, ஒன்பது மண்டல அலுவலகங்களும் செயல்படுகின்றன. பதிவு சம்பந்தப்பட்ட பணிகளை, பொதுமக்கள் எளிமையாக மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட 50 பதிவு மாவட்டங்களை, தற்போது வருவாய் மாவட்டங்களுக்கு இணையாக, 32 ஆக மாற்றலாமா என, பதிவுத்துறை யோசித்து வருகிறது.இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சார்-பதிவாளர்களுக்கு பணிச்சுமை கூடும்; பதிவுச்சேவை கடினமாக இருக்கும்; ஊழியர்கள் சிலரின் வேலை பறிபோகும் என்ற பீதி, பதிவுத்துறை வட்டாரங்களில் நிலவுகிறது. இருப்பினும், நிர்வாக வசதிக்காகவும், பணிகளை செம்மைப்படுத்தவும், இந்த சீரமைப்பை கொண்டு வருவதில், பதிவுத்துறை ஆர்வம் காட்டி வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 5:34 am

கனவு திட்டம்

கணினி மற்றும் இணையதள உதவியோடு, வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட சேவைகள் பெறுவதை எளிமையாக்கி யதைப் போல, எதிர்வரும் 150வது ஆண்டு விழாவுக்குள், ஒரு பிரமாண்ட திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில், பதிவுத்துறை இறங்கியுள்ளது. அந்த திட்டத்தின் படி, பத்திர பதிவுக்கு முந்தைய அத்தனை செயல்பாடுகளையும், கணினி வாயிலாக முடித்து, பதிவுக்கு மட்டுமே, சார்- பதிவாளரை பொதுமக்கள் அணுக வேண்டியிருக்கும். வரும், 2014, நவம்பர், 6க்குள், திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என்ற கனவுடன், அதற்கான அடிப்படை பணிகளை, பதிவுத்துறை தற்போது முடுக்கி விட்டுள்ளது.மொத்தத்தில், பதிவுத் துறையை எதிர்த்து, பல்வேறு பலமிக்க சவால்கள் நிற்கின்றன. அவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டும். கனவு திட்டத்தை நிஜமாக்கும் முயற்சியில் வென்று, 'முத்திரை' பதிக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமானால், 150வது ஆண்டு நிறைவு விழா நேரத்தில், தமிழக மக்களின் மனப்பூர்வமான வாழ்த்து, பதிவுத்துறைக்கு நிச்சயம் கிடைக்கும்.

சொந்த கட்டடங்கள் எப்போது?

இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில், இன்னும் ஒரு செலவும், பதிவுத் துறைக்கு காத்திருக்கிறது. தமிழகத்தில் மொத்தம், 575அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், 349, சொந்தக் கட்டடங்களிலும், 226, வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.வாடகை கட்டடங்களில் இயங்கும் பதிவுத்துறை அலுவலகங்கள் அனைத்தும், சொந்த கட்டடங்களுக்கு மாற்றப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக, 135 அலுவலகங்களுக்கு, தற்போது சொந்த கட்டடங்கள் தயாராகி வருகின்றன. இரண்டாம் கட்டமாக, 70 அலுவலகங்களுக்கு இடம் தேடி வருகின்றனர். சமீபத்திய தகவலின்படி, 21 அலுவலகங்களுக்கு, சொந்த கட்டடம் கட்ட இடம் கிடைத்திருக்கிறது.

தினமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக