புதிய பதிவுகள்
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 18:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_m10நொறுங்குகிறது இந்தியச் சமூகம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொறுங்குகிறது இந்தியச் சமூகம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 27 Mar 2014 - 18:41

பசி, காமம் என இரண்டும் இயற்கையானவை. உடலோடு ஒட்டியவை. இந்த இரண்டு தேவைகளும் நிறைவு செய்யப்பட்டே ஆக வேண்டும்.

முதல் தேவை பிறந்து விழுந்தவுடன் தோன்றிச் செத்து மடிவதற்குச் சிறிது முன் வரை நீடிக்கிறது. இரண்டாம் தேவை பன்னிரண்டு வயதில் தோன்றி எழுபது வரையிலும் நீடிக்கிறது. "பட்டது பார் மனம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடறியீரே' என்பான் மெய்யியல் வல்ல திருமூலன்.

இவற்றிற்கு அப்பால் எந்த உயிர்க்கும் எந்தத் தேவையுமில்லை. இவை இரண்டுக்காகவும்தான் இவற்றிற்கிடையே போட்டியும், மோதலும் ஏற்படுகின்றன. சாடிப் பிழைத்தலும், ஓடிப் பிழைத்தலும் என்று அனைத்தும் நிகழ்கின்றன.

பசியும், காமமும் அடங்கி விட்ட நிலையில், புலியின் பக்கத்தில் புள்ளிமான் படுத்திருந்தால், "உனக்கென்ன அவ்வளவு ஏற்றம்? பயமே இல்லாமல் போய் விட்டதா? காலை வேறு நீட்டிக் கொண்டு படுத்திருக்கிறாயா' என்று மானுக்குப் பாடம் கற்பிக்க புலி பாய்வதில்லை. புலிக்கு அடுத்த வேளை பசி எடுக்கும்வரை பக்கத்தில் படுத்திருக்கும் மானுக்கு எந்தப் பயமும் தேவையில்லை.

ஆனால் எந்த ஒரு நன்மைக்காகவும் இல்லாமல், சப்பான் எப்படிப் பணிய மறுக்கலாம் என்னும் அற்ப எண்ணத்தின் அடிப்படையில் இரோசிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசிய இழிதகையோன் அமெரிக்க ட்ரூமனும், காரணமல்லாத காரணத்தின் மீது பகைமை உணர்வைப் பெருக்கி யூத இனத்தையே ஏறத்தாழ அழித்து விட்ட மனநோயாளி இட்லரும், தமிழனுக்கென்ன தனி நிலம் என்று அடங்காமல் வெறி கொண்டு அந்த நாட்டையே சவக்குழியாக்கி விட்ட கசாப்புக்கடைக்காரன் ராசபக்சேயும் ஆறறிவு பெற்ற மனித இனத்தில் மட்டுமே காணப்படக் கூடியவர்கள். ஐந்தறிவு மட்டுமே உடைய விலங்கினங்கள் தம் சொந்த இனத்தை அழிப்பதே இல்லை. மாற்று இனங்களை இரையின் தேவைக்கு மீறி அழிப்பதில்லை.

ஒவ்வொரு மனிதக் கூட்டமும் தன் தன் உறுப்பினர்களிடம் ஒரே மாதிரியான நடத்தையை உருவாக்க, எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் கற்பிப்பதில் குறியாக இருக்கிறது. சமூகம் தன்னுடைய உறுப்பினனை உருவாக்கும் மாபெரும் பொறுப்பைப் பல்வேறாகப் பிரித்து பல அமைப்புகளிடம் கொடுக்கிறது.

குடும்பம், பள்ளிக்கூடம், சட்டம், இறையச்சம் இவையனைத்தும் முழு வெற்றியடையும் போதுதான், பொறுப்புள்ள சமூக மனிதன் உருவாக முடியும்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தங்களின் பிள்ளைகளுக்குப் பெரும் பணத்தை விலையாகக் கொட்டிக் கொடுத்துக் குறிப்பிட்ட சில பள்ளிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் தவியாய் தவித்து தண்ணீர் குடிப்பதற்குக் காரணம், தங்களுடைய பிள்ளைகளை இந்த நிறுவனங்கள் வேதவியாசர்களாகவும் வள்ளுவர்களாகவும், சி.வி. ராமன்களாகவும், ஐன்சுடீன்களாகவும், சிக்மண்ட் பிராய்டுகளாகவும், இமானுவேல் காண்ட்களாகவும் ஆக்க வல்ல அறிவுக் கோயில்கள் என்னும் எண்ணத்தினால் அல்ல; பெருத்த சம்பளம் வாங்குகின்ற நிலையை உருவாக்க வல்லவை அவை என்பதற்காகத்தான்.

பணத்தை நோக்கமாகக் கொள்வதில் பிழை ஒன்றுமில்லை. "அது எஃகு போற் கூர்மையானது அதைத் தேடு' என ஆணைத் தொனியில் அறிவுறுத்துவான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்.

ஆனால் கல்வியின் நிலைத்த பயன் அறிவு, அறிவின் பயன் நெறிப்படுத்தல். கூடுதல் பயன்தான் பணமே தவிர, அடிப்படைப் பயன் அது இல்லை. நிகழ்காலக் கல்வி மனிதனை நெறிப்படுத்தும் அடிப்படையான போக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விட்டது. மனித உருவாக்கத்தில் அதன் பங்கு கேள்விக்குறியாகி விட்டது. ஆகவே சமூகத்தின் கல்விக் கால் இன்று ஊனப்பட்டு விட்டது.

சட்டம் என்பது தண்டம், தண்டம் என்பது ஒழுக்க நெறியினின்றும், வழக்கு நெறியினின்றும் வழுக்கியவர்களை, அந்த நெறியில் நிறுத்தற் பொருட்டு, குற்றத்தை ஆராய்ந்து, அதற்குத் தகத் தண்டனை வழங்கல் என்பான் பரிமேலழகன்.

சட்டம் என்பது, "உதைத்தாலொழிய ஒழுங்குக்கு வர மாட்டான்' என்னும் நிலையிலுள்ள எண்ணிக்கையில் குறைந்த அறிவினரை மட்டுமே ஒழுங்கு படுத்தப் பயன்படுவது.

குற்றத்தை ஆய்வு செய்யும் காவல்துறை, அதை நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் அரசுத் தரப்பு வழக்குரைஞர், தீர்ப்புச் சொல்லும் நீதிபதி என மூன்றடுக்கினை உடையது சட்டம்.

இதில் எந்தக்கண்ணி வலுவற்றதாக இருந்தாலும், அதை உடைத்து விட்டு, அதன் வழியே குற்றவாளி வெளியேறி விடுவான். மூன்று கண்ணிகளும் ஒரே நேரத்தில் வலுவுடையதாக இருப்பது அருமைப்பாடுடைய ஒன்று. இவற்றில் முதல் இரண்டு கண்ணிகள் எளிதாக அணுகத்தக்கவை.

குற்றத்தால் பாதிக்கப்பட்டவன் பசையோடு செல்லாவிட்டால், குற்றம் பதிவாகாது. குற்றம் செய்பவனும் பசையோடு செல்வதால், பாவம் காவல் துறையின் பாடு தருமசங்கடம்தான். இருவருமே பசையோடு வருவதால், கூடுதல் பசையின் அடிப்படையில் குற்றத்தை ஆய்வு செய்ய வேண்டியதிருக்கிறது போலும்.

சட்டத்தின் வீழ்ச்சி கூலிப்படையைப் பெருக்கும். கூலிப் படையின் தன்மை கூலி கொடுக்கின்றவனுக்காகச் செயல்படுவது. இதுதான் காவல்துறையின் நியாயமும் என்றால், அணிந்திருக்கிற சீருடையில் தவிர வேறு என்ன வேறுபாடு? ஆக இந்தக் காலும் ஊனப்பட்ட கால்தான்.

ஒரு மனிதன் முழுமையாக உருவாக்கப்படுவதில், குடும்பமும் இறையச்சமுமே எஞ்சிய எல்லாப் பணிகளையும் ஆற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றன.

பிள்ளை பிறந்து விழுந்து, தாயின் அரவணைப்பில் பாதுகாப்பை உணர்ந்து, தாயே உணவாக இருப்பதால், நெருக்கத்தில் தாயின் மார்பையும், நிமிர்ந்து பார்க்கும் போது தாயின் முகத்தையுமே அறிந்து வளரும் பிள்ளை, முதலில் கழுத்து நின்று, அப்புறம் குப்புறப் படுத்து, பின்னர் உட்காரப் பழகி, முதன்முதலாக அது நிற்கும் போது, ஏதோ ஒலிம்பிக் போட்டியில் வென்ற சாதனை போல் உணரப்பட்டு, பின்னர் தகப்பனின் விரலைப் பிடித்துக் கொண்டு நடை பழகி, அடுத்துப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, இப்படி இருபது ஆண்டுகள் ஒருவனைப் பாதுகாத்து, ஊட்டுவித்து, உணர்வித்து, அறிவுறுத்தி, அவனை வாழ்க்கைக் களத்திற்குள் எல்லாத் தகுதிப்பாடுகளோடும் இறக்கி விடுவதற்கு, ஓர் அம்மையும் அப்பனும் படுகின்றபாடு தறி படாத பாடு.

அறுபது வயதுக்குப் பின்பு, எந்தப் பிள்ளை தள்ளாடி நடந்தபோது, அதன் கைகளைப் பற்றிக் கொண்டு எந்தத் தகப்பன் நடை பயிற்றுவித்தானோ, அந்தத் தகப்பன் வயதுத் தளர்வினால் தள்ளாடி நடக்க, அந்த மகன் தன்னுடைய தோளினைக் கொடுத்துத் தாங்குவதற்காக ஏற்பட்டதுதான் குடும்பம்.

முன் இருபது வயது வரைப் பிள்ளைகளைத் தாங்கவும், பின் இருபது வருடங்கள் பெற்றோரைத் தாங்கி நிற்கவும் உருவாகிய குடும்ப அமைப்புச் சிதைவதுதான் இன்றைய சமூகத்தின் மாபெரும் கேடு.

குடும்பம் சீர்குலைந்தால், சமூகப் பொறுப்புணர்ச்சி மிக்க மனிதனின் உருவாக்கம் முற்றாக நின்று போகும்.

குடும்பம் எதற்கு, அந்தப் பொறுப்பை அரசு மேற்கொள்ளுமெனச் சொல்லி, மாவோ சீனாவில் கம்யூன்களை தோற்றுவித்துப் பார்த்தார். அவை மண்ணைக் கவ்வின. குடும்பத்தின் இடத்தை குடும்பம்தான் நிரப்ப முடியும். பிள்ளை வளர்ப்பும், முதியோர்ப் பேணலுமே குடும்ப அமைப்பின் அடிப்படை. ஆணும் பெண்ணும் சேர்ந்து உறங்குவது அன்று.

கண்ட கணப் பொழுதில் யோசிக்க நேரமில்லாத விருப்பம், பத்து நாள்கள் கொஞ்சி மகிழல், இரண்டு மாதத்தில் திருமணம், நான்கு மாதத்தில் அறுத்துக் கொள்ளல். பெண்ணைப் பொறுப்பாக்கி விட்டு, ஆண் தப்பித்து ஓடுகின்ற தாய் வழிச் சமூகம் பெண்ணுக்குச் சுமையா? சுதந்திரமா?

இவ்வளவு நீளமும், அகலமும், வலுவும், பெருமையும் கொண்ட இந்தியா ஒருநாள் சிதைந்து போகட்டும். ஆனால், குடும்ப அமைப்பு சிதையக் கூடாது.

மிக இன்றியமையாத குடும்பத்தின் கால், ஆட்டம் காணத் தொடங்கி இருப்பது தான், வீழ்ச்சிகளிலெல்லாம் பெரு வீழ்ச்சி.

இப்போது மனிதனை உருவாக்குவதில் கடைசியாக மிச்சமிருப்பது இறையச்சம். அதை இன்னொரு வகையாகச் சொன்னால் வினையச்சம்.

கேடு செய்தவன் கேட்டை அடையாமல் தப்ப முடியாது. செய்த வினை அதற்குரிய பயனைத் தராமல் விடாது என்னும் இந்தியச் சமயங்களும், தீர்ப்பு நாளில் அதற்குரிய தண்டனையை இறைவன் தந்தே தீருவான் என்னும் கிறித்துவ, இசுலாமிய நம்பிக்கைகளும் ஒரே நோக்குடையவைதான்.

ஒரு லட்சம் பேர் இருக்கும் ஊரை நூறு காவலர்களை உள்ளடக்கிய காவல் நிலையத்தால் கட்டுப்படுத்த முடிவதற்குக் காரணம், குற்ற மனப்பான்மை உடையோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான். பெரும்பான்மைச் சமூகத்தை இறையச்சமே ஒழுங்கு படுத்தி விடுகிறது. சிறுபான்மை கயமைச் சமூகத்திற்குத்தான் சட்ட அச்சம் தேவைப்படுகிறது.

ஆனால் பெரும்பான்மைச் சமூகத்தின் நெறிமுறைக்குக் காரணமான இறையச்ச அல்லது வினையச்சக் கொள்கையும் நீர்த்துப் போகுமாறு செய்யப்பட்டு வருகிறது.

"நாம் செய்த வினை எதுவாயினும் அதனுடைய மூர்க்கம் நம்மைத் தாக்கி விடாதவாறு பரிகாரம் செய்து, வினையின் முனையை மழுக்கி விட முடியும்' என்று நம்புவதைவிட கருணாநிதியைப் போல் கடவுள் நம்பிக்கை அற்றவராகவே இருக்கலாம்.

அதை விடக் கொடுமை சமயங்கள் நிறுவன வயப்பட்டு ஒன்றோடு ஒன்று மோதுதல். இறையச்சம் அல்லது வினையச்சத்தால் சமூகம் பெற வேண்டிய நன்மைகள், இந்த மோதல்களின் காரணமாகப் போக்கடிக்கப்பட்டு விடுகின்றன.

கல்வியால் பெற வேண்டிய பயனில் குறைபாடு; குடும்ப அமைப்பின் தத்தளிப்பு; விலைப் பட்டியலோடு சட்டம்; இறை நம்பிக்கையில் தடப் பிறழ்ச்சி - இவற்றின் விளைவாக உண்மையே வெல்லும் என்னும் நம்பிக்கை போய், ஊழலே வெல்லும் என்னும் நம்பிக்கை பெருகி, நல்லவர்களிடையேயும் ஊசலாட்டம் ஏற்பட்டு, நேர்மையின்மையே நாட்டின் பொதுவிதியாகி விடுமோ என்னும் நெருக்கடியில் இந்தியா தவிக்கிறது.

பணம்தான் வழிபாட்டிற்குரிய கடவுள் என்னும் புதிய மதம் உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்டு, ஞான மெய்ப்பூமியான இந்தியாவுக்குள் ஊடுருவி விட்டது.

ஈராயிரம் ஆண்டுகளாகக் கட்டி நிறுவப்பட்டிருந்த கட்டிறுக்கமான இந்தியச் சமுதாயம், நுகர்ச்சிச் சமூதாயமாக மாறி நொறுங்கிக் கொண்டிருக்கிறது. ( பழ. கருப்பையா - தினமணி)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82545
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 27 Mar 2014 - 18:47

உலக மயமாக்கல் ஏற்பட்டபின் ஏற்பட்ட
தீங்குகளில் இதுவும் ஒன்று..
-
இதுக்குத்தான் அப்பவே சொல்லி வச்சாங்க:
-
கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே...!!


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu 27 Mar 2014 - 18:49

பதிவிட வார்த்தைகள் வரவில்லை திரு சாமி அவர்களே. மிகவும் தேவையான பதிவு.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக