புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
69 Posts - 41%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
6 Posts - 4%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
4 Posts - 2%
Saravananj
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
3 Posts - 2%
mruthun
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
184 Posts - 39%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
21 Posts - 4%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 20 Feb 2014 - 0:51

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 10 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 10 Apr 2014 - 3:35



போபால்: சாமான்ய மக்களுக்காகவும், ஊழலை எதிர்த்தும் துவக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணியுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் 30 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல், ஜனநாயக சீரமைப்பு சங்கம் மற்றும் ம.பி., தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் 3ம் கட்ட லோக்சபா தேர்தலில் ம.பி.,யில் 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மோரினோ, பிந்த், குவாலியர், குனா, சாகர்,திகம்கார்க், தாமோ, கஜூராஹோ, போபால் மற்றும ராஜ்கார்க் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

இங்கு போட்டியிடும், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலா 4 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், பா.ஜ.,வை சேர்ந்த 3 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள். பா.ஜ., சார்பில் 8 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 4 கோடீஸ்வரர்களும், சமாஜ்வாடி கட்சி சார்பில் 6 கோடீஸ்வரர்களும் போட்டியிடுகின்றனர்.

குணா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் கிரிராஜ் யாதவ் என்பவர் மீது கொலை வழக்கு உள்ளதாகவும், மோரினா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரிந்தாவன் சிங் சிகர்வார் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 10 Apr 2014 - 3:39

அமைதியாக முடிந்தது 2ம் கட்ட தேர்தல்: நாகலாந்தில் 81 சதவீத ஓட்டுக்கள் பதிவு

இம்பால்: இன்று இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது ஏற்கனவே அறிவித்தபடி, அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், இன்று தேர்தல் அமைதியாக நடந்தது.

லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்ட தேர்தல், வட கிழக்கு மாநிலங்களான, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆறு தொகுதிகளில், நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், ஆறு தொகுதிகளில் இன்று நடந்தது. வட கிழக்கு மாநிலங்களான, அருணாசல பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில், தலா, இரண்டு தொகுதிகளிலும், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில், தலா ஒரு தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடந்தது.

தேர்தலை, அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த, தேர்தல் நடந்த இடங்களில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தந்த மாநில போலீசாருடன் துணை ராணுவப் படை வீரர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தேர்தலுடன் அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது.

நாகலாந்து மாநிலத்தில் 81.47 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. மணிப்பூர் மாநிலத்தில் 80 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. மேகாலாயா மாநிலத்தில் 71 சதவீத ஓட்டுக்களும், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 55 சதவீத ஓட்டுக்களும் பதிவாகின. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கொன்சா மேற்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். அசாம் மாநில எல்லையில் உள்ள நாகலாந்து மாநிலம் லோங்லெங் மாவட்டத்தில் பிரச்னைக்குரிய பகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. மேகாலாயா மாநிலத்தில் நகர்ப்புறங்களில் அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாகின.

கேரளா, உ.பி., அரியானா உள்ளிட்ட 13 மாநிலங்களில், 92 தொகுதிகளில், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது; ஓட்டு எண்ணிக்கை, மே 16ல், நடக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 11 Apr 2014 - 0:04

2ஜி வழக்கின் முக்கிய சாட்சி ஆ.ராசாவின் உதவியாளர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசாவின் கூடுதல் தனி உதவியாளராக பணிபுரிந்த ஆசீர்வாதம் ஆச்சாரி முக்கியமான சாட்சியமாக இருந்து வருகிறார்.

எனவே ஆசீர்வாத ஆச்சாரிக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஆசீர்வாதம் ஆச்சாரி, நேற்று பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியின் மூத்த தலைவர்கள் சுப்பிரமணியசாமி, ஜே.பி.நந்தா ஆகியோர் முன்னிலையில், அவர் பா.ஜனதா கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 11 Apr 2014 - 0:04

பாராளுமன்ற தேர்தல்:பாராளுமன்ற சபாநாயகர் ஓட்டுப்போடவில்லை

பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், பீகார் மாநிலத்தில் உள்ள சசராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

மீராகுமாருக்கு டெல்லியில் உள்ள வாக்காளர் பட்டியலில் தான் பெயர் உள்ளது. டெல்லியிலும் நேற்று தேர்தல் நடந்ததால், மீராகுமார் டெல்லி சென்று வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் சசராம் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்ததால் டெல்லி சென்று வாக்களிக்கவில்லை என்று மீராகுமார் தேர்தல் அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Fri 11 Apr 2014 - 3:45

ஒரு மீரா குமாரின் ஓட்டுதான் இந்தியாவின் தலைஎழுத்தை நிர்ணயிக்க போகிறாதா இதைபோல் வாக்களிக்க முடியாமல் எண்ணற்ற இந்தியர்கள் வெளிநாட்டில் உள்ளனனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 11 Apr 2014 - 6:55

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்தது என்பதை கருணாநிதி ஓப்புக்கொள்கிறாரா? நீலகிரி பிரசாரத்தில் ஜெயலலிதா கேள்வி

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்தது என்பதை கருணாநிதி ஒப்புக்கொள்கிறாரா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சி.கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக நேற்று காரமடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது:–

மக்கள் சேவையில் நாட்டம்

வாக்காள பெருமக்களே. மக்கள் சேவையில் நாட்டமுள்ள கட்சி அ.தி.மு.க. மக்கள் நலனை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி அ.தி.மு.க. ஆனால் தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி தி.மு.க. இந்த தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் ஆ.ராசா. சென்ற முறையும் ராசா இந்த தொகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். உங்களுக்கு ராசா ஏதாவது செய்தாரா? இல்லை.

நீலகிரி மாவட்ட மக்களுக்கு என ராசா ஏதாவது திட்டங்களை கொண்டு வந்தாரா?, இல்லை. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரி பதவியை வகித்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய நாட்டிற்கு இழப்பு ஏற்படும் வகையில் ஊழல் புரிந்தவர் ராசா. இதனால் நீலகிரி தொகுதிக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? இல்லையே. இதனால், லாபம் அடைந்தது கருணாநிதியின் குடும்பம் தான். நஷ்டம் அடைந்தது இந்தியா.

தி.மு.க. விலகாதது ஏன்?

அதனால் தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசா நிரபராதி என்று ஸ்டாலின் சொல்கிறார். ராசா எந்த தவறும் செய்யவில்லை; போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இப்போது ஆடிக்கொண்டிருக்கின்றன; அந்த வழக்குகளை நிரூபிக்கக்கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார்.

இந்த வழக்கில் தி.மு.க. ஆதாயம் அடையவில்லை என்றால், இந்த வழக்கில் ராசா குற்றமற்றவர் என்றால், தற்போது கருணாநிதி கூறுவதைப்போல காங்கிரஸ் கட்சி பழி வாங்குகிறது என்றால், 2010–ம் ஆண்டே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கலாமே?. ஆனால், அதை செய்தாரா கருணாநிதி? இல்லையே. மாறாக, அந்த கூட்டணியிலேயே ஒட்டிக்கொண்டு இந்த வழக்கில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று தானே கருணாநிதி முயற்சி செய்தார்?.

எந்த விதிமுறையையும் பின்பற்றாமல், யாரையும் மதிக்காமல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை தனியாருக்கு விற்றதில் தான், இந்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பயன் அடைந்தது யார்?

ஏழை மக்கள் பயன் அடைய வேண்டும் என்பதற்காக தொலை தொடர்பு துறையில் தான் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதாக ராசா கூறி வருகிறார். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற பல நிறுவனங்கள் ஓர் ஆண்டு கடந்தும் தங்களது சேவையை தொடங்கவே இல்லையே. எப்படி ஏழைகள் பயன் அடைய முடியும்?. தனியார் நிறுவனங்கள் தானே பயன் அடைந்தன?.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததாக தம்பட்டம் அடித்து இருக்கிறது. ராசாவும் இதையே கூறி வருகிறார். புதிய உரிமங்கள் பெற்ற எந்த நிறுவனம் இந்த வசதியை செய்து கொடுத்தது? எந்த நிறுவனமும் இந்த வசதியை செய்து கொடுக்கவில்லையே. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தான் இந்த வசதியை வழங்கியது. தேர்தலுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தற்போது எங்கே நடைமுறையில் இருக்கிறது, சொல்ல முடியுமா?.

ரூ.214 கோடி பணம் எப்படி?

2001–ம் ஆண்டு நிர்ணயித்த விலையில், 2008–ம் ஆண்டு விற்பதை எப்படி நியாயம் என்கிறார் கருணாநிதி?. தன்னுடைய சொத்தாக இருந்தால் இந்த முறையை கடைபிடிப்பாரா கருணாநிதி?.

கருணாநிதியினுடைய சொத்தாக இருந்தால், 2001–ல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008–ம் ஆண்டு விற்பனை செய்வாரா?. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எதுவுமே நடக்கவில்லை என்று கருணாநிதி கூறுகிறார். அப்படி என்றால் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் கனிமொழி இயக்குனர்களாக இருந்த குடும்ப தொலைக்காட்சியின் கணக்கில் 214 கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது? யாருடைய கணக்கில் இருந்து வந்தது? எதற்காக கொடுத்தார்கள்?. ஏன் கொடுத்தார்கள்?.

ஒத்துக்கொள்கிறாரா?

உண்மையிலேயே நியாயமான முறையில் அந்த பணம் பெறப்பட்டிருந்தால், அந்த பணத்தை ஏன் அவசர அவசரமாக திருப்பி கொடுத்தார்கள்?. அந்த பணம் எப்படி திருப்பி கொடுக்கப்பட்டது? ஏன் திருப்பிக்கொடுக்கப்பட்டது? இவற்றையெல்லாம் கருணாநிதி ஏன் விளக்கவில்லை? ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் கருணாநிதி குடும்பத்தினருக்கு பணம் சென்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?.

அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஏன் பேசினார்கள்? என்ன பேசினார்கள்? இதை விளக்க கருணாநிதி தயாரா? ராசாவால் இதற்கு பதில் அளிக்க முடியுமா? தொலைக்காட்சி கணக்குகளை திருத்தும்படி மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டதே? இதற்கு கருணாநிதியால் விளக்கம் அளிக்க முடியுமா? இவை எல்லாம் உண்மைக்கு மாறானவை என்று கருணாநிதி கூறுவாரேயானால் இதனை வெளியிட்டவர்கள் மீது ஏன் இதுவரை மானநஷ்ட வழக்கு தொடுக்கவில்லை? ஊழல் நடந்தது என்பதை ஒத்துக்கொள்கிறாரா கருணாநிதி?.

நன்றி மறந்தவர்கள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விவரங்களும் பாரதப் பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் தெரியும் என்று ராசாவும், தி.மு.க.வினரும் கூறி வருகின்றனர். அப்படி என்றால், என்னென்ன விவரங்கள் எல்லாம் அவர்களுக்கு தெரியும்?. அவர்களுக்கு தெரிந்து தான் ராசா ஊழல் புரிந்தார் என்கிறாரா கருணாநிதி?.

காங்கிரஸ்காரர்களை ‘‘நன்றி மறந்தவர்கள்’’ என்கிறார் கருணாநிதி. சிதம்பரமோ ‘‘அவர் சில வழக்குகளை மனதில் வைத்து சொல்கிறார். அந்த வழக்குகளை காங்கிரஸ் கட்சி போடவில்லை. வழக்கு தொடுப்பது அரசியல் கட்சியின் வேலை அல்ல. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது காவல் துறை. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் வேலை’’ என்று கூறி இருக்கிறார் ப.சிதம்பரம்.

வருமான வரித்துறை நோட்டீஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு 113 கோடி ரூபாய் வருமானவரியை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கருணாநிதி தொலைக்காட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே தான் கருணாநிதி சேலத்திலே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, ‘‘கை சின்னம் என்னோடு இல்லை என்பதற்காக கை விட்டு விட்டதாக யாரும் கருதக்கூடாது. மதசார்பற்ற முறையிலே ஒரு ஆட்சி நடைபெறுவதற்கு யார் கை கொடுத்தாலும் அந்தக் கையை குலுக்கி வரவேற்போம் என்று மாத்திரம் நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்’’ என்று கூறி இருக்கிறார்.

எங்கு அடித்தால் கருணாநிதிக்கு வலிக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறது. வாக்காள பெருமக்களே. கருணாநிதியின் தன்னலத்தை, சுயரூபத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அரிதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு விற்ற கட்சி தி.மு.க. அதன் மூலம் நாட்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய கட்சி தி.மு.க. நிலஅபகரிப்புக்கு பெயர்போன கட்சி தி.மு.க. இவர்களுக்கு வாக்களித்தால், இவர்கள் இந்திய நாட்டையே அபகரித்து விடுவார்கள்.

தக்க பாடம்

மக்கள் சொத்தை தன் குடும்ப சொத்தாக பாவித்து செயல்பட்ட கருணாநிதிக்கும், ராசாவுக்கும் இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். சம்மட்டி அடி கொடுத்து விரட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 14 Apr 2014 - 14:27

ஆம் ஆத்மி கட்சியில் 86 கோடீஸ்வர வேட்பாளர்கள்

புதுடில்லி : சாமானிய, ஏழை மக்களின் கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்ளும், ஆம் ஆத்மி கட்சி, லோக்சபா தேர்தலில், 86 கோடீஸ்வர வேட்பாளர்களை நிறுத்திஉள்ளது.

டில்லியில், கடந்த ஆண்டு இறுதியில், 49 நாட்கள் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி பெயர், ஆம் ஆத்மி. இந்தி வார்த்தையான, ஆம் ஆத்மிக்கு, தமிழில், 'சாமானிய, ஏழை மக்களின் கட்சி' என, அர்த்தம். ஊழல், லஞ்சம் ஆகியவற்றை ஒழிப்பதற்காகவே, கட்சி துவக்கியுள்ளதாக, அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரின் சகாக்களும் மேடை தோறும் முழங்கி வருகின்றனர். சாதாரண மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதே, தங்களின் லட்சியம் என்றும் கூறி வருகின்றனர்.ஆனால், லோக்சபா தேர்தலில் போட்டியிடும், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களின் பின்னணியை பார்த்தால், நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடக்கிறது. இவற்றில், முதல், ஐந்து கட்ட தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி சார்பில், 200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தங்கள் சொத்து பற்றிய விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். இதில், 86 வேட்பாளர்கள், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களில், அதிகபட்சமாக, பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும், 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணனுக்கு, 189 கோடி ரூபாய் சொத்து உள்ளது.உ.பி., மாநிலம், காஜியாபாத் தொகுதியில் போட்டியிடும், ஜாஜியா இல்மி என்ற ஆம் ஆத்மி வேட்பாளருக்கு, 30 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த, அனிதா பிரதாப் என்பவருக்கு 20 கோடி ரூபாய், அஞ்சலி தமானியாவுக்கு 19 கோடி ரூபாய், நடிகை குல் பனாக்கிற்கு 12 கோடி ரூபாய் சொத்து உள்ளது.இந்த தகவலை, 'ஜனநாயகத்துக்கான உரிமை' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 14 Apr 2014 - 14:33

அதிமுக, திமுகவுக்கு மக்களைப் பற்றி அக்கறையில்லை: சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு

திமுக, அதிமுக இடையே சிக்கி தமிழக மக்கள் தவிக்கின்றனர். மக்களைப் பற்றி அந்தக் கட்சிகளுக்கு அக்கறையே இல்லை என்று சென்னையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: "இன்று பொன்னான நாள். மகாவீரர் ஜெயந்தி. நாளை அம்பேத்கார் பிறந்த நாள். மற்றொரு பொன்னான விழா, நாளை தமிழ்ப் புத்தாண்டு. லட்சுமி தேவியும் சரஸ்வதியும் தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் வரங்களை அள்ளித் தரவேண்டும். 2014 தேர்தல் மிகவும் தனித்துவம் மிக்கது.

நாடு முழுவதும் தேர்தல் மீது மக்களுக்கு ஈடுபாடு மிகுந்திருப்பதை முதல் முறையாக பார்க்கிறேன். இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே முடிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது விந்தையானது. தற்போது உள்ள அரசு முடிவுக்கு வந்து, புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

இந்தத் தேர்தலில் மக்களின் உற்சாகம் மிகுந்துள்ளது. நாட்டு மக்கள் 10 ஆண்டுகள் ஊழல் ஆட்சியில் தவித்துக் கொண்டிருந்தனர். மக்களுக்கு இப்போது தேவை ஒரு மாற்றம். அதற்கான சபதத்தை மக்கள் எடுத்துவிட்டார்கள். நமது நாட்டின் அடிப்படை தத்துவம் கூட்டாட்சி.

ஆனால், டெல்லியில் உள்ள அரசு, மாநில அரசுகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. மாநில மக்களுக்கு மதிப்பு கொடுக்கும் புதிய அரசாங்கம் வரும். பாஜக, அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பல கட்சிகள் இணைந்த ஒரு அமைப்பு. ஒரே அணியாக நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்போம் என்ற உறுதியை அளிக்கிறேன்.

இந்தத் தேர்தலில் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது. எங்கள் கூட்டணி இந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் புதிய வரலாற்றை ஏற்படுத்தும். தமிழக மக்கள் திமுக, அதிமுக என இரு கட்சிகளிடையே சிக்குண்டு தவிக்கின்றனர். இவர்கள் 5 ஆண்டு ஆட்சி செய்கிறார்கள். அடுத்து 5 ஆண்டுகள் அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஒருவரையொருவர் எப்படி ஒழிப்பது என்றே சிந்திக்கிறார்கள். இருவரும் மக்களைப் பற்றி சிந்திப்பது இல்லை. மக்களைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை என்பதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

தமிழகத்தில் முதன் முறையாக 3-வது சக்திமிக்க ஓர் அணி உருவாகி உள்ளது. இந்த அணி அவர்களை நடுங்கவைத்துள்ளது. இந்த அணி, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றும். நாங்கள் விரும்புவது, மாநிலங்களை சில அணிகளாக நினைத்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை. அதேபோல், தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அதேபோல் எல்லை மாநிலங்களிலும் சில பிரச்சினைகள் உள்ளன.

எல்லா மாநிலங்களின் பிரச்சினைகளையும் தீர்க்க ஒரே அணியாக செயல்படுவோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நிலை இன்று பரிதாபமாக இருக்கிறது. அதன் தலைவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். மறு எண்ணிக்கை அமைச்சர் (ப.சிதம்பரம்) பயந்து ஓடிவிட்டார். இதுதான் காங்கிரஸின் நிலை. தற்போது காங்கிரஸ் அரசு, ஏழைகளின் பேரைச் சொல்லி ஏமாற்றி வருகிறது.

தேர்தல் நேரத்தில்தான் ஏழைகளின் குடிசைக்குச் சென்று தன்னை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள விரும்புகிறார், ஒரு இளம் தலைவர். காங்கிரஸின் இளவரசருக்கு ஏழ்மை பற்றி தெரியாது. ஏனென்றால், அவர் பிறக்கும்போதே பணக்காரராக பிறந்தவர்.

ஆனால், நான் ஏழையாகப் பிறந்தவன். ஏழைகளின் துயரம் எனக்குத் தெரியும். நான் ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்தவன். ஏழைகளின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றுவதே எங்கள் அணியின் நோக்கம். 2022-ம் ஆண்டு நமது நாடு தனது 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை அதாவது, பவளவிழாவை கொண்டாட இருக்கிறது.

நமக்கு ஒரு கனவு உள்ளது. நாம் ஒரு சபதத்தை எடுத்துள்ளோம். சுதந்திர தின பவளவிழாவின் போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு இருக்கும். அந்த வீட்டில் குடிதண்ணீர், மின்சாரம் இருக்கும். 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அவர்கள் உறுதிமொழியை நிறைவேற்றவில்லை.

ஆனால், இப்போது மீண்டும் அதே உறுதிமொழி அளிக்கிறார்கள். ஆனால், வாஜ்பாய் அரசு 6 ஆண்டுகளில் 7 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது உண்மை. தமிழகத்தில் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்போம் என்று உறுதிபட கூறுகிறேன். இதுதான் நாட்டை முன்னேற்றும் வழி.

இன்றைய அரசு, நம் மீனவர்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது இல்லை. அவர்களுக்கு உரிய நவீன தொழில்நுட்ப வசதி செய்து தரப்படவில்லை. மீனவர்கள் வாழ்வில் நான் ஒளியேற்றுவேன். தமிழகத்தில் வாழும் மீனவர்களுக்கு இலங்கையாலும், குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானாலும் அன்றாடம் துன்பமும் இன்னல்களும் ஏற்படுகிறது. கேரள மீனவர்களை இத்தாலியில் இருந்து வந்து நசுக்கி செல்கின்றனர்.

நாங்கள் அனைத்து மீனவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்போம். டெல்லியில் வலுவற்ற அரசு இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் அரசால் எந்தப் பயனும் இல்லை. எங்கள் அணி வெற்றி பெற்றால் தமிழக தலைவர்களான ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டோரின் உறுதுணையுடன் வலுவான அரசை அமைப்போம். மத்தியில் துணிச்சல் மிக்க அரசு இல்லாததால், மக்கள் இப்போது துவண்டு இருக்கிறார்கள். அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்டவை வளர்ந்துகொண்டிருக்கின்றன. அண்டை நாடுகளால் அச்சுறுத்தலும் இருக்கிறது.

எனவே, துணிச்சல் மிக்க அரசு தேவை. இலங்கையின் எங்கள் தமிழ்ச் சகோதரர்களுக்கும், மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ச் சகோததர்களுக்கும் நாங்கள் துணைபுரிவோம். அவர்களை தற்போது உள்ள அரசு கைவிட்டுவிட்டது. ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம்.

டெல்லியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை இருக்கிறது. நிர்பயாவின் நிலை உங்களுக்குத் தெரியும். டெல்லியில் மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். அவர்களுக்கு அரசு செய்தது என்ன? வெறும் ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கியதுதான். மறு எண்ணிக்கை அமைச்சரிடம் (ப.சிதம்பரம்) கேட்கிறேன். நிர்பயா நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கி ஓராண்டு ஆன பின்பும் அதில் இருந்து ஒரு ரூபாய் கூட இன்னும் செலவிழிக்கவில்லையே ஏன்? இதுதான் இந்தியப் பெண்கள் மீதான அக்கறையா? சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு செய்தி படுவேகமாக பரவிக் கொண்டிருக்கிறார்.

உலகின் பல நாடுகளின் கட்டளைக்கு இணங்க, சீனாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் விட்டுக்கொடுத்துப் போகவுள்ளதாக செய்திகள் பரவுகிறது. சியாச்சின் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம். வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து பாஜக தலைமையில் நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். இந்தத் தேர்தல் புதிய வரலாறு படைக்கும். இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழகத்திலும் புதிய சரித்திரம் நிகழும்" என்றார் மோடி.

பாஜக வேட்பாளர்களான இல.கணேசன் (தென்சென்னை), ஏ.சி.சண்முகம் (வேலூர்), தேமுதிக வேட்பாளர்களான ரவீந்திரன் (மத்திய சென்னை), சவுந்திர பாண்டியன் (வடசென்னை), யுவராஜ் (திருவள்ளூர்), மதிமுக வேட்பாளர்கள் மாசிலாமணி (ஸ்ரீபெரும்புதூர்), மல்லை சத்யா (காஞ்சிபுரம்), பாமக வேட்பாளர்களான வேலு (அரக்கோணம்), ஏ.கே.மூர்த்தி (ஆரணி) ஆகியோரை ஆதரித்து மோடி வாக்கு சேகரித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84039
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 14 Apr 2014 - 14:44

இந்தி பேசத்தெரிந்தவர்களைத்தான் பாராளுமன்றத்துக்கு அனுப்ப
வேண்டும் என விஜயகாந்த ஒரு முறை சொன்னதாக ஞாபகம்...
-
தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களில்
ஹிந்தி பேசத் தெரிந்தவர்கள் யார் யார்..?
-
விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Apr 2014 - 1:13

 தேர்தல் நெருங்குவதால் கண்காணிப்பு தீவிரம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க 5,300 குழு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன.

இதனால் தேர்தல் கமிஷன் தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மண்டல குழு அமைப்பு

வாக்குப்பதிவு நெருங்குவதை அடுத்து, ஓட்டுக்காக பணம் கொடுப்பதாக அதிக அளவில் புகார்கள் வருகின்றன. அதைத் தடுப்பதற்கு ஏற்கனவே பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 360 மண்டல குழுக்களை அமைத்துள்ளோம். அதன்படி, 10 வாக்குச்சாவடிகள் அடங்கிய பகுதியை ஒரு மண்டலமாக பிரித்துள்ளோம். ஒரு மண்டலத்துக்கு ஒரு மண்டல அதிகாரி, ஒரு துணை அதிகாரி, 4 போலீசார் என்ற வீதத்தில் மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 20-ந் தேதி முதல் செயல்படும்.

உடனடி நடவடிக்கை

இந்த மண்டல குழு சுற்றிக்கொண்டே இருக்கும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றிய புகாரை தெரிவிக்க விரும்பினால், கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு, மண்டல அதிகாரியின் போன் நம்பரை வாங்கி, போன் செய்ய வேண்டும்.

உடனே மண்டல குழு அங்கு வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அந்த குழுவில் உள்ளவர்களுக்கு அந்த பகுதியைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். ஒவ்வொரு இடங்களுக்கும் உடனே செல்வதற்கான வரைபடங்கள் அவர்களிடம் இருக்கும்.

போலீஸ் மீது துறை நடவடிக்கை

என்.ஜி.ஓ.க்கள் மூலம் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் வந்த புகார்களின்படி, அவர்களின் வங்கி கணக்கை பரிசோதித்து வருகிறோம். திடீரென்று அதிக அளவில் பணம் வந்தால் அதுபற்றி விசாரிக்கப்படும். ஒரு என்.ஜி.ஓ. வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் பணம் வந்திருந்தது. ஆனால் ஏற்கனவே அது தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. எனவே அதில் சந்தேகம் எழவில்லை.

தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா படம் மற்றும் இரட்டை இலை சின்னம் பதிக்கப்பட்ட தொப்பியை மக்களுக்கு போலீஸ் அதிகாரிகள் வழங்கியதாக புகார் வந்தது.

அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை அனுப்பிவிட்டார். அதன்படி, அந்த போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களில் சோதனை

தேர்தல் பிரசாரத்துக்காக சில நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி அங்குள்ள ஊழியர்களை கட்சிகள் அழைத்துச் செல்வதாகவும் புகார்கள் வருகின்றன. இதுகுறித்து கண்டறிவதற்கு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அப்படி புகார் கூறப்படும் நிறுவனங்களுக்கு சென்று ஊழியர்கள் இருக்கிறார்களா என்பதை கலெக்டர் பார்வையிடுவார். அங்குள்ள ஊழியர் பதிவேட்டை பரிசோதனை செய்வார்.

வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

புகார் அழைப்புகள்

கட்டுப்பாட்டு அறை 1950 எண்ணுக்கு இதுவரை 84 ஆயிரத்து 600 போன் அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் 8,895 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 612 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. மற்ற புகார்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

பொதுவாக நாளொன்றுக்கு அந்த எண்ணுக்கு 4 ஆயிரம் போன் அழைப்புகள் வருகின்றன. அவற்றில் ஆயிரம் அழைப்புகள் புகார்கள் கூறுவதற்காக வருகின்றன.

தேர்தல் வழக்குப்பதிவு

தென்காசி புளியங்குடி தொகுதியில் ஒரு கோடி ரூபாய் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நகரசபை தலைவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 171பி பிரிவின் அடிப்படையில் தேர்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவர் கையில் பணம் வைத்திருந்ததால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அதை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மல்லிப்பட்டினம்

தஞ்சை தொகுதி மல்லிப்பட்டினத்தில் இருதரப்பினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழிபாட்டு பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் யாரும் வாக்கு சேகரிக்க செல்ல உரிமை உள்ளது. பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைப்பது குற்றமாகாது. ஆனால் வன்முறையில் ஈடுபடுவதுகுற்றமாகும்.

வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்வார். தர்மபுரியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அடுத்து அங்கு இப்போது பிரச்சினை எழவில்லை.

மத தலைவரின் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தில் மத தலைவர்கள் ஈடுபடுவதில் தவறில்லை. ஆனால், ‘இவருக்கு வாக்களித்தால்தான் நமது மதத்தினருக்கு நல்லது’ என்பது போன்ற மத ரீதியான கருத்துகளை பிரசாரத்தில் பயன்படுத்தக்கூடாது.

சென்னை, சேலம், நாமக்கல்லில் பயன்படுத்துவதற்காக 12 ஆயிரம் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவுள்ளன. திருநங்கைகள் குறித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க தனி வரிசை வழங்குவது பற்றிய அறிவுரை எதுவும் தேர்தல் கமிஷனிடம் இருந்து வரவில்லை.

மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் பிரச்சினை ஏற்படக்கூடிய வாக்குச்சாவடிகளாக 9 ஆயிரத்து 224 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் எப்படிப்பட்ட பாதுகாப்பு அளிப்போம் என்பதை நான் வெளியிட முடியாது.

கடந்த தேர்தலில் 6 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திர கோளாறு, பதிவான வாக்குகள் டேலி ஆகாமல் போவது, வாக்குச்சாவடியை கைப்பற்றுவது போன்ற காரணங்களுக்காக மறுதேர்தல் நடத்தலாம். அதுபற்றி தேர்தல் பார்வையாளரின் பரிந்துரையின் பேரில் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிக்கும்.

கலைஞர் வளைவு

மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அதிகாரி அருண் சுந்தர் தயாளன் மீது சில குற்றச்சாட்டுகளை தி.மு.க. கூறியிருந்தது. ஆனால் அதில் உண்மையில்லை. அவர் ஒருதலைப்பட்சமாக நடந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் வளைவை முன்பு துணி போட்டு மூடியிருந்தோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் அமைப்புகளை மூட தேவையில்லை என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதால் அதை நாங்களே அகற்றிவிட்டோம்.

வாகன சோதனை

வாகன சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.19.26 கோடி பணமும், ரூ.17.84 கோடி மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையில் ரூ.2.56 கோடி பணம் பிடிபட்டது. கிருஷ்ணகிரியில் ரூ.10.76 கோடி மதிப்புள்ள பொருட்கள் பிடிபட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Sponsored content

PostSponsored content



Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக