புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
62 Posts - 39%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
10 Posts - 6%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
4 Posts - 3%
mruthun
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
21 Posts - 5%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
7 Posts - 2%
mruthun
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 9 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 12:30 am

உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு 53 தொகுதிகள்: கருத்துக்கணிப்பு


புதுடில்லி: என்.டி.டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், உ.ப., மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி 13 தொகுதிகளிலும், பா.ஜ., 53 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் தெரியவந்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 12:31 am

தேர்தல் கமிஷனுக்கு டுவிட்டரில் மோடி வாழ்த்து

புதுடில்லி : தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு குறித்து மோடி தனது டுவிட்டர் தளத்தில் தேர்தல் கமிஷனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது : இன்னும் 2 நாட்களில் லோக்சபா தேர்தல் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழா துவங்க உள்ளது. இதற்காக தேர்தல் கமிஷன் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டளித்து ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்; முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைய உள்ளதால் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், அவர்கள் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்த பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்;

வடகிழக்கில் மறைந்த சூரியன் மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கை எவனக்கு உள்ளது; வாஜ்பாய் துவங்கிய வடகிழக்கு பகுதியின் வளர்ச்சியை பா.ஜ., தொடர்ந்து மேற்கொள்ளும் என உறுதி அளிக்கிறேன்; வடகிழக்கு பகுதிகள் வளர்ச்சி பெற்றால் தான் இந்தியா வளர்ச்சி அடைய முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 1:23 am

அ.தி.மு.க-வுக்கு அபாய எச்சரிக்கை காட்டும் 19 தொகுதிகள்!

1. திருவள்ளூர், 2. மத்திய சென்னை,

3. தென் சென்னை, 4. கரூர்,

5. கள்ளக்குறிச்சி, 6.சேலம்,

7. பொள்ளாச்சி, 8. திண்டுக்கல்,

9. வேலூர், 10. திருப்பூர்,

11. கோவை, 12. சிவகங்கை,

13. கன்னியாகுமரி, 14. ஈரோடு,

15. விருதுநகர், 16. தென்காசி,

17. தஞ்சாவூர், 18. தர்மபுரி,

19. நாகப்பட்டினம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:49 pm

'நான் டீ விற்றவன்' என்னால் ஏழைகளின் நிலையை புரிந்துகொள்ள முடியும் - நரேந்திர மோடி

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது நரேந்திர மோடி பேசுகையில், தேசத்தை கொள்ளையடித்தவர்களை மன்னிக்க மக்கள் விருப்பம் இல்லாமல் உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மந்திரியை ஒரு தலைவராக கருதவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் எந்த ஒரு பிரச்சினையும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மோடியை தவறாக பயன்படுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாட்டிற்கு விடுதலை கிடைக்க மக்கள், நீங்கள் வழிவகை செய்யவேண்டும். உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி லக்னோவில் சண்டை போடுவது போன்று நடித்து கொள்கின்றனர். ஆனால் டெல்லியில் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மின்தட்டுபாட்டை சந்தித்து வருகிறனர். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கவில்லை. மின்சாரம் விநியோகம் செய்வதிலும் உத்தரபிரதேச மாநிலத்தில் அரசியல் நடக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெளியேறபோகிறது. சி.பி.ஐ.யால் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியாது. இந்த பிரச்சினையில் டெல்லியில் பலவீனமான அரசாங்கம் ஏற்பட முடியாது. நாங்கள் ஏழைகள் கண்ணியமாக வாழ அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருவோம். நான் டீ விற்றவன் என்னால் ஏழைகளின் நிலையை புரிந்துகொள்ள முடியும். நாங்கள் நாட்டு மக்களுக்காக இரவு பகலாக உழைப்போம். இவ்வாறு மோடி பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 5:14 pm

ஆந்திரம்: தெலுங்கு தேசம் கட்சி - பாஜக கூட்டணி அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக - தெலுங்கு தேசம் கட்சி இடையிலான கூட்டணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

ஹைதரபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நரேஷ் குஜ்ரால், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இப்போது தெலுங்கு தேசம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஊழல் இல்லாத அரசை உருவாக்க நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடுவும் இணைந்துள்ளார்" என்றார்.

அப்போது பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, "ஆந்திர மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்தக் கூட்டணியில், தெலங்கானாவின் 47 சட்டப்பேரவைத் தொகுதிகள், 8 மக்களவைத் தொகுதிகள், சீமாந்திராவில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 5 மக்களவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும்" என்றார் சந்திரபாபு நாயுடு.

தெலங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகளும், 119 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. சீமாந்திரா 25 மக்களவைத் தொகுதிகளையும், 125 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியாளர் கூட்டத்தில், பாஜக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்திய அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் உடன் இருந்தார்.

முன்னதாக, வரும் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் சீமாந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பாஜகவும் தெலுங்கு தேசம் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தும், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், சனிக்கிழமை இரவு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், அகாலி தளம் தலைவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான நரேஜ் குஜ்ரால், பாஜக பொருளாளர் பியுஷ் கோயல் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சதீஷ் ஜீ ஆகியோர், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில், அதன் மூத்த தலைவர்கள் சுஜானா சவுத்ரி, தயாகர் ராவ், ராமகிருஷ்ண நாயுடு மற்றும் நரசிம்ம நாயுடு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

முன்னதாக, கூட்டணி தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை பிரகாஷ் ஜவடேகர் இரண்டு முறை சந்தித்துப் பேசியது கவனிக்கத்தக்கது.

இரு கட்சிகளின் தரப்பிலும் அதிருப்தியாளர்களால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இரு தரப்பிலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுத்தரக் கூடாது என்று அதிருப்தியாளர்கள் பிடிவாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 6:02 pm

ஆட்சியர் அலுவலகத்தை சிரிப்பில் ஆழ்த்திய 'அடேங்கப்பா' வேட்பாளர்கள்!

வேட்புமனு தாக்கலின் 3-வது நாளான புதன்கிழமை ஆண்டிச்சாமி என்பவர் முதல் நபராக மதுரை ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தென்மண்டல முத்தரையர் கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்சியத்தோடு போட்டியிடுகிறேன். பல மாவட்டங்களில் எங்கள் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழ்கிறோம். ஆனால், எந்த அரசியல் கட்சியுமே எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. எங்கள் பலம் என்னன்னு மத்தவங்களுக்கெல்லாம் காட்டுவதற்காகவே நான் சுயேச்சையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளேன்” என்றார்.

ஆவேசப் பேட்டி கொடுத்துவிட்டு, ஆட்சியர் அறையை நோக்கிச் சென்ற அவர் அடுத்த அரைமணி நேரத்தில் மனு தாக்கல் செய்யாமல் கீழிறங்கி வந்தார். காரணம் கேட்டபோது, ‘வேட்புமனு செய்பவர்கள் அதற்கு முந்தையதினம் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகலையும் இணைக்க வேண்டுமாம். அதுதெரியாமல் போய்விட்டது’ என்று உதட்டை பிதுக்கினார்.

ஒத்த ரூபாய் மூட்டை

அவரைத் தொடர்ந்து, கும்பகோணத்தைச் சேர்ந்த குப்பல் ஜி.தேவதாஸ் என்பவர் டெபாசிட் தொகையை ஒத்த ரூபாய் சில்லரைக் காசுகளாக மாற்றிக்கொண்டு வந்தார். அவர் கூறும்போது, நான் 2006-ம் ஆண்டு கும்பகோணம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டேன். எதற்காக நம்முடைய பணத்தை ஒரு கட்சியிடம் கொடுத்து போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் சுயேச்சையாகப் போட்டியிட ஆரம்பித்தேன். இருமுறை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கும், இருமுறை எம்.எல்.ஏ பதவிக்கும் போட்டியிட்டிருக்கிறேன். 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன் என்றார். பரிந்துரை செய்ய அவருடன் 10 பேர் வராததால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் மனிதர் வெற்றி பெறப் போகிற வேட்பாளரைப் போல கம்பீரமாக நடை பயின்றார்.

தேர்தல் சபதம்

தொடர்ந்து, மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆர்.பி.சந்திரபோஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். ‘கூடல்மாநகர் ஒருங்கிணைந்த அபே ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் நான் போட்டியிடுகிறேன். நான் வென்றால், மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்குவதைப் போல, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் டீசல், பெட்ரோல் மானியம் பெற்றுத் தருவேன். இது என் தேர்தல் சபதம்’ என்றார் நாம் சிரிக்காமல் கேட்டுக்கொண்டோம்.

சுயேச்சைன்னா கேவலமாப் போச்சா?

பா.ஜெயராம் என்பவர் தனது வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்தார். வேட்பு மனு என்று எழுதிய காகிதத்தை உடலில் கட்டிக்கொண்டு வந்த அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். நான் வேட்பு மனுவை திரும்பப் பெற வந்திருக்கிறேன் என்று அவர் சொல்ல, நீங்கள்தான் தாக்கலே செய்யவில்லையே? பிறகெப்படி திரும்பப்பெற முடியும் என்றனர். கோபத்தோடு அங்கிருந்து கிளம்பி நிருபர்களிடம் வந்த அவர், நான் பி.டி.ஆர்., பொன்.முத்துராமலிங்கம் போன்றவர்களை எதிர்த்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவன். என்னுடைய அடிப்படைத் தேவையான தினம் 3 குவார்ட்டரும், 8 பாக்கெட் சிகரெட்டையும் கூட பூர்த்தி செய்ய முடியாத என்னிடம் டெபாசிட் 25 ஆயிரம் கேட்கிறார்கள். அதனால்தான் எனது வேட்பு மனுவை திருப்பிக் கொடுக்க வந்துள்ளேன்” என்றார். அவரது இந்தப் பேச்சால் ஆட்சியர் அலுவலகமே சிரிப்பில் ஆழ்ந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 5:30 pm

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அறை விழுந்தது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சுல்தான்புரியில் கேஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த அவரது கன்னத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் திடிரென அறைந்தார்.

உடனடியாக அந்த நபரை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். அரவிந்த் கேஜ்ரிவாலை அறைந்தவரும் ஆம் ஆத்மி தொப்பி அணிந்திருந்தார்.

சம்பவத்திற்குப் பின்னர் பாஜகவை கடுமையாக விமர்சித்த கேஜ்ரிவால், "பிரதமர் பதவியை அடைய ஏன் சிலர் வன்முறையை கடைபிடிக்கிறார்கள் என தெரியவில்லை. வன்முறையால் எங்களை கட்டுப்படுத்த முடியும் என நினைக்காதீர்கள். கடைசி மூச்சு வரை போராடுவோம்" என்றார்.

அதேவேளையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் பொய்யான வாக்குறுதிகளால் வெறுப்படைந்த ஆம் ஆத்மி தொண்டரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாற்கான சாத்தியம் உள்ளதாக, டெல்லி பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.

முந்தைய தாக்குதல்கள்:

கேஜ்ரிவால் மீது இதற்கு முன்னர் பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 4-ம் தேதி டெல்லி தக்‌ஷினாபுரியில் 19 வயது இளைஞர் ஒருவர் தாக்கினார்.

மார்ச் 28-ம் தேதி ஹரியானாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அண்ணா ஹசாரே ஆதரவாளர் தாக்கினார்.

வாரணாசியில் அரவிந்த் கேஜ்ரிவால் மீது 'மை' வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:18 pm

 இந்தியாவின் பிரச்சினைகள் தீரும் என்றால் தாக்குதல்களை சந்திக்க தயார் - அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவின் பிரச்சினைகள் தீரும் என்றால் இன்னும் தாக்குதல்களை சந்திக்க தயார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால், சுல்தான்பூர் பகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினர் குவிந்தனர். அவருக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது ஒரு ஆசாமி அவருக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவன் சற்றும் எதிர்பாராத வகையில் 'பளார்' என்று கெஜ்ரிவால் கன்னத்தில் அடித்துவிட்டார்.  அந்த நபர் ஆட்டோ டிரைவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அடிவாங்கிய கெஜ்ரிவால் டெல்லி ராஜ்காட்டில் மவுன போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் முகத்தில் வீக்கத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது, தனதுக்கு எதிராக அரசியல் சதி நடப்பதாக குற்றம் சாட்டினார். இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவர் யார்? இதில் ஒருவர் அல்லது பலருக்கு இதில் தொடர்ப்பு இருக்கலாம்? இந்த தாக்குதலுக்கான அவர்களது நோக்கம் எனக்கு புரியவில்லை. "என்னை அடிப்பதினால் இந்தியாவின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா" என்று பேசினார். மேலும், பிரச்சினைகள் தீரும் என்றால் இன்னும் தாக்குதல்களை சந்திக்க தயார் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 12:35 pm

'அநீதி செய்தவர்களை கொல்லுங்கள்' - ராஜ் தாக்கரேவின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, விவசாயிகள் மத்தியில் பேசுகையில். ' உங்களுக்கு அநீதி செய்தவர்களை கொல்லுங்கள் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் யாவாத்மால் பகுதியில் அவரது கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே விவசாயிகளிடம் பேசுகையில், நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். அது உங்களின் எந்த பிரச்சனையையும் தீர்க்க போவதில்லை. அப்படியே உங்களுக்கு தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால், முதலில் உங்களுக்கு அநீதி செய்தவர்களை கொல்லுங்கள் என்று பேசினார்.

மேலும், தேர்தல்கள் அனைத்தும் சாலைகள், வேலைவாய்ப்பு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நடைபெறுகின்றன. ஆனால், இன்று வரை இந்த அடிப்படை தேவைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. கிராமங்களில் கூட மதுபானங்கள் கிடைக்கின்றன. ஆனால், குடிநீர் கிடைப்பதில்லை எனவும் பேசினார்.

ராஜ் தாக்கரேவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 12:58 pm

நீலகிரியில் நிறம் மாறிய தாமரை ஆதரிக்க போவது யாரை? பா.ஜ.,வில் கடும் குழப்பம்; விசாரணை நடத்த குழு அமைப்பு

நீலகிரி பா.ஜ., வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில், தமிழக பா.ஜ., கட்சி கடும் குழப்பம் அடைந்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, மூன்று பேர் குழுவை, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமித்து உள்ளார்.

படிவம் சமர்ப்பிக்கவில்லை:

நீலகிரி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குருமூர்த்தி, கடந்த, 3ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பதற்கான, 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை சமர்ப்பிக்கவில்லை. அடுத்த நாளும், அதை அவர், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்கவில்லை. மாறாக, வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான, 5ம் தேதி மாலை, அவகாசம் முடிந்த பின், சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, அவரது வேட்புமனுவை, தேர்தல் அதிகாரியான, மாவட்ட கலெக்டர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து, நீலகிரியில் பா.ஜ., தலைவிதி தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில், வேறு வாய்ப்புகளை ஆராயவும் பா.ஜ., முன்வந்துள்ளது. ஏதாவது ஒரு சுயேச்சை வேட்பாளரை தேர்வு செய்து, அவரை ஆதரிக்கும் முடிவை எடுக்கலாம் என, கூறப்படுகிறது. அப்படி பார்த்தால், இந்த தொகுதியில் இரண்டு சுயேச்சைகள் தான், மனு தாக்கல் செய்துள்ளனர். ஒருவர், சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி, கிராமத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி சுப்ரமணியன். இன்னொருவர், தேனியை சேர்ந்த பாலன். இவர், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., மருத்துவர் அணி துணை செயலராக உள்ளார். 'சீட்' கிடைக்காத கோபத்தில், நீலகிரியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எனவே, அ.தி.மு.க.,வை சேர்ந்த இவரை, பா.ஜ., ஆதரிக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் கோபாலகிருஷ்ணன், தி.மு.க., சார்பில் ஆ.ராஜா, காங்கிரஸ் சார்பில் காந்தி, ஆம் ஆத்மி சார்பில் ராணி, பகுஜன் சமாஜ் சார்பில் கலா, மக்கள் மாநாட்டு கட்சி சார்பில் ஈஸ்வரன், இந்திய குடியரசு கட்சி சார்பில் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்., பிரிவு சார்பில், பொன்னுசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் யாரையும் பா.ஜ., ஆதரிக்க முடியாது என்பதால், மிகவும் இக்கட்டான இந்நிலையில், தமிழக பா.ஜ., என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்த, மூன்று பேர் குழுவை, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி தொகுதியில், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குருமூர்த்திக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவரது வேட்புமனுவை, நீலகிரி தொகுதி தேர்தல் அதிகாரியான, மாவட்ட கலெக்டர் தள்ளுபடி செய்துள்ளார். இந்த விவகாரத்தில், நமது கட்சி தரப்பில் நடந்துள்ள விஷயங்கள் குறித்து, அனைத்து தரப்பினரையும் விசாரிப்பதற்காக, முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், மாநில பொதுச் செயலர் (அமைப்பு) மோகன்ராஜூலு மற்றும் மாநில செயலர், சுப்ரமணி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வருத்தமே:

இக்குழு, உடனடியாக நீலகிரி தொகுதிக்கு சென்று விசாரித்து, அறிக்கை அளிக்கும். அதைத் தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொகுதியில் பா.ஜ.,வுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருந்தும், கடைசி நேரத்தில் தேர்தல் களத்தில் நிற்க முடியாத சூழ்நிலை, மிகுந்த மன வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. குறிப்பாக, அந்த தொகுதிக்கு உட்பட்ட கட்சி தொண்டர்களின் உணர்வுகளை உணர முடிகிறது. இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Sponsored content

PostSponsored content



Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக