புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
61 Posts - 80%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
397 Posts - 79%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 2:05 am

300எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு வேண்டும்: மோடி உருக்கமான வேண்டுகோள்

பரேலி : ''மத்தியில் ஸ்திரமான, வலுவான ஆட்சி அமைவதற்கு, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற, காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரையுள்ள வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு தாருங்கள்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம், அனைத்து மாநிலங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதும், பா.ஜ., கூட்டணி தனி மெஜாரிட்டி பெறுவதற்காக, தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

புது அணுகுமுறை

இந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் சில, வெளியேறி சென்றாலும், தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில், புது கட்சிகளை அரவணைத்து, பா.ஜ., முன்னோக்கி செல்கிறது. உ.பி., - பீகார், ஒடிசாவில், வேட்பாளர்கள் தேர்வில் புது அணுகுமுறையை கடைபிடித்து இருப்பதால், அதிக இடங்களை பெற்று விடலாம் என்ற நம்பிக்கை இந்த கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.உ.பி., மாநிலம், வாரணாசியில் மோடி போட்டியிடுவதால், இதனால் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து, 80 தொகுதிகளையுமே பிடித்துவிட வேண்டும் என, பா.ஜ., கனவு காண்கிறது. பீகாரில், 40 தொகுதிகளையும் கைப்பற்றி விட்டால், 300 எம்.பி.,க்களையும் தாண்டிவிடலாம் என, மனக்கணக்கு போட, பா.ஜ., துவங்கிவிட்டது.ஆட்சி அமைப்பதற்கு தேவையான, மந்திர எண்ணான, 272 இடங்களை பெறுவதில் மட்டுமே துவக்கத்தில் கவனம் செலுத்திய, பா.ஜ., பல மாநிலங்களில் வலுவான கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு, கூட்டணி அமைப்பதில், எதிரணியான காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் போன்றவற்றை கணக்கில் கொண்டு, நிலையான ஆட்சி அமைக்க, 300 இடங்களை பெறுவது இலக்கு என்ற கோஷத்திற்கு சென்றுள்ளது.'பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுக்க, மீண்டும் ஸ்திரமற்ற ஆட்சி அமைவதையே காங்கிரஸ் விரும்புகிறது என்பதை கோடிட்டு காட்டி, இதிலிருந்து நாட்டை காப்பாற்ற, 300 இடங்களை, தே.ஜ., பெற ஓட்டு போடுங்கள்' என்ற பிரசாரத்தை துவக்கி உள்ளார்.இதை தான் நேற்று, உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

அந்த பொதுக்கூட்டத்தில், நரேந்திர மோடி பேசியதாவது:
காங்கிரஸ், மூன்றாவது அணி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள், 'மதச்சார்பற்ற சக்திகள்' என்ற பெயரில், மீண்டும் ஸ்திரமற்ற, வலுவற்ற ஆட்சியை கொண்டு வருவதற்காக, மக்களை திசை திருப்ப பார்க்கின்றன.பா.ஜ., தலைமையில் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக, இப்போது எதிரும், புதிருமாக இருப்பவர்கள் ஒன்றிணைந்து, ஆட்சி அமைக்க முயல போகின்றனராம்.

உலகம் கேட்கும்:

பா.ஜ., கூட்டணியில் இருந்து, பல கட்சிகள் வெளியேறி உள்ளன. அதே நேரத்தில் நாடு முழுவதும், புதிய கட்சிகள் எங்களுடன் இணைந்துள்ளன. நாட்டில் வலுவான, ஸ்திரமான ஆட்சி அமைந்தால் தான், மக்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும்; நாட்டின் இமேஜையும், சர்வதேச அளவில் உயர்த்த முடியும்.காஷ்மீர் - கன்னியாகுமரி வரை உள்ள வாக்காளர்களை, நான் கேட்டு கொள்வதெல்லாம், பா.ஜ., கூட்டணிக்கு, 300க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களை தாருங்கள். இந்த பலத்துடன், புது பிரதமர் பதவியேற்றால், நாம் சொல்வதை உலகம் கேட்கும் படி செய்யலாம்.மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.மத்தியில் ஸ்திரமற்ற ஆட்சி வருவதையே காங்கிரஸ் விரும்புகிறது. இது தான் தேச பக்தியா? யார் ஆட்சி அமைப்பது என்பதை விட, மத்தியில் ஸ்திரமான அரசாக இருக்க வேண்டும்.மோடி பிரதமராகிறாரா, பா.ஜ., ஆட்சி அமைக்கிறதா... என்பது முக்கியமல்ல. அமையும் அரசு ஸ்திரமாக இருப்பது தான் முக்கியம்.தேர்தல் வரும் போதெல்லாம், காங்கிரஸ் கட்சி, 'ஏழை, ஏழை' என்று மந்திரம் பாட துவங்கி விடுகிறது. இப்படி சொல்லியே, 365 நாட்களும், 'ஏப்ரல் பூல்' தினமாக்க பார்க்கிறது.

ஏழையாகவே இருப்பதா?

தேர்வுக்கு செல்லும் மாணவன், பிரார்த்தனை செய்யும் போது, தேர்வில் பாஸ் செய்ய வேண்டும் என வேண்டுவான். ஏழை நாடாக இந்தியாவை வைத்திருப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி யில், ராணுவ வீரர்களும், விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர். நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்கு, போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.நம் இந்திய வீரரின் தலையை, பாகிஸ்தான் ராணுவம் துண்டித்தது. விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.இவ்வாறு, மோடி பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 2:06 am

"குடிக்கும் நீரையும் விற்பது தமிழக அரசு தான்': வேலூரில் ஸ்டாலின் ஆவேசம்

வேலூர்: ""இந்தியாவிலேயே, குடிக்கும் நீரை மக்களுக்கு விற்பனை செய்யும் அவலமான அரசு, தமிழக அரசு தான்,'' என, வேலூரில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அப்துல்ரகுமானை ஆதரித்து, வேலூர் மண்டித் தெருவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், திறந்த வேனில் நின்றபடி, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழ்நாட்டு மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை உருவாக்கி கொடுத்து உள்ளார். கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, முதல்வராக கருணாநிதி செய்த சாதனை போல யாரும் செய்யவில்லை.வேலூர் உள்பட பத்து நகராட்சிகளை, மாநகராட்சி ஆக்கினார். ஐந்து கோடியில் வேலூர் மாநகராட்சியில், புதியதாக சாலை போடப்பட்டது. ஒகேனக்கல், காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில், குடிநீர் விற்கும் அவல நிலை தமிழகத்தில் உள்ளது.

குடிநீர் கம்பனிகள் தண்ணீர் பாட்டில் விற்பதில் தவறில்லை. ஆனால், ஒரு அரசு, தண்ணீர் விற்க கூடாது. தி.மு.க., ஆட்சியில், குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கி பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கினோம். இந்தியாவில், எங்கும், எந்த அரசும் குடிநீர் விற்பனை செய்வது கிடையாது. <உலகத்திலேயே நடக்காத இந்த கொடுமை தமிழகத்தில் நடக்கிறது.கந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடராமல், ஜெயலலிதா முடக்கி விட்டார். தி.மு.க., ஆட்சியில், வேலூரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்து, 60 சதவீதம் பணி முடிந்தது. ஆனால், ஜெ., ஆட்சிக்கு வந்த, மூன்று ஆண்டு ஆகியும், இந்த திட்டம் முடியவில்லை. கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தை முடித்தால், அவருக்கு நல்ல பெயர் வந்து விடுமே என்ற காழ்ப்புணர்சி தான், இதற்கு காரணம்.

வேலூர் மாநகராட்சியில், டெங்கு காய்ச்சலில், பத்து குழந்தை இறந்துள்ளது. கொலை, கொள்ளை, பலாத்காரம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. மூன்று ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட கொலை நடந்துள்ளது.பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, பா.ஜ., மாநில செயலாளர் வெள்ளையப்பனை, மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் வெட்டிக் கொலை செய்தனர். பெண்கள் இரவில் தான் நடந்து செல்ல கஷ்டம். ஜெயலலிதா நாட்டு மக்களை போய் பார்ப்பதில்லை. ஆனால், காட்டில் போய் மிருகங்களை பார்த்து ரசிக்கிறார். அப்போது, அவர் மீது கோபம் கொண்ட ஐந்தறிவு உள்ள யானை, எட்டி உதைத்தது. ஆறறிவுள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.தொகுதி பிரச்சனைகளை பார்லியில் பேசி, அப்துல் ரகுமான் தீர்த்து வந்தார். இவரை மீண்டும், எம்.பி.,யாக்க வேண்டும், என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 5:51 am

கெஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல்: பிரசாரம் ரத்து

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று பிரசாரம் மேற்கொண்டபோது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கினார்.

தெற்கு டெல்லியில் வாகனத்தில் சென்று பிரசாரம் செய்த அவர், தனது ஆதரவாளர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் நின்றிருந்த ஒரு நபர் திடீரென அவரது முதுகில் குத்தினார். மீண்டும் அடிக்க முயன்ற அந்த நபரை, ஆம் ஆத்மி தொண்டர்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் தொண்டர்களிடையே பேசிய கெஜ்ரிவால், “பிரதமர் பதவியை பெறுவதற்காக சிலர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். வன்முறை கூடாது என்று நமது மதம் போதிக்கிறது. நாம் நமது கைகளை உயர்த்தினால், இந்த இயக்கம் அழிந்து விடும்” என்றார்.

இந்த தாக்குதலுக்கு பா.ஜனதா மீது குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், தனது தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் தனது பிரச்சார பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பினார்.

இதேபோல் கடந்த மாதம் 28-ம் தேதி அரியானாவில் பிரசாரம் செய்தபோதும் கெஜ்ரிவால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 5:55 am

மோடியை பிரதமராக்கும் பிரசார வியூகம் தோல்வியில் முடியும்: அகிலேஷ் யாதவ்

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மக்களவைத் தொகுதி, பகோதரில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடிக் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “பா.ஜ.க. பிரசார வியூகங்களால் நரேந்திர மோடியை பிரதமராக்க முடியாது. நாங்கள் அதை தடுத்து நிறுத்துவதுடன், மூன்றாவது அணி அரசை உருவாக்குவோம்.

வகுப்புவாதத்தை திருப்புவது எளிதானது. ஆனால் அதை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேலும் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை விட உத்தர பிரதேச மாநிலம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. நீங்கள் மூன்றாவது அணிக்கு வாக்களித்தால் உத்தர பிரதேச வளர்ச்சியை நாங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம்.

மேலும் முஸ்லிம் சமூக மாணவிகள் 10ம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடர ரூ.30000 நிதி உதவியும், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியும் கடந்த இரண்டு வருடத்தில் செய்துள்ளோம்” என்றார்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 6:42 am

ஜூ.வி. எடுத்துவரும் ஸ்பெஷல் சர்வே வரிசையில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது 'பெண்கள் வாக்கு யாருக்கு?’ என்ற சர்வே.



நாட்டில் சரி பாதியான பெண்கள், அரசியலின் தலைவிதியை அரசாங்கத்தின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதும் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் பெண்களின் மனவோட்டம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதை அறியத் திட்டமிட்டோம். அதற்கான கேள்விகளுடன் நமது நிருபர்களும் மாணவ நிருபர்களும் தமிழ்நாட்டின் முக்கியமான பகுதிகள் அனைத்துக்கும் சென்று 5 ஆயிரத்து 555 பெண்களைச் சந்தித்து சர்வே எடுத்தார்கள். இந்தப் பெண்கள் அனைவருக்கும் அரசியலைப் பற்றியும் நாட்டு நிலைமையைப் பற்றியும் அளவுக்கு அதிகமான வருத்தம் இருக்கிறது. அன்றாட வாழ்க்கைப் பிரச்னையே அவஸ்தைக்குரியதாக மாறிவருவதை அவர்களால் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 P6
நெல்லையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், ''விலைவாசியும் ஏறிடுச்சி. கரன்ட் பிரச்னையும் இருக்குது. நீங்க எந்தப் பிரச்னை இருக்குதுன்னு கேட்டு இருக்கீங்க. இதுல எல்லாமேதான் இருக்கு. எல்லாத்தையும் டிக் பண்ணிடவா?'' என்று விரக்தியில் விசாரித்தார்.

''ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப்போட போகும்போது இந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடுன்னு வீட்டுல இருக்குற ஆம்பளைங்க சொல்லி விடுவாங்க. ஆனா, நான் எனக்கு புடிச்ச கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவேன். இந்த தடவையும் அப்படித்தான்!'' - இது கோவை அம்மணியின் ஓப்பன் டாக். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தார்கள்.
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 P6a
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 P7
ஆனால், உங்கள் ஓட்டு யாருக்கு என்ற கேள்விக்கு இவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு என்று சொல்லியிருக்கிறார்கள். பி.ஜே.பி. கூட்டணியைக்விட 10 சதவிகித அதிக வாக்குகளை அ.தி.மு.க. அள்ளுகிறது. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை டிக் செய்பவர்கள், வாக்களிப்பது அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்வது முரண்பாடாகத் தெரியலாம். அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பவர்களுக்குக்கூட ஜெயலலிதா பிரதமர் என்று சொல்வதை ஏற்க முடியவில்லையோ என்று சொல்லத் தோன்றுகிறது!
இதோ அந்த சர்வே முடிவுகள்...
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 P8
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 P9
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 8 P10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 6:01 pm

நள்ளிரவுப் பிரச்சாரம் கிரிமினல் குற்றம்: தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம்

நள்ளிரவில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது கிரிமினல் குற்றமாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி பயன்படுத்திதான் பிரச்சாரம் செய்யக் கூடாது. ஆனால், நள்ளிரவிலும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தால் வேட்பாளர் இந்திய தண்டனைச் சட்டம் 451 பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார் என்றார். தேர்தல் ஆணையம் புதிதாக நடத்தை விதிமுறைகளில் மாற்றம் ஏதும் செய்யவில்லை என்றார்.

வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்தால், அந்தப் பிரச்சாரக் கூட்டத்துக்கான செலவுகள் முழுவதும் வேட்பாளரின் செலவுக் கணக்கில்தான் சேர்க்கப்படும். வேட்பாளரின் பெயரைச் சொல்லாமல் கட்சியின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி விளக்கிப் பேசினால், அந்தக் கூட்டத்துக்கான செலவு, கட்சியின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அது தேர்தல் ஆணையத்தின் பழைய விதிமுறை என்று மட்டும் பிரவீண்குமார் பதிலளித்தார்.

ரூ.16 கோடி சிக்கியது:

தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் நடத்திய வாகனச் சோதனையில், இன்றைய நிலவரப்படி ரூ.16 கோடியே 39 லட்சம் சிக்கியுள்ளதாகவும். அதிகபட்சமாக சென்னையில் ரூ.2.48 கோடி சிக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 12:19 am

என்னுடைய கடைசி தேர்தலாக இருக்கலாம்: கருணாநிதி

கோவை: கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய கருணாநிதி,தி.மு.க., தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல. இன எழுச்சிக்காக, இன உணர்வுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். இந்த தேர்தல் என்னுடைய கடைசி தேர்தலாக இருக்கலாம். கூட்டணி கட்சி தலைவர்களை ஏமாற்ற மாட்டோம். நேரத்துக்கு நேரம் மாற்றிக்கொள்கின்ற பச்சோந்தி கூட்டமல்ல. மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டிய கட்டத்தில் உள்ளோம் என கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 12:28 am

ஜெ., குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்


சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், வேட்பாளரின் பெயரை உச்சரித்தால், அந்த கூட்டத்திற்கான செலவு, வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இதனைதேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில், வேட்பாளரின் தேர்தல் செலவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 12:29 am

"ஜெ' ஜாதகத்தில் என்ன உள்ளது ? மதுரை ஆதீனம்


தூத்துக்குடி: "பாரதத்தை ஆளும் வாய்ப்பு முதல்வர் 'ஜெ' ஜாதகத்தில் உள்ளது,'' என மதுரை ஆதீனம் பேசினார். தூத்துக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜநட்டர்ஜியை ஆதரித்து திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: நாட்டில் உள்ள கொள்ளையர்கள் கூட்டத்தை விரட்ட 2014 லோக்சபா தேர்தல் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த காமராஜர், மூப்பனார் போன்றவர்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது அதனை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. "ஜெ' பிரதமராக நல்ல தருணம் ஏற்பட்டுள்ளது. அவரது ஜாதகத்தில் பிரதமராகவும் வாய்ப்புள்ளது.

"ஜெ' பிரதமரானால் இந்தியா வல்லரசாக மாறும். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு தான், அவர் மிக துணிச்சலான பெண்மணி. நாடு தீவரவாதம்,பயங்கரவாதம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. நமது தொகுதியிலும் "ஜெ' போட்டியிடுகிறார், என நினைத்து அ.தி.மு.க., கட்சிக்கு ஓட்டு போட வேண்டும், என அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்,எல்,ஏ., உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 12:30 am

பறக்கும் படையிடம் தப்பிக்க ரயிலில் " பயணிக்கிறது" தேர்தல் பணம்

புதுடில்லி : தேர்தல் செலவுகளுக்காக வாகனங்கள் மூலம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்லப்படும் அதிக அளவிலான பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருவது நாடு முழுவதும் தொடர் கதையாகி வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை பல கோடி மதிப்பிலான பணம் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரிடம் இருந்து தப்பிக்க, ரயில் மூலம் பணத்தை கொண்டு செல்லும் பல யுக்திகளை அரசியல்வாதிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இ-புக்கிங்கில் பண மாற்றம் :

இ-புக்கிங் முறையில் மொத்தமாக அதிகளவிலான டிக்கெட்களை ஒரு இடத்தில் புக் செய்து, அதை வேறு இடத்தில் ரத்து செய்து விட்டு பணத்தை பெறுவதன் மூலம் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து, அரசு கணக்கு மூலமாகவே மற்றொருவரின் கணக்கிற்கோ அல்லது பலரின் கணக்கிற்கோ மாற்றப்படுகிறது. இந்த பணம் தேர்தல் பணிக்காகவும், ஓட்டுக்காகவும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எந்த இடையூறுமின்றி அதிகளவிலான தேர்தல் பணம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நிதித்துறை புலனாய்வு அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. புலனாய்வுத்துறை அளித்த தகவல் குறித்து சமீபத்தில் நடைபெற்ற நிதித்துறை அமைச்சக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்த வகையில் தேர்தலுக்காக கொண்டு செல்லப்படும் பணம் பற்றி உன்னிப்பாக கண்காணிப்படுவதாகவும் வரவாய் புலனாய்வுத்துறை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் பயணிக்கும் பணம் :

ரயில் டிக்கெட் புக்கிங் மூலம் பணம் பரிமாற்றப்படுவது வட இந்தியாவிலேயே அதிகம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திருப்போர் பட்டியலில் அதிக அளவிலான டிக்கெட்டை புக் செய்து ரத்து செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை அரசியல்வாதிகளின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. பயணம் செய்வதற்கு பல நாட்களுக்கு முன்னரே புக் செய்து ரத்து செய்வதன் மூலம் முழு மொத்த பணமும் பெறப்படுகிறது. டில்லியில் இருந்து மும்பைக்கு நாள் ஒன்றிற்கு வந்து செல்லும் 13க்கும் மேற்பட்ட ரயில்களில், ரூ.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் பயணிக்கிறது.

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?

: இ-டிக்கெட் புக்கிங் மூலம் மட்டுமின்றி, ஆட்கள் மூலமும் பணம் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இ-டிக்கெட் மூலம் கோடிக் கணக்கான பணத்தை கொண்டு செல்ல முடியாது என்பதால், தங்கம் அல்லது வைரமாக ஒரு இடத்தில் வாங்கி, மற்றொரு இடத்தில் விற்பனை செய்கின்றனர். பிறகு அந்த பணத்தை தமக்கு வேண்டியவர்களிடம் பிரித்து கொடுத்து, பின் மொத்தமாக சேகரித்து கொள்கின்றனர். இந்த முறையிலும் தேர்தல் பணம் அதிக அளவில் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக