புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
32 Posts - 42%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
2 Posts - 3%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
2 Posts - 3%
Saravananj
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
398 Posts - 49%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
26 Posts - 3%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 1 of 37 1, 2, 3 ... 19 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:19 pm

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:23 pm

பூமிக்கு அடியில் அமெரிக்கா அணுகுண்டு சோதனை: உலக நாடுகள் அதிர்ச்சி

சுட சுட செய்திகள்...அச்சலா 7936bd69-01a3-4754-a148-116703e86634_S_secvpf

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நிவேடாவில், பூமிக்கு அடியில் அதிநவீன அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நேற்று நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த அணுக்குண்டு சோதனைக்கு போல்லக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணுகுண்டு சோதனையில் அணுக்குண்டு வெடிக்காது.

எதிர்விளைவுகளும் ஏற்படாது. வெடிக்காமல் அணுப்பொருட்களின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக இந்த அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், போல்லக்ஸ் அணுகுண்டு சோதனை பூமிக்கு அடியில் நடத்தப்பட்டிருக்கிறது.

இது இப்படி நடந்த 27-வது சோதனை ஆகும். அணு ஆயுதங்கள் பாதுகாப்பு, ஆற்றல் பராமரிப்பு பற்றிய தகவல்கள் இந்த பரிசோதனை மூலம் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதியும் பூமிக்கு அடியில் பரோலா-பி அணுக்குண்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:26 pm

ஹமாஸ் இயக்கத் தலைவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணுக்கு திரும்பினார்

சுட சுட செய்திகள்...அச்சலா Eb65ef71-5904-414d-bf9b-dda4a10408e9_S_secvpf

ஹமாஸ் இயக்கத் தலைவர் காலீத் மிஷால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு காசா பகுதிக்கு இன்று சென்றார்.

பாலஸ்தீன் - இஸ்ரேல் நாடுகளுக்கிடையே உள்ள எல்லைப் பகுதியான மேற்கு கரை சில்வாட் பகுதியில் 1956-ம் ஆண்டு பிறந்த காலீத் மிஷால்; 1967-ம் ஆண்டு காசாவில் நடந்த போரின் எதிரொலியாக, குடும்பத்துடன் குவைத்தில் தஞ்சம் அடைந்தார்.

1971-ம் ஆண்டு முஸ்லிம் சகோதரர்கள் என்ற அமைப்பில் சேர்ந்து, 1987-ம் ஹமாஸ் இயக்கத்தை தொடங்கினார்.

குவைத் நாட்டை ஈராக் கைப்பற்றிய பின்னர் 1991-ல் ஜோர்டான் சென்றார். ஹமாஸ் இயக்கத்திற்கான நிதி ஆதாரங்களை திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது, இவரைக் கொல்ல இஸ்ரேல் உளவுப் படையினர் திட்டம் தீட்டினர்.

இந்த தாக்குதல் திட்டத்திலிருந்து தப்பி 2001-ம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு இடம் பெயர்ந்து, பின்னர் 2001-ல் சிரியாவில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து ஹமாஸ் போராளிகளை இயக்கி வந்த காலீத் மிஷால், இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகளுக்கிடையிலான தாக்குதல் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. எனவே, ஹமாஸ் இயக்கத்தின் 25-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அவர் இன்று காசா நகரை வந்தடைந்தார்.

ஹமாஸ் துணைத் தலைவர் மூசா அபு மர்சூக் மற்றும் மெய்காப்பாளர்கள் துணையுடன், காசா எல்லையை கடந்த அவர் தனது தாய் மண்ணின் மீது தலை குப்புறப்படுத்து முத்தமிட்டார். அவரை காசா பிரதமர் இஸ்மாயில் ஹனியா கட்டித்தழுவி வரவேற்றார்.

நாளை நடைபெறவுள்ள ஹமாஸ் இயக்க 25-ம் ஆண்டு விழாவில் காலீத் மிஷால் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:28 pm

ஜப்பானில் பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ்

சுட சுட செய்திகள்...அச்சலா A67e9d3f-cbb7-4b66-9157-6ca6b8c35b62_S_secvpf

ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் உள்ள சென்டாய் நகரை மையமாகக் கொண்டு அப்பகுதியின் சுமார் 245 கி.மீட்டர் சுற்றளவில் இன்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 என அளவிடப்பட்டுள்ள இந்த நில நடுக்கம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது.

பூமிக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நில நடுக்கம் காரணமாக அங்கு கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன. இதனையொட்டி, ஜப்பானின் கிழக்கு கடற்கரை, மியாமி கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாலை 6.02 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சுனாமி காரணமாக கடல் அலைகளின் உயரம் 2 மீட்டர் வரை உயரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சுனாமி பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் இரவு 7.20 மணியளவில் ஏற்கனவே விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் சுனாமி அச்சத்தில் இருந்த இஷினேமாக்கி, மியாகி, அவுமோரி, இபாராக்கி பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நில நடுக்கத்தால், ஒங்கேவா மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் புகுஷிமா டாய்ச்சி, புகுஷிமா டய்னி மின் உற்பத்தி நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ அருகேயுள்ள நரிடா விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளது. செண்டாய் விமான நிலையத்தின் வழியாக செல்லும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு 9 ரிக்டர் அளவில், ஜப்பானை குலுக்கிய நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் இதுவரை இப்பகுதியில் 9 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:30 pm

தீபாவளி அன்று இரவில் ஜொலித்த இந்தியா: நாசா வரைபடம் வெளியிட்டது

சுட சுட செய்திகள்...அச்சலா 167ae056-0798-44f3-8b2d-52283987935e_S_secvpf

தீபாவளி அன்று இரவில் ஜொலித்த இந்தியாவின் வரைபடத்தை `நாசா' வெளியிட்டது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்துக்களின் பண்டிகையான அன்று இரவில் வீடுகள் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டன. பட்டாசுகள் கொளுத்தப்பட்டு இரவு நேரம் பகல்போல் ஜொலித்தது.

இந்த காட்சிகளை அமெரிக்காவின் நாசா மையம் படம் பிடித்துள்ளது. `நாசா' மையத்தின் `சுயோமி' என்.பி.பி. செயற்கை கோள் கடந்த நவம்பர் 12-ந்தேதி இரவு தெற்கு ஆசிய நாடுகளின் தோற்றத்தை போட்டோ எடுத்து அனுப்பியது. அதில், இந்திய நகரங்கள் ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது தெரியவந்தது.

120 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட 30 நகரங்கள் உள்ளன. தீபாவளி அன்று வீடுகளில் ஏற்றப்பட்ட தீபங்கள் மற்றும் வெடித்த பட்டாசுகளின் வெளிச்சமே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

-மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:32 pm

பிரிட்டனில் குரானை மனப்பாடம் செய்யாததால் குழந்தையை அடித்துகொன்ற இந்தியத்தாய்
சுட சுட செய்திகள்...அச்சலா Ea461dfa-e312-4dfc-a2aa-bf0d63f8ee66_S_secvpf

இந்தியாவை சேர்ந்த யூசுப் (38) என்பவர் தனது மனைவி சாராவுடன் (33) பிரிட்டனின் கார்டிப் என்னுமிடத்தில் வசித்து வருகின்றார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லி மனைவி சாரா தனது மகனை அடித்து வந்திருக்கிறார்.

குரானை மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010-ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்து இருக்கிறார். இதில் யாசின் இறந்து போயிருக்கிறான். பிறகு யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார்.

இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோபம் தாங்காமல் குச்சியால் அவனது முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்தேன். இதில் அவன் இறந்துவிட்டான் என்று தீவிர விசாரணைக்கு பிறகு அவள் ஒத்துக் கொண்டிருக்கிறாள்.

பின்னர் குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாள். கணவன் யூசுப் நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.

-மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:33 pm

அந்தமான் நிகோபார் தீவுக்கடலில் ஒரு வாராமாக உயிருக்கு போராடிய 128 மியான்மர் நாட்டினர் மீட்பு

சுட சுட செய்திகள்...அச்சலா 13a5bf46-a242-40b2-aae2-99fdd1ce23f2_S_secvpf

மியான்மர் (பர்மா) நாட்டிலிருந்து கடந்த மாதம் 25-ம் தேதி 4 பெண்கள் மற்றும் 9 குழந்தகளுடன் 128 பேர் மலேசியா நாட்டிற்கு படகு ஒன்றில் பயணமானார்கள். அந்தமான் தீவுக்கடல் வழியாக மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற அவர்களின் படகில் அப்போது கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் பயணத்தை தொடரமுடியாமல் நடுக்கடலில் அவர்கள் ஒரு வாரகாலமாக கடலில் தத்தளித்திருக்கின்றனர்.

கடல் அலையினால் அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒன்றான நார்கொண்டம் தீவு நோக்கி அந்த படகு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களைப் பற்றிய செய்தி இந்திய கடற்படையினருக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற கடற்படையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 128 மியான்மர் நாட்டினரை காப்பாற்றினர். பின்னர் அத்தீவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

-மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 08, 2012 12:35 pm

சுட சுட செய்திகளை , உடனடி செய்திகளை இங்கே தொடர்ந்து பதியுங்கள் ! உங்கள் சேவை அளப்பரியது ! மிக்க நன்றி அச்சு

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:38 pm

புரட்சி wrote:

சுட சுட செய்திகளை , உடனடி செய்திகளை இங்கே தொடர்ந்து பதியுங்கள் ! உங்கள் சேவை அளப்பரியது ! மிக்க நன்றி அச்சு
வித்தியாசமாக உள்ளது உங்கள் கோர்ட்..
ஏதேனும் புதுமையா..

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:40 pm

ஒடிசா: பெண்ணின் வயிற்றில் இருந்த 35 கிலோ கட்டி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது

சுட சுட செய்திகள்...அச்சலா F9ace595-ea98-4e9e-872a-87d22efc7c53_S_secvpf

ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள துகானி கிராமத்தில் வசிக்கும் பானுமதி (45) என்ற பெண், கடந்த ஓராண்டாக, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

மல்கான்கிரி அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பெண்ணின் வயிற்றில் சதைக்கட்டி வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.

ஆபரேஷன் மூலம் இந்த கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து, இன்று நடந்த ஒரு மணி நேர ஆபரேஷனில் 35 கிலோ எடையுள்ள அந்த ராட்சத கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

-மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 1 of 37 1, 2, 3 ... 19 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக