புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_lcapநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_voting_barநாளும் ஒரு அழகின் அலை - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 16, 2014 10:23 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 33

சுகம் என்பது என்ன..

மார்கழிப் பனிக்காலையில் இதமாக ஒன்றுக்கு இரண்டு போர்வைகளை தலைமுதல் கால்வரை போர்த்தி மூக்குமட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உறங்குவதா..

மழைபெய்த மாலையில் சற்றே நனைந்து வீட்டுக்கு வந்தால் தலையைத் துவட்டுவதற்குள் மூக்கில் பட்ட வாசனையால் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற..ஆமா க்ளைமேட் நல்லா இருக்கோன்னோ..வெங்காய பஜ்ஜி சட்டுனு நனச்சு பட்டுன்னு போட்டேன்..சூடா சாப்பிடுங்கோ எனச் சொல்ல உள்ளே செல்லும் அன்புகலந்த அமிர்தத்தின் ருசியா..

போச்சு, சின்னக் கண்ணனுக்கு வயசாய்டுச்சு, தூங்கறதையும் சாப்பிடறதையும் மட்டும் சொல்றார் எனச் சொல்வதற்கு முன்: காதலியுடன்- சுகம் சுகமே ஏய் தொடத்தொடத் தானே என்றபடி ரொமாண்டிக்கா அணைத்துக் கொள்வதா, கடிமணம் புரிந்த மனையாளுடன் களிப்பதா

இதுவெல்லாம் சுகம் தான்..ஆனால் முதல் வகை சுகம்.. நமது இந்திரியங்களால் தெரிந்து அறிந்து கொள்ளப் படும் சுகம்.

இரண்டாம் வ்கை ஒன்று உண்டு..

மஹா சுகம்....இது பிரம்ம ஞானிகள் அறிந்ததாகும் ( பின்ன ஏன் நீ சொல்ற..”ச்…சும்மா இரு மனசாட்சி)) எல்லாவற்றையும் துறந்து இறைவனிடம் ஐக்கியமாகும் நிலை..

யோகிகளுக்கெல்லாம் இகபர சுகங்கள் பொருட்டில்லை..அவர்கள் வாழ்க்கையின் எய்ம் என்ன..அம்பாளின் கமலப் பாதங்கள் தான்..அவர்கள் சிந்தனையையே ஜபமாலைகளாகக் கொண்டு (இடைவிடாது தெய்வ சிந்தனை வருகின்றதாம்..எனில் ஜபமாலைக்குத் தேவை யில்லையாம்) தங்கள் வாசனைகளையே நெய்யாக ஞானாக்னியில் ஆஹீதி – அர்ப்பண்ம் செய்கிறார்கள். யோகிகள் தங்கள் கர்ம பலன்களையே தியாகம் செய்கிறார்கள்

பஞ்சதசாஷரி என போன ஸ்லோகத்தில் வந்த பதினைந்துடன் காமபீஜம் புவனேஸ்வரி பீஜம் லஷ்மி பீஜம் எனச் சேர்த்து இந்த ஸ்லோகத்தைச் சொல்கிறார்..இந்த மூன்றும் சேர்ந்து வருவது செளபாக்ய பஞ்ச தஷீ என்பதாம்..அது இங்கு மறைமுகமாகக் கூறப்படுகிறது..

வீட்டில் கணபதி ஹோமம் போன்ற ஹோமங்களில் சதுரமாக இருப்பதைப் பார்த்திருப்போம்.. கோவில்களில் ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு விதமாக இருக்குமாம்..சிவனுக்கு முக்கோண வடிவிலான ஹோம குண்டம்..

**

ஸ்மரம் யோனீம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதெள தவமனோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண நிபத்தாக்ஷ-வலயா:
சிவாக்னெள ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை:

Smaram yonim lakshmim trithayam idam adau tava manor
Nidhay'aike nitye niravadhi-maha-bhoga-rasikah;
Bhajanti tvam chintamani-guna-nibaddh'aksha-valayah
Sivagnau juhvantah surabhi-ghrta-dhara'huti-sataih.

ஆதியும் அந்தமும் இல்லாத அம்பிகையே,

மகாயோகிகள் இடைவிடாது மந்திர ஜபம் செய்து ரசிப்பவர்கள்..அவர்கள் தங்க்ள் சிந்தனையையே ஜபமாலையாகக் கொண்டு பஞ்ச தசாஷரி மந்திரத்துடன் காம, புவனேஸ்வரி,லஷ்மீ பீஜத்துடன் சிவாக்னி எனப்படும் முக்கோண ஹோம் குண்டத்தில் –சிதக்னியில் -  காம தேனு அளித்த நெய் தாரையை அக்னிக்கு வார்த்து உன்னைத் திருப்தி செய்கிறார்கள்…

சகல செளபாக்யத்தையும் கொடுக்கும் இந்த ஸ்லோக பாராயணம்…

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 17, 2014 10:14 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 34

:நானென்றால் அது அவளும் நானும்.. அவள் என்றால் அது நானும் அவளும்”

“எதுக்கு இப்ப ‘அம்மாவை எல்லாம் நினைக்கறே”

“நான் அம்பாளன்னா நினைக்கறேன்..யோவ்.. என்னை எதுக்கு மாட்டி விடற.. நான் சாதாரண மனுஷனோட மன்சாட்சி..அப்புறம் பைரவா பைரவின்னா தெரியுமா

“பைரவா வந்து இந்திரா செளந்த்ர்ராஜன் கதையில அடிக்கடி வர கறுப்பு நாய்..கண் கூட செக்கர் வானமா ரெட்டிஷ்ஷா இருக்கும்..பைரவி..இப்பத் தான் டிவில போட்டாங்க ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன படம்.”

“சிவசிவா”

“இப்ப எதுக்கு சிவனை இழுக்கறே..”

“ நான் சிவனை இழுக்கலை..அம்பிகையையும் சேர்த்துல்ல இழுக்கறேன்.. சிவ என்றால் சிவன் சிவா என்றால் அம்பிகை,ஷக்தி. அதே மாதிரி பைரவா பைரவின்னா சிவாஷக்தி, ஸமயஸமயான்னாலும் இந்த ரெண்டு பேரும் தான்..இரண்டு பேரும் சமம்..சிவனுக்கும் த்ரீ ஐஸ் சக்திக்கும் மூணு கண்ணு ஷிவ் நெத்திலயும் பிறை இருக்கு ஷக்தி நெத்திலயும் பிறை இருக்குமாம்..ரெண்டுபேருமே ஒன்று தான்..பிற்காலத்தில் தம்பதி ஒத்துமைக்கு நா.ன் என்றால் அது அவளும் நானும்ன்னு கண்ணதாசன் எழுதியிருக்கார்..”

“சரி”

அதாவது பரமசிவன் பார்வதியை இணைத்து சச்சிதானந்த சொருபமாத்தான் வழி படணுமாம்..அப்படின்னு ஸ்லோகம் சொல்லுது..

அப்புறம்..

இந்த சுலோக பாராயணம் தம்பதிகளோட ஒத்துமை நிலவச் செய்யுமாம்..


**

சரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ:


Sariram twam sambhoh sasi-mihira-vakshoruha-yugam
Tav'atmanam manye bhagavati nav' atmanam anagham;
Atah seshah seshityayam ubhaya-saadharana taya
Sthitah sambandho vaam samarasa-parananda-parayoh.

சரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ:

பரமசிவனின் மனைவியான அம்பிகையே… என் மனக்கண்ணால் உன்னைப் பார்க்கும் போது சூர்ய சந்திரர்களை ஸ்தனங்களாகக் கொண்ட நீ ஈசனுக்கு உடலாகவும், நாமம் காலம் குலம் நாதம் கலா ஜீவாத்மா பிந்து நானம் சித்தம் என்ற ஒன்பது வியூகம் கொண்ட சிவனது உடலானது உன்னுடைய உடலாகவும் எனக்குத் தெரிகிறாய்.

.இப்படி உங்கள் உறவு ஒருவர் உடலாகவும் ஒருவர் ஆன்மாவாகவும் இருப்பது சச்சிதானந்த ரூபமாக இருக்கிறது..




சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 17, 2014 10:15 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 35

Manas tvam vyoma tvam marud asi marut saarathir asi
Tvam aastvam bhoomis tvayi parinathayam na hi param;
Tvam eva svatmanam parinamayithum visva-vapusha
Chidanand'aakaram Shiva-yuvati-bhaavena bibhrushe.


மநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி
த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி பாவேந பிப்ருஷே

தேவி, பரமசிவனின் பார்யையே நீயே மனமாகவும், பஞ்ச பூதங்களான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு எனவும் நீயே சூர்யனாகவும், இந்தப் பிரபஞ்சமாகவும் இருக்கிறாய்..உன்னுடைய ஆனந்த சொரூபமான பரமசிவனின் பத்தினி என்ற சித் ரூபத்தை – நீயே இந்தப்பிரபஞ்சம் எனக் காண்பிப்பதற்காக எடுத்திருக்கிறாய்..

ஸ்வாசப் ப்ரச்னைகளை குணப்படுத்துமாம் இந்த ஸ்லோக பாராயணம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 17, 2014 10:17 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 36

சூரிய சந்திர ஜோதியும் நான்..
சுந்தர தாண்டவ மூர்த்தியும் நான்
நாரணன் நான்முக பிரம்மனும் நான்
நாரணி பார்வதி உமை நானே…

“என்ன திடீர்னு..இந்தப் பாட்டு..”

“சில சமயங்கள்ல சில சினிமாப் பாடல்கள ஏதோ சொல்லியிருக்காங்க,மெட்டு ந்ன்னா இருக்கு, பக்தியாகவும் இருக்கு என நினச்சுருப்போம்.. கொஞ்சம் டீப்பா கூட்ட திங்க் பண்ணியிருக்க் மாட்டோம்..மேல உள்ள பாட்டு..உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி… அந்த கோரஸ்…கே.ஆர்.விஜயான்னு பார்த்தப்ப சரி..ஷக்தி வந்து பக்தைக்காக பழி வாங்கறா.. என நினச்சுட்டு படம் முடிஞ்சவுடன் மறந்துடறோம்.. ச்ரி..மறந்துட்டேன்.. இப்பஎவ்வளவு பொரு ள் இருக்குன்னு தோணுது..

“ஆமா.. இன்றைய ஸ்லோகம்”

“இதோ”

***


தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸசி கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித பார்ஸ்வம் பரசிதா
யமாராத்த்யன் பக்த்யா ரவி-ஸசி-ஸுசீநா-மவிஷயே
நிராலோகே-லோகே நிவஸதி ஹி பாலோக-புவநே

Tavaagna chakrastham thapana shakthi koti dhyudhidharam,
Param shambhum vande parimilitha -paarswa parachitha
Yamaradhyan bhakthya ravi sasi suchinama vishaye
Niraalokeloke nivasathi hi bhalokha bhuvane


அம்பிகையே உன் நெற்றியின் புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் கோடி சூரிய சந்திர் பிரகாசத்தை உடையவரும் சகுண நிர்குண சக்திகளை தன் இடப்பக்கம் கொண்டிருப்பவுருமான சதாசிவத்தையும் உன்னையும் தியானித்துத் தொழுபவர் சாயுஜ்ய பதவியை அடைவார்.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 18, 2014 10:09 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 37

வெங்கடேஷ்.. ஷியாமளி வர்ற வேர்கள் கிருஷ்ணமணி நினைவிருக்கா..”

“நினைவில்லாம… என்ன ஒருகதை..விகடன்பொன்விழால்ல பரிசு பெற்றதுன்னு நினைக்கிறேன்..அதுக்கென்ன…

“அதுல சியாமளி பட்டர் கிட்ட கேப்பா.. சிதம்பர ரகசியம் நா என்னன்னு…கொஞ்சம் இரும்மான்னு சொல்லி அவளை உள்ள கூட்டிச் சென்று ஒரு திரை விலக்குவார்..இதான் சிதம்பர ரகசியம்.. பார்த்தா..ஆகாயம் தான் தெரியும்..சித்துன்னா பரமசிவம்..அம்பரம்னா ஆகாயம்..எல்லாவற்றையும் கடந்து எல்லாமுமாக உள்ளதே சிதம்பரம்..சியாமளி நினைக்கறது பிரபஞ்சம் என்பது போல எழுதியிருப்பார்..”

“அந்த ஆகாயதத்துவத்துக்குப் பெயர் தான் விசுத்தி என்பார்கள்..”

அடுத்து ஸ்படிகம்.. ஸ்படிகம் தூய்மையான கல்.. நிறமில்லாதது..இரண்ட்டு ஸ்படிகத்தை உரசினா நெருப்புப் பொறி பறக்குமாம்..

ஸோ இதெல்லாம் வரப் போகுதா இன்றைய ஸ்லோகத்தில..

ஆமாம்..
**

விசுத்தெள தே சுத்தஸ்படிக விசதம் வ்யோமஜநகம்
சிவம் ஸேவே தேவீமபி சிவஸமாநவ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண ஸாரூப்யஸரணே:
விதூதாந்தர்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ

Vishuddhou the shuddha sphatika visadham vyoma janakam
Shivam seve devimapi siva samana vyavasitham
Yayo kaanthya sasi kirana saaroopya sarane
Vidhoo thantha dwarvantha vilamathi chakoriva jagathi


அம்பிகையே… சுத்தமான ஸ்படிகம் எப்படி தூய்மையானதோ, எவ்வண்ணம் நினைத்தாலும் அவ்வண்ணம் ஸ்படிகம் பிரதிபலிக்குமோ அதே போன்ற தன்மை வாய்ந்தவரும், விசுத்தி என்ற ஆகாச தத்துவத்தை உற்பத்தி செய்தவருமான பரமசிவனையும், அவருடைய ரூப தத்துவங்கள் உள்ள உன்னையும் என்னுடைய விசுத்தி சக்கரத்தில் வைத்து நமஸ்கரிக்கிறேன்..

உங்களிடமிருந்து வருகின்ற மதியின் நிலவில் உலகம் சகோர பஷி சந்திரனின் ஒளியால் எப்படி உயிர்வாழ்ந்து மகிழ்கிறதோ அது போல் அஞ்ஞான இருளை அகற்றிக் கொள்கிறது…


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 18, 2014 10:16 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 38

“அஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் … கன்னம்
பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே … மின்னும்”

“நல்ல பாட்டுப்பா..இப்ப எதுக்காக இதைச் சொல்ற அன்னத்துக்கா,,கன்னத்துககா, கோபுரத்துக்கா,அல்லது மின்னறதா..”

பொன்மகள் காதல் அன்னம்
பூமகள் கண்கள் மின்னும்
நெஞ்சமே துள்ளும் வண்ணம்
கொஞ்சுவாள் தங்கக் கிண்ணம்

“”சரி சரி.. அன்னப் பறவைகள் போலபார்வதிபரமசிவன் இருக்காங்கன்னு சொல்ல வர்றியாக்கும்..

“யெஸ்..சாதாரண லவர்ஸ் ஆ இருக்கும் அன்னப்பறவை ஜோடி என்ன செய்யும்..

“மில்க் ல ருந்து வாட்டரை செப்பரேட் பண்ணும்..இது தெரியாதா த்ர்ட் ஸ்டாண்டர்ட்ல படிச்சுருக்கேன்..”

“ஹேய் மனசாட்சி..போங்குல்லாம் பண்ணாத…நீ தமிழ் மீடியம் தானே”

“சரிப்பா..நீ படிச்சது தான் எனக்குத் தெரியும்..ஸோ பாலையும் த்ண்ணீரையும் பிரிக்கும் சாதாரண அன்ன ஜோடி.. நம்ம பார்வதி பரமேஸ்வராள் மக்கள்கிட்ட கெட்ட குணங்க்ளை விலக்கி நல்ல குணத்தை எடுத்துக்கறாங்களா..

“கரெக்ட் அன்னம்.. ஹம்ஸ.. ஹம் பரமசிவன் ஸ ஷக்தி.. போனதுல ஆகாச தத்துவம்..இந்த சுலோகம் வாயு தத்துவம் அதாவது அனாஹத சக்ரம் இங்கே தேவியையும் சிவனையும் மானசமா பூஜை பண்றது சொல்லப் படறது.

.அவங்க சம்பாஷிக்கறச்சே பதினெட்டு வித்தைகள் பிறக்கிறதாம்.. நான்கு வேதங்கள் அப்புறம் சிஷை,கல்பம், வியாகரணம்,நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம் மீமாம்ஸ, நியாயம் புராணம்தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம் தனுர்வேதம், காந்தர்வவேதம் நீதி சாஸ்திரம் ஆக டோட்டல் பதினெட்டு..( நான்கு வேதங்கள் ஆறு வேதாங்கங்கள், எட்டு சாஸ்திரங்கள்)”

“சரி”

இப்ப சுலோகத்தைப் பார்க்கலாம்.

**

ஸமுந்மீலத் ஸம்வித்கமல மகரந்தைகரஸிகம்
பஜே ஹாம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்
யதாலாபாத் அஷ்டாதசகுணித வித்யாபரிணதி:
யதாதத்தே தோஷாத் குணமகிலம் அத்ப்ய: பய இவ:

Samunmeelath samvithkamala makarandhaika rasikam
Bhaje hamsadwandham kimapi mahatham maanasacharam
Yadhalapaa dhashtadasa gunitha vidhyaparinathi
Yadadhathe doshad gunamakhila madhbhaya paya eva


மகாதேவனே, மலைமகளே, அன்ன ஜோடிகளான நீங்கள் பதினெட்டு வித்தைகளுக்கு மூலமானவர்கள்..

நீங்கள் எப்படி ஹம்ஸங்கள் நீரை விலக்கி பாலைக் குடிக்கிறதோ அது போல தோஷங்கள் விலக்கி நல்ல குணங்க்ளை மட்டும் ஏற்கிறீர்கள்…

நீங்கள் மலர்ந்த தாமரையின் மகரந்தத்தமான அனாஹத சக்ரத்தில் இருந்து மஹான்களின் மனதில் எப்போதும் சஞ்சரிக்கிறீர்கள்.. உங்க்ள் இருவரையும் எனது அனாஹத சக்கரத்தில் வைத்து தியானிக்கிறேன்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 18, 2014 10:18 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 39

தவ ஸ்வாதிஷ்டானே ஹுத்வஹ்மதிஷ்டாய நிரதம்
தமீடே ஸம்வர்தம் ஜனனி மஹதீம் தாம் ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹதி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிரமுபசாரம் ரசயதி

Thava swadhishtane huthavahamadhishtaya niratham
Thameede sarvatha janani mahathim tham cha samayam
Yadhaloke lokan dhahathi mahasi krodha kalithe
Dhayardhra ya drushti sishiramupacharam rachayathi


தாயே.. உன்னையும் பரமசிவனையும் எனது ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் வைத்து நமஸ்கரிக்கிறேன்..சிவனுடைய ருத்ராக்னிப் பார்வையானது இந்த உலகங்களை அழிக்கும் சமயம் சந்த்ரகலா தேவியான உனது குளிர்ந்த பார்வையானது ஜீவர்களை உய்விக்கிறது…

ஸ்வாதிஷ்டானம் என்பது அக்னி தத்துவம்..ஸ்வாதிஷ்டான அக்னி தத்துவ ஷேத்திரம் திருவண்ணாமலை..அதில் ஸ்வாதிஷ்டானத்தில் சிவன் அக்னி வடிவாகவும் சம்ஹார மூர்த்தியான ரூத்ரனாகவும் விளங்குகிறார்…

இச் சுலோக பாராயணம் நம் கனவை நனவாக்கும் ஆற்றல் கொண்டது..



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 18, 2014 10:20 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 40


”மேகம் கருக்குது மழை வரப் பாக்குது வீசி அடிக்குது காத்து…”

“என்ன ஆச்சு மனசாட்சி, நேத்துக்கு உம்முனு இருந்த..இப்ப பாட்டுப் பாடற”

“மேகம் கொட்டடும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு”

“இது எதுக்கு”

’மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடிவில் பொழியும்..”

“அம்பிகாவோட ரெண்டாவது படம் தானே..இப்போ நீ எதுக்காகப் பாடறேன்னு சொல்லாட்ட உன்னைக் கழட்டி வச்சுட்டு முன்னேற ஆரம்பிச்சுடுவேன்”

“சரி..ஈ.ஏன் மேகம்னு சொனேன் தெரியுமா..கார்கால மேகம்ங்கறது சிவன்.. நடுவில் வருகின்ற கொடி போன்ற மின்னல் அம்பாள்..உனக்கு சதாசிவ தத்வம் தெரியுமா..”

“எனக்கு சதாசிவ தாத்தாவைத் தான் தெரியும்..மதுரைல ஒரு காலத்தில பெட்டிக்கடை வச்சிருந்தார்..அவருக்குக்கூட அழகா நிறமா ஒரு பேத்தி..பச்சைப் பாவாடை மஞ்சள் தாவணி போட்டுக்கிட்டு கேப்ரன் ஹால்ல படிச்சதா ஞாபகம்..”

“உன் கிட்ட கேட்டேன் பாரு..கார்கால மேகம் கறது சிவன்..அதில் தோன்றும் மின்னல் கொடி ஷக்தி..கார்காலத்தில வர்ற மிகப் பெரிய மேகமா சிவன் இருக்கறது தான் சதாசிவ தத்துவம்..இருளைப் போக்குகின்ற மின்ன்லைப் போன்று அம்பாளின் ரத்னாபரணங்களின் ஒளி இருக்கிறதாம்..ருத்ரனால் மூவுலகங்களும் தகிக்கப் படும் போது தனது அமுத மழையால் குளிரப் பண்ணுகிறாள் அம்பிகை..அதைத் தான் இந்த ஸ்லோகம் சொல்லுது..இதைச் சொல்ல வந்தா நீ அம்பிகாவ நினைக்கற பாரு..

‘ஸீ..நான் ரெண்டு பாரா முன்னாடி சொல்லிட்ட்டு விட்டுட்டேன்.. நீ தான் சுமந்துக்கிட்டு இருக்கே..அந்தக்கால அம்பிகான்னா ஓகே..இந்தக்காலம்னா வெய்ட்..அண்ட் ஓல்ட்..எனக்குத் தான் கஷ்டம்..!”

“மணிபூரக சக்ரத்தைப் பத்தியும் இந்த ஸ்லோகத்ல சொல்றார்..மணிபூரகம் நீர்,… நேத்துப் பார்த்தது அக்னி தத்துவம்..///வா..ஸ்லோகத்துக்குள்ள போலாம்..

தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்

Thatithwantham shakthya thimira paree pandhi sphuranaya
Sphuranna na rathnabharana pareenedwendra dhanusham
Thava syamam megham kamapi manipooraika sharanam
Nisheve varshantham haramihira thaptham thribhuvanam.

**

தாயே, என்னுடைய ஆறு இதழ்களுடன் கூடிய மணிபூரகச் சக்ரத்தில் சிவனை வர்ஷிக்கப் போகின்ற மஹா மேகமாகவும் உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானிக்கிறேன்.

.உனது ரத்தின ஆபரணங்க்ளின் ஒளியில் இந்தக் கருமேகமானது இந்திர தனுஷீடன் இருப்பதைப் போன்று ஜொலிக்கிறது.

தாமிஸ்ரம் என்று சொல்லப் படும் இருளை நீ அகற்றுகின்றாய்.

அந்த ஜ்வலிக்கின்ற கருமேகத்திலிருந்து மழை வர்ஷித்து ப்ரளய கால ருத்ரனால் தஹிக்கப் பட்ட லோகங்களைக் குளிரச் செய்கிறாய்..”

**இந்த ஸ்லோகத்தில் தேவியை ஸ்திர செளதாமினி எனவும் ஈசனை அமிர்தேச்வரன் எனவும் த்யானிக்க வேண்டும்..

இந்த ஸ்லோக பாராயணம் முற்பிறவிகளில் செய்த தீவினையால் ஏற்படும் நோய்களையும்,தாதுக்களின் குறைபாடு, நீர் நெருப்பு போன்றவற்றால் உண்டாகும் நோய்களையும் அண்ட விடாது….அத்துடன் நிலையான ஞானமும் லஷ்மி கடாஷமும் கை கூடுமாம்..




சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 18, 2014 10:22 am


நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 41


தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மாநம் மந்யே நவரஸமஹாதாண்டவநடம்
உபாப்யாம் ஏதாப்யாம் உதயவிதிமுத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்

Thavadhare mole saha samayaya lasyaparaya
Navathmanam manye navarasa maha thandava natam
Ubhabhya Methabhyamudaya vidhi muddhisya dhayaya
Sanadhabyam jagne janaka jananimatha jagathidam.


“ஆறு சக்கரங்களுள் முதன்மையான மூலாதார சக்கரத்தில் நவரசங்களுடன் மகாதாண்டவம் செய்யும் ஆனந்த பைரவியாகிய உன்னையும் ஆனந்த பைரவரான ஈசனையும் தியானிக்கிறேன்..அம்மா.

.இந்த உலகம் உங்களுடைய ருத்ர தாண்டவத்தினால் அழிந்தாலும் மீண்டும் உங்களது கருணை விழிகளின் கடாட்சத்தினால் மீண்டும் உருவாகும்..எனில் நீங்களே உலகிற்குத் தாய் தந்தை என்றபடி உங்களை நமஸ்கரிக்கிறேன்…

**இதுவரை வந்த 41 ஸ்லோகங்களும் ஆதி சங்கரரால் கைலாசத்திலிருந்து எடுத்து வரப் பட்டவை..மந்திர சாஸ்திர நுணுக்கங்கள் நிரம்பியவை..

இன்றைய ஸ்லோக பாராயணம் தீராத வியாதிகளையும் தீர்த்து, பராசக்தியின் தரிசனம் கிடைக்க வழி செய்யும்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 10:18 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 42


”வணக்கம்..இந்தப் பாடலில் அம்பிகையின் சிரசிலிருந்து வர்ணிக்க ஆரம்பிக்கும் பகவத் பாதர் மகுடத்தின் வர்ணனையைப் பற்றிச் சொல்கிறார்.

மணியே மணியின் ஒளியே என்று ஆரம்பித்தால் ஓ இது அபிராமி அந்தாதிப் பாடல், என்றும் இதனையும் கண்ணதாசனின் பாடலையும் சேர்த்துப் பாடிய டி.எம்.எஸ்ஸூம், அத்துடன் உணர்ச்சி மயமாக நடிக்கும் எஸ்.வி. சுப்பையாவும் நினைவுக்கு வருவார்கள்..”

“எப்போ நீ நியூஸ் ரீடர் ஆனே மனசாட்சி.”

“சும்மா ஒரு சேஞ்சுக்காக தான்.. இந்த ப் பாட்டு நீயும் கேட்டிருப்ப..ஆனா ரெண்டாவது வரி..ஒளிரும் மணி புனைந்த அணியேன்னு வருது பாரு.
.
“அம்பாளோட கிரீடத்துல பதித்திருக்கற ரத்தினக் கற்கள் பத்தி சொல்றாராக்கும்..”

பரவால்லயே தேறிட்ட.. வா.. கொஞ்ச்ம் ஸ்லோகத்துக்குள்ள போவோம்.
.
“ஏன் என்ன அவசரம்..ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்கவந்தாள் பாடலையா..”

“வாடா .. ச்மர்த்தா ஸ்லோகம் சொல்லலாம்..”
*

கதைர் மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ரகடி
தம்கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயாச் சுரணசபளம் சந்த்ரசகலம்
தநு: செள்நாஸீரம் கிமிதி ந நிபத்நாதி தஷணாம்


Gathair manikyatvam gagana-manibhih-sandraghatitham.
Kiritam te haimam himagiri-suthe kirthayathi yah;
Sa nideyascchaya-cchurana-sabalam chandra-sakalam
Dhanuh saunasiram kim iti na nibadhnati dhishanam.

“அம்பிகையே.மலையரசன் மகளே...உன் மகுடத்தை உற்று நோக்குகையில் தங்க மயமான கிரீடம் ரத்தினக் கற்களால் ஜ்வலிக்கிறது.

.அந்த ரத்தினக் கற்கள் பன்னிரு ஞாயிறுகள்-..சூரியன்கள் பொதிந்த பறவைக் கூடு போன்ற வடிவம் கொண்டது. அந்த மகுடத்தில் பிறைமதி காணப் படுகிறது..

பனி போன்ற அமுதத்துளிகள் நிறைந்த அந்தப் பிறைமதி மீது இந்த ரத்னக் கற்களில் இருந்து வரும் சூரிய ஒளிக்க்திர்கள் படவும் பலவகை வண்ணங்கள் கொண்ட இந்திரனுடைய வில் போல இருப்பதாக பார்ப்பவர் வியப்பார்கள்

இச்சுலோக பாராயணம் உலகையே நம் வசப்பட வைக்குமாம்..


Sponsored content

PostSponsored content



Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக