புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
171 Posts - 80%
heezulia
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
1 Post - 0%
prajai
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
1 Post - 0%
Pampu
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயை பற்றிய தத்துவக் கதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:10 am

 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  AojoAMsRIiKrU5hSGnfV+agTOvgEK

மாயையும் பிரம்மமும் முறையே, ஓடும் பாம்பையும், சலனமற்றுக்கிடக்கும் பாம்பையும் ஒக்கும். இயங்கும் சக்தி மாயையாகும்; நிலையான சக்தி பிரம்மம். இவ்வாறு மாயையைப் பற்றி இராமகிருஷ்ணபரமகம்சர் கூறியுள்ளார். “மாயை போலியானது, உண்மையற்றது, ஏமாற்றுவது” என்று இருக்கு வேதம் கூறுகின்றது. “பல்வேறு வகைப்பட்ட தோற்றங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் கொண்டது மாயை” என்று அதர்வண வேதம் கூறுகிறது. உபநிடதங்களும் மாயையைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன; “பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணம் மாயை” என்று சுவேதாஸ்வர உபநிடதம் கூறுகின்றது. உலகப் படைப்புக்கு மாயை முதற்காரணமாகவும், சக்தி துணைக்காரணமாகவும், சிவன் நிமிர்த்த காரணமாகவும் இருக்கின்றான்” எனப் புராணங்கள் கூறுகின்றன. “மா” என்றால் தோன்றல். “யா” என்றால் ஒடுங்கல் என்று மாயைக்குப் பொருள் சொல்லப்படுகின்றது. ஆன்மாவும் மாயையும் சேர்ந்தால் எப்பொழுதும் துன்பமே உண்டாகும். இதனால் தான் பிறப்புக்கள் உண்டாகின்றன. ஆன்மாவும் பிரம்மமும் சேர்ந்தால் பேரின்பம் உண்டாகும். இதனால் பிறப்பற்ற நிலை உண்டாகும்.

எப்பொருள் மீதாவது ஆசையுள்ளவன் மாயையால் பீடிக்கப்பட்டவனாவான். உதாரணமாகப் பணத்தின் மீது ஆசை; உணவின் மீது ஆசை; பெண்ணின் மீது ஆசை. இவ்வாசை உள்ளவர்கள் எல்லோரும் மாயையின் வசப்பட்டவர்கள் என்று வியாசமுனிவர் கூறியுள்ளார். மாயை இரு வகைப்படும். உலகை உயிர்ப்பிப்பதும் மாயை தான்; உலகை துன்பப்படுத்துவதும் மாயை தான். உலக உய்விக்கும் மாயையை “வித்தை” என்றும், உலகைத் துன்பப்படுத்தும் மாயையை அவித்தை என்றும் கூறப்படுகிறது. ஈஸ்வரனிடம் வித்தை, அவித்தை என்ற இரு மாயைகளும் உள்ளன. வித்தியா மாயை உயிர்களை இறைவனோடு சேர்த்துவைக்கும். அவித்தியா மாயை உயிர்களுக்குப் போகங்களைக் கொடுத்து அவைகளை இறைவனை விட்டு நீங்கச் செய்யும். மாயை தான் பிரம்மத்தைக் காணச்செய்கின்றது. மாயை இல்லாவிட்டால் உலகம் இயங்காது;. உயிர்களால் இறைவனின் மகிமைகளை அறிந்து கொள்ள முடியாது. பிரம்மஞானம், பரமானந்தம், பேரின்பம், முத்தி முதலியவைகளெல்லாம் மாயையின் மூலமே உயிர்களுக்குக் கிடைக்கின்றன. இவ்வாறு இந்து சாஸ்த்திரநூல்கள் கூறுகின்றன. அப்படியான வல்லமை பொருந்திய மாயையின் குணங்களைப் பற்றிய தத்துவங்களை இந்நூலில் கதைகளாக எழுதியுள்ளேன்.


கே.வி. குணசேகரம்



 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:11 am

கடம்பவனம் என்ற காட்டில் நமசிவாயம் என்ற ஞானி பன்னசாலை அமைத்து ஞானம் பெறுவதற்காகத் தனது சீடர்களுடன் தங்கியிருந்தார். அந்தக் காட்டின் வழியாகச் செல்பவர்கள் ஞானியின் பன்னசாலையில் வந்து தங்கியிருந்து உணவருந்திச் செல்வது வழக்கம். அக்காட்டின் வழியாக வணிகர்கள் பொருட்களைக் கொண்டு செல்லும் போது நமசிவாயம் சுவாமிக்குப் பொருட்களைக் கொடுப்பார்கள். அவ்வூர் அரசன் வேட்டையாடக் காட்டிற்கு வந்தால் பல நாட்கள் அவருடன் தங்கியிருந்து அவரது உபதேசங்களைக் கேட்பான். அன்று அவன் வந்த போது கேட்டான்; “சுவாமி, மாயை மாயை என்கிறார்கள். மாயையென்றால் என்ன?”

“எவையெவையெல்லாம் மனிதனின் தர்ம சிந்தனைகளை மறைக்கின்றனவோ அவையவையெல்லாம் மாயைகள். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்பன மனிதனின் ஆன்மீகத் தன்மையை மறைக்கின்றன. இவை மனிதர்களின் மனங்களில் ஆசைகளைத் தூண்டி அவாவடையச் செய்யும். எண்ணெய் வைத்திருந்த குடத்தை எப்படித்தான் சுத்தம் செய்தாலும் எண்ணெய் வாசனை அதில் இருப்பது போல ஆத்மாவை இறைவன் பால் வைத்தவர்களிடத்தும் பற்றுக்கள் இருக்கும். உலகில் வாழ்பவர்களிற் பலர் இவற்றிற்கு அடிமையாகிவிடுகிறார்கள். பாரமுள்ள பக்கம் சாயும் தராசைப்போல ஆசையுள்ள பக்கமே மனம் சாயும். கடவுளின்

மேல் ஆசையிருந்தால் கடவுளின் பக்கம் மனம் சாயும். தராசைப்போல ஒரு சிறிதளவு பாரம் கூடினாலும் அப்பக்கமே மனம் சாயும். தராசுத்தட்டில் குண்டுமணியளவு பாரம் கூட இருந்தாலும் அந்தப் பக்கம் தான் தராசு சாயும். அது போலவே மேற்சொல்லப்பட்ட ஆசைகள் சிறிதளவு மனதில் இருந்தாலும் அது அதையே நாடும். ஆசை வளர்வது. நினைக்கு முன் அது மனம் முழுவதையும் பற்றிப் பிடித்துத் தன் வசப்படுத்திவிடும். ஆசைகள் தான் மாயை. ஆசைகள் தர்மங்களை ஒரு நொடியில் மறைத்துவிடும். தர்ம சிந்தனை மறைக்கப்பட்டால் பழிபாவங்கள் எதுவும் தெரியாது. பழிபாவங்களைத் தர்மம் என்று எண்ணும் மனதில் ஈஸ்வர சிந்தனை இராது. சமைக்கின்ற இடத்தில் இருப்பவனுக்கு அதன் வாசனையால் நாவூறும். வயிறாற உண்டுவிட்டு இருந்தாலும் அதன் வாசனையால் அதில் ஆசை உண்டாகும். அதுபோல உலகில் வாழும் மனிதர்களின் மனதில் அளவுக்கதிகமான ஈஸ்வர சிந்தனை இருந்தாலும் அவனுக்கு ஆசைகள் உண்டாகும். இந்த ஆசை தான் மாயை. இந்த மாயையை விலக்கினால் தான் மனிதர்கள் பரிபூரணர்களாவர்”. “குருவே, ஆசைகளை எப்படித்தான் விலக்கினாலும் அது மனதைத் தீவிரமாகத் தாக்குகிறது. அரண்மனையை விட்டு வெளியே வந்தவுடனேயே எனக்கு பட்டத்தரசியின் ஞாபகம் வந்துவிடுகிறது. இதை என்னால் தவிர்க்கமுடியவில்லை” என்றான் அரசன்.

“காமம் மிகுந்தவன் பெண்ணின் காலடியே தஞ்சம் என்றிருக்கின்றான். காமம் உலகில் உள்ள அனைத்தையும் மறைக்கும் கொடிய மாயையாகும்.

தர்மசிந்தனையை வளர்க்க விரும்புவோர் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையின்றி வாழவேண்டும். ஆசைகளுள் பெண்ணாசை கொடியது. பெண்ணாசை தர்ம சிந்தனைகள் எதையும் மனதில் எழவிடாது. பெண்ணாசை சிறிதாக மனதில் இருந்தாலும் அது ஓட்டைக் குடத்தில் இருந்து நீர் வெளியேறுவது போலத் தர்ம சிந்தனைகள் முழுவதையும் அகற்றிவிடும். காமம் உணவோடு தொட்டுக்கொள்ளும் ஊறுகாயைப் போல இருக்க வேண்டுமே தவிர உணவாக இருக்கக்கூடாது. உணவாக இருந்தால் அது எல்லாப் பாவங்களையும் செய்யவைக்கும்.” “உண்மை தான் சுவாமி, இதைத் தடுப்பது எப்படி?” என்று கேட்டான் அரசன்.

“நினைக்காமல் விடுவது தான் மறப்பதற்கு வழி. உனது தாயை நினை; உனது நாட்டை நினை; உனது நாட்டில் வாழும் மக்களை நினை; நாட்டை முன்னேற்ற நினை; மக்களை மகிழ்வுடன் வாழவைக்க நினை. இப்படித் தர்மமானவற்றை நினைத்தால் தீயவை மனதில் வராது. இதற்கு வைராக்கியம் வேண்டும். வைராக்கியம் வருவதற்குக் கடவுளின் அருள் வேண்டும். கடவுளை இடையறாது நினை. இப்படியான நினைவுகள் உனது மனதில் இருந்தால் உனது மனைவியின் நினைவு உனக்கு வராது. எதில் ஆசை கூடுகிறதோ அதை அடைய மனம் விரும்பும். உனது ஆசை நாட்டைப் பற்றியதாக இருந்தால் உனது மனைவியின் நினைவு வந்தால் கூட அதனால் உனக்குப் பாதிப்புக்கள் உண்டாகாது. மண்ணாசை கொண்டவன் தன் வாழ்நாள் முழுவதும் மண்ணாசையால் போராடி நிம்மதியிழந்து வாழ்க்கையை அனுபவிக்காது

துன்பப்பட்டு மண்ணுக்கிரையாகிறான். பெண்ணாசை பிடித்தவன் தனது பொருட்கள் முழுவதையும் பெண்ணின் காலடியில் கொட்டி நோயாளியாகி நிம்மதியிழந்து துன்பப்பட்டு இறந்து போகிறான். பொன்னாசை கொண்டவன் பொன்னைச் சேகரிப்பதில் இன்பங்கொண்டு அதைச் செலவு செய்யாது பௌத்திரப்படுத்தித் துன்பமாக வாழ்ந்து இறக்கிறான். இவர்கள் தேடிய சொத்துக்கள் யாவும் இவர்களுக்கோ, இவர்களது குடும்பத்தினருக்கோ சேராது அந்நியருக்கே சேரும். இதனால் இவர்களது வம்சமே துன்பப்படும். அறவானது சொத்துத் தேவைப்படும் போதெல்லாம் அவனது உதவும். அதைவிட அச்சொத்து அவனது வம்சத்தையும் காப்பாற்றும்” என்றார் சுவாமி. “சுவாமி, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் தான் துன்பங்களென்றால் அரசனான நான் அதைத் துறக்கலாமா?” என்று கேட்டான் மன்னன்.

“மண்ணையும் மக்களையும் காப்பாற்றுபவன் மன்னன். அவன் அவற்றைப் பற்றில்லாமல் அனுபவித்துக்கொண்டு நாட்டையாளவேண்டும். கொடிய மிருகங்களை வைத்து வித்தைகாட்டுவோர் அவற்றை அடக்கி வைத்திருப்பதைப் போல மன்னனும் கொடிய விலங்குகளான காமம், குரோதம் முதலியவற்றை அடக்கி வைத்திருத்தல் வேண்டும். மனதை அடக்கக் கற்றுக்கொண்டவனுக்கு மாயையால் ஆபத்து ஏற்படமாட்டாது. மன்னனின் பொருள் மக்கள். அதனால் தேவைக்கதிகமாகச் சேமிக்காது மக்களின் நலனுக்காகச் செலவு செய். மண்ணைப் பிடிக்கப் போர் செய்யாதே. உள்ள மண்ணை விருத்தி செய். பெண்களை

உனது சகோதரிகளாக நினை. இவ்வாறு நடந்தால் மனம் ஒருபோதும் குழம்பாது”. “மன்னா, நகரிலிருந்து மூன்று குடியானவர்கள் எனது ஆச்சிரமத்திற்கு அடிக்கடி வந்து போவார்கள். பலகாலமாக அவர்கள் இங்கு வரவில்லை. ஒரு நாள் கோயிலுக்குச் சென்றேன். கோயில் வீதியில் நின்ற வேப்பமர நிழலில் ஒருவன் காவியுடை தரித்து அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றி ஏராளமான மக்கள் நின்றார்கள். அவனின் சீடர்கள் ஒவ்வொருவரிடமும் பணம் பெற்றுக்கொண்டு அவனைச் சந்திக்கவிட்டனர். அவன் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான். ஏராளமான பணம் கிடைத்தமையால் அவனது குணம் மாறிவிட்டது. அடுத்தவன் உடல் முழுக்கப் புண்களுடன் அக்கோயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். என்னைக்கண்டதும், சுவாமி; “பெண்ணாசையால் என்னை நோய் பற்றிப்பிடித்துவிட்டது” என்றான். அடுத்தவனின் இரண்டு கைகளையும் காணவில்லை. அவன்; “சுவாமி மண்ணுக்கு ஆசைப்பட்டமையால் எதிரிகள் எனது கைகளைத் துண்டித்துவிட்டார்கள்” என்றான். ஒருவனது செல்வம், செல்வாக்கு, பெயர், கீர்ததி, தகுதி யாவும் இவ்வாசைகளால் கெட்டுப்போகும்.” “சுவாமி மாயையை அறிந்துகொள்வது எப்படி?” மன்னன் கேட்டான்.





 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:11 am

“ஆசைதான் மாயையின் வடிவம். ஆசைப்படுபவர்கள் எல்லோரும் மாயையின் பிடிக்குட்பட்டவரே. ஒருவனை மயக்குவதும் மாயை, அவனை உய்விப்பதும்

மாயை. மனிதனையும், இறைவனையும் பிரிப்பது ஆசை. ஆசையில்லாதவன் இறைவனோடு இரண்டறக்கலந்து விடுவான். ஆசையுள்ளவன் இறைவனை நினைக்கமாட்டான். இறைவனை நினைக்க மாயையான ஆசைகள் விடாது”.

“உலகத்தைப் பார். பெரிய வணிகனான பரஞ்சோதி என்பவனின் மூன்று கப்பல்கள் பலத்த காற்றினால் கடலுட் தாண்டுவிட்டன. பொருள் இருந்தால் தான் துன்பம் என்று நினைத்த பரஞ்சோதி துறவியாகி என்னுடன் இருக்கிறான். பணம் என்ற மாயை அகன்றதால் அவன் துறவியாகிவிட்டான். பெண்களிடம் சென்று வந்த வாதவூரன் தான் செல்லும் பெண் இன்னொருவனுடன் தொடர்புகொண்டிருப்பதைக் கண்டு எனது சீடனாகிவிட்டான். ஆசைகள் தான் மாயை என்றுணர்ந்தவன் மாயையை விலக்கிவிடுவான். அனைத்தும் துன்பங்களே என்று உணருபவன் தான் மாயையை விலக்குவான். இதனால் மாயை தான் மனிதனை இறைவனோடு சேர்க்கிறது. மனிதனுக்கு ஆசையை உண்டாக்கும் மாயை அவித்தை மாயையாகும். மனிதனை இறைவனோடு சேர்ப்பது வித்தியா மாயைiயாகும். மனிதனை ஆசைப்படச் செய்வது அவித்தை என்ற மாயை. மனிதனின் ஆசைகளை அறுப்பது வித்தியா என்ற மாயை. ஆசைகொள்ள வைத்தல், அவாக்கொள்ளச் செய்தல், கோபங்கொள்ள வைத்தல், பொறாமைப்பட வைத்தல் என்பன அவித்தை மாயையின் செயல்களாகும். ஞானம் பெற எண்ணல், பக்திகொள்ளல், வைராக்கியத்தை உண்டுபண்ணல், ஈஸ்வர சிந்தனையை உருவாக்குதல், அநீதியான செயல்களுக்கு அஞ்சுதல் போன்ற தன்மைகளை உண்டு பண்ணுவது வித்தியா

மாயையின் செயல்களாகும். இவற்றைக் கொண்டு மாயையின் தன்மைகளை நீ அறிந்துகொள்ளலாம்” என்றார் நமசிவாயம் சுவாமிகள். “சுவாமி, அகங்காரம் தான் அனைத்திற்கும் காரணி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அகங்காரமும் மாயையின் வடிவம் தானே?” என்று கேட்டான் அரசன்.

“ஆசைகளை எப்பாடுபட்டாவது தீர்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தலே அகங்காரமாகும். தர்மத்தை மறைப்பது அகங்காரமே. “நான்” என்பது மறைந்தாலொழிய அகங்காரம் நீங்காது. அகங்காரம் நீங்காவிட்டால் மரணமும் பிறப்பும் தொடர்ந்;து கொண்டே இருக்கும். நான் அழிந்தால் மாயையும் அழியும். புகழை அடைய விரும்புபவர்களும் மாயையால் பீடிக்கப்பட்டவர்களேயாவர். மன்னா, வேலூர் என்ற நாட்டில் பரமசிவதேசிகர் என்ற ஒர் அறிஞர் இருந்தார். அவர் வடமொழியில் பாண்டித்தியம் பெற்றவர். அதனால் வேலூர் அரசன் அவரைத் தனது அரசசபை அறிஞராக நியமித்திருந்தான். ஒரு நாள் ஒரு வணிகன் அரசசபைக்கு வந்து அரசனைப்; பணிந்து அவன் காட்டிய ஆசனத்தில் அமர்ந்தான். அவன் சேனாதிபதிகளையும் முதலமைச்சரையும் மதித்துப் பணிந்தான். பரமசிவதேசிகரை அவன் கண்டுகொள்ளவில்லை. அது பரமசிவதேசிகருக்குச் சினத்தை உண்டாக்கியது. அவனைப் பழிவாங்க நினைத்தார். வணிகன் அரசனுடன் தனது வர்த்தகம் சம்பந்தமாகப் பேசிவிட்டு எழுந்தான். அப்பொழுது அரசன்; “மணிமாறா, இன்னும் சற்று நேரத்தில் கவிதைப்போட்டி நடைபெறவுள்ளது.

அதைக்கேட்டுவிட்டுப்போ. நமது பேரறிஞர் பரமசிவதேசிகர் தலைமை தாங்குகிறார்” என்றான”;. “அரசே, வேலையில்லாதவர்கள் தான் இப்படியான போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மன்னர் கலைஞர்களின் வாழ்வு வளம்பெற நிதி கொடுத்தல் வேண்டும். அது போல வணிகர்களும் கொடுத்தல் வேண்டும். எனது வீட்டிற்குப் பலபுலவர்கள் வருவார்கள். நான் நிதியும், பொருளும் கொடுப்பேன். ஏழை எளியவர்களுக்கும், கோயில்களுக்கும் நிதி கொடுப்பதற்காக நான் உழைத்தல் வேண்டும்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்”. “வணிகன் அரசனின் நண்பனாகையால் அரசன் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் சபையில் அந்த வணிகன் வேலையற்றவர்கள் தான் இப்படியான போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று சொன்னது பரமசிவதேசிகருக்குப் பிடிக்கவில்லை”. “சபை கலைந்த பின் சபையில் இருந்த பல புலவர்கள் பரமசிவதேசிகரைச் சந்தித்து வணிகனின் செருக்கை அடக்கவேண்டுமென்றுகூறித் தேசிகருக்கு இல்லாதவற்றை எல்லாம் கூறினர்”. “தேசிகர் வணிகனைப் பழிவாங்க நினைத்தார். அதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தார். அன்று மன்னனின் திருமணநாள். வணிகன் காலையில் வந்து தனது நண்பனான அரசனைச் சந்தித்து வாழ்த்தி அரசனுக்கும் அரசிக்கும் பெறுமதி மிக்க வைரநகைகளைப் பரிசளித்துவிட்டுச் சென்றான்”.

“பரமசிவதேசிகர் சபைதொடங்கும் நேரம் வந்தார். மக்களும் புலவர்களும் மகிழ்வுடன் அவரை வரவேற்றுப் புகழ்ந்தனர். அப்போது கவியரங்கம் தொடங்கியது. அரசன் பட்டத்தரசியின் விருப்பத்திற்கமைய வெளியே செல்லப் புறப்பட்டான்”. பரமசிவதேசிகர் மன்னனிடம் ஓடிவந்து; “அரசே, இன்று தங்களின் திருமண நாள். அதனால் புலவர்கள் தங்கள் புகழைப்பாட வந்துள்ளனர். நான் ஓர் அருமையான கவிதை எழுதியுள்ளேன்…” என்று தேசிகர் முடிக்குமுன் அரசன் சொன்னான்; “மணிமாறன் கூறியது போல வேலை இல்லாத நேரங்களில் தான் கவிதைகளை இரசிக்கலாம்…” என்று சிரித்தவாறு கூறிவிட்டுச் சென்று விட்டான்”. “தேசிகருக்கு அவமானமாக இருந்தது. மன்னன் கூறியதைக்கேட்டுச் சபை பலமாகப் பல நிமிட நேரம் சிரித்தது”. “தேசிகரின் முகவாட்டத்தைப் புரிந்துகொண்ட குதிரைப்படைத் தளபதி குமரேசன் தேசிகரை நாடிவந்து சொன்னான்; “தேசிகரே, எந்தப் பெரிய புலவர் நீர். உம்மை அவமதிப்பது தமிழை அவமதிப்பதற்குச் சமம். இப்போ மன்னருக்கென்ன அவசர வேலை. மணிமாறனுடன் தான் எங்கோ செல்லப்போகிறார். அதைவிட அரசனின் வார்த்தைகளைப் பார்க்கும் போது இனிச் சபையில் கவிதைகள் அரங்கேறாது போலத்தெரிகிறது. மொழிப்பற்றும், கலையுணர்வும் இல்லாத மணிமாறனோடு சேர்ந்தால் எப்படி இருக்கும்?” என்றான்”.

“தேசிகரின் உடல் எரிந்தது. அன்றிரவு தேசிகரும் குமரேசனும் இரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர்”. “தேசிகரே, உமது அறிவென்ன? ஞானமென்ன?, அதை எழுத்தே தெரியாத மணிமாறன் பரிகசித்ததை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்” உறுமினான் குமரேசன். “தேசிகருக்கு மகிழ்ச்சியாக இருந்தது; “மணிமாறனுக்கு மட்டுமல்ல மன்னருக்கும் பாடம் புகட்ட வேண்டும். புகழ்பெற்ற கலைஞர்களை அவமதித்தால் பெருங்கேடுவருமென்பதை உணர்த்துதல் வேண்டும்” என்றார் தேசிகர்”. “தனது திட்டத்தை நிறைவேற்றத் தகுந்த ஒருவர் கிடைத்ததை நினைத்து மகிழ்ந்தான் குமரேசன்”. “அதன் பின் இருவரும் அடிக்கடி சந்தித்தனர். அவர்களது சந்திப்பை அறிந்த மன்னன் அவர்களை ஆராய ஒற்றர்களை நியமித்தான்”. “சில தினங்களின் பின் மன்னரைக் கொல்லச் சதி செய்தனர் என்று இருவரும் கைது செய்யப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டனர். புகழால் ஏற்பட்ட அகங்காரமே தேசிகரின் உயிருக்கு உலை வைத்தது” என்றார் நமசிவாயம் சுவாமிகள். “சுவாமி, அகங்காரத்தைப் போல வேறு எவையெவை மாயையாகி வந்து மனிதனைக் கெடுப்பவை?” என்று கேட்டான் மன்னன்.

“கல்வி, ஞானம், அறிவு, பணம் இப்படி மனிதன் எவையெவையில் ஆசைகொள்கின்றானோ அவையெல்லாம் மனிதனைச் தர்மசிந்தனைகளிலிருந்து அன்னியப்படுத்தும் கல்வியாளர்கள் தாம் தாம் அறிஞர்களென்றும், தம்மை விட வேறு எவருக்கும் அறிவு இல்லையென்றும் கருதுவார்கள். இதனால் அவர்கள் அறிஞர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் அன்னியப்படுத்தப்படுவார்கள். அறிவு என்பதற்கு வரைவிலக்கணம் கூறுவது கடினம். அத்துடன் ஒரு துறையில் அறிவுள்ளவனுக்கு மற்றத்துறைகள் தெரியாது. அவன் தான் அறிந்த துறையைப் பற்றியும் பூரணமாக அறிந்துகொள்வதில்லை. நாம் சந்திக்கும் ஒவ்வொரு உயிரின் நடத்தையையும் கூர்ந்து அவதானித்தால் பல அனுபவங்களைப் பெறமுடியும். பல துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கடற் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர். மிகவும் பெரியதொரு கப்பலை ஒழுங்கு செய்து புறப்பட்டனர்”. “கப்பலில் சகல வசதிகளும் இருந்தன. எல்லோரும் மிகவும் குதூகலமாக ஆடிப்பாடியபடி சென்றனர்”;. “கப்பலில் சில சிப்பந்திகள் வேலை செய்தனர். அவர்களைக் கப்பலில் சென்றோர் தமது வேலைகளைச் செய்யும் கூலிகளாகவே கருதினார். அதனால் அவர்கள் வேலை செய்பவர்களை மதிக்கவில்லை”.

“நடுக்கடலில் கப்பல் சென்ற போது பலத்த காற்று வீசத் தொடங்கியது. அது சிறிது நேரத்தில் சூறாவளியாக மாறியது. கப்பலில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் பழுதடைந்தன. கப்பல் காற்றின் வேகத்திற்குத் தாக்குப் பிடிக்காது பலதிசைகளிலும் செல்லத் தொடங்கியது”. “பயணம் செய்தவர்கள் மிகவும் பயந்தனர். ஆனால் கப்பலில் வேலை செய்வோர் குதூகலத்துடன் இருந்தனர்”. “உங்களுக்குப் பயமில்லையா…?” தத்துவப் பேராசிரியர் கேட்டார்”. “வாழ்க்கை நிலையில்லாதது. உடம்பில் எங்கோ ஒளித்திருக்கும் உயிர் யாருக்கும் தெரியாமலேயே போய்விடும். இது தெரியாத மக்களெல்லாம் வாழ்க்கை நிலையானது என்கிறார்கள்” என்று கூறிக்கொண்டு வந்தீர்கள். எப்போது போவதென்று தெரியாத உயிர் இப்போதே போகட்டுமே. நிலையில்லாத வாழ்க்கையை நிலையானதென்று நினைப்பவர்கள் மடையர்கள்” என்றான் அந்த ஊழியன்;”. “நடுநடுங்கினார் விஞ்ஞானி. “நான் எனது ஆராய்ச்சியின் மூலம் பல புதுமைகளைச் செய்துள்ளேன். விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் மூலம் வானவெளியில் உலாவுகிறார்கள். ஓரிரு மணித்தியாலங்களில் உலகையே வலம் வந்துவிடுகிறார்கள். பிறப்பிலும் புதுமைகள் செய்கிறார்கள். அவர்களால் முடியாதது எதுவுமில்லை” என்று சொன்னீர்கள். இப்பொழுது இந்தப் புயலை நிறுத்துங்கள் பார்ப்போம் என்றான் இன்னொருவன்”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:11 am


“மற்றவன் பொறியியலாளரைப் பார்த்துக் கேட்டான்; “ஐயா, நீங்கள் புதிய பல இயந்திரங்களைச் செய்து மக்களின் பாவனைக்கு விட்டதாகச் சொன்னீpர்;கள். இப்பொழுது பழுதடைந்த இந்தக் கப்பலின் இயந்திரங்களைத் திருத்துங்கள்”. “கற்றவர்கள் எல்லோரும் தாம் தாம் அறிவானவர்கள், உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கர்வப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. தத்துவத்தைக் கற்றவர் அதன் உண்மையான நிலையைப் புரிந்து கொண்டால் அவர் சஞ்சலப்படாது இருந்து மற்றவர்களைத் தைரியப்படுத்தியிருப்பார். கற்றவர்களில் பெரும்பாலனவர்கள் தம்மறிவின் மூலம் மற்றவர்களை ஏமாற்றித் தாம் வாழநினைக்கிறார்கள். சாஸ்திர ஞானம் வாழ்விற்கு உதவாதென்று நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் பாமரரை விடக் கீழானவர்களாகிறார்கள்.

நாம் பெரிதாகப் படிக்கவில்லை. ஆனால் இயற்கையைப் புரிந்து வைத்திருக்கின்றோம். அதனால் நாம் பெரும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் கடவுளின் மேலுள்ள நம்பிக்கையினால் மகிழ்வுடன் இருக்கின்றோம். வடக்கே மேகம் கறுத்திருப்பதும், வடக்கிலிருந்து காற்று வீசுவதும் ஆபத்தைத்தராது. பலமாகக் காற்று வீசியதால் மேலெழும்பிய நீர் இயந்திரத்துள் சென்றுவிட்டது. அதைத் திருத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்றான் ஒருவன்”. “விஞ்ஞானிக்குப் பயமாக இருந்தது. எனினும் தான் பெரிய விஞ்ஞானி என்று கதைத்துவிட்டேன். இந்த ஊழியனிடம் நிலைமையைப் பற்றிக் கேட்டால் அவன் என்னைக் குறைவாக நினைப்பான்” என்று நினைத்தார்”.

“அறிஞர்களே பயப்படாதீர்கள். காற்றின் வேகம் குறைந்துகொண்டு வருகின்றது. அதனால் ஓரிரு மணி நேரத்துள் காற்று நின்றுவிடும். அத்துடன் மேற்குவானம் வெளித்துக்கொண்டு வருகின்றது. மேற்கு வெளுத்தால் ஆபத்தில்லை” என்றான் ஒருவன்”;. “வானியல் நிபுணர் இதுவரை கிரகங்களைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்தவர். அவர் அவனைப் பார்த்துக் கேட்டார்; “வானிலையைப் பற்றி நீ படித்தாயா?” “எனக்கு எழுத வாசிக்கத் தெரியாது ஐயா. இந்த வேலையில் சேர்ந்த பின்பு என்னுடன் வேலை செய்யும் மூத்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு மனிதர்களும் தாம் தாம் செய்யும் தொழிலைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளல் வேண்டும். இதை விட உலக வாழ்விற்குத் தேவையானவற்றையும் கற்றுக்கொள்ளல் வேண்டும். பொதுவாக மனிதர்கள் எல்லோரும் நீச்சல் கற்றுக்கொள்ளல் வேண்டும். நீச்சல் உடலுக்கு நல்ல பயிற்சி. எழுத்தறிவில்லாத மிருகங்களுக்குக் கூடப் பயிற்சியளித்து நுட்பமான வேலைகளைச் செய்விக்கலாம். எரிமலை, நில நடுக்கம் போன்றன நிகழும் பகுதிகளில் உள்ள விலங்குகள் அதை முன்கூட்டியே அறிந்து வெளியேறிவிடுகின்றன. இன்று காற்று வீசும் என்று எமக்குத் தெரியும்…” கதைத்துக் கொண்டிருக்கும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர் அவ்வறிஞர்கள்”.

“அவன் அவர்களைக் கவனிக்காது கதைத்துக் கொண்டிருந்தான்; “கடல் என்றுமில்லாதவாறு அமைதியாக இருந்தது. கடலுள் மீனினங்களைக் காணவில்லை. பறவைகள் எவையும் இரைதேடி கடலுக்குள் இறங்கவில்லை. அதனால் நாம் காற்றை எதிர்பார்த்து அதற்கான முன்னாயத்தங்களுடன் தான் வந்தோம்” என்று கூறிவிட்டு நிறுத்தியவன் சில நிமிடங்களின் பின் கேட்டான்; “உங்களுக்கு நீந்தத் தெரியுமா…? அவர்கள் எதுவும் பேசாததால் அவனே தொடர்ந்து சொன்னான்; “மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் நீந்தத் தெரியும். நீந்துவது பெரிய வேலையல்ல. எவ்வளவோ படித்த நீங்கள் சிறிது பயிற்சியெடுத்திருந்தால் பழகியிருக்கலாம். தற்செயலாகக் கப்பல் கவிழ்ந்தால் நாமெல்லோரும் நீந்தித் தப்பிவிடுவோம். அறிஞர்களான நீங்கள் இறந்துவிடுவீர்கள். அதனால் நாட்டிற்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெரும் துன்பமேற்படும்” என்றான் அவன்”.

“மன்னா, ஆசைகள் உள்ளவர்களுக்கும், அகங்காரம் உள்ளவர்களுக்கும் மெய்யறிவு உண்டாகாது. அதுபோல உலகப் பற்றுக்களால் பந்தப்பட்ட மனமுடையவர்களுக்கு மெய்ஞானம் உண்டாகாது. மனத்தைப் பரிசுத்தமாக்கும் அறிவு தான் மெய்யறிவு. மெய்யறிவின் மூலம் மெய்ஞானம் உண்டாகும். கற்றவர்களுக்குத் தாம் கற்றவற்றில் நல்ல பரிட்;சயம் இருக்கலாம். அதனால் அவற்றைத் திரும்பத் திரும்பத் சொல்வதால் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது. கற்றவற்றை அனுபவத்திற்குக் கொண்டு வந்து கற்றபடி நடத்தல் வேண்டும். அப்படியில்லாத

அறிவால் பயனோ ஞானமோ வராது. கற்றவர்கள் மற்றவர்களைக் கவரும்படியாகப் பேசுவார்கள்; நம்பும்படியாகப் பேசுவார்கள்; உண்மை நிலையை உணரும்படி பேசுவார்கள். ஆனால் அவர்கள் பேசுபவற்றை அனுபவித்தறிந்து கைக்கொள்வதில்லை. அப்படியான உபதேசங்களால் பயனில்லை.” “காட்டு வழியாக ஒரு குழுவினர் பயங்காரணமாக “சிவாயநம, நமசிவாய” என்று பலமாக உச்சரித்துக் கொண்டு சென்றனர். அவர்களின் முன் சிங்கம் ஒன்று வந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் சிவனின் நாமத்தை மறந்தனர். “ஐயோ சிங்கம் தப்பி ஓடுங்கள்” என்று சிலரும்; “பயப்படாதீர்கள் கையில் அகப்பட்டவற்றை எடுத்துத் தாக்குங்கள்” என்று சிலரும் கூச்சலிட்டனர். தமக்கு மிருகங்களால் ஆபத்துக்கள் வரக்கூடாது என்று எண்ணிச் சிவனின் நாமத்தை உச்சரித்தவர்கள் ஆபத்து வந்ததும் அதை மறந்து தம்மில் நம்பிக்கை கொண்டனர். ஆபத்தான வேளைகளில் கடவுள் உதவுவார் என்ற சிந்தனை எவருக்கும் வரவில்லை. இது தான் மனிதனின் நிலை.”

“வாயால் கடவுளின் நாமங்களைச் சொல்வதால் நம்பிக்கைவராது. நம்பிக்கை வரவேண்டுமானால் கடவுளிடம் எம்மை ஒப்படைத்தல் வேண்டும். கடவுளின் கிருபையைப் பெறவேண்டுமானால் நாம் படித்தவற்றை நம்பவேண்டும்; கற்றபடி நடத்தல் வேண்டும். கல்விச் செருக்கும், செல்வச் செருக்கும் உள்ளவர்களுக்கு ஒருபோதும் மெய்யறிவு உண்டாகாது. மெய்யறிவு உண்டானவனுக்கு எதிலும் வேறுபாடு தெரியாது. நிறக்குருடு உள்ளவனுக்கு நிறங்களின் பேதம் தெரியாதது போல மெய்யறிவு உள்ளவனுக்கு உயர்வு தாழ்வு போன்ற பேதங்கள் தெரியாது. மெய்யறிவுள்ளவன் மெஞ்ஞானியாக இருப்பான்; அதனால் அவன் குருடனாக இருப்பான்; செவிடனாக இருப்பான்; அவன் ஊமையாகவும் இருப்பான். நெருப்பு நெருப்பு என்று ஆயிரம் தடவைகள் சொன்னாலும் நெருப்புச் சுடாது. அதுபோல ஆயிரம் புத்தகங்களை வாசித்தாலும் மெய்யறிவு வராது”. “ஒரு முறை தான் தான் பெரிய அறிஞன் என்று சொல்லிக்கொண்டிருப்பவன் என்னிடம் வந்தான். நான் பேசியவை எல்லாவற்றையும் தான் பல்வேறு நூல்களில் இருந்து அறிந்துகொண்டதாகக் கூறினான். மதங்கள் மாயையைப் பற்றிப் பல்வேறு விதமாகக் கூறுகின்றன. அறுவகைத் தரிசனங்கள் உள்ளன. இந்த அறு வகைத் தரிசனங்களும் மாயை பற்றிப் பல்வேறு விதமாகக் கூறுகின்றன. சாங்கிய தரிசனம் பிரபஞ்சத்தின் உற்பத்திக்கு மூலகாரணமாக இருப்பது பிரகிருதி என்று சொல்கிறது” என்றேன். வந்தவன் அது பற்றித்தான் அறிந்துள்ளதாகக் கூறினான். அருகில் இருந்தவர்களுக்கு அவனைப் பற்றித் தெரியும். அதைக் கவனிக்காது நான் தொடர்ந்து சொன்னேன். „பிரகிருதியைப் பற்றியும் உலக உற்பத்தியைப் பற்றியும் “சாங்கிய காரிகை” என்ற நூல் விபரமாகக் கூறுகிறது என்று சொல்லும் போது அவன் சொன்னான்; “சாங்கிய காரிகையை நான் பலமுறை படித்துள்ளேன்”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:12 am


“அப்படியா? மிகவும் நன்று. சாங்கிய காரிகை என்ற நூலின் ஆசிரியர் யார்? என்று கேட்டேன் அவன் வாய் திறக்கவில்லை. மற்றவர்கள் அறிந்ததை விடத் தாம் கூடுதலாக அறிந்துள்ளோம் என்று எண்ணுபவர்களுக்கும் மெய்யறிவு உண்டாக மாட்டாது. இதுவும் மனிதனது முன்னேற்றத்தை மறைக்கும் மாயையாகும். இப்படியானவர்கள் தம்மைச் சந்திப்போரிடமெல்லாம் தமது வித்துவத்தைப் பற்றி அளவுக்கதிகமாகக் கூறுவார்கள். மெய்யறிவு உள்ளவர்கள் நூல்கள் பலவற்றைக் கற்று அதன்படி நடந்த போதும் தமது வித்துவத்தன்மையைப் பற்றி வாய் திறந்து எதுவும் சொல்லமாட்டார்கள்”.

“கோழி ஒன்று தனது குஞ்சுகளுக்கு இரையைக் காட்டிவிட்டுச் சுற்றுச் சூழலை அவதானித்தது. காகம் ஒன்று பறந்து வந்து மரக்கொப்பில் இருந்தது. தாய்க்கோழி; “அவதானமாக இரைதேடுங்கள்” என்று சொல்லிவிட்டு காகத்தை அவதானித்தது. கோழி எச்சரிக்கையானதை அறிந்த காகம் குஞ்சுகளைப் பிடிக்க முடியாதென்று நினைத்துப் பறந்து போனது. அதன் பின் பருந்து ஒன்று பறந்து வந்து மரத்தில் இருந்தது. தாய்கோழி குஞ்சுகளைச் செடிக்குள் மறைந்திருக்கச் சொன்னது. அதன் பின் கழுகு ஒன்று வானில் வட்டமிட்டது. உடனே தாய்க்கோழி குஞ்சுகளை அழைத்துக்கொண்டு பற்றைக்குள் சென்று மறைந்தது. தன்னிலும் பார்க்கப் பலமில்லாதவன், தனது பலத்திற்குச் சமமாக இருப்பவனுடன் எச்சரிக்கையாக இருந்ததால் போதும். தன்னிலும் பலமுள்ளவனைக் கண்டால் ஒதுங்கிவிடவேண்டும். அது தான் மெய்யறிவுள்ளவனின் தன்மை”.

“சுவாமி, அப்படியானால் நூல்களின் பயன் என்ன? “மன்னன் கேட்டான். “நூல்கள் யாவும் மனிதனது மேம்பாட்டிற்காகவே எழுதப்பெற்றன. சாஸ்த்திரங்கள் யாவும் இறைவனை அடையவேண்டிய வழியைக் காட்டுகின்றன. ஒருமுறை அவற்றை விளங்கிக் கற்றுவிட்டால் மீண்டும் அதைக் கற்க வேண்டிய தேவையில்லை. பண்டிதர் பரந்தாமன் பல்வேறு வகையான நூல்களைக் கற்றவர். கற்ற படிதானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழும்படி உபதேசிக்கிறவர். இரண்டு பேர் வேலூருக்குச் செல்ல விரும்புகின்றனர். அவர்கள் அவ்வூருக்குச் சென்ற சிலரை அணுகி அவ்வூருக்குச் செல்லும் பாதையைப் பற்றி அறிகின்றனர். அவ்வூரைப்பற்றி அறிகின்றனர். அவர்களின் நடைமுறைகளைப் பற்றி அறிகின்றனர். அதன் பின் அவ்வூருக்குச் சென்று வந்தனர். அதன் பின் அவர்கள் அவ்வூருக்குச் செல்லவேண்டியவர்களுக்கு மட்டும் வழியைக் கூறுகின்றனர். இது போன்றது தான் நூல்களும். ஒருமுறை வாசித்து அதன் உட்பொருளை அறிந்தவன் அதன் பின் அந்நூலைத் திரும்பவும் வாசிக்கத்தேவையில்லை. அறிவில்லாதவன் தான் திரும்பத் திரும்ப வாசிப்பான். நூல்களின் பயன் அதன் பொருளிலேயே தங்கியுள்ளது. அதன் பொருளை விளங்கி அதன்படி நடப்பவன் தான் அறிவாளி. அவன் தான் மெய்மையான அறிவுள்ளவன்” என்றார் சுவாமி. “சுவாமி, மெய்யறிவு நூல்களைப் படிப்பதால் உண்டாகுமா? அல்லது நூல்களைப் படித்தவர்களிடம் கேட்பதினால் உண்டாகுமா?” மன்னன் கேட்டான்.

“மன்னா, அறிவுள்ளவன் நூல்களைப் படித்தும் அறிவைப் பெறுவான். அதுபோல குருவிடம் கேட்டும் அறிவைப் பெறுவான். குருவிடம் கேட்டு விட்டு அவர் கூறியவற்றை நூல்களில் படிப்பது சிறந்தது. பண்டிதர் பரந்தாமனிடம் பல மாணவர்கள் கற்று வந்தனர். ஆருரன் என்ற மாணவன் பண்டிதரிடம் கற்ற பின்பு பல நூல்களைத் தேடிக்கற்று வந்தான். ஒரு சொல்லுக்குப் பல கருத்துக்கள் உண்டு. அந்தக் கருத்து வேறுபட்டும் காணப்படும். உனது தந்தையின் காலத்தில் ஒரு அகங்காரமுள்ள பண்டிதன் சபைக்கு வந்து தன்னுடன் மெய்ப்பொருள் பற்றி வாதாடும்படி கேட்டான் அப்பொழுது சபையில் பண்டிதர் பரந்தாமனும் இருந்தார். வந்தவன் பேரறிஞன். வுhதம் தொடங்கியதும் அவையில் உள்ள அறிஞர்களைத் தேவையில்லாமல் இகழ்ந்துகொண்டிருந்தான் அவன். பண்டிதர் பரரந்தாமனுக்கு வியர்த்தது. அவர் பயந்தமையால் தடுமாறிக்கொண்டிருந்தார். இதை ஆரூரன் கண்டுகொண்டான். வந்தவன்; “உங்கள் நாட்டில் பெரும் அறிவாளியும், பேரறிஞன் என்றும் சொல்லிக்கொள்பவரான பண்டிதர் பரந்தாமன் ஏன் பேசாமலிருக்கிறார். அவர் பேசட்டும்” என்றான். அப்பொழுது ஆரூரன் எழுந்து சொன்னான்; “இது பற்றிப் பேச எமது குரு தேவையில்லை. அதோ அந்தக் குடியானவனே போதும். அவன் பண்டிதர் எமக்குக் கற்பிக்கும் போது தூர இருந்து கேட்பவன். அவன் கூறுவான்” என்றான் ஆருரன்”.

“வந்தவன் சற்றுத்திடுக்கிட்டான். திரும்பி அந்தக் குடியானவனைப் பார்த்தான். அவன் நான்கு விரல்களையும் மடித்து வைத்துக்கொண்டு சுட்டுவிரலை உயர்த்திக் காட்டினான். வந்தவனுக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும் புரியவில்லை என்று சொன்னால் தன்னைக் கேவலமாக நினைப்பார்கள் என்று நினைத்தான். அப்பொழுது ஆரூரன்; விளக்கம் தரவேண்டுமா…?” என்று கேட்டான்; “வேண்டாம், வேண்டாம்” எனக்குப் புரிந்து விட்டது. பண்டிதர் மெய்யறிவுள்ளவர் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்றான்.” “தர்க்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது பண்டிதரின் சீடனொருவனை ஆரூரன் அழைத்துச்சென்று மற்ற விரல்களை மடித்துக்கொண்டு சுட்டு விரலை உயர்த்திக்காட்டு. அவர் ஏதாவது சொன்னால் எதுவும் பேசாமல் விம்மி விம்மி அழு. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினான். மன்னா, கேட்பது சுவையைத் தரும். கற்பது அறிவைத் தரும். அதனால் குருவிடம் கேட்டுவிட்டுக் கற்பது தான் சிறந்தது”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:12 am


“ஒரு போலிச் சந்யாசி மக்களை ஏமாற்றிப் பிழைத்து வந்தான். அவனது ஏமாற்று வார்த்தைகளை மக்கள் மறுபேச்சின்றி நம்பினர். அவனது சீடர்கள் பலர் உள்ளுரிலும் வெளியூர்களிலும் சென்று மக்கள் கூடுமிடங்களில் தமது குருவைப்பற்றிப் பெருமையாகக் கூறுவர். அதை மக்கள் நம்பி அவரது ஆச்சிரமத்திற்கு வருவார்கள். ஊரில் நடப்பவற்றை அவர்கள் அறிந்து வந்து குருவுக்குக் கூறுவார்கள். குரு அவர்கள் கூறியதைக் கூறுவார். அதனால் மக்களுக்கு நம்பிக்கை உண்டானது. ஒரு நாள் வேற்றூரிலுள்ள பெரிய தனவந்தன் ஒருவனின் புதல்வனுக்கு நாகம் தீண்டிவிட்டது. அவன் தமது மகனை வைத்தியரிடம் கொண்டு சென்றான். அவர்களுடன் வைத்தியரின் வீட்டிற்கு மக்கள் பலர் சென்றனர்.

அவர்களோடு போலிச்சாமியாரின் சீடர்கள் பரதேசிகளைப் போலச் சென்றனர். அவர்களுக்கு வைத்தியர் சொன்னவற்றை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். பின் அத்தனவந்தனை அணுகி தமது குருவைப்பற்றி புகழ்ந்து கூறினர்; “ஐயா, நாவலூரில் அருணாசலம் என்றொரு சுவாமியார் இருக்கிறார். அவர் முக்காலமும் உணர்ந்தவர். அவரைச் சென்று தரிசியுங்கள். எல்லாம் நல்லபடி முடியும். சென்றவாரம் மரத்தால் விழுந்த ஒருவனை அழைத்துக்கொண்டு சுவாமியிடம் வந்தனர். சுவாமி மந்திரித்துத் திருநீறு கொடுத்ததும் அவனுக்குச் சுகமாகிவிட்டது” என்றனர்”;. “அதனை நம்பிய அந்தத்தனவந்தன் சுவாமியைச் சந்திக்க வந்தான். பரதேசிகள் போலச் சென்றவர்கள் காவி உடுத்து நீறும் உருத்திராக்கமாலையும் அணிந்து பெரும் சிவபக்தர்களைப் போல இருந்தனர். தனவந்தன் வந்ததும் அந்தப் போலிச்சுவாமியார் சொன்னார்; ”மகனே, நீ ஓர் உயிர் வாழ்வுக்காக போராடிக்கொண்டிருப்பது பற்றிக் கேட்க வந்துள்ளாய். இந்தா நீறு. திருஞானசம்பந்தப் பெருமானின் கோளறு பதிகத்தைத் தினமும் படி. ஆலகால விடத்தை உண்ட நீலகண்டன் உனது மகனின் நஞ்சை ஏற்பான். கலங்காதே மகனே சிவமிருக்கப் பயமில்லை. இந்த நீறை மகனின் உடலெங்கும் பூசு. பத்துத் தினங்கள் கழிய மகனுடன் வா” என்றார்.”

“தனவந்தனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இப்போது அவனும் மகனும் அந்தப் போலிச்சுவாமியாரின் ஆச்சிரமத்திற்குத் தினமும் வந்துசெல்கின்றனர். அந்த ஆச்சிரமத்தில் தினமும் பஜனை நடைபெறுகின்றது. தேவார திருவாசகப் புத்தகங்கள் அச்சடித்து விற்பனை செய்யப்படுகிறது. இது அவர்களின் உழைப்புத்தான். ஆனால் மக்கள் அதை உண்மையென நம்பித் தினமும் நீறணிகின்றனர். உருத்திராட்ச மாலை அணிகின்றனர். இறைவனை வழிபடுகின்றனர், இறைவனின் புகழை விதந்து படிக்கின்றனர். தேவார திருவாசகங்களை மனனஞ் செய்து ஓதுகின்றனர். தமது பணத்தேவைக்காக அவர்கள் செயற்பட்டாலும் மக்களை இறைவழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுத்தி ஒழுக்க சீலராக வாழவைக்கின்றனர்.

போலியான வாழ்வும் ஏமாற்று வித்தைகளும் கூட மக்களிடம் மெய்யுணர்வைத் தூண்டும். அந்தப் போலிச்சுவாமியும் சீடர்களும் ஒரு ஞானியைப் போல மேலான அறிவையும் புத்திவன்மையையும் கொண்டு மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து லௌகீக வாழ்க்கையை நடத்தினாலும், அவர்கள் அப்படி ஏமாற்றுவதற்காக இறைவனைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். அவர்களது முயற்சிகள் ஆன்ம விடுதலைக்கு உதவாவிட்டாலும் ஏராளமான மக்களின் இறையுணர்வைத்தூண்டி விடுகிறது. அவர்கள் கடவுளுக்காக வழிபாடோ, கிரியைகளோ செய்யாமல் தமது தேவைகளுக்காகச் செய்தாலும் அது பெரும் பயனுடையதாகவே இருக்கும்”.

“அந்தத் தனவந்தன் எச்சில் கையால் கூடக் காகங்கலைக்காதவன். தான தருமம் செய்யாதவன். ஆனால் போலிச்சுவாமியார் தனது ஆச்சிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுமாறு கூறுவார். ஏழை எளியவர்களுக்கு உடுதுணிகளை வாங்கிக் கொடுக்குமாறு கூறுவார். இதனால் ஆச்சிரமத்திற்கு வரும் பக்தர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. அதனால் போலிச்சுவாமியாருக்கு வருமானம் அதிகரித்தது. மக்கள் அந்தத் தனவந்தனைப் புகழ்ந்தனர். இதனால் அத்தனவந்தன் தர்மம் செய்வதில் பெரும் அக்கறை கொண்டான். அந்த வணிகன் அதன் பின் போலிச்சாமியார் கூறாமலே விசேட தினங்களில் அன்னதானஞ் செய்தான். அத்துடன் அந்தப் போலிச்சுவாமியின் மகிமைகளைப் பற்றி தனது தனவந்த நண்பர்களுக்குக் கூறினான். அவர்கள் அன்னதானமடம் ஒன்றை அமைத்து, அவர்களும் அன்னதானம் செய்தனர். ஆசைகள் அவாக்கள் கொண்ட அசுத்தாத்மாக்களின் இருதயத்தில் தர்ம சிந்தனைகள் இருப்பதில்லை. அப்படியான ஆன்மாக்களின் இதயத்தைப் புனிதப்படுத்துபவன் போலியான குருவாக இருந்தாலும் அவன் போற்றப்பட வேண்டியவனே. இருப்பினும் அவன் தன் வாழ்நாள் முழுவதும் போலியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான்”.

“போலியான வாழ்க்கை பேராபத்தை உண்டு பண்ணும். அந்தப் போலிச்சுவாமியார் பெரும் தனவந்தனாகிவிட்டார். அதனால் அவர் குடும்பத்தனாக மாறவிரும்பினார். அதற்கான தருனத்தை எதிர்பார்த்திருந்தார். அந்த ஊர் அரசனின் மகள் போலிச்சுவாமியாரின் பெரும் பக்தை. அவளின் அழகு போலிச்சுவாமியாரை மயக்கியது. அவளைத் திருமணம் புரிந்தால் தான் அந்த நாட்டிற்கு அரசனாக வரலாமென்று நினைத்தார். தனது காதலை அவளிடம் சொன்னார். அவள் ஏற்கனவே இன்னொரு நாட்டின் இளவரசனை விரும்பியிருந்தாள். அதனால் போலிச்சுவாமியாரின் மீது அவளுக்கு வெறுப்பு உண்டானது. அதை அவள் தனது தந்தைக்குத் தெரிவித்தாள். அரசருக்கு அப்போலிச் சுவாமியாரைப் பற்றி அடிக்கடி புகார்கள் வந்துகொண்டிருந்த போதும் அவரின் செயலால் உண்டாகும் பயன்களை விரும்பாதோரே அவரைக் குறைகூறுகிறார்களென நினைத்திருந்தான்.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:13 am


மகள் அவரைப்பற்றிக் கூறிய பின் அவரது நடத்தையை அவதானிக்கும் படி தனது ஒற்றர்களுக்குக் கட்டளையிட்டான். ஒற்றர்கள் ஆராய்ந்த போது போலிச் சுவாமியார் தீய செயல்கள் பலவற்றைச் செய்தது தெரியவந்தது. அதனால் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். பணம், பொருள், காமம் முதலியவற்றால் செய்யும் ஈஸ்வர ஆராதனைகள்தீமையையே தரும். அவர்களது பக்தி முழுவதும் ஆசைகளினால் அழிக்கப்படுவதால் அவர்கள் மிக மோசமானவர்களாகவே வாழ்நாள் முழுவதும் இருப்பார்கள்” என்றார் சுவாமி. “உலகம் பற்றுக்களினால் உருவானது. பற்றுக்கள் இல்லாவிட்டால் உலகம் அழியாதா?” என்று கேட்டான் மன்னன்.

“பற்றுக்கள் இல்லாவிட்டால் உலகே இல்லை. கடவுள் மீது பற்று வைக்காவிட்டால் கடவுளை நேசிக்கமுடியாது. அதுபோல எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும் ஓர் இல்வாழ்வான் தர்மத்தின் மீது பற்று வைக்காவிட்டால் தர்மம் செய்யமுடியாது. வேலூரில் தர்மபாலன் என்ற இல்வாழ்வான் தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்;சியாக வாழ்ந்து வந்தான். அவனும் அவனது மனைவியும்; பிள்ளைகளும் குடும்பத்தினரும் இல்லற தர்மம் வழுவாது வாழ்ந்து வந்தனர். இல்லறதர்மம் என்பது துறவிகள், ஏழைகள், ஆதரவு இல்லாதவர்கள், தன் குடிப்பிறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தவர், முதியோரைப் பேணி அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தலாகும். அத்துடன் அறவழியில் பொருள் தேடி அவற்றைத் தானதர்மம் செய்தல் வேண்டும்”.

“மன்னா, ஒருவன் அறவழிப்படி இல்லற வாழ்க்கையை நடத்துவானானால் அவன் அதைவிட்டுவிட்டுத் துறவறம் மேற்கொள்ளத் தேவையில்லை. அறவழியில் வாழும் இல்வாழ்வானே தேவர்களை விடச் சிறப்பானவன். இதை நன்கறிந்த தர்மபாலன் அறநெறியில் பற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தான். அவனது மனைவியான காயத்திரி தனது கணவனின் மனமறிந்து நடந்து வந்தாள். குடும்பத்திற்கு வேண்டிய நற்பண்புகள் யாவும் அவளிடம் இருந்தன. அவள் மாண்புடையவளாக இருந்தமையால் அவர்களுக்கு எந்தக் குறைகளும் ஏற்படவில்லை. அவள் தனது கணவனைத் தெய்வமாக மதித்தாள். தன் கணவனைத் தெய்வமாக மதித்து வாழும் பெண்ணைத் தேவர்கள் போற்றுவார்கள் என்று அவள் அறிந்திருந்தாள்”

“தர்மபாலன் தன் மனைவியின் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருந்தான். அது போலக் காயத்திரியும் தனது கணவன் மீது எல்லையில்லாத அன்பை வைத்திருந்தாள். அன்பு என்பது பற்றுத்தானே. ஒருவன் பெறவேண்டிய செல்வங்களுள், அறியவேண்டியவற்றை அறியக்கூடிய மக்களைப் பெறுவதே இவ்வுலகில் பெறுதற்கரிய மிகவுயர்ந்த செல்வமாகும். பெற்றோர் பிள்ளைகள் மீது அளவில்லாத அன்பை வைத்திருந்தனர். அது போலப் பிள்ளைகளும் தம் பெற்றோரில் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். சுற்றத்தவர்களும் இனத்தவர்களும் அவர்கள் மீது அளவற்ற அன்பை வைத்திருந்தனர். மன்னா, அன்பும் பற்றுத்தான். கணவன் தனது மனைவி மீதும் மனைவி தன் கணவன் மீதும் கொள்ளும் அன்பு இறைவனைச் சென்றடையும் என்று உபநிடதங்கள் சொல்கின்றன. தர்மத்தின் மீது வைக்கும் பற்றுத்தான் மற்றவர்கள் மீது இரக்கம் கொள்ள வைக்கும். உயிர்களின் மீது பற்றுக்கொண்டு அவற்றிற்கு உதவி செய்பவர்கள் இறைவனுக்கு உதவி செய்பவர்களாகிறார்கள”;.

“காலப்போக்கில் தர்மபாலனின் வருமானம் குறைந்தது. ஆனால் தர்மசிந்தனை குறையவில்லை. அவன் வேலை செய்யும் போதும், இறைவணை வணங்கும் போதும் எல்லா உயிர்களும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவேண்டும் என்று வேண்டுவான். அவனிடம் பொருள் குறைந்ததால் மிகுந்த பற்றுடன் இறைவனை வணங்கித் தனக்கு அப்பொருளைத் தரவேண்டுமென்று பிரார்த்திப்பான். மறுநாட் காலையில் அவன் வேண்டிய பொருட்கள் அவனது வீட்டிற்கு வரும். அதனால் அவன் இறைவன் மீது அளவுக்கதிகமான பற்று வைத்தான். பற்றுத்தான் பக்தி. பக்தி முற்றினால் அது ஞானம். இறைவன் மீது பற்று வைத்து ஞானவானானவன் இறைவனோடு உறவு கொண்டாடி வேண்டியவற்றைப் பெறுகிறான். பற்று என்பது ஆசைகள் இல்லாத அன்பாக இருத்தல் வேண்டும். ஆசைகள் உள்ள பற்றால் தான் உலகில் பல துன்பங்கள் உண்டாகின்றன. உலகை அழிப்பதும் பற்று; உலகை ஆக்குவதும் பற்று”.

“மன்னா, மாசில்லாப்பற்றான அன்பு மற்றவர்களிடம் விருப்பம் உடையவர்களாய் வாழும் தன்மையை உண்டாக்கும். அது நட்பு என்ற சிறப்பையும் தரும். உலகில் இன்பமாக வாழ்பவர்கள் எல்லோரும் பிறஉயிர்கள் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பவர்களே. இல்லறத்தில் அன்போடு வாழும் மக்கள் விருந்தினரைப் பேணி உபசரிப்பவர்களாக இருப்பார்கள். அன்புடன் பார்த்து முகம் மலர்ந்து பேசுபவனது உள்ளத்தில் என்றும் திருமகள் இருப்பாள். இப்படியான தன்நலமற்ற அன்பும் பற்றுத்தான். இப்படி வாழ்ந்த தர்மபாலன் மீது பொறாமைப்பட்டான் அவனது நண்பன் சிவபாலன்.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:13 am


“மன்னா, பிறருக்கு உண்டாகும் பெருமையைக் கண்டு மகிழ்ச்சியடையாமல் பொறாமை கொள்பவர்களும் உண்டு. தர்மபாலனின் வீட்டில் எவ்வேளையிலும் மக்கள் குழுமியிருப்பார்கள். அவனது வீட்டில் நடைபெறும் வைபவங்கள் அனைத்திலும் மக்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் சிவபாலனின் வீட்டுக்கு யாரும் செல்வதில்லை. அங்கு செல்பவர்களைச் சிவபாலன் தந்திரமாகப் பேசி அனுப்பிவிடுவான். அண்மையில் தர்மபாலனின் பேரனார் நோய்வாய்ப்பட்டார். அந்த ஊரவர்கள் தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் நோய்வாய்ப்பட்டதாகக் கருதி அக்கறையுடன் செயற்பட்டனர். நோய்வாய்ப்பட்டுப் பத்துத் தினங்களின் பின் அவர் காலமானார். ஊர் சோகத்திலாழ்ந்தது. ஒவ்வொருவரும் தமது இரத்த உறவினர் ஒருவர் இறந்ததைப் போலத் துக்கம் கொண்டாடினர். இது நடக்கச் சில மாதங்களுக்கு முன் சிவபாலனின் தகப்பனார் காலமானார். ஊர்ச்சனங்கள் ஒப்புக்குச் சென்றனரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் சிவபாலனுக்குப் பொறாமை உண்டானது”.

“சிவபாலனின் நடத்தையில் சிறிது மாற்றமிருப்பதைத் தர்மபாலன் கண்டுகொண்டான். எனினும் அதைப்பற்றி அவன் விசாரிக்கவில்லை. ஊர்ச்சனங்களை எப்படியாவது தர்மபாலனிடம் இருந்து பிரிக்கவேண்டுமென்று சிவபாலன் எண்ணினான்” “தர்மபாலனின் வீட்டில் தான் பெரும்பாலும் சிவபாலன் இருப்பான். தர்மபாலனிடம் பணவுதவி கேட்டு யாராவது வருவார்கள். தர்மபாலன் பெரும் பணக்காரனல்லன். அவன் தன்னிடம் உதவி கோரி வருபவர் எவருக்கும் உதவி செய்யாது விட்டதில்லை. அவன் தன்னிடம் பணம் இல்லாவிட்டால் சிவபாலனிடம் கடனாகப் பணத்தைப் பெற்று உதவி கோரியவனுக்குக் கொடுப்பான். பின் அவர்கள் கொடுக்கும் போது அப்பணத்திற்கான வட்டிப்பணத்தையும் சேர்த்துக்கொடுப்பான். தர்மபாலன், சிவபாலனிடம் வட்டிக்குப் பணம் பெற்று மற்றவர்களுக்குக் கொடுப்பது யாருக்கும் தெரியாது” “அன்று அந்தக் கிராமத்தில் வாழ்கின்ற கதிரேசன் என்பவர் தனது மனைவியின் வைத்தியச் செலவுக்காகப் பெருந்தொகையான பணத்தைத்; தர்மபாலனிடம் கேட்டியிருந்தார். தர்மபாலன் அவர் கேட்ட பணத்தைத் தருவதாகக் கூறினான். அதன் பின் சிவபாலனிடம் விடயத்தைச் சொல்லிப் பணம் கேட்டான். சிவபாலன் தருவதாக ஒப்புக் கொண்டான்”

“அன்று காலை கதிரேசனுக்குப் பணம் கொடுத்தல் வேண்டும். காலையில் சிவபாலன் மிகுந்த துக்கத்துடன் தர்மபாலனின் வீட்டிற்கு வந்து சொன்னான்; “நண்பா, எனக்குப் பணம் தரவேண்டிய ஒருவர் இன்று தரவில்லை. அதனால் உனக்கு இன்று தருவதாகச் சொன்ன பணத்தை என்னால் தரமுடியாதுள்ளது” என்று போலியாக அழுதான். “தர்மபாலன் திகைத்துப் போனான்; “தம்பி எனது மனைவிக்குச் சத்திரசிகிட்சை செய்தல் வேண்டும். அதற்கு ஐம்பதினாயிரம் ரூபா தேவை. என்னிடம் இப்போது பணமில்லை. இன்று கட்டவேண்டும். ஓரிரு வாரத்தில் திருப்பித் தந்துவிடுவேன். எனது மகன் அனுப்புவான். நோய் அதிகரித்திருப்பதால் உடன் சத்திரசிகிட்சை செய்தல் வேண்டுமென்று வைத்தியர் கூறுகிறார். மகனிடம் இப்போது பணம் இல்லை. எப்படியும் ஓரிரு வாரத்தில் அனுப்பிவிடுவான்” என்று கதிரேசன் கூறியது அவரது காதில் ஒலித்தது”.

“தர்மா, என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. பணம் தருவதாகச் சொன்னவருக்கு ஏதோ தடையாம்” சிவபாலன் கூறிக்கொண்டிருக்கையில் தர்மபாலன் குறுக்கிட்டுச் சொன்னான்; “இடையூறுகள் வருவது இயற்கை. நீ கவலைப்படாதே. இவ்வளவு காலமும் கேட்டவுடன் பணம் தந்துதவியமைக்கு நான் உனக்கு நன்றி கூறல் வேண்டும்” என்றான். இருந்த போதும் அவனது மனம் அல்லற்பட்டது. என்ன செய்யலாம் என்று நினைக்கக்கூட அவனால் முடியவில்லை; “சிவனே, என்னைக் காப்பாற்று” என்று மனதுள் வேண்டிக்கொண்டான்”;. “சிவபாலன் சென்றுவிட்டான். காயத்திரி காலை உணவருந்த வருமாறு கணவனை அழைக்க வந்தாள். என்றும் மகிழ்வுடன் இருக்கும் அவனது வதனம் அன்று கறுத்திருந்தது. “கதிரேசனுக்குப் பணம் தருவதாகச் சொன்ன சிவபாலனிடம் பணமில்லையாம்” “அப்படியா? என்ன செய்யப் போகிறீர்கள். என்னிடமும் பெறுமதியான நகைகள் எதுவும் இல்லை…” மனம் வருந்தினாள் காயத்திரி”. “நான் வணங்கும் சிவன் என்னை ஒருபோதும் சோதித்ததில்லை….” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போது கதிரேசன் வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் சற்றுத் தடுமாறினான் தர்மபாலன”;. “தர்மா, மகன் பணத்துடன் காலையில் வீட்டிற்கு வந்துவிட்டான். இதைச்சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றார் கதிரேசன்”. “சிவனே” என்றான் தர்மபாலன்”.

“மன்னா, ஆசைகள் உள்ளவன் தான் துன்பப்படுவான். பற்றுக்கள் தான் செயலாகின்றன. பற்றுக்களைச் செயலாக்காவிட்டாலும் அவை மனதில் இருந்து துன்பங்களைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும். தீய நினைவுகளும் தர்மசிந்தனைகளைத் தடுக்கும். துயரங்களை உண்டாக்கும். பற்றுக்கள் தான் மனிதனை நல்வழிப்படுத்துவதும், அவனை அழிப்பதும்” என்றார் சுவாமி. மன்னன் எதுவும் பேசவில்லை. “சுவாமி சொன்னார்; “மெய்யானவற்றைப் பொய்யானவை என்றும், பொய்யானவற்றை மெய்யானவை என்றும் மனிதருள் பலர் நம்புவதால் தான் துன்பப்படுகிறார்கள். தர்மபாலன் மெய்யான பொருளை உணர்ந்திருந்தான். அதனால் அவன் மெய்யான பொருளான இறைவன் மீது நம்பிக்கை வைத்திருந்தான். அதனால் இறைவன் அவனது நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். சிவபாலன் மெய்யானதைப் பொய்யானதென்று நினைத்தான். அதனால் அவன் நினைத்தது நடக்கவில்லை. இருப்பினும் பொய்யானவற்றையே மெய்யென்று அவன் இப்போதும் நம்புகிறான். இது தான் துன்பங்களுக்குக் காரணம்”




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:13 am


“மன்னா, வேலூரில் மனோகரன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். அவனிடம் அளவுக்கதிகமான பணம் இருந்தது. தனது பணத்தின் மூலம் அவன் நினைத்ததையெல்லாம் சாதித்து வந்தான். வேலூரில் ஒருமுறை கலைவிழா ஒன்று நடைபெற்றது. அதற்கு அவனும் தர்மபாலனும் சிவபாலனும் சென்றனர். அந்த விழாவுக்கு அழகான ஒரு பெண் தனது தோழிகளுடன் வந்திருந்தாள். மனோகரன் அவளது அழகில் சொக்கிப் போனான். அவளது அங்கங்கள் யாவும் அளவெடுத்துச் செய்யப்பட்டன போல இருந்தன. அவளின் அழகு அவனைப் போதைக்குள்ளாக்கியது. அதனால் அவன், அவள் செல்லுமிடங்கள் எல்லாவற்றிற்கும் சென்றான். தர்மபாலன் விழாவைப் பார்க்க விரும்பினான்.

ஆனால் அவள் கலைவிழாவுக்கென அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களைப் பார்வையிட்டாள். மனோகரனும் அக்கலைவிழாவில் பெரியதொரு வர்த்தக நிலையத்தை அமைத்திருந்தான். அந்த வர்த்தக நிலையத்துள் அவள் சென்றாள். மனோகரனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவன் உள்ளே சென்றான். அவள் தெரிந்தெடுத்த பொருட்களை மிகவும் மலிவு விலையில் கொடுத்தான். அவளிடம் அப்பொருட்களை வாங்கக் கூடிய பணம் அப்போது இருக்கவில்லை. அதனால் அவள் தயங்கினாள். நிலைமையை உணர்ந்து கொண்ட அவன்; “பரவாயில்லை பொருட்களை எடுங்கள். நாளைக்குப் பணத்தைக் கொண்டுவந்து தாருங்கள்” என்றான்”;. “என்னைத் தெரியுமா உங்களுக்கு” மகர யாழ் போல ஒலித்தது அவளது குரல். “தெரியாது, யாரென்று சொல்லுங்கள்” என்றான் மனோகரன்”. “எனது பெயர் சௌமியா, நான் விஸ்வநாதனின் மகள்” என்றாள் அவள்”. “விஸ்வநாதனின் மகளா நீங்கள்? பணமில்லாவிட்டாலும் பொருட்களை எடுங்கள். நான் விஸ்வநாதனிடம் பணத்தைப் பெறுகிறேன்” என்றான் மனோகரன்”.

“அப்பா மிகவும் கண்டிப்பானவர். அவர் யார் சொல்வதையும் கேட்கமாட்டார்” என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்”. “மறுநாள் விஸ்வநாதனின் வீட்டிற்குச் சென்றான் மனோகரன். விஸ்வநாதன் மனோகரனிடம் பொருட்களை வாங்கி விற்பனை செய்பவன். அதனால் விஸ்வநாதன் வெகு மரியாதையுடன் மனோகரனை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினான். மனோகரனது வருகை அவனுக்கு அளவில்லாத ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது”. “மனோகரனோடு வந்த ஊர்ப் பெரியவனான பொன்னம்பலம் சொன்னார், “விஸ்வநாதா, உனது மகளை நேற்று மனோகரன் கலைவிழாவில் கண்டு விரும்பிவிட்டான். உனக்கு விருப்பமானால் சொல்லு அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்துவிடலாம்” “விஸ்வநாதனால் தனது காதுகளை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியுடன் பார்த்தான். “உனது மகள் மனோகரனின் வர்த்தக நிலையத்திற்குச் சென்று பல பொருட்களைப் பார்த்துவிட்டு அவற்றை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள். அவள் ஆசைப்பட்டு எடுத்த பொருட்கள் அனைத்தையும் மனோகரன் கொண்டுவந்துள்ளான்” என்று கூறியவாறு பெரியதொரு பெட்டியைத் தூக்கி வைத்தார் பொன்னம்பலம்”.

“விஸ்வநாதனுக்கு அப்போது நம்பிக்கை வரவில்லை. “விஸ்வநாதா..” என்று பலமாக அழைத்தார் பொன்னம்பலம்”. “விஸ்வநாதன் திடுக்கிட்டு மிரட்சியடைந்தான்; “விஸ்வநாதா, நீ பெண்ணுக்குச் சீதனமாக எதுவும் தரத்தேவையில்லை. உனது விருப்பத்தைத் தெரிவி” என்றார் பொன்னம்பலம்”.” “எனக்கு நல்ல விருப்பம்” தடுமாறினான் விஸ்வநாதன்”. “மனோகரன் மகிழ்வுடன் திருமண ஏற்பாடுகளைச் செய்தான். அந்த ஊரில் அப்படி ஒரு திருமணம் இதுவரை நடைபெறவில்லை. அதுபோல இனியும் நடக்கக்கூடாது என்று நினைத்துச் செயற்பட்டான் மனோகரன்”.

திருமணம் நடைபெற இரண்டு தினங்கள் இருந்தன. மனோகரன் சௌமியாவுக்குத் தேவையான நகைகள், உடுபுடைவைகள், மற்றும் வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு விஸ்வநாதனின் வீட்டிற்குச் சென்றான். அன்று அவன் சௌமியாவைச் சந்தித்துப் பலமணி நேரம் உரையாடினான். அந்த நேரம் சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு அவனின் இதயத்தை நிரப்பியிருந்தது. அவளது கண்களை ஆசையோடு பார்த்தான். அதில் குடிகொண்டிருந்த மோகம் அவனை வதைத்தது. உதடுகளைப் பார்த்தான். அளவான சிவந்த உதடுகள் ஈரமாக இருந்தன. அந்த ஈரம் தேனோ கரும்போ என நினைத்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. கன்னங்கள் சிவந்து பொங்கியிருந்தன. அதில் அழகுக்காகப் பூசப்பட்டிருந்த நறுமணப்பொடி கிளற்சியை உண்டுபண்ணியது. கன்னத்தை ஒருமுறை தொட்டுப் பார்க்க வேண்டுமென்ன நினைவு மெல்ல அவனது மனதுள் அரும்பியது. உமிழ்நீரை விழுங்கியவாறு மெதுவாகப் பார்வையைக் கீழே இறக்கினான்.

அவளது கழுத்துப் பகுதி மறைப்பின்றி இருந்தமையால் அதன் அழகும் பொலிவும் அவனை மயக்கின. அந்தக் கழுத்தே இவ்வளவு கவர்ச்;சியாக இருந்தால் அவளது உடல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான். அவனது கற்பனைக்கு அது எட்டவில்லை. மோக மிகுதியுடன் அவனது பார்வை கீழே இறங்கியது. அப்பகுதியின் கவர்ச்;சி அவனைப் பித்தனாக்கியது. அவளோடு பேசவார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரம் பொறுத்து அவன் விடைபெற்றான். அன்று இரவு முழுவதும் பல்வேறு வகையான தோற்றங்களில் சௌமியா அவனது விழித்திரைக்குள் வலம் வந்தாள். விடிந்தால் திருமணம். ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. தர்மபாலன் பரபரப்புடன் மனோகரனது வீட்டுக்கு வந்தான்”. “மனோகரா, உனக்கொரு அதிர்ச்சியான செய்தி சொல்லவே இப்போது வந்தேன். மனதைத் திடப்படுத்திக்கொள்” “என்ன? என்ன?” பரபரத்தான் மனோகரன்”. “சிறிது நேரம் பேசாது நின்ற மனோகரன்”, சௌமியா தனது காதலனுடன் சென்றுவிட்டாள். அதை அவமானம் என நினைத்த விஸ்வநாதன் தற்கொலை செய்துகொண்டார்”




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:13 am


“மனோகரனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று பலமாகப் புலம்பினான்”. “தர்மபாலனும் சிவபாலனும் அவனுடன் இருந்தனர். அவன் பல நாட்கள் நித்திரை கொள்ளவில்லை. விசரனைப் போல நடந்து கொண்டான். அவனது வீட்டுக்கு நாகலிங்கம் என்ற சுவாமியார் அடிக்கடி வருவார். அவரிடம் மனோகரன் ஆலோசனைகள் கேட்பான். அவர் கூறுவதை வேதவாக்காகக் கருதுவான். அவர் தல யாத்திரிரைக்குச் சென்று அன்று தான் ஊருக்குத் திரும்பியிருந்தார். மனோகரனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கேள்விப்பட்டு மனோகரனது வீட்டிற்கு வந்தார். “ஐயோ சுவாமி, எனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. இனிநான் ஏன் வாழவேண்டும்?. சௌமியா என்னை வெறுத்து ஒதுக்கிய பின் நான் வாழ வேண்டுமா? என்னிலும் பார்க்க அவள் அவனில் எதைக்கண்டாள். விஸ்வநாதனின் வீட்டு வேலைக்காரனான அவனிடம் எதைக்கண்டு மயங்கினாள்? விஸ்வநாதனின் பொருட்களையும் நான் கொடுத்த பொருட்களையும் கொண்டு சென்றுவிட்டாள். அது முடிய என்ன செய்வாள்…? சுவாமி, என்னால் அவளின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவள் இப்பொழுது வந்தாலும் நான் அவளை ஏற்பேன். சுவாமி, தர்மபாலனும் சிவபாலனும் அவளைத் தேடித்தர மறுக்கிறார்கள். நீங்கள் தேடித்தாருங்கள்…” விம்மி விம்மி அழுதான் மனோகரன்”.

“மனோகரா, நீ அவள் மீது காதல் கொள்ளவில்லை. மோகங்கொண்டுள்ளாய். காதல் கொண்டால் அவளின் நல்வாழ்வை விரும்புவாயே தவிர அவளது உடலுக்கு ஆசைப்பட மாட்டாய். விபச்சாரம் செய்வோர் தான் உடல் மீது ஆசைப்படுவார்கள். உடல் மாற்றமடையும். அத்துடன் அது நிலையில்லாதது. பெண்ணை மலருக்கு ஒப்பிடுவது ஏனென்றால் அவர்களின் உடல் வாடாமல் இருக்கும் வரை தான் அழகு. மோகம், சுவை என்பவற்றைத் தரும். மலரைப்போல வாடினால் அந்த உடல் காமத்திற்குப் பயன்படாது. அன்பு தான் நிலையானது. அதனால் தான் அடியார்கள் இறைவன் மீது அன்பு கொள்கிறார்கள். ஒரு கணவன் தன் மனைவி மீது அன்பு கொண்டால் அந்த அன்பு இறைவனைச் சென்றடையும். அன்பை எந்த உயிர் மீது செலுத்தினாலும், அந்த அன்பு இறைவனைச் சென்றடையும். எனவே நிலையில்லாதவற்றின் மீது ஆசை கொள்ளாது நிலையானவற்றின் மீது ஆசைகொள். இறைவனைப் பிரார்த்தனை செய்; தான தர்மங்களைச் செய்; ஏழை எளியவர்களுக்கு உதவு” என்று சுவாமியார் கூறிக்கொண்டிருக்கும் போது மனோகரன் குறுக்கிட்டான்”. “சுவாமி, நீங்கள் கூறியவற்றுள் நான் எதைச் செய்யவில்லை. நான் இறைவனைப் பிரார்த்தனை செய்யவில்லையா? தான தர்மங்களைச் செய்யவில்லையா…? ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவில்லையா…? அப்படியிருக்க இப்படி ஏன் நடந்தது” பலமாக அழுதான் மனோகரன்”.

“நீ எல்லாவற்றையும் செய்து தான் வருகிறாய். இனித் தீவிரமாகச் செய்” குறுக்கிட்டான் மனோகரன்; “நான் செய்யமாட்டேன். இறைவன் எங்கே இருக்கிறார்? இறைவன் என்றொருவன் இருந்தால் இப்படி நடக்குமா….? நீங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இறைவனின் பெயரைச் சொல்கிறீர்கள். நான் பிள்ளையாருக்கு எவ்வளவு நிதியுதவி செய்தேன்; எவ்வளவு நகை வாங்கிக் கொடுதN;தன். மணிக்கோபுரம் கட்டியது நான் தானே. வருடா வருடம் தேர்த்திருவிழாவை எவ்வளவு விமர்சையாகச் செய்கிறேன்” அழுதழுது சொன்ன மனோகரன் ஆத்திர மிகுதியால் கத்தினான். “இனி என்னிடம் கோயிலுக்கு நிதி வேண்டுமென்று யாரும் வரக்கூடாது. ஏழை எளியவர்களுக்குக் கடைசிவரையும் தானம் வழங்கமாட்டேன். அவர்கள் எல்லோரும் உழைத்துச் சாப்பிடட்டும். இல்லாவிட்டால் கடவுளிடம் கேட்;டுப்பெறட்டும். இல்லாவிட்டால் கடவுள் இருக்கிறார் என்று சொல்கின்ற சுவாமியாரைப் போன்றவர்களிடம் சென்று வாங்கட்டும்” “ஆத்திரத்தின் உச்சியில் இருந்த மனோகரனோடு நாகலிங்கம்; சுவாமியார் எதுவும் பேசவில்லை. ஆத்திரத்துடன் இருப்பவனுக்கு எதுவும் விளங்காது. விளங்கப்படுத்தவும் முடியாதென்று அவருக்குத் தெரியும்”. “சிறிது நேரம் ஆத்திர மிகுதியால் கத்திய மனோகரன்; பின் விம்மி விம்மி அழுதான். வெகு நேரம் அழுதான். பின்; “எனக்கேன் சுவாமி இந்தத் துன்பம்” என்று கேட்டான்”.

“மனோகரா, அழாதே. விதி வலியது. ஒருவனது வாழ்வு வளம் பெறுவதற்கு விதி உதவிகள் செய்யும். அவனது வாழ்வு அழிவதற்கும் விதியே காரணமாக அமையும். உனது தந்தையார் ஒரு சாதாரணமான விவசாயியின் மகன். அவர் தனது விளைபொருட்களோடு மற்ற விவசாயிகளின் பொருட்களையும் சந்தை விலைக்கு மொத்தமாகக் கொள்வனவு செய்து சில்லறையாக விற்கத் தொடங்கினார். அது அவருக்குப் பெரும் இலாபத்தைக் கொடுத்ததால் பிறநாடுகளிலிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்றார். அதனால் பெரும் பணக்காரனானார். அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் இலாபத்தைக் கொடுத்தன. உனது மாமன் நாகநாதன் பெரும் வணிகன். பிறநாடுகளோடு வாணிபம் செய்தவன். அவரிடம் பொருட்களைக் கொள்வனவு செய்த பிறநாட்டு வியாபாரிகள் ஏமாற்றிவிட்டர்கள். அதனால் மனமுடைந்த உனது மாமா உற்சாகமிழந்து வாணிபம் செய்வதை விட்டுவிட்டார். அதனால் உனது தகப்பனாரின் உதவிகளினாலே வாழ்கிறார். எந்தத் தொழிலைச் செய்தாலும் இலாபமும் நட்டமும் வரும். விதி வசத்தால் நட்ட மேற்பட்டால் தொழிலைக் கைவிட்டுவிட்டுச் சோம்பியிருக்கக் கூடாது. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருத்தல் வேண்டும்”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக