புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
34 Posts - 43%
heezulia
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
400 Posts - 49%
heezulia
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
27 Posts - 3%
prajai
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_m10 போண்டி ஆக்கும் போலிகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போண்டி ஆக்கும் போலிகள்!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 1:21 pm

 போண்டி ஆக்கும் போலிகள்! LlFluXXZSPelWv5x6Ba8+securedownload

எச்சரிக்கும் செக் லிஸ்ட்....

அரசியல் பண்ண மூன்று நபர்கள் தேவை என்றால், போலிகள் அரங்கேற இரண்டு நபர்களே போதுமானது! இரண்டு நபர்களுக்கு இடையே மூன்றாவதாக ஒருவர் வரும்போதுதான் அரசியல் வருகிறது. ஆனால், இரண்டாவதாக ஒருவர் வந்தாலே போலி அங்கே வந்துவிடும்! அந்த அளவுக்கு அரசியலைவிட பவர்ஃபுல்லானது போலி!

இது எத்தர்களின் காலம்... போலிகளைக் கண்டு மயங்கி பணத்தை பறிகொடுப்பவர்கள் ஏராளம். எல்லா துறையிலும் நீக்கமற வியாபித்து இருக்கும் இந்த போலிகளை ஓரளவாவது அடையாளம் காட்டும் முயற்சியே இக்கட்டுரை.
'முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரிந்துவிடும்’ என்பது போல, நாம் குறிப்பிட்டிருக்கும் சில அடையாளங்கள் தெரிந்தாலே, போலியாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையோடு அவர்களை அல்லது அவற்றை அணுகுங்கள். பாடுபட்டுச் சேர்த்த பணத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

பணம் பத்திரம்!

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போலி நிதி நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு, முதலுக்கே மோசம் போய், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைகிறவர்கள் இன்றும் பலர். இந்த போலி நிதி நிறுவனங்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி..? இதோ சில 'நச்’ வழிகள்..!
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என்று அவசியம் பாருங்கள்.  
பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.
சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.
மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப்படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விடலாம் அந்த நிறுவனம் போலியானது என்று!
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைகளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.
சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அலுவலகம் திறப்பது, அவர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றாகும்.
அவசரப்படுத்தி முதலீடு செய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய்துவைப்பது போன்ற வையும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!    
- பானுமதி அருணாசலம்.

நல்லவரா, கெட்டவரா?

ரியல் எஸ்டேட்டில் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் போலி புரோக்கர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது?
சூப்பர் டிப்ஸ்கள் இதோ...
போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள்.
ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவணங்கள் என வியாபார ரீதியாகக் கொடுக்க வேண்டிய எதையுமே உங்களுக்குத் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற்றையும் துண்டுக் காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள்.
டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட்ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலில் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தியாசப்படும்.
கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பணம் மட்டுமே கேட்பார்கள்.
காசோலை வாங்கும்போது வெவ்வேறு பெயரிலோ தனிமனிதரின் பெயரிலோ வாங்குவார்கள்.
உங்கள் கணக்கிற்கு யாருடைய கணக்கில் இருந்து காசோலை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்.
இத்தனை லாபம் நிச்சயம்; பத்திரத்தில்கூட எழுதித் தருகிறோம் என்கிற போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.
ஆள் பிடித்து தந்தால் கமிஷன் தருவதாகவும் ஆசை காட்டுவார்கள்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என அனைத்து சந்தைகளிலும் வியாபாரம் செய்கிறேன் என்று பச்சைப் பொய் சொல்வார்கள்.
- செ.கார்த்திகேயன்.

பார்த்து வாங்குங்க!

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நிலத்தின் மீதுள்ள உரிமைகள் போலியானதாக இருக்கும், புரோக்கர்களில் சிலர் போலிகளாக இருப்பார்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சில போலியாக இருக்கும்... இப்படி பல போலிகளை எதிர்கொள்ளவேண்டிய துறை இது. அதனால் அதிக கவனம் தேவைப்படும்.
மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலகட்டத்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக் கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையாளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்லது பாகப் பிரிவினை செய்து தந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தாய் பத்திரம் அல்லது கிரயப் பத்திரம் தொலைந்துவிட்டது என்று சொன்னால் கூடுதலாக உஷாராகுங்கள்.
வீட்டை நேரில் பார்க்காமல் வாங்காதீர்கள். அதில் யாராவது குடியி ருந்தால் அவர்களிடம் நீங்கள் வீட்டை வாங்கும் விஷயத்தைச் சொல்லுங்கள். சில இடங்களில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைக்கு ஆள் கூட்டி வருவதாகச் சொல்லி வீட்டைக் காட்டி, போலிபத்திரம் மூலம் வீட்டை விற்கும் வேலையும் நடந்து வருகிறது!
புரோக்கர்கள் அவசரப்படுத்தினால் ஒரு முறைக்கு நூறு முறை விசாரியுங்கள்.
சொத்தின் உரிமையாளரை கண்ணில் காட்டாமலே விலை பேசிக் கொண்டிருந்தால் அந்த புரோக்கரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.  
புரோக்கர் நல்லவர்தானா என்பதை அறிய அப்பகுதி சார் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரிந்துவிடும்.
- சி.சரவணன்

காந்தி கணக்கு!

நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாராகின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வைக்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்...
வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும்.
பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் இந்த அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும்.
அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக் கேற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும்.
20 ரூபாய் - செவ்வகம், 50 ரூபாய் - சதுரம், 100 ரூபாய் - முக்கோணம், 500 ரூபாய் - வட்டம், 1000 ரூபாய் - டைமண்ட். 10 ரூபாய் நோட்டுக்கு மட்டும் இந்தக் குறியீடு இருக்காது.
கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழையைத் தூக்கிப் பார்த்தால் அதில் ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத்திலும், பாரத் என்று இந்தியிலும் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிறமாகவும் இது இருக்கும்.
மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிட பட்டிருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும் போது தெரியும்.
மாறும் நிறம்: நடுவில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாயின் நிறம் சாய்த்து பார்க்கையில் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும்.
அசல் நோட்டுகளை தொட்டு உணரும்படி மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை மேலெழுந்து பிரின்ட் ஆகியிருக்கும்.
- நீரை.மகேந்திரன்.

அதுதான்; ஆனா அது இல்லை..!

பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. ஆனால், நயா பைசா செலவு செய்யாமல் அப்படியே காப்பி அடித்து, கல்லா கட்டும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் அசந்தாலும் நம் கண்ணை ஏமாற்றிவிடும் போலி பிராண்டுகளைக் கண்டுபிடிக்க சில வழிகள்...
புகழ் பெற்ற பிராண்டுகளின் பெயரை கண்டுபிடிக்க முடியாதபடி லேசாக மாற்றி இருப்பார்கள். அல்லது பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ  கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு வேறு ஒரு பெயரைச் சேர்த்திருப்பார்கள். எனவே, ஒரிஜினல் பிராண்டின் எழுத்துக் களை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.    
லோகோவை காப்பி யடித்து சில மாற்றங்களை செய்திருப்பார்கள். இதனால் நமக்கு எது ஒரிஜினல், எது போலி என்கிற குழப்பம் வரும்.
புகழ்பெற்ற பிராண்டு களின் பெயரை சம்பந்தமில்லாத வேறு ஏதாவது பொருட்களுக்கு வைத்து அள்ளி விடுவார்கள். உதாரணமாக சோனி என்ற பெயரில் ஷேவிங் கிரீம் வரும்!
சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட  சில இடங்களில் மட்டுமோ அல்லது தனி விற்பனை மையங் களில் மட்டுமோதான் கிடைக்கும். ஆனால், போலி பொருட்கள் எந்த கடையில் வேண்டுமானாலும் கிடைக்கும்.
துணி வகைகளில் ஒரிஜினல் பிராண்டில் காணக்கூடிய நேர்த்தி, வடிவம், மிருதுதன்மை மற்றும் கலர்கள் போலி பிராண்டுகளில் இருக்காது.
சில பிராண்டட் பொருட்கள் குறிப்பிட்ட கலர் அல்லது குறிப்பிட்ட வாசனைகளில் மட்டுமே கிடைக்கும்.
சில பிராண்டட் பொருட்களுக்கு விற்பனைக்கு பிறகான சேவை மற்றும் வாரண்டி, கியாரண்டி போன்ற உத்தரவாதங்கள் இருக்கும். போலிகளுக்கு இந்த உத்தரவாதங்கள் இருக்காது.
 
நன்றி: விகடன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 24, 2014 2:26 pm

நல்ல பகிர்வு பார்த்திபன்.

2005 ற்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து நோட்டுகளும் விரைவில் செல்லாது என ஆர்பிஐ அறிவித்ததாக கேள்விப்பட்டேன். அத்தகைய நோட்டுகள் இருந்தால் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது.

கூடுதல் விபரம் அறிந்தால் சொல்லுங்கள்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 2:52 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு பார்த்திபன்.

2005 ற்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து நோட்டுகளும் விரைவில் செல்லாது என ஆர்பிஐ அறிவித்ததாக கேள்விப்பட்டேன். அத்தகைய நோட்டுகள் இருந்தால் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது.

கூடுதல் விபரம் அறிந்தால் சொல்லுங்கள்.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்.பி.ஐ) 2005க்கு முன் அச்சடிக்கபட்ட ரூபாய் நோட்டுகளை மார்ச் 31க்கு பிறகு பொது பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல், ஆண்டு அச்சடிக்கபட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் மட்டுமே பொது பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 2006க்கு பிறகு அச்சடிக்கபட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.

2005 க்கு முன் அச்சடிக்கபட்ட நோட்டுகளில் இந்த குறிப்பு இருக்காது. அதே நேரத்தில் ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பரிவர்த்தனைக்கு உகந்த ரூபாயாக மாற்றிக்கொள்ளாலாம்.

ஜூலை 1 ம் தேதிக்கு பிறகு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 10 க்கு மேல் மாற்றுவதற்கு கொண்டு சென்றால் கட்டாயமாக அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது.

10 ரூபாய் முதல் 1000 ரூபாய் நோட்டுகள் வரை இந்த உத்தரவு பொருந்தும். இந்த மாற்றம் மூலம் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என்று கருத்தும் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆண்டு குறிப்பிடாத ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று புரளி கிளம்பலாம். ரூபாய் நோட்டுகள் செல்லும், ஆனால் பொது பரிவர்த்தனை செய்யாமல் அதை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள்லாம்.

நன்றி: நாணயம் விகடன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 24, 2014 3:38 pm

வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும். பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் இந்த அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும். அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக் கேற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும். 20 ரூபாய் - செவ்வகம், 50 ரூபாய் - சதுரம், 100 ரூபாய் - முக்கோணம், 500 ரூபாய் - வட்டம், 1000 ரூபாய் - டைமண்ட். 10 ரூபாய் நோட்டுக்கு மட்டும் இந்தக் குறியீடு இருக்காது. கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழையைத் தூக்கிப் பார்த்தால் அதில் ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத்திலும், பாரத் என்று இந்தியிலும் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிறமாகவும் இது இருக்கும். மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிட பட்டிருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும் போது தெரியும். மாறும் நிறம்: நடுவில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாயின் நிறம் சாய்த்து பார்க்கையில் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும். அசல் நோட்டுகளை தொட்டு உணரும்படி மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை மேலெழுந்து பிரின்ட் ஆகியிருக்கும். wrote:

இவ்ளோ தெளிவா ரகசியத்தை சொல்லிட்டாங்க. போலிகள் இதை காப்பி செய்ய்மாட்டாங்களா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 3:44 pm

ஜாஹீதாபானு wrote:
வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும். பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் இந்த அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும். அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக் கேற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும். 20 ரூபாய் - செவ்வகம், 50 ரூபாய் - சதுரம், 100 ரூபாய் - முக்கோணம், 500 ரூபாய் - வட்டம், 1000 ரூபாய் - டைமண்ட். 10 ரூபாய் நோட்டுக்கு மட்டும் இந்தக் குறியீடு இருக்காது. கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழையைத் தூக்கிப் பார்த்தால் அதில் ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத்திலும், பாரத் என்று இந்தியிலும் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிறமாகவும் இது இருக்கும். மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிட பட்டிருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும் போது தெரியும். மாறும் நிறம்: நடுவில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாயின் நிறம் சாய்த்து பார்க்கையில் பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும். அசல் நோட்டுகளை தொட்டு உணரும்படி மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை மேலெழுந்து பிரின்ட் ஆகியிருக்கும். wrote:

இவ்ளோ தெளிவா ரகசியத்தை சொல்லிட்டாங்க. போலிகள் இதை காப்பி செய்ய்மாட்டாங்களா?

போலியாக அச்சடிப்பவர்கள் இத்தனை விஷயங்களையும் அச்சு அசலாகப் புகுத்த முடியாது. அப்படியே முயன்றாலும் அவர்களுக்குக் கட்டுப்படியாகாது. கள்ள நோட்டுகள் அனைத்துமே சற்று உற்று நோக்கினால் கண்டுபிடிக்கும்படி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 24, 2014 4:33 pm

பார்த்திபன் wrote:

நன்றி பார்த்திபன்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 25, 2014 11:13 am

1000 ரூபாய் நோடு பற்றிய பார்த்திபன் பகிர்வு சரியான நேரத்தது ! நன்றி !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Jan 25, 2014 2:12 pm

மிகவும் பயனுள்ள தகவல்கள்!  போண்டி ஆக்கும் போலிகள்! 103459460  போண்டி ஆக்கும் போலிகள்! 3838410834

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக