புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
48 Posts - 35%
i6appar
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Anthony raj
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
48 Posts - 35%
i6appar
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Anthony raj
பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10பாமரர் தேவாரம் - Page 5 Poll_m10பாமரர் தேவாரம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 5:04 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jul 05, 2014 6:03 am

திருக்கானூர்
(கலிவிருத்தம், திருக்குறுந்தொகை அமைப்பில்)

[முதற்சீர் மாச்சீர்; இரண்டின் முதலில் நேரசை;
அதன்பின் வரிக்குள் வெண்டளை; பொழிப்பு மோனை;
முதற்சீர் நேரெனில் வரிக்கு 11 எழுத்துகள்; தந்தேஇயெனில் வரிக்கு 12 எழுத்துகள்.]

கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=387

பதிகம்
சம்பந்தர்: 1.73: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1073
அப்பர்: 5.76: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50760

அழலாய் நின்றவன் அன்னைக் கருள்செய்தான்
தழற்செம் மேனியன் தண்ணார் பிறைசூடி
கழல்மின் பாதம் கடிதே வினைகொள்ள
உழல்தல் நீங்க உறைபவன் கானூரே. ... 1

வேதத் தீர்த்தமாம் வில்வம் தலமரம்
பேதம் தீர்ப்பவள் அன்னை சவுந்தரி
பாதம் தீர்த்திடும் பாவம் பவரோகம்
நாதன் வாழ நலந்தரும் கானூரே. ... 2



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jul 06, 2014 3:04 pm

கரிகாற் சோழற் கரிமலர்த் தார்சூட
பரசு ராமரின் பாவ மகன்றிட
அருத்த நாரியன் அத்தன் அருள்செய்தே
கரும்பாய் மேவினன் கான்நிறை கானூரே. ... 3

அரசர் பிள்ளையின் பாடற் றலமாகும்
உரியோன் நாயகி ஒற்றுமை சீராகும்
திரும ணம்பெற்றோ ராகும் தகவுறும்
கரும்பீ சன்கடைக் கண்ணருட் கானூரே. ... 4

[அரசர் = திருநாவுக்கரசர்; பிள்ளை = ஆளுடைப் பிள்ளையாம் சம்பந்தர்.]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jul 07, 2014 2:56 pm

வானார் சோதியர் மானேர் உமையுடன்
தானார் வானதி தேனார் மலருடன்
மானார்ந் தில்லா மணல்மே டுகந்தவர்
தானாய் மேவும் தலமது கானூரே. ... 5

[மானேர் = மான் நிகர்த்த; தானார் வானதி = தானே வந்து தங்கிய கங்கை;
வானார், மானேர், தானார், தேனார் சொற்கள் சம்பந்தர் பதிகத்தவை.
மானார்ந்தில்லா = மனிதர் நிறைந்து இல்லாத.]

பாற்கோள் நஞ்சுணக் கார்மிட றாயினன் ... [கோள் = கடல்]
கூற்றைச் சாய்த்தே குமரனைக் காத்தனன்
காற்றாம் மூச்சுறும் கூற்றாம் மொழிவகை
ஏற்றம் கொள்ள வெழுந்தனன் கானூரே. ... 6



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jul 08, 2014 5:12 am


கூனற் கீற்றினன் கூறொரு மாதினன்
வேனல் நீறணி வெண்வரை வேந்தனாய்க்
கானில் ஆடியே காத்தருள் காரணன்
தேனர் என்றே திளையுரு கானூரே. ... 7

தசகண் டன்மலை தூக்கிய தோள்களை
விசையாய்ச் சாய்த்த விரலுறும் தாளிணை
உசவ லொன்றே உயர்வழி யென்றவன்
இசையாய் நின்ற இடமது கானூரே. ... 8



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jul 09, 2014 2:46 pm

(இறுதிப் பகுதி)
அயனரி தாடலைக் காணா அழலன் ... [தாடலை = தாள், தலை]
வயமாக் கால்முனி அங்கத முனியும்
இயக்கம் காணவே தில்லையில் ஆடுவன்
நயந்தே நன்மை யருட்டலம் கானூரே. ... 9

இற்றை நாளில் இயல்பினை யீர்த்திடும்
மற்றை நெறிகளின் மாயை யுணர்ந்தே
புற்ற றாவணி புகழ்பர வோரின்
சுற்றம் என்றவன் சூழ்தலம் கானூரே.... 10

கானூ ரீசனை வானவர் வேந்தனை
ஊனு ருக்கியே உள்ளொளி தந்துநற்
றேனாய்ப் பெய்வோன் திருவருள் நாடவே
தான்வீ ழன்பில் தழைக்கும் அகமே. ... 11

--ரமணி, 15/06/2014

*****


saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Wed Jul 09, 2014 2:48 pm

பாமரர் தேவாரம் - Page 5 103459460 பாமரர் தேவாரம் - Page 5 1571444738 



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jul 20, 2014 3:38 am

திருப்பழனம்
(வஞ்சித்துறை: திருவிருக்குறள் அமைப்பில்: மா புளிமாங்காய்)

கோவில்:
http://temple.dinamalar.com5/New.php?id=959

பதிகம்
சம்பந்தர்: வேதமோதி, 1.67
அப்பர்: சொன்மாலைபயில் 4.12; ஆடினார் ஒருவர் 4.36;
மேவித்துநின்று 4.87; அருவனாய் 5.37; அலையார் 6.36.

விழிமேல் விழிகொண்டான்
சுழிமேல் நதிகொண்டான்
மொழிமே லிசைகொண்டான்
பழமேற் பழனத்தே. ... 1

[சுழி = உச்சி; பழமேல் = பழமை இயலுகின்ற]

சித்தம் தெளிவாகும்
வித்தும் புலனாகும்
நித்தம் வழிபட்டால்
அத்தன் பழன்த்தே. ... 2

நீரார் சடையோனைப்
பாரோர் புகழ்வோனைச்
சேரா தவர்யாரோ
சீரார் பழனத்தே. ... 3

அழலாய் மலரோன்மால்
கழல்மேற் றலைகாணார்
கழுவாய்க் கனலேந்தி
உழியாம் பழனத்தே. ... 4

[கழுவாய் = தீர்வு, பிராயச்சித்தம்; உழி = இடம்]

மலையைப் பெயர்த்தானின்
தலையை அயர்த்தானே
கலையை யணிந்தானே
நிலையாய்ப் பழனத்தே. ... 5

ஒளியின் நிறமானான்
வளியின் வலுவானான்
களியின் உருவானான்
அளியன் பழனத்தே. ... 6

[அளியன் = அன்புடையான், அருளுடையான்]

இந்தீ வரநீராழ்
செந்தீக் கரத்தானே
நந்தீச் வரர்மேலா
டுந்தேன் பழனத்தே. ... 7

[இந்தீவர நீராழ்: இந்தீவரம் = கருங்குவளை:
ஈசன் விடமுண்டதும், தட்சனிடம் அவமானப்பட்டதும், பிரம்ம கபாலத்துடன்
பிட்சாடனராக அலைந்ததும், ஒரு சமயம் கருங்குவளைக் குளத்துள்
ஏழரை நாழிகை மறைந்திருக்க நேர்ந்ததும் சனியின் தாக்கம் என்று சொல்லுவர்:
http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=11895]

புரந்தீய்ப் பெருமானே
மருந்தீச் வரனாவான்
கரந்தே அருள்செய்வான்
இருந்தே பழனத்தே. ... 8

மங்கை யொருகூறன்
கங்கை நதிசூடன்
சங்கை யறுத்தாள
இங்கே பழனத்தே. ... 9

[சங்கை = ஐயம், அச்சம்]

கடிவோர்க் கடினன்தான்
அடியார்க் கடியன்தான்
விடமார்க் கருங்கண்டன்
தடமார் பழனத்தே. ... 10

[தடம் = பெருமை; நீர்நிலை]

அப்பர் திருநாவும்
ஒப்பி லிசேய்நாவும்
செப்பும் பதிகத்தி
ருப்பான் பழனத்தே. ... 11

[ஒப்பிலி = சிவபிரான்]

--ரமணி, 02/07/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jul 25, 2014 4:21 am

திருவைகாவூர்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் 2.46.1, ’பாலூறு மலைப்பாம்பும் ப்௭அனிமதியு மத்தமும்’)

கோயில்:
http://temple.dinamalar.com/New.php?id=395

பதிகம்:
சம்பந்தர்: கோழைமிட றாககவி, தேவாரம் 3.07.1

கல்லுருவாய் வாசலிலே கனிசித்தி கணபதியே!
பல்வகையில் சிறப்புறுமிப் பாழியைநான் பரவுதற்கே
ஒல்லுநராய் அருள்செய்ய உள்நிற்கும் உனைக்கேட்டேன்
வில்வவனம் வைகாவூர் வீற்றிருக்கும் கணபதியே. ... 1

[ஒல்லுநர் = நண்பர், ஆற்றலுடையவர்]

நெடுமால யன்காவல் நின்றருளும் தலமிதுவே
பிடிகோலைத் தாங்கிநிற்கும் பிஞ்ஞகன்தெக் கணமூர்த்தி
விடையோன்முன் வால்காட்டி வீற்றிருக்கும் நந்திகேசன்
வடிவேலன் சிலையுருவில் வைகாவூர் அற்புதமே. ... 2



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jul 29, 2014 5:43 am

அன்னைவளைக் கரத்தாளின் அற்புதமோ வேறுவிதம்!
இன்னதென்று வேண்டிநின்றால் பேசியவள் அருள்செய்வாள்!
பின்னைவரும் பிரளயத்தில் பிழைத்துநிற்க வேதமெலாம்
மன்னிநிற்கும் வில்வமரம் வைகாவூர்த் தலத்தினிலே. ... 3

வேடனவன் உணர்விலாது வில்வத்தால் அர்ச்சிக்க
வேடனுக்கே அருள்செய்து வேங்கையிடம் தப்புவித்தே
வேடனையும் இறையாக்கும் வேணியலங் காரசிவன்
வேடமொரு லிங்கமென வைகாவூர் மேவுவரே. ... 4



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Aug 01, 2014 6:09 am


ஒரேகல்லில் திருவாசி ஒகரம்மேல் ஆறுமுகன்
இரேகைக்கை நகமெல்லாம் விழியுறவே நுண்சிற்பம்!
சுரேசன்சேய் அருணகிரிச் சுனைசந்தம் புகழ்தலமாம்
வரூதம்கொள் இறையெனவே வைகாவூர் எழுந்தாரே. ... 5

[திருவாசி = இறையுருவைச் சுற்றியுள்ள வட்டக் கட்டு;
ஒகரம் = மயில்; சுரேசன் = முருகனின் ஒரு பெயர்;
வரூதம் = வசிக்குமிடம்]

திருவிழாவாஞ் சமயத்தில் தீர்த்தவாரி யாடியபின்
திருமூர்த்தி அன்னையுடன் திருவோலை உருக்கொண்டு
திருவோலைச் சப்பரத்தில் இரவினிலே வீதியுலா
வருவோர்க்கு வளம்நல்கும் வைகாவூர்த் திருத்தலமே. ... 6


Sponsored content

PostSponsored content



Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக