புதிய பதிவுகள்
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
52 Posts - 44%
T.N.Balasubramanian
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
1 Post - 1%
prajai
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
195 Posts - 38%
mohamed nizamudeen
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
வாழணும்! Poll_c10வாழணும்! Poll_m10வாழணும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழணும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 2:26 am

டேய் சிவா, உன் பிந் துடா.... அங்க நிக்கறா பாரு... என் நண்பன் வாசு சொன்ன போது, என் அடி வயிற்றில் உருக் கொண்ட ஒரு உஷணப் பந்து …ஜிவ்வென்று மேலேறி நெஞ்சுக் குழி தொட்டு மீண்டும் தாழ்ந்து அடங்கியது.

கம்பெனி ஆடிட் விஷயமாய் இந்த ஊருக்கு வந்து, ஆடிட் வேலைகளை முடித்து, நாளை ஊர் திரும்ப வேண்டிய நிலையில், இன்று கடை வீதியில் அவளைப் பார்த்து விட்டு வாசு இது மாதிரி கூவினான்.

எனக்கு, அது என் பிந்துவாக இருந்து விடக் கூடாது என்கிற எண்ணம் ஒரு பக்கம் வட்ட மிட்டாலும், என் பிந்து என்னைப் பிரிந்து எட்டு வருஷமாகி விட்ட இன்றைய நிலையில் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மற்றொரு பக்கம் சுழித்தெழுந்தது.

எதிர் சாரியில் திரும்பியபடி நின்றிருந்த அவளை எம்பிப் பார்த்த வாசு, …அவ கழுத்தில் தாலி இருக்கு பாருடா... என்று சொன்னது …முப்பத்தெட்டு வயசாகியும் அவளையே நினைத்து முட்டாள் மாதிரி திருமணம் செய்து கொள்ளாமல் நிற்கிறாயே நிர்மூடா... என்று என்னை இகழ்வதாய்ப்பட்டது.

அலுவலகம் மொத்தமும் என்னையும் பிந்துவையும் சேர்த்து ஏகமாய் கிசுகிசுத்து, நாங்கள் இல் லாதபோது இல்லாத கதைகள் பேசி, நாங்கள் எதிரே வரும்போது …சட்டென்று இதழ் மூடி போலிச் சிரிப்பு உதிர்த்து.... பிறகு எங்கள் காதலின் இறுக்கம் உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் மேற்படி விஷயங்களில் சுவாரசியம் இழந்து சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது.

முதல் பார்வையில் மெலிதான ஒரு நெஞ்சக் குறுகுறுப்புதானே காதலின் முதல் படி. அந்தக் குறுகுறுப்பு தாண்டி நாங்கள், பார்த்தவுடன் புன்முறுவல் செய்யும் நிலைக்கு வந்திருந்தோம். அப் படியே கொஞ்ச நாள் கழிந்து, அவசரமாய் ஆபீஸ் ஃபைல் தேடும் போது ஒரு நாள், எங்கள் விரல் கள் மெலிதாய் இடறிக் கொள்ள, ஸாரி... என்று இருவர் இதழும் ஒருசேர முணு முணுக்க, நாங்கள் லேசாக சிரித்துக் கொண்டோம்.

இப்படியாய் நாட்கள் நகர்ந்து, பரஸ்பர குடும்ப விஷயங்கள் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்த போது, பரஸ்பர சந்தோஷங்களும், துக்கங்களும் எங்களுக்கு பரிவர்த்தனைப் பொருளானது.

அவளின் சந்தோஷங்களுக்கு நானும், எனது சந்தோஷங்களுக்கு அவளும் குதூகலித்த அதே வேளையில் அவளின் துயரத்துக்கு எனது ஆறுதல் வார்த்தைகளும், என்னுடையவற்றிற்கு அவளின் மயிலிறகு நீவல்களும் பழக்கப் பொருட்களாயின.

இந்த ஒரு படி தாண்டி, வீட் டில் நான் சாப்பிடும் போதும், குளிக்கும் போதும், வேறு ஏதாவது வேலை செய்யும் போதும் அந்தந்த வேலைகளிலான கவனம் தப்பி, அப்படியே சுவர் வெறித்து நிற்ப தும், தரை பார்த்துச் சிரிப்பதும் கண்டு என் அப்பா கடிந்து கொண்டதை பிந்துவிடம் சொல்வேன்.

ஐயோ... நானும் இதையே தான் சொல்ல நினைச்சேன்... என்றபடி பிந்துவும், தான் பல் தேய்த்துக் கொண்டிருக்கும் போது எடுத்திருந்த பேஸ்ட் கரைந்தொழுக வெறும் பிரஷஷையே வாயில் வைத்து இருபது நிமிடமாய் உராய்த்துக் கொண்டிருப்பதைச் சொல்வாள்.

பிரஷால் பற்களைத் தேய்த்துக் கொண்டிருக்கும் போது, சுவற்றில் வட்ட வட்ட வளையத்துக்கு நடுவே உன் முகம் தெரியும் பிந்து என்னும் என் கூற்றை அதீத அவசரத்தோடு, எனக்கும் அப்படியே... என்று அவள் ஆமோதிப்பாள்.
மனதில் பூத்திருப்பது காதல்தான் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்? எப்பொழுதும் மனதில் ஒரு சந்தோஷமும், அதனால் முகத்தில் ஒரு பிரகாசமும், அதனால் நடையில் செய்கையில் ஒரு துள்ளலும் எங் கள் இருவருக்கும் சொத்தாகிப் போனது.

நண்பர்கள் வட்டத்தில் நிற்கும் போது, …அந்த அழகான பெண் என்னவள் என்கிற இறுமாப்பும், அந்த இறுமாப்பினால் வரும் வதன சௌந்தர்யம் என் இயல்பாக வும் ஆகிப் போக, ச்...சே... பிந்துவையே இவன் வளைச்சுட்டாம்பா... என்ற நண்பர்களின் பொறாமையினால் எனக்குள் பொங்கும் எகத்தாளம்... அப்பப்பா, அந்த நாட்களில் நான் உச்சத்தில் பறந்தேன். பாதங்கள் கூட தரையில் பாவாமல் எப்போதும் இரண்டங்குலம் உயரே நிற்பது போன்ற பிரமைதான் எனக்குள் இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 2:26 am

பிந்துவுடனான எனது சந்தோஷப் பகிர்தல்களை என் நண்பர் குழாத்திடம் சொல்லும் போது, …வெல்டன் சிவா.... கங் கிராட்ஸ்... கோ அஹெட்... என்கிற ஊக்க வார்த்தைகள் அவர் களது உதட்டிலிருந்து வெளிப் பட்டாலும், அவர்கள் உள்ளத்துக்குள் உருக்கொண்டிருக்கும் அழுக் காற்றுத் தீ அவர்கள் விழிகளில்
வெளிப்படுமாகையால் அதை ஆழ ஊடுருவி ரசித்து நான் களிப்பெய்துவேன்.

எங்கள் காதல் சீராய் வளர்ந்தது. நாங்கள் …ஐ லவ் யூ சொல்லிக் கொண்டோம். அதீத சந்தோஷம் எங்களுக்குள் முகிழ்க்கும் போது, அதைத் தெரிவித்துக் கொள்ள கை விரல்கள் கோர்த்துக் கொள்வோம். மேலான துக்கம் மேலிடும்போது, நான் அவள் குழல் கோதுவேன். அவள் என் நெஞ்சு நீவுவாள்.

இப்படியாய், கருத்தொருமித்த காதல் வாழ்வுக்கு உரிய அத்தனை இலக்கணங்களும் எங்களுக்குப் பொருந்தி வந்தது குறித்து நான் களி கொள்ளாத நிமிஷங்கள் இல்லை.
காதலின் அத்தனை இலக்கணக் குறிப்புகளும் பொருந்தி வரும் போது, அதன் முக்கியமான இலக் கணப் பிரிவான, …பிரிவு என்ப தும் இல்லையென்றால் அந்தக் காதல் எப்படி முழுமை பெறும்? காதல் இலக்கணத்தின் அதி முக்கி யப் பிரிவல்லவா இந்தப் …பிரிதல்.
அதையும் ஒரு நாள் நாங்கள் நுகர நேர்ந்தது.

இணக்கமான எங்கள் காதல் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக ஆரம்பிக்க, அந்த இறுக்கம் தன்னைப் பறை சாற்றிக் கொண்டு விடும் தானே... ஊர் உலகத்துக்கு மட்டுமின்றி பெற்றுப் போட்ட தாய், தந்தையருக்கும் விஷயம் ஒரு நாள் எட்டி விடும் தானே...

என் அப்பா ருத்ர ஸ்வரூபியாய் பிரம்பு கொண்டு கர்ஜித்த போதும், அம்மா நெஞ்சம் பிழிய அழுத போதும், நான் அவர்களை ஆசுவாசப்படுத்தினேன். அழுது அரற்றி ஆலாபிக்கும் அளவுக்கு உங்கள் பையன் மோசமானவனில்லை என்று அவர்களுக்குப் புரிய வைத்தேன். குல கோத்திர வித்தியாசங்கள் மன ஒருமைக்கு முன் முக்கியமான விஷயங்களல்ல என்று அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். ஏதோ ஒருவாறு அவர்கள் என் சமாதானங்களை ஜிரணித்தாலும், கை நிறையைச் சம்பாதிக்கும் ஒரு ஆண் பிள்ளை என்கிற என் ஆளுமை அவர்களை முற்றாய்ப் பணிய வைத்தது. என் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட அவர்களை நிர்ப்பந்தித்தது.
நான் என் குடும்பத்தில் கொண்ட இந்த ஒரு ஆளுமை, பெண்ணாகப் பட்டவளுக்கு இந்தச் சமுதாயத்தில் வழங்கப்படவில்லை என்பது தானே ஒரு வலி நிறைந்த நிஜம். என் விஷயத்தில் அந்த நிஜம் ஊர்ஜிதமாகியது.

என் பிந்துவால் அவள் பெற்றோர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.
இருபத்தைந்து வயதை எட்டிய ஒரு மேஜர் பெண். நாகரிகமான இந்த உலகத்தில், இருநு}று பேர் பணி புரியும் ஒரு இடத்தில் அந்தச் சூழலுக்கு ஏற்ப வாழும் கலை தெரிந்த ஒரு பெண். மாதம் முதல் தேதியானால் முள்ளங்கிப் பத்தை யாய் ஆறாயிரம் ரூபாய் கொண்டு வரும் பெண். இவ்வளவு இருந்தும், அவள் சமுதாயத்தில் விபரமுள்ளவளாக, முடிவெடுக்கும் திறனுள்ளவளாக மதிக்கப்படுவதில்லை.

பிந்துவின் குடும்பம் அவளின் காதல் விபரம் கேட்டு உரத்துக் கத்தியது. என்ன ஜாதிக்காரன் அவன்? என்று என்னைப் பற்றி விசாரித்து, ஹோ... என்று தலை யிலடித்துக் கொண்டது. குடும்பப் பெண்ணா இவள்? என்று அவ ளின் நடத்தையில் சந்தேகித்து கணுக்கால் விளிம்பில் சூடு போட்டது. அவளால் தங்கள் குடும்ப மானம் காற்றில் பறந்து விட்டதாய் பிந்துவைக் கொச்சைப் படுத்தியது.

இது மட்டுமே அவள் குடும்பம் செய்திருந்தால் எங்கள் காதல் பிழைத்திருக்கும். நாங்கள் எங்காவது கண்காணாத இடத்துக்குச் சென்று கடிமணம் புரிந்து கொண்டிருப்போம். இந்த ஊரும் மனிதர்களும் நமக்கு வேண்டா மென்று முடிவு கட்டி வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி வேறிடத்தில் ஜாகை அமைத்திருப்போம்.
ஆனால் எங்கள் காதல் தான் இலக்கணம் தவறாத காதல் ஆயிற்றே* கடைசிக் குறிப்பிலக் கணம் கூட அடி பிறழாமல் நிகழ்ந்து விடுமல்லவா...*

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 2:26 am

பிந்து அலுவலகம் வருவது நிறுத்தப்பட்டது. அவளின் ராஜினாமா கடிதத்தை அஞ்சல் துறை கவர்ந்து வந்து கொடுத்து எங்கள் காதலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றது. அத் தோடு விட்டால் நான் பிந்துவின் வாசனை நுகர்ந்து அவளின் அடி தேடி வந்து விடுவேன் என்று பயந்து அவள் குடும்பம், வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு பறந்து போனது.

சிலுவையிலறையப்பட்ட எங்கள் காதல் குற்றுயிரும் கொலை உயிருமாய் கொன்று புதைக்கப்பட்டு, எங்காவது மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து விடப்போகிறதோ என்கிற பயத்தில் கல்லறையும் எழுப்பப்பட்டு அதன் மேல் அசைக்க முடியாத ஒரு கல்லும் நகர்த்தி வைக்கப்பட்டது.

அன்று மனம் நொந்து மண்ணில் விழுந்த நான், இன்னும் அந்த மாளாத் துக்கத்திலிருந்து மீளவில்லை. குளிக்கும் போதும், சாப்பிடும் போதும், பல் துலக்கும் போதும் கூட, அன்று சுவற்றில் வளையம் வளையமாய்த் தெரிந்த பிந்து இன்னமும் தெரிந்து கொண்டிருக்கிறாள். அன்று என் வாழ்க்கையில் சந்தோஷமும், துக்கமும் இருந்தும், இவற்றுக்காய் என்னோடு சேர்ந்து சந்தோஷிக்க வும், எனக்கு நெஞ்சு நீவி ஆறுதலளிக்கவும் பிந்துவும் என் அருகில் இருந்தாள். இன்று, அற்ற குளத்து அறு நீர்ப்பறவை போல் பிந்துவும் அவளோடு சேர்ந்து என் சந்தோஷங்களும் என்னை விட்டுப் போய் விட்டன. துக்கம் மட்டுமே, கொட்டில் ஆம்பல் நெய்தல் செடிகள் போல என்னை விட்டு நீங்கா மல் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது.

என்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி சுற்றமும் நட்பும் வற்புறுத்தின. அப்பா மிடுக்கு குறையாமலும், அம்மா அன்பு பொருந்திக் கெஞ்சியும், நண்பர்கள் ஆதுரமாய் என் தோள் தடவியும், என்னைத் திரு மணம் செய்து கொள்ளப் பணித் தும் நான் முச்சட்டையாய் மறுத்து விட்டேன். என் பிந்துவின் நினை விலேயே ஒவ்வொரு நிமிஷத்தை யும் ஒவ்வொரு யுகமாய் நகர்த்தி எட்டு வருஷத்தைப் பூர்த்தி செய்தும் விட்டேன்.

……அவ கழுத்தில் தாலி இருக்கு பாருடா... என்று உச்சமாய்க் கத்திய வாசுவின் குரலைக் கேட்டு விட்ட பிந்து, ஆச்சரியமாய் விழி விரித்து எங்கள் இருவரையும் பார்த்து அருகே ஓடி வந்தாள்.

நான் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற பஞ்சேந் திரியங்களும் விதிர்த்து நிற்க மௌனமாகிப் போனேன். ஆனால் பிந்து என்னை மாதிரி மிரள வில்லை. என்னைப் பார்த்த கணத்தில் சிறிது ஆச்சரியப்பட்டவள், பிறகு ரொம்பவும் சகஜ மாகப் பேச ஆரம்பித்தாள். ஊர் பற்றி விசாரித்தாள். ஆபீஸ் பற்றி விசாரித்தாள். நண்பர்களை விசாரித்தாள்.

ஊரிலிருந்து வந்த பின்பு மூன்று வருடங்கள் கல்யாணம் செய்து கொள்ளப் பிடிக்காமல் இருந்து, பிறகு செய்து கொண்ட தாய்ச் சொன்னாள். கல்யாணத்திற்கு பத்திரிகை கூட அனுப்ப முடியாமல் போய் விட்டது என்று வருந்தினாள். தன் கணவர், வங்கியில் மேனேஜராய் இருப்பதாய் சொன்னாள். இது எல்லாவற்றையும் மிகவும் படபடப்புடன் சற்றும் உறுத்தலின்றி பிந்து சொன்ன விதம் என்னை வெகுவாய் வியப்பிலாழ்த்திற்று.

நான் என்னைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. அவளும் கேட்கவில்லை. அவள் கேட்வில்லை என்ற ஒரு விஷயம் மட்டும் என்னைக் கொஞ்சம் சங்கடப்பட வைத்தது. எனக்கு அவள் புருஷனைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அவள் தன் பழைய காதல் வாழ்க்கையைப் பற்றி தன் புருஷனிடம் சொல்லியிருப்பாளா என்று யோசித்தேன். சொல்லி யிருக்க வாய்ப்பில்லை என்று எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன். சொல்லியிருந்தாலும் அதனை அதே அளவு வீரியத் துடன் முழுமையாய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

இப்படி இவள் உள்ளுக்குள் இத்தனையை வைத்துக் கொண்டு எப்படி உறுத்தலில்லாமல் உலா வருகிறாள்? ஒரு வேளை மனசினுள் ஆயிரம் வேதனைகளை அடக்கிக் கொண்டு வெளிப் பார்வைக்கு சகஜமானவளாய் காண்பித்துக் கொள்கிறாளோ...? அப்படியிருந்தாலும் அகத்தின் அழகு சிறிது கூடவா முகத்தில் தெரியாமல் போய் விடும்*

எனக்குள் எண்ணங்கள் கல்லெறிபட்ட குளத்து வளையமாய்ப் பெருகப் பெருக, பிந்துவின் கணவரைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் அதிதீவிரப் பட்டது. அவளிம் அதைக் கேட்டு விடலாமா என்று நான் யோசித்த போது, அவளே முந்திக் கொண்டு சொன்னாள். ……என் கணவர் இன்று வீட்டில்தான் இருக்கிறார். அருகில்தான் வீடு. வீட்டுக்கு வாருங்களேன் என்று எங்களை அழைத்தாள்.

நான் நடைப் பிணமாய் அவள் பின்னால் அவள் இல்லம் சென்றேன்.
……என்னங்க... இதுதான் சிவா. அவர் வாசு. என்னோட பழைய ஆபீஸ்ல என்னோட ஒண்ணா ஒர்க் பண்ணவங்க-பிந்து சொல்லி முடித்ததுதான் தாமதம்.

சுருண்ட கேசத்துடன் ஆறடி உயரம் இருந்த அழகான அவள் புருஷன் என் கை பற்றிக் குலுக்கி னான்.……பிந்து நீ நாலு வருஷமா ரொம்ப டீப்பா லவ் பண்ணதா சொல்லுவியே... மிஸ்டர் சிவா. அவர்தானே இவர்? இயல்பான முகத்தோடு என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்த பிந்துவின் புருஷனைப் பார்க்க மாட்டாமல், என் முகம் இயல்பு மீறிக் கோணிக் கொண்டது. நான் இயல்பு மறந்து இறுக்கமானேன்.

சிலர் வாழ்க்கையை மிகவும் சுலபமாய் எடுத்துக் கொள்கிறார்கள், பிந்துவை மாதிரி. அவளது புருஷன் மாதிரி. அதே வாழ்க்கையை வேறு சிலர் ரொம்பவும் கஷடமானதாய் ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள் என்னை மாதிரி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக