புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_m102013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:25 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 1

மின்வெட்டு தொடர்பான கண்துடைப்பு நாடகங்கள் இந்த வருடமும் தொடர்ந்தன. தேங்காய் சட்னி அரைக்கக்கூட மின்சாரம் விநியோகிக்க முடியாமல் திணறியது மின்சார வாரியம். அனல், புனல் மின் நிலையங்கள் பல நேரங்களில் படுத்துவிட்டன. கூடுதல் மின்சாரம் கேட்ட தமிழக அரசுக்கு, 'பெப்பே’ காட்டியது மத்திய அரசு. சராசரி எட்டு மணி நேர மின்வெட்டு, மாநிலத்தில் வளர்ச்சி விகிதத்தை 4.6 சதவிகிதம் வரை குறைத்துவிட்டது.

மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ, 'இது தற்காலிகத் தட்டுப்பாடு. கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின்தேவை காரணமாக இந்த மின்வெட்டு’ என்று கூசாமல் பொய் சொன்னார். குளிர்காலத்திலும் கோக்குமாக்காக மின்வெட்டு தொடர, 'காற்று வீசவில்லை’ என்று கதறினார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:26 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 2

தியேட்டரில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே, சந்தாதாரர்களின் டி.டி.ஹெச்-சில் படம் ஒளிபரப்பப்படும்!’ - 'விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்துக்கு கமல் திரி கிள்ள, திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, பணப் பஞ்சாயத்து என்று அதகளம் ஆரம்பம். இடையில் எதிர்பாராமல் புகுந்தது மதம். விசேஷத் திரையிடலில் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுக்க, 'விஸ்வரூபம்’ வெளியீட்டுக்கு விழுந்தது தற்காலிகத் தடை. 'என் படைப்புச் சுதந்திரத்துக்கு பங்கம் வந்தால், நாட்டை விட்டே வெளியேறுவேன்!’ என்று அந்த வினோதமான சூழலை கமல் வெகு கவனமாகக் கையாண்டார். 'விஸ்வரூபம் வெளியாகும் 524 திரையரங்குகளில் பாதுகாப்புக்கு என நியமிக்க 56,440 போலீஸ் நம்மிடம் இல்லை’ என்று 'விஸ்வரூபம்’ தொடர்பான நீண்ட விளக்கத்தில் குறிப்பிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

தேசியக் கவனத்தை ஈர்த்த விவகாரம், ஏகப்பட்ட பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'ஏழு காட்சிகள்’ நீக்கப்பட்டு வெளியானது. சர்ச்சை கொடுத்த ஓப்பனிங் ப்ளஸ் கமலின் ஆக்ஷன் அவதாரம் படத்துக்கு 'விஸ்வரூப’ வெற்றி கொடுத்தது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:27 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 3

'2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை ஏன் அரசிதழில் வெளியிடவில்லை?’ என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டிக்க, உடனடியாக அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட, 'என் 30 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் இதைத்தான் மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்’ என்று பூரித்தார் ஜெயலலிதா. காவிரிப் பாசன விவசாயச் சங்கங்கள், ஜெயலலிதாவுக்கு 'பொன்னியின் செல்வி’ விருது வழங்கின. தீர்ப்பு, அரசிதழில் இடம்பிடித்ததில் தி.மு.க-வின் பங்கு குறித்து அறிக்கை வாசித்தார் கருணாநிதி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:28 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 4

'அழகிரிக்கு யார் ஆதர்சம்?’ என்பதில் தொடங்கியது 'பொட்டு’ சுரேஷ§க்கும், 'அட்டாக்’ பாண்டிக்குமான போட்டி. இந்த இருவரின் முட்டல், மோதல் அடிக்கடி தீப்பிடிக்க, திகில் அடித்தது மதுரை. கைமீறிய விபரீதம் காரணமாக, தன் வீட்டின் அருகிலேயே காரில் வந்த 'பொட்டு’ சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். 'பொட்டு’ சுரேஷைப் போட்டுத்தள்ளுவதற்காக பல மாதங்களுக்கு முன்னரே மதுரையைவிட்டு வெளியேறியதாகச் சொல்லப்படும் 'அட்டாக்’ பாண்டியை, இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறது தனிப்படை போலீஸ். இடையில் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டுவிட்டதாகக் கிளம்பியது பரபர வதந்தி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:29 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 6

கருணாநிதி, சுமார் 450 கோடிகளை வாரியிறைத்து ஆசை ஆசையாக இழைத்துக் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, சிறப்புப் பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டது ஜெயலலிதா அரசு. அதை எதிர்த்த வழக்கை, 'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என்று நிராகரித்தது உயர் நீதிமன்றம். தி.மு.க-வின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரிக்க, பசுமைத் தீர்ப்பாயம் மருத்துவமனைக்கு பச்சைக் கொடி காட்ட உற்சாகமான ஜெயலலிதா, இந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றும், புனரமைக்கும் பணிகளுக்கென ஒட்டுமொத்தமாக 104 கோடிகளை ஒதுக்கினார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:29 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 5

தி.மு.க-வில் தன் நட்சத்திர அந்தஸ்தை மெருகேற்றிக்கொண்டார் குஷ்பு. 'தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் தி.மு.க-வின் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குஷ்பு ஜஸ்ட் லைக் தட் சொல்ல, கொதித்துக் கிளம்பிய ஸ்டாலின் அணித் தொண்டர்கள், திருச்சி சென்ற குஷ்பு மீது செருப்பு வீச்சும், சென்னையில் அவர் வீட்டில் கல்வீச்சும் நடத்தினர். அப்செட் குஷ்பு, அமைதியாக இருந்தார். இதில் கருணாநிதியின் ஆதரவு குஷ்புவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட, நீறுபூத்த நெருப்பாக அடங்கியது போல இருக்கிறது விவகாரம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:30 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 7

இது நிச்சயம் பகீர், திகீர் புள்ளிவிவரம்! 'கடந்த 10 ஆண்டுகளில், விவசாயத் தொழிலைக் கைவிட்டு நகரத்தை நோக்கி நகர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, சுமார் ஒன்பது லட்சம்’ என்றது தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. அன்று, ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கலாம். இன்று, டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ 5 ரூபாய். கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவு, ஆட்கள் பற்றாக்குறை... போன்ற பல காரணங்கள், விவசாயிகளை 'டவுன்’ பஸ் ஏறவைத்துவிட்டது! ஏர் உழைப்பாளர்களின் கோரிக்கைகள், 'பார்’ நடத்தும் அரசாங்கத்தின் செவிகளை எட்டுவதாக இல்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:30 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 9

ஆசிட் விற்பனை தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்த, வினோதினியின் உயிரைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று. தன் காதலை ஏற்றுக்கொள்ளாத வினோதினி மீது, 2012 நவம்பரில் ஆசிட் வீசினான் சுரேஷ்குமார். முகம் முழுக்க வெந்து, கண் பார்வையைப் பறிகொடுத்த வினோதினி, மூளை நரம்பு பாதிக்கப்பட்டு, நான்கு மாத சிகிச்சைக்குப் பின் பரிதாபமாக இறந்தார். சுரேஷ்குமாருக்கு, காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மகளின் மரணம் அளித்த நிம்மதியற்ற வாழ்க்கைச் சூழல் காரணமாக, வினோதினியின் தாய் சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:30 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 8

சென்னைப் பாட்டாளிகளின் பகல் உணவுக்குப் பந்தி வைக்க, ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாக உதயம் ஆனது 'அம்மா உணவகம்’. இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்... என மலிவு விலை உணவகங்களைத் தொடங்கியது சென்னை மாநகராட்சி. அந்த மலிவு விலையும், தரமும், சுவையும் பாராட்டுகளைக் குவிக்க, எலுமிச்சை / கறிவேப்பிலை சாதங்கள் என மெனு நீண்டதோடு, உணவகங்களின் எண்ணிக்கையும் 200 ஆக உயர்ந்தன. தொடர்ந்து 'அம்மா காய்கறி அங்காடி’, 'அம்மா குடிநீர்’ என மலிவு விலை பஜார்கள் தோன்றின!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 4:36 pm

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் 10

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவ முகாமின் மணல் மூட்டைகளுக்கு மத்தியில் பிஸ்கட் சாப்பிடும் படத்தையும், பிறகு அவன் கொல்லப்பட்டுக்கிடக்கும் காட்சிகளை யும் வெளியிட்டது சானல் 4. அந்தப் படங்கள் தமிழ கத்தைக் கொதிகலனாக்கின. குறிப்பாக, தமிழகக் கல்லூரி மாணவர்கள், ஐ.நா.சபையில் தாக்கல்செய்யப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழகம் எங்கும் வீதிக்கு வந்து போராடினர். போராட்ட அனலைத் தாங்க முடியாமல், தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார்கள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக