புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
i6appar
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
443 Posts - 47%
heezulia
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
332 Posts - 35%
Dr.S.Soundarapandian
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
i6appar
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_m1030 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை கொங்கு நாட்டு சமையல்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:26 pm

First topic message reminder :


அரிசி வடை


தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - 6 கப், துவரம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3 கப்,  நறுக்கிய கொத்தமல்லித் தழை - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவை யான அளவு, உப்பு - தேவையான அளவு.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 1

செய்முறை:  அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அதனுடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும். ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு  2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும் (மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது.... ரொம்ப இளக்கமாகவும் இருக்கக் கூடாது). கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.

இதற்கு தக்காளி ரச அடி வண்டல், தயிர் போன்றவற்றை தொட்டுக் கொள்ளலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:31 pm

சின்ன வெங்காய குழம்பு


தேவையானவை: பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் (சிறியது) - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 11

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் புளியைக் கரைத்து விடவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

பச்சை மிளகாய்க்குப் பதில் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்தும் தயாரிக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:32 pm

கச்சாயம்


தேவையானவை: பச்சரிசி  - ஒரு கப், பாகு வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு கப்.

 30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 12

செய்முறை:  பச்சரிசியைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து நிழலில் உலர்த்தி, நைஸாக பொடித்து, சிறிய கண்ணுள்ள ஜல்லடையில் 2, 3 முறை சலிக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும். பாகு உருண்டை பதம் வந்தபின் அதில் மாவை கொட்டிக் கிளறவும். (எப்போதும் மாவு அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்). கிளறிய மாவை எடுத்துப் பார்க்கும்போது மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது... லூஸாகவும் இருக்கக் கூடாது.

மாவின் மீது நெய் தடவி வைக்கவும் (மாவை உபயோகிக்கும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்). அடுத்த நாள் வாழை இலையில் நெய் தடவி, மாவை உருட்டி வைத்து, லேசாக தட்டவும். கடாயில் நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த கச்சாயத்தை போட்டு, உடனே திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து சாப்பிடவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:32 pm

பச்சை மிளகாய் குழம்பு


தேவையானவை: பச்சை மிளகாய் - 10, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,  கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: பச்சரிசி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 13

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி 'கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி... தனியே எடுத்து வைக்கவும்.
புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும். குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:33 pm

கார அச்சு முறுக்கு


தேவையானவை: பொன்னி பச்சரிசி - 2 கப், காய்ந்த மிளகாய் - 5, சலித்த பொட்டுக்கடலை மாவு - கால் கப், சுத்தம் செய்த எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 14

செய்முறை:  பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி...  காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள் சேர்த்துக் கரைக்கவும் (மாவு தண்ணியாக இருக்கக் கூடாது. பஜ்ஜி மாவு பதம் இருக்க வேண்டும்). கடாயில் முறுக்கு அச்சு முழுகுமளவுக்கு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அச்சை எண்ணெயில் போடவும். அச்சு சூடானதும், வெளியில் எடுத்து மாவில் தோய்த்து பிறகு கைப்பிடியை பிடித்துக்கொண்டு எண்ணெயில் விடவும். அச்சில் உள்ள மாவு கழன்று விழுந்துவிடும். மாவு விழவில்லை என்றால், நீண்ட கம்பியால் தள்ளிவிடலாம். முறுக்கு இருபுறமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.

குறிப்பு: மாவை அரைத்தவுடன் முறுக்கு செய்யவும். மாவு புளிக்கக் கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:33 pm

ஆப்பம்


தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், இட்லி  புழுங்கல் அரிசி - ஒரு கப், வெந்தயம், உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 15

செய்முறை:  முதல் நாள் இரவு புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மறுநாள் ஆப்பக்கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, ஆப்ப மாவை விட்டு கடாயை சுழற்றவும். பிறகு மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஆப்பம் மொறுமொறுவென்று ஆனதும் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:34 pm

மகிழம்பூ முறுக்கு


தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - 4 கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 6 அல்லது 7, வெண்ணெய் - சிறிதளவு, எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 16

செய்முறை:  அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் காய்ந்த மிளகாய், பெருங் காயம், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, தண்ணீரில் சுத்தம் செய்த எள் மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். மாவை மகிழம்பூ அச்சில் (கடைகளில் கேட்டால் கிடைக்கவும்) போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:34 pm

தட்ட வடை


தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி  - ஒரு கப், பச்சரிசி - கால் கப், உளுத்தம்பருப்பு -  2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 17

செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து, சலிக்கவும். புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து, மாவுடன் சேர்த்து, பொடித்த உளுத்தம் பருப்பு, எள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிது சூடான எண் ணெய் சேர்த்துப் பிசைந்து, கையில் எண்ணெய் தொட்டு, கொஞ்சம் மாவை எடுத்து வாழை இலையில் வைத்து லேசாக தட்ட வும். தட்டியவற்றை வெள்ளை காட் டன் துணியில் போட்டு, 5 நிமிடம் கழித்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:35 pm

இட்லி சாம்பார்


தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், உரித்த சாம்பார் வெங்காயம், நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு (சேர்த்து) - ஒரு கப், புளிக்கரைசல் - கால் கப் (கெட்டியாக இருக்கக் கூடாது), நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 18
வறுக்க: தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத் தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங் காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண் ணெய் - சிறிதளவு.

செய்முறை:  துவரம்பருப்பைக் கழுவி, அதனுடன் காய்களை சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான தண் ணீர் விட்டு குழைய வேக வைக்கவும். பிறகு வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும். வேக வைத்த துவரம் பருப்பு, காய்களுடன் புளிக்கரைசல், அரைத்த விழுது சேர்த்து... தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப் பிலை தாளித்து சாம்பாரில் சேர்த்து, நல்ல மணம் வந்தபின் இறக்கி, நறுக் கிய கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

குறிப்பு: இந்த சாம்பார் ரொம்ப கெட்டியாக இருக்கக் கூடாது. விருப்பப் பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:35 pm

தேங்காய் போளி


தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா - 3 டீஸ்பூன், நல் லெண்ணெய் - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு, வாழைப் பழம் - ஒன்று.

பூரணத்துக்கு: தேங்காய் துருவல் - 2 கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 19

செய்முறை:  கோதுமை மாவு, மைதாவுடன் தேவையான தண்ணீர்  சேர்த்துக் கலந்து, சப்பாத்தி மாவைவிட தளர்வாக பிசையவும். பிறகு அதன் மேல் கால் கப் நல்லெண்ணெய் விட்டு 3 மணி நேரம் மூடி வைக்கவும். தேங் காய் துருவல், ஏலக்காய்த்தூளை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கவும். இதனை அப்படியே கடாயில் போட்டு, இதில் உள்ள நீர் சுண்டும் வரை வறுக்கவும். ஆறியவுடன் உருண்டை களாக உருட்டவும்.

மேல் மாவு சிறிது எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து கைகளால் பரவலாக தட்டி, அதில் பூரண உருண்டை வைத்து மூடி, அப்படியே தோசை வடிவத்தில் போளியாக தட்ட வும். சூடான தோசைக்கல்லில் போளி யைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசைத்திருப்பியால்  எடுத்து... அதன் மேல் நறுக்கிய வாழைப்பழம், நெய் விட்டு சூடாகப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:36 pm

ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி


தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், சலித்த கடலை மாவு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 2 20

செய்முறை: இட்லி புழுங்கல் அரிசி, துவரம்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த உடனேயே அதனுடன் கடலை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, வாழைக்காயை மெலிதாக சீவி மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ். சோடா உப் புக்கு பதில் ஒரு சிறிய கரண்டி அளவு தோசை மாவு சேர்க்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக