புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
72 Posts - 54%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 59 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 59 of 81 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 70 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 59 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:06 am

“கியூபா தீவிரவாத நாடல்ல” – சொல்கிறது அமெரிக்கா!

அமெரிக்காவிற்கும், கியூபாவிற்கும் இடையே நடைபெற்ற பனிப்போர்களும், அதனால் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட உறவு பாதிப்புகளும் உலகம் அறிந்த ஒன்று. இதனால் பல வருடங்களாக இரு நாடுகளுக்கும் தூதரக உறவுகள் இல்லாமல் இருந்து வந்தன. அதுமட்டுமல்லாமல், கியூபா கொரில்லா அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வந்ததால் அந்நாட்டை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரவாத நாடாக பிரகடனப்படுத்தியது.

இந்நிலையில், அதே அமெரிக்கா கியூபா தீவிரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் உறவு துளிர்க்க ஆரம்பித்தது தான். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு தயாராகின.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவர், கியூபாவை தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக 45 நாள் மறு ஆய்வுக்காலம் ஒன்றையும் அறிவித்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த ஆய்வின் முடிவில் தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை மூலம் கியூபா மீது மேற்கத்திய நாடுகள் விதித்து இருந்த பொருளாதார தடைகள் உட்பட பல்வேறு தடைகள் நீங்கின.



உலகச் செய்திகள்!  - Page 59 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 3:54 am

மசூதியில் தற்கொலைபடை வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பரிதாப பலி!

மைடுகுரி: நைஜீரியா மசூதியில் தற்கொலைப்படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுமிகளையும், பெண்களையும் அவர்கள் கடத்துவதோடு, ராணுவம் மீது தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நைஜீரியா தலைநகர் மைடுகுரியில் வடகிழக்குப் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று மாலை தொழுகை நடைபெற்றது. அப்போது, தற்கொலைப்படை தீவிரவாதி தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்.

இந்த தாக்குதலில், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் மசூதிக்கு வெளியே இருந்தவர்கள் என மொத்தம் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 28 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 59 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 3:55 am

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 89 தலைவர்கள் ரஷ்யாவில் நுழைய தடை

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 89 தலைவர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதின் அரசு ரகசிய பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பது அண்மையில் தெரியவந்துள்ளது. ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைன் நாட்டில் எல்லை பகுதியான கிரிமியாவில் ரஷ்யர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்கள் தங்கள் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என ஆயுத போராட்டம் நடத்தினர். பின்னர் பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் சேர்ந்து கொண்டனர். கிரிமிய கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய ராணுவம் நேரடியாக உதவி அளித்தது.

இதற்கு ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. ரஷ்ய தலைவர்கள் பலருக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன. இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலருக்கு ரஷ்யா தடை விதித்தது.

இது தொடர்பான ரகசிய பட்டியல் ஒன்றை புதின் அரசு தயாரித்துள்ளது. இதில் 89 தலைவர்கள் இடம் பெற்றிருப்பது அண்மையில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் முன்னாள் துணை பிரதமர் நிக் கிளெக் இந்த ரகசிய பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதே போல் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மால்கமுக்கும் ரஷ்யா தடை விதித்துள்ளது. தடைவிதிக்கப்பட்ட இங்கிலாந்து தலைவர்கள் பட்டியலை கடந்த வாரம் ஐரோப்பிய கூட்டமைப்பிடம் ரஷ்யா அளித்த போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இங்கிலாந்தில் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இக்கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு ரஷ்யா தடைவிதித்திருப்பதற்கு இங்கிலாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 59 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2015 10:44 pm

வங்கதேசத்திற்கு ரூ.12,800 கோடி கடன் உதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

41 ஆண்டுகால எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. பல துறைகளிலும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தீர்வுகள் காண நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி எடுக்கப்பட்டுள்ளது.

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் வங்கதேசத்திற்கு சென்றனர். அங்கு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர்.

கடலோர பாதுகாப்பு, மனித உரிமை மீறலை ஒழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் போலியாக புழங்கும் இந்திய கள்ள நோட்டுக்களை ஒழிப்பது உள்ளிட்டவைகளில் இருநாடுகளுக்கும் இணைந்து செயல்பட உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், பல்வேறு துறைகளில் 22 ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது. வங்கதேசத்தில் வளர்ந்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க இருநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், வங்கதேசத்திற்கு ஏற்கனவே வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவியுடன் தற்போது புதிதாக ரூ.12,800 கோடி கடனுதவியையும் அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.



உலகச் செய்திகள்!  - Page 59 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 09, 2015 12:09 am

சவுதி அரேபியாவில் மத அவமதிப்பு: குற்றம் செய்தவருக்கு 1000 சவுக்கடி தண்டனை

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரைப் படாவி. இவர் இண்டர்நெட்டில் மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் மீது மத அவதிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே அவர் கடந்த 2012–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் படாவிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1000 சவுக்கடி தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து முதல் கட்டமாக 50 சவுக்கடி தண்டனை ஜெட்டாவில் பொதுமக்கள் முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்த வீடியோ செல்போன் மூலம் பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் பரவியது.

இதனால் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து சவுதி அரேபியா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் கூறப்பட்டது.

அதில் ரைப் படாவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1000 சவுக்கடியையும் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சவுக்கடி தண்டனையை மீண்டும் தொடங்கி விடுவார்கள் என அவரது மனைவி அன்சாப் ஹைதர், டி.வி. பேட்டி ஒன்றில் அச்சம் தெரிவித்துள்ளார். தற்போது இவர் கனடாவில் தங்கியுள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 59 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 12:34 am

சிவா wrote: 2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தாலான பங்கி கிண்ணங்கள் ரஷ்யாவில் கண்டெடுப்பு

உலகச் செய்திகள்!  - Page 59 02feccc9-755c-4c57-98af-2b4947577ad2_S_secvpfரஷ்யாவில் பழங்கால மன்னர்கள் பயன்படுத்திவந்த 2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்திலான ’பங்கி’ (கஞ்சா மற்றும் அபின் கலந்து தயாரிக்கப்படும் ஒருவித போதை பானம்) கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

பிரபல கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடோட்டஸ், இயேசு கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் ரஷ்யாவை ஆண்ட அரசர்கள் தங்கக் கிண்ணத்தில் பங்கி தயாரித்து அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த மதுவின் போதையானது, வீராவேசமாக போர்க்களத்தில் சண்டையிடும் ஆற்றலை அவர்களுக்கு வழங்கியது என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகையில், முந்தைய ரஷ்ய மன்னர்களும், தளபதிகளும் பயன்படுத்தியதாக நம்பப்படும் பங்கி கிண்ணங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வளையல்கள் ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இப்பவும் வடக்கே சிவராத்திரி அன்று இந்த 'பங்கி' குடிப்பார்கள், எல்லோருமே சிவனின் பிரசாதம் என்று சொல்லி குடிப்பார்கள்...........தங்க பாத்திரத்தில் இல்லை மண் பாண்டத்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 12:34 am

சிவா wrote: சவுதி அரேபியாவில் மத அவமதிப்பு: குற்றம் செய்தவருக்கு 1000 சவுக்கடி தண்டனை

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரைப் படாவி. இவர் இண்டர்நெட்டில் மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் மீது மத அவதிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே அவர் கடந்த 2012–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் படாவிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1000 சவுக்கடி தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து முதல் கட்டமாக 50 சவுக்கடி தண்டனை ஜெட்டாவில் பொதுமக்கள் முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்த வீடியோ செல்போன் மூலம் பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் பரவியது.

இதனால் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து சவுதி அரேபியா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் கூறப்பட்டது.

அதில் ரைப் படாவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1000 சவுக்கடியையும் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சவுக்கடி தண்டனையை மீண்டும் தொடங்கி விடுவார்கள் என அவரது மனைவி அன்சாப் ஹைதர், டி.வி. பேட்டி ஒன்றில் அச்சம் தெரிவித்துள்ளார். தற்போது இவர் கனடாவில் தங்கியுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1142924

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2015 10:38 pm

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஜிம்பாப்வே டாலர் விலை 35,000,000,000,000,000

ஜிம்பாப்வே நாட்டில் புழங்கி வரும் அந்நாட்டு பணமான டாலர் மதிப்பு அடிமட்டத்துக்குச் சென்றுவிட்டதையடுத்து அதற்கு பதிலாக அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதாவது பயனற்ற தங்கள் டாலரை முற்றிலும் ஒழிக்க அதிபர் ராபர்ட் முகாபே முடிவெடுத்து விட்டார்.

இதனையடுத்து 175 ஜிம்பாப்வே டாலர்கள் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அமெரிக்காவின் 5 டாலர் தொகை வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைகளின் படி பயனற்ற, மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்த ஜிம்பாப்வே டாலர்கள் முழுதும் சட்ட ரீதியாக செப்டம்பரில் முடிவுக்கு வரும்.

2008-ம் ஆண்டில் ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் 500பில்லியன் சதவீதமாக சென்ற போது அந்த நாட்டு டாலர் பயன், பரிமாற்ற மதிப்புகளை இழந்து கவைக்குதவாத வெறும் காகிதமாக தேய்ந்தது. இதனையடுத்த் 2009-ம் ஆண்டு அமெரிக்க டாலர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ரேண்ட் ஆகியவை புழக்கத்துக்கு வந்தது.

2008-ம் ஆண்டு நாட்டின் விலைவாசி நாளொன்றுக்கு 2 முறை உயர்ந்ததால் மக்கள் ரொட்டி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கவே பெரிய சாக்குப்பைகளில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அந்த சமயத்தில் (2008) அதிகபட்சம் 100 டிரில்லியன் கரன்ஸியை ஜிம்பாப்வே அரசு அச்சடித்தது. வரும் திங்கள் கிழமை முதல் வங்கியில் இருக்கும் ஜிம்பாப்வே டாலரை அமெரிக்கா டாலராக மாற்றிக்கொள்ளுமாறு பொதுமக்களை மத்திய வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கு செப்டம்வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 175 quadrillion ஜிம்பாப்வே டாலர் இருக்கும் பட்சத்தில் அதை மாற்றிக்கொண்டு ஐந்து அமெரிக்கா டாலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஜிம்பாப்வே மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.

175 ஆயிரம் மில்லியன் மில்லியன் ஜிம்பாப்வே டாலர்களுக்கும் மேல் வைத்திருப்பவர்கள் 35,000 மில்லியன் மில்லியன் ஜிம்பாப்வே டாலர்களுக்கு நிகராக 1 அமெரிக்க டாலரைப் பெறலாம். அதாவது ஒரு அமெரிக்க டாலர் பெற 35,000,000,000,000,000 ஜிம்பாப்வே டாலர்கள் தேவைப்படும்.

ஒருவர் 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர்கள் வைத்திருந்தால் 40 செண்ட்கள் கிடைக்கும்.

கையில் வைத்திருக்கும் எந்த நாட்டு கரன்சியையும் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.



உலகச் செய்திகள்!  - Page 59 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 12:37 pm

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு ஓடிய காதலனுக்கு அபார்ஷன் செய்த கருவை பார்சலில் அனுப்பிய காதலி

தாய்லாந்து சாம் ராங் நூவா மாவட்டத்தை சேர்ந்தவர் வேவ் (வயது 21). இவர் 25 வயது தாய்லாந்து வாலிபரை காதலித்து வந்தார். காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். இந்த நிலையில் காதலி வேவ் கர்ப்பமடைந்தார்.

உடனடியாக காதலன் வேறு ஒரு பெண்ணை மாற்றி கொண்டார். வேவ் பலமுறை சென்று காதலரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சி கேட்டு பார்த்து உள்ளார். ஆனால் காதலர் மசியவில்லை. இந்த நிலையில் காதலி ஒரு மருத்துவமனையில் தனது 28 வார கருவை அபார்ஷன் செய்து கொண்டார். மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியாமல் வெளியே வந்த வேவ் தனது அபார்ஷன் செய்யபட்ட கருவை நன்கு துணியில் சுற்றி பார்சல் மூலமாக தனது முன்னாள் காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

காதலனின் வீட்டில் காதலனின் சகோதரி அந்த பார்சலை பெற்று உள்ளார். அதை பிரித்து பார்த்த போது அதில் இருந்த குறைமாத கருவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார். போலீசார் வந்து விசாரித்த போது தான் மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் தெரிய வந்து உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 59 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2015 1:37 am

குழந்தைகள் நலனுக்காக இயங்கி வந்த தொண்டு நிறுவனத்துக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத்: குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வந்த சர்வதேச தொண்டு நிறுவனத்துக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலலும், தொண்டு நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில், சேவ் த சில்ட்ரன், என்ற பெயரில் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, அவர்களின் முன்னேற்றத்துகக்காக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகம் மூடப்பட்டு சீல்வைக்கப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் சுமார் 1200 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், வெளிநாடுகளை சேர்ந்த ஊழியர்கள் 15 நாட்களுக்குள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டதால் தொண்டு நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து கடந்த 6 மாதங்களாக கண்காணிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்ததான் நாட்டு உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகான் கூறியதாவது:

விதிமுறைகளை மீறி இயங்கிவரும் தொண்டு நிறுவனங்களை பாகிஸ்தானில் தொடர அனுமதிக்க முடியாது. தொண்டு நிறுவனங்களை தடை செய்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அவைகள் உட்பட்டு செயல்படுவதையே விரும்புகிறோம். விதிமுறைமீறல் குறித்து தொண்டு நிறுவனத்துக்கு பலமுறை தெரிவித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுத்து முன்வரவில்லை. பாகிஸ்தானில் விதிமுறைகளை மீறில் நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சட்டத்திட்டங்களை கடைபிடிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் விஷயத்தில் வெளிநாடுகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு பாகிஸ்தான் அடிபணியாது. இவ்வாறு சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு தொண்டு நிறுவனம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ததடை தொடர்பாக எங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இந்த பிரச்னையை சர்வதேச அளவில் கொண்டு செல்வோம் என்று தொண்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 59 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 59 of 81 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 70 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக