புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
100 Posts - 48%
heezulia
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
7 Posts - 3%
prajai
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
227 Posts - 51%
heezulia
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_m10பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 12:48 pm

ஒரு பறவை பறந்து கொண்டிருக்கும்போது
மிதந்துகொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையைச் சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்

- பாலைநிலவன்

பி ன்னிரவில் எல்லா ஊர்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அதிலும் பேருந்து நிலையங்களும் அதைச் சுற்றிலும் உள்ள சிறு கடைகளில் எரியும் டியூப் லைட்டுகள் மற்றும் பாதி உறக்கம் பீடித்த பெட்டிக்கடைகள், காலியான நாற்காலிகளுடன் பால் கொதிக்கும் டீக்கடைகள், உறக்கத்தின் பிடியில் சுருண்டுகிடக்கும் வயதானவர்கள், கால்கள் மட்டும் வெளியே தெரிய உறங்கும் ஆட்டோக்காரர் என எல்லா நகரங்களும் பின்னிரவில் ஒரே சாயலுடன் இருக்கின்றன.

சில நேரங்களில் நான் எந்த ஊரில் நின்றுகொண்டு இருக்கிறேன் என்ற குழப்பம் எனக்கே ஏற்பட்டுவிடுகிறது. இது போல பின்னிரவில் காலியான பேருந்து நிலையங்களில் விழித்துக் கிடப்பதற்கென்றே சிலர் இருக் கிறார்கள்போலும்! எல்லா பேருந்து நிலையங்களிலும் அது போலச் சிலரைக் கண்டிருக் கிறேன். கிழிந்த துணிகளைத் தைத்தபடியோ, குழாயில்தண்ணீர் பிடித்தபடியோ தங்கள் உறக்கத்தைத் தொலைத்து விடுகின்ற அவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்.

ஒரு முறை டெல்லியை நோக்கி ரயிலில் போய்க்கொண்டு இருந்தேன். மத்தியப் பிரதேசத்துக்குள் ரயில் நுழைந்தபோது பின்னிரவு. உறக்கம் கலைந்து திடீரென விழிப்பு வந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியாமல் தூசி படிந்த கண்ணாடி ஜன்னலைத் துடைத்தபடியே வெளியே தெரியும் காட்சிகளைக் காணத் துவங்கினேன்.

மங்கலான வெளிச்சத்தில் காட்சிகள் வேகமாக ஓடி மறைந்தபடியே இருந்தன. இன்னது என அறிந்துகொள்ள முடியாதபடி தாவரங்களும் செடிகொடிகளும் ரயிலின் ஓட்டத்தோடு போட்டி போட்டன. பத்து நிமிடப் பய ணத்துக்குப் பிறகு ரயில் ஓர் ஆற்றுப் பாலத்தின் முன்பாக, இன்னொரு ரயில் கடந்து போவதற்காகக் காத்திருந்தது.

கீழே, பெயர் தெரியாத ஆறு ஓடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தபடியே இருந்தேன். மெல்லிய நிலா வெளிச்சம் ஆற்றின் மீது ஊர்ந்துகொண்டு இருந் தது. தண்ணீரின் வேகம் சீராக இருந்தது. அப்படியே ரயிலை விட் டுக் குதித்து தண்ணீரில் நீந்தலாம் போலிருந்தது. பார்த்துக்கொண்டு இருந்தபோதே, நிலா மேகத்திலிருந்து விலகி வெளியே வர, ஆறு ஈய நிறத் தில் தெரியத் துவங்கியது. முடிவற்ற புள்ளியை நோக்கி ஆறு ஓடிக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது.

எங்கோ கனவின் கரைகளில் நின்றிருப்பது போலிருந்தது எனக்கு. ரயிலை விட்டு இறங்கிவிடலாம் என்று மனது அடித்துக்கொண்டே இருக்க, இன்னொரு ரயில் கடந்து செல்லும் வரை அந்த ஆற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

இதுவரை பார்த்தே அறியாத ஒன்றைக் கண்டது போல மனதில் சந்தோஷம் பொங்கத் துவங்கியது. உலகம் எத்தனை வனப்பானது என்று தோன்றியது. கற்பனை மெல்ல விரியத் துவங்கியது.

இப்படித்தான் உலகம் தோன்றியிருக் கக்கூடும் அல்லவா? எல்லா நகரங்களும் இத்தனை தூய்மையும் அசலானதுமாக இருந்திருக்கக்கூடுமல்லவா என்று யோசித்தபடியே கிடந்தேன். எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. சூரிய வெளிச்சம் பளீரென பீறிடும் போது கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். கொப்பளித்துக்கொண்டு இருக்கும் வெளிச்சத்தில் மரங்கள் திமிறி நின்றிருந்தன. நேற்று கண்டது கனவு தானோ என்றுகூடச் சந்தேகம் வந்தது. ஆனால், அந்த ஆறு இன்று வரை மனதுக்குள் சப்தமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறது.

உண்மையில், பின்னிரவு உலகுக்கு அழகை உருவாக்குகிறது. பகலின் வெக்கையால் ஊர்களின் மீது படிந் திருந்த உஷ்ணத்தை, சுருக்கங்களை இரவு சுத்தம் செய்கிறது. ஒரு தாதி குழந்தையைக் குளிப் பாட்டித் துடைத்து எடுப்பது போன்று இரவின் கைகள் உலகைச் சுத்தம் செய் கின்றன. பின்னிரவில் நிழல் கோடுகள் போலத்தெரியும் ஊர்கள் எப்போதுமே மயக்க மூட்டுவதாக இருக்கின்றன.

நகரங்களைக் காண்பதைவிடவும் என்னை மிகவும் இன்றுவரை வசீகரித்து வருவது வெட்டவெளிதான். வெளிதரும் அனுபவம் விவரிக்க முடியாத நெருக்கம் தருவது. புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த் தமலை என்ற மலையின் மீது, ஒரு நாள் நண்பருடன் ஏறத் துவங்கியிருந்தேன். அந்த மலையின் மீது பழைய சமணக் கோயில் ஒன்று உள்ளது.

பெரிய மலை அது. பாறைகளின் மீது ஏறத் துவங்கியபோது வெயில் இறங்கி வழிந்துகொண்டு இருந்தது. அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, கல்லில் வெட்டப்பட்ட குளம் போன்ற ஒன்றின் முன் போய்நின்றோம். பாசி படிந்த தண்ணீரின் மீது ஒரு பிளாஸ்டிக் காகிதம் மிதந்தது. நண்பர் மலையின் மீது ஏறிவிடலாம் என்றார். மெதுவாக ஏறி, மேலே போன போது சூரியன் உச்சிக்கு ஏறியிருந்தது. நண்பரும் நானும் அந்த மலைக் கோயி லின் படிகளில் சாய்ந்து உட்கார்ந்தோம். அந்த மலையில் எங்கள் இருவரைத் தவிர, யாருமே இல்லை.

மெதுவாக வெயில் தணியத் துவங் கியது. நாங்கள் அங்கிருந்த குடை வரைகளைப் பார்த்துவிட்டு உயரமான ஒரு பாறை மீது ஏறி நின்றோம். அப் போது மேற்கிலும் வடக்கிலும் எல்லை யற்ற பெரும்பரப்பு விரிந்துகிடப்பதைக் கண்டேன். அதிலும் மேற் கில் சரிந்துகொண்டு இருக் கும் சூரியனும், அதன் மடி யில் கிடப்பது போலத் தெரிந்த குன்றுகளும் பெரிய பாறைகளும் வேறு ஏதோ ஒரு கனவுப் பிரதேசத் துக்குள் வந்துவிட்டது போலிருந்தது. வடக்கே தெரியும் வெளியில் இருந்த தென்னை மரங்கள் விளையாட்டுப் பொம்மைகளைப் போன்றுதான் தோற்றமளித்தன.

பறவைகள் தாழ்வாகப் பறப்பதையும் ஒரு மாட்டுவண்டி மெதுவாக ஊர்ந்து செல்வதையும் கண்டேன். அந்த வெளியில் சிறிய இயக்கம் நடந்து கொண்டே இருந்தது. மலையைவிடவும், மலையின் மீதிருந்த கோயிலைவிடவும் அந்த உயரத்திலிருந்து தெரியும் வெட்டவெளி தரும் அனுபவம் மிகத் தனித்துவமாக இருந்தது. மேற்கில் தெரிந்த வெட்டவெளியைப் பார்த்தபடி நின்றிருந்தேன். திடீரெனக் கத்த வேண்டும் போலிருந்தது. என்னை மீறிச் சப்தமாகக் கத்தினேன். எனது குரல் மலையிலிருந்து சரிந்து எங்கோ பள்ளத்தில் போய் விழுந்தது. சப்த மிடுவது எவ்வளவு பெரிய ஆனந்தம் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.

‘சோலாரிஸ்’ என்ற ஒரு ருஷ்யப் படத்தில், ‘வெட்டவெளி சிந்திக்கக் கூடியது. அது தனித்த ஒரு மொழியில் நம்மோடு உரையாடிக்கொண்டு இருக்கிறது’ என்று ஒரு கதாபாத்திரம் கூறியதைக் கேட்டபோது, ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், அந்த வாசகம் நூறு சதவிகித உண்மை என்பது போலிருந்தது. நான் அங்கு கண்ட காட்சி.

சூரியன் மறைவதுகூட உடனே நடந்துவிடவில்லை. மிக மெதுவாகவும், உலகை முழுமையாக ஒரு முறை கண்டுவிட வேண்டும் என்று ஆசைப் பட்டது போன்று, மிக நிதானமாக மேற்கில் இறங்கிக்கொண்டு இருந்தது. கிழக்கில் உதயமாகும்போது சூரியன் தரும் கிளர்ச்சி இசையின் உச்ச நிலை என்றால், மேற்கில் அடையும் சூரியன் இசைக்குப் பிந்திய அமைதியைப் போன்றது.

மேகங்கள் தங்க நிறத்தில் திட்டுத் திட்டுகளாக இருந்தன. சூரியன் வானில் அடங்கிய பிறகும் வெளிச்சம் இருந்தது. காற்று மட்டுமே சுற்றி அலைந்து கொண்டு இருந்த அந்த வெளி, அளவு கடந்த சந்தோஷத்தை உருவாக்கியது.

நாங்கள் இருந்த பாறை மெல்ல மறையத் துவங்கி, இருள் படியேறி எங்களைச் சுற்றி நின்ற பிறகு, கீழே இறங்கத் துவங்கினோம். அன்று விடுதிக்குத் திரும்பிய பிறகு கோயிலோ, பாறையோ, மலையோ... எதுவுமே நினைவில் இல்லை.

இந்த அனுபவத்துக்கு நெருக்கமான ஒன்று சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும் ஒரு நள்ளிரவு நடந்தது. சென்னையில் தேவி தியேட் டரில் இரவுக் காட்சி பார்த்துவிட்டு, நடந்தே கே.கே. நகர் வருவது என்று முடிவு செய்து நடக்கத் துவங்கினேன். பரபரப்பும் வேகமுமாகப் பார்த்துப் பழகிய அண்ணா சாலையில் யாருமே இல்லை. சாலையில் பெட்டிக்கடைக் காரர்கள் ஊற்றிய தண்ணீர் உதிர்ந்த வெற்றிலைகள் படிய ஓடிக்கொண்டு இருக்கிறது. சிக்னல்கள் செயலற்று அமைதியாக இருந்தன.

ஹிக்கின்பாதம்ஸ் எதிரில் மெக்கானிக் போன்றிருந்த ஒரு ஆள் நடைபாதையில் இரும்பு வாளியை வைத்துக் குளித்துக்கொண்டு இருந் தார். அண்ணாசாலை மிக நீண்டதாகவும் மிக அழகானதாகவும் தெரிந்தது.

நடக்க நடக்க சென்னை, நான் இதுவரை பார்க்காத நகரைப் போன்று இருந்தது. வழியில் குல்பி ஐஸ் விற்கும் ஒரு ஆள் செருப்பை இழுத்து இழுத்து நடந்தபடியே ராயப்பேட்டை நோக்கி போய்க்கொண்டு இருந்தார். சினிமா விளம்பரங்கள், நியான் வெளிச்சங்கள் யாவும் அப்படியே இருந்தன. சாலை ஓரங்களில் மரங்கள் இருப்பது அப்போது தான் கண்ணில்பட்டது. கோடம் பாக்கம் வழியாக நடந்து போனபோது ரோந்து சுற்றும் காவல் வாகனங்கள்கூட சலனமற்று நின்றிருந்தன. வழியில் திறந்திருந்த ஒன்றிரண்டு கடைகளைத் தவிர, நகரம் துயிலின் நீள்பரப்பில் மூழ்கி இருந்தது. புதிர் கட்டங்கள் அவிழ்த்துச் சிதறிக்கிடப்பது போலத் தான் சென்னை இருக்கிறது என்று தோன்றியது.

காற்றும். ஏக சுதந்திரமான வெளியும் பரவசமூட்டியது. வீடு வந்து சேர்ந்தபோது மணி மூன்றைத் தாண்டி இருந்தது. உடனே உறங்க வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. மாறாக, உறங்கிக்கொண்டு இருந்த நண்பர்கள் பலரையும் எழுப்பி சென்னையின் இந்த பின்னிரவுக் காட்சியைக் காட்ட வேண்டும் போலிருந்தது.

நாம் கட்டடங்களை, அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் காண்பதில்தான் சந்தோஷமடைகிறோம். ஆனால், நம் கண்கள் பழகிக்கொள்ள வேண்டியதும் புரிந்துகொள்ள வேண்டியதும் வெட்ட வெளியைத்தான்.

வெளி, நம் கண்களோடு அல்ல, மனதோடு மிக நெருக்கமாக இருக்கிறது. அல்லது மனம், வெளியைக் கண்டதும் தன்னை அதோடு கரைத்துக்கொண்டு ஐக்கியமாகி விடுகிறது. வெளி என்றும் அழியாத இருப்புடையது என்று மனம் மெல்ல உணரத் துவங்குகிறது. பயணம் கற்றுத் தரும் முதல் பாடம் இதுதானோ என்னவோ?

தேசாந்திரி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 09, 2013 1:41 pm

பாலை நிலவனுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி ! பாலை நிலவனின் கவிதை நெஞ்சைத் தொட்டது ! வானத்தைப் பார்க்கவும் சரி , நோக்கவும் சரி நமக்குத் தெரியவில்லை என்பது அவலம்தான் ! மனிதனுக்குக் கிடைத்த சொத்துகளை  அனுபவிக்கத் தெரியாமல் எதையோ தேடி அலைந்துகொண்டிருக்கிறான் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 09, 2013 4:45 pm

உண்மையில், பின்னிரவு உலகுக்கு அழகை உருவாக்குகிறது. பகலின் வெக்கையால் ஊர்களின் மீது படிந் திருந்த உஷ்ணத்தை, சுருக்கங்களை இரவு சுத்தம் செய்கிறது. ஒரு தாதி குழந்தையைக் குளிப் பாட்டித் துடைத்து எடுப்பது போன்று இரவின் கைகள் உலகைச் சுத்தம் செய் கின்றன.

அனுபவ வர்ணனை. அவர் அனுபவித்ததை நாமும் அனுபவித்தோம். ஒரு சிலராலேயே இது போல் வார்த்தைகளால் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தமுடிகிறது.
திரு பகலவன் / சிவா விற்கு நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2013 7:35 am

பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! VragmBa6S9gVhG3Vkl5A+moonimages
-
பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! 103459460 
-
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
-
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
-
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே
-
ஆஆஆ...வானும் மண்ணும்
நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக