புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_m10நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 11:37 pm

நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! 06novnov_jv_jv

இறந்துபோன தலைவர் களைத் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வது அரசியல் வாதிகளுக்குக் கைவந்த கலை. ஜவஹர்லால் நேருவும் சர்தார் வல்லபபாய் படேலும் பாவம் இப்போது அரசியல்வாதிகளிடம் சிக்கியுள்ளனர். எவ்வளவு அவமானப்படுத்தினாலும் பிரதமர் பதவியை விட மாட் டேன் என்று பிடிவாதமாக உட்கார்ந்து இருக்கும் மன் மோகன் சிங்கும், எதைச் செய் தாவது அந்த நாற்காலியை அடைந்தே தீருவேன் என்று வலம்வரும் நரேந்திர மோடியும் மீண்டும் ஒருமுறை நேருவையும் படேலையும் மரணக் குழிக்குள் இறக்கியிருக்கிறார்கள்.

''முதலாவது பிரதமராக சர்தார் வல்லபபாய் படேல் அமர்ந்திருந்தால் நாட்டின் தலையெழுத்தே வேறுவிதமாக இருந்திருக்கும். நாட்டின் முகமே மாறி இருக்கும். அவர் முதலாவது பிரதமராக ஆகவில்லையே என்ற வருத் தமும் வேதனையும் எப்போதும் இருக்கிறது'' என்று நரேந்திர மோடி சொல்லியிருக்கிறார். படேல் மீதான பாசத்தைவிட, நேரு மீதான வெறுப்பே அதிகம் தெரிகிறது இந்தப் பேச்சில்.

'வகுப்புவாதம் இந்தியாவை உடைத்துவிடும்’ என்றும் 'வகுப்புவாதம் பாசிசத்தின் இந்திய வடிவம்’ என்றும் 'மதச்சார்பு இல்லாத அரசு ஒன்றே நாகரிகமான அரசு’ என்றும் சொன்ன நேருவை மோடிக்கு எப்படிப் பிடிக்கும்? 'எங்காவது ஒரு நபர் மற்றொருவரைக் கொல்வதற்குத் தன் கரத்தை உயர்த்தினால் நான் அவனை எதிர்த்துக் கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன்’ என்று 1951-ம் ஆண்டு காந்தி ஜெயந்தியில் பேசிய நேருவை இவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?

காந்தி கொலை செய்யப்பட்டு, ஒரு மாதம் கழித்து அன்றைய உள்துறை அமைச்சர் படேலுக்கு, பிரதமர் நேரு எழுதிய கடித்தை மோடி படித்திருப்பார் போலும். ''பாபுவின் படுகொலையானது ஒரு தனிப்பட்ட விஷயமல்ல. ஆர்.எஸ்.எஸ். தலைமையில் நடைபெற்ற மிகப் பரவலான பிரசாரத்தின் ஒரு பகுதிதான் அது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள். ஆனால், இதில் தொடர்புடைய பல முக்கியப் புள்ளிகள் இன்னும் வெளிநாட்டிலோ, தலை மறைவாகவோ அல்லது சில நேரங்களில் வெளி யில் நடமாடிக்கொண்டேதான் இருக்கின்றனர். இவர்களில் பலர் நம்முடைய அலுவலகங்களிலும் காவல் துறையிலும் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்னும் பல வழிகளில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் தாக்குதலை ஆரம்பிக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது'' என்று எழுதி னார் நேரு. 'சர்தார் படேல் கரஸ்பான்டென்ஸ்’ என்ற புத்தகத்தில் இந்தக் கடிதம் முழுமையாக உள்ளது. இப்படிப்பட்ட நேரு முதல் பிரதமராக வந்தது மோடிக்கு வருத்தமும் வேதனையையும் கொடுத்திருக்கலாம்.

16 வயதில் இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பிவைக்கப்பட்டு அங்கு ஏழு ஆண்டுகள் வாழ்ந்த செல்வச் செழிப்புள்ள குடும்பத்து ஜவஹர்லால், சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க் கப்பட்டு ஒன்பது ஆண்டுகளை இந்தியச் சிறைகளில் கழித்தவர். இங்கிலாந்தின் நாடாளுமன்ற ஜன நாயகத்தையும் கார்ல் மார்க்ஸின் பொருளாதார சோஷலிசத்தையும் தனது லட்சியங்களாகச் சொல்லிக் கொண்டவர். இந்த இரண்டையும் நடைமுறைப்படுத்தியதில் பல்வேறு கோளாறுகள் உள்ளன. ஆனால், அத்தகைய பரந்துபட்ட லட்சியம்கொண்ட முதலும் கடைசியுமான பிரதமர், நேரு மட்டும்தான். ஆன்மிகமே தன்னை வழிநடத்துவதாகச் சொல்லிக்கொண்ட காந்திக்குக் கிடைத்த நாத்திக சிஷ்யன் நேரு. மதம், மதம் என்றே பேசிய காந்திக்கு அருகில் இருந்துகொண்டே, 'மதம் என்ற வார்த்தையே அச்சத்துக்கு உரியது’ என்று சொன்ன பகுத்தறிவுவாதி. எந்த மதத்தின் குருமார்களாக இருந்தாலும் அவர்களை முன்னேற்றத்தின் தடையாகப் பார்த்தார். 'சாதாரண மனிதன் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதுவே என் மதம்’ என்று சொன்ன பொருள்முதல்வாதி. 'இந்தியா மாபெரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நாம் நம்புகிறோம். அப்படியானால் இந்தியா அகத்திலோ, புறத்திலோ மற்றவற்றை ஒதுக்கக் கூடாது, அறிவின் அல்லது ஆன்மாவின் அல்லது சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள எல்லாவற்றையும் கைவிட வேண்டும்’ என்றவர். தேசியம், சோஷலிசம் என்ற சொற்களையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

ரொட்டித் துண்டுகளைப்போல இந்த நாடு துண்டாடப்பட்டபோது வெட்டிக் கொல் லப்பட்ட இந்து, முஸ்லிம் மக்களின் ரத்தம் எல்லையில் ஓடியது. அந்தக் காலகட்டத்தில் எந்த மத ஈடுபாடும் அற்ற மனிதராக நேரு இருந்ததால்தான் அந்தக் களறி தொடராமல் நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் 1991-ல் இருந்து நாம் அனுபவித்து வரும் துன்ப துயரங்கள் 1950-களில் இருந்தே தொடர்ந்திருக்கும். நேருவின் குறை, தான் மதச்சார்பற்றவராக இருந்தால் போதும் என்று நினைத்தார். காங்கிரஸ் கமிட்டியை அப்படி மாற்ற முயற்சிக்கவில்லை. சித்தாந்த ரீதியாக வகுப்புவாத எதிர்ப்பைச் செய்யவில்லை. முதலாளித்துவவாதிகளை வைத்துக்கொண்டு சோஷலிசம் பேசினார். அவர் சொன்னதை, நேரு சொல்கிறார் என்பதற்காகப் பலரும் ஏற்றுக்கொண்டார்களே தவிர, நேரு சரி யானதைத்தானே சொல்கிறார் என்று எந்தக் காங்கிரஸ் தலைவரும் நினைக்கவில்லை. அதனால்தான் நேரு மறைவோடு, நேருவின் காங்கிரஸும் மறைந்தது. எனவே நேருவை, பிரித்துப் பார்க்க வேண்டுமே தவிர உதாசீ னப்படுத்திவிட முடியாது.

திராவிட இயக்க ஆட்சியாளர்களின் திருட்டுத்தனத்துக்கும் தந்தை பெரியாருக்கும் எப்படிச் சம்பந்தம் இல்லையோ, அப் படித்தான் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கயமைக்கும் நேருவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மோடிக்கு முதலில் இது புரிய வேண்டும்!

மோடியைப் போலவே மன்மோகன் சிங்கும் படேல் குறித்து தவறான புரிதலைக் கொண் டுள்ளார். 'சர்தார் படேல் மதச்சார்பற்ற தலைவர். அவர் காங்கிரஸ்காரர். அவர் தலைமை தாங்கிய கட்சியில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்’ என்று மன்மோகன் கூறியிருக்கிறார். ஆனால், மன்மோகன் பிரதமராக இருக்கும் காங்கிரஸ் கட்சியில் ஒரு காலத்தில் நாமும் இருந்தோம் என்பதை படேல், நிச்சயம் பெருமையாகக் கருத மாட்டார்.

மோடிக்கு கொட்டு வைப்பதாக நினைத்து, படேலுக்கு 'மதச்சார்பற்றவர்’ மகுடம் சூட்டுவது மோசமான வரலாற்றுப் பிழை. 'படேலின் மதச்சார்பின்மையே தேவை. வாக்கு வங்கி மதச் சார்பின்மை வேண்டாம்’ என்று விளக்கமும் சொல்லியிருக்கிறார் மோடி. படேலை முழு மையாக அப்படிச் சொல்லிவிட முடியாது.

இடைக்கால அரசாங்கத்தில் படேல் அமைச் சராக இருந்தபோதுதான் இந்து - முஸ்லிம் கலவரம் அதிகமாக ஏற்பட்டது. இந்தக் கல வரங்களைத் தடுக்க படேல் தவறினார் என்ற வருத்தம் காந்திக்கு இருந்தது. கலவரம் நடக்கும் இடங்களில் போய் தங்கி, அங்கிருந்து நேருவுக்கும், படேலுக்கும் கடிதம் எழுதினார் காந்தி. 'உங்களுக்கு எதிராக பல புகார்கள் எனக்கு எட்டியிருக்கின்றன. உங்களுடைய பிரசங்கங்கள் மக்களுக்கு வெறியூட்டுவனவாகவும், விஷமிகளுக்கு திருப்தி அளிப்பனவாகவும் இருக்கின்றன’ என்று படேலுக்கு கடிதம் எழுதியவர் காந்தி. 'முஸ்லிம் லீக் சொல்லாத அவதூறை என் மீது நீங்கள் எப்படிச் சொல்லலாம்?’ என்று பதில் கடிதம் அனுப்பினார் படேல். பீகார் கலவரம் பற்றி விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று காந்தி கோரிக்கை வைத்தபோது படேல் அதை நிராகரித்தார். 'கமிஷன் அமைக்காவிட்டால் முஸ் லிம்களுக்கு கொடுமை நடந்தது உண்மைதான் என்பதை நிரூபிக்கும்’ என்றார் காந்தி. ஆனாலும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படவில்லை. 'கமிஷன் அமைத்தால் தீங்குதான் நேரும்’ என்று காந்திக்கு பதில் அனுப்பியவர் படேல். இவர்கள் சொன்னதை மீறி பீகாருக்கு காந்தி சென்றார். 'உறுதியான தலைவர்கள் எல்லாம் டெல்லியில் இருக்க... இந்தப் பகுதியில் வேறு தலைவர்கள் இல் லாததால் நான் ஏதோ ஒரு தலைவராக இருந்து வருகிறேன்’ என்று படேலுக்கு கிண்டலாகக் கடிதம் அனுப்பினார் காந்தி. இப்படித் தொடர்ச்சியாக காந்திக்கும் படேலுக்கும் மோதல் இருந்ததை 'தலைவர்களுக்கு காந்தி எழுதிய கடிதங்கள்’ புத்தகம் படித்தால் புரியும்.

சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னதாக பிரி வினையைச் செய்துவிட வேண்டும் என்று மவுன்ட்பேட்டன் முடிவெடுத்தபோது, முதலில் சம்மதித்தவர் படேல்தான் என்று மௌலானா அபுல்கலாம் ஆசாத் எழுதியிருக்கிறார். ''முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து உழைக்க முடியாது என்ற திடநம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருந்தது. முஸ்லிம் லீக்கை விட்டுத் தொலைப்பதற்காகவே... இந்தியாவின் ஒரு பகுதியைக் கொடுக்க தாம் தயா ரென்று வெளிப்படையாகவே படேல் கூறினார்'' என்கிறார் ஆசாத். அதன் பிறகுதான் நேருவும், அதையடுத்தே காந்தியும் பிரிவினையை ஏற்றனர்.

இடைக்கால அரசாங்கம் உருவானது முதல் காங்கிரஸிடம் இருந்தும் படேலிடம் இருந்தும் காந்தி விலகியே இருந்தார். பஞ்சாப் கலவரப் பகுதியைப் பார்க்க காந்தி புறப்பட்டபோது தடுத்தவர் படேல். நவகாளி, டில்லியில் கலவரம் மூண்டது. இந்திய யூனியனில் இருக்கும் முஸ்லிம்களையும், பாகிஸ்தானுக்கு போய்விடக் கட்டாயப்படுத்துவதாக காந்திக்குத் தகவல் வந்தது. அதிகார மட்டம் வகுப்புவாத அடிப்படையில் பிரிந்து விட்டதாக காந்தி கருதினார். பாதிக்கப்பட்ட மக்கள் சொல்வது உண்மையா என்று படேலிடம் கேட்டார். ஆனால், அவர் சொன்ன பதில் காந்திக்கு ஏற்புடையதாக இல்லை. அந்தக் கோபத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி. இந்த உண்ணாவிரதத்துக்கு காரணம் படேல்தான் என்று எழுதுகிறார் மௌலானா அபுல்கலாம் ஆசாத்.

முஸ்லிம்களுக்கு பாதுகாப்புத் தர படேல் தவறிவிட்டார் என்பதே காந்தியின் வருத்தம். நாட்டில் நடக்கும் முஸ்லிம்களின் கொலைக்கு தான்தான் காரணம் என்பதுபோல காந்தி நடந்து கொள்வதாக படேல் நினைத்தார். படேல் சொன்ன சமாதானத்தை காந்தி ஏற்கவில்லை. 'நான் ஒன்றும் சீனாவில் இல்லை. இங்கேதான் இருக்கிறேன்’ என்றார் காந்தி. கோபப்பட்டு எழுந்து வெளியே போகப்போன படேலை, ஆசாத் தடுக்கிறார்.

''நான் இருந்து என்ன பிரயோஜனம்? எனக்குச் செவிசாய்க்க காந்திஜி தயாராக இல்லை. உலகத்தின் முன், இந்துக்களின் முகத்தில் கரிபூச அவர் உறுதி கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இது அவரது மனப்பான்மையானால் அவரால் எனக்கு யாதொரு பயனும் இல்லை'' என்று சொல்லிவிட்டு படேல் புறப்பட்டுப் போனார். இதுவே அவர்கள் இருவருக்குமான இறுதிச் சந்திப்பு. மோடி ஏன் படேலை புகழ்கிறார் என்று புரிகிறதா? குஜராத்காரர் என்ற எல்லையைத் தாண்டி படேல் புகழப்படுவதற்கான அடிப்படைக் காரணம் இதுதான். காந்தி கொலைக்குப் பிறகுதான் படேல் எண்ணத்தில் பரவலாக மாற்றம் ஏற்பட்டது.

மக்கள் மனதுக்கு மரியாதை கொடுப்பவராக இருந்தார் நேரு. படேல், நாட்டின் எல்லைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தார். இதுதான் இரண்டு தலைவர்களுக்குமான வேறுபாடு. ஆங்கில நூலாசிரியர் ஒருவர் இதை, 'தொழில் நகரத்தில் இருந்து வந்தவர் படேல். பூக்களின் நகரத் தில் இருந்து வந்தவர் நேரு. அது, அவர்களது குணத்தால் அறியப் படும்’ என்று எழுதினார்.

பிர்லா மாளிகையில் வைக் கோல் மெத்தையில் காந்தி உடல் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு நிற ரோஜாவை அவரது உடலில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு நேரு, படேல் ஆகியோர் இருக்கும் இடம்நோக்கி வருகிறார் மவுன்ட்பேட்டன். 'காந்தி எப்போதும் உங்கள் இருவரைப் பற்றியும்தான் கவலைப்பட்டார். நீங்கள் இருவரும் முரண்பட்டு நிற்பது குறித்து வருந்தினார். அவரின் நினைவுக்கு முக்கியத்துவம் இருக்குமானால் கருத்து வேறுபாடுகளைக் களைந்து நீங்கள் இருவரும் கட்டித் தழுவுங்கள்'' என்றார் மவுன்ட்பேட்டன். அழுது கொண்டிருந்த இருவரும் தழுவிக்கொண்டனர்.

அனைவரையும் சமமாக நினைக்கும் உள் ளமும் நிர்வாகத் திறனும் காந்தியின் உடலைச் சாட்சியாக வைத்து தழுவியது. அப்படி ஒரு பிரதமர் இந்தியாவுக்கு எப்போது கிடைப்பார்?

ப.திருமாவேலன் @ விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக