புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்? - ஸ்டாலின் !


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:17 pm

First topic message reminder :

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 F4ZWrFDyTYO0zRpOvjco+E_1382591501

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.

இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.

nandri - siruvarmalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 21, 2014 12:14 am

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 3838410834  யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 3838410834  யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 103459460




யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Mயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Uயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Tயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Hயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Uயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Mயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Oயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Hயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Aயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Mயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 Eயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 1:32 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 1571444738 அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 07, 2014 1:45 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 1571444738 அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 1:56 pm

Dr.S.Soundarapandian wrote:[link="/t105131p45-topic#1056812"]யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 1571444738 அருமையிருக்கு

நன்றி ஐயா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 19, 2014 6:48 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 TNWU2en1SOmyhJHmoonP+E_1402571819

அவர் பெயர் ஜோசப் பிரீஸ்ட்லி. 1733ல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில் ஓர் ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்து, ஏழு வயதிலேயே தந்தையை இழந்து அத்தையின் அரவணைப்பில் படித்து, பட்டம் பெற்றுப் பாதிரியாராக ஆனார். பல மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றாலும் தட்டுத் தடுமாறித்தான் பேசுவார்.

ஒரு சிறு தேவாலயம் அவரைப் பாதிரியாராக ஏற்றுக் கொண்டது. அது வருமானமில்லாத தேவாலயம். வாரத்திற்கு ஒரு பவுண்டு தான் வருமானம். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியையும் ஏற்றுச் செய்து வந்தார் பிரீஸ்ட்லி.

அந்த தேவாலயத்துக்குப் பக்கத்தில் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்தது. அங்கிருந்து எப்போதும் வீசும் துர்நாற்றம் பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்தது. அந்த துர்நாற்றம் சாராயம் காய்ச்சும் தொட்டியி லிருந்து கிளம்பும் ஆவியி லிருந்து தான் வருகிறது என்று அனுமானித்த அவர், ஆலைக்குள் சென்று அந்த ஆவியை ஒரு பெரிய கண்ணாடிப் புட்டியில் பிடித்துக் கொள்ள அனுமதி கோரினார். ஆலை நிர்வாகியும் அதற்கு அனுமதியளித்தார்.

அதன்படி, அந்த ஆவியைக் கண்ணாடி புட்டியொன்றில் பிடித்துக்கொண்டு திரும்பிய பிரீஸ்ட்லி அதை ஆராய்ந்தார். புட்டியின் மூடியை லேசாகத் திறந்து அந்த ஆவி வெளி யேறும் போது அதற்கு மேல், எரியும் விறகை நீட்டினார். உடனே அது அணைந்து விட்டது. அதன் மூலம் தீயை அணைக்கும் சக்தி அந்த ஆவிக்கு இருப்பதைத் தெரிந்து கொண்டார்.

அந்த ஆவியைப் பற்றி பிரபல விஞ்ஞானி களின் நூல்களில் ஏதாவது சொல்லப் பட்டுள்ளதா என்று தேடினார். ஒன்றும் தெரிய வில்லை. அந்த ஆவியைத் தனியாகத் தயாரிக்க முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதில் வெற்றியும் பெற்றார்.அவர் கண்டுபிடித்த அந்த வாயு தான் "கரியமில வாயு.' அத்துடன் வேறு சில வாயுக் களையும் சேர்த்து ஆராய்ந்த பிரீஸ்ட்லி பிராண வாயுவையும் கண்டுபிடித்தார்.

சாராய வடிப்பின் போது அதில் ஏற்படும் ஒரு வகை நுரையைப் பார்த்த பிரீஸ்ட்லி அந்த நுரைக்கும் ஒரு வாயுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று யூகித்து, அதைச் சோதிக்க எண்ணினார். எனவே, அந்த நுரையைச் சேகரித்து ஒரு புட்டியிலிட்டு அதில் சிறிது நீரைக் கலந்து குடித்துப் பார்த்தார்.

அந்தக் கலவையில் சிறிது மணமும், ஒரு ருசியும் இருந்தது. அதை அருந்தியதும் ஒரு வகையான உற்சாக உணர்வும் தோன்றியது. அந்த பானத்தை மேலும் ஆராய்ந்து சில உண்மை களைப் புரிந்து கொண்டார் பிரீஸ்ட்லி. சில பொருள் கள் புளிக்கும் போது உண்டாகும் கரியமில வாயுவை நீரில் கரைத்தால் அது இனிப்பும், நல்ல மணமும், உற்சாகமும் தரக்கூடிய ஒரு வித பானமாக ஆகும் என்பது பாதிரியார் பிரீஸ்ட்லிக்குத் தெளிவாகப் புரிந்தது.

அவருடைய அந்தக் கண்டுபிடிப்புத்தான் சோடா என்றழைக்கப்பட்டது. பின்னர் பல வகை வண்ண எசன்சுகளைக் கலந்து சோடா, கலர் பானங்களாகவும் உற்பத்தி செய்யப் பட்டது. பாதிரியாராக இருந்து விஞ்ஞானியாக உயர்ந்த பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்த துர்நாற்றம் தான் சோடா, கலர் பானங்களையும் கரியமில வாயுவையும் கண்டுபிடிக்க உதவியதுன்னு சொன்னா ஆச்சரியமா இல்ல...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 06, 2014 4:36 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 103459460 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 06, 2014 5:37 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 7:41 pm

நன்றி ஐயா, நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 7:46 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 WBdzy34QREO3JZZj5SUq+E_1404385038

ஒரு விஞ்ஞானியை இரண்டு நாடுகள் சொந்தம் கொண்டாடின. அவர் எங்கள் நாட்டில்தான் இருக்க வேண்டும் என்று இரண்டு நாடுகளும் வற்புறுத்தின. அந்த இரண்டு நாடுகளில் ஒன்று அந்த விஞ்ஞானி பிறந்த நாடு. இன்னொன்று அவர் மேற்கல்வி கற்று ஆராய்ச்சி நிபுணராக வளர்ந்த நாடு.

அந்த விஞ்ஞானியின் பெயர் பீட்டர் லியோனிடோ கபிட்சா. அவர் பிறந்த நாடு ரஷ்யா; வளர்ந்த நாடு இங்கிலாந்து.
சோவியத் ரஷ்யா வில் ஜார் மன்னனின் படைத் தளபதியாக இருந்த ஒருவரின் மகனாகப் பிறந்த கபிட்சா, மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அங்கே அவர் ஸர் எர்னஸ்ட் ரூதர் போர்டு என்ற பிரபல அணு விஞ்ஞானியோடு சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

பின்னர் ஹென்றி காவெண்டிஷ் ஆய்வுக் கூடத்தின் காந்தவியல் ஆய்வுக்கான துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த ஆண்டில் அவர் டிரினிடி கல்லூரியில் ஆராய்ச்சி யாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் இங்கிலாந்து ராயல் விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினராகவும் கபிட்சா தேர்ந்தெடுக்கப்பட்டார். 200 ஆண்டுக் காலத்தில் ஓர் அயல் நாட்டு விஞ்ஞானி அந்தக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள பட்டது அதுதான் முதல் தடவை.
நாளடைவில் ராயல் விஞ்ஞானக் கழகம் கபிட்சாவின் தனிப்பட்ட ஆராய்ச்சிக்கென்றே "மாண்ட் ஆய்வகம்' என்ற ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்துக் கொடுத்தது. அதில் எல்லா வகையான நவீனக் கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது. இது கபிட்சாவின் தனித் திறமைக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கவுரவமாகும்.

இங்கிலாந்தில் அணுவியல் ஆய்வுகளோடு, வலுவுள்ள காந்தப் புலங்களை உண்டாக்கும் முறைகள், வெப்ப மாற்றீடற்ற விரிவின் மூலம் ஹீலியத்தைத் திரவமாக்கும் உத்திகள் ஆகியவற்றிலும் பல சாதனைகளைச் செய்தார் கபிட்சா. உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களும் அவருக்கு பல கவுரவப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தன.

இவ்வளவு பெருமைக்குரிய கபிட்சா, தாம் பிறந்த நாடான ரஷ்யாவையும் மறக்க வில்லை. அடிக்கடி ரஷ்யாவுக்குச் சென்று அறிவியல் ஆய்வு களில் ஈடுபட்டிருந்த அறிஞர்களைச் சந்தித்து, ஆக்கமும், ஊக்கமும் அளித்து வந்தார்.1934ம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த விஞ்ஞானி கள் மாநாட்டில் கலந்து கொண்ட கபிட்சாவை, சோவியத் அரசாங்கம் மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்லக் கூடாது என்றும், ரஷ்யாவிலேயே தங்கி ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் ஆணையிட்டு விட்டது. அதனால் கபிட்சா ரஷ்யாவிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதை இங்கிலாந்து ராயல் விஞ்ஞானக் கழகத்தின் தலைவராக இருந்த அணுவியல் விஞ்ஞானி ரூதர்போர்டு விரும்பவில்லை. விஞ்ஞானிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அரசியல் காரணங்களைக் காட்டி விஞ்ஞானி களின் ஆராய்ச்சிகளுக்குத் தடை செய்யக் கூடாது என்றும் ரூதர்போர்டு கருதினார்.

அவரே நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு உயர்கல்வி கற்க உதவித் தொகை வழங்கியதிலிருந்து பல்வேறு ஆய்வுகளை நடத்த பொருளுதவியும், மற்ற உதவிகளையும் செய்து அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாகத் திகழ வழி வகுத்தது இங்கிலாந்து நாடுதான்.

கபிட்சாவின் தனிப்பட்ட ஆய்வுக்காகவே நிறுவப்பட்ட மாண்ட் ஆய்வுக் கூடத்தில் நிறுவப்பட்டிருந்த பல நவீனமான கருவிகளைப் பயன்படுத்தும் நுணுக்கம் கபிட்சாவுக்கு மட்டுமே தெரியும். இப்படிப் பட்ட நிலையில் கபிட்சா இங்கிலாந்துக்குத் திரும்பி வராவிட்டால் மாண்ட் ஆய்வுக் கூடத்திலுள்ள 30 ஆயிரம் பவுண்ட் மதிப்புள்ள கருவிகளெல்லாம் வீணாகி விடும்.

அதனால் மிகவும் வருந்திய ரூதர்போர்டு, கபிட்சாவை எப்படியாவது திரும்பப் பெற விரும்பினார். ரஷ்ய அரசாங்கத்துக்குப் பல கடிதங்களை எழுதி கபிட்சாவைத் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்குச் செவி சாய்க்க ரஷ்ய அரசு மறுத்து விட்டது.

அதன் பின்னர் இரண்டு விஞ்ஞானி களை ரஷ்யாவுக்கு அனுப்பி கபிட்சாவைத் திரும்பப் பெற, பேச்சு வார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்தார். அப்போதும் சோவியத் அரசு கபிட்சாவை அனுப்ப சம்மதிக்காவிட்டால், அவரது ஆராய்ச்சிக் காகவே வாங்கப்பட்ட நவீனக் கருவிகளை யாவது சோவியத் அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் படி தாம் அனுப்பி வைத்த விஞ்ஞானி களிடம் சொல்லியனுப்பினார் ரூதர்போர்டு.

அந்த இரண்டு விஞ்ஞானிகளும் சோவியத் யூனியனுக்குச் சென்று அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளோடு பேசினர். அப்போதும் கபிட்சாவை அனுப்ப சோவியத் அரசு மறுத்து விட்டது.ஆனால், ரூதர்போர்டின் இரண்டாவது யோசனைப்படி, கபிட்சாவுக்காக வாங்கப் பட்ட நவீன கருவிகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளச் சம்மதித்தது. அதன்படி அந்தக் கருவிகளெல்லாம் சோவியத் யூனியனுக்கு அனுப்பப்பட்டன. ரஷ்யா அதற்குரிய பணத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது.

ஒரு விஞ்ஞானிக்கு இரண்டு நாடு களும் சொந்தம் கொண்டாடிய சம்பவம் உலக வரலாற்றில் மிக,மிக அரிது. கபிட்சாவுக்காக நடந்த இத்தகைய போராட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 1:08 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 6 1iYpenRjSDKbVagYplwC+E_1405418775

இங்கிலாந்தில் ஓர் ஏழைக் கருமானின் மகனாகப் பிறந்து படிக்கக்கூட வசதியில்லாமல் 13 வயதிலேயே வேலைக்குப் போகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது ஒருவருக்கு.ஆனால், அவர் கண்டுபிடித்த ஒரு சாதனம்தான் பிற்காலத்தில் நவீன உலக அமைப்புக்கே வழி திறந்து விட்டது. அந்த விஞ்ஞானியின் பெயர் மைக்கேல் பாரடே. அவர் கண்டுபிடித்த சாதனம் டைனமோ எனப்படும் மின்னாக்கி.
வீட்டுக்கு வீடு பத்திரிகை போடும் வேலையை மேற்கொண்ட பாரடே, பின்னர் பைண்டிங் வேலையில் சேர்ந்து பழகிக் கொண்டார். அப்போது பல்வேறு அறிவியல் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தாம் படிக்கும் நூல்களில் உள்ள பல முக்கிய விஷயங்களை அவர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

அதன் பயனாக அறிவியல் விஷயங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அறிவியல் சொற்பொழிவு எங்கே நடந்தாலும் அங்கெல்லாம் தவறாமல் சென்று அறிவியல் மேதைகளின் பேச்சைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இவ்வாறு அவர் கேட்ட சொற்பொழிவுகளில் குறிப்பிடத்தக்கது அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியின் சொற்பொழிவு. அவருடைய சொற்பொழிவுகளை எல்லாம் வரி விடாமல் குறிப் பெடுத்து, எழுதித் தொகுத்து, பைண்ட் செய்து ஒருநாள் அவரிடமே காட்டினார் பாரடே. அவருடைய ஆர்வத்தையும், முயற்சி யையும் கண்டு வியந்த ஹம்ப்ரி டேவி தாம் பணியாற்றி வந்த ராயல் விஞ்ஞானக் கழகத்திலேயே அவருக்கும் ஒரு வேலையை வாங்கிக் கொடுத்தார்.

அந்த வேலையைச் செய்து கொண்டிருந்த போதே ஓய்வு நேரத்தில் சிறுசிறு பரிசோதனை செய்த பாரடே, அத்தகைய சோதனைகளின் விவரங்களையும் முடிவுகளையும் அழகாகவும், விவரமாகவும் எழுதி பைண்ட் செய்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தத் தொகுப்பையும் ஒருநாள் ஹம்ப்ரிடேவியிடம் கொண்டு போய்க் காட்டினார் பாரடே.

அவற்றையெல்லாம் கவனமாகப் பரிசீலித்த டேவி, பாரடேயின் திறமையை முழுமையாகப் புரிந்து கொண்டு, அவரைத் தம்முடைய ஆய்வுக் கூட உதவியாளராகவே நியமித்துக் கொண்டார்.அன்று முதல் டேவி ஆசிரியராகவும், பாரடே மாணவராகவும் மாறினர். டேவி செய்ய வேண்டிய பல்வேறு சோதனைகளை பாரடேயே செய்யத் தொடங்கினார். பாரடேயின் சோதனை முடிவுகளைக் கொண்டே ஹம்ப்ரி டேவி பல சாதனைகளை நிகழ்த்தி பெயரும் புகழும் பெற்றார். பாரடே திரைக்குப் பின்னால் இருந்து எல்லாச் சோதனைகளையும் செய்து தன் குருவுக்கு உதவினார்.

1813ம் ஆண்டில் ஹம்ப்ரி டேவி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். பாரடேயும் அவரோடு சென்றார். உலகப் புகழ் பெற்ற பல விஞ்ஞானிகளைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போது அவருக்குக் கிடைத்தது.நாடு திரும்பியதும் ராயல் விஞ்ஞானக் கழகத்தில் அவர் கடுமையாகப் பணியாற்ற நேரிட்டது. 1865ம் ஆண்டில் பென்ஸீன் என்ற கார்பன் சேர்மத்தைக் கண்டுபிடித்தார் பாரடே. ஆனால், அந்தப் பெருமை முழுவதும் டேவிக்கே போய் சேர்ந்தது. இப்படி பல பெருமைகளைத் தன் குரு நாதருக்குப் பெற்றுக் கொடுத்த பாரடேயை, அந்த குருநாதரே கடுமையாக எதிர்த்து நிற்கும் நிலையும் ஏற்பட்டது.

ஆயினும் அதனால், ஹம்ப்ரி டேவி எள்ளளவும் பெருமையடையவில்லை. மைக்கேல் பாரடே தான் மேலும் மேலும் புகழடைந்தார். இவ்வாறு பாரடேயின் வாழ்க்கையில் பல சுவையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக