புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
51 Posts - 44%
heezulia
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
417 Posts - 49%
heezulia
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
284 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_m10இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 08, 2013 1:11 am

இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகளை, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், தயாரித்து, மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல், அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், சேலத்தில், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டவர்களின் கொலை வழக்குகளில், "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் மற்றும் அபுபக்கர் சித்திக்கை, தமிழக போலீசார் தேடி வந்தனர். அபுபக்கர் சித்திக் தவிர மற்ற மூவரும், கடந்த வாரம், போலீசிடம் சிக்கி உள்ளனர்.

விசாரணையில் "திடுக்': இதில், கடந்த சனிக்கிழமை சிக்கிய பிலால் மாலிக்கிடம் விசாரித்ததில், அவன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:எங்கள் கும்பலில் இருந்த, நாகூரைச் சேர்ந்த, அபுபக்கர் சித்திக், பெங்களூரு குண்டு வெடிப்புக்குப் பின், சண்டை போட்டு, தனியாக பிரிந்து சென்று விட்டார். அவர் புத்தக குண்டுகள் தயாரிப்பதில் கில்லாடி. அவர், 100 புத்தக குண்டுகளை தயார் செய்து மறைத்து வைத்துள்ளார். அதை, இந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு கூரியரில் அனுப்பி, கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். கடந்த, 2005ல், நாகூரில் இந்து முன்னணி நிர்வாகி, தங்கமுத்துகிருஷ்ணனை கொலை செய்ய, புத்தக பார்சலில் குண்டு வைத்து அனுப்பினார்.அதை வாங்கி பிரித்துப் பார்த்த போது, குண்டு வெடித்து, அவரின் மனைவி மலர்க்கொடி பரிதாபமாக இறந்தார்.மயிலாடுதுறையில், ஜெகவீர பாண்டியனுக்கு, புத்தக குண்டு அனுப்பிய போது, போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததால், தபால் நிலையத்திலேயே, அதை செயலிழக்கச் செய்தனர்.தற்போது, சித்திக்கிடம், 100 புத்தக குண்டுகள் உள்ளன. அதை யாருக்கெல்லாம் அவர் அனுப்புவார் என்பது தெரியாது. இதற்கான, பட்டியல் அவரிடம் உள்ளது. எங்களை விட்டு பிரிந்து சென்றதால், நாங்கள் இதைப் பற்றி எல்லாம் விசாரிப்பதில்லை. நாங்கள் புத்தூரில் தங்கி இருக்கும் தகவல், அவருக்கு தெரியும். அவர் எங்களிடம் வந்த போது, நாங்கள் விரட்டி விட்டோம். இமாம் அலி தான் எங்கள் குரு. 2002ல், இமாம் அலி, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் சமாதியில் நாங்கள், நான்கு பேரும், இந்து இயக்கப் பிரமுகர்களை கொலை செய்வதாக, சபதம் எடுத்துக் கொண்டோம். எங்களுக்கு பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட, 12 நாடுகளில் இருந்து பணம் வந்தது. புத்தூரில் பதுங்கி இருந்த போது, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே, எங்கள் நடமாட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டனர்.இவ்வாறு, பிலால் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு: "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சிக்கிய நிலையில், கூட்டாளியான அபுபக்கர் சித்திக்கை தேடும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக - ஆந்திர மாநில எல்லையான வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு மலைப் பகுதிகளில் அவர் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், ஆந்திர மாநில தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், திருப்பூரிலும், சித்திக்கை தேடி, போலீசார் கணகாணித்து வருகின்றனர். மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்து அமைப்பு நிர்வாகிகளின் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த, 18 ஆண்டுகளாக பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு, தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக்கை பிடிப்பது, போலீசுக்கு பெரும் சவாலாக உள்ளது. திருப்பூரில் அவர் சில காலம் தங்கியிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் இங்கு பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது, தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக கிடைத்துள்ள தகவலால், நிர்வாகிகள் சிலருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பண பங்கீட்டில் பிரிந்த சித்திக்! பெங்களூரு, பா.ஜ., அலுவலக குண்டு வெடிப்புக்கு, "போலீஸ்' பக்ருதீன், 20 லட்ச ரூபாய் பெற்ற நிலையில், அதை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், சித்திக் பிரிந்து சென்றதுதெரியவந்துள்ளது. பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி, உட்பட ஐவரை, பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீனுக்கு தொடர்பிருக்கலாம் என, பெங்களூரு போலீசார் நம்பியதால், இணை கமிஷனர் ஹேமந்த் தலைமையில், சி.பி.சி.ஐ.டி., காவலில், தனி இடத்தில் உள்ள, "போலீஸ்' பக்ருதீனிடம், ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணை குறித்து, பெங்களூரு போலீசார் கூறியதாவது: பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக, கைதான, 32 பேரிடம் நடத்திய விசாரணையில், பக்ருதீன், பிலால், பன்னா மற்றும் சித்திக்கிற்கு தொடர்பு உள்ளது தெரிந்தது. வெடிகுண்டு தயாரிக்க, பிலால் மாலிக், வேலூர், குடியாத்தத்தில், பட்டாசு தயாரிக்கும் இடத்தில், வெடிமருந்து வாங்கியுள்ளார். அங்கிருந்து ரயில் மூலம், வெடிமருந்துகள் பெங்களூரு கொண்டு வரப்பட்டு, மல்லேஸ்வரத்தில், ஒரு வீட்டில் வைத்து, வெடிகுண்டை பக்ருதீன் தயாரித்து உள்ளார்.இதற்காக இவர்கள், மல்லேஸ்வரத்தில், இரண்டு மாதம் தங்கினர். வெடிகுண்டு வைக்க, 20 லட்ச ரூபாய், பக்ருதீன் பெற்றுள்ளார். அதில், 10 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை மற்றவர்களுக்கு கொடுத்ததால், பிரச்னை ஏற்பட்டது. அப்போது, தான் தலைவன் என்பதால், அதிகம் எடுத்துக் கொண்டதாக பக்ருதீன் கூறினார். இதனால், பக்ருதீனும், சித்திக்கும் அடித்துக் கொண்டனர். பின், 3 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு, சித்திக் பிரிந்து சென்றுள்ளார். பக்ருதீனை, நாங்களும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு பெங்களூரு போலீசார் தெரிவித்தனர்.

பிரியாணி கேட்டு பிலால் அடம்! வேலூர் சிறையில், பயங்கரவாதி பிலால் மாலிக், பிரியாணி கேட்டு, ரகளை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சிறை காவலர்கள் கூறியதாவது: ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு, பக்கத்தில் உள்ள அறையில், அடைக்கப்பட்டுள்ள மாலிக், குடிக்க மினரல் வாட்டர் கேட்டார். சில நம்பர்களை கொடுத்து, போன் போட்டு கொடுக்கச் சொல்கிறார். மறுத்த போது, "வேலூர் சிறையில் பணம் கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் என்கின்றனர்; இங்கு நான் கேட்பதை கொடுக்க வேண்டும்' என, மிரட்டல் விடுத்தார். நேற்று மதியம், சாப்பாடு கொடுத்த போது, சிக்கன் பிரியாணி, மட்டன் கேட்டுள்ளார். "மாதம் இரண்டு முறை தான் கொடுப்போம்' என, சிறை அதிகாரிகள் கூறிய போது, "எனக்கு தினமும்வேண்டும்; கொடுத்தே ஆக வேண்டும்' என, ஆவேசத்துடன் ரகளை செய்த மாலிக்கை, சிறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இவ்வாறு சிறை காவலர்கள் கூறினர்.

கொலை பட்டியல்: தமிழகத்தில், இந்து அமைப்புகளின் தலைவர்கள், 32 பேரை தீர்த்துக் கட்ட, "போலீஸ்' பக்ருதீன் திட்டமிட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னையில் கைது செய்யப்பட்ட, "போலீஸ்'பக்ருதீனை வேலூரில் தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில், பக்ருதீன் கூறியதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தில், இந்து இயக்கங்களை கட்டுப்படுத்த, பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்து அனுப்பினர். மதுரை வந்த அத்வானியை கொல்ல, திருமங்கலம் பாலத்திற்கு அடியில் குண்டு வைத்தோம். தமிழகத்தில், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ், அரவிந்த் ரெட்டி உட்பட, இந்து இயக்கங்களைச் சேர்ந்த, 32 பேர் பட்டியல் எங்களிடம் கொடுக்கப்பட்டது. அதில், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உட்பட, ஆறு பேரை கொலை செய்தோம். சிறப்பு புலனாய்வு குழுவினர் தேடியதுடன், போஸ்டர் ஒட்டியதால், ஆந்திராவிற்கு சென்றோம். தெலுங்கானா போராட்டம் நடந்ததால், போஸ்டர்களை ஆந்திர போலீசார் கண்டுகொள்ளவில்லை.இதுவும் எங்களுக்கு சாதகமாகியது. நரேந்திர மோடி, சென்னைக்கு வரும் போது, அவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டிருந்தோம். ஆனால், அதற்குள் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டோம். நாங்கள் சிக்கிக் கொண்டாலும், எங்களிடம் பயிற்சி பெற்று, பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும், 100 தீவிரவாதிகள், திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், திட்டம் தயாரித்துக் கொடுத்துள்ளோம்.இவ்வாறு பக்ருதீன் கூறியுள்ளான்.

தினமலர்

இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 08, 2013 1:24 am

பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்களுக்கு வலை

பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீனிடம் கைப்பற்றிய டைரியில், ஐந்து கொலைகளுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்கள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதால், அவர்களைப் பிடிக்க, தனிப்படையினர், அந்தந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவகளை கொன்று குவித்த, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பக்ருதீனின் டைரியில் இருந்து, பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. அதில், ஐந்து கொலைகளுக்கு உதவி செய்த, உள்ளூர் பிரமுகர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ளது. அவர்களைப் பிடிக்க, ஐந்து தனிப்படைகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளன. இவர்கள் கொலைகள் செய்ய திட்டம் போட்டு, நாள் குறித்து விட்டு, ஒரு வாரம் ஜாலியாக இருப்பர்.அது போல், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகில், தமிழக ஆந்திர மாநில எல்லையில் உள்ள, பண்ணை வீடுகளில் தங்கியுள்ளனர்.அப்போது அவர்களுக்கு, பேர்ணாம்பட்டை சேர்ந்த சிலரும், ஆறு கவுன்சிலர்களும் உதவி செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் இவர்களை பிடித்து விசாரித்த போது தான், பயங்கரவாதிகள் புத்தூரில் தங்கியிருக்கும் விவரம் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களிடம் உள்ள மொபைலில் இருந்த பக்ருதீன் எண்ணில், இவர்களை வைத்தே, போலீசார் பேச வைத்தனர். 6 லட்ச ரூபாய் கொடுக்கிறோம்; ஒரு பிரமுகரை கொலை செய்ய வேண்டும்' என, பேசினர்.அதை உண்மை என நம்பிய பக்ரூதீன், காட்பாடிக்கு வந்தார். அப்போது போலீசாரை பார்த்ததால் தப்பியோடினார்; போலீசாரும் துரத்தினர். கடைசியில் சென்னையில் கைதானார். பக்ருதீன் பிடிபடக் காரணமாக இருந்த, எட்டு பேரை, பக்ருதீன் முன்னிலையில் விசாரணை நடத்திய போது, "இப்படி செய்து விட்டீர்களே?' என, பக்ருதீன் எரிந்து விழுந்துள்ளார்.

"அப்ரூவர்' பக்ருதீன்:

தொடர்ந்து, வேலூரில் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் கொலை செய்யப்பட்ட இடங்களுக்கு, போலீசார், பக்ருதீனை அழைத்துச் சென்றனர். கொலை நடந்த இடத்தை சரியாக அடையாளம் காட்டிய பக்ருதீன், கொலை சம்பவத்தையும் நடித்துக் காட்டினார்.இது தவிர, "போலீஸ்' பக்ருதீன் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார். நடந்த கொலைகளை ஒன்று விடாமல் விசாரணையில் எழுத்துப் பூர்வமாக கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திரா போலீஸ் விசாரணை:

கடந்த, 2011ல், சித்தூர் காங்., எம்.எல்.ஏ., பாபு, காரில் வரும் போது, பாலத்துக்கு அடியில் வெடிகுண்டு வைத்து, கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்த வழக்கில், 23 பேர் படுகாயமடைந்தனர்.போலீசார், 18 பேரை கைது செய்தனர்; 11 பேர் தலைமறைவாகி விட்டனர். படுகாயடைந்த எம்.எல்.ஏ., பாபு, வேலூர் தனியார் மருத்துவமனையில், 20 நாள் சிகிச்சை பெற்றார். இதில், பக்ருதீன் கும்பல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது.அப்போது, போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. புத்தூரில் இவர்கள் பிடிபட்ட பிறகு, இவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், இவர்களிடம் விசாரணை செய்தோம். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருக்கிறோம்' என, ஆந்திரா போலீசார் தெரிவித்தனர்.அந்த வகையில், ஆந்திர மாநில நக்சலைட் ஒழிப்பு சிறப்பு போலீஸ் டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரா, பக்ருதீனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

மோடிக்கு பயங்கரவாதிகள் குறியா?

''தமிழகத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு, பயங்கரவாதிகள் குறி வைத்தனரா என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது,'' என, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

"போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்டோர் கைது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது: தமிழகத்தில், இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், கொலை வழக்கு குறித்த விசாரணையில், "போலீஸ்' பக்ருதீன் கைது செய்யப்பட்டு, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், புத்தூரில் உள்ள வீட்டில், அதிரடி சோதனை நடத்தினோம். பல மணி நேர போராட்டத்திற்கு பின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை, கைது செய்தோம். துப்பாக்கி சண்டையில் குண்டு காயம் அடைந்த, பன்னா இஸ்மாயிலுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும்."போலீஸ்' பக்ருதீனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அபுபக்கரை பிடிக்க, தனிப்படை அமைத்து, தீவிரமாக தேடி வருகிறோம். அவர் பிடிபட்டால் இந்த வழக்கு விசாரணை தீவிரமடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அப்போது, "நரேந்திர மோடியின் தமிழக வருகையின் போது, சதிதிட்டம் தீட்டப்பட்டதா?' என, நிருபர்கள் கேட்டதற்கு, ""தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்,'' என, பதிலளித்தார். மேலும், இந்த வழக்கு குறித்த பல கேள்விகளுக்கு, ""விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றே பதிலளித்தார்.

இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 08, 2013 2:32 am

எனக்கு ஒரு சந்தேகம்!!!

அம்மா பிஜேபியுடன் கூட்டு வெக்கற பிளான் இருக்கு - இதை இவங்களே செய்து இல்லேன்னா இதை பெரிய சர்ச்சையாக கிளப்பி ஓட்டை அள்ள நெனச்சிருப்பாங்களோ?

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 08, 2013 12:32 pm

யினியவன் wrote:எனக்கு ஒரு சந்தேகம்!!!

அம்மா பிஜேபியுடன் கூட்டு வெக்கற பிளான் இருக்கு - இதை இவங்களே செய்து இல்லேன்னா இதை பெரிய சர்ச்சையாக கிளப்பி ஓட்டை அள்ள நெனச்சிருப்பாங்களோ?
பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Oct 08, 2013 2:37 pm

பிரியாணி கேட்டு பிலால் அடம்! வேலூர் சிறையில், பயங்கரவாதி பிலால் மாலிக், பிரியாணி கேட்டு, ரகளை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சிறை காவலர்கள் கூறியதாவது: ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு, பக்கத்தில் உள்ள அறையில், அடைக்கப்பட்டுள்ள மாலிக், குடிக்க மினரல் வாட்டர் கேட்டார். சில நம்பர்களை கொடுத்து, போன் போட்டு கொடுக்கச் சொல்கிறார். மறுத்த போது, "வேலூர் சிறையில் பணம் கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் என்கின்றனர்; இங்கு நான் கேட்பதை கொடுக்க வேண்டும்' என, மிரட்டல் விடுத்தார். நேற்று மதியம், சாப்பாடு கொடுத்த போது, சிக்கன் பிரியாணி, மட்டன் கேட்டுள்ளார். "மாதம் இரண்டு முறை தான் கொடுப்போம்' என, சிறை அதிகாரிகள் கூறிய போது, "எனக்கு தினமும்வேண்டும்; கொடுத்தே ஆக வேண்டும்' என, ஆவேசத்துடன் ரகளை செய்த மாலிக்கை, சிறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இவ்வாறு சிறை காவலர்கள் கூறினர்.

தினமலர்
சும்மா கத விடுறாங்க சிறை காவலர்கள்  !!!!இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் 433338962

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக