புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
30 Posts - 50%
heezulia
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
72 Posts - 57%
heezulia
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இராம காவியம் - Page 3 Poll_c10இராம காவியம் - Page 3 Poll_m10இராம காவியம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே




Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:35 am

கூனியால் வந்த ஆனி

[You must be registered and logged in to see this image.]

முன் செய்வினையால் உடம்பில் கோணல் ஏற்படும். ஆனால், இராமயணத்தில் வரும் கூனிக்கு உள்ளத்திலும் கோணல்.

கூனி என்ற பேர் பெற்ற இவர் மந்தரை என்ற இயற்பெயரையுடைவள். கேகய நாட்டு மன்னனுடைய அரண்மனையில் பணிபுரிந்தவள, கைகேயிக்குச் செவிலித்தாய், தூக்கி எடுத்து உணவூட்டி வளர்த்தவள். அதனால், கைகேயிடம் அன்பு பூண்டவள். திரேதா யுகமே கூனியாக அவதரித்த மகாமேரு கிரியைப் போன்ற ஒரு பெரிய கேடு சூழ்ந்தாள்.

மனத்திலும் கோணல் உண்டு என்ற பட்டினத்துச் சுவாமிகள் கூறுகின்றார். இறைவனே! நல்வினையால் ஒருவனுக்குச் செல்வம் பல வழிகளில் வரும். வட்டி மூலம் வரும், வாடகை மூலம் வரும், வியாபாரததின் மூலம் வரும், விவசாயத்தின் மூலம் வரும், மனைவி மூலம் சீதனம் வரும். இதுபோல் இறைவா! இச்சிறியேனுக்குப் பாவங்கள், கோணல் பட்ட மனத்தாலும், வாக்கினாலும், ஐம்புலன்களாலும் வந்து குவிகின்றன. அப்பாவங்கள் தவம் செய்தாலும் போகமாட்டா.

இவ்வாறு, அயோத்தி மாநகரம் இன்ப வெள்ளத்தில் நீந்துகின்ற நேரத்தில் இராவணனாகிய கொடியவன் முனிவர்களுக்கும் ஏனைய சாதுக்களுக்கும் செய்யும் கொடுமை திரண்டு ஒரு வடிவங்கொண்டு வந்ததுபோல, கைகேயின் மாளிகையருகில் கூனி தோன்றினாள்.

மேல்மாடியில் பஞ்சணைமீது கைகேயியைத் தூங்க வைத்து விட்டுவந்த கூனி, இன்று என்ன விழா ? நகரம் சொர்க்கம் போல் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றதே ? என்று வினாவினாள். அங்கிருந்தவர்கள், கூனி! உனக்கு இது தெரியாதா ? நாளை இராமச்சந்திர மூர்த்திக்கு மகுடாபிஷேக விழா நடைபெற இருக்கின்றது என்றார்கள்.

இதனைக் கேட்ட கூனியின் மனத்தில் கோபத் தீ மூண்டது. அவள் கண்களில் தீப்பொறி பறந்தது. காதிலே மூக்கிலே புகையுண்டாயிற்று. பட்டாபிஷேகமா ? பட்டாபிஷேகமா என்று கூறிக் கறுவினாள். இதனை நான் தடுத்து நிறுத்துவேன் என்று கூறினாள்.

இராமர் முன்னொரு காலத்தில் மண் உருண்டை வைத்துக் குறி வைத்து வில் ஏந்தி விளையாடிக் கொண்டிருந்தார்.

கூனி மற்ற பெண்களுடன் தண்ணீர்க் குடங்களைச் சுமந்து வந்து கொண்டிருந்தாள். இராமர் இளமைப் பருவ விளையாட்டாக அவள் முதுகில் மண்ணுருண்டை எறிந்தார் என்று கூறுகின்றார்கள். அப்படியன்று, கருணையே வடிவான இராமர் மீது கருணை கொண்டு, பச்சை மண்ணுருண்டையைக் கூன் நிமிரட்டுமே ? என்று எறிந்தார். கும் கீழே விழ அவள் நிலத்தில் விழுந்தாள். அங்குள்ள பெண்மணிகள் கைகொட்டிச் சிரித்தார்கள். கூன் தீரவே மண்ணுருண்டை எறிந்தார் என்ற ஆழ்வார் கூறுகின்ற திறத்தை இங்கு நோக்குங்கள்.

தைய உண்டைவில் நிறத்திற்
றெறித்தாய்
-திருவாய்மொழி 1.5.5

முதல்நாள் போரில் தோல்வியடைந்த இராவணன், தன் சிறிய பாட்டனார் மாலியவானிடம் கூறியதையும் இங்கு நினைவு கூர்க.

இராவணன், தாத்தா! இராமன் என்மீது சினந்து போர் புரியவில்லை. இளமையில் கூனியின் கூன்போக மண்ணுருண்டை கொண்டு விளையாடியதுபோல் போர் புரிந்தான். கோபித்துப் போர் புரிந்தால் நான் பிழைத்து வந்திருக்க மாட்டேன் என்று கூறினான்.

இந்தச் சிறிய சம்பவத்தைக் கூனி நினைத்து இராமருக்குத் தீங்கு செய்ய முயல்கின்றாள்.

அயர்ந்து உறங்குகின்ற கைகேயியின் கால்களைப் பற்றி, கைகேயீ! உனக்குப் பகை வந்து சூழ்ந்திருக்கின்றது. இந்த ஆபத்தான நேரத்தில் நீ உறங்குகின்றாயே ? என்றாள்.

கைகேயி, கூனி, வேதமே யனைய இராமனை மகனாகப் பெற்ற எனக்குப் பகை வருமோ! ஒருபோதும் வராது. நீ என்ன உளறுகின்றாய். ? என்றாள்.

கூனி மதியில்லாத மங்கையே! நீ இன்னும் சிறு பெண்ணாகவே இருக்கின்றாய். கைகேயீ! உன் மகனைப் பாட்டன் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தன் கணவனுக்குத் தலையணை மந்திரம் ஓதி, உன் மகன் இல்லாத நேரத்தில், ஆண்கள் எள்ளி நகையாட, தாடகை என்ற பெண்ணைக் கொன்றானே இராமன், அந்த இராமனுக்கு நாளை பட்டாபிஷேகம் நடை பெறும். இத்தைப் பெரிய பூகம்பம் நேர்ந்துள்ளது. நீ ஒன்றும் உணராமல் உறங்குகின்றாயே என்றாள்.

இராமபிரானுக்கு முடிசூட்டு விழா என்று கேட்டவுடனே கைகேயி அடைந்த ஆனந்தத்துக்க எல்லையே இல்லை. அவள் முகம் பொலிவுற்றது, அகம் மிக மகிழ்ந்தது. துள்ளிக் குதித்தாள். இந்த மங்களமான நிகழ்ச்சியைக் கூறிய கூனிக்குத் தன் கழுத்தில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஓர் இரத்தின மணிமாலையை அவள் கழுத்தில் பரிசாக இட்டாள்.

கைகேயிக்கு இராமபிரான்மீது அத்துணை ஆழமான அன்பு இருந்தது. அந்த மாலையைக் கூனி கழற்றி வீசி எறிந்தாள்.

நிலம் குழியாகின்ற அளவுக்க மாலையை நிலத்தில் வீசி எறிந்தாள். அந்த மணிமாலை சிதையாதிருந்தது. அது அத்துணை உயர்ந்த மாலை என உணர்க.

கூனி, கைகேயீ! இன்னும் நீ சிறு பெண்ணாகவேணிருக்கின்றாய். தன் அதிநுட்பமான மதிநுட்பத்தால் உன் மாற்றவளாகிய கௌசலை வாழ்வு பெற்று உயர்ந்துவிட்டாள். உன் மகன் நடைப்பிணம்போல் ஆகிவிட்டான். சீதையும் இராமனும் சிங்காசத்திலிருக்க உன் தவப்புதல்வன் கைகட்டி, வாய் பொத்தி நிலத்தில் நின்று சேவகம் புரிய வேண்டும். அரச மாதேவியாகிய நீ கௌசலைக்குப் பணிவிடை புரியவேண்டும். கௌசலையின் தாதிக்குத் தாதியாக ஏவல் புரியவேண்டும். இப்படி ஓர் அவல நிலை நேர்ந்துவிட்டதே. முற்றாள் மைந்தனுக்கு முடிசூட்டுவிழா என்றால். நீ வருந்த வேண்டாமா ? மகிழ்கின்றாயே! பேதையே நவரத்தின மாலையை எனக்குப் பரிசாகத் தருகின்றாயே ? உனக்கு அறிவு இருகின்றதா ?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:36 am

என் அன்பு மகளே! வறுமையால் வாடுபவர்கள் உன்பால் வந்தால் அள்ளி அள்ளி வழங்குவாயே! இனி, உன்னால் அவ்வாறு அறஞ்செய்ய இயலாது. வழக்கமாகத் தந்தவர்க்கு இல்லையென்று கூறவாயா ? கொடுக்க முடியாதபோது அத்துன்பத்தால் மாண்டு போவாயா ? செல்வத்தில் வாழ்ந்த நீ இனி, வறுமையால் வாடுவாயா, உன் எதிர்கால அவலநிலையை நினைத்து வருந்துகின்றேன் என்றாள்.

இதனைக் கேட்ட கைகேயி புன்னகை புரிந்தாள். கூனி! நீ விளங்காமல் பேசுகின்றாய். இராமன் என் அன்புப் புதல்வன்.. . அறிவற்ற நீ ஏன் அரசியலில் புகுந்து பேசுகின்றாய் ? மதி கெட்டவளே. எங்கள் மனுகுலம், மயில் குலத்துரிமையுடையது. மயில் பல முட்டைகள் இடும். மூத்த குஞ்சுக்குத்தான் தலையில் கொண்டையிருக்கும். அதுபோல் எங்கள் ஆதித்தன் குலத்தில் மூத்த மகனுக்கு முடிசூடும் உரிமையுண்டு. இத்தகைய மரபை அழக்கலாமா ? சீதா தேவியின் திருமணம் முடிந்த பின், அயோத்திக்கு வரும் வழியில் எரிமலைபோல எதிர்த்த பரசுராமனைச் சக்ரவர்த்தியா வென்றார் டூ பரதனா வென்றான் ? இராமன்தானே வென்றான். இராமன் பரசுராமனை வென்ற நம்மைக் காத்தருளினாரே! அன்ற நம்மைக் காத்தவன் நான்கு புதல்வர்களில் மூத்தவன் .. . பட்டங்கட்ட ஏற்றவன். சீதைக்கு மாங்கல்யம் தரித்து அத்துணைப் பெரிய சபையிலே இராமன் எனக்குத்தானே முதல் வணக்கம் செய்தான். இராமன் ஆட்சி செய்தால் எல்லாம் எனக்குத் தான் உரியனவாகும். கூனி! அரசியலுக்கும் உனக்கும் வெகு தூரம் நீ இதில் தலையிடாதே. நீ எனக்கும் நல்லவள் அல்லள், பரதனுக்கும் நல்லவள் அல்லள், மீண்டும் பேசினால் உனக்குத் தண்டனை கிடைக்கும் என்றாள்.

கூனி, கைகேயீ! உனக்கு ஒன்றும் தெரியவில்லை. பதவியில் அமர்ந்தவட[ன் மனிதன் மாறிவிடுவான். இப்போது நான் கூறவதைக் கவனமாகக் கேள். கேகய நாடு வளமையான நாடு, விதேக நாடு வறண்ட நாடு. விதேக நாட்டு மன்னன் கேகள நாட்டு மன்னனாகிய உன் தந்தைமீது பலமுறை படையெடுத்து வந்தான். அப்போது உன் கணவர் தன் மாமனாருக்குத் துணை புரிந்தனால் ஜனகர் தோல்வியுற்றார். இப்போது, அரசர் இராமனுக்கு முடிசூட்டிக் கானகம் போனதால், ஜனகர் தன் மருமகனாகிய இராமருடன் கூடி, உன் தந்தையாரையும் உன் உடன் பிறந்தாரையும் கொன்ற விடுவார். இதனால்தான் இதனை வற்புறுத்திக் கூறுகின்றேன் என்றாள்.

எப்போதும் பெண்களக்குத் தாய்வீட்டுப் பாசம் அதிகம்.

தாட்சாயணி தன்னை அழைக்காத தட்சயாகத்துக்குச் சென்று துயரம் அடைந்தாள் என்பதனையும் இங்கு உன்னுக.

இதனைக் கேட்டவுடன் கைகேயின் உள்ளம் மாறிவிட்டது. ஆனால், கூனியின் வார்த்தையால் மட்டுமே அவள் மனம் மாறவில்லை. அரச்கர்கள் செய்த பாவமும் நல்லோர்கள் செய்த தவமுமே இதற்குக் காரணம். கைகேயின் இரக்கம் இன்மையே இராம சரித்திரமாகிய அமுதத்தை எல்லாரும் நுகர்ந்து நலம் பெறுகின்றார்கள்.

கைகேயின் இளகிய உள்ளம் கருங்கல் பாறையாக மாறியது. அவளது குறிந்த உள்ளம் எரிமலையாகக் கொடுங்கனல் வீசத் தொடங்கியது. கைகேயி, கூனி! நீ கூறியது உண்மை. இராமனும் ஜனகரும் சேர்ந்து என் தாய்வீட்டை அழித்து விடுவார்கள். இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முடிவி கட்டியதை எப்படி மாற்ற முடியும். இது எளிதாக ஆகுமா ? என்று கேட்டாள்.

கூனி, என் அன்பு மகளே ( அதுபற்றி நீ கவலைப் படாதே. சம்பராசுரப் போரில் நீ உன் கணவருக்குத் தேர் ஓட்டினாய் அல்லவா ? அதுபோது பள்ளத்தில் சாய்ந்த தேரை உன் வலிமையால் சரி செய்தாயல்லவா ? அப்போது அரசர் இரண்டு வரங்கள் தருகிறேன் என்றார் அல்லவா ? அந்த இரு வரங்களையும் இப்போது கேள். ஓருவரம் பரதன் நாடாள வேண்டும். மற்றொரு வரம், இராமன் வரவுரியுடன் சடைமுடியுடன் கானகம் போகவேண்டும்.

பதினான்கு வருடம் உண்ணாமலும், உறங்காமலும் இருந்தவனால் எனக்கு மரணம் வரனும் என்று இந்திரஜித் வரம் பெற்றான். அதனால், இங்குத் தெய்வச் செயலால் 14 ஆண்டு என வந்தது.

அரச மகளிர் இரு வரந்தான் பெறலாம் என்பது சாத்திரம். அதனால் கைகேயி இருவரம் பெறுகின்றாள். குந்தியும் கர்ணனிடம் ஒரு வரங்களைப் பெற்றாள் என மகாபாரதம் கூறுகின்றது.

கைகேயி கூனிக்கு மணிமாலையும் பொற்காசுகளும் கொடுத்து அனுப்பினாள்.

கைகேயி தன் நெற்றியில் உள்ள திலகத்தை அழித்தாள். தலையில் சூடியிருந்த மலரை எடுத்து எறிந்தாள். வளையல்களை உடைத்தாள். தாந் அயிந்த அணிகலன்களைக் கழற்றிப் பல திசைகளிலும் எறிந்தாள். அவள் படுக்கை வீட்டில் பெறுந்தலையில் படுத்திருப்பது, நாளை மகாலட்சுமியாகிய சீதா தேவி அயோத்தியை விட்டுக் கானகம் போகின்றாளே என்று அவள் தம்க்கையாகிய மூதேவி வந்து படுத்திருப்பதைப்போல் இருக்கின்றதாம் அந்தக் காட்சி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:45 am

தசரதரும் கைகேயியும்
[You must be registered and logged in to see this image.]

தசரதர் தன் மனைவியர்கட்குப் பட்டாபிஷேக நிகழ்ச்சியை அறிவித்துவிட்டு இறுதியாகச் கைகேயின் பொன் மாளிகைக்குச் சென்றார். எப்போதும் அகமலர்ந்து முகமலர்ந்து வரவேற்று உபசரிக்கின்ற காதல் மனைவி கைகேயியைக் கண்டாரில்லை. படுக்கையறையில் தலைவிரித்துக்கொண்டு அலங்கோலமாகப் படுத்திருக்கின்ற பத்தினியைக் கண்டார். திடுக்கிட்டார். மனைவியை அன்புடன் எடுத்துக் கண்ணீரைத் துடைத்தார். அவள் விம்மி விம்மியழுதாள்.

பெண்மணி! உனக்கு என்ன கவலை ? ஏன் அழுகின்றாய் ? நீ வருந்தியழு நான் ஒருநாள் கூடப் பார்த்ததில்லையே ? உன்னை யாராவது இகழ்ந்தார்களா ? நீ உயிர்த் துணைவியாயிற்றே என்று தசரதர் வினவினார்.

கைகேயி,பெருமானே! வேறு ஒன்றுமில்லை - முன் சம்பராயுத்தத்தில் எனக்கு இருவரங்கள் தருவதாக வாக்களித்தீரே அந்த வரங்களை இப்போது கேட்கின்றறேன். என்றாள்.

தசரதர்,பெண்ணரசே! இதற்கா இத்தனை சாகஸம் - தொடர்பு இல்;லலதவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி வழங்குகின்ற யான் என் உயிரினும் உயர்ந்த உனக்கு இல்லையென்பேனா ? உன் மைந்தன் இராமனமீது ஆணை. உனக்கு என்ன வேண்டும் ? கேள் என்றார்.

கைகேயி,மன்னவரே! ஒருவரம் என் மகன் அரியணையில் அமர்ந்து அரசு புரியவேண்டும், மற்றொரு வரம் இராமன் மரவுரி சடைமுடியுடன் பதினான்கு ஆண்டுகள் வனம் போக வேண்டும் என்றாள். இதனைக் கேட்டுத் தசரதர் இடி யேறுண்ட நாகம் போல் நடுங்கினார். உயிர்ப்பு அடங்கி ஓவியம்போல் மயங்கிக் கிடந்தார். செய்வது யாது என்ற அறியாது திகைத்தார். நாம் கனவு காண்கின்றோமா ? என்று எண்ணினார். கைகேயியைப் பற்றி எற்றலாமா ? என்று எண்ணினார். மாதரை அடிப்பது முறையன்று என்று கருதினார். சூவதனையால் துடித்தார். கைகேயின் கால்மீது வீழ்ந்தார். அருவிபோல் கண்ணீர் பெருகியது.

பெண்மணி! ஐம்பத்தாறு தேயத்து மன்னர்களும் என்னைப் பணிகின்றார்கள். நான் உன்னைப் பணிகின்றேன். உன் மனத்தை மாற்றியவர் யார் ? உன் வரத்தின்படி நான் அரச பதவியைத் தந்தாலும் உத்தம குணமுடைய பரதன் அதனை ஏற்றக் கொள்ளமாட்டான. நாளை நான் இராகவனுக்கு முடிசூட்டுவேன். முடிசூடிக்கொண்டே இராமன் என்னை வணங்குவான். இராமா! இந்த அரச பதவியைப் பரதனுக்குத் தருவாயாக என்று நான் கூறுவேன். தந்தை சொல்லைத் தட்டாத இராமன் பரதனுக்கு முடிசூட்டுவான். இது எனக்கும் பெருமை. இராமனுக்கு பெருமை. பரதனுக்கும் பெருமை. நீ பிடிவாதம் செய்யாதே என்றார்.

கைகேயி,மன்னர் பெருமானே! ஒரு சொல்லுக்காக மனைவியை விற்ற அரிச்சந்திரனுடைய மரவில் வந்த நீர் சொன்ன சொல்லைத் தவறக் கூடாது. நீர் இதனை என் வரத்தின்படி செய்யவில்லையானால் இப்போதே நான் உயிர் துறப்பேன். அபயனம் புகுந்த ஒரு புறாவுக்காக தன் உடல் தசையை அறுத்துத் தலையில் ஏறிய சிபிச் சக்கரவர்த்தியின் மரவில் வந்த நீர் சொல் தவறலாமா ? பரதன் நாடாள வேண்டும். இராமன் காடு போகவேண்டும் என்றாள்.

தசரதர் இதனைக் கேட்டு அளவில்லாத துயரத்தையடைந்தார்.

கைகேயீ! நான் போக வேண்டிய காட்டுக்கு இராமன் போவதா ? மெல்லணையில் துயின்ற என் அருநமந்த மகன் கல்லணையில் துயில்வதா ? இராமன் அயோத்தியில் இருந்தால் உனக்கோ உன் மகனுக்கோ என்ன தீங்கு செய்வான் ? அவன் சரயு நதிக்கரையில் ஒரு பர்ணசாலையில் இருக்கட்டும். பரதன் முடி சூட்டி ஆட்சி புரியட்டும். வெப்பமான விலங்குகள் வாழும் கானகத்துக்கு இராமனை அனுப்பாதே. துண்மையான உன் பெண்மையுள்ளம் இரும்பா ? கல்லா ? பரதன் நாடாளும் ஒரு வரத்தைத் தந்தேன். மறுவரத்தை மறந்து விடு 60 ஆயிரம் ஆண்டு தவம் புரிந்து பெற்ற மகனாகிய ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிவதா ? அதனை நினைத்தால் என் இதயம் வெடித்துவிடும்போல் இருக்கின்றதே. இராமா! இராமா! என்று புலம்பினார்.

கைகேயி,தந்த வரத்தை மறுப்பது தகாது என்று கூறினாள். மன்னவர் இராமா இராமா என்று அழுது மூர்ச்சித்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:47 am



இராமர் வனம் போக விடைபெறுதல்


[You must be registered and logged in to see this image.]

அன்று இரவு கழிந்து பொழுது புலர்கின்றது. அயோத்தியில் வாழும் மாந்தர்கள் மாட்டற்ற மகிழ்ச்சியினால், இராமருடைய மகுடாபிஷேக விழாவைச் சேவிக்க பட்டாபிஷேக மண்டபத்தில் குழுமினார்கள். வசிட்ட முனிவர் வேதியர்கள் புடைகுழ அங்கு வந்தார். சுமந்திரரே! பட்டாபி ஷேகம் புரியும் நேரம் நெருங்குகின்றது. நீர் போய் மன்னவரை அழைத்து வருக என்றார். சுமந்திரர் மன்னவர் கைகேயியின் அரண்மனையில் இருக்கட்டும் என்ற எண்ணிக் கைகேயியின் திருமாளிகையை அடைந்தார். அங்கே சக்கரவர்த்தி படுக்கை யறையில் அவசமாக இருந்ததை அவர் கண்டாரில்லை.

கைகேயி அமைச்சரைப் பார்த்து,அமைச்சரே! நீர் சென்று இராமனை இங்கு அழைத்து வாரும் என்றான். சுமந்திரர் மகுடம் சூடிக்கொள்ளும் மகனை வாழ்த்தியனுப்புவார் போலும் என்று எண்ணி இராமருடைய திருமாளிகையை அடைந்து, இராமரைப் பணிந்து, கைகேயி அம்மையார் அழைக்கின்றார் என்று கூறினார்.

இராமர் ஜானகி! முடிசூட்டும் நேரம் நெருங்கிவிட்டது. என்ன என் அன்னை அழைக்கின்றார். சென்ற வருவேன். நீ மகுடாபிஷேகத்துக்கு ஆ[யுத்தமாக இரு என்று கூறி விட்டுத் தேரில் ஏறிப் புறப்பட்டார். சுமந்திரர் தேரைச் செலுத்தினார் மக்கள் இராமபிரானக் கண்டு கண்ணுங் கருத்துங் குளிர்ந்து களிப்புற்றனர். இராமரைக் கௌசலாதேவி பெற்றார். ஆனால், வளர்த்தது கைகேயிதானே. ஆதனால், தன் அன்பு மகன் இராமபிரானை வாழ்த்தி அனுப்புகின்றார். என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். வீரர்கள் வாள் ஏந்திக் காவல் புரிந்தார்கள். இளம் மகளிர் வெண்சாமரம் இரட்டினார்கள். பல பெண்கள் இனிமையாகப் பாடினார்கள். பலர் மலர் சொரிந்து தூதி செய்தார்கள். வேத வித்தக்களாகிய அந்தணர்கள் மந்திரங் கூறி வாழ்த்தினார்கள்.

இராமர் கைகேயியின் மாளிகையை அடைந்தார். கைகேயி முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தாள். இராமர் (அம்மா ) என்று அன்புடன் அழைத்த அஞ்சலி செய்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:47 am

கைகேயியின் கட்டளை

இராமா! உன் தந்தை இப்போது ஒரு புதிய கட்டளையிட்டிருக்கின்றார். அதனை நான் கூறலாமா என்றாள் கைகேயி. இராமர் அம்மா! தந்தையின் கட்டளை தாய் மூலம் அமைந்தால் இதனைவிட எனக்கு நலம் வேறு உளதோ ? கட்டளை இடுங்கள். அதனை அடியேன் செய்வேன் என்றார்.

கைகேயி,இராமா! கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் பரதன் ஆட்சி புரியவேண்டும். நீ பதினான்கு ஆண்டுகள் சடை முடியோடும், மரவுரியுடனும் வெப்பமான கானகம் போக வேண்டும். இது அரசனுடைய ஆணை என்றாள்.

இதனைக் கேட்ட இராமபிரான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். அவருடைய திருமுகம் தாமரையிலும் மிக அழகாக மலர்ச்சியடைந்தது.

பாரம் நிறைந்த வண்டியில் பூட்டிய காளை மாட்டை விழ்த்துவிட்டால் அக்காளை மாடு மகிழ்வதுபோல் அகமும் முகமும் மலர்ந்து இராமன் கூறுகின்றார்.

முன்னறி தெய்வமாகிய அன்னயே! ஆயிரந் தந்தையர் சேர்ந்தால் ஒரு தாயாகுமா என்னை முந்நூறு நாள் சுமந்து பெற்றுப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்த தாயினும் சிறந்த கோயில் உளதோ ? இல்லை. உன் நலத்திலே தங்களுக்குத்தானே அக்கறை யதிகம். அம்மா! மன்னவருடைய கட்டளையே இல்லை என்றாலும் தங்கள் கட்டளையை மறுப்பேனா ? என் தம்பி பெற்ற செல்வம் நான் பெற்றதன்றோ. அரச பதவி அல்லல் பல தருவது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. அடியேன் செய்த புண்ணியம் இந்த இனிய வாய்ப்பு கிடைத்தது. இன்றே வனம் போகின்றேன் என்று கூறி விடைபெற்று. இராமர் புறப்பட்டார்.

இராமபிரான், வனம் போகக் கைகேயியிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். வெண்கொற்றக் குடையில்லை. வெண் சாமரமில்லை. தனியே புறப்படுகின்றார். சக்ரவர்த்தியின் தனிப்பெரும் புதல்வர் துணையின்றித் தனியே போகின்றாரே, என்று கம்பநாடர் எண்ணுகின்றார். இராமருக்கு முன்னும் பின்னும் இருவரைச் சேர்க்கின்றார். இராமருக்கு முன் விதி செல்கின்றது. தருமம் பின்னே அங்குத் தொடர்ந்து செல்லுகின்றது.

இங்கே இழைக்கின்ற விதி என்பது இராமபிரான் செய்த விதி என்று பொருள் செய்யக்கூடாது. இராவணாதி அவுணர்கள் செய்கின்ற விதி என்ற பொருள் செய்ய வேண்டும்.

இராமபிரான் தன்னைப் பெற்ற கௌசலையின் திருமாளிகைக்குச் சென்றார்.

இராமர் தாயரை அடியற்ற மரம்போல் வீழ்ந்து வணங்கினார். நிலத்தில் வீழ்ந்து பணிந்த மகனை எடுத்துக் கன்னத்தைக்கிள்ளி முத்தம் தந்துமகனே, நீடு வாழ்க. உனக்கு மகுடாபிஷேகம் செய்யும் நேரம் ஆயிற்றே. பரதன் வரவேண்டும். ஜனக மாமன்னர் வரவேண்டும் என்று தாமதிக்கின்றார்களா ? பட்டாபிஷேகம் செய்ய ஏன் தாமதிக்கின்றார்கள் என்று கௌசலை வினவினார்.

இராமர்,அம்மா! அப்பா இந்தத் தேசத்தைப் பரதன் ஆளவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றார் என்றார்.

கௌசலை,மகனே! மிகவும் நல்லது. இட்சுவாகு குலத்தில் மூத்தவனக்குத்தான் முடிசூட்டவேண்டும். மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடிசூட்டுவது முறைமையன்று. ஆனால் உன்னைவிடப் பரதன் நல்லவன். அவன் அரசு புரிந்தால் நாட்டுக்கு நலம், அரசியல் ஒரு சுமை. நீ ஆத்ம நலனுக்கு அதிகம் பாடுபடலாம் என்றாள்.

அம்மா! அப்பாவுடைய கட்டளை மற்றொன்றும் உண்டு. அடியேன் மரவுரியுடன் சடைமுடி தாங்கி 14 ஆண்டுகள் வனம் போகவேண்டும். இது பிதாவின் கட்டளை. ஆதலால், அடியேன் வனம் போகின்றேன்.

இந்த வார்த்தையைக் கேட்ட கௌசலை,மகனே! என்ற நிலத்தில் வீழ்ந்தாள். வேதனையால் மனம் வெந்து நொந்த துடிதுடித்தாள். தாம் போகவேண்டிய வெப்பமான கானகத்துக்கு உன் தந்தை உன்னைப் போக் சொன்னாரா ? மெல்லணையில் படுத்த நீ காட்டில் கல்லணையில் படுக்க வேண்டுமா ? உன் மெல்லிய பாதம் கல்லும் முள்ளும் நிறைந்த கட்டில் நடக்க வேண்டுமா ? காய்கனி உண்டு உயிர் வாது வேண்டுமே ? இது என்ன வஞ்சம் ? கல் நெஞ்சம். நீ போகின்ற காட்டிற்கு நானும் வந்த உனக்குத் துணை புரிகின்றேன் என்று கூறிப் புலம்பி யழுதாள்.

அம்மா! தந்தை சொல்தான் எனக்கு மந்திரம். நான் கானகம் போகவில்லையானால் தந்தையாரின் வாய்மை வழுவும். தாங்கள் தந்தையாருக்கு உதவி புரிய இங்கே இருக்க வேண்டும். பல பிறளகளைப் பெறலாம், கணவன் ஒருவன் தானே! தாங்கள் என்னுடன் வருவது முறையன்று. என் வேண்டுகோளைப் புறக்கணிக்க வேண்டாம். அடியேனுக்கு உளமாற ஆசிகூறி வனம் போக விடை கொடுங்கள்.

கௌசலை கண்ணீர் வடித்தாள். மகனே! அயலூர் போகும் மகனுக்குத் தாய்ட்டமுது கட்டித் தருவாள். பரதனுக்க அரசு என்றதனால் கட்டமுதம் தர எனக்கு இயல்பு இல்லை. அப்படியே கடன் வாங்கிக் கட்டமுது தந்தாலும் இரு வேளைக்குத்தானே ஆகும்.

என் ஆருயிரே! அருமைப் பாலகனே! ஒரு தாய் மகனுக்குச் செய்யும் உதவியைச் செய்ய நான் ஆற்றல் இன்றித் துன்புறுகின்றேன். தருமம் என்ற ஒரு கட்டமுதை உனக்குத் தருகின்றேன். நீ அறநெறியில் ழுவாதிரு. உனக்கு விலங்குகளும் பறவைகளும் உதவி செய்யும். (விலங்கு - வாநரம், பறவை - ஜடாயு)

மகனே! உன் ஆருயிரை அரனார் காக்க, உன் சிரத்தைத் திருமால் காக்க, உன் தோள்களை அசுவிநி தேவர்கள் காக்க, ஏனைய தேவர்கள் உன்னைக் காக்கட்டும். நீ வாழ்கின்ற கானகத்தில் காலமில்லாத காலத்திலும் மரங்கள் பழுத்த உனக்கு உதவுமாக ,, மூலம் இன்றியே அங்கே நறுமணம் வீசுமாக.. . நீ வசிக்கின்ற காடு வெப்பம் இன்றித் தணிந்து குளிர்ந்து உனக்கு நலம் புரியக் கடவது. போய் வருக! என்ற ஆசி கூறினாள்.

இராமர் சுமித்திரையின் பொன் மாளிகைக்குப் புறப்பட்டார். கௌசலை தசரதரிடம் போய் இராமனை வனம் போகவாவண்ணம் தடுத்து நிறுத்த அனுமதி பெறலாம் என்று எண்ணிக் கைகேயியின் மாளிகைக்குச் சென்றாள். அங்கு மன்னவர் இருக்கும் அவல நிலையைக் கண்டு ஆறாத் துயரங் கொண்டு மன்னவருடைய பாதங்களைப் பற்றி வாய்விட்டுப் புலம்பியழுதாள். அக்குரலைக் கேட்ட வசிட்டர் கைகேயியின் மாளிகையை அடைந்து மன்னவன் மூர்ச்சிருப்பதைக் கண்டார்.

திடுக்கிட்டார். வசிட்ட முனிவர்கைகேயியைப் பார்த்த அம்மா! என்ன நிகழந்தது ? மன்னவர் தம்மை மறந்து மூர்ச்சித்திருக்னிறாரே! என்ன காரணம் ? என்று வினாவினார்.

கைகேயி, குருநாதா! சம்பராசுர யுத்தத்தில் மன்னவர் எனக்கு இருவரங்களைத் தந்தார். பரதன் நாடு ஆளவும், இராமன் சடைமுடியுடன் 14 ஆண்டுகள் காடாளவும் வரம் கேட்டேன். வரத்தைத் தந்துவிட்டு இப்போது துயரப்படுகின்றார். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டாவோ ? என்றாள்.

வசிட்ட முனிவர் கைகேயியால் விளைந்த விளைவு என உணர்ந்தார்.

அம்மா! சக்ரவர்த்தி கொடுத்த வரம் கொடுத்ததுதான். ஆனால், குலகுருவாகிய நான் உன்னை ஒரு வரம் கேட்கின்றேன். பரதன் முடிசூட்டி அரசு புரிவானாக. இராமன் வனம் போகமாமல் அயோத்தியில் ஒரு தவச்சாலையில் இருக்கட்டும் இது நீ எனக்குத் தரும் வரம் என்றார்.

கரும்பாறை போன்ற கடிற நெஞ்சமுடைய அக்கொடியவள், கைகேயி, இராமன் காடுபோகவேண்டும். இல்லையேல் நான் இப்போதே உயிரை விடுவேன் என்றாள். வசிட்டர் சீற்றம் அடைந்தார். கைகேயீ! மூத்தவன்தான் முடிசூடவேண்டும் என்பது மனுகுலத்தில் வழிவழியாக வந்த மரபு. உன்னால் அந்த மரபு அழிகின்றது. மன்னர் பெருமான் மரண வேதனையடைந்துள்ளார். அதனைக் கண்டும் நீ இரங்கவில்லை. நீ பெண்ணா ? பேயா ? என்று உரத்த குரலில் கடிந்துரைத்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:48 am

தசரதர் மூர்ச்சை தெளிந்தார். அழுகின்ற கௌசலையைப் பார்த்து மனம் பதைத்தார். பெண்மணியே! நெடு நாளைக்கு முன்னே யானை வேட்டைக்குச் சென்ற யான், சுரக்குடுக்கையில் தண்ணீர் முக்கி எடுத்த ஒரு குரு புத்திரனை, யானை தண்ணீர் குடிக்கிறது என்று தவறாகக் கருதி, சப்தவேதி என்ற கணையைத் தொடுத்தேன. அப்பாலகன் மாண்டுவிட்டான். அவனுடைய தாய் தந்தையர், அழுது புத்திர சோகத்தால் உனக்கு உயிர் புரியும் என்ற சாபமிட்டார்கள். அந்தச சாபம் இப்போது நேர்ந்துள்ளது. இராமன் கானகம் போவதும், யான் வானகம் போவதும் உறுதி. அவ்வினைக்கு இவ்வினை. விதியை வென்றவர் யாவர் ? நீ அழாதே.

கைகேயீ! கூற்றுவன் பெண் வடிவிலே வந்து என்ன வதைக்கின்றான். கணவனை உயிருடன் வாட்டி வதைக்கின்ற மகளிர் சிலர் உண்டு. உன்னைப்போல் கணவனை அடிடன் வதைத்த மாதர் யாண்டும் இல்லை.

இராமன் உத்தன குணம் நிறைந்தவன், அவன் அயோத்தியில் இருந்தால் உனக்கோ ? உன் மகன் பரதனுக்கோ என்ன தீங்கு செய்வான் ? அவன் காலில் அகப்பட்ட புழுவும் நசுங்காதே. பாவீ! கருவூலத்தில் உள்ள பணம் குடிகளின் வரிப் பணமாகும். அதனை ஊதாரித்தானமாகச் செலவு செய்யக் கூடாது. முடிசூட்டு விழாவுக்கு என்று சேகரித்த பொருள்களை என் உத்தரகிரியைக்கு வைத்துக்கொள். பரதனுக்கு முடிசூட்டும் கையில் காப்பு நூல் கட்டுவார்கள். அதற்க வேறு நூல் விலை கொடுத்து வாங்க வேண்டாம், உன் கழுத்தில் இருக்கும் தாலிக் கயிற்றை உன் மகன் கையில் கங்கண நூலாகக் கட்டுக. ஆலகாலவிடமே ஒரு பெண்ணுருவாக வந்துள்ளது.

குருநாதா! இந்தக் கைகேயி எனக்கு மனைவியல்லள், பரதன் எனக்கு மகன் அல்லன். அவன் எனக்கு ஈமக்கடன் செய்ய வரியவனாகான். ராம ராம ராம என்று கூறி மீண்டும் மூர்ச்சையடைந்தார்.

இந்தக் கோர சம்பவத்தைக் கண்டு வசிட்டர் பட்டாபி ஷேக மண்டபத்தை அடைந்த அங்கே கூடியிருந்தவர்களிடம் நிகழந்ததைக் கூறினார். வசிட்ட முனிவர்மூலம் செய்தியைக் கேட்ட மக்கள், வாய்விட்டுப் புலம்பி அழுதார்கள். மனிதர்கள் மட்டும் அழவில்லை. மாடு, ஆடு, யானை, குதிரை, மரம், செடி, கொடி என்ற சராசரங்கள் யாவும் அழுதன.

சுபா மண்டபத்துக்கு வந்த இலட்சுமணன். கைகேயி வரம்வாங்கி பரதன் நாடு ஆளவும், இராமன் காடு போகவும் ஏற்பாடு செய்தார் என்று கேட்டு எரிமலைபோல் கொதித்து நின்றார். கோதண்டத்தை வளைத்து, மகா ஜனங்களே! சிங்கக் குருளைக்கு என்று சமைத்த ஊனை நாய்க்குட்டிக்கு - இடுவதா ? கைகேயியின் தீய புத்தியின் தன்மை கொடியது! கொடியது!* வீரம் இருந்தால் போர் புரியுங்கள். ஏழு கடல்களையும் என் அக்கினிப் படையால் வற்றச் செய்வேன் என்று கூறி வில்லை வளைத்து நாண் ஓசையை உண்டாக்கினான். அண்டங்கள் அதிர்ந்தன.

சுமித்திரையின் பொன் மாளிகைக்குச் சென்றுகொண்டிருந்த இராமபிரான் இலட்சுமணனுடைய வில் ஓசையைக் கேட்டார். இலட்சுமணன் சீறினால் உலகம் அழியுமே என்ற எண்ணிச் சபா மண்டபத்தை அடைந்தார. கிணற்று நீர் கொதிக்குமானால் கடல் வந்த தணியச் செய்யுமாப்போல் இருந்தது.

இலட்சுமணர்,அண்ணா தங்கள் மகுடாபிஷேகத்துக்குத் தடை செய்வதவர்களைத் தவிடு பொடியாக்குவேன். பூவுலகம் மட்டும் அன்று, பதினான்கு உலகங்களையும் தங்கட்கு உரியதாக்கி முடி சூட்டுவேன் என்றான்.

தம்பீ! சாந்த அலைபாயும் இந்த அயோத்தியில் மண்ணுக்கே கோபம் வராதே ? உனக்குக் கோபம் எப்படி எய்தியது ?

அண்ணா! தேவரீருடைய பட்டாபிஷேகத்துக்குத் தடை செய்த இன்று என் ஆற்றல் மிகுந்த சீற்றம் என்ற மணிமாலையைப் பூணாமல் வேறு என்று பூண்பேன் ?

தம்பி! தானத்தில் சிறந்தது நிதானம். நதியில் தண்ணீர் இல்லையொன்றால் அது நதியின் பிழையன்று, மழையின் பிழையாகும். இந்த நிகழ்ச்சி மன்னர் பெருமானுடைய பிழையன்று, நம்மைப் பெற்றுப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த தாயின் பிழையும் அன்று, பரதன் பிழையும் அன்று இது விதியின் பிழையாகும், சாந்தமடைவாயாக.

அண்ணா! விதிவிதி என்று பேசி, மதியையிழக்கின்றவன் நானல்லன், விதிக்கும் விதியைக் காணும் என் வில்லாண்மையை இப்போது காண்பீராக.

தம்பீ! வேதம் ஓதிய உன் நாவினால் விதியில்லை என்று விளம்புகின்றனையே. விதியை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நமது மதம் கடைக்கால் இல்லாத கட்டிடம் ஆகும். அது இருக்கட்டும். என்னைக் கானகம் போகச் கட்டளையிட்டவர்கள் தாய் தந்தையராகும். தாய் தந்தையரின ஆணையை மீறலாமா ?

அண்ணா! தசரதர் தந்தையல்லர். சுமித்திரை தாயும் அல்லள். எனக்குத் தாய், தந்தை, தெய்வம் எல்லாம் தாங்கள்தான்.

தம்பீ! உனக்கு நான்தான் தந்தை, உன் உரிமையை நான் மறுக்கவில்லை. எனக்கு நல்லுரை கூறி நாறும் வளர்த்தவர் தந்தை தசரதர். அவர் என் தந்தை. அவருடைய கட்டளையை நான் மீறமாட்டேன். உனக்குத் தந்தை நான்தானே. என் கட்டளையை நீ மீறக்கூடாது. சாந்தியடைக என்றார். அவர் யார் ? செந்தமிழும் வடமொழியும் சேர்ந்த இராமச்சந்திர மூர்த்தி என உணர்க. மந்திரத்தால் கட்டுண்ட நாகம்போல இலட்சுமணர் சினமடங்கி சாந்தியானார். இராமரும் இலட்சுமணரும் சுமித்திரையின் திருமாளிகையை அடைந்தார்கள்.

கைகேயி இராமருக்கு மரவுரியை அனுப்பினாள். மகிழச்சியுடன் இராமர் விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அகற்றி மரவுரியை உடுத்துக் கொண்டார்.

சுமித்திரை ஒரு மரவுரியை தன் அருமந்த மகன் இலட்சமணனிடம் தந்து உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கூறுகின்றாள்.

மகனே! நீ இராமனுக்குத் துணையாகக் கானகம் போய் வருக. அண்ணனுக்குப் பாதபூசை செய்து பதம் பெறுவாயாக. காட்டில் அரக்கர்கள் வந்தால் அண்ணனுக்கு முன்னே சென்று போர் புரிக. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழியைக் கடைப்பிடிப்பாயாக.

உனக்குத் தாய் சீதா தேவி, தந்தை இராமபிரான். இராமனி உறைகின்ற கானகமே அயோகத்தி மாநகரமாகும். உன் அண்ணன் குறிப்பறிந்து தொண்டு செய்வாயாக. பதினான்கு ஆண்டுகள் கழித்து இராமன் அயோத்திக்கு வந்தால் நீயும் வருக. விதியின் வலிமையால் இராமனுக்கு முடிவு நேருமாயின், அவனக்கு முன் நீ முடிவாயாக. இன்று முதல் நீ இராமனுக்குத் தம்பியல்லன். இரமனுடைய பணியாளன். இராமனுஜன் அல்லன். நீ இராமதாசன், போய் வருக கண்ணீர் சொரிந்து விடை தந்தாள். இராம இலட்சுமணர் வசிட்டரையும் ஏனைய தாய்மார்களையும் வணங்கி, சீதா தேவியின் திருமாளிகையை அடைந்தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:52 am

இராமர் வனம் புகுதல்
[You must be registered and logged in to see this image.]

இராமரும் இலட்சுமணரும் மரவுரியுடுத்துத் துறவுக் கோலத்துடன் வருவதைக் கண்டு சீதாபிராட்டினாயார் திடுக்கிட்டார். திருமணம் நடக்கும்போது காசி யாத்திரை என்ற ஒரு சடங்க நிகழுமே, அதுபோல் பட்டாபிஷேகத்தில் இது ஒரு சடங்கோ ? என்று எண்ணினாள்.

சீதாதேவி, இராமருடைய திருவடியில் வீழ்ந்து வணங்கினாள். பெருமானே! உமக்கு இப்போது மகுடாபிஷேகம் நடக்கும் நேரம் ஆயிற்றே ? இது என்ன துறவுக்கோலம் ? என்று வினவினாள்.

இராமர், ஜானகீ! என் தந்தையார் இந்த அரச பதவியை என் தம்பி பரதனுக்கு அளிக்கின்றார் என்றார்.

சீதை, பெருமானே! தாங்கள் முடிசூடி அரச பதவியில் அமர்ந்தால் வேதவேதாந்தங்களை எனக்கு உபதேசிக்க நேரம் இராதே என்று எண்ணினேன். இப்போது தம்பி பரதர் முடிசூட்டிக் கொண்டால் தாங்கள் அதிக நேரம் என்னுடன் இருந்து எனக்கு மகிழ்ச்சியைத் தருவீர் என்றாள்.

தேவீ! என் தந்தையார் என்னைப் பதினான்கு ஆண்டுகள் வனவாச் செய்யுமாறு கட்டளையிட்டிருக்கின்றார் என்றார் இராமர். இதைக் கேட்டதும் சீதை, சுவாமீ! மிக்க மகிழ்ச்சி. வனத்தில் அருவியில் நீராடலாம். மயில்கள் ஆடும், வண்டுகள் பாடும். குயில்கள் கூவும். செடி கொடிகள் பூத்துக் குலுங்கும் இயற்கை கொழிக்கும். எனக்கு வனவாசம் நிரம்பப் பிடிக்கும் என்றாள்.

இராமர், தேவீ! நீ அயோத்தியில் இரு. நான் வனம் போவேன்! என்றார். இந்த வெய்ய வார்த்தையைக் கேட்டு, சீதை நிலத்தில் வீழ்ந்து மூர்ச்சித்தனள், இராமர் சீதையை எடுத்து, தேவி! வனவாசம் கடினமானது. காட்டில் அனல் காற்று வீசும். பாறைமீது படுக்க வேணும். காய்கனியருந்த வேணும். உன் உடம்பு வருந்தும். நீ அரண்மனையில் இரு என்றார்.

தேவி, ஐயனே! உமது பிரிவில் பெருங்காடு சுடுமோ! நீர் படுக்கின்ற பாறைதான் எனக்குப் ப்சணை. நீர் உண்ணும் காய்கனிகள் எனக்கு அமுதமாகும். உன்னைப் பிரியேன் என்று மந்திரத்தைக்கூறி என் கைப்பிடித்தீரே. அதனை மறக்கலாமோ ? ஒருபோதும் உம்மைப் பிரியமாட்டேன். நான் தங்களுடன் வந்து தங்களுக்கு தொண்டு செய்வேன் என்றாள்.

இராமர், தேவீ! கானகத்தில் உன்னை வைத்துக் காப்பது கடினம். ஆதலால், நீ அயோத்தியில் இரு என்றார்.

ஐயனே! ஒரு பெண்ணை வைத்துக் காக்க இயலாதா, ஒரு பெண்ணைக் காக்க முடியாத நீர் உலகத்தை எப்படி காத்தருளுவீர் ? சுவாமீ! அம்மாவிடம் கூறி வனவாசத்துக்கு உத்தரவு பெற்றீரா ? அம்மா என்ன சொன்னார்கள் ? என்று கேட்டாள் சீதை.

ஜானகி என் தாய் புத்திர பாசத்தால் என்னுடன் வருவதாகக் கூறினார். நான் கற்புடைய மாதர்கள் கணவனை விட்டுப் பிரியக்கூடாது. நீங்கள் அப்பாவுக்குத் துணையாக இருங்கள் என்று கூறினேன்.

சீதை, ஐயனே! வயது முதிர்ந்த உமது அன்னை கணவனை விட்டுப் பிரியக் கூடாது என்று கூறினீரே! இளம் வயதுடைய நான் தங்களை விட்டு பிரிந்திருக்கலாமோ ? தாய்க்கு ஒரு நியாயம், தாரத்துக்கு ஒரு நியாயமோ! என்னை வரவேண்டாம் என்றால் என் உயிர் நிலை பெறாது என்று கூறி தான் அணிந்திருந்த அணிகலன்களையெல்லாம் அகற்றி மரவுரி உடுத்துத் தன் கணவனைப் பணிந்து எழுந்தாள்.

இராமர் சீதையுடனும் இலட்சுமணருடனும் வனம்போகப் புறப்பட்டார்.

இராமபிரான் வசிட்டரையும் ஏனைய தாய்மார்களையும் தொழுது புறப்பட்டார். சுமந்திரருடைய வேண்டுகோளின்படி தேர் ஏறிச் சென்றார். அயோத்தியில் வாழும் அன்பர்கள் அனைவரும் அழுது இராமரைத் தொழுது தேரின் பின் சென்றார்கள். இராமர் தமக்குரிய பொன் பொருள் பசு முதலியவற்றை வறியவர்க்கு வழங்கினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:53 am

தசரதர் முத்தியடைதல்

இராமர் தேர் மீது ஏறி 16 மைல் சென்றார். ஆதித்தன் மேற் கடலில் வீழ்ந்தான். மக்கள் துன்பக் கடலில் ஆழ்ந்தார்கள். இருள் சூழ்ந்து. இராமர் சுமந்திரரை நோக்கி, நீர் தேருடன் ஊர் திரும்புவீராக. மக்களும் ஊர் திரும்புவார்கள். என் தந்தையாருக்கும் தாய்மார்கட்கும் என் வணக்கத்தைக் கூறு வீராக என்றார். சீதை தன் தங்கையர்க்கு ஆசி கூறி, தான் வளர்த்த கிளிகட்கு வேளை தவறாத உணவு தரும்படிக் கூறினாள். சுமந்திரர் திரும்பத் தேரைச் செலுத்தி அரண்மனைக்கு வந்து சக்ரவர்த்தியைச் சந்தித்தார். தசரதர் சுமந்திரா! என் மகன் எங்கே ? என்ற வினவினார். சுமந்திரர் மௌனமாக நின்றார். அவரடைய மௌனமே இராமர் கானகம் போனதை உணர்த்தியது. தசரதர், ராம ராம ராம என்ற கூறினார். அவருடைய ஆன்மா ஒளி மயமாக அவருடைய சிரசில் இருந்து கிளம்பியது. வானவர்கள் வரவேற்க முத்தியுலகத்தைச் சேர்ந்தார். எல்லாரும் கதறியழுதார்கள். வசிட்டர், மன்னனுடைய உடம்பை எண்ணெய்க் கொப்பரையில் இட்டார். பரதனை வருமாறு தூதுவரையனுப்பினார்.

இராமபிரான் சீதையுடனும் இலட்சுமணனுடனும் இருள் மிகுந்த அடர்ந்த கானகத்தில் நுழைந்து போகின்றார். அப்போது அவருடைய திருமேனியில் இருந்து ஒளி வீசுகின்றது. சூரியன் ஒளியில் எல்லா ஒளிகளும் அடங்கும். இதுதான் இயற்கை. ஆனால், இந்த இயற்கைக்கு மாறாக, சூரியனுடைய ஒளி இராமபிரானுடைய திருமேனியின் ஒளியில் அடங்கி ஒடுங்கினதாம். இது ஒரு பெரிய அதிசயமாகும். எம்பெருமானுடைய திருமேனி அ;சன மையோ ? மரகரமோ! நீலச் சுடரோ ? மழை மேகமோ ? இவைகட்கு மீறிய அழகு.

கங்கை நீராடுதல்

இராமபிரான், பெரும் புண்ணிய நதியாகிய கங்கையையடைந்தார். அந்தக் கங்கைக் கரையில் வாழுகின்ற பெருந்தவ முனிவர்கள் இராமபிரானைக் கண்டு. தாயைக் கண்ட இளம் பிள்ளைகள் போல் பெரிதும் மகிழ்ந்தார்கள். தங்கள் கண்களில் பெருகும் ஆனந்தக் கண்ணீரால் திரும்சனம் புரிந்தார்கள். இன்சொற்கள் என்ற மலர்களைச் சூட்டினார்கள். அழியாத அன்பு என்ற அருமையான அமுதத்தை ஊட்டினார்கள். இதனால், இராமருக்கு வழி நடந்த வருத்தம் நீங்கியது.

இராமரும் சீதாதேவியும் இலட்சுமணரும் புனித கங்கையில் மூழ்கி மகிழ்ந்தார்கள்.

கங்காதேவி, இராகவா! உலகில் உள்ள மாந்தர்கள் என்னில் மூழ்கித் தங்கள் பாவங்களைப் போக்குவார்கள். இன்று நீ என்னில் மூழ்கியதால் என்னிடம் தங்கியிருந்த பாவங்கள் அகன்றன. நான் உய்வு பெற்றேன். என்று கூறிக், கைதொழுது கங்கை மகிழ்ந்தாள். முனிவர்கள் இனிய கனிகள் - காய்கள் தர இராமர் உண்டு உவந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:54 am

குகனைச் சந்தித்தல்
[You must be registered and logged in to see this image.]
கங்கைக் கரையில் சிருங்கி பேரம் என்ற நகரில் வாழ்பவன் குகன் என்ற வேடர் தலைவன். ஆயிரம் மரக்கலங்கட்கு அதிபன். கரிய மேனியும் திரண்ட தோள்களும், அகன்ற மார்பும் உடையவன்.

இத்தகைய குகன் இராமரைக் கண்டு மகிழ வேண்டும் என்று எண்ணினான். இலாங்கு மீன்கள் நெய்யில் பொறித்து மிளகுதூள் தூவி, ஊனும் மீனும் தேனும் காவடியாகச் சுமந்து சுற்றத்தார் புடை குழ வருகின்றான். குகன் இராமபிரானைக் காணப் புறப்பட்டு வருகின்றபோது, கூட்டமாகப் போவது நன்றன்று என்று எண்ணினான். சுற்றத்தாரையும் வில் வாள் முதலிய ஆயுதங்களையும் அகற்றித் தவப்பள்ளியை அடைந்தான்.

ஆசிரமத்தில் முன் நிற்கின்ற வீரனாகிய இலட்சுமணர், நீ யார் ? எங்கு வந்தனை ? என்று வினாவினார். குகன், ஐயனே! நான் வேடர் தலைவன். என் பேர் குகன்! உள்ளே இருக்கின்ற கருணாமூர்த்தியைக் காணவந்தேன் என்றான்.

லட்சுமணர், இங்கு நில் என்று கூறி உள்ளே சென்று இராமரை வணங்கி அண்ணா! குகன் என்ற ஒரு வேடர் தலைவன் தங்களைக் காண வந்திருக்கின்றான். சுற்றமும் தானும் உள்ள தூயவன். தாயினும் நல்லவன். உள்ளே விடலாமா ? என்று கூறினார். இராமர் அவனை என்பால் அனுப்புக என்றார். இலட்சுமணர் குகனுக்கு அனுமதி தந்தார். குகன் ஆசிரமத்துக்குள் சென்று பரந்தாமனைப் பலமுறை வணங்கினான். கண்ணீர் சொரிந்து பரிந்து, ஐயனே! மீன்களை நெய்யில் பொறித்துக் கொணர்ந்தேன். தேவீர் திருவுளம் எதுவோ ? என்றான்.

இராமர் அங்குள்ள முதிர்ந்த முனிவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தார். குகனே! நிரம்ப மகிழ்ச்சி. நீ கொணர்ந்த உணவுகளை நான் அங்கீகரித்துக் கொண்டேன். உன் அன்பு ஆழங் காணாத அலைகடல் போன்றது. இங்கே இரு என்றார். இராமர் பலமுறை கூறியும் குகன் அமர்ந்தானில்லை. பலமுறை பார்த்தும் குகனுக்குப் போதும் என்ற எண்ணம் வரவில்லை. எம்பெருமானை விழுங்குவதுபோல் கண்டு களிகூர்ந்தான். இராமரைத் தவக்கோலத்தோடு கண்ட கண்களைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று எண்ணினான்.

இராமருடைய அனுமதி பெற்ற அங்குத் தங்கினான். குகன் இலட்சுமணரைப் பார்த்து, இராமபிரான் கானகம் வரக் காரணம் யாது ? என்று கேட்டான். இலட்சுமணர், பரதன் பாட்டன் வீட்டில் இருந்து, தன் தாயாகிய கைகேயியை வரம் செய்தான். எம்பெருமான் எல்லாம் துறந்து இக்கொடிய காட்டில் வசிக்கின்றார் என்றார். இதனைக்கேட்ட குகன் ஆறாத் துயரம் அடைந்தான்.

அன்று இரவு குகன், தானும் சுற்றம் சூழக் காவல் புரிந்தான். மாற்றாங்தாய் மகனாகிய பரதன் அண்ணனைக் காட்டுக்கு அனுப்பினானே. இந்த இலட்சுமணரும் ஒரு மாற்றாந்தாய் மகன்தானே ? இவனை மட்டும் எப்படி நம்புவது என்று எண்ணி, இலட்சுமணரையும் இவன் காவல் புரிந்தானாம்.

இலட்சுமணர் இமைக்காமல் உள்ளம் உவந்த காவல்புரியும் போது நித்திரைத்தேவி தோன்றினாள். இலட்சுமணர், ஏ! நித்திராதேவீ நீ 14 ஆண்டுகள் என்பால் நெருங்காதே என்றார். அவள், உணவை ஒழித்தால் உறக்கத்தையும் ஒழிக்கலாம் என்றாள். இலட்சுமணர், உண்ணேன் என்றார். நித்திரா தேவி இலட்சுமணரைத் தொழுது சென்றாள்.

பொழுது புலர்ந்தது, இராமர் நீராடி ஜெபதபங்கள் செய்தார். குகனைப் பார்த்து, ஓடங் கொண்டு வா. நாங்கள் கங்கையைக் கடந்து வனவாசம் புரிய வேண்டும். என்றார்.

இந்த வார்த்தையைக் கேட்ட குகன் அதிர்ச்சியடைந்தான். ஐயனே! தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும். தங்கட்குத் தொண்டு செய்ய அடியேனும் ஐயாயிரம் வேடர்களும் இருக்கின்றோம். கங்கைக்கரை சுகமான இருப்பிடம். பூசைக்கு நறுமணம் நிரம்பிய மலர்கள் இருக்கின்றன. நல்ல நல்ல போர்வைகள் இருக்கின்றன. இனிய கனிகள் இருக்கின்றன. பகைவரை வெல்லுவேன். கிழங்குகளைக் கெல்லுவேன். எட்டுத்திசைகட்கும் வழி சொல்லுவேன்! அடியேன் எல்லாத் தொண்டுகளையும் அன்புன் செய்வேன். ஆதலால், இங்கேயே இரும் என்று உள்ளம் உருகி உரைத்தான்.

இராமர் குகனை மார்புறத் தழுவி குகனே! இன்று முதல் தசரதருக்கு ஐந்து புதல்வர்கள், நீ எனக்குத் தம்பி. பரதன் முதலியோர் உனக்குத் தம்பியர். சீதை உனக்கு அண்ணி. ஊர்க்குருவி தலையில் பனங்குலை வைத்ததுபோல பரதனிடம் அரசியலை ஒப்படைத்துள்ளேன். அருகில் இருந்து அவனுக்குத் துணை செய். 14 ஆண்டுகள் 14 நாட்கள் போலக் கழியும். பின்னர், நாம் ஒன்று சேர்ந்து வாழ்வோம். என் சொல்லைத் தட்டாதே! ஓடங் கொணர்க என்றார். குகன் கண்ணீர் அரும்ப ஓடத்தைக் கொணர்ந்தான். இராமரும் சீதையும் இலட்சுமணரும் ஓடத்தின் மீது ஏறினார்கள். இராம நாமத்தை இனிமையாகப் பாடிக் கொண்டே ஓடத்தைக் குகன் செலுத்தினான்.

கங்கை வெள்ளத்தில் குகனுடைய ஓடப் பாடலின் நாத வெள்ளமும் அவனுடைய அன்பு வெள்ளமும் கொந்தளித்து ஒடின. அக்கரை சேர்ந்தார்கள். இராமர் குகனைத் தழுவி, மனம் வருந்தாமல் இரு .. . மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ்வோம் என்று பரிந்துரை கூறினார்.

இராமர் அங்கிருந்து புறப்பட்டுக் கானகத்தில் நடந்து சித்திர கூடம் என்ற மலைச்சாரலையடைந்தார். அங்கு மாதவ மணி விளக்கான பரத்துவாச முனிவரைக் கண்டு வணங்கி மகிழ்ந்தார்கள். பரத்துவாச முனிவரின் சொற்படி சித்திரகூட மலைக்கு அருகில் உள்ள மந்தாகினி நதிக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்துத் தங்கினார்கள்.

சின்னாட்கள் கழித்து, இராமபிரான் பயணத்தை மேற்கொண்டபோது வழியில் யமுனா நதியைக் கண்டார். அப்புண்ணிய நதியில் மனைவி, தம்பியுடன் நீராடினார். மூவரும் காய்கனிகளை உண்டு பசியாறினார்கள்.

இலட்சுமணர் மூங்கில்களை வெட்டி ஒரு தெப்பம் அமைத்து, அதில் இராமரும் சீதாதேவியும் ஏற, அந்நதியைக் கடந்து அக்கரையடைந்தார்கள். தம்பியின் தொண்டின் திறத்தைக் கண்டு இராமர் வியப்புற்றார்.

தம்பி! நீ எப்படி இந்த மகாநதியைக் கடந்தாய் ? என்று கேட்டார். இலட்சுமணர் அண்ணா! தேவருடைய திருவடியைப் பற்றினோர் பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவார்களே! அடியேன் இந்தச் சிறிய நதியைக் கடந்தது ஒரு பெரிய கருமமா ? என்று கண்ணீர் ததும்பிக் கழறினார்.

நதிக்கரையில் மூங்கில்களைக் கொண்டு ஓலைகளைப் பரப்பி ஒரு பர்ணசாலையை இலட்சுமணர் அழகாக அமைத்தார். தம்பியின் அன்பையும் தொண்டின் திறத்தையுங்கண்டு உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி, தம்பியை வாழ்த்திச் சீதையுடன் அப்பர்ணசாலையில் தங்கினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Feb 18, 2009 1:59 am

பரதரின் பரிவு

மகனுடைய பிரிவால் உயிர் நீத்த தசரதருடைய உடலை எண்ணெய்க் கொப்பரையில் இட்டு, பரதனை உடனே வருமாறு வசிட்ட முனிவர், கடிதம் எழுதிக் தூதுவரை அனுப்பினார் அல்லவா ?

கேகய நாட்டில் வாழ்கின்ற பரதர் தீக்கனவுகள் கண்டு திடுக்கிட்டு எழுந்தார். சத்ருக்னரைப்பார்த்து, தம்பீ, சத்ருக்னா! இப்போது மிகவும் கொடுமையான கனவுகள் கண்டேன். நான் எப்போதும் மங்களகரமான கனவுகளையே காண்பேன். ஆலயம் போவது போலவும், அரட்பிரசாதங்கள் கிடைப்பது போலவும், மகான்கள் என்னை வாழ்த்துவது போலவும் கனாக்கள் காண்பேன்.

தம்பீ! இன்று நம் தந்தையார் தலையில் எண்ணெய் தடவிக் கொண்டு கழுதை மீது ஏறித் தென்திசை நோக்கிப் போவதாகக் கனவு கண்டேன். நமது தாய்மார்கள் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம் அறுந்து நிலத்தில் வீழ்வதாகக் கனவு கண்டேன். அயோத்தியில் உள்ள நமது கோவிதாரக் கொடி பற்றி எரிவதாகக் கனவு கண்டேன். நிலம் வெடித்து அயோத்தி மாநிலம் பாதாளத்தில் அழுந்தியதாகக் கனவு கண்டேன. ஒரு சுமங்கலி ஆயிரம் விளக்குகளைக் கையில் ஏந்திக் கொண்டு கானகம் போவதாகவும், நகர மக்கள் ஆ! இராமா! ஆ! சீதா! என்று வாய்விட்டுப் புலம்பியழுதுகொண்டு கானகம் போவதாகவும், என்னைப் பலர் சூழ்ந்து ஈட்டிகளால் குத்துவதாகவும் கனவு கண்டேன. தந்தையார் மரணம் அடைந்திருக்க வேண்டும். என்ன நிகழ்ந்ததோ என்று கூறி, வருந்திக் கொண்டிருக்கும் போது அயோத்தியில் இருந்து வந்த சேவகன் கடிதத்தைத் தந்தான்.

அன்புள்ள பரதனுக்கு அநேக ஆசி. இக்கடிதத்தைக் கண்டவுடனே புறப்பட்டு வருக.
இங்ஙனம்.

உன் அன்புள்ள தந்தை
தசரதச் சக்ரவர்த்தி

இக்கடிதத்தைக் கண்ட பரதர் பெரிதும் வருந்தினார். உடனே தம்பி சத்ருக்னருடன் அயோத்திக்குப் புறப்பட்டார். பாட்டனாரும் பாட்டியும் பரதரையும் சத்ருக்னரையும் வாழ்த்தி ஆடைகள் அணிகலன்களை வழங்கி வாழ்த்தி வழியனுப்பினார்கள். சேனைகள் அணிவகுத்து நின்றன. வாத்தியங்கள் முழங்கின.

பரதர் தேரில் ஏறினார். சத்ருக்னர் தேரைச் செலுத்தினார். வேகமாகத் தேர் சென்றது. காடு, மலை, நதிகள் இவற்றைக் கடந்து தேர் சென்றது. தேர் அயோத்தி அருகில் சென்றது.

பரதர், தம்பி! தந்தையார் மரணம் அடைந்த விட்டார் போலும் எவ்வாறு தெரிகின்றதென்றால், சக்ரவர்த்தி மறைந்துவிட்டால், நமது கோட்டை மீதுள்ள கொடி இறங்கி விடும். அதோ பார்! நமது கோட்டைக் கொடி இறங்கியுள்ளது. என்ன நிகழ்ந்ததோ ? தேரை வேகமாக விடு என்றார்.

சிறிது தூரம் தேர் சென்றது. பரதர் தம்பியைப் பார்த்த, தம்பீ! நம் அண்ணா அயோத்தியில் இல்லை என உணர்வுகின்றேன். தம்பீ! சக்ரவர்த்தி இருந்தால் கோட்டை வாயிலில் இரட்டை சங்கு முழங்கு வேண்டும். சக்ரவர்த்தி இன்றி மூத்த மகன் இருந்தால் ஒற்றைச் சங்கு நாதமே யில்லை. அதனால் அயோத்தியில் அப்பாவும் இல்லை, அண்ணாவும் இல்லை என்ன நிகழ்ந்ததோ ? அறியேன். நேரே தேரைத் தந்தையாரின் அரண்மனைக்கு விடு என்றார். மன்னவர் மாண்டார் என்ற அமங்கல வார்த்தையைக் கூற அ;சி, ஒருவரும் பரதருக்கு முன் வரவில்லை. சாலை மக்கள் நடமாட்டம் இன்றி விரிச்சோடி இருந்தது.

பரதர், சக்ரவர்த்தியின் திருமாளிகை சென்றார். அரண்மனை புழுதி படிந்து பொலிவிழந்து இருந்தது. அப்பா அப்பா! என்று அழைத்தார். அங்கு மறுமொழி கூறுவார் இல்லை.

Sponsored content

PostSponsored content



Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக