புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 44%
mohamed nizamudeen

5 Posts - 5%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 47 of 100 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 12:58 am

காதலுக்கு மரியாதை!

எங்கள் தெருவில், காதல் மணம் புரிந்து கொண்ட ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி வந்து, கோவிலில் தாலி கட்டிக் கொண்டவர்களை, பெற்றோர் அப்போதே தலை மூழ்கி விட்டனர்.

தெருவில் குடியிருந்தோரும், 'இந்தப் பொண்ணு இவனை நம்பி, வீட்டை விட்டு ஓடி வந்து என்ன வாழ்க்கை வாழப் போறாள்...மூணு மாசத்துலேயே அவனுக்கு கசந்து போவாள். அதுக்கப்புறம் ஒருத்தர ஒருத்தர் குற்றம் சொல்லி சண்டை போட்டு ஆளுக்கொருப் பக்கம் பிய்ச்சிக்கிட்டு போகப் போறாங்க...' என்று கூறி, அவர்களை தீண்ட தகாதவர்களாக பார்த்தனர்.

ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில், அவர்கள் இருவருக்குமிடையே சிறு சண்டை கூட ஏற்படாததை பார்த்து, அனைவரும் வாயடைத்துப் போயினர். தவிர, தனியார் நிறுவனத்தில், வேலை செய்யும் அந்தப் பையன், தன் உழைப்பின் மூலம் வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிப் போட்டு, அவளை குறைவில்லாது பார்த்துக் கொண்டான். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ள நிலையில், இரு வீட்டுப் பெற்றோரும் மெல்ல தலை காட்டத் துவங்கி விட்டனர்.

காதல் மணம் புரிந்தவர்கள் கண்ணியமாய் வாழ்ந்து காட்டும் போது தான், அக்காதல் கவுரவிக்கப்படுகிறது!

ஜக்கி, இடையர்பாளையம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 12:59 am

'லைப் பார்ட்னர்'க்கு வாய்ப்பளியுங்கள்!

என் தோழிக்கு அடுத்தடுத்து இரு குழந்தைகள் பிறந்தவுடன், கு.க., செய்து கொண்டாள்.
அதன்பின், குழந்தைகள் ஆரோக்கியம், படிப்பு மற்றும் வீட்டு நிர்வாகம் என, கணவருக்கு சிறு உடல் உழைப்போ, தொந்தரவோ கொடுக்காமல் அனைத்து வேலைகளையும் அவளே இழுத்துப் போட்டு செய்வாள்.

இதன் விளைவு... இரவு, 9:00 மணியானால் போதும் அடித்துப் போட்டது போல தூங்கி விடுவாள். அவளுடைய இந்த தூக்கம், தம்பதியரிடையே பிரச்னையையும், பிரிவையும் ஏற்படுத்த ஆரம்பித்தது. 'மனைவிக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்து விட்டது...' என்று தோழியின் கணவர் அவராகவே எண்ணி, அவளை எடுத்ததற்கெல்லாம் கோபிக்க, குடும்ப நிம்மதியே போச்சு!

கணவருடைய இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை யோசித்த தோழி, ஒருவாறு விஷயத்தை ஊகித்து, அவர் மேல் அவளுக்கு இருக்கும் அன்பும், காதலும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை புரிய வைத்து, தேவையில்லாத மன அழுத்தத்திலிருந்து அவரை பொறுமையுடன் மீட்டெடுத்தாள்.

தம்பதியரே... அதிருப்தி தரும் எந்த ஒரு விஷயத்தையும், உடனுக்குடன் தெரிவித்து தெளிவுபடுத்த, உங்க, 'லைப் பார்ட்னர்'க்கு வாய்ப்பளியுங்கள். நீங்களாகவே ஏதாவது அர்த்தம் கற்பித்துக் கொள்வது அபாயகரமானது.

கே.அன்னமேரி,திருநின்றவூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 4:57 pm

'லைப் பார்ட்னர்'க்கு வாய்ப்பளியுங்கள்!--- படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 3838410834
-
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 LmEbEk6FQXinXzIQMHFY+156jenilia

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 08, 2015 11:12 pm

இலவச அமரர் ஊர்தி சேவை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என் நண்பர். அவருக்கு இரு மகன்கள்; மூத்த மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், இளைய மகன், வங்கியில் கிளார்க்காகவும் பணிபுரிகின்றனர்.

என் நண்பர் ஓய்வு பெற்ற பின், வீட்டில் இருப்பதை சுமையாக கருதி, தன் இளைய மகன் பணிபுரியும் வங்கியில் லோன் போட்டு, ஒரு ஆம்னி வேன் வாங்கினார். அதை, அமரர் ஊர்தியாக மாற்றி, பிரபல மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இறப்பவர்களை, இலவசமாக ஏற்றிச் செல்வதை, சமூக சேவையாக செய்து வருகிறார். அத்துடன் ஓய்வு நேரங்களில், முதியோர் இல்லங்களுக்கு சென்றும் சேவை செய்வார்.

உடன்பிறந்தவர்களே உதவாத இக்காலத்தில், நண்பரின் சமூக சேவையை அனைவரும் பாராட்டுகின்றனர். சமூக சேவை செய்ய வயது தேவையில்லை; மனம் தான் தேவை!

கே.முருகேஸ்வரி, சிவகங்கை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 08, 2015 11:12 pm

மெகா சீரியலா... உஷார்!

சமீபத்தில், நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். 65 வயதான நண்பரின் தாயார், எப்போதும் மெகா சீரியலே கதியென்று இருப்பார். அன்று பேச்சினூடே, 'இப்போதெல்லாம் மெகா சீரியல்கள் பார்ப்பதில்லை...' என்றார். காரணம் கேட்ட போது, ' என் பேத்தி கர்ப்பமாயிருக்கா. நான் சீரியல் பார்க்கும் போது, அவளும் என்கூட உட்கார்ந்து பார்க்குறா. இந்த சீரியல்களில் அழுது புலம்பும் கதாபாத்திரங்களும், புருஷனையே கொல்ல திட்டம் போடும் கதாபாத்திரங்களும், அத்துடன், பெண்கள் வில்லி கதாபாத்திரங்கள் பேசும், 'உன்னை போட்டு தள்ளாம விடமாட்டேன்; எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை பழி வாங்குவேன்...' போன்ற வசனங்களும் இடம்பெறுகின்றன. இதையெல்லாம் பேத்தி கேட்கும் போது, அது, அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்...' என்று கூறினார்.

அதற்கு உதாரணமாக, மகாபாரத கதையில் வரும் அபிமன்யு, தாய் வயிற்றில் இருக்கும் போது, அரை குறையாய் கேட்ட சக்கர வியூக கதையையும் கூறினார். மெகா சீரியல்கள், தற்போதுள்ள பெண்களின் மனநிலையை கெடுப்பதோடு, வருங்கால தலைமுறையை கூட கெடுக்கும் என, நண்பரின் தாயார் கூறியதில், உண்மை இருப்பதாகவே பட்டது.

ரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 08, 2015 11:13 pm

'ஏசி' காரில் ஆபத்து!

அண்மையில் வங்கிக்கு சென்று திரும்பிய போது, என் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவருடன் ஓட்டலுக்கு செல்ல, அவரது காரில் ஏறினேன்.

கார் ரொம்ப நேரம் வெயிலில் நிறுத்தப்பட்டு இருந்ததால், உள்ளே ஏறி அமர்ந்ததும் மிகவும் வெப்பமாக இருந்தது. அது, 'ஏசி' காராக இருந்த போதிலும், நண்பர், 'ஏசி'யை போடவில்லை. வெகுநேரம் கழித்து வெளிக்காற்று உள்ளே பரவி, வெப்பம் தணிந்த பின், ஜன்னலை மூடி, 'ஏசி'யை ஆன் செய்தார்.

அதுவரை புழுக்கத்தில் அவதிப்பட்ட எரிச்சலில், 'ஏம்பா... காருல ஏறின உடனே, 'ஏசி'யை போட்டிருந்தா, இவ்வளவு நேரம் புழுக்கத்துல அவதிப்பட வேண்டியிருக்காதுல்ல...' என்றேன் சலிப்புடன்!
அதற்கு நண்பர், 'வெயில்ல நிக்குற மூடிய காருக்கு உள்ளே, அதன் பிளாஸ்டிக் பாகங்கள் சூடாவதால், புற்றுநோயை உருவாக்கும் நச்சு வாயு பரவி இருக்கும்; நாம வண்டியில் ஏறினவுடனே ஜன்னலை மூடி, 'ஏசி'யையும் போடும் போது, அந்த நச்சு வாயு முழுவதையும் நாம் தான் சுவாசிக்கணும்.

அதனால், அந்த வாயு வெளியேற அவகாசம் கொடுத்து, 'ஏசி'யை ஆன் செய்வது தான், உடம்புக்கு நல்லது...' என்றார். 'ஏசி' கார் வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயம் இது!

எம்.எச்.இக்பால், கீழக்கரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 08, 2015 11:14 pm

தாத்தா-பாட்டி தின விழாவில் இணைந்த குடும்பம்!

என் தோழியின் மகன், தனியார் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கிறான். அவனது பள்ளியில், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தேதியில், தாத்தா - பாட்டி தின விழா நடைபெறும்.

'விழாவிற்கு, மாணவர்கள் கண்டிப்பாக தாத்தா - பாட்டியுடன் வர வேண்டும்...' என, தினசரி குறிப்பில், பள்ளி முதல்வர் தன் கைப்பட குறிப்பு எழுதி இருந்தார். இதனால், தோழிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காரணம், தோழியின் கணவருக்கும், அவள் மாமனாருக்கும் ஒரு சிறு விஷயத்தில் பிரச்னை ஏற்பட்டு பிரிந்து, அதே ஊரில் வேறு தெருவில் வசிக்கிறார்.

தோழி என் உதவியை நாடினார். பிரிந்த குடும்பம் இணைவதற்கு, இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்து, தோழியின் கணவர் மற்றும் அவளது மாமனார், மாமியாரை தனித்தனியாக சந்தித்து பேசி, ஒரு வழியாக தாத்தா, பாட்டி இருவரையும், குறிப்பிட்ட தேதியில், பள்ளியில் பேரனை பார்க்க வரச் செய்தேன்.

அவர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, பேரனுக்கு பரிசுப் பொருள், தின்பண்டம் மற்றும் மதிய உணவு என எடுத்து வந்து, ஊட்டி மகிழ்ந்தனர். எத்தனை கோடி பணத்தை கொடுத்தாலும், இதுபோன்ற மகிழ்ச்சி கிட்டுமா என்பது சந்தேகமே! இந்நிகழ்ச்சி மூலம், ஒரு குடும்பம் இணைந்தது, காலத்தால் மறக்க முடியாதது!

பள்ளியில் கூடியிருந்த, தாத்தா - பாட்டிகள் அனைவரும் தங்கள் பேரன், பேத்திகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, தங்கள் அன்பை வெளிப்படுத்தியது கண்கொள்ளாக் காட்சி. பள்ளி நிர்வாகமும் தாத்தா - பாட்டிகளை வரவேற்ற பாங்கு, இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது.

மற்ற பள்ளிகளும், இதுபோன்ற விழாக்களை நடத்தி தாத்தா - பாட்டிகளின் வாழ்த்துகளையும், ஆசிகளையும் மாணவர்களுக்கு வழங்க, ஏற்பாடு செய்யலாமே!

அ.செல்வி அருண், திருவள்ளூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Feb 08, 2015 11:19 pm

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 3838410834 சூப்பருங்க

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 47 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 16, 2015 11:56 pm

மூலிகை மருத்துவ மகத்துவம்!

எங்கள் ஊரிலுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி வளாகத்தில் மூலிகைச் செடிகளை வளர்ப்பதுடன், அதன் மகிமைகளை மாணவ, மாணவியருக்கு எடுத்துரைப்பார்.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, 'பெரும்பாலான மாணவ, மாணவியர் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து வருகின்றனர். அங்கு மருந்துக் கடைகளோ, மருத்துவமனைகளோ அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அவர்கள் ஜுரம், சளி, இருமல், தலைவலி, அஜீரணக்கோளாறு, வாந்தி, பேதி என, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

'அதனால் தான் மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லி, துளசி போன்ற மூலிகை செடிகளை வளர்ப்பதோடு, ஒவ்வொரு மூலிகையின் மருத்துவ குணம் பற்றி அவர்களுக்கு சொல்லியும் தருகிறேன்.

'கிராமங்கள் தோறும் ஒரு, எம்.பி.பி.எஸ்., மருத்துவரை உருவாக்குகிறோமோ இல்லையோ, நிச்சயமாக ஒரு மூலிகை மருத்துவரை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையில் இந்தப் பயிற்சியை அளிக்கிறேன்...' என்றார் தலைமையாசிரியர்.

ஆசிரியர்களே... வாழ்க்கைக்கு உதவும் கல்வியோடு, பொது நலன் கருதி, இது போன்ற சேவையிலும் ஈடுபடுங்களேன்!

தி.குமரேசன், திருத்தணி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 16, 2015 11:57 pm

பேச்சில் கவனம் இருக்கட்டும்!

சமீபத்தில், நண்பர் ஒருவர், 'என் மகன் என்னோட பேச்சை துளி கூட மதிக்கிறதில்ல; தன் போக்கில திரியுறான். அந்தச் சனியனைப் படிக்க வைச்சு ஆளாக்கியதற்கு, ஒரு பன்றியை வளர்த்திருக்கலாம்; அதாவது, என் பேச்சை கேட்டிருக்கும்...' என்று சலித்துக் கொண்டார்.

இது பற்றி அந்தப் பையனிடம் விசாரித்த போது, 'அங்கிள்... சிறு வயசிலிருந்து இப்ப வரைக்கும் ஒரு நாள் கூட எங்கப்பா என்கிட்ட அன்பாக பேசினது இல்ல; நான் எந்த நல்ல செயல் செய்தாலும், அதப் பாராட்டுறதுக்கு பதில், அதுல குற்றம் கண்டுபிடிச்சு திட்டுவார். அம்மாவுடன் சண்டை போடும் போது, அவரது நடத்தையைப் பற்றி என் முன்னாலேயே அசிங்கமாக பேசுவார்.

'இவரோட இந்த மாதிரியான பேச்சுகளால சில சமயம் தவறு செய்ய தூண்டுது. ஆனா, நான் மனசாட்சிக்கு பயப்படுறவங்கிறதாலே இதுவரை எந்த தவறும் செய்யல. அவருடைய பேச்சுக்காகத்தான் அவரை வெறுக்கிறேனே தவிர, மற்றபடி, அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு...' என்று தன் வேதனையை கொட்டித் தீர்த்தான்.

பெற்றோர்களே... நாம் பேசும் வார்த்தைகள் தான், நம் பிள்ளைகளின் மனநிலையை நிர்ணயிக்கின்றன. எனவே, நம் பேச்சு குழந்தைகளின் மனதை பாதிக்காமல் இருக்க வேண்டும். சிந்தீப்பீர்களா!

என்.ரகுராமன், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 47 of 100 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக