புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
48 Posts - 43%
heezulia
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
414 Posts - 49%
heezulia
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_m10தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 2:37 pm

உலகமெங்கும் கல்விமொழிக் கொள்கையை அரசியலாக்கவில்லை. தமிழகத்தில் மட்டுமே கல்விமொழிக் கொள்கை அனைத்தும் அரசியலாக்கப்பட்டன.

இந்தியை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாநில ஆட்சி கைப்பற்றப்பட்டது. இது ஆங்கிலத்தை ஆதரிக்கும் இயக்கமும் ஆயிற்று. இந்தியை வரவிடாமல் தடுக்கும் கேடயம் என விளக்கப்பட்டது.

"தமிழ் வாழ்க' என்ற முழக்கம் வானை முட்டியது. ஆயினும் ஆங்கில மோகம் வளர்க்கப்பட்டதே தவிர, தமிழைப் பாடமொழியாக்க, அதனை நிலைநிறுத்தப் பல வகையிலும் சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல்படவில்லை.

இது "வாழ்த்திக்கொண்டே, வீழ்த்துவோம்' என்பது போலாயிற்று.

இவை நீதிக் கட்சியின் தொடர்ச்சியாகும். பதவிப் போட்டியால், பிராமணரல்லாதவர்கள் பிராமணர்களைப்போல ஆங்கிலம் கற்று, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உயர் பதவிகளில் அமர வேண்டும் எனப் போராடலாயினர். பிராமணரல்லாதார் இயக்கம் பிறகு நீதிக்கட்சியானது. இவர்கள் "ஆங்கிலம்' தங்களுக்கு அவசியம் என எண்ணினர். பெரியாரும் ஆங்கிலத்தையே கல்வி மொழியாக்கப் பெரிதும் வாதிட்டார்.

"ஆரிய மாயை'யிலிருந்து தமிழரை விடுவிக்க முயன்ற அண்ணாவும் ஆங்கில மாயையில் தமிழரைச் சிக்க வைக்க வேண்டியவராயினார். இதனால் ஆங்கில மோகம் திராவிட இயக்கத்தில் தொடரலாயிற்று.

இயற்கையாய் அமைய வேண்டிய, தாய்மொழி பற்றிய உணர்வும் தொலைநோக்குப் பார்வையும் அமையாமல், ஆங்கில மோகம் தமிழர்களை அடிமைப்படுத்திவிட்டது.

ஆங்கிலத்தை ஒரு கருவி மொழியாய், வேலை வாய்ப்புக்கு உதவும் துணைமொழியாய் மட்டும் கொள்ளாமல், அதனையே தாய்மொழியிடத்தில் வைத்துப் போற்றும் நிலை உருவானது.

வெளியே "தமிழ் வாழ்க' என்ற முழக்கம். உள்ளே, தமிழிருக்க வேண்டிய இடத்திலும் ஆங்கிலத்தை வைத்து வளர்க்கும் மனநிலை. இவ்வாறு இது ஒரு தலைகீழ்ப் பாடமானது.

அண்ணா ஆட்சிபீடம் ஏறியதும் முன்பிருந்த மும்மொழித் திட்டத்தை நீக்கினார். தமிழும் ஆங்கிலமுமே என்ற இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

கல்விக் கொள்கையில் இது ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது. இந்திய மொழிகளில் இந்தியும் ஒன்று. அது அனைத்து இந்திய மொழிகளுடனும் சமமாகக் கருதப்பட வேண்டும். பிற மொழிகளை அது இரண்டாமிடத்திற்குத் தள்ளிவிடக் கூடாது. ஆங்கிலமே இந்திய அரசின் ஆட்சி மொழியாய் பொது மொழியாய் நீடிக்க வேண்டும். இதனால் இந்திய மொழிகளிடையே ஏற்றத்தாழ்வு வராது; அனைத்தும் சமமாகக் கருதப்படும்.

இதனை வலியுறுத்தியதால் நேருவும், "பிற மாநிலத்தவர் இந்தியை ஏற்கும் காலம்வரை, ஆங்கிலமே நீடிக்கும்' என அறிவித்தார்.

ஆயினும் ஓர் இந்திய மொழிக்கு அடிமை ஆகாமல் காத்த இது, அயல் நாட்டு மொழிக்கு, நம்மை அடிமையாக்கிய மொழிக்கு மீண்டும் அடிமையாக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

பிற மாநிலங்களில் எல்லாம் இந்தியை ஒரு தொடர்பு மொழியாய் மட்டுமே கற்றனர்; தாய்மொழிவழிக் கல்விக்கே முதலிடம் தந்தனர். தமிழகத்தில் மட்டுமே இந்தி ஒரு தொடர்பு மொழியாய் ஏற்காமல் தவிர்க்கப்பட்டது. ஆயினும் போதிய அளவு ஆங்கிலப் புலமை அமைய உளவியல்படி வாய்ப்பில்லை. இவ்வாறு இரண்டும்கெட்டானாக ஆன நிலையில், ஆங்கிலத்தை வலிந்து, மனப்பாடக் கல்வியாக்கி, தமிழகம் தடுமாறுகிறது.

இருமொழிக் கொள்கை பற்றிய அரசு ஆணையில், முதல்பாகம் தாய்மொழியும் அல்லது பிற இந்திய மொழிகளில் ஒன்றும் எனக் குறிக்கப்பட்டது (போதிய அளவு சிறுபான்மையர் இருந்தால் அவர்களுக்குத் தங்கள் தாய்மொழி பாடமாகும்படி உரிமை தரும் வாசகம் இது).

இரண்டாம் பாகத்தில் ஆங்கிலம் அல்லது பிற அயன்மொழிகளில் ஒன்று எனக் குறிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் "ஆங்கிலம்' எனத் தெளிவாகக் குறிக்கப்பட்டு முதல் பாகத்தில் தமிழ் என்று அதுபோலக் குறிக்கத் தவறிவிட்டனர். இதனால் முதல் பாகத்தில் தமிழை அறவே விட்டுவிட்டு, பிரெஞ்சு, சமஸ்கிருதம்போலும் பிறிதொரு மொழியே பலராலும் பின்பற்றப்பட்டது. அதாவது, தமிழை ஒரு பாடமாகக்கூடப் படிக்காமல் கைவிட்டுவிட்டு, பட்டப்படிப்பை முடித்து வெளியேற வாய்ப்பானது. அண்ணா காலமாகிவிட்டதால், இக் குறையைப் போக்க ஆயிரம் முறை எழுதியும் பேசியும் அறிவுறுத்தியும் பலன் இல்லை.

அடுத்ததாக, ஆங்கில வழி மெட்ரிக் பள்ளிகளை எல்லையின்றி வெள்ளம்போல் பெருக வாய்ப்பளித்தமை. பள்ளிக் கல்வி இயக்குநர்களே ஏலம் விடுவதுபோல் "எல்லோரும் வாருங்கள்! ஆங்கில வழி மெட்ரிக் பள்ளிகளை சுயநிதிப் பள்ளிகளாகத் தொடங்குங்கள்! அரசிடம் எவ்வித உதவியும் கேட்காதீர்கள்! நீங்களே பாடத்திட்டம் வகுத்து, மாணவர்களிடம் கட்டணம் பெற்று நடத்துங்கள்!'' என்று அறிவித்தனர்.

இதைப் பார்த்த வணிகர்கள் கல்வியை முதலீடில்லாத ஒரு லாபம் தரும் தொழிலாக மாற்றிட இது வழியமைத்துக் கொடுத்தது.

சீருடை முதல் கட்டடங்கள் வரை, சிறு முதலீட்டில் தொடங்கிக் கவர்ச்சிகளைக் காட்டி ஒரு மாபெரும் கல்வி வாணிகம் தமிழகத்தில் நடைபெறலாயிற்று.

தமிழ் மிகத் தாழ்வாக இழிவுபடுத்தப்பட்டது. அதனை நாலாந்தர மொழிபோல் மக்களும் மாணவர்களும் பார்க்கலாயினர். இப் பள்ளிகளால் நூற்றுக்கு மூவர் நால்வர் நன்மை பெறக்கூடும்.

பிறரெல்லாம் ஆங்கிலத்திலும் நிறைந்த புலமை பெறவில்லை; தமிழைக் கற்காமலே கைவிட்டு, அவர்களின் படிப்பு, அரைகுறைக் கல்வியானது. தமிழ் இன்று ஒரு கலப்பட மொழியானதற்கும், பிழைபடத் தமிழை எழுதுவது பெருகிப் போனதற்கும் இப் பள்ளிகளே அடித்தளமிட்டன.

பிற இந்திய மொழிகளையும், உலக மொழிகளையும்போல் தமிழைத் தொடக்கக் கல்வியில் பாட மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் ஆக்கக் கோரி தமிழார்வலர்கள் போராடினர்.

மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியாம் தமிழ் ஒன்றே பாடமொழியாகவும் பயிற்றுமொழியாகவும் ஆக்கப்பட வேண்டுமென்று சாகும் வரை பட்டினிப் போர் எல்லாம் நடத்தப்பட்டது. அரசு இதனை மடைமாற்ற, ஒரு குழு அமைத்தது. அக்குழு தந்த பத்துப் பரிந்துரைகளில் முதல் பரிந்துரை இதனை, ஒரு தெளிவான, வரையறுத்த சட்டமாக்க வேண்டும் என்பது.

முன்னதாக பல அரசாணைகளின் மூலம், தொடக்கக் கல்வியில், ஐந்து பாடத்தில் இரண்டு ஆங்கிலம் மூன்று தமிழ் வழி என்றும் பிறகு மூன்று ஆங்கிலம் இரண்டு தமிழ் என்றும் மாற்றி மாற்றி அரசு ஆணைகளைப் பிறப்பித்தது.

முன்பு சுட்டிக்காட்டியதுபோல் தொடக்கக் கல்வி முழுவதும் தமிழாக அமையச் சட்டமியற்றாததால், உயர் நீதிமன்றம் தமிழைப் பாடமாக்கும் ஆணைகளைச் சுட்டிக்காட்டி அரசின் ஆணையைத் தடை செய்தது.

ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குச் சமமாக அரசுப் பள்ளிகளை வளர்க்க வேண்டும். கட்டடம், சீருடை, வாகன வசதி முதலான கவரும் தன்மையுடைய, புறத்தோற்றத்தாலேயே, அவைகள் மக்களிடம் செல்வாக்குப் பெறுகின்றன.

அரசுப் பள்ளிகளும் மிகக் குறைவாகக் கட்டணம் பெற்று மிகச் சிறப்பாக வளர்ந்தனவாயின், அது மிகுந்த நாகரிகமான போட்டியாக அமைந்து அரசுப் பள்ளிகள் பற்றிய நன்மதிப்பை மக்களிடம் ஏற்படுத்தும்.

தமிழண்ணல் - கட்டுரையாளர்: தமிழறிஞர் - நன்றி-தினமணி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 2:40 pm

கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள் :

"ஆரிய மாயை'யிலிருந்து தமிழரை விடுவிக்க முயன்ற அண்ணாவும் ஆங்கில மாயையில் தமிழரைச் சிக்க வைக்க வேண்டியவராயினார். இதனால் ஆங்கில மோகம் திராவிட இயக்கத்தில் தொடரலாயிற்று." என்பது அறிஞர் அண்ணாபற்றிய தவறான கருததாகும். அறிஞர் அண்ணா ஐந்தாண்டு கால வரம்பில் தமிழை முழுமையாகக் கொண்டு வரத் திட்டமிட்டவர். ஆங்கிலத்தில தமிழ்நாடு எனக் குறிக்கும்பொழுதுகூடத் தமிழ்முறைப்படிதான் வரவேண்டும் எனச் செயல்படுத்தியவர். அவர் செய்த தவறு கல்வியமைச்சராக நாவலரை அமர்த்தியதும் காங். அதிகாரிகள் வழிகாட்டுதலை நம்பியதும்தான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
பதிவுசெய்தவர் Ilakkuvanar Thiruvalluvan 07/20/2013

சிறப்பான கருத்து ஆனால் எவ்வளவு சொன்னாலும் தங்கள் ரத்தத்தில் ஆங்கில மோகம் ஊறிப்போன மனிதர்களை திருத்த முடியவில்லையே.... தாய்மொழி பற்றி பேசினாலே பிற்போக்குவாதி என்று முத்திரை குத்துகின்றனர் மூடர்கள்...பதிவுசெய்தவர் karthik 07/20/2013

சரியான முறையில் உண்மைகளை வெளிக்கொணர்ந்த பாராட்டத் தக்க கட்டுரை. புற்றிசல் போல் ஆங்கிலவழிப் ப்ள்ளிகள் தொடங்கப் பட்ட காலத்தில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள்,பேராசிரியர்கள் எல்லாம் எதிர் நீச்சல் போடுவதற்குப் பதிலாக ,அந்த தமிழ்வழி வீழ்ச்சி ஓட்டத்திலேயே தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்ததும், குற்ற உணர்வின்றி அவர்களுக்கு 'தமிழறிஞர் கோட்டா'வில் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிக்க வைத்ததும் சீரணிக்க முடியாத தவறுகள் ஆகும். அந்த காலக் கட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால், அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஆங்கில வழி புற்றிசலை ஒழித்திருப்பார். அந்த சமயத்தில் மொத்த மாணவர்களில் +2 தமிழ் வழியில் எத்தனை சதவீதமோ, அத்தனை சதவீதம் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிப்புகளில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறைகளில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தவில்லை,- அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில்
பதிவுசெய்தவர் முனைவர் செ. அ. வீரபாண்டியன் 07/20/2013

ஏழைக் குழந்தைகள் படிப்பதன் காரணமாக உயிரோடு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தமிழ்வழிக் கல்வியைக் காப்பாற்றும் நோக்கில் வெளிவந்துள்ள ஆக்கபூர்வமான கட்டுரை இது." ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குச் சமமாக அரசுப் பள்ளிகளை வளர்க்க", ஒவ்வொரு ஊரிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கட்சி/சாதி வேறுபாடுகளைக் கடந்து, குறைந்த பட்சம் ஒரு அரசு பள்ளியைத் தத்தெடுத்து,அங்குள்ள வசதிகளை அவரவர் இயன்ற சொந்த நிதியை அளித்து மேம்படுத்தலாம்.பணி ஓய்வு பெற்றவர்கள் தமிழ்வழி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம். அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவலாம். அங்கு சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் (வாங்க வசதியற்ற)பொருட்களை ( இரு சக்கர வாகனம், etc) வாங்கித் தந்து ஊக்குவிக்கலாம். பதிவுசெய்தவர் இனியன் 07/20/2013

அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் வான் இயலாத பொருள் ஹெலிகாப்டர் தான் (உலங்கு வானூர்தி). இந்த அளவுக்குத்தான் வசதிகளற்ற நிலையில் இருக்கிறார்கள். அவசியம் வாங்கி கொடுக்க வேண்டியது தான். அவர்களை ஒழுங்காக மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வைக்கவேண்டியதுதான் முதல் வேலையாக இருக்கவேண்டும்.
பதிவுசெய்தவர் தஞ்சை தமிழன் 07/21/2013 06:58 இதற்கான பதில் முறையற்ற கருத்து
"வாங்க வசதியற்ற" என்பது தவறுதான். " சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை சரியான முறையில் ஊக்குவிக்கலாம்." என்பது தான் சரி. ஆசிரியர்கள் ஒழுங்காக மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார்களா என்பதை சம்பந்தப்பட்ட அரசு பள்ளியைத் விருப்பத்துடன் தத்தெடுத்துள்ள தமிழ் ஆர்வலர்கள் கண்காணிப்பதும் அவசியமே.
பதிவுசெய்தவர் இனியன் 07/21/2013

கல்வி மொழி அரசியலாக்கப்படவில்லை.அது எப்போதும் அரசியலாகவே இருந்து வந்துள்ளது: இருக்கிறது.ஆனால் அரசியல் வேண்டாம் என்பவர்கள் அதனை புரிந்து கொள்ளாமல் போனதால் வந்த வினை இது..மொழிக்கான அரசியல் இந்திய மற்றும் உலக பொருளியல் தொடர்புள்ளது. மும்மொழி இருமொழி தவிர்த்து ஒருமொழிக்கொள்கை அதாவது தாய்மொழிக்கொள்கை வேண்டும் என வலியுறுத்திய சக்திகள் இங்கே ஆதரிக்கப்படைல்லை.இருமொழி கொள்கை அந்நிய மொழி க்கு அடிமையாக்கியுள்ளது உண்மை .மும்மொழி வேறு இந்தி(ய ) மொழிக்கு அடிமையாக்கும் என்பதும் உண்மை. ஆனால் தாய் மொழியின் முக்கியத்துவம் தெரிந்த அமுர்தாஞ்சன் தைலக்காரன் பத்து ரூபாய் வியாபாரத்துக்கு உள்ளே வைக்கும் தாளில் அனைத்து மொழிகளையும் அடித்து வைக்கிறான் .ஆனால் நம் நாடு நம் அரசு நம் மொழியில் நடப்பது இல்லை.தமிழ்நாடு எனப்பெயர் வைக்க உண்ணா நோன்பிருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனார் அப்போதே இதை உணர்ந்திருந்தார்.அதனால்தான் நான் இறந்தால் என் உடலை பொதுவுடைமை வாதிகளிடம் கொடுங்கள் ; என்மீது செங்கொடி போர்த்துங்கள் என்று உயில் எழுதினார். 67 இல் ஆட்சிக்கு வந்த தமிழ் வெறியர்கள்என காட்டிக்கொண்டவர்கள் ஆட்சியல் இன்று தமிழை. பதிவுசெய்தவர் வாசுதேவன் .மு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக