புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
21 Posts - 84%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
1 Post - 4%
viyasan
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
213 Posts - 42%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
21 Posts - 4%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 11:29 pm

தலை சிறந்த முத்துக்களைக் குவித்து கொள்க என்று வழங்கும் உங்கள் கருத்துரைகளை எவ்விதம் மறுதலிக்க இயலும்...

அனைத்துமே வாசித்தேன் எடிட்டிங் செய்த போதே என்னை மிகவும் கவர்ந்து விட்டன இந்த முத்துக்கள்... தொடர்க அன்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 30, 2011 10:34 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (2)----


பிறப்பு




நமது இச்சையால் நாம் பிறக்கவில்லை

இறப்பும் நம் வசம் இல்லை

பற்ப்பலபிறவியின் கர்ம வினைகளின் தொகுதியும்

சத்வம் ரஜோ தமோ எனும் முக்குண நிலையால்

உருவான வாசனையாலும்

வந்து முளைத்தது இப்பிறவி !

நமது தாய் தந்தையை நாம் தேர்ந்தெடுக்வில்லை !

அவர்களும் நம்மை வேண்டி இருக்கவில்லை !

பின் எதுதான் நம்மைப் பிணைத்தது !
எது இந்த உறவுகளை அமைத்தது ?

பிணைப்போ தொடர்வது

இன்று நேற்றல்ல ! கொடுக்கல்வாங்கல்

தீரும் வரை தொடரும் இத்தகைய பந்தங்கள் !

ஆனால்பாத்திரங்கள் தான் மாறுகின்றன !

நம் தாய் தந்தை நமக்கு தரவேண்டிய

தீர்க்க வேண்டிய கடனை சரிசெய்ய

நாம் அவர்களுக்கு பிள்ளையைபிறக்கிறோம்

இத்தகைய கொடுக்கல் வாங்கல் தீரும் வரை

இருவர் தொடர்பும் தொடர்திடும்,

பிறவி பிறவியாக அறுபடாமல் !

நமது சகோதர சகோதரிகளும் நண்பர்களும்

நாம் தொடர்பு கொள்ளும் அத்தனை

அத்தனை பேரும்ஒன்றும் தற்செயல் இல்லை !

நம் ஆயிரம் ஆயிரம் பிறவியிலே அறுபடாமல்

தொடரும் தொடர்புகள்தான் ! தீரும் வரை

கடன் பெற்ற ஊரும் நபர்களும்

தட்டாமல் வந்தே தீரும் ।!


இறைவனின் மாயா சக்தி இயற்க்கை !

மாயை என்றால் இல்லாமல் இருப்பது அல்ல

இருப்பதுவே இல்லாமல் இருப்பது !

இயற்கையின் பிரதிநிதி சந்திரன்

பரமனின் பிரதிநிதி சூரியன் !

பிறப்பின் ஆதாரம் பரவிந்து ,நாதம்

உடல் எடுக்க வேண்டிய உயிர்

சூரிய சந்திர கதிர்கள் மூலம் பரவி

உண்ணும் உணவின் மூலம்

அவன் தாயின் உடலில் பரவி ,

தந்தையின் பிராணனின் உந்துதலுக்கு காத்திருக்கும் !

பிறப்பின் ஆயுள் என்பது புகும் பிராணனின்

அளவைப்பொறுத்தே அமைகிறது !

அந்த பெற்றோரின் புனித "உறவின்" போதே பிள்ளையின்
வாழும் காலம்ஆரோக்கியம் ,வாழும் வழி நிச்சயம்
ஆகிவிடுகிறது ।!

ஓம்கார நாதம் என்பதுவே
பிறவிக்கு அடிப்படை நாதம் !


செய்த அந்த நல்வினை தீவினை

அவன் பெறும் பிறவியில்

அவனது தாய் தந்தை அமைவதும்

உடலின் வண்ணமும் ,குணமும்

சுக துக்கமும் அமைவதாகும் !

கழிந்த பிறவியில் வறியவனாக இருந்தும்

வாழ்வில் சத்தியத்துடன் ,சகிப்புடன்

தான் உண்ண வழி இல்லாமல் இருந்தும்

தன் சுதர்மத்தை சரிவர்செய்தவன் ,

பிறர் பசி தீர்த்தவன் - பெறுவது
இப்பிறவியில் ஒரு புதிய பிறவி

அதில் உத்தம தாய் தந்தை

ஆரோக்கிய அமைதியுடன்

அவன் சஞ்சித கர்மம் தீர்க்க நிமதியான

ஒரு சுழல்அமைகிறது ! மாறாக உத்தம சுழல் அமைந்தும்

அதர்மமாக அடக்கமில்லா லோபியாக வாழ்தவன்

அடைவதோ தரித்திர குடும்பம் தீராத நோய்
பிறர் பழிப்பு இன்னபிற !

ஆயினும் அவன் பிறவியின் நோக்கம்

மீதம் இருக்கும் சஞ்சிதம் தான் !

வாழ்வு என்னமோ ஒன்றுதான் ,ஆயினும்
ஒருவன் பயணம் மூன்றாம் வகுப்பு

நெருக்கடி துன்பமிகு ரயில் பயணம் !
நல்வினை புரிந்த மற்றவன் பெறுவது

குளிர்சாதன இன்ப முதல் வகுப்பு ரயில் பயணம் !

ஆனால் போவது என்னவோ ஒரே ஊருக்குத்தான் !

பிறப்பின் ஆரம்பம் அவன் விடும் முதல் மூச்ச்தான்
மூச்சில் தான் இருக்கு வாழ்வின் அந்த சூச்சுமம் !
யாராவது பிறந்த குழந்தைக்கு மூச்சு விட சொல்லித்தருகிரார்களா ?
அது விதிப்படி விடுகிறது தன மூச்சினை !
அதுகுறித்து அடுத்து வரும் பகுதியிலே !


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 30, 2011 10:37 pm

எனக்குப் புரிந்தது இதுவே ! (3)----

*பிராணாயாமம்*

பிறப்பின் முதல் மூச்சில்தான்
பிறவி எல்லோர்க்கும் தொடங்குகிறது !
பிறப்பின் இறுதி மூச்சில்தான்
இறப்பின் இருள் என்பது தொடக்கம் !

ஆனால் இந்தப் பிறப்பும் இறப்பும்
நாளும் தொடர்கிறது !
நாளுக்கு நாம் விடும் சுவாசம்
21600 மூச்சு , அத்தனை மூச்சும்
சேர்ந்து ஆவதுதான் நாள் ஒன்று !
நாளும் சுவாசத்தை கொஞ்சம் கொஞ்சம்
மிச்சம் செய்தால் கூடுவது அவன் ஆயுள் .

ஒவ்வொரு நாளும் அவன் விடும் மூச்சில்
உள்ளே இழுப்பது பிறப்பு ! வெளியே விடுவது இறப்பு !
இது தொடரும் வினை ,மூச்சடக்குவதும் ,
வெளியிடுவதும் முழுவதும் அவன்செயல் இல்லையாம் !

மூச்சு விடுவது காற்றை இழுத்து
விடுவது மட்டும்தானா ? மூச்சினிலே
தான் இருக்கு வாழ்வின் சூட்சுமம் !
மூச்சு விடுதல்தான் வாழ்தலின் அடையாளம்;

நாசியின் இருதுளை வழியே
லயம் தப்பாமல் மாறிடும் மூச்சு !
வலப்புற மூச்சுக்கு சூரியகலை
இடப்புற மூச்சுக்கு சந்திர கலை !

சூரியகலையும் சந்திரகலையும் !
அர்த்தமறிந்து பிரயோகிக்கத் தெரிந்தால்
வாழ்வின் அர்த்தத்தையே மாற்றிவிடலாம் !
வாழ்வின் போக்கு நமது மூச்சிலேதான் !

தாறுமாறான மூச்சினால் தான்
பூர்வஜன்ம வினைகளும் ,தொடர்ந்து
வரும் இன்ப துன்பங்கள் ,
மனத் தடுமாற்றம் குழப்பங்கள் ,
வறுமை முதலிய அவலங்கள்
தொடர்ந்து வந்து நம்மை தாக்குகின்றன !

பிறந்ததும் எதை எதையோ
சொல்லித்தரும் நமக்கு
மூச்சு விடுதல் பற்றி மட்டும்
ஏனோ யாரும்சொல்லித்தர சிரத்தை எடுப்பதில்லை !

மூச்சை அறிந்தவன்தான் யோகி !
இயற்கையை மூச்சிலே நட்புக் கொள்ளலாம் !
குளிர் அடிக்குதா ? வலப்பக்கம் மட்டும்
மூச்சு, அதுவே சூரிய கலை ! சூடாகிடும்
ஐந்தே நிமிடத்தில் !

தாக்கிடும் அந்த வெப்பமா ? பிடித்திடு
இடப்பக்க மூச்சை குளிர்தே விடும்
உடம்புதான் ஐந்து நிமிடத்தில் ! ஆண் மகவு வேணுமா ?
சூரியகலை நடைபெறும் பொது உறவு கொள் !

ஆசையுடன் பெண் மகவு வேண்டிடின்
சந்திர கலை நடைபெறும் காலம்
உறவுக்கு உகந்த காலம் !ஆயிடினும்
கூடுதலுடன் ஐம்பூத ஆற்றல் இணைய வேண்டும் !

இத்தகு மூச்சிதனை வயப்படுத்தும்
பயிற்சிதான் பிராணாயாமம் ! அது மூச்சுடன்
பிராணனையும் வயப்படுத்தும் வழியாகும் .!
பிராணனை உணர்ந்தால் எதுவும் சாத்தியம் !

அளவில்லாது விடும் மூச்சுக் காற்றை
அளவுடன் கணக்கிட்டு ,காலஅளவுடன்
சுவாசிப்பதே பிராணாயாமம் ! குறைவாகவும்
மெதுவாகவும் மூச்சு கூடவே
ஆயுளும் பெருக்கம் அல்லது குறைவு !

வாழும் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதும் இந்த ஆகாயத்திலே
ஒடுங்குவதும் இந்தஆகாயத்திலே!
இந்த ஆகாயமோ பிராணசக்தி ! எங்கும் வியாபித்துள்ள
இந்த சக்தியே பிரபஞ்சத்தின் இயக்கமாகும் !

இன்னும் பல இருக்குது மூச்சினிலே !
அது இதன் அடுத்த பகுதியிலே !

அண்ணாமலை சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 30, 2011 11:44 pm

எனக்குப்புரிந்தது இதுவே --(4)


எந்த ஒரு இயந்திரத்தையும்
மேம்படுத்த வேண்டின் முதலில்
காணவேண்டியது அதன் மானுவலைதான் !
கையேடுதான் மொத்தமும் காட்டிக்கொடுக்கும் !


இயந்திரத்தை மேம்படுத்த
அது எப்படி செய்யப் பட்டுள்ளது,
எப்படிஇயங்குகிறது , அதன் பூர்வீகம் என்ன ?
என அத்தனையும் புரிந்து கொண்டால்
அந்த இயந்திரமும் நம் வசப்படும்
அது போல் வாழ்வை நம் வசப்படுத்த
நமது வாழ்வின் கருவியான நமது
உடலைப் பற்றிய பூரண புரிதல் இருந்தால்
வாழ்வும் நமக்கு வசமாகும் ! வாழும்போதே
வேண்டியவை விரும்பியபடி சேர்க்கவும் ,
கர்மவினை சூழும் சூட்சுமமும் அறிந்து,
தன்னை அறிந்து இன்புறும் தந்திரம் அறிய

வாழும் போது நெறியுடன் இன்பமாக
வாழ்ந்து பயணத்தின் முடிவில்
சேரிடம் சேர ,நாம் எங்கு வந்திருக்கிறோம்
,எங்கு போக இருக்கிறோம் என்பதைத் தெளியுறவும்,

வாழ்வை நடத்தும் போது நசுங்காமல்
நடக்கும் வழியும், ,மற்றவர் மனம்
நோகாமல் நம் வழி போகும் லயமும்
வாழ்வின் வளத்திற்கு சுத்தவழியில்

சுமை சேராமல் செல்வம் சேர்ப்பதுவும்
வாழும் போதே சந்தோஷமாக வாழ்வை
அனுபவிக்கும் வழியும் ,அறியவும் ,
இத்தனைக்கும்
தன்னை அறிந்தவன் தலைவன் ஆவான் என்றபடி ,
தன் உடலைச் சரிவர அறிந்து
தன் வழி நடக்க உபயோகித்தலே
நமது வாழ்வின்பொருள் !

வாழ்க்கைஒரு சமர்தான் ! அது பூங்கா அன்று !
பூம்பாதையும் அன்று !
அச்சமரில் வெல்லப் போதுமான ஆயுதம்
பிறக்கும் போதே தரப்பட்டுள்ளது !

நம்மிடம் உள்ள முக்கிய ஆயுதம் நமது மூச்சு ,
' ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை'
என்ற சித்தர் மொழியில் ,
அந்தப் பன்னிரண்டு கால் குதிரையை
அடக்கும் உபாயம் சரிவர குருவின்
வழி பயில வாழ்க்கை வசப்படும் .
எத்தகு மேன்மைக்கும மூச்சே பிரதானம் !

இத்தகு மூச்சை அடக்கி ,அதனால்
மனத்தை அடக்கிமேன்மைகள் பெற
இக்கலையை மேலை நாடுகளில்
வியாபர ஆளுமை ,உறவுகள் மேம்பாடு
இன்ன பிறவுக்கெல்லாம் இதுவே வழியென
கூவிகூவி விற்கப்படுகிறது .


நமது பண்டைய வழிமுறையை
நயமுடன் அறிந்து
நாமும் பயன் பெற, நமது உடலில் மர்மங்கள்
யாவும் அறிதல் அவசியம் ஆகிறது !
பிராணன் உடலில் தொழில் ஆகவும் நரம்பில் ஒட்டமாகவும்
எண்ணத்தில் வலிமையாகவும் வாழ்வில்
அனைத்து சக்தியாகவும் வெளிப்பாடாகிறது .
மூச்சினால் மனத்தை அடக்கலாம் ! மூச்சுக்
குறைந்தால் எண்ண வீச்சும் குறையும் !


அடுத்து உடல், அதன் தத்துவங்கள் ,மனம் ,
அதன் அடக்கமும் விரிவும் ,வேண்டிய வேண்டியாங்கு
பெறுதல் வாழ்வாங்கு வாழ்தல்
இவைபற்றி புரிதலின் பரிமாற்றம் !
இங்கேத் தொடரும் .
இது ஒரு மனிதனின் மனுவல் !

அண்ணாமலை சுகுமாரன்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 31, 2011 12:11 am

வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய அனைத்தையும் சர்வ சாதாரணமாக சரளமாக வெளியிட்டு வரும் உங்கள் சிந்தனைக்கூர்மையை மெச்சுகிறேன்... தொடருங்கள் ஆசானே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 31, 2011 4:54 pm

எனக்குப்புரிந்தது இதுவே --(5)

*மூச்சிலே இருக்கும் சூக்ஷமம் !*


ஒவ்வொரு சுவாசமும் ரேசகம் ,
பூரகம் ,கும்பகம் என மூவகைத்
தொழில் புரியும் !இன்னும் உள்சுவாசம்
வெளிச் சுவாசம் என இருபெரும் வகைப் படும் !

மூச்சு இருதுளை வழியே நாசியில்
மாறி மாறி வரும் ! வலது துளைவழி வரின்
சூரியகலை ! இடது துளைவழி சந்திர கலை .!

கால் என்றால் காற்று; இதை
வேகாக்கால் ,சாகாக்கால் எனக்
கூறுதல் சித்தர் மரபு ! இது காற்று
அழியாது எனக் குறிப்பது !

புலனடக்கமும் ஆரோக்கியமும் ,
நீண்ட ஆயுளும் யோகியர்க்கு
நல்குவது அவர் பயிலும்
பிராணாயாமமே ! குறைவாகவும் மெதுவாகவும்
சுவாசம் உடைய ஜீவர்களுக்கு ஆயுள் நீளம் !

இயல்பான நிலையில் சுவாசம்
எட்டு அங்குலம் உள்ளே சென்று
பன்னிரண்டு அங்குலம் வெளியே
வருகிறது ! ஒவ்வொரு சுவாசத்திலும்
நஷ்டமாவது நான்கு அங்குலம் !

திருமூலர் வகுக்கும் வழி உள்ளிழுத்தல்
16 மாத்திரை நேரம் , உள்ளடக்க 64
மாத்திரை நேரம் ,வெளியிட 32 மாத்திரை;
ஆயினும் இந்தப் பூரகம் ,கும்பகம், ரேசகம்
வரிசையில் உள்ள அளவு மெத்தப் பயின்ற
சாதகர்க்கே வாய்க்கும் ! அதுவும் குருஅருளாலே!

சுவாசத்தைப் பரி என்றும் ,வாசி என்றும்
அழைப்பர் யோகியர் ! குதிரை என்பதற்கு
சுவாசத்தின் ஓட்டம் துடிப்பு ,
எளிதில் அடங்காத தன்மை இவையே
காரணம் ! இந்தக் குதிரைக்கு 16 கால் !

ஆரோக்கியமானவர்க்கு சூரியநாடி ( பிங்கலை )
வழியே 8 அங்குலமும், சந்திர நாடி ( இடை )
வழியே 12 அங்குலமும் சுவாசம் !
வலது நாடி வழியே சுவாசம் மிகப் பழகினால் மிகுதியும் வாழலாம் !

வலது நாடி வழி சுவாசம் அதிகம் ஆக வழி
இடதுகை புறம் உறங்குதல் மூலமே வாய்க்கும் .
நாளில் பெரும் பகுதி தூங்கிக் கழிக்கிறோம்
உறங்கும் போது வலது நாடி ஓடினால்
வாழ்வதும் நீண்ட நாள் ஆகிவிடும் .
வாழ்க்கை நீள சித்தர்கள் நமக்குச் சொன்ன ரகசியமிது

எத்தனை சுலபவழி !
கொள்வாரின்றி தவிக்குது தத்துவங்கள் !


சரம் பார்த்தல் சித்தர் வழியில்
வாழ்க்கை சிறக்க ஒரு வழியாகும் ! காலை மணி
நான்கிலிருந்து ஆறுவரை சரம் பார்த்தல் மரபு !
திங்கள்,புதன், வெள்ளி இம் மூன்று நாட்களும் தவறாமல் மூச்சு இடப் புறம்
வரவேண்டும் !

சனி, ஞாயிறு ,செவ்வாய் தப்பாமல்
சுவாசம் வலப்புறம் வாய்க்க வேண்டும் !
வியாழன் வளர்பிறையில் இடப்புற சுவாசம் ;
தேய் பிறையில் வலப் புறசுவாசம்!

ஞாயிறு சூரியகலை தவறினால் அன்பு குறையும்
தந்தையிடம் ,தொழிலில் அமைதி போம் !தலைவலி
இருமல் ,சளி உண்டாம் ! திங்களன்று சந்திரகலை
இல்லையாகின் தாயிடம் வெறுப்பு ,ஆஸ்துமா ,அலர்ஜி !

செவ்வாய் சூரிய கலை வாராக்கால் உடன்பிறந்தோரிடம்
பிணக்கு ! வெப்பக் காய்ச்சல் ,கண் எரிச்சல், நெஞ்சு வலி
தப்பாது ! புதனன்று சந்திர்கலை வாராக்கால்
மாமனாரிடம் மதிப்புப் போம் ! தாய் மாமன் உறவு
கெடும் ! உடல் வலி, குடைச்சல், முட்டுவலி !

வியாழன்று கலை சரியாக இல்லாதிருப்பின் ,
பெற்ற மக்களால் துயரம் ,அடிவயிற்றில் துன்பம் ,
மலடாதல் தப்பாது ! வெள்ளியன்று சந்திர கலை
தவறின் தீண்டும் பார்வை தீங்கு ! தாம்பத்திய
உறவில் குறைவு !

சனியன்று சூரியகலை தவறின் கடன் தொல்லை,
சண்டை சச்சரவு, சரும நோய், ஜுரம் வாட்டிடும் !
சரத்தைச் சரிசெய்தால் ஜகத்தினை ஆளலாம் !
சரம் சரிசெய்ய குருவழி பயிலல் பயன்தரும் .

சரம் பார்த்தல் தமிழ் சித்தர் வழி பாடமாகும்
இன்னும் எந்தக்கலையில் என்ன செய்யலாம் ?
என அடுத்த பகுதியில் காணலாம் ! !

அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 31, 2011 4:58 pm

அன்புள்ள கலை அவர்களுக்கு ,
கட்டுரை குறித்த தங்கள் ஆர்வத்திற்க்கு நன்றி !
ஆனால் படிப்பவர் குறைவாக இருக்கிறார்களே ?
அவர்களை ஈர்க்க ஏதாவது வழி இருக்கிறதா ?
தொடுப்பை "வாழ்க்கையின் மானுவல் "
என மாற்ற இயலுமா ?
அன்புடன்
சுகுமாரன்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 8:26 pm

மிக உயர்வான வாழ்வியல் உண்மைகள்..!

அற்புதம் சுகுமாறன்..!




எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " 0018-2எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " 0001-3எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " 0010-3எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 31, 2011 10:00 pm

sugumaran wrote:அன்புள்ள கலை அவர்களுக்கு ,
கட்டுரை குறித்த தங்கள் ஆர்வத்திற்க்கு நன்றி !
ஆனால் படிப்பவர் குறைவாக இருக்கிறார்களே ?
அவர்களை ஈர்க்க ஏதாவது வழி இருக்கிறதா ?
தொடுப்பை "வாழ்க்கையின் மானுவல் "
என மாற்ற இயலுமா ?
அன்புடன்
சுகுமாரன்

நண்பரே... சில நல்ல விடயங்கள் கவனத்தில் வர சில நாட்களாகும்... இவை காலத்தால் அழியாத பொக்கிஷங்களாக ஈகரையில் சேமிக்கப்ப்படுகின்றன... அதிக ஈர்ப்பு கொண்ட அரட்டைகள் காலத்தால் மறைந்துவிடும்.. இவை போன்ற வாழ்க்கை தத்துவங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்...

பலன் எதிர்பாராது தொடர்ந்து தாருங்கள்... பலனடையவிரும்புவோருக்கு பயன்படட்டும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக