புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
17 Posts - 2%
prajai
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for Thyroid

Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Thyroid

மனித உடலின் முக்கியப் பணிகளைச் செய்வதில் சுரப்பிகளுக்குப் பெரும்பங்கு உண்டு. உடலில் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்தச் சுரப்பிகளுக்கு ரசாயனங்களை உற்பத்தி செய்வதுதான் வேலை. அந்த ரசாயனங்களைத்தான் ஹார்மோன்கள் என்கிறோம். இந்த ஹார்மோன்கள் ரத்தத்தின் வழியாக உடலுறுப்புகள், தோல், தசைகள், திசுக்கள் என அனைத்துக்குமான தகவல் களைக் கொண்டு செல்கின்றன. இந்தத் தகவல்கள்தான் நமது உடலில் ஒவ்வோர் உறுப்பும் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கும். எனவே, நமது உடல் செயலாற்றுவதற்கு சுரப்பிகள் சரியாகப் பணியாற்ற வேண்டும். மனித உடலில் முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு. கழுத்தின் முன்பகுதியில் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பிதான் தைராய்டு. இந்தச் சுரப்பியில் உற்பத்தி யாகும் ஹார்மோன், உடலின் வளர்சிதை மாற்றத்திலும், உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக வேலை செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை  4.2 கோடி பேருக்கு தைராய்டு தொடர்பான குறைபாடுகள், நோய்கள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண்கள் இந்தக் குறை பாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நான்கு பெண்களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில் தைராய்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இரண்டு வகை


ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏன் இந்தக் குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது என்ற கேள்விக்கு மருத்துவ அறிவியல் இதுவரை விடை கண்டு பிடிக்கவில்லை.

தைராய்டு சுரப்பியில் பொதுவாக இரண்டு வகை குறைபாடுகள் ஏற்படும்.

ஹைப்போ தைராய்டு - தைராய்டு ஹார்மோன் குறைவாக உற்பத்தியாகும் பிரச்னை.

ஹைப்பர் தைராய்டு - தேவைக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன் உற்பத்தியாகும் பிரச்னை.

ஹைப்போ தைராய்டு


தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மிகப்பொதுவான பிரச்னை `ஹைப்போ தைராய்டு' குறைபாடு. ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால் உடல் உறுப்புகள், உடலில் நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் சற்று மந்தமாக நடக்கும். சோர்வு, சோம்பல், முடி உதிர்வு, எடை அதிகரிப்பு, வறண்ட சருமம், சருமத்தில் அரிப்பு, மலச்சிக்கல், சீரற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கலாம். ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு ஓரிரு அறிகுறிகள் மட்டும் காணப்படலாம். அறிகுறியே இல்லாமலும் இருக்கலாம். ரத்தப் பரிசோதனையின்போது மட்டுமே குறைபாடு இருப்பது தெரிய வரும்.

ஹைப்பர் தைராய்டு


தைராய்டு சுரப்பியில் தேவைக்கு அதிகமாக ஹார்மோன் சுரப்பதால் ஏற்படும் பிரச்னை `ஹைப்பர் தைராய்டு'. ஹைப்போ தைராய்டு குறைபாடுள்ளவர் களுக்கு காணப்படும் அறிகுறிகள் அப்படியே நேரெதிராக இருக்கும். துறுதுறுப்புடன் இருப்பது, படபடப்பு, அதிக எடை குறைவது, அடிக்கடி மலம் கழித்தல், கைகளில் நடுக்கம், தூக்கமின்மை, `ஆங்ஸைட்டி அட்டாக்’ (Anxiety attack) உள்ளிட்டவை இருக்கும். தைராய்டு குறைபாடுடையவர்களில் 70% பேருக்கு ஹைப்போ தைராய்டு இருக்கலாம், 30% பேருக்கு ஹைப்பர் தைராய்டு இருக்கலாம். ஒப்பீட்டளவில் ஹைப்போ தைராய்டு குறைபாடுதான் அதிகம் பேரை பாதிக்கிறது.

எந்த வயதில் வரும்?


பிறவியிலேயே இந்தப் பிரச்னை வருவதற்கு வாய்ப்புள்ளது. பிறவியிலேயே பிரச்னை இருக்கும் குழந்தைகளுக்கு பிறந்த 20 நாள் களிலேயே அதற்கான ஹார்மோன் கொடுக்க வேண்டும். இது ஆட்டோ இம்யூன் பிரச்னை என்பதால் இந்த வயதில்தான் வரும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

குடும்பத்தில் யாருக்கேனும் ஹைப்பர், ஹைப்போ தைராய்டு பிரச்னை இருக்கிறது என்றால் மற்றவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆனால் இந்த வயதிலிருந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை குடும்ப மருத்துவர் இருந்தால், அவருக்கு அந்த நபரின் குடும்பத் தினர், அவர்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து தெளிவாகத் தெரியும் என்பதால், ஏதேனும் அசாதாரணமாக இருந்தால் உடனே பரிசோதனை செய்யும்படி பரிந்துரைப்பார்.

பருவமடையும்போது வரலாம், மாதவிடாய் சுழற்சி நடைபெறும்போது வரலாம், கர்ப்ப காலம், பிரசவம் முடிந்த பிறகு என எப்போது வேண்டுமானாலும் தைராய்டு பாதிப்பு வரலாம். பெரும்பாலும் அறிகுறிகள் தென்படும். திடீரென்று இர்ரெகுலர் பீரியட்ஸ் அல்லது அதிக ரத்தப்போக்கு, முடி உதிர்வு என ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்து வரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

பரிசோதனைகள்


எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு குறைபாடு இருப்பதைக் கண்டறிய முடியும். குறைபாடு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய Thyroid Profile (Thyroid Function Tests - TFT) என்ற பரிசோதனையைச் செய்ய வேண்டும். அதில் TSH, free T4 ஆகிய வற்றின் அளவுகளை வைத்தே குறைபாட்டை அறிந்துகொள்ள முடியும்.

குடும்ப பின்னணியில் தைராய்டு குறைபாடு இருப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் ஆண்டுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளலாம். தைராய்டு குறைபாட்டுக்கு முதன்முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் என்றால், ஒன்றரை மாதத்தில் மீண்டும் பரி சோதனை செய்து பார்க்க வேண்டும். பரிசோதனை முடிவை வைத்து பிரச்னைக்கு சரியான அளவு மாத்திரை கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிவார்கள். சிலர் பல ஆண்டுகளாக தைராய்டுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். நீண்ட காலமாக ஒரே அளவு மாத்திரையே பரிந் துரைக்கப்பட்டு வரும். இப்படிப்பட்டவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மாத்திரையின் அளவை மருத்துவர்கள் மாற்றும்போது 6-8 மாதங்களுக்குள் பரிசோதனை செய்து, புதிய மாத்திரையின் அளவு சரியாக தைராய்டு அளவை நிர்வகிக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். எனவே, புதிதாக மாத்திரையின் அளவை மாற்றியவர்கள் 2-3 மாத இடைவெளியில் மருத்துவரை அணுகுவது அவசியம்.

ஹார்மோன் சமநிலையின்மை வரலாம்


தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் அனைவருக்கும் பிற ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என்று கூற முடியாது. தைராய்டு ஆன்டிபாடிக்கள் இருப்பவர்களுக்கு நீர்க்கட்டி (பிசிஓடி) வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், எல்லோருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. பிசிஓடி என்பது வாழ்வியல் நோய், அது வராமல் நம்மால் தடுக்க முடியும். பொதுவாக, தைராய்டுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக உள்ளதா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். அதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், கருமுட்டையின் ஹார்மோன்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் பரிசோதித்துப் பார்த்து, பிரச்னை இருக்கும் பட்சத்தில் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.

மெனோபாஸும் தைராய்டும்


மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜென் பற்றாக்குறை காரணமாக, பல ஹார்மோன்களின் சமநிலைமையின்மை உடலில் வர வாய்ப்புள்ளது. சில நேரங்களில் மெனோபாஸ் அறிகுறிகளும் தைராய்டு குறைபாட்டுக்கான அறிகுறிகளும் ஒன்றுபோலவே இருக்கும். குறிப்பாக, மனநிலையில் ஏற்ற இறக்கம், எடை அதிகரிப்பு, உடலில் வெப்பநிலை மாற்றங்கள் போன்றவை இருக்கலாம். அந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு ஹைப்போ தைராய்டு பாதிப்பு ஏற்பட்டாலும் இதே போன்ற அறிகுறிகளே தென்படலாம். எனவே, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஏற்கெனவே தைராய்டு குறைபாடு ஏற்பட்டு தொடர்ச்சியாக மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், மெனோபாஸ் நிலையை அடையும்போதும் அவர்களின் தைராய்டு அளவு இயல்பாகவே இருக்கும்.

ஹைப்போ, ஹைப்பர் குறைபாடுகள் தவிர, வேறு சில நோய்கள், பிரச்னைகளும் இந்தச் சுரப்பியில் ஏற்படலாம்.

`தைராய்டு நாடியூல்' (Thyroid Nodule) - இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தப்பரிசோதனையில் தைராய்டின் அளவு இயல்பாக இருக்கும். ஆனால் கழுத்தில் மட்டும் கட்டி உருவாகும். அது ஒரு கட்டியாகவும் (சிங்கிள் நாடியூல்) இருக்கலாம் அல்லது சின்ன சின்ன தாக நிறைய கட்டிகளாகவும் (நாடியூல்கள்) உருவாகலாம்.

தைராய்டு புற்றுநோய் - உடலில் பிற பாகங்களில் ஏற்படுவதுபோல் தைராய்டு சுரப்பியிலும் புற்றுநோய் பாதிக்கலாம்.

இரண்டாம் நிலை ஹைப்போ தைராய்டிசம் - தைராய்டு சுரப்பி சரியாக இயங்க வேண்டும் என்றால் மூளையில் இருக்கும் ‘மாஸ்டர் கிளாண்ட்’ என்று அழைக்கப்படும் பிட்யூட்டரி சுரப்பி சரியாக இயங்க வேண்டும். எளிமை யாகச் சொன்னால், பிட்யூட்டரி சுரப்பி சாவி கொடுத்தால் தான் தைராய்டு சுரப்பி ஹார்மோனை சுரக்கும். பிட்யூட்டரி சுரப்பியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தைராய்டு குறைபாடு ஏற்படலாம். இதனை மத்திய அல்லது இரண்டாம் நிலை ஹைப்போ தைராய்டிசம் (Central or Secondary Hypothyroidism) என்று அழைப்பார்கள்.

தைராய்டைட்டிஸ் (Thyroiditis) - தைராய்டு சுரப்பியில் ஏற்படும் வீக்கம் (Inflammation). கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. சிலருக்கு வலியுடன் வீக்கம் ஏற்படும். எச்சில் விழுங்கும்போது, கழுத்துப் பகுதியில் வீக்கம், கழுத்துப் பகுதியைத் தொட்டால் வலி ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகளின் மூலமாகவே தீர்வு காண முடியும்.

`ஹேஷிமோட்டோ தைராய்டிட்டிஸ்' (Hashimoto Thyroiditis) - ஹைப்போ தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான பொது வான காரணம் இது. மரபணு காரணங்களால், ஆட்டோ இம்யூன் குறைபாட்டின் பின்னணியுடன் ஏற்படும் ஹைப்போ தைராய்டு பிரச்னையை ஹேஷிமோட்டோ தைராய்டைட்டிஸ் என்கிறோம். இந்தப் பிரச்னையைக் கண்டறிந்தவர் ஜப்பானைச் சேர்ந்த ஹேஷிமோ என்ற மருத்துவர் என்பதால் இந்தப் பிரச்னை அவர் பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

`போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்' (Postpartum Thyroiditis) - பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் பிரச்னை. இது பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும். சில பெண்களுக்கு நிரந்தரமாக ஹைப்போ தைராய்டு பிரச்னையாக மாற வாய்ப்புள்ளது.

இரும்புச்சத்து குறைபாடு - தைராய்டு பிரச்னை இருப்பவர் களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. தைராய்டு ஹார்மோன் சரியாகச் சுரந்தால்தான் இரும்புச்சத்து உற்பத்தியும் சீராக இருக்கும். இதனால் அனீமியா பிரச்னை உள்ளவர்களுக்கு தைராய்டு பரிசோதனையும் செய்து பார்க்க வேண்டியது அவசியம். தைராய்டு பிரச்னைக்குத் தீர்வு கண்டு, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அனீமியா குறைபாடு சரியாக வாய்ப்புள்ளது.

கூடுதல் அயோடின் சுரப்பு - இது மிக மிக அரிதான பிரச்னை. ஹைப்பர் தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு தைராய்டு ஹார்மோன் மிக அதிகமாகச் சுரந்தால் சில நேரங்களில் அயோடின் சுரப்பும் அதிகமாக இருக்கும். அயோடின் சுரப்பு இயல்புக்கு வரும் வரை குறிப்பிட்ட காலத்துக்கு உணவி லிருந்து கூடுதல் அயோடின் எடுக்க வேண்டாம் என்று சொல்வோம். கடல் உணவுகளில் அதிகம் அயோடின் காணப்படும் என்பதால் அதுபோன்ற உணவுகளைத் தவிர்க்கச் சொல்வோம். மீன் சாப்பிட விரும்பினால் நன்னீர் மீன்களை எடுத்துக்கொள்ளச் சொல்வோம்.

தைராய்டு சுரப்பி நீக்கம்


தைராய்டு புற்றுநோய், தைராய்டு சுரப்பியில் உள்ள கட்டிகள் வளர்ச்சியடைந்து கொண்டே இருப்பது, தைராய்டு கட்டியினால் குரலில் மாற்றம் ஏற்படுவது போன்ற காரணங் களுக்காக சுரப்பி நீக்கும் (Thyroidectomy) அறுவை சிகிச்சை செய்யப்படும். இதுதவிர, கழுத்தில் இருக்கும் தைராய்டு கட்டி பெரிதாகத் துருத்திக்கொண்டு இருந்தால், அழகியல் காரணங் களுக்காகவும் அதை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

தைராய்டு சுரப்பி வண்ணத்துப்பூச்சியைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும். அதன் றெக்கையை பாலம் போன்ற அமைப்பு (Isthmus ) இணைக்கும். அறுவை சிகிச்சையின்போது முழு தைராய்டு சுரப்பியையும் நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அறுவை சிகிச்சையின்போதே மருத்துவர்கள் திசுப் பரிசோதனை மேற்கொள்வார்கள். அதில் புற்றுநோய் இல்லாத சாதாரண கட்டி என்றால், பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஒருபுறத்தை மட்டும் (Partial Thyroidectomy) நீக்குவார்கள்.

திசுப் பரிசோதனையில் புற்றுநோய் அறிகுறிகள் தென் பட்டால் முழு சுரப்பியையும் நீக்கிவிடுவார்கள். அப்போது அருகிலிருக்கும் நிணநீர் கணுக்களையும் (lymph Nodes) பரிசோதிப்பார்கள். அதிலும் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றையும் நீக்கிவிடுவார்கள்.

ஒருபுறம் மட்டும் அறுவை சிகிச்சை செய்து நீக்கம் செய்து விட்டால், குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரைச் சந்திக்கு ம்போது அந்த இடத்தைப் பரிசோதிப்பார்கள். கூடுதலாக ரத்தப் பரிசோதனைகளும் செய்ய வேண்டியிருக்கும். ஏதேனும் கட்டிகள் போன்று தென்பட்டால், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து மற்றொரு புறத்தில் இருக்கும் சுரப்பியின் மீதிப்பகுதியையும் நீக்க வேண்டியிருக்கும். ஆனால், இது போன்ற பிரச்னைகள் வருவது மிகவும் அரிதுதான்.

மாத்திரைகளை மாற்றி எடுத்துக்கொள்ளலாமா?


தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் தங்களுக்குள் மாத்திரைகளை சில நேரம் மாற்றி எடுத்துக்கொள்கின்றனர். உதாரணத்துக்கு, கணவன், மனைவி இருவருக்கும் தைராய்டு குறைபாடு இருந்து வெவ்வேறு மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அதில் ஒருவருக்கு மாத்திரை தீர்ந்துவிட்டாலோ அல்லது மாத்திரை எடுத்துச் செல்ல மறந்துவிட்டாலோ இருவருக்கும் தைராய்டு குறைபாடு தானே என்று ஒருவரின் மாத்திரையை மற்றவர் எடுத்துக்கொள்வார்கள். இது முற்றிலும் தவறானது. காரணம், ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுக்கப்படும். ஹைப்பர் தைராய்டுக்கு சுரப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வழங்கப்படும். அதே போல மாத்திரையின் அளவு நபருக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். இரண்டு மாத்திரைகளும் வேறு வேறு வேலைகளைச் செய்வதால், அதற்கு பதில் இது என்று எடுத்துக்கொள்ள முடியாது. அந்தந்தப் பிரச்னைக்குப் பரிந்துரைக்கும் மாத்திரைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்நாள் முழுமைக்கும் மாத்திரையா?


ஹைப்போ தைராய்டு குறைபாடு இருந்தால் பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும் தைராய்டுக்கான ஹார்மோன், ஹார்மோன் மாத்திரை கொடுக்க ஆரம்பித்து விடுவோம். எனவே, குறைபாடு கண்டறியப்பட்டு மாத்திரை பரிந்துரைக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்து, தேவைப் பட்டால் மாத்திரையின் அளவிலும் மாற்றங்கள் செய்து, உணவு, உடற்பயிற்சி, ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, முறை யான தூக்கம் ஆகியவற்றைப் பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

வருடத்துக்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ மருத்துவரை அணுகி, எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் அளவு சரியாக உள்ளதா என்பதை செக் செய்து கொள்ள வேண்டும்.

தேவையைவிட அதிக அளவு மாத்திரை எடுத்துக்கொண்டால் எடை குறைவு, எலும்புத் தேய்மானம், படபடப்பு போன்றவை ஏற்படலாம். சரியான அளவு மாத்திரை எடுத்துக் கொண்டால் எந்தவிதப் பிரச்னையும் வராது.  

ஹைப்பர் தைராய்டு அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட இடைவெளியில் நிச்சயம் பரிசோதனை செய்ய வேண்டும். சிலருக்கு படிப்படியாக அளவைக் குறைத்து நிறுத்தவும் வாய்ப்புள்ளது. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து அது மாறுபடும்.

வெகு எளிதாக சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவ நிலை தைராய்டு. அதை நிர்வகிப்பதும் எளிது, அதனால் வரும் பிரச்னைகளும் குறைவு. நாம்தான் கூகுள், வாட்ஸ்அப் பார்த்து தேவை யில்லாதவற்றைச் செய்து, மாத்திரையை நிறுத்தி அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம்.

இதை பெரிய நோயாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி, குறிப்பிட்ட இடைவெளி

யில் ரத்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு அளவைத் தெரிந்துகொண்டு அதை நிர்வகிப்பதன் மூலம் இந்தக் குறைபாட்டை எளிதாக கையாள முடியும்” என்கிறார் டாக்டர் ஸ்ருதி.

சந்தேகங்கள்... விளக்கங்கள்


முடி உதிர்வு, உடல் பருமன், உடல்வலி, செரிமான பிரச்னை என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிற பிரச்னை தைராய்டு. மருந்து, மாத்திரைகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு சரியான உணவுப் பழக்கமும் வாழ்க்கைமுறையும்கூட இவர்களுக்கான தீர்வுகளாகப் பரிந்துரைக்கப் படுவதுண்டு. தைராய்டு பாதிப்புக்கான உணவுப்பழக்கம், அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மற்றும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை, என்ன காரணம் என எல்லாவற்றையும் விளக்குகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்.

தைராய்டு உணவுப்பழக்கம்... இதெல்லாம் முக்கியம்


``ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாட்டால் வருவது. தைராய்டுக்கான உணவுகள் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இனிப்புகளின் மீதான தேடல், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் ‘ஹைப்போகிளைசீமியா’ பாதிப்பு, இன்சுலின் எதிர்ப்புத்திறன் போன்றவற்றை முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும். நாளமில்லா சுரப்பிகளும் கணையமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதால் இரண்டோடும் சம்பந்தப்பட்ட சர்க்கரை நோய் பிரச்னைகளை முதலில் சரிசெய்ய வேண்டியது அவசியமாகிறது. அதற்கு...

அதிக புரதமும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்தும் குறைவான கார்போ ஹைட்ரேட்டும் உள்ள உணவுகள் அவசியம்.

பதப்படுத்தப்பட்ட, பாலிஷ் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை அறவே தவிர்க்கவும்.

உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சோளம் போன்று மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவும். எந்தப் பொருளை வாங்கினாலும் அதன் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சர்க்கரை அளவை கவனிக்கத் தவற வேண்டாம்.

தவிர்க்க வேண்டியவை


பால் மற்றும் பால் பொருள்களையும், குளுட்டன் உணவுகளையும் தவிர்ப்பது சிறந்தது. அதாவது பால், பனீர், சீஸ், காபி, டீ, கஸ்டர்டு, ஐஸ்க்ரீம், கேக், இனிப்புகள் போன்றவற்றையும், கோதுமை உணவுகளான சப்பாத்தி, பிரெட், பிஸ்கட், உப்புமா, தோசை, பரோட்டா மற்றும் கட்லெட், பீட்சா, சூப், பர்கர் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

நச்சுகளைக் குறைப்போம்


பை, சமையல் பாத்திரங்கள், பாட்டில்கள் என பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் பயன்படுத்த வேண்டாம். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீர்குலைப்பதில் பிளாஸ்டிக்குக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்பதே காரணம்.

போலவே.... செயற்கை இனிப்புகள், அதிகப்படியான உப்பு, ப்ரிசர்வேட்டிவ், செயற்கை சுவையூட்டிகள், மணமூட்டிகள், கொழுப்பு போன்றவையும் வேண்டாம்.

ஸ்ட்ரெஸ்ஸுக்கும் தைராய்டுக்கும் தொடர்பு உண்டா?


ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்கு ஒவ்வொரு தினத்தையும் ஏதேனும் ஓர் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற ஒன்றுடன் தொடங்க வேண்டும். ஸ்ட்ரெஸ் அதிகமானால் அது மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வாயு பிரிதல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தலாம். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும்போது அது தைராய்டு பாதிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, உடலின் நோய் எதிர்ப்புத்திறனையும் பாதிக்கும். கார்ட்டிசால் ஹார்மோன் அளவு அதிகரித்தால் அது உடல்பருமனுக்கும் காரணமாகும்.

முட்டைகோஸும் காலிஃபிளவரும் சாப்பிடலாமா?


தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற வற்றைச் சாப்பிடக்கூடாது என்றொரு பரவலான கருத்து உண்டு. தைராய்டு பாதித்தவர்கள், முட்டைகோஸ், காலிஃபிளவர், புரொக்கோலி, சோயா, முள்ளங்கி போன்றவற்றை பச்சையாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதில் பிரச்னை இல்லை.

முட்டைகோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட பச்சைக் காய்கறிகள், கீரைகள், சோயா போன்றவற்றில் ‘காய்ட்ரஜென்’ (Goitrogen) என்ற சாரம் இருக்கும். இது தைராய்டு செயல்பாட்டை பாதிப்பதால் தைராய்டு சுரப்பியானது இன்னும் சிரமப்பட்டு இயங்கவேண்டியிருக்கும். அதனால் தைராய்டு சுரப்பி பெரிதாகும். இந்த நிலையை நாம் ‘காயிட்டர்’ (Goiter) அதாவது ‘முன்கழுத்துக் கழலை’ என்று சொல்கிறோம். அதனால்தான், தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காய்ட்ரஜென் உள்ள காய்கறிகளை பச்சையாகச் சாப்பிடாமல் நன்கு வேகவைத்துச் சாப்பிடு மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புரோபயாடிக்ஸும் வைட்டமின் `டி’யும்


குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் புரோபயாடிக்குகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பழைய சாதம், தயிர், மோர், கொம்புச்சா பானம் போன்றவற்றில் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக்ஸ் அதிகம் இருக்கும்.

உங்கள் உடலில் வைட்டமின் டி அளவு சரியாக உள்ளதா என பரிசோதனையின் மூலம் தெரிந்துகொண்டு, குறைவாக இருக்கும்பட்சத்தில் மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளவும்.

இந்த ‘7’ம் தைராய்டுக்கு ஆகாது.


1. சோயா சங்க்ஸ், டோஃபு எனப்படும் சோயா பனீர், சோயாவிலிருந்து பெறப்படும் டெம்ப்பே, மிசோ போன்றவை.

2. முட்டைகோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, புரொக்கோலி உள்ளிட்ட பச்சைக் காய்கறிகள்.

3. பிரெட், பாஸ்தா, நூடுல்ஸ் உள்ளிட்ட குளுட்டன் உணவுகள்.

4. டீப்ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள்.

5. சாக்லேட், கேக், ஐஸ்க்ரீம், பேக்கரி உணவுகள் என இனிப்பு அதிகம் சேர்த்த உணவுகள்.

6. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள்.

7. புகை மற்றும் மதுப் பழக்கங்கள்.

பழங்கள் சாப்பிடலாமா?


ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் சாப்பிடலாம். பேரிக்காய், ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவையும் சாப்பிடலாம். உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிந்துகொண்டு அது நார்மலாக இருக்கும்பட்சத்தில் இந்தப் பழங்களில் ஒன்றிரண்டை தினமும் அப்படியே சாப்பிடலாம்.

பால் குடிக்கலாமா?


தைராய்டு பாதிப்புள்ளவர்கள் பால் குடிப்பதால் உடல் வீக்கம் அதிகரிக்கலாம் என்பதால் `லாக்டோஸ்ஃப்ரீ' பால் குடிக்கலாம். பாதாம் பாலும் (பாதாம் பருப்புகளை ஊறவைத்து அரைத்து எடுக்கப்படுவது. ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது) இவர்களுக்கு நல்லது.

அரிசி சோறு ஓகேவா?


தைராய்டு பாதித்தவர்கள் அரிசி சோறு சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உடல்பருமன், இன்சுலின் எதிர்ப்புத்திறன் பிரச்னை உள்ளவர்கள் அளவைக் குறைத்து உண்பது அவசியம்.

தைராய்டு நோயாளிகளும் உடல் பருமன் பிரச்னையும்


உடல் பருமன் என்பது தைராய்டு நோயாளிகள் பலரும் சந்திக்கிற மிகப் பெரிய பிரச்னை. ஹைப்பர் தைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு உடலின் வளர்சிதை மாற்றம் மந்தமாவதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும். இது மட்டுமன்றி, உடலியக்கமே இல்லாதது, தண்ணீர் குறைவாக அருந்துவது, தைராய்டுக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாதது, தேவையற்ற சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்வது, போதிய அளவு தூக்கம் இல்லாதது போன்றவையும் உடல் எடையை அதிகரிக்கும். லெப்டின் மற்றும் க்ரெலின் ஆகிய ஹார்மோன்கள் குறைவதாலும் உடல் எடை கூடும். ஹைப்போதைராய்டிசம் பாதித்தவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்புத்திறன் பிரச்னை சகஜமாக இருக்கும். அதனால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்து, கொழுப்பும் கூடி, உடல் பருமன் ஏற்படும்.

கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்


உணவில் நார்ச்சத்தை அதிகப்படுத்தவும்.

முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஒவ்வொரு வேளைக்கும் தரமான புரதச்சத்துள்ள உணவுகள் இடம்பெற வேண்டும்.

நட்ஸ், சீட்ஸ், எண்ணெய், மீன் என உணவில் ஆரோக்கிய கொழுப்புக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

உடலில் நீர் வறட்சி ஏற்படக்கூடாது. தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக இரவு உணவை தாமதமாகச் சாப்பிடுவது கூடாது.

தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டியது மிக மிக அவசியம்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான தூக்கத்தில் காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது.’’

தைராய்டு இருப்பவர்கள் வெயிட் லாஸ் பண்ண முடியாதா?


ஹைப்போ தைராய்டு பிரச்னை இருந்தாலே அதை உடல் பருமனுடன் பொருத்திப் பார்க்கிறார்கள். பல நேரங்களில் எடை அதிகரிப்பு பிரச்னைக்கு மருத்துவரைப் பார்க்கும்போதுதான் தைராய்டு குறைபாடு இருப்பதும் தெரிய வருகிறது. ஹைப்போ தைராய்டுடன் எடை அதிகரிப்பது என்பது மிக அதிகமாக நடைபெறுவது கிடையாது. ஒருவேளை தைராய்டு ஹார்மோன் அளவு மிக மிகக் குறைவாக இருந்தால், அதற்கான மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது 6- 7 கிலோ வரை எடை குறையவும் வாய்ப்புள்ளது. மிதமான அளவு குறைபாடு இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும் என்பதும் எடை குறையாது என்பதும் தவறான கருத்துதான். தைராய்டு பிரச்னைக்கு மாத்திரை சரியாக எடுத்துக் கொண்டு, டயட் சரியாகப் பின்பற்றி, நேரத்துக்கு தூக்கம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை போன்றவற்றின் மூலம் எடை குறைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

சர்க்கரை நோயாளிகள் அலர்ட்


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைராய்டு குறைபாடு வருவதற்கு வாய்ப்புள்ளது. டைப் 1 சர்க்கரை நோயாளி களுக்கு இன்சுலினும் இயற்கையாகச் சுரக்காத நிலையில், தைராய்டு பிரச்னையும் வர வாய்ப்புள்ளது. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்தப் பிரச்னை வாய்ப்புள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே, டைப் 1, டைப் 2 என எந்த வகை சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.

குறிச்சொற்கள் #தைராய்டு #Thyroid #Thyroiditis #hyperthyroid #hypothyroid

விகடன்

தைராய்டு எனும் கேடயம் அதிகம் சுரந்தால் உடலில் என்னவெல்லாம் நடக்கும்?!


நமது கழுத்து முன்புறத்தில்,

வெறும் முப்பது கிராம் எடை கூட இல்லாத பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த தைராய்டு சுரப்பிதான், நமது எடையை முப்பது கிலோ வரை கூட்டவோ குறைக்கவோ செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்...

சிறிய தோற்றம், பெரிய செயலாக்கம் என்றிருக்கும் இந்த தைராய்டு சுரப்பிதான், நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. Thyreos என்றால் கிரேக்க மொழியில் கேடயம் என்று பொருளாம்.


உண்மையில் உடலை இது கேடயம் போலக் காப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று கூறும் மருத்துவர்கள் இதன் செயல்பாடுகளையும் விளக்குகிறார்கள்.

கரு உருவான பதினோராவது வாரம் தனது பணியைத் துவக்கும் தைராய்டு சுரப்பி, கருவிலேயே குழந்தையின் மூளை, உடல் உருவாக்கத்தில் முக்கியப் பங்கேற்கிறது. நாம் பிறந்த பிறகு நமது வளர்ச்சியையும் ஒழுங்குபடுத்தி, பருவமடைதல், மீண்டும் கருத்தரித்தல் மற்றும் கருவளர்தல் என மனிதச்சங்கிலி அறுபடாமல் பார்த்துக் கொள்கிறது என்பதாலேயே இதனை மாஸ்டர் கிளாண்ட் என அழைக்கின்றனர் நாளமில்லா சுரப்பி நிபுணர்கள்.

இந்த மாஸ்டர் கிளாண்டில் ஏற்படும் வீக்கத்தை, "முன்கழுத்து கழலை" அதாவது Goiter என்று அழைக்கும் மருத்துவ உலகம், இந்தத் தைராய்டு தனது வேகத்தை குறைத்து நமது உடல் எடையைக் கூட்டுவதை 'ஹைப்போதைராய்டிசம்' (Hypothyroidism) என்றும், இந்தச் சுரப்பி தறிகெட்டு வேகமாக ஓடுவதை "ஹைப்பர்தைராய்டிசம்" (Hyperthyroidism) என்றும் கூறுகிறது.

இவற்றில் குறைந்தநிலையான ஹைப்போதைராய்டிசம் நமக்குப் பரிச்சயமான ஒன்றாக இருப்பதால், அதிகம் சுரக்கும் நிலையைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

பெண்களில் அதிகம் காணப்படும் இந்த தைராய்டு அதிக சுரப்பு நிலை 'க்ரேவ்ஸ் டிசீஸ்' (Graves' Disease) எனப்படுகிறது. அதாவது, சுரப்பியும் அதிகம் சுரந்து, அதற்கு எதிரான ஆன்டிபாடிகளும் அதிகம் சுரப்பதால், இது வண்டி தானே ஓடி, தானே மோதிக் கொள்வதைப்போன்ற ஆட்டோ இம்யூன் நிலை. அதாவது தன்னுடல் தாக்குநோயாக மாறுகிறது என்று கூறும் மருத்துவர்கள், இந்த நிலையில் அதிகப் பசி, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, அதீத எடையிழப்பு ( 20 கிலோ வரை), படபடப்பு, நடுக்கம், அதிக வியர்வை, மாதவிடாய் பிரச்னைகள், தூக்கமின்மை போன்ற அறிகுறிகளுடன் முடி கொட்டுதல், முன்கழுத்து வீக்கம், கண்களில் வீக்கம், மூச்சுத்திணறல், இருதய செயலிழப்பு ஆகியன ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

தைராய்டு டெஸ்ட் மற்றும் தைராய்டு ஸ்கேனிங் போன்ற எளிய பரிசோதனைகள் மூலமாக, ஹைப்பர்தைராய்டிசம் உறுதிபடுத்தப்பட்டால், நோயின் தன்மை மற்றும் அதன் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகள் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சையின் மூலமாகவோ நோயை நன்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனாலும், அரிதாக சிலருக்கு ஏற்படும் மிதமிஞ்சிய தைராய்டு சுரப்பு, தைராய்டு ஸ்டார்மை ஏற்படுத்தி, பெரும் பாதிப்புகளோடு உயிரிழப்பு வரைக்கூட போகலாம் என்பதால், இந்த ஹைப்பர்தைராய்டிசம் நிலையில் கவனம் மிகவும் அவசியம்.

இந்த தன்னுடல் தாக்குநோய் என்பது மரபணுக்கள் மூலமாக, குடும்பங்களில் சகோதர சகோதரிகளிடம் காணப்படுகிறது என்பதால், இதைப் பற்றிய புரிதலும், மற்ற தன்னுடல் தாக்குநோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் இங்கு அவசியமாகிறது.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதும், பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், கேரட்கள் மற்றும் கனிகளையும், தயிரையும் சேர்த்துக் கொள்வதுடன் வைட்டமின் டி தரும் சூரிய வெளி நடை இவர்களுக்கு மிக உதவும்.

உண்மையில் உலகெங்கும் இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் தைராய்டு சுரப்பி பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும், இவர்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கே இதைக் குறித்த விழிப்புணர்வு உள்ளது என்கிறது சர்வதேச தைராய்டு அமைப்பு. திடீரென எடை கூடினால் மட்டுமல்ல, திடீரென எடை குறையும்போதும் தைராய்டு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

குறிச்சொற்கள் #தைராய்டு #தொண்டைப்பகுதியில்_கட்டி #ஹைப்போதைராய்டிசம் #ஹைப்பர்தைராய்டிசம் #Hypothyroidism #Hyperthyroidism #Thyroid #Thyroidism
Topics tagged under thyroid on ஈகரை தமிழ் களஞ்சியம் Thyroid

கழுத்துப் பகுதியில் கட்டி, அதீத உடல்பருமன் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு அது தைராய்டு பிரச்னை எனச் சொல்லிக் கேட்டிருப்போம். தைராய்டு குறித்த முழுமையான விழிப்புணர்வு பரவலாக ஏற்படவில்லை. தைராய்டு பிரச்னை ஏன் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது?


தைராய்டு கிளாண்ட்



``நமது உடலில் பிட்யூட்டரி கிளாண்ட், அட்ரீனல் கிளாண்ட், கயைணம் என பல எண்டோகிரைன் கிளாண்ட்கள் (Endocrine gland) இருக்கின்றன. அவற்றில் தைராய்டு கிளாண்டும் ஒன்று. இது நமது கழுத்துப்பகுதியில் சுவாசக் குழாய்க்கு மேலேயும், பேச்சுக்குழாய்க்கு கீழேயும் இருக்கும். இது ரைட் லோப், லெஃப்ட் லோப், இஸ்துமஸ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

தைராய்டு கிளாண்டின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உணவு செரிமானம், இதய செயல்பாடு என மனித உடல் இயக்கத்திற்கு அடிப்படை இந்த தைராக்சின் ஹார்மோன்.

பெண்களுக்கே அதிக பாதிப்பு



தைராய்டு தொடர்பான பாதிப்புகள் ஆண்களைவிட, பெண்களுக்கே அதிக அளவு ஏற்படுகிறது. தைராய்டு கிளாண்டில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படலாம். முதலாவது, அதன் செயல்திறனில் ஏற்படும் பாதிப்பு. செயல்திறன் பாதிக்கப்பட்டால் ஹார்மோன் சுரப்பு குறையலாம், அல்லது அதிகரிக்கலாம். ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் அதனை ஹைப்போதைராய்டிசம் என்றும், அதிகமான ஹார்மோன் சுரந்தால் அதை ஹைப்பர்தைராய்டிசம் என்றும் கூறுவார்கள். செயல்திறன் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

பெரும்பாலானோருக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அயோடின் குறைபாடு. தைராக்சின் உற்பத்திக்கு அயோடின் சத்து அத்தியாவசியம். இந்தக் குறைபாட்டை போக்கவே அயோடின் கலந்த உப்பை எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே கருத்தரித்த பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடற்சோர்வு, முகம், கை,கால்கள் வீக்கம், மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் ஏற்படுவது ஆகியவற்றை இந்த ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் எனலாம்.

என்ன பாதிப்பு ஏற்படும்?



ஹைப்பர் தைராய்டிச பாதிப்பு ஏற்பட்டால் உடல் எடை குறைவு, கை நடுக்கம், வயிற்றுப்போக்கு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், கண் வெள்ளைவிழி இமைகளுக்கு வெளியே வருதல் ஆகிய பிரச்னைகள் எற்படும். இவை தைராய்டு கிளாண்டின் செயல்பாடு பாதிப்பதால் ஏற்படும் விளைவுகள். இரண்டாவது, தைராய்டு பகுதியில் கட்டிகள் ஏற்படலாம். இதனை நாடியுல்ஸ் (Nodule) எனக் கூறுவார்கள். இதில் 85% கட்டிகள் சாதாரண கட்டிகளாக இருக்கும். 15% கேன்சர் கட்டிகளாக இருக்க வாய்ப்புள்ளது. கேன்சர் தவிர்த்த மற்ற கட்டிகள் வர ஹைப்பர் அல்லது ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

கழுத்தில் வீக்கம் அல்லது கட்டியுடன் வந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டிகள் சிலருக்கு நெஞ்சுக்கூடு வரை கூட நீண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். இவை பெரும்பாலும் வெளியே தெரியாது. 3 சென்டி மீட்டருக்கு மேல் தைராய்டு கட்டி வளர்ந்தால் அது வெளியே தெரிவதற்கான வாய்ப்பு உள்ளது. தைராய்டு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மூன்று முக்கிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதில் முதன்மையானது தைராய்டு புரொஃபைல் டெஸ்ட், டி.எஸ்.எஸ், டி3, டி4 என்ற பரிசோதனைகள் மூலமாக தைராய்டு கிளாண்ட் சரியாகச் செயலாற்றுகிறதா என்பது கண்டறியப்படும். இரண்டாவதாக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கட்டியின் அளவு, கட்டியின் எண்ணிக்கை, சாதாரண கட்டியா அல்லது கேன்சர் கட்டியா, கேன்சர் கட்டியாக இருந்தால் அருகே உள்ள நெறிக்கட்டிகளுக்கு பரவியிருக்கிறதா என்பது உறுதி செய்யபடும். தைராய்டு கட்டி நெஞ்சுக்கூடு வரை நீண்டிருந்தால் சி.டி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

உணவுப் பழக்கத்தால் கட்டுப்படுத்தலாம்



மூன்றாது பரிசோதனை, அக்கட்டியில் இருந்து ஊசி மூலம் செல்களை எடுத்து அதனை ஆய்வு செய்வார்கள். இதன் மூலம், ஏற்பட்டுள்ள கட்டி கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது கண்டறியப்படும். இந்த மூன்று பரிசோதனைகள், மற்றும் கைகளால் தொட்டுப்பார்த்து கட்டியின் தன்மையைக் கண்டறிந்த பிறகே அது கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது உறுதி செய்யப்படும். சாதாரண கட்டியாக இருந்து, அதன் அளவு 3 சென்டி மீட்டருக்கு கீழே இருந்து, அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. அதைத் தொடர்ந்து கண்காணித்தாலே போதுமானது. உணவுப் பழக்கத்தின் மூலம் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சாதாரண கட்டியாக இருந்து 3 சென்டி மீட்டருக்கு மேல் வளர்ந்து, பிரச்னை ஏற்பட்டால் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

கேன்சர் கட்டியாக இருந்தால் கட்டாய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தைராய்டில் ஏற்படும் கட்டி வளர்ந்து, பேச்சுக்குழாயில் நரம்புகளை பாதித்து குரலில் மாற்றம் ஏற்பட்டால் அது கேன்சர் கட்டியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பாப்பிலாரி கார்சினோமா, ஃபாலிக்யூலர் கார்சினோமா, மெடியுலரி மற்றும் அனபிளாஸ்டிக் என நான்கு வகையான கேன்சர்கள் தைராய்டில் ஏற்படலாம். இதில் 80 சதவிகிதம் கேன்சர் பாப்பிலாரி மற்றும் ஃபாலிக்யூலர் கார்சினோமா பாதிப்பு தான் ஏற்படுகிறது.

அயோடின் சத்து அவசியம்



பாப்பிலாரி, ஃபாலிக்யூலர் கேன்சர் முறையான அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ அயோடின் அபிலேஷன் சிகிச்சை மூலம் 90 சதவிகிதத்திற்கும் மேல் நல்லபடியாக குணப்படுத்த முடியும். மீதமுள்ள கேன்சர்களில், வேறு உறுப்புகளுக்கு கேன்சர் பரவினால் அதனை குணப்படுத்த முடியாது. ஆனால் தைராய்டு கேன்சரில், வேறு உறுப்புகளுக்கு கேன்சர் பரவினாலும் சிறந்த சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

தைராய்டை தவிர்க்க சீரான அயோடின் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். மேலும், தொண்டைப்பகுதியில் கட்டி போல் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு தைராய்டு பிரச்னையைத் தீர்க்கலாம்".

குறிச்சொற்கள் #தைராய்டு #தொண்டைப்பகுதியில்_கட்டி #ஹைப்போதைராய்டிசம் #ஹைப்பர்தைராய்டிசம் #Hypothyroidism #Hyperthyroidism #Thyroid #Thyroidism

Back to top