புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேமிப்பு மற்றும் முதலீடுகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 19, 2013 7:43 pm

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்..

பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர்.
எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர். தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.

2. காப்பீடு திட்டங்களை நாடலாம். உடல்நல காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஏதாவது நோயால் அவதியுறும் போது இவ்வகை திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும். கூடுதலாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பணத்தை போட்டால், பணத்தை திரும்பப் பெரும் திட்டத்தின் (money-back policy) மூலம் நிறைய பயனை அடையலாம். உதாரணமாக மேக்ஸ் நியூயார்க் லைஃப் திட்டத்தின் கீழ் 6 வருடங்களில் முதலீடானது இரட்டிப்பாக்கப்படும்.

3. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

4. நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

5. பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

6. பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் சிறந்த பயனை பெறலாம். ஆனால் நிபுணர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.

7. ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

8. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

9. வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

10. அஞ்சலகத்தில் உள்ள பல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு மொத்தமாக சேமித்த தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த, மாதா மாதம் அதற்கு வட்டி கிடைப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பணமும் திரும்பக் கிடைக்கும்.

11. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 19, 2013 8:02 pm

பயனுள்ள பதிவு. சம்பாதிக்கும் பெண்களுக்கு.. எங்களைப் போன்றவர்களுக்கு முதலில் சம்பாதிக்க வழி சொல்லுங்க பாலாஜி.



சேமிப்பு மற்றும் முதலீடுகள் Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் Tசேமிப்பு மற்றும் முதலீடுகள் Hசேமிப்பு மற்றும் முதலீடுகள் Iசேமிப்பு மற்றும் முதலீடுகள் Rசேமிப்பு மற்றும் முதலீடுகள் Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் Empty
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Mar 19, 2013 9:40 pm

பயனுள்ள பதிவு பதிந்த பாலஜிக்கு பாராட்டுக்கள் அன்பு மலர்



சேமிப்பு மற்றும் முதலீடுகள் 154550சேமிப்பு மற்றும் முதலீடுகள் 154550சேமிப்பு மற்றும் முதலீடுகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சேமிப்பு மற்றும் முதலீடுகள் 154550சேமிப்பு மற்றும் முதலீடுகள் 154550சேமிப்பு மற்றும் முதலீடுகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 11:02 am

Aathira wrote:பயனுள்ள பதிவு. சம்பாதிக்கும் பெண்களுக்கு.. எங்களைப் போன்றவர்களுக்கு முதலில் சம்பாதிக்க வழி சொல்லுங்க பாலாஜி.

முனைவர் அவர்களுக்கு தெரியாத விசயம் ஒன்றும் இல்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 11:07 am

நல்ல பதிவு படித்து அனைவரும் பயன்பெறுங்கள்




சேமிப்பு மற்றும் முதலீடுகள் Mசேமிப்பு மற்றும் முதலீடுகள் Uசேமிப்பு மற்றும் முதலீடுகள் Tசேமிப்பு மற்றும் முதலீடுகள் Hசேமிப்பு மற்றும் முதலீடுகள் Uசேமிப்பு மற்றும் முதலீடுகள் Mசேமிப்பு மற்றும் முதலீடுகள் Oசேமிப்பு மற்றும் முதலீடுகள் Hசேமிப்பு மற்றும் முதலீடுகள் Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் Mசேமிப்பு மற்றும் முதலீடுகள் Eசேமிப்பு மற்றும் முதலீடுகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 12:37 pm

அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 21, 2013 1:31 pm

கடன் பத்திரங்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள்


சென்னை: பாண்ட் (Bond) என்பது கடன் பத்திரங்கள் ஆகும். பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசின் பொதுப் பணித்துறை ஆகியவை இந்தக் கடன் பத்திரங்களைப் பொது மக்களிடையே பணம் திரட்டுவதற்காக விற்கின்றன. இதை முதலீட்டாளர்கள் கடன் பாதுகாப்பிற்காக வாங்குகின்றனர். இந்தப் பத்திரங்களை வைத்திருப்போருக்கு அந்தக் காலக்கட்டங்களில் நிறுவனங்கள் அல்லது அரசு வட்டி செலுத்தும். பெரும்பாலும் இந்த வகைப் பத்திரங்களில் ரிஸ்க் ஆதிகம் இருக்காத காரணத்தினால் முதலீட்டாளர்கள் இதனை முதலீட்டுக் காலத்தில் வட்டி பெறவும் வரி விலக்குப் பெறவும் உபயோகிக்கின்றனர்.
இந்தப் பத்திரங்களின் விலை வட்டிக்கு நேர் எதிரானது. அதாவது வட்டி அதிகம் இருப்பின், விலைக் குறைவாகவும், வட்டிக் குறைவாக இருப்பின் விலை அதிகமாகவும் இருக்கும்.
பல்வேறு வகையான பத்திரங்களைப் பற்றி பார்ப்போம்:

1. பொதுப்பணித்துறையின் பத்திரங்கள்: இவை அரசு துறைகள் அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறைகளின் பத்திரங்கள். பெரும்பாலும் இவை இடைக் கால அல்லது நீண்ட காலப் பத்திரங்களாகவே இருக்கும். இந்தப் பத்திரங்கள் உறுதிமொழி பத்திரங்கள், 5 முதல் 7 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் இருக்கும்.

2. பெரிய நிறுவனப் பத்திரங்கள்: இவை பெரிய நிறுவனங்கள் தரும் பத்திரங்கள். இந்தப் பத்திரங்களுக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டித் தரும். முதிர்வு காலத்தில் முதலுடன் சேர்ந்து முதிர்வு கால வட்டியையும் தரும்.

3. நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பத்திரங்கள்: இந்தப் பத்திரங்கள் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் தருவதால் மிகவும் கட்டுப்பாடுகளுடன் நல்ல திட்டங்கள் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் இந்தப் பத்திரங்களை பெரிய அளவிலான முதலீட்டளார்கள் வாங்குவார்கள்.

4. வரி சேமிக்கும் பத்திரங்கள்: வரி விலக்குப் பெறத் தனி நபர்கள் வாங்கும் பத்திரங்கள் இவை. இவற்றின் முக்கிய நோக்கம் வரி விலக்கு மற்றும் நீண்ட காலச் சேமிப்பு.

5. ஜீரோ கூப்பன் பத்திரங்கள்: இந்த வகைப் பத்திரங்களில் கூப்பன் தொகை அதாவது வட்டித் தொகை இருக்காது. ஆனால் நல்ல சலுகை விலையில் விற்கப்படும்.

6. மாற்றத்தக்கப் பத்திரங்கள்: இந்தப் பத்திரங்களை முதலீட்டளார்கள் பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம், ஆகவே இந்தப் பெயர்.

7. சர்வதேசப் பத்திரங்கள்: இவை வெளிநாட்டுப் பத்திரங்கள். இவை அந்தந்த நாட்டின் கரன்சியில் வழங்கப்படுகிறது. இது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பாகும்.

பத்திரங்களைப் பற்றி:

மதிப்பு(ஃபேஸ் வால்யு): பத்திரம் முதிர்வின் போது முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் தரும் தொகையையே ஃபேஸ் வால்யு என்பார்கள். புதிதாக விற்கப்படும் பத்திரங்கள் இந்தத் தொகையிலே விற்கப்படும். இப்படி விற்கும் போது அதை டிரேடிங் அட் பார் (trading at par) என்று கூறுவர். அதே கூடுதல் மதிப்பில் விற்றால் அதைப் பிரீமியம் விலை என்றும் குறைவாக விற்றால் அதை சலுகை விற்பனை என்றும் கூறுவர்.

முதிர்வு தேதி: முதலீட்டாளரின் அசல் தொகைத் திருப்பி வழங்கப்படும் நாள்.

முதிர்வுக்கான காலம்: இது முதிர்வு தேதிக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசம். நாளுக்கு நாள் இந்த வித்தியாசம் குறைந்து கொண்டே இருக்கும்.

கூப்பன் தொகை: பத்திரங்களின் காலத்தில் கொடுக்கப்படும் வட்டியைக் கூப்பன் தொகை என்று கூறுவார்கள். இந்தத் தொகை கொடுக்கப்படும் கால அவகாசத்தைப் பத்திரங்கள் முதலில் கொடுக்கப்படும் போதே நிர்ணயத்துவிடுவார்கள். பெரும்பாலும் இது வருடத்தில் இரு முறையாக இருக்கும்.

சில பத்திரங்களுக்கு கூப்பன் தொகைக்கு பதிலாக கூப்பன் மதிப்பைப் பத்திர மதிப்பின் சதவீதமாக அளிப்பார்கள். இதைக் கூப்பன் விலை என்று குறிப்பிடுவார்கள்.

இந்த முறையில் வருடத்தில் வரும் கூப்பன் தொகையைப் "மதிப்பு(ஃபேஸ் வால்யு)" X "கூப்பன் விலை" என்று கணக்கீடு செய்வார்கள். இந்தத் தொகை வருடத்தில் எத்தனைத் தவணைகளோ அதற்கு ஏற்றவாறு கூப்பன் தொகை முதலீட்டாளர்க்குச் செலுத்தப்படும்.
சேமிக்கப் பல வழிகள், இந்தப் பத்திரங்கள் ரிஸ்க் இல்லாத நிலையான வட்டித் தரும் முதலீடு மற்றும் சேமிக்கும் வழியாகவும் வாய்ப்பாகவும் கருதலாம். என்ன பத்திரம் வாங்கலாமா?

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 21, 2013 1:40 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி ஜி.!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 23, 2013 9:46 pm

வைப்புத் தொகைக்கு அதிக வட்டி கொடுக்கும் 7 வங்கிகள்

சென்னை: 2103-2014ம் ஆண்டுக்கான வரியைச் செலுத்த மற்றும் வரி செலுத்துவதில் விடுபட்டு, வரியை சேமிக்க இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் வரியை சேமிக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கு வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவு வழி வகுக்கிறது. வரியை சேமிக்க விரும்பினால் வங்கிகள் வழங்கும் வருமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு வங்கியும் பல்வேறு வகையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

இவ்வாறு வருமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எந்தெந்த வங்கிகள் எல்லாம் அதிக வட்டியை வழங்குகின்றன என்று பார்ப்போம்.

பாரத் கோஆப்பரேட்டிவ் வங்கி

இந்த வங்கி தனது பாரத் டெபாசிட் டாக்ஸ் பெனிபிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 10 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்தால் வரி செலுத்துவதில் இருந்து விடுபட்டு வரியை சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற வருமான வரி சட்டம் பிரிவு 80சி அனுமதி அளித்திருக்கிறது.

அப்யுதயா கோஆப்பரேட்டிவ் வங்கி

இந்த வங்கி வழங்கும் வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு தொகைக்கு 9.75 சதவீத வட்டியை வழங்குகிறது. முதியவர்களுக்கும் இதே வட்டியை வழங்குகிறது.

சிட்டி யூனியன் வங்கி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி, வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.50 சதவீத வட்டியை வழங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு நமது சேமிப்பை இந்த திட்டத்தின் கீழ் அதிக வட்டியுடன் பாதுகாத்து வைக்க முடியும்.


டெவலப்மென்ட் கிரடிட் வங்கி

மும்பையைச் சேர்ந்த இந்த வங்கி வரியைச் சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.30 சதவீத வட்டியை வழங்குகிறது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்

இந்த வங்கி 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது. வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, அவர்களின் தேவைக்கேற்ப மாத வட்டி, காலாண்டு வட்டி, அரையாண்டு வட்டி, ஆண்டு வட்டி என்று பல்வேறு வகையில் வட்டியை வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்

இந்த வங்கி வழங்கும் டாக்ஸ் சேவர் டெப்பாசிட் திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த வங்கி மட்டுமே வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்திற்கு அதிக வட்டியை வழங்குகிறது.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

இந்த வங்கியும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாகும். வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு இந்த வங்கி 9.05 வட்டியை வழங்குகிறது.

மேற்கூறிய வங்கிகளின் வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தால் பணமும் பத்திரமாக இருக்கும்,வட்டியும் அதிகமாகக் கிடைக்கும். அதே நேரத்தில் வரி செலுத்துவதிலிருந்து விடுபடவும் முடியும்.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 23, 2013 10:15 pm

இங்க கடன்ல வண்டி ஓடிக்கிட்டு இருக்குங்கோ... பைத்தியம்


பயனுள்ள தொடர் பதிவு பாலாஜி. நன்றி நன்றி
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



சேமிப்பு மற்றும் முதலீடுகள் Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் Tசேமிப்பு மற்றும் முதலீடுகள் Hசேமிப்பு மற்றும் முதலீடுகள் Iசேமிப்பு மற்றும் முதலீடுகள் Rசேமிப்பு மற்றும் முதலீடுகள் Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக