புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
68 Posts - 53%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
15 Posts - 3%
prajai
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
9 Posts - 2%
jairam
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எனும் காவியம்


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:05 am

First topic message reminder :

- சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:12 am

தலைவனின் பதில் கேட்டுப் பூரித்த மங்கையவள் மனதில் ஒரு சிறு சந்தேகம், தனது இதயத்தை மலையின் உச்சிக்கும், தன்னை அதன் அடிவாரத்தில் இருக்கும் மனிதனுக்கும் ஒப்பிட்ட அந்தத் தலைவனின் நிலை உயர்ந்து வசதி பெருகி விட்டால், ஒருவேளை தன்னை மறந்து விடுவானோ?தாம் நெருங்கி விட்டால் தமக்குள் இருக்கும் அந்தஸ்து பேதமே தம்மைப் பிரித்து விடுமோ? துடிக்கும் இதயத்துடன் வினவுகிறாள்!

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ?
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ?


திடுக்கிட்டு விட்டான் அவன்! என்ன சந்தேகம் வந்து விட்டதோ தலைவிக்கு, தனது காதலின் மீது? அறுதியாகக் கூறுகிறான் தலைவன்

காலம் மாறினால் காதலும் மாறுமோ?
மாறாது! மாறாது இறைவன் ஆணை


கண்னுக்குத் தெரியாமல் காவல் இருக்கும் அந்த அனைவருக்கும் பொதுவான இறைவனைத் துணைக்கு அழைக்கிறான்.

மகிழ்ச்சியுடனே அவளும் இணைகிறாள்

என்றும் மாறாது! மாறாது! இறைவன் ஆணை

திரும்பவும் அவளுக்குத் தீர்மானமாகச் சொல்கிறான்.

இந்தச் சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி
இன்னும் சேர நாள் பார்ப்பதேனடி?
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
தோகையில்லாமல் வேலன் ஏதடி?


மிகவும் துணிச்சலாக மனதோடு சேர்ந்து விட்ட நீ என்னுடன் சேர்வதற்கு நாள் பார்க்க வேண்டுமா என்ன? என்னுடன் சேர்ந்து நின்றால் பிறகென்ன பிரிவு எனக் காதலன் எனும் அதிகாரத் தோரணையில் காதலிக்கு ஆறுதலளிக்கிறான்.எப்படி இருக்கிறது கவிஞரின் வார்த்தைப் பூமழை. அழகாகத் தோய்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.அடுத்து தத்துவ ஜாலத்தில் நனைவோம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:13 am

கண்ணதாசனின் தமிழ் வைப்புப் பெட்டகத்திலிருந்து மற்றுமோர் விலை மதிப்பற்ற தமிழ்ச் சரத்தை எடுத்து நுகர விழைகின்றேன். கடந்த இதழில் காதலை அலசிய நாம் இந்த இதழில் அவரின் தத்துவ முகத்தைக் கொஞ்சம் உற்று நோக்குகிறோம்.

பனித்திரை எனும் திரைப்படத்திற்காக, ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்புக்கு P.B. ஸ்ரீனிவாஸ் குரல் கொடுக்கக் கண்ணதாசன் அமைத்திருந்த இந்த அருமையான தத்துவப் பாடலானது மனிதனின் நிலையற்ற குணத்தை மிகவும் அழகாக எடுத்தியம்பும் ஒரு இனிய கீதமாகும்.

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்.

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையென்னும்
பனித்திரையாலே மூடுகிறான்.



மனிதனின் சாதாரண வாழ்க்கையைத் தெளிவாக வார்த்தைகளில் வடித்து விடுகிறார் கவியரசர். மனிதன் பிறப்பதுவும் பின் வளர்வதும் சாதாரணமானதுவே. அவன் அறிவு விஸ்தரித்து வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து மற்றவர்க்குப் பயனுள்ள வகையில் வாழ்கின்றானோ இல்லையோ, அவன் உருவத்தில் வளர்வது மட்டும் எதுவிதத் தடங்கலுமின்றி நிகழ்கின்றது. இதை மிகவும் அழகாக விளக்கியிருக்கிறார் கவிஞர்.

எதைக் கண்டாலும் பயப்படும் மனிதன் சகலத்தையும் சந்தேகக் கண் கொண்டு நோக்குவதால் அவனால் நிம்மதியாக வாழ முடிவதில்லை. இயற்கையெனும் இறைவன் கொடுத்த அடிப்படி அறிவைக்கூட ஆதவனைக் கண்டதும் ஓடிப் போகின்ற மிகவும் மெல்லிய பனித்திரை போன்ற மடமையால் மறைத்து விடுகின்றான்.

மடமையைக் கவியரசர் பனித்திரைக்கு ஒப்பானதென்கிறார். எப்படி என்கிறீர்களா காலைக் கதிரவனின் வீச்சு அதிகரிக்கப் பனித்திரை இருக்குமிடம் தெரியாமல் மறைந்து விடுகிறது, அதே போலத்தான் மடமையும் அறிவெனும் ஆதவன் முன்னால் இருந்த இடம் தெரியாமல் மறையக் கூடியது ஆனால் அதை அழிக்கக் கூடிய அந்த அறிவின் வீச்சைக் கூட்டுவது எமது கரங்களிலேயே இருக்கிறது என்கிறார்.

மேலும் பார்ப்போம்!

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறுநாள் அவனே ஏசுகிறான்.


மனிதனின் நிலையற்ற தன்மையை, மனதின் பச்சோந்தித் தன்மையை வார்த்தை ஜாலங்களால் வர்ணிக்கும் கவியரசரின் அற்புதமான கருத்துச் சரமிது. ஒரு காலகட்டத்தில் மாகாகவி பாரதி கூடப் பெண்ணினத்தின் மீது கொண்ட அபிப்பிராயம் மிகச் சாதாரணமானதுவே. ஆனால் அறிவுச் சுடறான பாரதியின் அறிவுக் கனலின் வெப்பம் அவரின் மனதைத் திரையிட்டிருந்த பனித்திரையை எரித்துச் சாம்பலாக்கியது. மனிதர்களின் மனோபாவத்தை நான்கே வரிகளில் நயமாகப் படம் பிடித்துக் காட்டி விட்டார் கண்ணதாசன் எனும் தமிழ்க் கவி.

அடுத்துப் பார்ப்போமா?

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:14 am

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றியெனுங் குணம் நிறைந்திருக்கும்,
நரியாய் அவனே உருவெடுத்திருந்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்.


அப்பப்பா! மனிதனின் முன்னே நாயும் நரியும் சிறந்தவைகளாகத் தெரிகின்றதாம் கவிஞருக்கு. ஏன் தெரியுமா? அவனிடம் நன்றியெனும் அருங்குணம் அரும்பக்கூட இல்லையாம். தந்திரமுள்ளவனாகத் தனது வாழ்க்கையை வென்றெடுக்கக் கூடியவனா என்றால் அதற்குக் கூட லாயக்கில்லையாம். மனிதர்களில் சிலர் நடக்கும் முறைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறார் நம் கவியரசர்.

காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்,
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்.


ஒற்றுமை இருந்திருந்தால் மனிதன் எடுக்கும் அடிகள் ஒவ்வொன்றுமே வெற்றியின் சிகரத்தை நோக்கியே இருக்கும். ஆனால் நாம் பொறாமை பிடித்து அலைபவர்களாக அல்லவா இருக்கிறோம். காக்கையைப் பாருங்கள், முற்றத்தில் சிதரும் சோற்றுப் பருக்கைகளின் எண்ணிக்கை ஒன்றாக இருந்தாலும் கூடக் கூவித் தனது இனத்தை அழைத்து ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கிறதே! மனிதனைப் பாருங்கள்! சிரிக்கத் தோன்றுகிறதா?

காற்று வீசி நெருப்புக்குத் துணையாகிறது அந்த நெருப்பை அழிக்க முற்படும்போது நீர் அதை அணைத்து அழிவைத் தடுக்கிறது. இப்படிக் கடுகளவு பிரயோசனமாவது இருந்திருக்குமாம், மனிதன் இவைகளில் ஒன்றாய்ப் பிறந்திருந்தால். மிகவும் அழகாக வாழ்க்கையை உற்று நோக்கி அதற்குள் விளக்கம் தேடி மனிதனை நன்றாகவே வினவுகிறார்.

அடுத்தென்ன கூறுகிறார் எனப் பார்க்கலாம் வாருங்கள்!

ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்.


மனிதன் தனக்கு இறைவன் கொடுத்த அந்த வரப் பிரசாதமான ஆறாம் அறிவை உதரி எறிந்து விட்டு மிருகங்களை விட ஒரு கீழான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதைத் தமிழால் தொட்டுக் காட்டி மனதை அடகு வைத்து வாழும் மனிதர்க்கெல்லாம் சாட்டையடி கொடுக்கிறார் கவிஞர். மனித வாழ்க்கையை எத்துணை அழகாய்த் தத்துவ நோக்கில் தமிழால் தாலாட்டி எமது நினவுகளில் நீந்த விட்டிருக்கிறார் இந்தத் தத்துவச் சிற்பி. கவியரசரின் தத்துவ முகத்தைப் பார்த்த நாம் அடுத்தவாரம் ஆன்மீக ஆளுகையைப் பார்ப்போம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:15 am

காலனெனும் கொடியவன் தேவலோகத்தில் கானமிசைக்கக் கவியரசரின் உயிரைக் கவர்ந்தெடுத்துச் சென்றாலும் அந்தக் காவியத் தாயின் இளைய மகனின் நினைவுகள் தமிழ் நெஞ்சங்களில் கல்லில் செதுக்கப்பட்ட ஏடுகளே!

காதல் எனும் சுனையாடி, தத்துவம் எனும் மலையேற்றி இன்று சோகம் எனும் பாலவனத்துக்கு ரசிக உள்ளங்களை அழைத்து வந்திருக்கிறேன். . இவையனைத்தையும் இணைக்கும் பாலம் கண்ணனின் தாசனாகிய கண்ணதாசன் எனும் கவிதைப் பாலமே!


ஊனமுற்ற உள்ளங்களில் புரையோடிப் போயிருந்த சோகமெனும் புண் கொடுத்த வேதனைக்கு இந்தக் கவியரசன் தடவிய லேகியமோ தமிழ் எனும் பச்சிலையால் ஆக்கிய இதமான கவி எனும் களிம்பென்பேன்.

எங்கே இவரது சோகப் பாடல் ஒன்றினுள் குதிப்போமா!

பாத காணிக்கை எனும் படத்திற்காகச் சுசீலாவின் சுகந்தமான குரலில் ஒலித்த இந்தப் பாடல் காதல் வயப்பட்டுக் காதலனால் கை விடப்பட்ட ஒரு பெண்ணின் மனதினை வார்த்தைகளில் வடிக்கும் ஒரு பாடலாகும். காதல் என்பது மலரினைப் போன்ற மென்மையான ஒரு உணர்வாகும். அந்த மலர் கசங்கி, இதழ்கள் உதிரும் போது அவற்றின் வேதனை கலந்த நினைவுகளின் வேகம் அந்த மலரைத் தாங்கி நிற்கும் காம்பினுக்கே புரியும்.

பாடலின் அர்த்தத்தைச் சுவைக்க வாருங்கள்!

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறு பட்டு நின்றானடி.


காதல் வயப்பட்டு விட்டாள் அந்தக் கார்குழலாள். அவளுக்கு உலகினிலேயே அவளது காதலன் தான் பெரியவன், முக்கியமானவன். அந்தப் பேதையுள்ளத்திற்குச் சொந்தக்காரி தனது தலைவனின் முக்கியத்துவத்தை உணர்த்த அவனை எதற்கு ஒப்பிடுகிறாள்? அவளுக்குத் தெரிந்து இந்த உலகில் உயர்ந்த மாளிகை எட்டடுக்குக் கொண்டதாகும், அவளது தலைவன் அந்த எட்டடுக்கு மாளிகையின் உச்சியில் நிற்குமளவிற்கு உலகிலேயெ உயர்ந்தவன் என்று சொல்லும் அவள் நிலை என்ன?

அந்தத் தலைவன் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டானாம்.அந்தோ! அந்த எட்டடுக்கு மாளிகையும் இடிந்து தரைமட்டமாகி விட்டதே. அவளோடு அவள் மனதில் ஒன்றுபட்டு நின்ற அந்தத் தலைவன் இப்போது வேறுபட்டு நிற்கின்றானே! என் செய்வாள் அந்தப் பேதை?

சொல்ல வரும் கருத்தை, வேதனையின் நிகழ்வைக் காதல் தோல்வி தரும் ஏமாற்றத்தை அழகாய் அற்புதமான வரிகளாலே வார்த்தையாடிகியிருக்கிறார் வான்கவி.

அடுத்த நடையை ரசிப்போமா!

தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி - கண்ணில்
நீரோட விட்டானடி.


காதல் கொடுத்த இன்பச் சுனையில் நீராடிய அந்தக் கன்னிகை என்ன எண்ணத்திலிருந்தாள்? காதலனுடன் சேர்ந்திருந்தால் வேறென்ன வேண்டும் அவளுக்கு? உலகின் தலைவன் இறைவன் ஆலயத்தில் அவன் மகிழ்ந்திருப்பது எப்போது? உற்சவக் காலத்தே தேரொடும் நிகழ்வே இறைவனின் ஆனந்தத்தின் உச்சக் கட்டம், அத்தகைய ஒரு ஆனந்தத்தைத் தான் தன்னுடைய வாழ்க்கையிலே எதிர்பார்த்திருந்தாள் அந்தப்பாவை. ஆனால் நடந்தது என்ன?

அவளைத் தன்னந் தனியே விட்டுப் பிரிந்த தலைவன், அவளை வாழ்வோடு போராட வைத்து விட்டானே! அது மட்டுமா அந்தப் போராட்டத்தின் விளைவு, அவள் கண்கள் ஆறாகக் கண்ணீராகக் கொட்டிக் கொண்டிருக்கின்றதே!

நண்பர்களே! ஒரு மனிதன் தன் மனதினை ஆட்டும் உணர்வலைகளுக்குக் கூட மற்றவரை அழைத்துச் செல்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் நமது கவியரசரோ காதல் பிரிவு கொடுத்த வேதனையில் துடிக்கும் அந்தப்பெண்ணின் உணர்ச்சி எனும் ஆழியினுள் எம்மை மூழ்க வைத்து விடுகிறார்.

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி.


இவ்வளவு நேரமும் தனது காதலன் தன்னைக் கைவிட்டதைப் பற்றிச் சொன்னவள், இப்போது இறைவனின் லீலைகளைப் பற்றிச் சொல்கிறாள். ஆமாம் கையளவு உள்ளத்தை மட்டும் கொடுத்து விட்டு தனது தகுதிக்கு மீறிய காதலைத் தனக்கு கொடுத்தது, இறைவன் தன்னை விளையாடச் சொன்ன ஒரு வகை தானே என்கிறாள். குழந்தை விளையாடும் போது தானே மகிழ்ந்திருக்கும்? அதைப் போலவே இறைவனும் அவளுக்குக் காதல் எனும் விளையாட்டுப் பொருளைக் கொடுத்து விளையாடச் சொல்லி விட்டு, என்ன செய்து விட்டான் தெரியுமோ? அவனே அவளது வாழ்க்கையில் விளையாடி விட்டானாம். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

இன்னும் என்ன சொல்கிறாள் பார்ப்போம்!

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்தக்
காதல் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி.


காதலன் தன்னை விட்டுப் பிரிந்த கதை சொல்லி, இறைவன் தன் வாழ்வில் விளையாடிய வகை சொல்லிய அந்த அதிர்ஷ்டமற்ற கன்னியவள் இப்போது தத்துவமாக, தீர்மானமாக ஒரு கருத்தைச் சொல்கிறாள்.

உலகம் உள்ளவரை இந்தப் பாழாய்ப் போன காதல் ஒரு கன்னியர்க்கும் வரக் கூடாதாம். காதலைத் தெய்வீகமாகவும், தன் தலைவனைத் தனது உயிராகவும் கருதிய தனக்கே இறைவனது லீலையால் இத்தகைய நிலை வந்தது என்றால், பாவம் எந்தக் கன்னியருமே தன் கோலம் அடையக் கூடாது என்கிறாள். தானடைந்த சோகமே கன்னியர் காதல் தோல்வியால் அடையும் கடைசிச் சோகமாக இருக்கட்டும் என்று இரைஞ்சுகிறாள்.

இந்தக் கவிஞரின் கவித்துவ வரிகளைப் படித்து விட்டுக் கண்களை மூடிக் கொள்ளுங்கள், காதலை இழந்து கண்ணீருடன் காத்திருக்கும் அந்தக் கன்னி உங்கள் மனக்கண்னில் தெரியவில்லையா?

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:17 am

கண்ணதாசன் என்றோர் கவிதை ஊற்று சிறுகூடல்பட்டி எனும் மலையுச்சியிலிருந்து ஆரம்பித்துக் கரடு முரடான பாறைகளின் வழியே விழுந்து மாபெரும் தமிழ் நதியாக ஓடி, மாபெரும் ஆழியாம் இலக்கிய மகா சமுத்திரத்திலே கலந்தது. அது பாய்ந்து வந்த பாதை கரடு முரடாக இருந்தாலும் அதன் மென்மையான உணர்வுகள் அந்தப் பாறையில் தீட்டப்பட்டன. மனித மனம் எனும் அந்தப் பெட்டகத்தை இறுகப் பிணைத்திருந்த சோகச் சங்கிலியை அறுக்கக்கூடிய அளவிற்கு, அவரது தமிழ்க் கவிதைகள், திரை கானங்கள் கூர்மைப்படுத்தப் பட்டிருந்தன.


அவரது தமிழெனும் அமிழ்தினால் ஆக்கப்பட்ட அறுசுவை அனுபவிக்கும் ஆவலினால் நாம் இன்று எடுத்துப் பார்க்க விழைவது ஆன்மீக முகம்.

காதலெனும் கருவறையில் தத்துவமாய்ப் பிறந்து, சோகமாய் வளர்ந்து இப்போது ஆன்மிக வயதை அடைந்திருக்கிறது இந்த இலக்கியப் பயணம்.

திருவருட்செல்வர் எனும் திரைப்படத்திற்காக, கண்ணதாசன் இயற்றி, கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!
அவர் ஏதுமறியாரடி ஞானத் தங்கமே!


என்ன உண்மையான வார்த்தைகள். இறைவனின் தத்துவத்தை அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இதைத் தவிர அழகாக யாரால் விவரிக்க முடியும்? மனிதர்களின் அறியாமையை ஆன்மீகத்தின் அடிப்படையில் அலசியிருக்கிறார் கவியரசர்.

உண்மை தானே! ஆண்டவன் இருக்குமிடமான தமது மனங்களை விட்டு ஆலயம் ஆலயமாக ஏறி இறங்குவதால் என்ன பயன் என்கிறார் எமது அபிமானக் கவிஞர்.

உன்னையே நினைத்திருப்பான், உண்மையைத்தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே!


மனிதனின் அறியாமையை விளக்கிய கவிஞர், அடுத்த வரிகளில் ஆண்டவனோடு சம்பாஷணையை ஆரம்பித்து விடுகிறார். தான் வாழ்வினிலே பார்க்கும் ஒரு உண்மையான உள்ளத்தின் உண்மையான நிலையைக் கூறுகிறார். அவன் இறைவனைத் தான் எண்னிக்கொண்டிருக்கிறானாம், எல்லோரிடமும் வார்த்தைக்கு வார்த்தை உண்மையைப் பேசுகிறான், பாவம் அவனுக்கென விதிக்கப்பட்டிருக்கும் அந்த வாழ்க்கையின் படி, உண்மையைப் பேசியதால் அவன் ஊரையே பகைக்கும்படி ஆகிறது. உண்மையில் தெய்வம் உறைவான் என்கிறார்களே, பார்த்தாயா உன் பக்தனுக்கு நடப்பதை? என ஆண்டவனுடன் ஒரு அலசு அலசி விடுகிறார்.

எங்கே அடுத்த பகுதி என்ன சொல்கிறது? கவிஞரின் மனம் என்ன எண்ணுகிறது?

நஞ்சினை நெஞ்சில் வைத்து, நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே!
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே!


சரி, இறைவனையே நினைத்திருந்து, உண்மையே பேசியவன் ஊரைப் பகைத்த கதை சொன்ன கவியரசர், இப்போது காண்பதென்ன?

ஒரு காட்சியை உருவகப்படுத்திக் கொள்வோமா!

பசியினில் களைத்து உணவுக்கு எவ்வித வழியுமின்றி, ஒரு கடையோரத்தில் விழுந்து கிடந்த பாதி இட்லித் துண்டை எடுத்து உண்பவனைத் திருடன் என்று கடைக்காரன் துரத்துகிறான். அதை உண்டு முடிக்க முடியாமல் ஓடி ஒளிந்த அந்த ஏழையைப் பார்த்த இந்த மனிதன், "அடப்பாவமே இத்துணை கஷ்டமா, வா என் கூட" என்று வீட்டுக்கு அழைத்துச் சென்று கூடத்தில் உட்கார்த்தி, வடையும் தேநீரும் கொடுத்து விட்டு, இரு வருகிறேன் என்று வெளியே போய் அந்தக் கடைக்காரன் கொடுக்கிறேன் என்று கூறிய அஞ்சு ரூபாவுக்கு ஆசைப்பட்டு, அவனை அழைத்து வந்து இந்த ஏழையைப் பிடித்துக் கொடுக்கிறான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:17 am

அப்படியான ஒரு மனிதனின் இரட்டை வேட நாடகத்தைக் கண்டு, உண்மை கூறியவன் ஊருக்குப் பகையாகிறான், இரட்டை வேடமிடுபவன் சன்மானம் பெறுகிறான், என்று இந்த உலக நடப்பை ஆன்மீகப் பாணியில் இறைவனுக்கே கவியரசர் எடுத்துக் கூறும் அழகே தனி.

அடுத்தொரு முத்தை அள்ளி எடுப்போமா?

தொண்டுக்கென்றே அலைவான், கேலிக்கு ஆளாவான்
கண்டுகொள்வாய் அவனை ஞானத் தங்கமே!
அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே!


சதாரண மனிதரில் இரு வகைகளை எடுத்து மேற்கோள் காட்டி விட்டு, இப்போது தொண்டு செய்யும் தோழனைப் பற்றி வியாபிக்கிறார் எமது கவிப் பெருந்தகை. தொண்டு செய்வதற்காகவே தனது வாழ்நாளைக் கழித்து, தனக்கென எதுவும் தேடிக்கொள்ளாது, ஒரு பிச்சைக்காரனைப் போல் நடமாடும் ஒருவனைப் பார்த்துக் கேலியாய்ச் சி¡¢க்குமாம் உலகம் என்கிறார். ஆனால் உறுதியாக அவர் அந்த மனிதத்துவம் படைத்தவன் கடவுளின் பாதியாகி விடுகிறான் என்று மட்டும் கூறுகிறார்.

இனி அவர் எண்ணக் கடற்கரை ஓரத்தில் அடிக்கும் அலையைப் பார்ப்போம்!

பிள்ளையைக் கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே!
அவன் தான் தரணியைப் படைத்தாண்டி ஞானத் தங்கமே !


அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல இந்தக் கண்ணனுடைய தாசன் என்ன கூறுகிறான், மூன்றே வார்த்தைகளில், ஆண்டவனின் வடிவத்தை அழகாய் வடித்து விடுகிறார் இந்த வியத்தகு வித்தகர். அதாவது இந்த உலகத்தில் நடப்பவை அனைத்துக்குமே அவனே பொறுப்பு என்பதை என்ன அழகாகத் தமிழ் கொண்டு செதுக்கி விட்டார் இந்தச் சிந்தனைச் சிற்பி.

ஆமாம் பிள்ளையைக் கிள்ளுவதும் அவர்தானாம், அதாவது இந்த உலகத்தில் பிரச்னைகளின் ஆரம்பம் ஆண்டவன் தான். அது மட்டுமா? அழும் பிள்ளையைச் சாந்தப்படுத்துவதற்காகத் தொட்டிலை ஆட்டுவதும் அவன் தானாம். அவனால் ஆரம்பிக்கப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதும் ஆண்டவன் தானாம். பிரச்னைகளின் முடிவுக்கும் ஆரம்பத்திற்கும் காரண கர்த்தாவான அந்த இறைவனே தான் இந்தத் தரணியையும் படைத்தான் என்று கூறி அனைத்தும் இறைவனே என மிகவும் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பி விட்டார் கவியரசர் கண்ணதாசன்.

எப்படி எளிமையாக ஆன்மீகத் தத்துவத்தை அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைத்து எமது மொழியிலேயெ எமக்குப் புரியவைத்து விடுகிறார் கவியரசர்.

நண்பர்களே! காதல், தத்துவம், சோகம், ஆன்மீகம் எனக் கவிஞரின் பல முகங்களைப் பார்த்தோம், ரசித்திருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:18 am

தனியே எனக்கோர் இடம் வேண்டும் - தலை
சாயும் மட்டும் நான் அழ வேண்டும்
வானகம் போய்வர வழி வேண்டும் - எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும் !


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், மூத்த குடிமகன், ஜனநாயகக் காவலன் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மறைவையொட்டி, கவியரசர் கண்ணதாசன் வடித்த பல கண்ணீர்க் கவிதைகளில் ஒன்றின் ஆரம்பமே நான் மேலே கொடுத்துள்ள கவிதையின் பகுதி.


மறைந்த தலைவனின் சோகத்தை மறக்க முடியாது, ஒரு கண நேரமாவது அவன் நினைவுகளில் களித்திருப்போம் எனக் கவியரசு வார்த்தைகளல் தீட்டிய சோகச் சித்திரம்.

படித்துப் பாண்டித்தியம் பெற்றவரல்ல கண்ணதாசன் என்கிறார்கள். அப்படியானால் இந்த ஆற்றல் தமிழன்னை அவர்க்களித்த வரம் என்று தானே கொள்ள வேண்டும்! தலைவன் மறைந்து விட்டான், அதுவும் சாதாரணமான தலைவன் அல்லன் அவன். குழந்தைகளால் நேரு மாமா என அன்பாக அழைக்கப்பட்ட மனிதத்துவம் நிறைந்த மாமனிதர் அவர். அத்தகையவரை, தான் அபிமானத்தினால் அண்ணாந்து நோக்கும் அந்த அண்ணல் மறைந்த அந்தத் துயர் மிக்க நிகழ்ச்சியை வருணிக்க ஆரம்பிக்கும் விதத்தைப் பார்த்தால் விளங்கும் அவரின் விவேகம்.

முன்பொரு இதழில் பார்த்திருந்தோம். அந்தப் பாதையில் சில பாடல்களின் அருமையான பகுதிகளைப் பார்ப்போமா? பருவப் பெண் ஒருத்தி ஒரு காளையின் வசம் காதல் வயப்பட்டு விடுகிறாள். காதலில் களித்திருக்கும் கன்னியின் கண்களிலே தெரிவதெல்லாம் உலகின் அழகிய காட்சிகளென்பது நான் சொல்லியா தெரிய வேண்டும்?

ஆனந்தத்தின் உச்சியில் உலா வருபவளின் உதடுகளில் இருந்து பிறக்கும் பாடல்!

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே;
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே;
மொட்டு விரித்த மலா¢னிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே;
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே;


உன்னதக் கவிஞனின் உணர்ச்சிப் பெருக்கு! உதட்டின் அசைவால் உருவகிக்கும் வார்த்தை மாலை!

இயற்கையின் அழகை அந்தக் கன்னிப் பெண் எவ்வாறு அனுபவிக்கிறாள் என்பதை நான்கே நான்கு வரிகளில் எம்மனைவரையும் அனுபவிக்க வைக்கும் திறமையைத் தனது தனித்தன்மையாகக் கொண்டவர் கவியரசர்.

பறவை, வானம், மலர், காற்று எனும் இயற்கை படைத்த செல்வங்களின் ஆனந்தமான காட்சிகளால், காதல் வயப்பட்ட அந்தப் பெண்ணின் மனோபாவத்தைப் பாடலைக் கேட்கும் சாதாரண ரசிகனுக்கும் புரியக் கூடிய பாணியில் படைத்திருக்கிறார் கவியரசர்.

சரி, கன்னிப் பெண்ணின் காதல் நினைவுகளின் சங்கமத்தால் மலர்ந்த அந்தத் திரைகானத்தை விட்டு, காளையின் முற்றத்திற்கு வருவோம். பாசம் எனும் திரைப்படத்திற்காக அவர் எழுதிய பாடலிலிருந்து ஒரு பகுதியைப் பார்ப்போமே!

நேர் சென்ற பாதைவிட்டு
நான் சென்ற போது வந்து,
வாவென்று அள்ளிக் கொண்ட
மங்கை இல்லையா?


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:19 am

காளையவன் சந்தர்ப்ப வசத்தால் நேர் வழியை விட்டுத் தவறி ஒரு திருடனாகி விடுகிறான், ஆனால் அப்போது கூட மனிதத் தன்மை மிக்கவனாகத் திகழ்கிறான். அந்த மனிதனின் இதயச் சுத்தியைக் கண்ட கன்னியவள் அவனது இதயத்திற்குத் தன்னைத் தாரை வார்த்துக் கொடுப்பதோடு அவனையும் நேர்வழிப் பாதைக்குத் திருப்புகிறாள்.

தன்னுடைய வாழ்க்கைப் பாதையைக் காதலினால் எவ்வாறு தன் மனங்கவர்ந்த மங்கையின் உதவியோடு மாற்றியமைக்கிறான் என்பதை அழகாய் விவரிக்கிறார், அழியாப் புகழ் படைத்த கவிஞன் கண்ணதாசன்.

மேற்குறிப்பிட்ட வரிகளின் அர்த்ததின் ஆழத்தை அளந்து பாருங்கள்!

அவன் கூறுகிறான் தான் நேர் சென்ற பாதையை விட்டு விலகி நடந்தானாம், அப்போது அவனது தலைவி அவனை வாவென்று அள்ளி அணைத்துக் கொண்டாளாம். புதைந்திருக்கும் பொருள் கண்டீர்களா?

இதன் மறைபொருள், அவன் திருடன் என்று தெரிந்தும் அவள் காதலித்தாள். ஏன் காதலித்திருக்க வேண்டும்?

அவனது உண்மையான இரக்க சுபாவமும், மனிதத் தன்மையும் புரிந்தவளாக அவள் இருக்கிறாள். அதனால் தான் அவனை அணைத்துத் திருத்திக் கொண்டாள்.

கவியரசரின் தமிழ் ஒரு புதை சேறு, அதற்குள் அகப்பட்டுக் கொண்டால் அமிழ்ந்து போக வேண்டியது தான். ஆனால் சாதாரணப் புதை சேற்றினுள் அகப்பட்ட ஒருவன் "ஐயோ! நான் சாகப் போகிறேனெ" என்ற கவலையுடன் புதய ஆரம்பிப்பான். ஆனால் கவியரசரின் தமிழ்ப் பாடல்கள் எனும் இந்தப் புதை சேற்றினுள் நுழைவது முற்றிலும் மாறுபட்டது.

"கடவுளே இந்த அழகிய தமிழ் எனும் புதை சேற்றினுள் என்னைச் சிக்கி விட்டதற்காக நன்றி" எனும் மகிழ்வுடன் புதைய ஆரம்பிப்போம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:20 am

நாத்திகவாதம் நயமாகப் பேசியவர்தான் கவிஞர். ஆண்டவனேயில்லை என்று அடித்துச் சொன்னவர் தான் இந்தக் கவி மன்னன். பகுத்தறிவுவாதியெனில் படைத்தவனென்று ஒருவனில்லை பாரில் உள்ள மானிடர் நீவிர் செவி சாய்த்திடுவீர் என மிகப் பாங்காக எடுத்துக் கூறியவர்தான் கண்ணதாசன்.

ஆனால்!

அவர் கையால் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப்பட வேண்டும் என்று அந்த ஆண்டவன் இட்ட கட்டளையோ என்னவோ, ஆன்மீகவாதத்தினுள் ஆழத் தன் காலை வைத்தார் கவிஞர். அவரது சுயசரிதத்தைப் படிக்கும் போது, அவரது மனமெனும் நீரோட்டத்தின் தெளிவுக்குக் காரணம் ஆன்மீக அனுபவமே என்பது எமக்குத் தெளிவாகும்.



கவிஞரின் வார்த்தைகளிலேயே, "நான் ஆன்மீகவாதியாக வேண்டும் என்பது ஆண்டவன் விருப்பம் போலும்" என்ற வாக்கியம் ஒன்றே அவர் ஆன்மீகப் பாதையை நாடிய போது, அது திரும்பத் தன் தாய் வீட்டுக்கு வருவது போன்ற இயற்கை உணர்வுடன் கூடிய ஒரு நிகழ்வு என்பது தெளிவாகிறது.

கண்ணதாசனை ஏன் ஆராய வேண்டும் எனும் கேள்விக்கு, தமிழை அவர் எவ்வாறு கையாண்டார், தமிழ் அவரை எவ்வாறு கையாண்டது என்பதை அறிவதற்காக என்று சொல்வது அர்த்தமுள்ள பதிலாகிறது.

பாடல்கள் எழுதும் போது சிலர் சுவையாக அழகுத் தமிழில் எழுதுவார்கள், மற்றும் சிலர் மிகவும் எளிமையாக, இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய தன்மையுடன் எழுதுவார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ! அழகுத் தமிழையும், எளிமையையும் கலந்து அனைவருமே தமிழின் எழிலை, தமிழன்னையின் பேரழகை ரசிக்கக் கூடிய வண்ணம் எழுதக் கூடிய ஆற்றல் கொண்ட ஒருவராக இருந்தார்.

ஒரேயொரு பாடலின் முதலிரண்டு அடிகளையும் எடுத்துப் பாருங்கள்!

அர்த்தமுள்ள இந்துமதம் அது என்ன சொன்னது - அது
அவரவர் கடமைகளை எடுத்துச் சொன்னது


இதை விட இலகுவாக, எளிமையாக ஓரு ஆழமான விடயத்தை அழகு தமிழில் எப்படிக் கூறிட முடியும்? இந்து சமயத்தைப் பற்றி, அதன் வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றி எத்தனையோ பெரிய கல்விமான்கள், ஞானிகள் விவரித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் எத்தனையோ புத்தகங்களில் கூற விழைந்ததை, எமது கவிதைக் கோமகன் இரண்டே வரிகளில் எடுத்தியம்பி விட்டார்.

அது தான் கண்ணதாசன்! அதனால்தான் அவரைத் தமிழன்னையின் அருள் பெற்ற மைந்தன் என்று கூறுகின்றோம்.

இப்போது நான் எடுத்துப் பார்க்கப் போகும் கவியரசரின் பாடல் அவருக்குப் பிடித்தமான ஒரு இனிமையான பாடல், இந்தப் பாடலைப் புகுத்துவதற்காகவே இந்தப் படத்தை அவர் தயாரித்தாரோ என்று கூட எண்னத் தோன்றுமளவிற்குக் கவியரசர் இப்பாடலை விரும்பினார் என்று சில குறிப்புக்கள் கூறுகின்றன.

ஆமாம் இந்தப் பாடல் "சிவ கங்கைச் சீமை" எனும் திரைப்படத்திற்காக, பிரபலமான பின்னணிப் பாடகர் திரு. திருச்சி லோகநாதன் அவர்களால் பாடப்பட்டது.

வாழ்க்கையின் தத்துவங்களை விவரிக்கும் கவியரசரின் பாடல்களுக்கெல்லாம் இது ஓர் மணி முடியாக அமைவது போன்று இருக்கும். எங்கே ரசிப்போமா?

ஆசையே அலைபோலே!
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே!

எப்படியாக வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கவிஞர் புரிந்து வைத்திருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்! கடலின் அலையானது எப்போதுமே ஒன்று போல இருக்காது, சுற்றுப்புறச் சூழ்நிலைகளான வெப்பம், காற்று என்பனவற்றினால் பாதிக்கப்பட்டுத் தனது அலையாட்டத்தில் மாறுபட்டு மறுதலித்துக் கொண்டிருக்கும்.

தினமும் தனது மனதின் ஆசைகளின் அளவைச் சுற்றுப்புறச் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் மானிட மனதின் ஆட்டத்தை அந்தக் கடல் அலையின் ஆட்டத்திற்கு ஒப்பிட்டு விவரிக்கும் கவியரசரின் அனுபவ அறிவை எவற்றுடனாவது நாம் ஒப்பிடுவது சாத்தியமா?

அந்த வகையான ஆசையின் ஆட்டத்திற்கு நாமனைவருமே கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் கூறி, இந்த ஆசை அதன் மூலம் எழும் தேவைகள் என்பன சாதாரண சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கை முறையே என்று வேறு சொல்லி வைக்கிறார்.

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்னும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:20 am

காற்று அடிப்பது தெரிகிறது, ஆனால் கண்னை மூடித் திறப்பதற்குள் அது எம்மைத் தழுவி ஒரு கணநேர இன்பத்தை அளித்து விட்டு, கடந்து விடுகிறது.

எமது பருவத்தைக் கூட அத்தகைய ஒரு அவசர ஓட்டத்திற்கு ஒப்பிடுகிறார் கவியரசர் கண்ணதாசன். அது மட்டுமே காதல் எனும் அந்த இனிமையான அனுபவத்தை ஒரு தேரோட்டத்திற்கு ஈடாக்குகிறார். தேரில் ஏறி இருந்து ஒரு பயணம் போய்ப் பாருங்கள்! அதன் இனிமை புரியும். அதிலே நிற்கும் போது ஒரு இராஜ கம்பீரமும், இனிமையாக ஆடி அசைந்து எமைக் கொண்டு செல்லும் போது ஒரு இன்பக் கிளுகிளுப்பும் கிடைக்கின்றனவே அப்படிப் பட்டது தான் காதல் வயப்பட்டவருக்குக் கிடைக்கும் இன்பம் என்கிறார்.

இத்தகைய ஒரு உறவினில் தம்மை இணைத்து ஆணும் பெண்னும் மகிழ்வார்களாம், அது மட்டுமா? அந்த இணைவின் பெறும் பேறாகச் சுகம் பெறுவார்களாம். இத்தகைய ஒரு இனிமையான பந்தம் கொடுத்த இன்பம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு அதிசயம் தானே!

பாவம் காதல் வயப்பட்ட அந்த உள்ளங்களுக்குத் தெரியுமா எத்தகையதொரு வாழ்க்கையைத் தாம் எய்தப் போகிறார்கள் என்று? அதை எத்துணை லாவகமாகக் குறிப்பிடுகிறார் என்று பாருங்கள்.

நாளை உலகின் பாதையை இன்றே
யார் காணுவார்?


இளம் உள்ளங்கள் சந்திக்கின்றன; காதல் வயப்படுகின்றன; ஆனால் அவர்களின் காதல் வெற்றியில் முடிவதும், அப்படியே வெற்றியடைந்த காதல் தொடர்ந்து இன்பகரமான வாழ்வாக அமைவதும், அந்த இருவரது கைகளில் மட்டுமா இருக்கிறது? இல்லையே சுற்றுப்புறச் சூழல்கள், சமுதாய அழுத்தங்கள், உறவினர்களின் நோக்கு என்பன சில வெற்றி பெற்ற காதலர்களின் வாழ்வைக் கூடத் திசை திருப்பி விடுகின்றன.

அதே சமயம், எந்த வகையிலுமே வெற்றியளிக்காது என்று எண்ணிய சிலரின் வாழ்க்கை, மற்றையோர் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு அழகாக அமைந்து விடுகிறது.

இந்தக் கருத்தை என்னே அழகாகக் கவியரசரின் மேலே குறிப்பிட்ட வரிகள் விளக்கி விடுகின்றன.

வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு
இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?


மிகவும் அவதானமாக எண்ணிப்பாருங்கள் நண்பர்களே !

எமது வாழ்வில் இன்பமான நாட்கள் செல்லச் செல்ல அது செலவு போலத் தானே இருக்கிறது! உதாரண்த்திற்கு நாம் சிறுவர்களாக இருக்கும் போது, பாடசாலை நாட்களில் வரும் ஆண்டு விடுமுறையை எடுத்துக் கொள்ளுங்கள். அது எவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுகிறது, பின்பு அடுத்த விடுமுறைக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாகவுள்ளது? அந்த நாட்களில் உங்கள் மனதில் நீங்கள் அடைந்த உணர்வுகளைத் திரும்ப ஒரு முறை இரவல் வாங்கி அனுபவித்துப் பாருங்கள். நான் சொன்ன கருத்தின் யதார்த்தம் புரியும்.

நாம் அதை செய்யப் போகிறோம், இதைச் செய்யப் போகிறோம் என்று எமக்குள்ளே பல கணக்குகளை வகுத்துக் கொள்கிறோம், அதை நோக்கி எவ்வளவு சிரத்தையாக முன்னேறினாலும் காலத்தின் அனுக்கிரகம் இன்றி அது கை கூடுவதில்லை. இதைத் தான் கவிஞர் அழகாகக் காலம் போடும் கணக்கை யாரால் காண இயலும் என்று கேட்கிறார்.

தனது இளமைக் காலம் முழுவதும் டாக்டராக வேண்டும் என்ற கனவுடனும், இலட்சியத்துடனும் வாழ்ந்து வந்த ஒருவன் அல்லது ஒருத்தி அதற்குத் தேவையான படிப்பில் எவ்வளவு திறமையாக இருந்தாலும், வேறு காரணங்களினால் தமது கனவை நிறைவேற்ற முடியாமல் போவதை எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் கூடக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோமே!

கவியரசர் கண்ணதாசன் ஒரு இலக்கியத் தடாகம். அவரது இந்தத் தடாகத்தினுள் குதித்து மலர்ந்திருக்கும் அழகிய இலக்கிய மலர்களைக் கொய்து வாசர்களாகிய உங்களது காட்சிக்கு வைப்பதுவே எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும் !

Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக