புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
4 Posts - 3%
bala_t
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
1 Post - 1%
சிவா
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
296 Posts - 42%
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 4:52 pm

First topic message reminder :

கவியேறு உமறுப் புலவரவர் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்

அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர். அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.

உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.

இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.

புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.

ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரை அணுகி, கவலைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று, எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார். உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும், அவருக்குப் பகரமாக அவரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும், வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.

அதைச் செவியேற்ற வாலைவாருதி, தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!' என்று உண்டாயின. அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார்.

அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!' என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:

"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று
சரிசமா சனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு
மமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்
தீரனணி வாயில்வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு
முள்ளச்சம் வையும்பிள்ளாய்!"

இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி, உளம் பதறி, மெய் நடுக்குற்று, தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு அகன்றார்.

இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:13 pm

302 நெடுநிலம் பாரறத் தொட்டு நீரிறைத்
திடுபயிர் செய்துகாத் திருந்து கள்வராற்
படுமுறைப் பாடெலாம் படப்ப லித்திடாக்
கொடுமையா லகவிலை குறைந்த காலமே. 1.6.12

303 காயிலை கிழங்கெலாங் கருவ றுத்துகான்
மேய்விலங் கினம்பல கொன்று மென்றுமே
தீயவப் பசிப்பிணி தீண்ட லாற்சன
மாய்வுறு சடம்பல மலிந்த காலமே. 1.6.13

304 நலந்தருங் கற்பெனு நாமங் கெட்டுட
லுலர்ந்தறப் பசியினா லொடுங்கி யீனர்த
மிலந்தொறும் புகுந்திரந் திடைந்து வாடிநற்
குலந்தலை மயக்கிடுங் கொடிய காலமே. 1.6.14

305 மதலைகள் பிறர்மனை வாயி றூங்கிநின்
றிதயநொந் திருகையேத் திரப்பக் கண்டுதாய்
விதிகொலென் றேங்கிட வேறு வேறதாய்ப்
பதிகுலைத் தெறிந்திடும் பஞ்ச காலமே. 1.6.15

306 பஞ்சமென் றொருகொடும் பாவி தோன்றிடத்
துஞ்சினர் சிலர்தனி துறந்த பேர்சிலர்
தஞ்சமற் றடிமையாய்ச் சார்ந்த பேர்சில
ரஞ்சியே புறநக ரடைந்த பேர்சிலர். 1.6.16

307 கருப்பினிற் சனமெலாங் கலைந்து போதலா
லுரைப்பருங் குனைனெனு மூருள் ளோரெலா
நிரைப்பெறக் கூடியே நினைத்து சாவிநின்
றொருப்பட வுய்யுமா றத்துப் பேசினார். 1.6.17

308 மகிதலத் துயர்பதி மக்க மென்னுமூர்
புகுதலே கருமநம் பூவை மாரணி
நகிலமு தூட்டிட மதலை நல்குவா
ரிகல்புரி தரித்திர மிலையென் றோதினார். 1.6.18

309 மக்கமா நகரெனும் வரிசை யூரதிற்
புக்கியே பிழைப்பது பொருட்டென் றெண்ணியே
மிக்கபே ரனைவரும் விளம்பிக் காலமே
தக்கநற் பயணமென் றெடுத்துச் சாற்றினார். 1.6.19

310 ஆரிது மனையலி மாகண் டுஞ்சிட
வேரிய மடிமிசை விருக்க மொன்றதிற்
றூரிலை பணரெலாங் கனிக டூங்கிடச்
சீர்பெறு நறைக்கனி யமுதஞ் சிந்தவே. 1.6.20

311 மரகத நிறமர மடியிற் றோன்றியே
சொரிகதிர்க் கனியெலாந் துய்ப்பச் செங்கயல்
வரிவிழி மயிலலி மாக னாவினைத்
தெரிதரக் கண்டெழுந் தெவர்க்குஞ் செப்பினார். 1.6.21

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:14 pm

312 அறிவுறு துவைபெனுந் தந்தை யாகிய
மறையவன் கேட்டுத்தன் மகவை நோக்கிநன்
னெறிதிகழ் மக்கமா நகரி னீர்செலின்
பெறுபல னுறுதியுண் டென்னப் பேசினான். 1.6.22

313 அம்மொழி கேட்டலி மாவு மாரிது
நம்மையாள் பவனரு ணமக்குண் டென்னவே
தம்மினத் தாருடன் கூண்டு தாழ்விலாச்
செம்மைசேர் மக்கமா நகரிற் செல்கின்றார். 1.6.23

314 இடுக்கிய குழந்தையு மேந்து பிள்ளையும்
வடுப்பிள வனையகண் மான னார்களும்
கடுப்பினிற் கணவன்மா ருடனுங் கற்குவைத்
திடர்ப்படு சிறுநெறிச் செல்கின் றாரரோ. 1.6.24

315 வரும்பரி வாகனத் துடனுந் தம்மனம்
விரும்பிய மக்கமா நகரை மேவியே
கரும்பெனு மொழியனார் காளை மாருடன்
பெருந்தெரு விடந்தொறும் பிரியத் தெய்தினார். 1.6.25

316 பிறைநுதற் கருங்குழற் பெண்க ளியாவருங்
குறையற மென்முலை கொடுத்துக் கூலிக்கா
மறுவறப் போற்றியே வளர்ப்ப மியாமெனச்
சிறுவர்க ளுளமனை யனைத்துந் தேடினார். 1.6.26

317 கூலியின் முலையமு தூட்டுங் கோதையர்
நாலொரு பதின்மர்வந் தவரு நன்குறப்
பாலகர் பெற்றுறு பலனும் பெற்றனர்
சாலவெம் பசிப்பிணி தவிர்ந்திட் டாரரோ. 1.6.27

318 ஆயிழை யெனுமலி மாவு மாரிதுந்
தூயநற் றெருவெலாந் திரிந்து சோர்ந்தொரு
சேய்கிடைத் திலையெனத் திகைத்து வாடியே
வாயுரை மறந்தற மதிம யங்கினார். 1.6.28

319 உடற்பருத் திலவொரு முலையுஞ் சூகையிம்
மடக்கொடிக் கெனமறுத் தாரென் றெண்ணியே
தடப்புயத் தப்துல்முத் தலிபு தம்மனை
யிடத்தினில் வந்துநின் றிசைத்திட் டார்களே. 1.6.29

320 தரைப்பெரும் புகழெலாந் தரித்து மாமணி
நிரைத்தணி குங்கும மாலை நீங்கிலா
வரைப்புய வப்துல்முத் தலிபு வந்துநின்
றுரைத்தவ ரிருவரை யுற்று நோக்கினார். 1.6.30

321 உடலுலர்ந் தொடுங்கியோர் முலையுஞ் சூகைகொண்
மடமயில் கூலிப்பால் வழங்கு வோமெனத்
திடமுற விசைத்தன டெரியுங் காரணம்
கடவுளின் பயனெனக் கருத்தி லெண்ணினார். 1.6.31

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:15 pm

322 கோதைநின் குலம்பெய ரேது கூறென
மாதவ ருரைத்தலு மடந்தை யன்புறச்
சாதெனுங் குலத்தினென் றாயுந் தந்தையு
மோதுமென் பெயரலி மாவென் றோதினார். 1.6.32

323 குலத்துடன் பெயரையுங் கூறக் கொற்றவர்
நலத்துடன் செல்வமும் பொறையு நன்கெனப்
பெலத்தது பொருளென வெண்ணிப் பேதியாச்
சிலைத்தடம் புயர்பல தெரிந்து கூறுவார். 1.6.33

324 பெறுமொரு தந்தையு மில்லைப் பின்னிய
வறுமையெத் தீம்தரு மதலை யுண்டுகொ
லறிவுற முலைகொடுத் தாக்கஞ் செய்வதற்
குறுவதோ நும்மன மென்ன வோதினார். 1.6.34

325 மன்றலங் குழலியு மன்ன ராரிது
மொன்றிய மனத்தொடு முசாவிச் செல்குவ
நன்றுபார்த் தறிகுவ நாமென் றுன்னியே
வென்றிவேற் செழுங்கர வேந்துக் கோதினார். 1.6.35

326 அவ்வயி னப்துல்முத் தலிபு மாங்கொரு
செவ்விய வறிவனைக் கூட்டிச் செல்கென
நவ்விநோக் குறும்விழி யாமி னாவெனு
மவ்வலங் குழலலிமா மனைக்க னுப்பினார். 1.6.36

327 வேறு
அரிவை யாமினா வகத்தினி லடைந்தலி மாவுன்
னுரிய மைந்தனுக் கென்முலைப் பாலமு தூட்டத்
தெரிய வந்தன னருளுக வென்றலுஞ் சிறந்த
மரும லர்க்குழ லிவர்க்கெதிர் மொழிவ்ழங் குவரால். 1.6.37

328 உற்ற தந்தையு மிலையுறு பொருளிலை யெத்தீம்
பெற்ற பிள்ளையோ ருதவிசெய் குவர்பிற ரிலைநிர்
பற்று நற்பொருள் குறித்துவந் தவர்பசி யுடையீ
ரிற்றைக் குண்பதற் கிடமிலை யென்னிடத் தென்றார். 1.6.38

329 அந்த வாறலி மாதுணை யாரிதை நோக்கி
யிந்த நன்மனைக் குறுபொரு ளேதுமொன் றிலையாந்
தந்தை யும்மிலை யாம்வறு மைக்குடி தானா
மெந்த வாறியா முய்வதிக் குழந்தையா லென்றார். 1.6.39

330 பலன்ப டைப்பதும் வறுமையைப் படைப்பதும் பாரி
னலம்ப டைப்பது முடைவன் விதிப்படி நடுக்குற்
றுலைந்து நின்மன முடைவதென் வெண்டிரை யுடுத்த
தலம்பு ரப்பதின் னாரனச் சாற்றவு மரிதே. 1.6.40

331 படியி னிற்பெறும் பலனமக் குளவெனிற் பாதிக்
கொடிம ருங்குலிக் குழந்தையா லாங்கொடி யவரேல்
வடிவு றும்பொரு ளடுக்கினு நம்வயின் வாராக்
கடிதி னிற்புகுந் தறிவமென் றாரிது கரைந்தார். 1.6.41

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:15 pm

332 இருவ ரும்மெழுந் தாமினா மனையிடத் தெய்தித்
தெரிவை நின்மகக் கொணர்கெனக் கேட்டலுஞ் சிறந்த
பரிம ளந்திகழ் மதலையைக் கொண் அர்ந்தார் பார்த்தார்
வரிப ரந்தசெவ் விழிதிறந் தனர்முகம் மதுவே. 1.6.42

333 கண்டி றந்தவப் போதினிற் கவினொளி கதிர்விட்
டெண்டி சையினும் பரந்திரு சுடரினு மிலங்கப்
பண்டு கண்டிலாப் புதுமைகொ லெனவுளம் பயந்து
விண்டு ரைத்திடா திருவரு மயங்கிமெய் மறந்தார். 1.6.43

334 பார்த்த கட்கதிர் பரத்தலிற் பயந்தவர் தௌிந்து
கூர்த்த தம்மனத் ததிசயித் தகமகிழ் கொண்டு
கார்த்த டங்கடற் கீண்டெழு முழுமதிக் கதிரைச்
சேர்த்த நேமியம் புள்ளென வுவகையிற் றிளைத்தார். 1.6.44

335 வேந்த ராரிது தம்மனை யாடமை விழித்துக்
காந்தண் மெல்லிதழ்ப் பசுந்தொடிக் கரத்தினால் விரைவி
னேந்து மென்றன ரிலங்கிழை மடமயி லலிமா
வாய்ந்த பேரொளி முகம்மதை யினிதெடுத் தணைத்தார். 1.6.45

336 மலிந்த பேரொளி முகம்மதை யெடுத்தலும் வருந்தி
மெலிந்த மெல்லிழை சடம்பருத் தோங்கின வீங்கித்
கலந்த மான்மத வாசமுங் கமழ்ந்தன கருகி
யுலந்த சூகைமென் முலைதிரண் டழகொழு கினவே. 1.6.46

337 வடந்த யங்குபூண் செப்பெனச் பணைத்திறு மாந்து
கடந்த மும்மதக் கரியிணைக் கோட்டினுங் கதித்துக்
குடந்த யங்குற விம்மிதங் கொண்டபொற் குவட்டை
யடர்ந்த மென்முலைக் கண்டிறந் தொழுகின வமுதம். 1.6.47

338 பாகி ருந்தமென் மொழியலி மாவலப் பாகச்
சூகை மென்முலை திரண்டதும் பாறுளும் பியதுந்
தேக மெங்கணும் பருத்ததுங் கண்டெழில் சிறந்தது
வாகு றும்வடி வாயின ராரிது மகிழ்ந்தே. 1.6.48

339 புதிய நல்வடி வாகிய பூங்கொடி யலிமா
கதிர்வி ரித்திட மடிமிசை வைத்துகால் வருடிக்
குதிகொள் பான்முலைக் குடித்திடக் கொடுத்திடக் குறையா
மதுர வாய்திறந் தமுதமுண் டனர்முகம் மதுவே. 1.6.49

340 நறைக மழ்ந்தொளி ததும்பிய முகம்மது நபியு
முறைமை யாகவுண் டனர்வலப் பாரிச முலைப்பான்
மறுவி லாததம் மதலையு மிடதுபான் மருங்கிற்
குறைவி லாதுவ தடிக்கடிக் குடித்துக்கொப் பளிக்கும். 1.6.50

341 வற்றித் தூங்கிய லமுறத்து வெனுமந்த மதலை
நற்ற வம்பெறு முகம்மது நபிபறக் கத்தா
லுற்ற பால்குடித் துடறழைத் துறுபிடி யாகி
வெற்றி வெங்கயக் கன்றெனக் கவின்விளங் கியதே. 1.6.51

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:16 pm

342 மாத வம்பெறு முகம்மது நபிக்குந்தம் மகற்கு
மேத மின்றிய பால்கொடுத் திருந்துசின் னாட்பின்
கோதி லாக்குனை யினிற்செலக் கருத்தினிற் குறித்துக்
காத லித்துரைத் தார்துணைத் தார்கண வருக்கே. 1.6.52

343 இருவ ரும்மனச் சம்மதக் களிப்புட னேகி
யரசர் நாயக ரப்துல்முத் தலிபைச்சென் றடுத்து
வரிசை பெற்றனம் பொருள்பல பெற்றன மகிழ்ந்தெம்
புரிசை சூழ்பதி புகுவமென் றுரைத்தனர் புகழ்ந்தே. 1.6.53

344 கேட்ட போதினி லப்துல்முத் தலிபெனுங் கிழவோர்
வேட்ட லாயிரு வருக்குநன் மொழிபல விளம்பிக்
கோட்டு மாங்குயி லாமினாக் கிவையெலாங் கூறி
வாட்ட மில்லதோர் நும்பதிச் செல்கென வகுத்தார். 1.6.54

345 இந்த வாறுதேர்ந் தாரிது மெழிலலி மாவுங்
கொந்து லாங்குழ லாமினா மனையினைக் குறுகிச்
சுந்த ரந்தவழ்ந் திலங்கிய கொடியினைத் துதித்துச்
சிந்தை யின்னுறுஞ் செய்திக ளனைத்துஞ்செப் பினரே. 1.6.55

346 தம்ப திச்செல விருவருஞ் சாற்றிய மாற்றஞ்
செம்பொற் பூங்கொடி யாமினா கேட்டுளந் திடுக்கிட்
டம்ப ரத்தெழு முழுமதி நிகரகு மதுவைக்
கம்ப ணிந்தசெங் கரத்தெடுத் துவகையிற் கலுழ்ந்தார். 1.6.56

347 தேன்கி டந்தசெங் கனியிதழ்ப் பவளவாய் திறந்து
வான்கி டந்தொளிர் மதியினு மொளிர்முகம் மதுவைக்
கான்கி டந்தமெய் யுறமுத்த மிட்டுடல் களிப்ப
வூன்கி டந்தவேல் விழிமல ரிணையிலொத் தினரே. 1.6.57
348 அமரர் நாயக மேபுவி யரசருக் கரசே
தமரி னுக்கொரு திலதமே யார்க்குந் தாயகமே
நமது யிர்க்குயி ராகிய முகம்மது நபியே
கமைத ருங்கட லேயெனப் போற்றினர் கனிந்தே. 1.6.58

349 போற்றி முத்தமிட் டணியணிந் தருந்துகில் புனைந்து
மாற்ற லர்க்கிரி யேயென முகம்மதை வாழ்த்தித்
தேற்று மென்மொழி பலவெடுத் தாமினா செப்பிக்
கூற்ற டர்ந்தவேல் விழியலி மாகையிற் கொடுத்தார். 1.6.59

350 தன்னு டன்பிறந் தவளென விருகையாற் றழுவி
யென்ம கன்னல னின்மக னிவனென வியம்பி
மின்னு ணங்குவே லாரிதை வெற்றியால் வியத்திப்
பொன்னு னாருட னூரினிற் புமெனப் புகன்றார். 1.6.60

351 வேறு அருந்தவம் புரியும் பெருந்தலம் வணங்கி
யடைகுவம் பதிக்கென அலிமா
வருந்திடா தெழுந்து முகம்மதைக் கதிரின்
மணிவளைக் கரத்தினி லேந்தித்
திருந்திட நடப்பக் ககுபத்துல் லாவிற்
சிறந்திடுந் தென்கிழ மூலை
யிருந்திடும் ஹஜறு லசுவது வெனுங்கால்
லெதிர்கொடு நடந்தது வன்றே. 1.6.61

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:16 pm

352 நாரியுங் கருங்கற் றொட்டுமுத் தமிட்டு
நடந்துகஃ பாவலஞ் செய்து
சீரிதி னியன்ற வாயிலி னெதிரே
சென்றுநின் றிறைஞ்சுமந் நேரந்
தாரணி திகழ்ந்த குபலெனும் புத்துத்
தலைகவிழ்ந் ததுவத னடுப்ப
நேர்பெற நிரையா யிருந்தபுத் தனைத்து
நிலமிசைச் சாய்ந்துருண் டனவே. 1.6.62

353 புதுமைக ளனைத்துங் கண்டுகண் குளிர்ந்து
பொற்கொடி ககுபத்துல் லாவிட்
டிதமுற நடந்து கணவரைக் குறுகி
யெடுத்திவை யனைத்தையு மியம்ப
மதியினிற் றௌிவுற் றாரிது மலிமா
மலர்முக நோக்கியிம் மகவாற்
கதியுறு நமக்குச் செல்வமும் பெருகுங்
கவலையுந் தீர்ந்தன மென்றார். 1.6.63

354 நன்றெனப் புகழ்ந்து மனங்களி கூர்ந்து
நாரியு மாரிது தாமும்
வென்றிகொண் டனமென் றொட்டைமேற் கொண்டார்
மேன்யிற் சொறியுடன் வரடு
மொன்றிய கிழடுந் தூங்கிய குணமு
மொழிந்தது திடபிடி யாகிக்
குன்றென வுயர்ந்து பருத்துறக் கொழுத்துக்
குதிப்பொடு நடந்தன வன்றே. 1.6.64

355 குனையின்விட் டெழுந்த கொடியிடை மடவாக்
கூடின ரொருமுக மாக
வனைவருந் திரண்டு மக்கமா நகர்விட்
டருவரைச் சிறுநெறி யணுகித்
தனையரும் புதிய தனையரு முயிற்போற்
றலைவரு மடந்தையர் தாமுங்
கனைகுரற் களிறும் பிடிகளுங் கன்றுங்
கலந்துட னடப்பதொத் தனரே. 1.6.65

356 மல்லுயர் திணிதோ ளாடவர் பலரும்
வனமுலை மடக்கொடி யவருஞ்
செல்லுநன் னெறிபால் வயின்வயின் செறிந்த
செடிகளு மரந்தலை யெவையுங்
கல்லுங்கற் குவையும் யாவருங் கேட்பக்
கடிதினிற் றௌியவாய் விண்டு
செல்லுயர் கவிகை முகம்மது நபிக்குத்
தெரிதரச் சல்லமுரைத் தனவே. 1.6.66

357 நடந்தவர் வெயிலா லுடறடு மாறி
நலிதரத் தாகமும் பெரிதாய்
விடந்தயங் கியகண் ணிணைமட வாரு
மெலிதரச் செல்லுமக் காலைக்
கிடந்ததோர் கான மிலையில வாகிக்
கிளைத்திடும் பணரெலாங் கருகி
யிடந்தொறு நிழலற் றிருந்ததவ் விடத்தி
லிறங்கின ரனைவருஞ் செறிந்தே. 1.6.67

358 மான்மதஞ் செறிந்து கமழ்தர அலிமா
மடிமிசை முகம்மது விளங்கக்
கானகந் தழைத்துப் பணர்கள்விட் டெழுந்து
கதிரவன் கனற்கர மறைத்து
நீனிறப் பசந்த விலைமிக நெருங்கி
நிரைமலர் சொரிதரக் காய்த்துத்
தேனிருந் தொழுகுங் கனிபல சிதறித்
திசையெலா நிறைந்தன வன்றே. 1.6.68

359 கண்டவர் மனமுங் கண்களுங் குளிர்ந்து
கனிபல பறித்தெடுத் தருந்தி
வண்டணி குழலார் வருத்தமுந் தீர்ந்து
வழியினிற் பெரும்பலன் கிடைத்துக்
கொண்டதுந் தாகந் தீர்ந்தது மலிமா
குழந்தையா லாமெனச் சூழ்ந்து
முண்டக மலர்த்தா ளினில்விழி சேர்த்தி
முகம்மதைப் போற்றிவாழ்த் தினரே. 1.6.69

360 இலைபல தளிர்த்துக் குளிர்வனச் சோலை
யிருந்தவா ரனைவரு மெழுந்து
குலவுவா கனத்திற் கொண்டுகுன் றுகளுங்
குழிதருங் கானியா றுகளு
நிலைபெறுஞ் சுரமுங் கடந்தவர் நடந்து
நீள்வரை யனையமா மதிள்சூழ்
பலபல மனையுந் தெரிதர நோக்கிப்
பதியெனுங் குனையினை யடைந்தார். 1.6.70

361 பதியினை யடுத்தா ரவர்மனை புகுந்தார்
பாவையர் பலரும்வந் தடைந்து
மதியினுந் தௌிந்த வடிவெடுத் தனைய
முகம்மதங் கிருப்பதைக் கண்டா
ரதிசய மிஃதென் றணிமலர்த் தாளி
லயில்விழி வைத்துமுத் தமிட்டு
நிதியமும் பேறும் படைத்தன ரலிமா
நிகரிலை யிவர்க்கினி யென்பார். 1.6.71

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:17 pm

362 கூண்டுவந் தெடுப்பார் புகழ்ந்துபோற் றிடுவார்
கொழுங்கனி முகம்மதை யிவருக்
காண்டவன் கொடுத்தா னிந்தநற் பெரும்பே
றணியிழை படைத்தன ரென்பார்
தூண்டிடா விளக்கோ முழுமணி தானோ
சுவர்க்கத்தி லிருந்துவந் ததுவோ
வேண்டிய பொருளு முறுமொரு நாளோர்
வீட்டினிற் புகிலெனப் புகல்வார். 1.6.72

363 வறுமையுந் தீரு நோயும்விட் டகலு
மனத்தினிற் கவலையு நீங்குஞ்
சிறுமையு மகலும் புத்தியும் பெருகுந்
தீவினை வந்தட ராது
தெறுபகை சிதௌயுஞ் செல்வமும் வளருந்
தேகமுஞ் சிறந்தபூ ரிக்கு
முறுபவந் தொலையு முகம்மதை யெவர்க்கு
மொருபகற் காண்கிலென் றுரைப்பார். 1.6.73

364 தன்கிளை யவரை விளித்தரு கிருத்திச்
சாற்றினர் செரும்புக ழலிமா
வென்குலத் தவமோ யான்செய்த பலனோ
விவர்தமைக் கிடைக்கவும் பெற்றேன்
முன்பெருஞ் சூகை வடுவையுந் தவிர்ந்தேன்
முகமலர் தரவடி வானேன்
பின்புறு கலியுங் காண்கிலேன் பலனும்
பெற்றன னெனவுரைத் தனரே. 1.6.74

365 பாரினிற் சிற்ந்த மக்கமா நகர்க்குப்
பயணமென் றிருக்குமன் றிரவி
னேருமென் மடியில் விருக்கமொன் றெழுந்து
நிலமிசை கனிகளைச் சிந்த
வாரியே யருந்தி வறுமையும் பசியு
மறந்துடல் களிப்பொடு மகிழக்
கூருமோர் கனவு கண்டன னெனவே
கோதையர்க் கெடுத்துரைத் தனரே. 1.6.75

366 அரந்துடைத் தொளிருங் கதிரிலை வேற்கண்
ணாமினா திருமக னலிமா
வரந்தரு குழந்தைக் கொருமுலைப் பாலே
வழங்கின படியறி வதற்கே
சுரந்திடுஞ் சூகை முலையமு தருந்திக்
துயிறருங் காலையி லெடுத்துங்
சுரந்துதம் மிடது பான்முலை கொடுக்கிற்
கனியிதழ் வாய்திறந் தருந்தார். 1.6.76

367 ஆரிது மனையிற் சிலதுருச் சொம்முண்
டறக்கிழ டொடுசொறி மலடுஞ்
சோரியில் வரடும் வங்குமா யிருந்த
துருவைகண் முதுகினிற் றிறமா
வாரணிந் திலங்கு மணிமுலை யலிமா
முகம்மது திருமலர்க் கரத்தாற்
சீருறத் தடவ விக்கினஞ் சிதைந்து
செவ்விபெற் றிலங்கிய வன்றே. 1.6.77
368 வாலசைத் திடாத கிழடிள வுருவாய்
வரடுவங் கறமல டும்போய்ச்
சாலவும் பருத்திட் டுடறிரண் டழகாய்த்
தளதளத் தணிமயி ரொழுக்காய்ச்
சூலுமாய்ச் சிறிது பாலுமாய் முலைக்கண்
சுரப்பெடுத் தறச்சொரிந் திடலா
யேலவார் குழலார் மனையிடங் கொள்ளா
திருந்தது பறழ்களு நிறைந்தே. 1.6.78

369 ஓங்கிய குனையி னெனும்பதி தன்னி
லுறைபவ ரெவர்மனைக் கேனு
நீங்கரும் பிணிவந் தடுத்திடி லவர்க
ணிறைதரு முகம்மதைக் காண்கிற்
றீங்ககன் றிடுமச் செய்திகண் டறிந்து
செறிதரு பிறநக ருளரும்
பாங்கினிற் புகுந்து முகம்மது மலர்த்தாள்
பணிந்துமெய் மகிழ்ச்சிபெற் றிருப்பார். 1.6.79

370 மறைதராச் சோதி முகம்மது நயினார்
வடிவுறு மெய்யினிற் றுகளு
முறைதரா நீரிற் கழுவிலா திருந்து
முலவுறு சிக்குமொன் றணுகாக்
குறைதரா வாசங் கமழ்வது மாறாக்
குமிழினீர்ச் சிறிதுமே யணுகாக்
கறைதரா வரிச்செங் கண்டுயின் றெழினுங்
கலந்துறு மாசுமொன் றணுகா. 1.6.80

371 சலமலா திகளீ னாற்றமுந் தோற்றாத்
தரையருந் திடுவதே யல்லா
னிலமிசை யெவர்க்குங் கண்ணினிற் றோன்றா
நீடரு நீழலுந் தோன்றா
வுலவிய வெறும்பு மொண்சிறை யீயு
மொருபொழு தாகிலுந் தீண்டாக்
கலையினின் மயிலைப் படர்தராப் பிள்ளைக்
கனியெனு முகம்மது நபிக்கே. 1.6.81

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:18 pm

372 மாமயி லலிமா கண்டுயில் காலை
முகம்மது துயிலிட நோக்கித்
தாமதி யாது சந்திர னிறங்கித்
தன்னுரு மாறிவேற் றுருவாய்க்
காமரு மலர்த்தாண் மெல்லென வருடிக்
கதிர்மணித் தொட்டிலை யாட்டிப்
பூமண மனைக்கு ளிருந்தடி பணிந்து
போவது தினந்தொறுந் தொழிலே. 1.6.82

373 இந்துவந் துறைந்து மலரடி வருடி
யிரவெலாங் காத்தினி திருந்து
கொந்தலர் குழலார் மனையெலா நிறைந்த
கொழுங்கதிர் பரப்பிடக் கூடி
வந்துவா னவர்க ளிடமற நெருங்கி
மனைப்புறங் காப்பென விருப்பச்
சுந்தர வதன முகம்மது நபியைத்
துய்யவ னினிதுற வளர்த்தான். 1.6.83

374 வரையெனத் திரண்ட புயநபி நயினார்
முகம்மதை வளர்த்திடு மனைக்குட்
கரையிலாச் செல்வந் தனித்தினி பெருகிக்
காட்சிகள் பலவுமுண் டாகி
நிரைநிரை மாடா டொட்டகம் பலவு
நிறைந்துபா றயிர்குறை விலதாய்த்
தரையினிற் குடிக்குட் பெருங்குடி யான
தலைவரா ரீதென விருந்தார். 1.6.84

375 குனையினி லலிமா மக்களுந் தாமுங்
குடிக்குயர் குடியென வாழு
மனையினி லொருநாட் டீபமிட் டதுமில்
முகம்மது பேரொளி யல்லாற்
றனியவே னருளாற் றுன்பநோய் வறுமை
தனையடுத் தவர்க்குமில் லாமற்
சினவுவேற் கரத்த ராரிது மகிழ்ந்து
செல்வமுஞ் செருக்கும்பெற் றிருந்தார். 1.6.85

376 எந்நில மனைத்துந் தீனெறி நடப்ப
வியல்பெறு மனுமுறை நடப்பத்
துன்னிய வறத்தின் றுறைவழி நடப்பத்
துன்பமற் றின்பமே நடப்பப்
பன்னருஞ் செங்கோ லுலகெலா நடப்பப்
பரினிற் குலமுறை நடப்ப
மன்னிய ரெவருஞ் சொற்படி நடப்ப
முகம்மது நபுநடந் தனரே. 1.6.86

377 நிலமிசை ஹாஷீங் குலம்பெயர் விளங்க
நிகரிலா நேர்வழி விளங்கக்
குலவிய நிறையும் பொறுமையும் விளங்கக்
கோதிலாப் பெரும்புகழ் விளங்க
வுலகுயர் புதுமைக் காரணம் விளங்க
வுயர்தரு வேதமும் விளங்க
மலர்திரு சோதி முகமதி விளங்க
முகம்மது சொல்விளங் கினவே. 1.6.87

378 விண்ணகத் தமரர் மனமகிழ் வளர
வியனுறும் வரிசைகள் வளரக்
கண்ணகத் துறைந்து கருணையும் வளரக்
கவினிறை பிறையென வளர
வெண்ணரும் புதுமைக் காரணம் வளர
விறையவன் றிருவருள் வளர
மண்ணகத் திருந்து கிலையெலாம் வளர
முகம்மது நபிவளர்ந் தனரே. 1.6.88

379 பாரினிற் பரந்த குபிர்க்குல மறுத்துப்
படர்தரு தீன்பயிர் விளக்கச்
சீருறுங் கனக மாமழை பொழியத்
திரண்டெழுஞ் செழுமுகிற் குலம்போற்
பேர்தருங் குறைஷிக் குலத்தினி லுதித்துப்
பிறங்கொளி முகம்மது நபிக்கு
வார்பொரு முலையார் மனங்களித் துவப்ப
வருடமு மிரண்டுசென் றனவே. 1.6.89

380 கதிருடன் கதியு மொருவடி வெடுத்த
காட்சிபெற் றிருந்தணி சிறந்து
மதியினு மொளிரு முகம்மது நபிக்கு
வயதிரண் டானதன் பின்னர்
குதிகொளு மமுத மடிக்கடி சுரந்து
கொடுத்திடு முலைமறப் பித்துப்
பதியினி லிருந்து பொற்பதி புரக்கும்
பலன்படைத் துவந்தன ரன்றே. 1.6.90

381 நெறித்திருண் டடர்ந்த செழுமழைக் கூந்த
னேரிழை வனமுலை யலிமாக்
குறித்தசெம் பவளம் விரிந்தெனத் தேன்பாய்
கொழுமடற் குமுதவாய் திறந்து
செறித்ததிண் மாட மக்கமா நகரிற்
செல்குவந் தருணமீ தென்னப்
பொறித்தபொற் குவட்டைப் பணைத்தெழும் புயத்துப்
புரவல ராரிதுக் குரைத்தார். 1.6.91

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:18 pm

382 ஆரிது மதனைக் கேட்டுறத் தௌிந்தங்
கழகுறுங் கருமமீ தென்னச்
சீர்பெறு மனையா டம்மையும் பயந்த
செல்வரி லொருசிறு வனையும்
பாரினில் விளங்கு முகம்மது தமையும்
பண்புடன் வாகனத் தேற்றி
யேர்பெறும் வரிசை மக்கமா நகருக்
கெழுந்தனர் செழும்புய மிலங்க. 1.6.92

383 வானவர் சுனப் பதிநிக ரனைய
மக்கமா நகரினிற் புகுந்து
கானமர் குழலா ராமினா வென்னுங்
கனிமொழிப் பொற்றொடிக் கரத்தி
னானமுங் கவினும் வளர்ந்துமே னிவந்த
நபிமுகம் மதுநயி னாரைத்
தேனவிழ் பதும மென்மலர்ச் செழுந்தாட்
டிருந்திழை களிப்பொடுங் கொடுத்தார். 1.6.93

384 மடந்தையிற் சிறந்த வாமினா வென்னு
மலர்க்கொடி முகம்மதை வாங்கி
யிடம்பெறப் பிறழ்ந்து சிவந்தவே லென்னு
மிணைவிழி முகத்தொடுஞ் சேர்த்திக்
குடங்கையி லேந்தி மார்புறத் தழுவிக்
குமுதவாய் முத்தமிட் டுவந்து
கிடந்தன மனத்திற் றுயரெலா மகற்றிற்
கிளர்தரு முவகையிற் குளிர்ந்தார். 1.6.94

385 முலைச்சுமை கிடந்த சிற்றிடை திரண்ட
முகிலெனுங் குழலலி மாவை
யிலைத்தளிர் விரல்கண் முதுகுறப் பொருந்த
வின்னுயிர் பொருந்தல்போற் றழுவி
நிலைத்தபொற் பாவை யெனவரு கிருத்தி
நெறியுடன் பலமொழி புகழ்ந்து
மலைத்தடம் புயத்தா ரீதையும் போற்றி
மகிழ்ந்தன ராமினா வன்றே. 1.6.95

386 நெய்நிணங் கமழ்ந்த செங்கதிர் வடிவே
னிருபர்கோ னப்துல்முத் தலிபு
மைநிறப் பாவைக் கயல்விழி யலிமா
வந்தது கேடுவந் தடுத்து
மெய்நிறக் கதிர்முச் சுடரையு மழுக்கும்
விறன்முகம் மதுதமை யெடுத்துக்
கைநிறை பொருட்போ லிருவிழி குளிரக்
கண்டக மகிழ்ந்துடல் களித்தார். 1.6.96

387 வடிவுறுஞ் சுடர்வே லப்துல்முத் தலிபு
மரைமலர் மாமுக நோக்கிக்
கொடியென வயங்கு நுண்ணிடை யலிமா
கொவ்வையங் கனியிதழ் திறந்து
படியினி லெவர்க்குங் காணெணாப் புதுமைப்
பாலகர் முகம்மது தம்மான்
மிடிமையுந் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றொம்
வேண்டுவ பிறிதிலை யென்றார். 1.6.97

388 ஆடவர் திலக ரப்துல்முத் தலிபு
மாமினா வெனுங்குலக் கொடியும்
பீடுறு மலிமா தம்மையுந் தலைமைப்
பெருமையா ரீதையும் போற்றி
நாடுறு மனத்தா லினத்தவர் மனைக்கு
ணன்குற விருந்துக ளளைத்துத்
தேடிய பொருளைக் கிடைத்தவர் போலச்
செல்வமுற் றிருந்தனர் சிலநாள். 1.6.98

389 செவ்விய வரிசை மக்கமா நகரிற்
றிங்கணா லிரண்டுசென் றதற்பி
னெவ்வரம் பினுக்கு மிகுவரம் பெனவா
ழிலங்கிழை யாமினா தமையு
மவ்வலந் தொடையா ரப்துல்முத் தலிபு
மன்னையும் பொருந்துறப் போற்றிக்
கவ்வையங் கழனி குனையினிற் புகுதுங்
கருத்தினக் கருதியே யுரைத்தார். 1.6.99

390 எண்ணரும் பெருமைப் புகழுசை னயினா
ரெடுத்தியற் றியபல வரிசைப்
புண்ணியப் பொருளாய் வருமபுல் காசிம்
புந்தியி னடுவுறப் பொருந்திக்
கண்ணினு மிருக்கு முகம்மது நபியைக்
கடிதினில் வாகனத் தேற்றி
நண்ணிய குனையின் வழியினைக் கடந்து
நடந்துதம் மனையினைச் சார்ந்தார். 1.6.100

அலிமா முலையூட்டுப் படலம் முற்றிற்று.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:19 pm

1.7. இலாஞ்சனை தரித்த படலம்

391 புரிசைசூழ் மக்கந் தன்னிற் போந்தவ ணிருந்தும் பின்னர்த்
திருவுறை குனையி னென்னும் பதியினிற் சேர்ந்தும் பாரிற்
குரிசின்மா முகம்ம தென்னுங் குலமணி தமக்கு நாளின்
வருடமூ றென்னத் தேகம் வளர்ந்தது மிரட்டி தானே. 1.7.1

392 ஆண்டுமூன் றுறைந்து நாலா மாண்டுசென் றதற்பின் செல்வம்
பூண்டமா மயிலே யன்ன பொலன்கொடி யலிமா வென்னுந்
தூண்டிடா விளக்கின் செவ்விச் சுடர்மதி முகத்தை நோக்கிச்
காண்டகாப் புதுமை வண்மை முகம்மது கவல லுற்றார். 1.7.2

393 சேட்டிளஞ் சிங்க மென்னுந் திறலுரை யப்துல் லாவும்
பூட்டிய தனுவால் வெற்றி பொருந்துகை லமுறத் தென்னுந்
தோட்டுணைத் தனைய ரெங்கே சொல்லுக வனையே யென்னக்
கேட்டபி னலிமா வென்னுங் கேகய மறுத்துக் கூறும். 1.7.3

394 பிள்ளைமென் கனியே செல்வம் பெறுந்தவப் பலனே யெந்த
மூள்ளகத் துயிரே மாமை யோங்கிய முகம்ம தேயிந்
நள்ளிருட் பொழுது நீங்கி விடிந்தபி னம்பி மார்க
டுள்ளுமென் மறிகண் மேய்ப்பத் தொடர்ந்தனர் காட்டிலென்றார். 1.7.4

395 கானகத் தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாமென்
றானவ ருரைப்ப நவ்வி யகுமதுங் கருத்தி லுற்றுத்
தூநகைத் தளரச் செவ்வாய்த் துடியிடைக் கொடியை நோக்கி
யானுமவ் வழிசெல் வேனென் றடுத்தடுத் துரைப்ப தானார். 1.7.5

396 வரமுறு முகம்ம திந்த வாசக முரைப்பத் தேன்பாய்
விரைமலர் செருகுங் கூந்தன் மென்கொடி யலிமா கேட்டுக்
கரையிலா வுவகை பொங்கிக் காளைதம் வதன நோக்கி
நிரைதரு தகர்ப்பின் னாளைச் செல்கென நிகழ்த்தி னாரே. 1.7.6

397 விரிகதிர்ப் பருதி வெய்யோ னுதித்தபின் விளங்குஞ் செவ்வித்
துரைமுகம் மதுக்கு வெள்ளைத் துகிலெடுத் தரையிற் சாத்திச்
சிரசினி னெய்யுந் தேய்த்துச் செறிமணிக் கோல்கைக் கீய்ந்து
குரிசிலைக் குறித்துச் சூழ்ந்த குமரரை விளித்துச் சொல்வார். 1.7.7

398 கற்செறி பொதும்பிற் கூர்ந்த கண்டக வனத்திற் சேர்ந்த
புற்செறி வில்லாப் பாரிற் பொறியரா வுறையுங் கானில்
விற்செறி வேனற் காட்டில் விரிநிழ லில்லாச் சார்பின்
மற்செறி புயத்தீர் சேறன் மறுமென மறுத்துஞ் சொல்வார். 1.7. 8

399 பணர்விரி நிழலுந் துய்ய பசும்புலி னிடமும் வாய்ந்த
மணம்விரி வனசம் பூத்த மடுவுறை யிடமு மார்க்கு
முணவுறை கனியுஞ் சேர்ந்த வொருங்கினி லாடு மேய்ப்பக்
குணவரை யனைய செவ்விக் குரிசிலைக் கொடுபோ மென்றார். 1.7.9

400 இலங்கிழை யலிமா கூறும் வார்த்தைகேட் டிளையோ ரெல்லா
நலங்கிளர் மனம்பூ ரித்து நன்மொழி யீதென் றெண்ணித்
துலங்குசெம் மணியைச் சூழ்ந்த பலமணி போலச் சூழ்ந்து
குலங்கெழுங் கொறியின் பின்னே முகம்மதைக் கூட்டிச் சென்றார். 1.7.10

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக