ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:52 pm

கவியேறு உமறுப் புலவரவர் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்

அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர். அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.

உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.

இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.

புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.

ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரை அணுகி, கவலைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று, எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார். உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும், அவருக்குப் பகரமாக அவரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும், வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.

அதைச் செவியேற்ற வாலைவாருதி, தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!' என்று உண்டாயின. அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார்.

அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!' என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:

"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று
சரிசமா சனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு
மமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்
தீரனணி வாயில்வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு
முள்ளச்சம் வையும்பிள்ளாய்!"


இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி, உளம் பதறி, மெய் நடுக்குற்று, தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு அகன்றார்.

இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:54 pm

சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு

தமிழகத்தில் ஆங்காங்கிருந்த முஸ்லிம் மக்கள் இலக்கிய ஆர்வத்துடன் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்டு வருவது அன்றைய வழக்கமாக இருந்தது.அக்காலத்தில்,இராமநாதபுரச் சேதுபதி மன்னரின் அமைச்சராய் இலங்கி வந்த செய்கப்துல் காதிர் என்ற 'சீதக்காதி மரைக்காயர்'அவர்கள் இதனை உணர்ந்து, முஸ்லிம்கள் அவர்களின் மார்க்க அடிப்படையில் அமைந்த பேரிலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்கவேண்டும் என்ற பெருவிருப்பை உடையவராயிருந்தனர். தமது இவ்வேட்கையைத் தணிப்பதற்கான நல்வாய்ப்பை எதிர்நோக்கியும் காத்திருந்தார்.

இவ்வாறிருக்கையில்,ஒருநாள் அரசாங்க வேலையின் நிமித்தம் சீதக்காதி மரைக்காயர் அவர்கள் எட்டயபுர அரசவைக்குச் செல்ல நேர்ந்தது.ஆங்கு உமறு என்ற பெயரில் ஒரு புலவர் இருக்கக் கண்டு,'இவரே பெருமானாரின் வாழ்க்கையைக் காப்பியமாகப் பாட வல்லவர்'என்று ஓர்ந்தார். சின்னாட்கள் கழிந்த பின்னர் தமதில்லத்தில் நிகழ்ந்த விருந்தில் கலந்துகொள்ள உமறுப் புலவர் வந்த போது தமது உள்ளக் கிடக்கையை அன்னாரிடம் வெளியிட்டார் சீதக்காதி வள்ளல். புலவரும் இத்னை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். எனினும்,வள்ளல் பெருமானாரின் வரலாற்றுச் செய்திகளை உரையாகத் தருவது யார் என்ற கேள்வி எழுந்தது.சீதக்காதி வள்ளல் தம் ஆன்மீக வழிகாட்டியான 'இறைநேசர் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா'அவர்களை அணுகி, பெருமானாரின் வாழ்க்கைச் சரிதையினைக் காவியமாகப் பாட உமறுப் புலவருக்கு உரை வழங்குமாறு கோரி நின்றார்கள்.

உமறுப் புலவரின் அலங்கோலத் தோற்றத்தைக் கண்டு,உரை கொடுக்க அப்பா அவர்கள் இசையவில்லை.உளம் வாடிய உமறுப் புலவர்,பெருமானாரின் வாழ்வைக் காவியமாக்கி, அதன் நிமித்தமாக அன்னாரைத் தாம் காணும் நாள் எந்நாளோ என்று ஏங்கி,பள்ளிவாயி லுக்குள் சென்றமர்ந்து தம் உள்ளத்து உணர்ச்சிகளைப் பாக்களாகப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு எண்பத்தெட்டு பாடல்கள் பாடி முடித்தபோது புலவரைத் துயில் ஆட்கொண்டது. பெருமானார்(ஸல்) அவர்கள், புலவரின் கனவில் தோன்றி, மறுபடியும் அப்பா அவர்களிடம் சென்று உரை கேட்குமாறு பணித்தனர். கண் விழித்த உமறுப் புலவர் கருணை நபியவர்களின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, அப்பா அவர்களிடம் சென்று உரை கோரினர். முன்போலன்றி, புலவரை எதிகொண்டழைத்து உபசரித்த அப்பா அவர்கள்,சீறா உரை கொடுக்கச் சம்மதித்தனர்.அப்பா அவர்கள் தாங்களாகவும்,தம் மாணாக்கராகிய மஹ்மூது பந்தர் என்று வழங்க பெற்ற 'பறங்கிப் பேட்டையைச் சார்ந்த 'மாமூ நைனார் லெப்பை' என்பார் மூலமும் உமற்ப் புலவருக்கு உரை வழங்கினர்.அச்செய்திகளைக் கொண்டு சீறாக் காப்பியம் படைக்கத் தொடங்கினார் நம் புலவர்.

இதற்கிடையில்,சீறாவைப் பாடப் பேருதவியாக இருந்த சீதக்காதி மரைக்காயர் அவர்கள் இறையடி சேர்ந்தனர். காப்பியம் படைத்து வந்த உமறுப் புலவரின் உள்ளத்தில் பேரிடி விழுந்தது.அந்நிலையில், புலவரின் இரங்க தக்க நிலையை உணர்ந்த 'அபுல்காசிம் மரைக்காயர்'என்ற வள்ளல் பெருமான்,புலவரை அன்புடன் ஆதரித்து,சீறாவை இயற்றத் தாம் உறுதுணையாயிருப்பதாக வாக்களித்துப் பல உதவிகளும்செது ஊக்கினார். 'சீறாப்புராணம்"என்ற ஒரு பெருங்காவியம் உருவெடுத்தது. ஈடிணையில்லா இப்பேருதவி- களுக்கு நன்றி சொலும் முகத்தான், உமறுப் புலவர், அபுல் காசிம் மரைக்காயரைத் தம் சீறாப்புராணத்தில் பல இடங்களில் மறவாமல் நினைவு கூர்ந்து போற்றி புகழ்ந்துள்ளார்.

உமறுப் புலவரின் 'சீறாப்புராணம்'அண்ணல் பெருமானாரின் வாழ்க்கை முழுவதையும் கூறவில்லை என்பது,வியப்பிற்குரியதும்,வருந்தத் தக்கதுமாகும்!யாது காரணத்தாலோ சீறாவில் நபியவர்களின் வரலாறு முழுமையாகக் கூறப்பெறவில்லை.இருப்பினும், இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் சீறாப் புராணத்திற்க்கு தனியோர் இடமுண்டு.

பெருமானாரின் தூய திருவாழ்க்கையின் எஞ்சிய பகுதிகளை பனூ அகமது மரைக்காயர் யாத்து முடித்தார்கள்.இதுவும் 'சின்ன சீறா'என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.

பண்டிதர்களிடையே ஓரளவு பழக்கத்தில் இருக்கும் சீறா,சாதாரண வாசகர்களிடையே நிலையான ஓர் இடத்தைப் பெறாமல் போனது வியப்பிற்குரியதாகும்.சீறாவின் பிரதிகள் எளிதில் கிடைக்காமல் இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பாடல்களில் விரவிக் கிடக்கும் அரபி, பார்சிச் சொற்கள், படிப்போருக்கு மலைப்பைக் கொடுத்திருக்கலாம். இக்குறைகளை ஓரளவுக்குச் சரிசெய்வதற்கு நாங்கள் முயன்றுள்ளோம்.இப்பணியில் எங்களை ஈடுபடுத்திய வல்ல நாயனுக்கு மீண்டும் மனம்,மெய் மொழி ஆகியவற்றால் நன்றி கூறி அமைகிறோம். வஸ்ஸலாம்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:55 pm

சீறாப்புராணம் - முதலாவது காண்டம் - விலாதத்துக் காண்டம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்


1.01 கடவுள் வாழ்த்துப் படலம்

காப்பு

திருவுருவா யுணருருவா யறிவினொடு
தௌிவிடத்துஞ் சிந்தி யாத
அருவுருவா யுருவுருவா யகம்புறமுந்
தன்னியிலா வடங்கா வின்பத்
தொருவுருவா யின்மையினி லுண்மையினைத்
தோற்றுவிக்கு மொளியா யாவு
மருவுருவாய் வளர்காவன் முதலவனைப்
பணிந்துள்ளி வாழ்த்து வாமே.

கடவுள் வாழ்த்துப் படலம்

1 திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தௌிவினுந் தௌிவதாய்ச் சிறந்த
மருவினு மருவா யணுவினுக் கணுவாய்
மதித்திடாப் பேரொளி யனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்த பல் லுயிரின்
கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. 1.1.1

2 சிறந்தமெய்ப் பொருளை யழிவிலா மணியைத்
தெரிந்துமுக் காலமு முணர்ந்து
துறந்தவ ரிதயா சனத்திருந் தவனைத்
துடரின்ப துன்பமற் றவனைப்
பிறந்தபல் லியிரின் மனத்தள வுறைந்து
பிறப்பிறப் பென்றிலா தவனை
மறந்தவர் சுவர்க்கப் பதியையு மறந்து
மண்ணினின் மதிமறந் தவரே. 1.1.2

3 இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்ப
வெடுத்தகைக் கதையினா லுறுக்கி
வருமவ ரெதிர்நின் றொருமொழி கேட்ப
மறுமொழி கொடுத்திட வறியேன்
தருமமும் பொறையு மறிவுமற் றறிந்துன்
றன்னையு மென்னையு மறியப்
பெருவரந் தருவா யாதிநா யகனே
பேதியாச் சோதிமா முதலே. 1.1.3

4 கடலினை மலையைக் கதிர்மதி யுடுவைக்
ககனமற் றறுஷொடு குறுசைப்
புடவியைச் சுவனப் பதியினை யமரர்
பொருந்திட மடுக்கடுக் கவையை
வடிவுறத் தனது பேரொளி யதனால்
வகுத்துவெவ் வேறென வமைத்தே
யுடலினுக் குயிரா யுயிரினுக் குடலா
யுறைந்தமெய்ப் பொருளினைப் புகல்வாம். 1.1.4

5 வேறு

அருமறை தெரிந்துநீதி நெறிமுறை நடந்துதீனிவ்
வகிலதல மெங்கு மீறவே
யொருகவிகை கொண்டுமாறு படுமவரை வென்றுநாளு
முறுபுகழ் சிறந்த வாழ்வுளோர்
திருவொளி வெனும்ஹபீபு நபிமுகம்ம தன்றுவானர்
சிரமிசை நடந்து சோர்வுறா
விருசரண நம்பினோர்கள் வரிசைக ணிறைந்தபேர்க
ளெவரினு முயர்ந்த பேர்களே. 1.1.5

6 வேறு
கவியா லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி
யடைவார் கலக்க மறவே
செவியார மெய்ப்பொருளை யறிவார் மனத்தினுறு
செயல்கே டகற்றி விடுவார்
புவியார மொய்த்தநெறி மறைநாலினுக்குமொரு
பொறியா யுதித்த வடிவார்
நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை
நடுநாவில் வைத்த வர்களே. 1.1.6

7 வேறு
ஆதிதன் கிருபை தாங்கி யகிலமீ தரசு வைகித்
தீதிலாச் சோதி போலத் தீன்பயிர் விளக்கஞ் செய்தே
மூதறி வுடைய ரான முறுசலீன் களையெந் நாளும்
போதர வுடனே போற்றிப் புந்தியின் மகிழ்ச்சி செய்வாம். 1.1.7

8 வேறு
தாரா தரத்தையே மேலே கவிக்கவே
தாடாண்மை பெற்ற நயினார்
பேரா யுதிக்கவே வானோ ருரைக்கவே
பேறாய் விளக்கு முரவோ
ராராய்வின் மிக்கபேர் நூறாயிரத்துநா
லாறாயிரத்து நபிமார்
மாராய மிக்கபேர் வாயார வைத்தபேர்
வாழ்வார் சுவர்க்க பதியே. 1.1.8

9 வேறு
புரசைக் கடக்கரிக ணிரைதட் டற்க்குபிரர்
புவியைப் படக்க டவியே
சரகுற்ற நற்பதவி வழியிற் புகுத்தியுயர்
தலைமைக்கு வைத்த பெரியோர்
பிரசத் துளித்திவலை சிதறிக் கிடக்குமிரு
பிணையற் புயத்து நயினா
ரரசுக்கு வைத்தநெறி வரிசைக்கு மிக்கதுரை
யபுபக் கரைப்புகலுவாம். 1.1.9

10 வேறு
அமரிலெதிர்த் தோர்களாவி யெமதிசையைத் தேடியோட
வடருமடற் சூர வீரவேள்
மமதைகெடச் சாதிநீதி முறைமைதனக் காகவோது
மகனைவதைத் தோரொ றாமலே
திமிரபகைப் பானுமேனி கருகிவிடப் பார்வையேவு
தெரிமறையிற் கார ணீகனா
ருமறுதிருத் தாளைநாளு மனதினினைத் தோதுவோர்தம்
முரியதவப் பேறு மீறுமே. 1.1.10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:55 pm

11 வேறு
விதுமாற வொளிவான வதனாதி நபிநாவில்
விளைவான திரு வேதமே
பதிவாக வொருசேக ரமதாக நிலமீது
பயிராக வுரை தூவினோர்
சதுமாம றையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்க
டமதாவி யென வாழ்வோ
ருதுமானை யொருகாலு மறவாம லிருகாலு
முளமீது நினை வாமரோ. 1.1.11

12 வேறு
படிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரி
படுதிரை யளற தாகவே
வடவரை யசையாவான முகடுடை படவறாத
மழைமுகில் சிதறி யோடவே
யடையலர் கெடிகள்கோடி யிடிபடு படலதூளி
யலரியி னுடலின் மூழ்கவே
நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர
நரர்புலி யலியை யோதுவாம். 1.1.12

13 நலிவற வுலகநீதி நெறிமுறை பெருகநாளு
நமருயி ரரிய காவலா
யொலிகட லுலகமீது தெரிதர வரியதீனு
முறுகதி ருதைய மாகவே
மலிபுக ழரசர்சீய மிர்கமத நறைகுலாவு
மறைநபி மருக ராகிவா
ழலிதிரு மதலையான வசனுசை னுபயபாத
மனுதின மனதி லோதுவாம். 1.1.13

14 வேறு
ஆலகால வாரிபோலு மாகொடூர மாகிய
காலகேள்வி தானடாத காரணீக ராளவே
தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர்
நாலொடாறு பேர்கள்பாத நாவினாளு மோதுவாம். 1.1.14

15 வேறு
ஆத மீன்றமனு நீதி யாண்டமுறை
யாலு மோங்குபுக ழாகினோர்
தூத ராங்கடவு ணாவி லாய்ந்தமறை
தூவி நான்கு மத்க பாகினோர்
நீத வான்களுறு போத வான்கள்குரு
நேர்மை யாந்தகைமை யாகினோர்
வேத வான்களெனு நாலிமாம்கள்பத
மேலு மியாம்புகல வேணுமே. 1.1.15

16 வேறு
உரமுறு தீன்பா ரெல்லா மொளிரவே விளக்கஞ் செய்யுந்
துரமுறு மவுலி யாவாய்த் தோன்றின பேர்க்கு மேலாம்
வரமுறு முகியித் தீன்செம் மலரடி யிரண்டு மென்றன்
சிரமிசை யிருத்தி வாழ்த்திச் செந்தமிழ்ப் பனுவல் செய்வேன். 1.1.16

17 நம்மையா ளுடையான் வேத நபிதிரு வசனந் தீனோர்
சம்மதித் திடப்பா ரெல்லாந் தழைக்கவே விளக்கஞ் செய்தோ
ரிம்மையு மறுமை யும்பே றிலங்கிய சதக்கத் துல்லா
செம்மல ரடியி ரண்டுஞ் சிந்தையி லிருத்தி னேனே. 1.1.17

18 அவையடக்கம்
வேறு
திக்க னைத்தினும் பாரினுந் தீவினுஞ் செங்கோற்
புக்க நன்னெறித் திகிரிமன் னவர்கண்முன் பொருந்தக்
தக்க கூலியுஞ் செய்துண வறிகிலான் சரிபோன்
மிக்க செந்தமிழப் புலவர்மு னியான்விளம் புவதே. 1.1.18

19 படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற
வெடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே
மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல்
வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே. 1.1.19

20 அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன்
படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்த
லிடியி டித்திடு மாரவா ரத்தினுக் கெதிரோர்
நொடிநொ டிப்பது போலுமொத் திருந்தென் நூலே. 1.1.20

கடவுள் வாழ்த்துப் படலம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:56 pm


1.2. நாட்டுப்படலம்


21 தருங்கொடை நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்து மிஞ்சி
நெருங்கியே விசும்பி லண்ட முகடுற நிறைந்த வேபோ
லிருங்கண வெள்ளை மேக மிரைபசுங் கடல்வீழ்ந் துண்டோர்
கருங்கட லெழுந்த தென்னக் ககனிடைல் செறிந்து மீண்ட. 1.2.1

22 வேறு
அகில மெங்கணுந் திடுக்கிட வாய்திறந் ததிர்ந்து
மிகும ழைக்குல மடிக்கடி விழிப்பபோன் மின்னிக்
ககன மெண்டிசை யடங்கலும் பரந்துகா லூன்றிச்
சிகர பூதர மறைதரச் சொரிந்தன செருமி. 1.2.2

23 அதிரு மாமழைத் துளியிடை யிடையணி யணியாய்
முதிரு மிந்திர கோபமு மாலியு முதிர்ந்த
கதிர்செய் முத்தமு மாணிக்க ராசியுங் கலந்தே
யுதிரும் வண்ணமொத் திருந்தன கிரியொருங் கொருங்கே. 1.2.3

24 பம்மி யெங்கணும் பொழிதரு சாரல்வாய்ப் பட்டுக்
கம்மி னத்தக டுறக்கொடு கியகுளிர் கலக்க
மும்ம தக்கரி களுமரி களுமுர ணறவே
சம்ம தித்தொரு புடைகிடப் பனவெனச் சாரும். 1.2.4

25 தந்தி மான்மரை யணில்கொடு வரிதக ருடும்பு
மந்தி சிங்களங் கவரிமா வழுங்குதே வாங்கு
முந்து மான்மத மெண்குசெந் நாய்பணி முண்மா
நந்தி மிஞ்சிய விலங்கினங் கொடுகிமெய்ந் நடுங்கும். 1.2.5

26 வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவெய் தான்றி
கோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சி
நாங்கு காரகில் குங்கும மிலவு நாரத்தை
தாங்கும் வேரற வரையொடு வரையிடை சாய்க்கும். 1.2.6

27 விலங்கி னங்கடங் குலத்தொடுங் குழுவொடும் வெருட்டிக்
கலங்கு மஞ்சிறைப் பறவைக ளைனைத்தையுங் கலைத்தே
யிலங்கு பைங்கனி சிதறிடத் தருக்களை யிடறி
நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன நாரம். 1.2.7

28 வேறு
வரிவிழிச் செவ்வாய்க் குறத்திய ரிதணு
மனையையுந் தினையையும் வாரிப்
புரிநரம் பிசையாழ் தொண்டகப் பறையும்
பொடிபடத் துறுகலின் மோதி
விரிதலைக் குறவர் குழாத்தொடும் வெருட்டி
விளைந்தமுக் கனிசத கோடி
சரிதர வீழ்த்தி மரகதக் கிரணத்
தடவரை யருவிகொண் டிறங்கும். 1.2.8

29 மலையெனு மரசன் புயங்களைத் தழுவி
மகிழ்ச்சிசெய் தவனுழைச் சிறந்த
நிலைகெழு பொன்னு முரகசெம் மணியு
நித்தில ராசியுங் கவர்ந்து
தொலைவிலாப் பண்ட மனைத்தையும் வாரிச்
சுருட்டியே யெல்லைவிட் டகலும்
விலைமகள் போன்று பலபல முகமாய்
வெள்ளரு வித்திரள் சாயும். 1.2.9

30 வேறு
தாது குத்துவண் டார்த்தெழத் தருத்தலை தடவி
வீதி வாய்நுரை தரவரு பாகெழ வீசிக்
காது மாகளி றெனநதி கழைக்கடங் காது
மோதிக் காலினா லெற்றியே யணையிட முறிக்கும். 1.2.10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:56 pm

31 பரந்த வெண்ணுரைத் துகிலுடுத் தறற்குழற் பரப்பி
விரைந்து பாய்கயல் விழியெனத் திரைக்கரம் வீசிச்
சுரந்த புற்புதத் தனத்துடன் சுழியுந்தி தோற்றப்
பொருந்து மானதி விளங்கிழை மகளிரைப் போலும். 1.2.11

32 கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி கரிக்கோ
டுடைந்த முத்தம்வெண் டந்தமுச் சுடரொளி யொதுங்கக்
கடந்த செம்மணிப் பையுடன் கொடுகட லேற
நடந்த வாணிக னொத்தது செழுங்கழை நதியே. 1.2.12

33 வேறு
இத்தகைக் குறிஞ்சி நிலத்தினைக் கடந்தே
யெரிதழற் பாலையிற் புகுந்து
மைத்தடங் கூந்தற் கருவிழிச் செவ்வா
யெயிற்றியர் வயிறலைத் தேங்கக்
கைத்தலத் தேந்து குழந்தையுஞ் சிறாரும்
வேடர்தங் கணத்தொடும் வெருட்டி
முத்தணி சிறப்ப விருகரை கொழித்து
முல்லையிற் புகுந்தது சலிலம். 1.2.13

34 பாறயிர் நறுநெய்க் கலத்தொடுங் கலக்கிப்
பட்டியுங் குட்டியுஞ் சிதறிச்
சூறையிட் டுதறி நெய்முடை கமழுஞ்
சுரிகுழற் றொறுவிய ருடுத்த
கூறையுங் குழலுங் குடுக்கையுந் தடுக்குங்
கொண்டெடுத் தவர்நிரை சாய்த்து
வேறரை யரைப்போற் பெருவளங் கவர்ந்து
மருதத்திற் பரந்தன வெள்ளம். 1.2.14

35 வேறு
கன்னன் மானதி வெண்டிரை நுரைகரை புரளத்
தென்னி லைப்பகுப் பாகிய காலெலாஞ் செருமி
யன்ன மென்சிறைப் பெடையொடுங் குடம்பைவிட் டகலத்
துன்னு மேரியுந் தடங்களு நிறைந்தன தோயம். 1.2.15

36 அலையெறி ந்திரை கடலென வருநதி யதனைத்
தொலைவின் மள்ளர்கள் குளந்தொறும் புகுத்திய தோற்றங்
கொலைம தக்கரிக் குழுவினை வயவராய்க் கொடுபோய்
நிலைத ரித்திடும் படுகுழிப் படுத்தவை நிகர்க்கும். 1.2.16

37 தடமு மேரியும் வாவியுங் கழனியுஞ் சலசக்
கிடங்கு மெங்கணு நிறைதரப் பெருகுகீலாலங்
குடம்பை யின்பல பேதமா கியசத கோடி
யுடம்பு தோறினு முயிர்நின்ற நிலையினை யொக்கும். 1.2.17

38 வேறு
ஏரியை யுடைத்துக் குளங்கரை தகர்த்தே
யிடிபட வணையினை முறித்துச்
சேரியுட் பரந்து கொல்லையுட் புகுந்து
செழுங்கருப் பாலையைச் சாய்த்து
வேரியஞ் சலசக் கழனியைச் யுழக்கி
விரிதலை யரம்பையைத் தள்ளி
வாரியிற் செறித்து பணையெலா நிரப்பி
மட்டிலா மலிந்தன வனமே. 1.2.18

39 வேறு
அலையெ றிந்திரு கரைவழி யொழுகுகம் பலையுங்
கலையும் வெள்ளனஞ் சிறைவிரித் தசைத்த கம்பலையு
மலைதி றந்தன மதகின்வாய் வழிந்தகம் பலையுஞ்
சிலைத ரித்தபே ரொலிபெரும் படையொலி சிறக்கும். 1.2.19

40 முறைமு றைக்கிணைப் பறையொலி கடலென முழங்க
நிறையுஞ் சேரிவிட் டெழுந்தன ருழவர்க ணெருங்கிச்
செறிக டக்களி றினமென வயின்வயின் றிரண்டு
மறிபு னற்கரை யிடந்தொறுஞ் செறிந்தனர் மலிந்தே. 1.2.20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:57 pm

41 மட்டு வாய்வயி றாரவுண் டெண்ணிலா மள்ளர்
கொட்டு வாங்கியே யிருபுயங் குலுங்கிடக் கரண்கள்
வெட்டு வார்சிலர் மென்கரத் தேந்தியே வரம்பு
கட்டு வாரடைப் பார்திசை தொறுங்கணக் கிலையே. 1.2.21

42 வேறு
தெரிபொறி முகட்டுக் கவட்டடி யலவன்
சிதைந்திடக் கமடமுள் ளழுந்த
வரிவளை நெரிய வலம்புரிக் குலத்தின்
வயிற்றிடை கொழுமுகந் தாக்கி
விரிகதிர்த் தரள மணிபல வுகுப்ப
வெருண்மதக் கவையடிப் பேழ்வாய்
நிரைநெறி மருப்புக் கரும்பக டிணக்கி
நீள்வய லெங்கணு முழுதார். 1.2.22

43 முள்ளரைப் பசுந்தாள் வட்டிலைக் கமல
முகையுடைந் தொழுகுதேன் றெறிப்பக்
கள்ளவிழ் குவளை யொருபுறஞ் சரியக்
கடிமலர்க் குமுதமு மடிய
மள்ளர்கார் சேற்றி லிடறிய பதும
மணியின மலரளி யெழுப்ப
வெள்ளநீர் பரப்பு கழனிக டோறு
மென்கருஞ் சேறுசெய் தனரே. 1.2.23

44 சுந்தரப் பொறியஞ் சிறையறு காலே
ழிசையளி தொகுதியிற் கூடி
மந்தர மனைய தருவின்மேல் வீழ்ந்து
வாய்விட முழங்கிய வோதை
கொந்தெறி கமலங் குமுதஞ்செங் கழுநீர்
குடியொடு மடிந்தன வினிமே
லந்தர மலது வேறிட மிலையென்
றழுகுரன் மயங்குவ போலும். 1.2.24

45 சுரும்பின மிருந்து தேனுண்டு தெவுட்டிச்
சுருதிசெய் பன்மலர் சிறந்த
விரும்படி கிடங்கிற் கிடந்துமூச் செறிந்த
வெருமையின் கவையடிப் பரூஉத்தா
ணிரம்பிடப் பதிந்த சலஞ்சலத் தரள
நீணிலா வெறிப்பது நிறைந்த
கரும்பொறிக் கவைநாத் துளையெயிற் றரவு
கவ்விய கதிர்மதி போலும். 1.2.25

46 கலன்பல வணிந்து தொண்டியுண் டெழுந்து
கதிரவன் றனைக்கையாற் றொழுது
குலந்தரு தெய்வ வணக்கமுஞ் செய்து
குழுவுட னுழுநர்கள் கூண்டு
நிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கி
நென்முளை சிதறிய தோற்றம்
பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப்
பொன்மழை பொழிவது போலும். 1.2.26

47 படர்மருப் பெருமைக் குடம்புரை செருத்தற்
பருமுலைக் கண்டிறந் தொழுகி
நடைவழி சொரியு மமுதமும் வாழை
நறுங்கனி யுகுத்தசெந் தேனு
முடைபடு பனசப் பசுங்கனிச் சுளையி
லூற்றிருந் தோடிய தேனுங்
கடிமலர் போர்த்த வரம்பினைத் தகர்த்துக்
கழனியிற் பரந்துபாய்ந் துடைக்கும். 1.2.27

48 அருமறை நெறியும் வணக்கமுங் கொடையு
மன்புமா தரவுநல் லறிவுந்
தருமமும் பொறையு மிரக்கமுங் குணமுந்
தயவுஞ்சீ ரொழுக்கமு முடையோர்
பெருகிய செல்வக் குடியொடு கிளையும்
பெருத்தினி திருந்துவாழ் வனபோன்
மருமலர்ப் பழனக் காடெலா நெருங்கி
வளர்ந்தது நெல்லிலை நாற்றே. 1.2.28

49 கோதற வெழுந்த நாற்றினைப் பறித்துக்
குவித்திடு முடியிட மடுத்துக்
தீதுறுங் கருங்கட் செய்யவாய் வெண்பற்
சிற்றிடைக் கடைசியர் வாரிப்
பூதர மனைய சுணங்கணி முலையிற்
புள்ளியிற் சேதகம் போர்ப்ப
வாதரம் பெருகி நிரைநிரை வடிவா
யணியணி நாற்றினை நடுவார். 1.2.29

50 கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக்
கடைசியர் கரங்கடொட் டொழுங்காய்ச்
செய்யினிற் பதிப்பத் துளிகருஞ் சேறு
தெறித்திடுஞ் செழுமுகச் செவ்வி
துய்யவெண் டிரைப்பாய் சுருட்டிமே லெறியுந்
தொடுகடன் முகட்டிடை யெழுந்து
வையகஞ் சிறப்ப வருமுழு மதியு
மறுவுமொத் திருந்தன மாதோ. 1.2.30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:57 pm

51 பனைமதுத் தேக்கி யிருவிழி சேப்பப்
பைங்கழை நிகர்த்ததோ ளசைய
வனநடை சிதையச் சேவடி பெயர்த்திட்
டள்ளலஞ் சேற்றிடை நடுவோர்
சினமத கரிக்கோ டெனுமுலைத் தடத்திற்
சேதகந் தெறிப்பது திரண்ட
வனசமென் முகையிற் பொறிவரி யறுகால்
வண்டுமொய்த் திருப்பது போலும். 1.2.31

52 முற்றிழை கிடந்த முலைக்குவ டசைய
முகிறவழ் கருங்குழ னெகிழச்
சிற்றிடை யொசிய மதிமுகம் வெயர்ப்பச்
சேற்றிடை நாற்றினை நடுவோர்
பற்றுமென் கரத்திற் கரும்பொனின் கடகம்
பசியநெற் பயிரொளி பாய
மற்றெனை யுரைப்ப விரிகதிர் பரப்பு
மரகதக் கடகமொத் திருந்த. 1.2.32

53 வெறிமது வருந்தி மரகதக் கோவை
மென்பிடர் கிடந்துருண் டசையக்
கறுவிய மனத்தோ டினத்தொடு மிகலிக்
கடைசியர் களிப்பொடு தவளச்
சிறுநகை தரளப் பவளமெல் லிதழிற்
செழுமலர்க் கைவிரற் குவித்துக்
குறிகுரற் குரவை கூன்பிடர்ப் பேழ்வாய்க்
குடவளைக் குரவையோ டிகலும். 1.2.33

54 கூந்தலம் பிடிமா மென்னடை பயிலுங்
குடமுலைக் கடைசியர் செழுங்கைக்
காந்தண்மெல் விறர்குங் கடுவரி விழிக்குங்
கடைந்திணைக் கியகணைக் காற்குஞ்
சேந்திணை பொருவா தினமென வெருவிச்
செங்கயல் வரிவராற் கௌிறு
பாய்ந்தயல் போய வனத்திடை யொளித்துப்
பங்கமெய் படப்பயப் படுமே. 1.2.34

55 குருகின மிரியப் புள்ளினம் பதறக்
கொக்கினம் வெருவிட வெகினம்
விரிமலர்க் கமலப் பாயல்விட் டகல
மென்சிறைப் பேட்டனந் துடிப்பச்
சொரிமதுத் துளித்துக் குவளையாய் சிதறச்
சுருட்டிவால் விசைத்திடத் துள்ளி
வரிவராற் பகடு வளைநில வெறிக்கு
மடைத்தலைக் கிடந்துமூச் செறியும். 1.2.35

56 வரிசையிற் செறிந்த நிரைபசுஞ் சாலி
வளர்கிளைக் கிளையெனக் கிளைத்துப்
பெருகுசூன் முதிர்ந்தீன் றாரமு துறைந்து
பிடர்குனி தரக்குலை சேந்து
சொரிகதிர்ப் பவள நிறம்பல படைத்துச்
சுடர்மணி முத்தினந் தெறிப்பத்
தரையினிற் படிந்தே யருட்கை சுரந்த
தருவினம் வெருவிடக் கிடக்கும். 1.2.36

57 கொத்தலர் சூடி யரைத்துகி லிறுக்கிக்
குடமதுக் கைமடுத் தருந்தி
மைத்தவழ் கனகக் கிரிப்புயந் திரண்ட
மள்ளர்கள் வனப்பினுக் குடைந்த
சித்தசன் கரவாட் பறித்ததை வளைத்த
செயலெனப் பிள்ளைவெண் பிறைவாட்
கைத்தலத் தேந்திக் கழனியிற் புகுந்து
கதிரரிந் தரிநிரை யிடுவார். 1.2.37

58 திருந்திய வரியைக் கொடுங்கையிற் கிடத்தித்
திரைசெய்து சும்மையிற் சேர்த்துக்
கருந்தடங் கூந்தற் செவ்வரி வேற்கட்
கடைசியர் குழாத்தொடுந் திரண்டு
விரிந்தசெங் கமலக் கரம்பல வருந்த
விசித்திறுக் கியசுமை யேந்திப்
பொருந்திய வரப்பி நெறிகடைக் கதலிப்
புலியடிக் குலைத்தலை சாய்க்கும். 1.2.38

59 அசைந்தசிற் றிடைமென் கொடிவருந் திடநீ
ளணிவட மார்பிடைப் புரளப்
பசுங்கிளிப் பரிவேள் படையெனத் திரண்ட
கடைசியர் சுமையெலாம் பரப்பி
யிசைந்திட நிறைத்துக் குவித்தநெற் போர்க
ளெங்கணு மிலங்கிய தோற்றம்
விசும்பினைத் தடவ வரைசத கோடி
வீற்றிருந் தனவெனச் சிறக்கும். 1.2.39

60 கார்த்தடக் களிற்றின் வனப்பினை யழித்த
கருங்கடா வினம்பல விணைத்துப்
போர்த்த்லை திறந்து திரித்துவை நீத்துப்
பொன்னிறச் செந்நெல்லைக் குவித்துச்
சேர்த்திடுஞ் சகடந் தொறுந்தொறு மியற்றித்
திரண்மனை வயின்வயின் செறிப்பா
ரார்த்தபே ரோதை யினமணி கொழிக்கு
மறைதிரைக் கடலினைப் பொருவும். 1.2.40


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:57 pm

61 செந்நெலிற் பெருக்கின் கனைகுரற் சகடந்
திசைதொறு மலிந்தன செருக்குங்
கன்னலங் கழனி புகுந்தறுத் தடைந்த
களமர்க ளொலிகுரற் செருக்குந்
துன்னுபூங் கமுக சிதறுசெம் பழுக்காய்
சுமப்பவர் கம்பலைச் செருக்கு
மன்னவன் வகுதைத் துரையபுல் காசீம்
வளமனைச் செருக்குமொத் திருக்கும். 1.2.41

62 வேறு
கால வட்டவாய் முளரியி லூறுகள் ளருந்திக்
கோல வட்டவஞ் சிறையளி குழுவுடன் பாடுஞ்
சோலை வட்டவாய் மயிலினஞ் சூழ்ந்துகார் நீல
வால வட்டமொத் திருந்தமென் சிறைவிரித் தாடும். 1.2.42

63 அரக்கெ றிந்தசெவ் வாம்பல்வா யணியிழை மடவார்
நெருக்கி யிட்டகாற் சிலம்பொலி விசும்புற நிமிர
விருக்கும் வாவியுட் பெடையன மிடர்கொலென் றிரங்கித்
தருக்கி ழந்துதன் சேவல்வாய்த் தொனியெனத் தயங்கும். 1.2.43

64 நலங்கொ டாமரை முகமலர் தரநறுங் குவளை
விலங்கி வள்ளையில் விழியெனக் கிடப்பமெல் லரும்பு
துலங்கு மென்முலை தோன்றிடப் பச்சிலைத் துகில்போர்த்
திலங்கு வாவிக ளணியிழை மகளிரொத் திருந்த. 1.2.44

65 நிரைந்த சண்பகம் பாடலந் தடக்கரை நிரம்பச்
சொரிந்த பன்மலர் மீதினில் வரியளித் தோற்ற
மெரிந்தி லங்குபொற் கரையினை யிரும்பினா லிறுகப்
பரிந்த றைந்தசுள் ளாணியின் புறமெனப் பரந்த. 1.2.45

66 தோட விழ்ந்துபூந் தாதுகக் குடைந்தினைச் சுரும்பு
பாட வாவியு ளிளநிலாத் தோற்றிய பான்மை
சாடும் வார்புன லலைதரத் திரைகளிற் றத்தி
யோட மோடுவ தொத்திருந் தனவென வொளிரும். 1.2.46

67 வாய்ந்த மெல்லிழை மடந்தையர் தடத்தின்மெய் வருந்தத்
தோய்ந்து நீர்குடைந் தாடுவோர் மதிமுகத் தோற்றஞ்
சேந்த கஞ்சமுங் குவளையு மெனவெழில் சிறந்த
கூந்தல் வெண்டிரைக் கடலிடை முகிலெனக் குலவும். 1.2.47

68 திருந்து மெல்லிழை மடந்தையர் புனலிடை திளைப்பச்
சரிந்த கூந்தலி லிருந்தவண் டெழுந்துபூந் தடத்தில்
விரிந்த காவியில் வீழ்வது மின்னனார் விழிக்குப்
பொருந்து மோவெனச் சினத்துட னுதைப்பது போலும். 1.2.48

69 மறிந்து தூங்கிய நாவலின் கனியையோர் மங்கை
யெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினா லெடுப்பப்
பறிந்து போதலிற் றுணிக்கின்கை யுதறிமெய் பதறிச்
செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையுந் தீண்டாள். 1.2.49

70 கரிய மைவிழி மங்கையர் பூங்குழற் காட்டிற்
சொரியு மென்மலர்த் தாதுக்க ளுதிர்ந்தன சுடர்மின்
விரியு மெல்லிழைப் பூணொடு பூண்பல மிடைந்து
பொருது ரிஞ்சதிற் பொற்பொடி யுதிர்வன போலும். 1.2.50


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:58 pm

71 பிடித்த கொம்பிருந் தோடிமுட் குடக்கனி பிடித்துக்
கடித்த போதினிற் காம்பறக் கனியுடன் கவியும்
படித்த லத்தினில் வீழ்ந்திடப் பதறிமெய் பதைத்துத்
துடித்துத் தன்னுயிர்க் கடுவனை யணைத்துட றுணுக்கும். 1.2.51

72 தாறு கொண்டபைங் கதலிதே மாப்பலாத் தருத்தே
னூறு கொண்டசெங் கனிசிறு கிடங்கிடை யுகுப்பச்
சேறு கொண்டதிற் கிடந்திருள் செறிகரு மேதி
வேறு கொண்டுபொன் மேதியின் குலமென விளங்கும். 1.2.52

73 கள்ள விழ்ந்தபூம் பொய்கையிற் புள்ளினங் கலையத்
துள்ளு மேல்வரிக் கயலுண்டு நாரைகண் டூங்கு
முள்ள மன்புறச் சேவலின் சிறைநிழ லொதுங்கி
வெள்ள னப்பெடை தாமரைத் தவிசில்வீற் றிருக்கும். 1.2.53

74 ஏல வார்குழற் கிடுபுகை மஞ்சினோ டிகலுஞ்
சோலை வாய்தொறு முக்கனித் தேன்மழை சொரியு
மாலை வாய்தொறுங் கரும்புடைத் தாறெடுத் தோடு
நீல வாய்மலர் வாவிகள் பெருங்கட னிகர்க்கும். 1.2.54

75 தெருளு றும்படி தேன்றுளி தெறித்திடச் சிதறிப்
பொருத லைத்திடு மாங்கனி தேங்கனிப் பொழிலே
மரும ணம்பெறுஞ் சந்தகில் சண்பக வனத்திற்
றருவே னும்பெயர் பெறச்சிறந் தீந்திருந் தனவே. 1.2.55

76 வேறு
நினக்கும்பொற் பொருளே நிந்தனை மற்றோர்
நிந்தனை சிந்தனை யிலையே
யினக்கருஞ் சுரும்பு மதுத்துளி யருந்து
மிவையலான் மதுப்பிறி திலையே
சினக்கரி முனைக்கோட் டிளமுலைப் புலவி
திருத்தும்பொய் யலதுபொய் யிலையே
வனக்கனி கறுத்த குலைக்கள வலது
மறுத்தொரு கொலைக்கள விலையே. 1.2.56


நாட்டுப் படலம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:59 pm

1.3. நகரப்படலம்

77 நிலங்க ளேழுக்கு நாவலந் தீவுகண் ணிகர்க்கு
நலங்கொ டீவுக்குக் கண்மணி யறபுநன் னாடே
புலன்கொள் கண்மணிக் குள்ளுறை யுயிரெனப் பொருந்தி
யிலங்கு மக்கமா நகர்வளஞ் சிறிதெடுத் திசைப்பாம். 13.1

78 வேறு
விரிகதி ரெறித்த மணிவளை யுகுப்ப
விரிதிரை யகழெனுந் தடத்தி
லெரிசைகைக் கிரணப் பதுமமா மணியி
னினம்பல சூழ்ந்திருந் திலங்கப்
புரிமுறுக் கவிழ்ந்த பொன்னிதழ்க் கமலம்
பூத்திருந் ததுவெனப் புரிசை
தெரிதரச் சிறந்து செல்வமுஞ் செருக்குந்
திகழ்தர வீற்றிருந் ததுவே. 13.2

79 வடவரைப் புடைசூழ் நிலத்தெழு தீவும்
வரவழைத் தொருதலத் திருத்தித்
தடமுடிக் கிரணத் திகிரிமால் வரையைச்
சதுர்தரப் புரிசையாய் நிறுத்தி
யிடனற நெருங்கும் பெரும்புபுறக் கடலை
யிதற்கக ழெனப்பெய ரிட்டுப்
படவர வரசன் றிருமுடி மணியைப்
பதித்தது மக்கமா நகரம். 13.3

80 கானகத் துறையும் வயிரவொண் கதிரோ
கடல்படு நித்திலக் கதிரோ
தேனவிழ் பதும மணிக்கதி ரதுவோ
சிறந்திடு மக்கமா நகரில்
வானவர்க் கிறைவன் ஜபுறயீல் பலகால்
வந்தவர் மெய்யொளி பாய்ந்தே
யீனமி னகரஞ் செழுங்கதிர் பரப்பி
யிருப்பது பிறிதுவே றிலையே. 13.4

81 சரிகதி வேக மாருதஞ் சிதையத்
தாவிய புரவியி னொலியு
நிரைமணி யுருட்டுப் பசுங்கதி ரிரத
நெருங்கிட நடத்துபே ரொலியு
முரலடிச் சிறுகட் பெருமதப் பிறைக்கோட்
டொருத்தலி னிடிமுழக் கொலியும்
விரிதிரைக் கரங்கொண் டறையுவாப் பெருக்கும்
வெருக்கொளத் தெருக்கிடந் தொலிக்கும். 13.5

82 மின்னிடை நுடங்கச் சிலம்பொலி சிலம்ப
மேகலைத் திரண்மணிக் கதிர்செம்
பொன்னொடு மிலங்க மறுகிடைப் புகுந்த
புனையிழைப் பிடிநடை மடவார்
மன்னிய பதத்தி னலத்தக நிலத்தில்
வரிபடக் கிடப்பன சிறந்த
துன்னிதழ்க் கமலப் பதத்தினை நிகர்ப்பச்
சுவட்டடி தொடர்வன போலும். 13.6

83 கண்ணகன் ஞாலம் விலைசொலற் கரிய
கலைபல நிரைத்தலாற் பணியாற்
றண்ணெனக் குளிர்ந்து பிறவுரு வமைத்துத்
தரும்படி மக்கலப் பெருக்கான்
மண்ணினிற் சிறந்த நகர்த்திர வியத்தான்
மரக்கலத் திறக்கிய சரக்கா
லெண்ணிறந் தெழுநல் வளம்பல படைத்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே. 13.7

84 மான்மதக் குவையுஞ் சந்தனத் தொகையு
மணிக்கருங் காழகிற் றுணியும்
பான்மதிக் குழவிக் குருத்தெனக் கதிர்கள்
பரப்பிய மதகரி மருப்புந்
தேனமர்ந் தொழுகுங் குங்குமத் தொகையுஞ்
செறிதலா லுயர்ச்சியால் வளத்தா
லீனமி லிமயப் பொருப்பெனப் பணைத்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே. 13.8

85 தந்தியின் குழுவுங் குரகதத் திரளுந்
தடவரை பொருவுதேர்க் கணமுஞ்
சிந்துரப் பிறைநன் னுதற்கருங் கூந்தற்
செவ்வரித் தடங்கண்ணார் நெருக்கும்
வந்தவர் நினைத்த பொருளுமா ரமிர்தும்
வகைவகை தருதலான் மணியு
மிந்திர தருவும் வறிதென மதர்த்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே. 13.9

86 நிரைத்தபைங் கதிரார் மரகத மணியா
னீணிலாக் கருப்புரத் தகட்டாற்
பருத்தசங் கினத்தால் வலம்புரிக் குலத்தாற்
படர்கொடித் திரட்பவ ளத்தால்
விரித்தவெண் ணுரைபோல் வெண்டுகி லடுக்கால்
விரைசெறி யம்பரின் றிடரா
லிரைத்தபே ரொலியாற் பெருங்கட னிகரா
யிருந்தது கடைத்தெருத் தலையே. 13.10

87 பைங்கடற் பிறந்து வணிகர்கை புகுந்த
பருமணி நித்திலக் குவையுந்
தங்கிய கிரண வனசமா மணியுந்
தயங்கொளி வயிரரா சிகளுஞ்
செங்கதி ரெறிக்கு மிரவியு மமுதச்
செழுங்கதிர் மதியமு முடுவு
மிங்கிவண் குடிபுக் கிருந்தது போன்று
மிருந்தது கடைத்தெருத் தலையே. 13.11

88 அணிபெற வொழுங்காய் வயின்வயின் றிரண்ட
வகிற்புகை முகிலின மெனவுங்
குணில்பொரு முரசப் பெருங்குரல் கிடந்து
குழுமிவிண் ணேறொலி யெனவு
மணிவளைத் தடக்கைத் துவரிதழ் கனத்த
வனமுலை மின்கண்மின் னெனவுந்
தணிவில நிவந்த செழுங்கதிர் மாடந்
தமனியக் கிரியினோ டிகலும். 13.12

89 வெண்ணில வெறிக்கு மிரசதத் தகடு
வேய்ந்தமே னிலைவயின் செறிந்து
பண்ணிருந் தொழுகு மென்மொழிக் குதலைப்
பாவையர் செழுங்குழல் விரித்து
நண்ணிய துகிலுங் கமழ்தர வூட்டு
நறும்புகை சுருண்டெழுந் தொழுங்காய்
விண்ணினிற் படர்வ தேணியொன் றமைத்து
விசும்பினுக் கிடுவது போலும். 13.13

90 அடுசெழும் பாகுந் தேனுமா ரமிர்து
மனத்தொடு மனத்தொடுந் திருந்தி
யிடனற விருந்து விருந்தொடு நுகர்வோர்
மனையிட மெண்ணினை மறைக்குங்
கடுவினை யடர்ந்த கொடுவினை விழியார்
கறைதவிர் மதிமுகங் கண்டோ
படர்தரு மாடக் குடுமியின் விசித்த
பசுங்கொடி மதிமறுத் துடைக்கும். 13.14

91 தேங்கமழ் சுருதி வரிமுறை படர்ந்து
திகழ்தரு நித்திலக் கொடிக
ளோங்கிட மாடக் குடுமியி னடுநின்
றுலவிய திரவினும் பகலும்
வீங்குசெங் கதிரி னிரவியுந் தவள
வெண்கதிர் மதியமும் விலகிப்
பாங்கினிற் புகுமி னெனக்கர மசைத்த
பான்மையொத் திருந்தன மாதோ. 13.15

92 வேறு
மானை யன்னகண் மடந்தையர் வதுவையின் முழக்குஞ்
சேனை மன்னவர் படைமுர சதிர்தெரு முழக்குந்
தான மிந்நகர் முதலெனச் சாற்றிய முழக்குஞ்
சோனை மாமழை முழக்கென வைகலுந் தொனிக்கும். 13.16

93 வீதி வாய்தொறு மிடனற நெருங்கிய மேடைச்
சோதி வெண்கதி ரந்தரத் துலவிய தோற்ற
நீதி மானபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கிக்
கோதில் பொன்னகர் திறந்தவாய்க் கதிரெனக் குலவும். 13.17

94 மன்ற லங்கம ழகழ்புனை சுதைதிகழ் மதிளா
னின்றி லங்கிய கணமணிக் கொடுமுடி நிரையான்
முன்றி லெங்கணு மசைதரு கொடிநிறை முறையா
லென்று மிந்நகர் பொன்னக ரென்பதொத் திடுமே. 13.18

95 பட்ட முற்றிடு நபிகளால் விண்ணவர் பரிவாற்
கட்டு பேரொளிக் ககுபத்துல் லாவிருக் கையினான்
மட்டு வார்குளிர் சோலையான் மலிந்தபொன் னுலக
மெட்டு மொன்றெனத் திரண்டுவந் திருந்ததொத் திருக்கும். 13.19

96 தெரிந்த செவ்வியர் முறைவழி தௌிந்தவர் செந்நூற்
சொரிந்த நாவினர் முதியவர் திரண்டசொல் லோதை
யெரிந்த செங்கதி ரிலங்கிய பள்ளிக ளெவையும்
விரிந்த வாய்திறந் தோதுவ போன்றன வேதம். 13.20

97 சந்திர காந்திசெய் பலகையை மடிமிசை தரித்தே
யிந்திர நீலமொத் திருந்தமை தோய்த்ததி லெழுதி
மந்திர மாமொழி மறைபயி லிளையவர் நெருங்கி
யெந்த வீதியு முழங்குவ திவையலா லிலையே. 13.21

98 மறையின் மிக்கவ ரோதிய வோசையும் வரிசைத்
துறவின் மிக்கவர் திக்கிறி னோசையுஞ் சூழ்ந்தே
யிறைவ னைத்தொழு திருகையு மேந்திய வாமீன்
முறைமு றைப்படிக் கூறிய வோசையு முழங்கும். 13.22

நகரப்படலம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 4:59 pm


1.4. தலைமுறைப் படலம்


99 மருவிரி வாவி செந்தா மரைமலர்க் கைக ளேந்தச்
சொரிமது சிந்துஞ் சந்தத் துடவைசூழ் மதினா தன்னிற்
றெரிதர வரசு செய்து தீனிலை நிறுத்திச் செல்வந்
தருநபி யிறசூ லுல்லா தலைமுறை தோற்றஞ் சொல்வாம். 1.4. 1

100 தெரிபொரு ளரிய வேதத் துட்பொருட் டௌிவ தாக
வருபொரு ளாதி பாரின் முகம்மதை விளக்கஞ் செய்யப்
பரிவுறு மனுவா தத்தைப் படைக்கமண் ணெடுத்து வாவென்
றுரைதர இசுறா யீலு முவந்துமண் ணெடுத்துப் போந்தார். 1.4. 2

101 கதிர்வடி வொழுகி நின்ற ஹபீபுமெய் வகுக்க வேண்டி
விதியவன் ஜிபுற யீலை விரைந்துமண் கொடுவா வென்றான்
துதிபெறு மதினா தன்னிற் றூயவோ ரிடத்திற் றோன்றி
யிதமுற வெடுத்துப் போந்தா ரிமையவர் தலைவ ரன்றே. 1.4. 3

102 திறலுறு ஜிபுற யீல்தந் திருக்கையி லேந்திப் போந்த
பிருதிவி தனையே மிக்கோர் பெறும்பதி சுவனந் தன்னில்
நறைவிரி யமுத மெந்த நாளினு மதுர மாறாத்
துறைவிரி நதிக டோறுங் கழுவினர் துலங்க வன்றே. 1.4. 4

103 வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றந்
தெரிதர வானோர்க் கெல்லாஞ் சோபனஞ் சிறக்கச் சொல்லி
யரியமெய் பூரித் தோங்கி யகத்தினின் மகிழ்ச்சி பொங்கிப்
பெரியவன் றிருமன் வைத்தார் பேரொளி யிலங்கிற் றன்றே. 1.4. 5

104 மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனுவா தத்தின்
வெந்நிடத் திருத்தி யங்கம் வியனுறும் வடிவ தாகத்
தென்னுறு ஜலால் ஜமாலென் றேத்திய திருக்கை யாரத்
தன்னிக ரில்லாத் துய்யோன் வகுத்தனன் தழைக்க வன்றே. 1.4. 6

105 மெய்யெழில் வாய்ப்பச் சீவன் விடுத்தனன் விடுத்த போதில்
ஐயமற் றெழுந்து சென்னி மூளையி னவத ரித்து
வையகஞ் சிறப்ப வானோர் மனங்களிப் பேறி விம்மத்
துய்யநற் கலிமா தன்னைச் சொல்லியங் கிருந்த தன்றே. 1.4. 7

106 உரைதெரி கலிமா வோதி யோதியங் கிருந்த சீவன்
இருவிழி தனிலி றங்கி யிருந்தகண் விழித்துச் சொர்க்கச்
சொரிகதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்க டூங்கும்
வரியுறு கலிமாத் தன்னை வளம்பெறக் கண்ட தன்றே. 1.4. 8

107 துண்டத்தி னாவி தோன்றத் தும்மலுந் தோன்றிப் பின்பு
விண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தை யோதிக்
கொண்டபின் பிரத்தி சொன்ன குதாதிரு வசன நோக்கி
யண்டர்நா யகனைப் போற்றி யாதமொன் றுரைப்ப தானார். 1.4. 9

108 கணித்தள வறுக்க வொண்ணாக் கடவுளே குதாயே நீங்கா
மணிக்கதி ரெறிக்குஞ் சொர்க்க வாயிலி னிலைக்கு மேல்பாற்
பணித்தநின் றிருநா மத்தி னுடனொரு பெயரைப் பண்பா
யணித்துவைத் திருப்பக் கண்டே னவரெவ ரறியே னென்றார். 1.4. 10

109 மாதர்சூ லகட்டுட் டோன்றா மனுநெறி ஆத மேநின்
காதலி லுதவு கின்ற கான்முளை யதிலோர் பிள்ளை
வேதநா யகமா யெங்கும் விளங்குதீன் விளக்காய்ப் பின்னாட்
பூதல நபியாய்க் காணப் படைத்தனன் புகலக் கேண்மோ. 1.4. 11

110 கலைமறை முகம்ம தென்னுங் காரண மில்லை யாகில்
உலகுவிண் ணிரவி திங்க ளொளிருடுக் கணஞ்சு வர்க்கம்
மலைகட னதிபா தாளம் வானவர் முதலா யும்மை
நிலையுறப் படைப்ப தில்லை யெனவிறை நிகழ்த்தி னானே. 1.4. 12


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:00 pm

111 பரத்தினை யிறைஞ்சி வாழ்த்திப் பரிவுபெற் றிருந்த வாதஞ்
சிரத்தினி லிருந்த வாவி தேகத்தி னிறைந்த பின்னர்
வரத்தினி லுயர்ந்த வண்மை முகம்மது புவியிற் றோன்றத்
தரித்தபே ரொளிவுக் கந்தச் சசிகதிர் மழுங்கு மன்றே. 1.4. 13

112 உடலுறைந் துயிருண் டென்னு மொருவடி வில்லான் செவ்வி
மடலவிழ் வனச பாத முகம்மதி னொளிவுக் காக
வடலுறு மக்கட் கெல்லா மதிபதி யாதத் துக்கே
யிடமுறு மமரர் யாரும் சுஜுதுசெய் திடுக வென்றான். 1.4. 14

113 தூயவ னுரைப்பக் கேட்ட சொன்மறா தெழுந்து தங்கள்
காயமு மனமும் வாக்குங் கலந்தொன்றாய் மகிழ்வு பொங்கி
நேயமுற் றிடப் பணிந்த நிரைநிரைக் கைக ளேந்தி
வாயினிற் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கஞ் செய்தார். 1.4. 15

114 வானவர் செய்யு மந்த வணக்கத்தின் முறைசெய் யாமற்
போனத னால ஜாசீல் பொறைநிறை யறிவு போக்கி
யீனவன் குணத்த னாயி லகுனத்து முனிவும் பெற்றே
யானவம் பிபுலீ சென்னும் பெயரும்பெற் றலைந்து போனான். 1.4. 16

115 பொருப்புருக் கொண்ட தன்னப் புயத்தெழி லாதந் தன்னுள்
விருப்பெனும் போக முற்றி விழைவுபெற் றிடுத லாலே
கருப்பமுற் பவிக்க வேண்டுங் காரண காட்சி யாக
மருப்புகுங் குழல்ஹவ் வாவை வல்லவன் பிறப்பித் தானே. 1.4. 17

116 தேங்கமழ் குழலுஞ் சோதித் சிறுபிறை நுதலும் வாய்ப்பப்
பாங்கிருந் தமுதஞ் சிந்தும் பனிமொழி மாதை நோக்கி
யோங்குநின் பெயரைக் கூறென் றுரைத்திட ஹவ்வா வென்றா
ரீங்கிவ ணுறைந்த வண்ண மேதென வாதங் கேட்டார். 1.4. 18

117 செவ்விமன் னெறியா தத்தின் றிருமதி முகத்தை நோக்கி
மவ்வலங் குழலா ரிந்த வானகம் புவிமற் றுள்ள
வெவ்வையும் படைத்தோ னென்னை வகுத்துநும் வயின்செல் கென்றா
னவ்வழி யடைந்தே னென்றா ரழகொளிர் பவள வாயால். 1.4. 19

118 செப்பிய மாற்றங் கேட்டு ரோமங்கள் சிலிர்த்துப் பூரித்
தப்பொழு திறையைப் போற்றி யாதம்ஹவ் வாவை நோக்கி
மைப்படுங் கரிய கூந்தன் மடமயில் வடிவுட் கொண்டு
துப்புறை யமுதந் துய்ப்பத் தொடுவதற் கொருமித் தாரே. 1.4. 20

119 பகரருங் குணமுந் திவ்ய பரிமள மணமு மாறாச்
சிகரமு மயங்க வெற்றி திகழ்தரு புயமு நோக்கி
நிகரருங் குரிசி லேநன் னிலைபெறு வாழ்வே யென்றன்
மகரினைத் தருக பின்னர் வருகவென் றுரைத்திட் டாரே. 1.4. 21

120 கேட்டனர் மகரென் றாதங் கிலேசமுற் றிறைபாற் கெஞ்சி
வாட்டமில் லவனே யெந்த வகைமகர் கொடுப்ப தென்றார்
நாட்டிய புகழ்சேர் மக்க முகம்மது நபிதம் பேரிற்
சூட்டிய சலவாத் தீரைந் துரைமென விறைவன் சொன்னான். 1.4. 22


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:00 pm

121 மதிக்கதிர் விலக்குஞ் சோதி முகம்மதின் சலவாத் தோத
விதித்தன னிறையென் றாதம் விளங்கொளிச் சலவாத் தோதித்
துதித்தனர் ஹவ்வா கேட்டுச் சோபன மகர்பெற் றேனென்
றிதத்தித மித்து நெஞ்ச மிருங்களிப் பேறி னாரே. 1.4. 23

122 கடிமலர்க் கொடியுஞ் செவ்விக் கற்பகத் தருவும் போலப்
பிடிநடை மயிலும் வெற்றி பெறுந்திற லரசுங் காம
மிடையறா தமிர்த போக மினிதுண்டு களித்துப் பொங்கி
வடிவுறு மின்ப வெள்ள வாரிக்கு ளழுந்தி னாரே. 1.4. 24

123 துறக்கநன் னகரிற் சேர்ந்து சுகமனு பவிக்கு மாத
மறக்கரும் பொருளே வேதம் வருமுறைக் குரிய கோவே
பெறற்கருஞ் சுவன வானோ ரனைவரும் பெருது கூண்டென்
புறக்கணி னிருப்ப தென்னோ புகலெனப் புகல லுற்றான். 1.4. 25

124 நிதமழ கொழுகி வாச நிறைந்தமெய் முகம்ம தென்னு
முதிர்கதிர் விளங்கி நுந்த முதுகிடத் திருக்கை யாலே
பதவியி னரிய விண்ணோ ரெண்ணிலாப் பகுப்புக் கூடி
யிதமுறத் தெரிசிக் கின்றா ரென்றன னென்று முள்ளோன். 1.4. 26

125 மருள்கடிந் தறிவு பொங்கு முகம்மதி னொளியை யென்மு
னருள்கவென் றிருகை யேந்தி யாதநன் னபியுங் கேட்கப்
பெரியவன் கருணை கூர்ந்து பெறுமுறை யிதுகொ லென்ன
நெரிநடுப் புருவக் கான்மே னெற்றியி லொளிர செய்தான். 1.4. 27

126 வேறு
தாதவிழ் மலர்த்தா ராதநன் னுதலிற்
றண்ணெனுங் கதிர்கள்விட் டொழுகுஞ்
சோதியைத் தெரிசித் தமரர்க ளணுவுந்
தோன்றுதற் கிடமற நெருங்கிக்
கோதறப் பெருகி முன்னிலை திரண்ட
குழுவினைக் கண்டுகண் குளிர்ந்து
மாதவம் பெற்றே னெனமன மகிழ்ச்சி
வாரியிற் குளித்தன ரன்றே. 1.4. 28

127 அறவரி தான காட்சியும் பேறு
மமரர்க ளியாவரும் பெற்றா
ரிறைவனே யானும் பெறுவதற் கென்க
ணிடத்தினிற் றெரிகிலே னென்றார்
நிறைநடு வாகி யுலகெலா நிறைந்த
நெடியவ னினிதருள் புரிந்து
விறல்புரி யாதம் வலதுகைக் கலிமா
விரனகத் திடத்தில்வைத் தனனே. 1.4. 29

128 வரிச்சுரும் பலர்த்தி நறைவிரி துருக்க
மருவுபொற் புயத்தெழி லாதம்
விரித்தக மகிழ்ச்சி பெருக்கியென் முதுகில்
விளங்கொளி யின்னமு முளவோ
தெரித்தருள் புரியென் றிறையுடன் மொழியச்
செவ்விய முகம்மது நபிதம்
முரித்துணைத் தோழர் நால்வருண் டவர்த
மொளியுள வெனவுரைத் தனனே. 1.4. 30

129 அப்பெரும் பெயர்க ணான்குபே ரொளியு
மகுமதி னொளியடுத் திருப்ப
வைப்பையென் விரல்க னான்கினு மென்ன
வல்லவ னவ்வழி யமைத்தான்
மெய்ப்பொருள் கலிமா விரனடு விரன்மென்
விரற்சிறு விரற்பெரு விரல்க
ளிப்படி விரல்க ளைந்தினு மைவர்
விளங்கொளி யுகிரிலங் கினவே. 1.4. 31

130 பகுத்தொளி விரிக்கு நகத்தொளி விருக்கும்
பண்புகண் டதிசயித் தாத
மகத்தினின் மகிழ்ந்து கண்ணிணை மலரி
னடிக்கடி வைத்துவாய் முத்தி
மிகுத்திடும் வரிசை நபிசல வாத்தை
விளக்கிவாய் மறாதெடுத் தோதி
வகுத்தவல் லவனைப் பணிந்துவா னகத்தில்
வாழ்ந்தினி திருக்குமந் நாளில். 1.4. 32


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:00 pm

131 மிக்கெழி லாத மேலவன் விதித்த
விலகலைப் பொருந்தின படியா
லக்கையின் விரல்க ளொளிவுமுன் னிருந்த
வணியணி முதுகிடத் தாகித்
துக்கமு மிகுந்து சுவர்க்கமு மிழந்து
தொல்லுல கடைந்துவெவ் வேறு
திக்கினின் மயங்கி யிருவரு மலைத்துத்
தீவினைக் குரியவ ரானார். 1.4. 33

132 ஆதியே ஹக்கா றப்பனா விறையே
யழிவிலாப் பேரின்ப வாழ்வே
நீதியே யெனவும் பலதரந் தவுபா
நிகழ்த்தியுந் துன்பம்விட் டொழியாப்
போதிலே யெனது முதுகிடத் துறைந்த
பொருளொளிச் சிறப்பெனும் பொருட்டாற்
சோதியே தவுபாத் தனைக்கபூ லாக்கென்
றுரைத்தனர் சுடர்முடி யாதம். 1.4. 34

133 நறைதரு மறுவி கமழ்முகம் மதுநந்
நபிதிருப் பெயர்சொலும் பொருட்டா
யிறைவனு மாதஞ் செயுந்தவு பாவுக்
கிசைந்தினி துறக்கபூ லாக்க
வுறைதரு துன்ப மனைத்தையும் போக்கி
யூழ்வினை பின்புமொன் றாக்க
மறுமதி யகடு தொடுமுடி யறபா
மலையினி லிருவருஞ் சேர்ந்தார். 1.4. 35

134 கூடிய விருவர் தாமுஞ்சுத் தாவிற்
குடியிருந் திருபது சூலில்
நாடிய பொருட்போ னாற்பது பெயரை
நன்குறப் பெற்றதின் பின்னர்
சூடிய கிரீட பதிநபி யமரர்
துரைகனா யகமெனு மிறசூல்
நீடிய வொளியு சிறந்தொரு சூலி
னிலமிசை சீதுதித் தனரே. 1.4. 36

135 மருமலர்த் திணிதோ ணிறைமதி வதன
முகம்மதின் பேரொளி யிலங்கித்
தெரிமறை ஆத மக்களிற் சிறந்த
சீதுவி னிடத்திருந் ததனாற்
பரிவுறு நபிப்பட் டமும்வரப் பெற்றுப்
பல்கலைக் குரிசிலென் றேத்த
வரியவன் கொடுத்த வரிசைக ணிறைந்த
வைம்பது சுகுபிறங் கியதே. 1.4. 37

136 சீதுவி னிடத்தி னிருந்தவர் மதலை
சிறந்தமா மணிமுடிக் குரிசின்
மாதவர் கமல வதனயா னுசுதம்
வயினுறைந் திருந்தணி சிறந்து
தாதவிழ் மலர்த்தார்க் குங்குமக் கலவைத்
தடப்புயர் யானுசு தருகார்
நீதிசேர் ஹயினா னிடத்தினி லிருந்து
நிலைபெற விளங்கிய தன்றே. 1.4. 38

137 தண்மணிக் கதிர்விட் டெறிக்கும்வெண் கவிகைக்
தடவரை மணிப்புய ஹயினான்
கண்மணி மகுலீ லிடத்தினி லிருந்து
கவின்குடி கொண்டெழுந் தோங்கி
வெண்மணித் தரளத் தொடைப்புய மகுலீல்
வேந்தருக் குற்றசே யெனவாழ்
உண்மைநன் னெறிசே ரெறுதுவி னிடத்தி
னுறைந்தினி திலங்கிய தன்றே. 1.4. 39

138 வடவரை குலுங்க நடமிடு துரங்க
மன்னவ ரெறுதுதம் மதலை
கடகரிக் குவட்டி னிணையெனப் பணைத்த
கதிர்முலைத் துடியிடை மடவார்
விடமெனக் கரிய கொலைவிழிக் கணங்கள்
வீற்றிருந் திடுமலர்ப் புயத்தார்
இடிமுர சதிரு முன்றிலா ருகுநூ
கிடத்தினி லிருந்திலங் கியதே. 1.4. 40

139 கடலெனத் தானை யரசர்வந் தீண்டிக்
கைகுவித் திருபுற நெருங்கச்
சுடர்மணித் தவிசி னுயர்ந்தர சியற்றிச்
சுருதிநே ருறையுகு நூகு
புடையிருந் தவர்செய் யறமெலாந் திரண்டோர்
புத்திர வடிவெடுத் தென்ன
விடுகொடை கவிப்பப் புரந்தசே யிதுரீ
சிடத்தினி னிறைந்திருந் ததுவே. 1.4. 41

140 நன்னெறி நயினா ரொளியிருந் ததனா
னபியெனும் பட்டமும் பெறலாய்
உன்னுதற் கரிய முப்பது சுகுபு
முடையவ னருளினா லிறங்கிப்
பன்னிய வுலகத் தொழிலெவை யவைக்கும்
பரிவுறு முதன்மையே யிவரென்
றெந்நிலங் களுக்கும் பெயர்பெற வரசா
யிருந்திட வியற்றிய தன்றே 1.4. 42


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:01 pm

141 மெய்த்தவக் குரிசி னபியிது ரீசு
விருப்புற வுதித்தநன் மதலை
யுத்தமர் மத்தூ சல்குதம் மிடத்தவ்
வொளியுறைந் துலகெலா மிறைஞ்ச
வைத்தபின் மத்தூ சல்குதம் மைந்தர்
மடந்தையர் மடலெடுத் தேந்தச்
சித்திரக் கவின்பெற் றிருந்தலா மக்கு
வயின்சிறந் திலங்குமவ் வொளியே. 1.4. 43

142 தருமநன் னெறியா லுலகெலாம் புரக்கத்
தகும்புக ழானலா மக்குத்
திருமக நூகு வயினுறைந் திருந்து
சிறந்தபே ரொளியினா லவர்க்கும்
பெருகிய நபிப்பட் டமுமிகப் பெறலாய்ப்
பிரளயப் பெருக்கெடுத் தெறியுங்
கருநிறக் கடல்வங் கமுங்கவி ழாது
காட்சியாய்க் கலாசுபெற் றதுவே. 1.4. 44

143 வரிசையு மிமையோர் துதிசெயும் பரிசும்
வரப்பெறு நூகுதம் மதலை
தரைபுகழ்ந் தேத்தச் சாமிடத் திருந்து
தனபதி கனபதி யாக்கிக்
கருவிளை விழியார் கவரிகா லசைப்பக்
கனகசிங் காதனத் திருத்தி
விரிகட லுலகம் பொதுவறப் புரக்கும்
வேந்திவ ரெனவியற் றியதே. 1.4. 45

144 சாமுதன் மதலை யறுபகு சதுமன்
றம்மிடத் தவதரித் திருந்து
தூமமும் புழுகுந் தகரமுஞ் சாந்துந்
தோய்ந்திருண் டடர்ந்தபூங் குழலார்
காமுக ரெனச்செய் தணிமணிப் புயங்கள்
கண்கொளா தழகிருந் தொழுகு
மாமதக் களிற்ற ரறுவகு சதுமா
மதலைசா லகுவயி னடைந்த 1.4. 46

145 சாலகு தம்பா லடைந்துவாய் மைக்குந்
தவத்திற்கும் பவுத்துக்கு மிவரே
மேலவ ரெனச்செய் திருந்தவர் மதலை
வேந்தர்ஐ பறுவயின் புரந்து
காலடி மறைக்கக் கவிழ்மத மிறைக்குங்
கடகரி யரசர்ஐ பறுசேய்
பாலகு வயின்வீற் றிருந்துல கெல்லாம்
பரித்திடப் பண்புபெற் றதுவே. 1.4. 47

146 தேன்கிடந் தொழுகுங் குங்குமத் தொடையற்
செழும்புயன் பாலகு மதலை
வான்கிடந் தனைய மின்னொளிர் வடிவார்
மன்னன்றா குவாவிடத் திருந்து
கூன்கிடந் தனைய பிறைகறைக் கோட்டுக்
குஞ்சரத் தரசர்கை கூப்ப
மீன்கிடந் தலர்வான் மதியெனுங் கவிகை
வேந்தர்வேந் தெனவிளைத் ததுவே. 1.4. 48

147 வாரணி முரச மிடியெனக் கறங்கும்
வாயிலான் றாகுவா மதலை
தாரணி தருவா யுதித்தசா றூகு
தம்மிடத் திருந்தெழில் சிறந்து
காரணக் குரிசி லானசா றூகு
கண்ணிணை மணியென விளங்கும்
ஏரணிப் புயனா கூறிடத் துறைந்தங்
கிலங்கிய தருமறை யொளியே. 1.4. 49

148 வெண்டிரை புரட்டுங் கருங்கட லுடுத்த
மேதினிக் கரசென விளங்குந்
திண்டிற னாகூ றுதவிய மதலை
செழும்புக ழாசறு வயின்வந்
தெண்டிசை முழுது மொருதனிச் செங்கோ
லியற்றுவ திவரென வியற்றி
வண்டணி மலர்த்தா ராசறு தவத்தால்
வருமொரு வடிவுறு மதலை. 1.4. 50

149 முருகவிழ் புயத்தார் நபியிபு றாகீம்
செய்தவப் பலனொரு வடிவாய்
ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தி
னிருந்திலங் கியவொளிப் பொருட்டால்
வானகத் தமரர் சுடர்விரி சுவன
மடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்
கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்
கருவிவாய் தடவில வன்றே. 1.4. 51

150 தீனிலைக் குரிய நபியிபு றாகீம்
செய்தவப் பலனொரு வடிவாய்
ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தி
னிருந்திலங் கியவொளிப் பொருட்டால்
வானகத் தமரர் சுடர்விரி சுவன
மடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்
கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்
கருவிவாய் தடவில வன்றே. 1.4. 52


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:01 pm

151 மன்னவ ரிசுமா யீல்தரு மதலை
மணிவிளக் கனையதா பித்து
தன்னிடத் திருந்து தரணியேழ் புரக்குந்
தலைபதி நிலைபெற வியற்றி
மின்னவிர் மௌலி விளங்குதா பித்து
வேந்தர்பெற் றெடுத்தமா மதலை
யிந்நிலம் புகழு மெசுஹபு வெனும்பே
ரெடுத்தவ ரிடத்திலங் கியதே. 1.4. 53

152 உடல்பிளந் துயிருண் டுதிரங்கொப் பளித்தூ
னுணங்குவேற் கரரெசு ஹபுதம்
பிடிநடை மடவாள் பெற்றெடுத் துவந்த
பிள்ளையஃ றுபுவயி னிருந்து
கடல்கிளர்ந் தனைய தானையஃ றுபுதங்
கண்மணி தயிறகு என்போர்
இடமுற விருந்து நெடும்புகழ் விளக்கி
யெழில்கனிந் திலங்கிய தன்றே 1.4. 54

153 சந்தனந் திமிர்ந்து திரண்டமற் புயத்தார்
தயிறகு தருதிரு மதலை
கந்தெறி தறுகட் கரடமா லியானைக்
காவலர்க் கசனிநா கூறு
சுந்தர வதனத் திலங்கிட விருந்து
சொரிமழைச் செழுங்கைநா கூறு
மைந்தர்மிக் குவந்தம் மிடத்துறைந் திருந்து
மாட்சிபெற் றிலங்கிய தன்றே. 1.4. 55

154 மிக்குவ மெனும்பே ரரசுதம் மதலை
வெயில்விடு மணிமுடி யுதது
பக்கலி லிருந்து செல்வமுஞ் செருக்கும்
பண்புறப் பெருக்கிட நிறைத்துத்
திக்கனைத் தினும்பேர் விளங்கிட விளங்கித்
திறல்பெறு முத்துநன் மதலை
தக்கமெய்ப் புகழ்சே ரிருநிதி யதுனான்
தம்மிடத் திருந்தெழி றழைத்த 1.4. 56

155 வெண்ணிலா விரிக்கு மொருதனிக் குடைக்கீழ்
வேந்துசெய் தருள்புரி யதுனான்
கண்ணின்மா மணியா யுதித்திடு முஅத்து
கவின்பெற விருந்தவ ரிடத்தில்
எண்ணிலா வரச ரடிபணிந் திறைஞ்ச
வியற்றிய பேரொளி முஅத்து
புண்ணியப் பொருளா யுருவெடுத் துலகம்
புரந்தநி சாறிடத் துறைந்த 1.4. 57

156 ஒருகுடை நிழற்கீ ழிருநிலம் புரந்திட்
டுருமென மும்முர சதிரத்
திருநிறை நான்கு திக்கினுஞ் செங்கோல்
செலுத்திய நிசாறெனு மரசர்
பெருகிய நிலைமைக் குலக்கட னாப்பண்
பிறந்தெழுங் கதிரவ னொப்ப
வருமுகின் முலறு நபியிடத் துறைந்து
மகிதலம் புகழ்ந்திட விருந்த. 1.4. 58

157 அறிவெனுங் கடலாய் வரம்புபெற் றிருந்த
வருமறை முலறுநன் னபிக்குப்
பெறுபல னெனவந் துதித்தஇல் யாசு
நபியெனப் பேரொளி தங்கித்
துறவலர்க் கரசா யிருந்தஇல் யாசு
புத்திரர் பவுத்தெலா நிறைந்த
மறுமனர் குலக்கோ ளரியெனப் பிறந்த
மாமணி முதுறக்கத் தெனுமால். 1.4. 59

158 முகம்மது நயினா ரொளிவிருந் திலங்கு
மன்னவர் முதுறக்கா மதலை
செகமகிழ் குசைமா வயினுறைந் தரசர்
செழுமுடி நடுமணி யெனலாய்
நகுகதிர் விரிவெண் குடைநிழ லிருந்த
நரபதி யெனுங்குசை மாமன்
புகழெனத் தோன்றி வருதுறை கனானாப்
பூபதி யிடத்தின்வந் திருந்த. 1.4. 60

159 மடங்கலே றனைய தன்பதி கனானா
மகிபதி தவத்துறு மதலை
நுடங்கிடை மடவார் கருத்தினைக் கவரு
நுலறெனு மழகுறு மரசர்
தடம்புயங் களின்மா நிலங்குடி யிருப்பத்
தங்கியங் கவர்பெறு மரசர்
முடங்குளைப் பகுவாய் மடங்கலங் கொடியார்
மோலிமா லிக்குசார் பிருந்த. 1.4. 61

160 திண்டிற லரசர் சிரம்பொடி படுத்திச்
செவந்தவாட் கரத்தர்மா லிக்கு
மண்டலம் விளக்கு முழுமணி விளக்காய்
வந்தமன் பிஃறிடத் திலங்கி
எண்டிசை யிடத்து மெழுகடற் புறத்து
மறுவகைத் தானைகொண் டெதிர்ந்து
கொண்டமர் கடந்த வரசெனப் பெயருங்
கொடுத்தது திருநபி யொளியே. 1.4. 62161 குரிசிலென் றுயர்ந்த பிஃறெனு மரசர்
குறைஷியங் குலத்துறு மதலை
விரிதிரை யுவரி நடுநிலம் புரந்த
வேந்தர்கா லிபுவயி னிலங்கிக்
கரிபரி பதாதி ரதம்புடை நெருங்குங்
கடைத்தலை காலிபு தருசேய்
முருகவிழ் மரவத் தொடைப்புயர் லுவையு
முகமலர் தரவிருந் தொளிரும். 1.4. 63

162 வான்மதி பகுந்த முகம்மது நயினார்
வடிவுறும் பேரொளி லுவையாங்
கோன்மகன் ககுபு தம்மிடத் திலங்கிக்
குன்றினி லிடும்விளக் காகிச்
சூன்முதிர் மழைக்கை ககுபுகண் மணியாய்த்
தோன்றிய முறத்திடத் துறைந்த
சேனமுங் கொடியுந் தொடர்கதிர் வடிவேற்
செம்மலென் றுயர்ச்சிபெற் றிருந்தார். 1.4. 64

163 கொந்தலர்ந் திருண்ட கருங்குழன் மடவார்
கொங்கையிற் றடம்புய மழுந்துஞ்
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்திற்
றோன்றிய மதிமுகக் கிலாபு
மந்தர மனைய தடம்புய ரிடத்தில்
வந்திருந் தவர்தரு மதலை
கந்தடர் தறுகட் கரடமா லியானைக்
காவலர் குசையிடத் துறைந்த 1.4. 65

164 வில்லுமிழ் வயிரத் தொடைபுரண் டசைந்த
விறற்புயர் குசைதரு மதலை
செல்லென விரங்குஞ் சினந்துவே றாங்கும்
செழுங்கர ரப்துல் முனாபு
மல்லலைத் திணிதோ ளரசர்நா யகர்தம்
வயினுறைந் தவர்பெறு மதலை
யெல்லவ னெனவே கலியிரு டுரத்தி
யிருந்தஹா ஷீமிடத் துறைந்த. 1.4. 66

165 கிம்புரிக் கோட்டுக் கடமலை துளைத்துக்
கிளைத்திடும் வேற்கரர் ஹாஷீம்
அம்புவிக் கரசாய்ப் பெற்றெடுத் துவந்த
வருமணி யப்துல்முத் தலிபு
நம்பிய தவப்பே றெனவிருந் திலங்கி
நறைகமழ் அப்துல்முத் தலிபு
தம்பெயர் விளக்கக் குவலயத் துதித்த
சந்ததி யப்துல்லா வென்போர். 1.4. 67
தலைமுறைப் படலம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:03 pm


1.5. நபியவதாரப் படலம்


166 பெருகிய கோடிசந் திரப்பிர காசமாய்
வருமொரு பெருங்கதிர் மதியம் போலவே
கருணைவீற் றிருந்தசெங் கமலக் கண்ணிணைத்
திருநபி வருமவ தாரஞ் செப்புவாம். 1.5.1

167 வேறு
கடியி ருந்தெழு கற்பக முஞ்சுடர்
வடிவி ருந்த மணியும் வனசமும்
படியுங் கார்முகி லேழும் பழித்துவிண்
குடியி ருத்துங் கொழுந்தடக் கையினார். 1.5.2

168 வேறு
விண்டொடு கொடுமுடி மேரு வீறழித்
தெண்டிசைக் கிரியொடு மிகலுங் கொங்கையர்
கொண்டமா மயலொடு மனமுங் கூர்விழி
வண்டொடும் வண்டுறை மாலை மார்பினார். 1.5.3

169 கொன்னுனை வெண்ணிறக் கோட்டு வாரணச்
செந்நிறக் குருதியிற் றிமிர்ந்து வாய்கழீஇ
மின்னவிர் கணமணி விளங்கு மாமுடி
யொன்னல ருயிரைமேய்ந் துறங்கும் வேலினார். 1.5.4

170 முடங்கலங் கைதைமுள் ளெயிற்று வெண்பணிப்
படங்களா யிரத்தினும் பரித்த பாரெலா
மிடங்கொள்பூ தரப்புயத் திருத்தி யேதிலார்
மடங்கலே றெனுமன வலியின் மாட்சியார். 1.5.5

171 மாக்கட னெடும்புவி வளைந்த வன்கலி
நீக்கிய வெண்குடை நீழ லோம்புவோர்
வீக்கிய கழலடி வேந்தர் பொன்முடி
தாக்கிய மருச்செழுங் கமலத் தாளினார். 1.5.6

172 வரபதி யுலகெலாம் வாழ்த்து மக்கமா
புரபதிக் கதிபதி யென்னும் பூபதி
பரபதி யரசர்கள் பணிந் திறைஞ்சிய
நரபதி யப்துல்லா வென்னு நாமத்தார். 1.5.7

173 செழுமழை முகிலென வமுதஞ் சிந்திட
வழிகதிர் நபியென வகுத்த பேரொளி
பொழிகரத் தப்துல்லா விடத்திற் பொங்கியே
யெழிறரு திருநுத லிடத்தி லங்குமே. 1.5.8

174 அயிலுறை செழுங்கரத் தப்துல் லாவெனும்
பெயரிய களிறுக்கோர் பிடியும் போலவ
ருயிரென விருந்தசைந் தொசிந்த பூங்கொடி
மயிலெனு மாமினா வென்னு மங்கையே. 1.5.9

175 இற்புகுந் தெழுமதி யிலங்கு மாமணி
விற்புரு வக்கடை மின்க ணாயகம்
பொற்பெலாம் பொதிந்தபொற் கொடிநற் பூவையர்
கற்பெலாந் திரண்டுருக் கொண்ட கன்னியே. 1.5.10

176 அறத்தினுக் கில்லிட மருட்கோர் தாயகம்
பொறுத்திடும் பொறுமையிற் பூமிக் கெண்மடங்
குறைப்பெருங் குலத்தினுக் கொப்பி லாமணிச்
சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே. 1.5.11


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:03 pm

177 குணிப்பருங் குறைசியங் குலமென் றோங்கிய
மணிப்பெருங் கடலிடை வளருஞ் செல்வமே
தணிப்பிலா தெடுத்தெறி தரங்க மேனடுப்
பணிப்படா தெழுந்தசெம் பவளக் கொம்பனார். 1.5.12

178 இத்தகைக் குலமயி லாமி னாவெனு
முத்தவெண் ணகைக்கனி மொழியு மோகனச்
சித்திர அப்துல்லா வென்னுஞ் செம்மலு
மொத்தினி தமுதமுண் டுறையு நாளினில். 1.5.13

179 வேறு
வீசு தெண்டிரைக் கடன்மலை யடங்கவெண் குடைக்கீ
ழாசி லாதசிங் காசனத் திருந்தசிக் கந்தர்
காசி னிக்கர சியற்றுதுல் கருனையின் கால
மாசி லாக்கணக் கெட்டுநூற் றெண்பத்தோர் வருடம். 1.5.14

180 கரைத்த மின்றௌித் தெழுத்தெனச் சிறக்குமக் காவி
னிரைத்த கார்க்குலந் திரண்டெனக் களிறுக ணெருங்கி
யிரைத்த டர்ந்துமும் மதங்களை வாரிநின் றிறைத்து
வரைக்கு லங்கள்போல் வந்ததற் கொருமுதல் வருடம். 1.5.15

181 திங்க ளாமிற சபுமுதற் றேதிவெள் ளியிராத்
துங்க வார்கழன் முகம்மது பேரொளி துலங்கி
யெங்க ணாயக ரப்துல்லா நுதலிடத் திருந்து
மங்கை யாமினா வயிற்றினிற் றரித்தன வன்றே. 1.5.16

182 திருத்தும் பொன்னக ரமரரே திரண்டவா னவரே
கருத்தி னுண்மகிழ்ந் தெவ்வையு மலங்கரித் திடுமின்
வருத்த மென்றிலா முஹம்மதை யாமினா வயிற்றி
லிருத்தி னேனென வுரைத்தன னியாவர்க்கு மிறையோன். 1.5.17

183 பரந்த வாய்க்கொடும் பாந்தளும் விடங்கொள் பஞ்சரமுங்
கரிந்து பொங்கிய குழிகளுங் கனற்பொறி கதுவ
வெரிந்து செந்நெருப் பொழுகிய நரகங்க ளேழும்
விரைந்த வித்தடைத் திடுகவென் றனன்முதல் வேந்தன். 1.5.18

184 விற்கெ ழுமறு சொடுகுறு சந்தரம் விளங்கச்
சொர்க்க வாயிலுந் திறந்தலங் கரித்தனர் துன்ப
மிக்க வாரிபாழ் நரகங்க ளடைத்தனர் வானோர்
கற்கு மாமறை முதலவன் விதித்தகட் டளைக்கே. 1.5.19

185 அந்தண் பொன்னக ரடங்கலு மலங்கரித் ததுவும்
வெந்த பாழ்நர கங்களை யடைத்தபல் விதமுஞ்
சந்த திண்புய முகம்மது நபிதரித் ததுவு
மிந்த வாறுக ளனைத்தையு மறிந்திபு லீசு. 1.5.20

186 நடுங்கி வாயினீர் வறந்திட நாவுலர்ந் துடல
மொடுங்கி யைம்பொறி மயக்குற நெஞ்செலா முடைந்து
புடங்கொள் வங்கம தாய்நினை வுருகினன் புலம்பத்
துடங்கி னானடிக் கடிபெரு மூச்சொடு சுழன்றே. 1.5.21


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:04 pm

187 கரைவ னேங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி
யிரைவன் கன்னத்திற் கையைவைத் திருந்தெழுந் திருப்பன்
றரையின் மேல்விழுந் தெனக்கிலை யினிச்சிங்கா சனமென்
றுரைம றந்திடக் கிடந்தன னிருகணீ ரொழுக. 1.5.22

188 அறிவ ழிந்தமன் னவன்றனை மக்கள்வந் தடைந்து
குறியுந் துன்பமும் வந்தவா றேதெனக் கூறி
நிறையு மக்களோ டுறும்வர லாறெலா நிகழ்த்தி
யுறையு மில்லிட மிவணிலை நமக்கென வுரைத்தான். 1.5.23

189 இந்த வாசகங் கேட்டலு மக்களெல் லோருந்
தந்தை யேயிதற் கென்செய்வோ மெனத்தடு மாறிப்
புந்திநொந்து நொந் தவரவர் திசைதிசை புகுந்தார்
சிந்தை நொந்திபு லீசுவுந் திகைத்திருந் திடைந்தான். 1.5.24

190 தரித்தி டுமுதற் றிங்களிற் றரைபுக ழாத
முரைப்ப ராமினா கனவினி லுன்றிரு வுதரத்
திருக்குஞ் சந்ததி வலிமையை யுடையதிவ் வுலகத்
தருக்க னொப்பல நாமமு கம்மதென் றகன்றார். 1.5.25

191 கருப்பந் திங்களி ரண்டினி லாமினா கனவின்
மருப்பு குங்குழல் வல்லிநின் வயிற்றினின் மதலை
யருப்பும் வீறுடை யவர்பெயர் முகம்மதென் றதிக
விருப்ப மாயிது றீசுநன் னபிவிளம் பினரே. 1.5.26

192 இக்கெ னும்மொழி யாமினாக் கினிதுறத் திங்கள்
புக்கு மூன்றினி னூகுநன் னபிமனப் பொலிவாய்
மிக்க வுண்மையும் விளங்கிய வெற்றியு முடையோர்
தக்க பேர்முகம் மதுவெனச் சாற்றிவிட் டகன்றார். 1.5.27

193 திங்க ணான்கினி லாமினா கனவினிற் றௌிவா
யிங்கி தத்திபு றாகிநன் னபியியம் பினராற்
சங்கை யாய்மிகு வரிசையும் பெருங்கொலுத் தனையும்
பொங்கு வாழ்வினர் பெயர்முகம் மதுவெனப் போந்தே. 1.5.28

194 அம்பொற் கும்பத்தி னருவநீர் மஞ்சன மாடிச்
செம்பொற் பட்டுடுத் தெறிகதி ரணியிழை திருத்திப்
பம்பு மேகலை தரித்துமென் கரவளை பரித்துக்
கம்ப லைச்சிலம் பணிந்தனர் பதங்கவின் பெறவே. 1.5.29

195 நெறித்த வார்குழ லிறுக்கிமென் மலர்பல நிறைத்துக்
குறித்த வேலிணைக் கண்களி லஞ்சனங் கோட்டிச்
செறித்த மான்மதஞ் சந்தனக் கலவையுந் திமிர்ந்தே
யெறித்த நன்கதிர் விளக்கென வாமினா வெழுந்தார். 1.5.30

196 இனத்து ளாரெனுஞ் செழுமலர்க் கொடிநடு விடையே
கனத்த மாமணிக் கொம்பென நடந்துகஃ பாவின்
மனத்தி ருக்கற வலஞ்செய்து வாயிலில் வந்து
நினைத்தி டும்பொரு டருகெனப் போற்றினர் நிறைந்தே. 1.5.31


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:04 pm

197 வண்டு வாழ்குழன் மடந்தையர் திரண்டுவாழ்த் தெடுப்பக்
கண்டு மென்கொடி யாமினா தாமரைக் காலின்
முண்ட கச்செழு மலர்சொரி தலைமுகங் கவிழத்
தெண்ட னிட்டது புத்தென வுறைந்ததே வதையே. 1.5.32

198 அஞ்ச லித்தது புத்தென மனத்ததி சயித்து
மஞ்சு வார்குழ லாமினா பயந்துமெய் வருந்திக்
கஞ்ச மின்னனார் கணத்துடன் வாயிலைக் கடந்தே
யின்சொ னன்குலக் கிளியென மனையில்வந் திருந்தார். 1.5.23

199 தெரியுந் திங்களைந் தினிலிசு மாயில்செப் பினரா
லுரிய மென்மயி லேநின துதரத்தி லுறைந்தோர்
தரிய லர்க்கிடி யாயடுத் தவர்க்கொரு தருவாய்
வரிசை யுற்றவர் பெயர்முகம் மதுவென வகுத்தே. 1.5.34

200 ஆறு திங்களில் வந்தமூ சாநபி யழகாய்க்
கூறு மென்கரும் பேநின்றன் வயிற்றுறு குழந்தை
வீறு பெற்றிடுந் தலைமையும் பெரும்பத வியையு
மாறி லாதவர் பெயரிடு முகம்மதென் றுரைத்தார். 1.5.35

201 சினவு வேற்கரத் தப்துல்லா வெனுமொரு சிங்க
மனைவி யாகிய ஆமினா வெனுங்குல மடமா
னினமு மாயமும் வாழ்த்திடக் கருப்பமு மிலங்கக்
கனவு கண்டக மகிழ்ந்தினி திருக்குமக் காலம். 1.5.36

202 மக்க நன்னக ரப்துல்முத் தலிபெனு மன்ன
ரக்க மன்னமன் னப்துல்லா தமையழைத் திருத்தித்
தக்க புத்தியு முறைமையுந் தொழிலையுஞ் சாற்றி
யொக்கல் கூட்டுறப் புறநகர்க் கெழுகவென் றுரைத்தார். 1.5.37

203 தந்தை கூறிட அப்துல்லா மனந்தறு காமன்
மந்திர வாளெடுத் தினிதுற விசித்தனர் மருங்கி
லிந்திர வில்லென வில்லெடுத் தொருகையி லேந்திக்
கந்து கங்கொணர் கென்றுகட் டுரைத்தனர் கடிதின். 1.5.38

204 பாட லத்தின்மேற் கொண்டுறு தனிற்பரி வாரங்
கூடு கோளரித் திரளென வரநெறி குறுகிக்
காடுங் கானமுங் கடந்துசெந் தேம்பொழிற் கனிசூழ்
நாட டைந்துபோய்ப் புகுந்தனர் மதீனமா நகரில் 1.5.39

205 மதினத் தின்னுறை ரசவருக் கங்களு மதினப்
பதிய டுத்தவூர்ச் சரக்கையுங் கொண்டுபந் தனமாக்
கதிர்கொண் மாடத்திற் கட்டிவைத் தவரவர் கரத்திற்
புதிய வாணிபத் தலைவிலைக் கீந்தனர் பொருளை. 1.5.40

206 வாணி பத்தொழி லனைத்தையு முடித்துமன் னவருங்
காணு நாட்சில விருந்துதன் பதிவரக் கருதிப்
பூண ணிந்தழ குறுமிளை யவர்புடை சூழச்
சேண டைந்தபு வாவெனுந் தலத்தினைச் சேர்ந்தார். 1.5.41


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:04 pm

207 ஆதி கற்பனை யூழ்விதிப் பயனும்வந் தடைந்து
போது நாட்களு நாழிகைக் கணக்கையும் போக்கி
நீதி மன்னவ னப்துல்லா தனையறி நினைவாய்ச்
சோதி மென்முக மிலங்கிடத் துயில்வபோன் றிறந்தார். 1.5.42

208 கூடிச் சூழ்ந்தவர் விதிப்பய னெனக்குலை குலைந்து
வாடி மன்னனை யெழில்பெற மணத்துட னடக்கிப்
பாடி யூரபு வாவைவிட் டகன்றுபோய்ப் பதியை
நாடி வந்தவ ராமினாக் கிவையெலா நவின்றார். 1.5.43

209 மாற்றங் கேட்டலு மடமயின் மனமுடைந் தலறித்
தோற்று மாமழை சொரிந்தெனக் கண்ணினீர் சொரியப்
போற்றுங் காழகிற் புகைக்குழ னிலம்புரண் டசையக்
கோற்றொ டிக்கரக் காந்தடா மரைமுகங் குழைக்க. 1.5.44

210 வருந்தி நொந்தழு தாமினா விடைதலும் வளைந்து
திருந்தி ழைக்கொடி மடவிய ரிரங்குத றிரண்முத்
திருந்த சூல்வலம் புரியினைச் சூழ்ந்தசங் கினங்க
ளிரைந்தி ரங்குவ போன்றன வெங்கணு நிறைந்தே. 1.5.45

211 சலித்து விம்மிய மயிலினைக் கண்டுமெய் தளர
வலித்த தோபகை விதிகொலோ மகப்பெறும் பலனோ
பலித்த தேதென வறிகிலோ மெனப்பதை பதைத்தே
யொலித்தய் யோவென விரங்கின ரூரினி லுளரே. 1.5.46

212 உடுத்த பூழியிற் புதைமணி யெனவுட லொடுங்கி
வடித்த கண்ணினீ ரொழுகிட விருந்தபொன் மயிலை
யடுத்து வந்திருந் தன்புட னப்துல்முத் தலிபு
தொடுத்த துன்பங்க ளாற்றிநல் வழிபல சொன்னார். 1.5.47

213 இனத்து ளார்சொலு நல்வழிக் குருகிநெஞ் சிடைந்து
நினைத்த பற்பல துன்பமு மகற்றிநீ ணிலத்தி
லனைத்தை யும்விதித் தவன்செய லினையுமுற் றறிந்து
மனத்தி னிற்றௌி வாகினர் குலக்கொடி மயிலே. 1.5.48

214 தவிசி ருந்துநன் னெறிமுறை நடத்துதா வூது
நபியுந் திங்களோ ரேழினிற் கனவினி னவின்றா
ரவியுங் காலமன் றாட்டத்துக் குரியவ ரானோர்
புவியி னிற்பெயர் முகம்மதென் றிடுமெனப் போந்தே. 1.5.49

215 நலங்கொ டிங்களோ ரெட்டினில் சுலையுமா னபிவந்
திலங்கு பூணணி மயிலனீர் நின்வயிற் றிருந்தோர்
பெலன்கெ ழுமது னான்கிளைப் பேரொளி நபியாய்த்
துலங்க வந்தவர் பெயர்முகம் மதுவெனச் சொன்னார். 1.5.50

216 மாத மொன்பதி லாமினா கனவினின் மதித்தே
வேத நான்மறை நேர்வழிக் குரியவர் விளங்கக்
கோதை யேபெறின் முகம்மது வெனப்பெயர் கூறென்
றாதி நாய்கன் வரிசையீ சாநபி யறைந்தார். 1.5.51


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:05 pm

217 ஈத லாலிமை யவர்தின மிடைவிடுத் திலராய்ப்
போது சேர்குழ லாமினா கனவினிற் போந்தே
யாதி தூதுவர் முகம்மது பெயரென வ திக
நீதி யானமா ராயமே பெறநிகழ்த் தினரால். 1.5.52

218 என்றும் வானவ ரிசைத்திடுங் கனவெலா மெடுத்தும்
வென்றி நன்னபி மார்சொலுங் கனவெலாம் விரித்து
மன்ற லங்குழ லாமினா படிப்படி வகையா
நன்றி தேர்ந்தசொற் றாயர்க்குத் தினந்தொறு நவின்றார். 1.5.53

219 பெற்ற தாயருங் கனவினின் பெற்றியைப் பிரித்தே
யுற்ற பேரொடு மனத்தொடுந் தௌிந்தறிந் தோர்ந்து
சொற்ற தன்மகட் குறிப்பெலாங் காண்குறத் துணிந்து
குற்ற மின்றிய முகம்மதே பெயரெனக் குறித்தாள். 1.5.54

220 செறிந்த வார்குழ லாமினா வுரைத்தசெய் தியைக்கேட்
டறிந்து தாயதற் கெதிர்மொழி கொடுத்தலு மாராய்ந்
துறைந்த வல்லிருட் சீத்தெறி மதியென வோங்கி
நிறைந்த பேரொளி முகமலர் தரசபா நிகழ்த்தும். 1.5.55

221 திரிந்த பாலெனச் செறுத்துப்பண் ணேழையுஞ் சினந்து
விரிந்த தெண்டிரைக் கடலிடை யமுதென விளங்கிச்
சொரிந்த தேன்மொழி யாமினா வயிற்றினிற் சூலா
யிருந்த நாளெலாங் கனவலா லொழிந்தநா ளிலையே 1.5.56

222 உள்ள கங்குளிர்ந் தருமறை மூன்றையு முணர்ந்தோர்
வள்ள லாகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய்ப்
பிள்ளை யொன்றுதோன் றிடுமுகம் மதுவெனும் பெயரி
னெள்ள லின்றிய வுண்மைநன் னபியென விசைத்தார். 1.5.57

223 சொரியும் பூந்துகட் டுடவைசூழ் சாமினிற் றோன்ற
லரிவை தன்னகத் தறிவினுந் தேர்ந்துணர்ந் தறிந்து
தெரியக் கூறிய பெரியவர் சொல்லினுந் தௌிந்து
வரிசை நேருமக் காவினில் விரைவினில் வந்தாள். 1.5.58

224 வந்து நல்வழிக் குரியவ ரிருக்குமக் காவிற்
சந்த னப்புய னப்துல்லா தனைமணம் புரியச்
சிந்தை நேர்ந்தன ளவ்வுரை கேட்டுளந் திடுக்கிட்
டிந்த வூருளர் மிகுதிபேர் மணத்தினுக் கிசைந்தார். 1.5.59

225 எனக்கு னக்கென மடந்தையர் மணத்தினுக் கிகலத்
தனக்கு நேரிலா னெழுதிய படிதனி முடிந்து
வனக்க ருங்குழ லாமினா வெனுமட மானைச்
சினக்கும் வேற்கரத் தப்துல்லா மணத்தொடுஞ் சேர்ந்தார். 1.5.60

226 அந்த வாறறிந் தரிவைய ரிந்நக ரனைத்து
மிந்து வாணுத லாமினா மனைவெறுத் திருந்தார்
கந்த மென்குழல் கருப்புமு முதிர்ந்தன காலம்
வெந்து வானவர் பிறரிலை யென்கொலோ விளைவே. 1.5.61


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:05 pm

227 மண்ண ருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயினோ
யுண்ணி ரந்தில மெய்பல வருந்தில வுதரக்
கண்ணி ருந்தபூப் பொன்றுமே கண்டில கனிமென்
பண்ணி ருந்தவாய் வெளுத்தில பலன்பெறும் படியே. 1.5.62

228 சிறுத்த மெல்லிடை பருத்திருந் திலதிரு வுதரம்
பொறுத்து வீங்கில வுந்திமேற் புடைத்தில பொருப்புங்
கறுத்திருந்தில பசுநரம் பெழுந்தில கவின்கள்
வெறுத்தி ருந்தில கருப்பமென் றழகுறும் விதமே. 1.5.63

229 என்றும் பற்பல மொழிந்துச பாசலித் திருப்ப
மன்ற லங்குழ லாமினா கருப்பமும் வலியு
மின்று தோன்றுவ தெனவெடுத் தியம்பின ரிலங்கும்
வென்றி வேல்விழி மடந்தையர்க் கிவைசொலி விடுத்தார். 1.5.64

230 உரைத்த வாசகங் கேட்டலு மந்நக ருறைவோ
ரிரைத்த டங்கலு மொருமொழிப் படவெடுத் திசையா
வரைத்த னிக்கொடி யாமினா மனையினின் மறந்துங்
கரைத்த லாயினும் வருவதில் லெனக்கழ றினரே. 1.5.65

231 உற்ற வாய்மையைக் கேட்டலு மாமினா வுலைந்து
குற்ற மேதுநம் மிடத்தென மனத்தினிற் குறித்துப்
பெற்ற சூல்வலி யடிக்கடி பெரிதெனப் பதறி
வெற்றி வாட்கரத் தப்துல்முத் தலிபுக்காள் விடுத்தார். 1.5.66

232 சருவு வேல்விழி மடந்தையர் விடுத்தவர் சாற்றக்
குரிசில் கேட்டவ ரவர்கெல்லாம் வகைவகை கூறி
வருக வென்றலுங் கொடியிடைப் பிடிநடை மடவா
ரொருவ ரும்மவண் புகுவதில் லெனமறுத் துரைத்தார். 1.5.67

233 மஞ்சு வாழ்குழ லாமினா வுரைத்தது மறுத்தா
ரின்சொற் கூறிநா மழைக்கவு மனமிரங் கிலரென்
றஞ்சி யுள்ளகம் புழுங்கிநின் றப்துல்முத் தலிபு
தஞ்ச மீதெனக் கஃபத்துல் லாதனைச் சார்ந்தார். 1.5.68

234 வடிவி ருந்தொளிர் கஃபத்துல் லாதனை வலமாய்க்
கடிதிற் றுன்புற வருங்கரு மாரியின் களையாற்
கொடியி டைப்பர தாபமும் வருத்தமுங் கூறி
நெடிது யிர்த்தயர்ந் திரந்துகொண் டிருக்குமந் நேரம். 1.5.69

235 வேறு
அரியமெய்ப் பொருளா யளவிடற் கரியோ
னருளின னமரர்கள் சுவர்க்கத்
தெரிவையர் பறவைக் குலங்கண்மற் றெவையுஞ்
செழும்பொழிற் செகதலத் திறங்கி
வரிஞிமி றுதறிக் கருங்குழன் முடித்த
மடக்கொடி ஆமினா மனையி
னிரைநிரை செறிந்தங் கவருரை மறாது
நின்றிடும் பணிவிடைக் கெனவே. 1.5.70

236 கருவினிற் றோன்றா தொளிவி லுருவாய்க்
கண்ணிமைத் துண்டுறங் காத
பெருவடி வழகாய்க் குழுவுடன் றிரண்டு
பெரியவ னுரைமறா தெழுந்து
விரிகதிர்க் ககனம் புடவிமட் டொழுங்காய்
விண்ணவ ரெண்ணிறந் தனையோ
ரருவரை யனையா ருருவமுஞ் சிறிதா
யாமினா திருமனை சூழ்ந்தார். 1.5.71


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by சிவா on Sat Jun 18, 2011 5:06 pm

237 தேன்பெருக் கொழுகி வழிதருங் கனிகள்
சிதறிடுஞ் சோலைவாய்த் தௌிந்த
வானதி மூழ்கித் துகிலெடுத் துடுத்து
வளைபணித் தொகையெலா மணிந்து
கான்மலர் முடித்துக் கடுவரி வடிவேற்
கண்களி லஞ்சனங் குலவச்
சூன்முதி ராமி னாமனை யிடத்திற்
சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர். 1.5.72

238 மறுவறுத் திருந்த நிறைந்தபூ ரணமா
மதிக்குலந் திரண்டுவந் ததுவோ
வுறைதரு மமுதத் திரளைக ளுருவா
யொழுங்குட னெழுந்திடுந் திரளோ
கறைபடாச் சுவனக் காட்சிவாழ் வனைத்துங்
கலந்துட னிலங்கிவந் ததுவோ
குறைபடாச் சுவனத் தருவினி லுதித்த
கொழுங்கதிர்ச் செழுங்கனிக் குலமோ. 1.5.73

239 அணித்துலைக் கனலி லுருக்கிடா தொளிரு
மாயிரங் கோடிமாற் றெனவுங்
கணித்திடாப் பசும்பொ னெடுத்தெடுத் தமைத்த
கவின்குலங் கூண்டெழுங் கணமோ
மணிக்கதி ரிழைத்துத் திரட்டிவைத் துருவ
வடிவமைத் தெழுந்திடுங் குழுவோ
துணித்துமின் குலங்கண் மறைபடா தெழுந்த
தொகுதியோ வெனவறி கிலமால். 1.5.74

240 இருட்டடை கிடக்குங் கருங்குழற் பின்ன
லெழுபதி னாயிரமி லங்க
விரித்தபொன் னிழைப்பூந் துகிலுமே கலையும்
விட்டொளிர் வீசிடத் துலங்கத்
தரித்தமுத் தார முடுக்குல மனைத்துந்
தான்குடி யிருந்தெனத் தயங்கக்
கரித்தகண் ணிமையா முலைக்குவ டசையாக்
கன்னியர் திரண்டிருந் தனாரால். 1.5.75

241 பண்ணமைத் தீஞ்சொ லரம்பையர் மேனிப்
பரிமளந் தெருவெலாங் கமழ
விண்ணகத் திரவிக் கதிரொளி மணிகள்
விடுவெயில் விழுதுவிட் டொழுகத்
தண்ணகைத் தரளக் கதிரிரு டுணிப்பத்
தரையெலாம் பொன்மைபோர்த் திருப்ப
மண்ணகத் திருந்த வாமினா மனையை
வானவர் பதியென லாமால். 1.5.76

242 பறவைக ளனைத்து மேவலின் படியே
படியினு மந்தர மனைத்து
நிறைதரப் பெருக வதிலொரு வெண்பு
ணித்திலக் கதிர்கள் கான்றொழுக
வுறைதரு மாமி னாதிரு மனையி
னுட்புகுந் தெதிர்வரு வதுகண்
டறைதர மனமும் பயந்திட வொதுங்கி
யஞ்சிநின் றதிசயித் தனரே. 1.5.77

243 வருந்திநொந் திருந்த வாமினா திருமுன்
வந்துநின் றழகுறும் வெண்பு
ளிருந்தவெண் சிறையை விரித்தொளி சிறந்தே
யிலங்கிட வீசிய காற்றாற்
பொருந்திய சரீர வேர்வையுந் தீர்ந்து
புளகெழச் சிலிர்த்தன ரோமந்
திருந்திழை மனத்துட் பயங்கர மகன்று
தேகமுங் குளிர்ந்தன வன்றே. 1.5.78

244 அண்டரி லொருவர் மரகதக் கிண்ணத்
தமுதினை யேந்திவந் தடுத்தக்
கொண்டவர் கொடுப்பக் கூறுலீன் வாங்கிக்
கொடியிடை மடமயிற் கீய
முண்டகக் கரத்தாற் றாங்கியே பருக
முதிர்பர தாபமு நீங்கிக்
கண்டெனு மொழியார் கருப்பநோ யகன்று
கலக்கமுந் தௌிந்தன ரன்றே. 1.5.79

245 பொன்னொளிர் கவினு முறக்குழைத் தெழுது
பூந்துகில் வெண்ணிறங் கவின
மின்னொளி கரப்பக் கதிர்விடுங் கலையை
விரைந்தொரு தட்டினி லேந்திப்
பன்னிய வமரர் தொகையினி லொருவர்
பரிவுடன் கொணர்ந்ததை வாங்கி
யன்னமோ மயிலோ வெனுமொரு மடமா
னாமினா திருக்கையி லீய்ந்தார். 1.5.80

246 செவ்விவீற் றிருந்து முகமதி யிலங்குந்
திருந்திழை ஆசியா தமையு
மவ்வலங் குழலார் மறியுமென் றுரைக்கு
மயிலையு மரம்பையர் தமையுங்
கவ்வையங் கடல்சூழ் புடவியிற் சிறந்த
காட்சி சேர் மக்கமா நகரி
னவ்விவேல் விழியா ராமினா விருக்கு
நறைமனை புகவிறை யுரைத்தான். 1.5.81


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum