புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
26 Posts - 33%
prajai
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
3 Posts - 4%
Jenila
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
7 Posts - 5%
prajai
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Jenila
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Rutu
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
manikavi
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கம் வளர்த்த தமிழ்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:02 pm

First topic message reminder :


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!


.....................................................................


"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"


"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"




இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும்



"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"



என்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.



மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பல மொழிகளில் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ் பண்டிதர்களிடம் கற்றார். காசி சர்வகலாசாலையில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார், புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரன்சுமொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆங்கில மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது.



எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தீர்ப்பு வழங்கினார். "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்றும் "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!" அறுதியிட்டுக் கூறினார்.



உண்மையில் பாரதியார் பிறப்பால் பிராமணர். ஆன காரணத்தால் "தேவபாஷை" என்று அழைக்கப்பட்ட வடமொழியை அவர் உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இன்றுகூட நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழ் நாட்டுப் பிராமணர் வடமொழியைத் தங்கள் "தந்தை மொழி" எனக் கூறிக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதற்கு எதிராக அர்ச்சகர்களே போர்க் கொடி தூக்குகிறார்கள். ஆனால் கவிச் சக்கரவர்த்தி பாரதியார் தமிழையே இனிமையான மொழி, உயர்வான மொழி, செழுமையான மொழி என நெஞ்சாரப் போற்றியிருக்கிறார்.



பாரதியார் இந்த மண்ணலகத்தில் 39 (1882-1921) அகவையே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு அரியாசனத்தில் சரியாசனம்; இருக்கக் கூடியவர். தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும், சீர்மையையும் ஏற்படுத்தியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ் தேசியத்துக்கு லாலி பாடியவர். அவரது சொல்லாட்சியும் பொருள் நயமும் எம்மைத் திகைக்க வைக்கிறது.



"...............................................பெண்ணரசின்

மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி னினியாள் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்"




வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வர்ணித்திருப்பார்கள் என்பது ஐயமே!



"காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -அந்தக்

காணி நிலத்திடையே - ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்குக்

கேணியருகினிலே -தென்னைமரம்

கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரண்டு -தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போல -நிலாவொளி

முன்பு வரவேணும் - அங்கு

............................................................

பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு

பத்தினிப் பெண் வேணும் -

எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள்

கொண்டுதர வேணும் ........"




தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறக்கிறது? தனது இறுதி யாத்திரையை பத்துப் பன்னிரண்டு பேரோடு நடாத்திய பாரதியா இப்படிப் பாடினார்? அதனை நம்ப முடிகிறதா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:02 am

அரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா!

திருப்புகழ் தமிழ்மறை என திருமுருக கிருபானந்தவாரியார் திருப்புகழுக்கு எழுதிய விரிவுரையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார். தெய்வ மணமும் செந்தமிழ் மணமும் ஒருசேர மணக்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ் திருமுறையில் சேர்க்கப்பட வேண்டும்.

பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. அருணகிரிநாதர் காலத்தால் அவருக்குப் பிந்தியவர். ஆன காரணத்தினால்தான் திருப்புகழ் சேர்க்கப்படவில்லை. திருப்புகழை பன்னிரு திருமுறையோடு சேர்த்து பதின்மூன்று திருமுறையாக ஆக்க வேண்டும். திருப்புகழ் திருக்கோவில்களில் இப்போது படிக்கப்படுகிறது. எனவே அதனைத் திருமுறையில் சேர்ப்பதற்கு தடையேதும் எழ வழியில்லை.

திருப்புகழில் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் மொத்தப் பாடல்களின் தொகை 1,307 ஆகும். இந்த 1,307 பாடல்களில் 1008 வெவ்வேறு சந்தங்களை சித்திரத்தமிழில் அற்புதமாக அமைத்துப் பாடி இசைத் தமிழ் வளர்ச்சிக்கு அருணகிரிநாதர் பேருதவி செய்திருக்கிறார்.

"கும்பகோணப் பெருமானே! செஞ்சொல் சேர் சித்திரத்தமிழால் உன் செம்பொனார்வத்தை பெறுவேனோ?" என்று தான் சித்திரத்தமிழில் பாடும் விருப்பத்தை அருணாகிரிநாதரே தெரிவித்திருக்கிறார்.

திருப்புகழ் பாடல்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகள் (திருப்பரங்குன்றம், திருச்சீர் ஆலைவாய் (திருச்செந்தூர்), திருஆவின்குடி, திருஏரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல், பழமுதிர்சோலை) எனச் சிறப்புப்பெற்ற திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் முருகன் மீது பாடப்பெற்றவை ஆகும்.

அருணகிரிநாதரின் திருப்பாதங்கள் படாத முருகன் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இல்லையென்றே கூறலாம். இமயம் முதல் குமரிவரை அவரது பாதங்கள் முருகனைத் தேடி ஓடிஆடி அலைந்தன. அவரது திருவாய் பாடி மகிழ்ந்தது. அதற்கு அப்பாலும் ஈழநாட்டின் திருத்தலங்களான திருக்கோணேசுவரம், திருக்கேதீச்சுவரம், கதிர்காமம் சென்று தேன் தமிழில் திருப்புகழ் பாடி மகிழ்ந்தார். கதிர்காமக் கந்தனை "கதிர்காம வெற்பில் உறைவோனே"

"வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உடையோனே"என விழித்துப் பாடுகிறார். .

"அகரமும் ஆகி அதிபனும் ஆகி
அதிபனும் ஆகி அகமாகி
அயன் என வாகி அரி என வாகி
அரன் என வாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி
இனிமையும் ஆகி வருவோனே!
இரு நிலம் ஈதில் எளியனும் வாழ
எனது முன்; ஓடி வர வேணும்!
மகபதி ஆகி மருவும் வலாரி
மகிழ் களி கூறும் வடிவோனே!
வனமுறை வேடன் அருளிய பூசை
மகிழ் கதிர் காமம் உடையோனே!
செக் கண சேகு தகு திமி தோதி
திமி என ஆடும் மயிலோனே!
திரு மலி வான பழ முதிர் சோலை
மலை மிசை மேவும் பெருமாளே!


அருணகிரிநாதரது தமிழ்ச் சொல்லாட்சியின் அழகையும், இனிமையையும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலிலும் கண்டு மகிழலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:03 am

"தஞ்சந் தஞ்சஞ் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சந் துரையே
அருள் தந்தென் இன்பந்தரு வீடது தருவாயே!"


அனுமனை அவர் வர்ணிக்கும் அழகும் அருமையும் அபாரம்.

"இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கருள் இலெங்கணும்
இலங்கென - முறையோதி- இடுங்கனல் குரங்கு"


எப்படி "இலங்கு" என்ற சொல்லை வைத்து அருணகிரிநாதர் சிலம்பம் ஆடியிருக்கிறாரோ அதேபோல் திருமந்திரத்திலும் திருமூலர் "விளக்கு" என்ற சொல்லை வைத்து சிலம்பம் ஆடி தமிழ் விருந்து படைத்திருக்கிறார். அந்தத் திருமந்திரம் இது.

"விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே!"


அருணகிரிநாதரது சந்தநடைக்கு திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் நல்ல சான்று.


"குயில்மொழிக் கயல்விழித் துகிர் இதழ்ச் சிலைநுதல்
சரிமுகத்து இளநகைக் கனகுழல் தனதிரிக்
கொடி இடைப் பிடிநடைக் குறமகள் திருவினைப் -புணர்வோனே"


திருமுருகன் தெய்வீக திருநடனம் செய்யும் திருவுருவக் காட்சியினை அருணகிரிநாதர் காண விரும்பிச் சந்தத் தமிழில் பாடுகிறார்.

"தண்டைஅணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன்
சந்தொடம் அணைத்து நின்று அன்பு போலக்
கண்டு உள கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்சமலர் செங்கையும் சிந்துவேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?
புண்டரிகர் அண்டமும் கொண்டபகிர் அண்டமும்
பொங்கியெழ வெங்களம் கொண்டபோது
பொன்கிரி யெனச்சிறந்து எங்கினும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தைகூரக்
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன்
கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே
கொங்கை குறமங்கையின் சந்தமணம் உண்டிடும்
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!"


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:04 am

தண் - குளிர்ந்த, கழல்-திருவடி, பரிந்து - அன்புடன், இன்பம்- மகிழ்ச்சி, சந்தொடம் - மகிழ்ச்சி, கடம்பு - ஒருவகை மரம், சந்தம்-அழகு, மகிடம்- கிரீடம், கஞ்சமலர்- தாமரைமலர், சந்திர நிறம் - அழகிய நிறம், சந்தியாவோ- முன்னே வரமாட்டாவோ? புண்டரிகர் -பிரமன், அண்டம் - உலகம், பகிரண்டம்- வெளி அண்டம், வெங்களம் -போர்க்களம், புண்டரிகர் தந்தை- பிரமனின் தந்தை திருமால், உண்டிடும் -நுகரும், கும்;பமுனி -குடத்தில் பிறந்த முனிவர் (அகத்தியர்), தம்பிரான் - கடவுள்.

திருப்புகழில் தான் இளமையில் பரத்தையர் மஞ்சமே தஞ்சமெனக் கிடந்து உழன்ற தன்னை ஆட்கொண்ட முருகனை வாழ்த்தியும், முருகன் புகழ்பாட தனக்கு தெய்வீக ஆற்றல் படைத்த அரிய தமிழை அளித்ததற்கு நன்றி நவின்றும், பெருவாழ்வு வாழ அருள் செய்க! சிவஞானத்தை அருள் புரிக! சகல செல்வங்களையும் தருக! என அருணகிரிநாதர் இறைஞ்சுகிறார்.

சரண கமலாயத்தை அரை நிமிட நேர(ம்) மட்டில்
தவ முறை தியானம் வைக்க அறியாத
சட(ன்) கசட(ன்) மூட(ன்) மட்டிபவ வினையிலே சனித்த
தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ? இவ்வேளை செப்பு!
கயிலைமலை நாதர் பெற்ற குமரேசனே!
கடக புயல்மீது ரத்னமணி அணி பொன்மாலை செச்சை
கமழும் மணமார் கடப்பம் அணிவோனே!
தருணம் இது ஐயா! மிகுந்த கமைதுறு நீள் சவுக்கிய
சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு
தகமை சிவஞானம் முத்தி பரகதியும் நீ கொடுத்து
உதவிபுரிய வேணும் நெய்த்த வடிவேலா!
அருணதள பாத பத்மம் அது நிதமே துதிக்க
அரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா!
அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை மீது உதித்த
அழக! திருவோகத்தின் முருகோனே!


நெய் பூசிய வடித்த வேலை உடையவனே!
ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற உன்
திருவடிகளை நாள்தோறும் துதிக்க
அருமையான தமிழை நீ எனக்க அளித்தாய்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:06 am

"என்நெஞ்சத்து உள் இருந்து, இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து"

மலரும் மணமும் போல், நீலவானும் நிலவும் போல் சைவமும் தமிழும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதன, சைவத்தால் தமிழ் என்றும், தமிழால் சைவம் என்றும் சைவம் இன்றேல் தமிழில்லை, என்ற ஒரு கருத்து பலரிடையே நிலவுகிறது. இப்படிச் சொல்பவர்கள் அல்லது நினைப்பவர்கள் தமிழுக்கு வைணவம் தந்த வளத்தையும், வனப்பையும், சிறப்பையும் அறிந்திலர் போல் தெரிகிறது.

சைவமும் தமிழும் ஒன்றென்று சைவர்கள் முழங்கினாலும் தமிழன்னை திருக்கோயில்களின் கருவறைக்கு வெளியே உள் வீதியில்தான் நிறுத்தப்பட்டுள்ளாள். கருவறைக்குள் தமிழ் அன்னை புகுந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று பெரும்பாலான சைவர்கள் நினைக்கிறார்கள்.

வேதங்களும் ஆகமங்களும் சிவபெருமானாலேயே அருளப்பெற்றவை என்பது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். தேவார ஆசிரியர் மூவரும் "அரன் ஆகமம்" "அண்டர்தமக்காக ஆகம நூல் மொழியும் ஆதியை" "ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெருமானே" எனக் குறிப்பிடுகிறார்கள்.

இருந்தும் வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது என்பது சைவ சித்தாந்திகளின் நிலைப்பாடு. ஆகமம்பற்றி முதலில் கூறும் தமிழ் நூல் திருமூலரின் திருமந்திரம் ஆகும். திருமந்திரத்தை ஆகமம் என்றே திருமூலர் குறிக்கிறார். இதனை "சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே" என்று அவர் குறிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

திருமூலர் வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை திருமந்திரத்தில் (2329-2331) விளக்கியுள்ளார். 'சைவ' என்னும் அடைமொழியைச் சேர்க்காமல் ஆகம முறையையே 'சித்தாந்தம்" என திருமந்திரம் (2344) விளக்குகிறது. "சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்" என்கிறார் அருணந்தி. "இறைவனே ஆகமம்" என்கிறார் மணிக்கவாசகர். "வேதாந்தத்தின் தெளிவாம் சைவசித்தாந்தம்" என்று உமாபதிசிவம் கூறுகிறார்.

பூசையை அடிப்படையாகக் கொண்ட வேதம் சாராத தமிழரின் இறைவழிபாட்டு முறைகளே ஆகமம் ஆகும். ஆரியரின் வேதம் சார்ந்த வேள்விச் சடங்குகளை நிகமம் எனக் குறிப்பிடுவர்.

இன்று ஆகமத்துடன் நிகமத்தையும் கலந்து திருக்கோயில்களில் பூசையையும் வேள்விச் சடங்குகளையும் செய்கின்றனர்.

குன்றக்குடி அடிகளார் போன்றோர் வேதத்தை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு பன்னிருதிருமுறையையே வேதமாகக் கொள்கிறார்கள். ஆகமத்தில் பன்னிரு திருமுறைக்கு ஏற்புடையவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை தள்ளிவிட வேண்டும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.

ஆனால் வைணவம் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தை தமிழ்மறையாகவே போற்றிக் கொண்டாடுகிறது. ஆரிய வேதத்தை வியாசர் போன்ற முனிவர்களுக்கு இறைவன் அருளியதுபோல, வேதங்களை ஆழ்வார்கள் மூலம் தமிழில் அருளினார் என்ற கோட்பாடு வைணவத்தில் நிலவுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 12:08 am


"ஆரண நான்கின் பொருளை, ஆழ்வார்கள் ஆய்ந்து அடைவே
அன்புடனே அம்புவியோர் அனைவரும் ஈடுஏற என்று
நாரணனார் தாள்களிலே நாலாயிரம் தமிழால்
எண்ணி உரை செய்தவற்றை"
(தேசியப் பிரபந்தம்)


என்றும்

"அந்தமிழால், நற்கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள்
இந்த உலகில், இருள்நீங்க - வந்துதித்த
மாதங்கள், நாங்கள்"


(உபதேச ரத்னமாலை)
என்றும்

"சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன், எழில் குருகை நாதன்" (உபதேச ரத்தினமாலை)


என்றும் மணவாள மாமுனிகள் அருளிய கூற்றுக்களாலும் வேதத்தின் உட்கருத்தை ஆராய்ந்து ஆழ்வார்கள் அதனைச் செந்தமிழால் அருள் செய்தார்கள் என்பதை வேதாந்த தேசிகர் அருளிய கூற்றுக்களாலும் அறியலாம்.


ஆழ்வார்கள் நாவிலிருந்து பாசுரங்கள் வெளிவந்து இருந்தாலும், அவற்றையும்


"மறப்பிலா என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை
உறுப்பல இன்கவி சொன்ன உதவிக்கே"
(திருவாய்மொழி 7-9-9)


"என்நெஞ்சத்து உள் இருந்து, இங்கு இருந்தமிழ் நூல்
இவை மொழிந்து"
(திருவாய்மொழி (10-6-4)

என்றும்

"பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய்"
(பெரிய திருமொழி 2-8-2)

என்றும் கூறி அரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் நாலாயிரமும் நற்றமிழால் இறைவனே தம்மைக் கருவியாகக் கொண்டு பாடுவித்தான் என்று ஆழ்வார்கள் கூறியிருக்கிறார்கள்.

@நக்கீரன்

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sat Sep 19, 2009 5:22 pm

சிவா அவர்களுக்கு,

தெரியாத பல தகவல்கள்..நன்றிகள் பல..இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். பாரதியைப்பற்றிய ஆரம்பம் சிறப்பு.

தமிழறிஞர்கள் என்று கூறிக்கொள்வர்கள் பட்டமும், பதவியும், பாராட்டும் குறையும் போது தமிழைப் பற்றி மறக்கிறார்கள்.
பதவியும் பாராட்டும் கிடைக்க என்னென்னமோ மாயங்கள் செய்கிறார்கள்.

ஆனால் அடுத்த வேளை உணவுக்கில்லாத போதும் தனக்கென்று எதுவும் கேளாமல் பொது சிந்தனையோடு,
"வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற பாரதி தனிப்பட்டவன் தான்.

ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 5:24 pm

படிப்பதோடன்றி தங்களின் படைப்புக்களையும் பதிந்து ஈகரையை மேலும் மெருகூட்டுங்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sat Sep 19, 2009 8:09 pm

சிவா அவர்களுக்கு,

இன்னும் மாணவணாக இருப்பதால் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். படைக்கும் அளவு வளரவில்லை.

ஆரியம் மற்றும் த்ராவிடம் என்ற சொற்களுக்கு அர்த்தம் மற்றும் மூலச்சொல்(root word) என்ன?

வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் வருவது போல் இப்பதங்கள் எடுத்து ஆளப்படுவதால் குழப்பம் வருகிறது. விளக்குவீர்களா?

ராஜா

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக