ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சங்கம் வளர்த்த தமிழ்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:02 pm


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!


.....................................................................


"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"


"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"
இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும்"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"என்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பல மொழிகளில் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ் பண்டிதர்களிடம் கற்றார். காசி சர்வகலாசாலையில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார், புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரன்சுமொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆங்கில மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது.எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தீர்ப்பு வழங்கினார். "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்றும் "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!" அறுதியிட்டுக் கூறினார்.உண்மையில் பாரதியார் பிறப்பால் பிராமணர். ஆன காரணத்தால் "தேவபாஷை" என்று அழைக்கப்பட்ட வடமொழியை அவர் உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இன்றுகூட நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழ் நாட்டுப் பிராமணர் வடமொழியைத் தங்கள் "தந்தை மொழி" எனக் கூறிக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதற்கு எதிராக அர்ச்சகர்களே போர்க் கொடி தூக்குகிறார்கள். ஆனால் கவிச் சக்கரவர்த்தி பாரதியார் தமிழையே இனிமையான மொழி, உயர்வான மொழி, செழுமையான மொழி என நெஞ்சாரப் போற்றியிருக்கிறார்.பாரதியார் இந்த மண்ணலகத்தில் 39 (1882-1921) அகவையே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு அரியாசனத்தில் சரியாசனம்; இருக்கக் கூடியவர். தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும், சீர்மையையும் ஏற்படுத்தியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ் தேசியத்துக்கு லாலி பாடியவர். அவரது சொல்லாட்சியும் பொருள் நயமும் எம்மைத் திகைக்க வைக்கிறது."...............................................பெண்ணரசின்

மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி னினியாள் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்"
வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வர்ணித்திருப்பார்கள் என்பது ஐயமே!"காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -அந்தக்

காணி நிலத்திடையே - ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்குக்

கேணியருகினிலே -தென்னைமரம்

கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரண்டு -தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போல -நிலாவொளி

முன்பு வரவேணும் - அங்கு

............................................................

பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு

பத்தினிப் பெண் வேணும் -

எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள்

கொண்டுதர வேணும் ........"
தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறக்கிறது? தனது இறுதி யாத்திரையை பத்துப் பன்னிரண்டு பேரோடு நடாத்திய பாரதியா இப்படிப் பாடினார்? அதனை நம்ப முடிகிறதா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:03 pm

இருந்தும் ஒரு குறை. பாரதியாருக்கும் தமிழன்னைக்கும் இருந்த உறவு நற்றவ வானிலும் சிறந்த தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு. தாயைப் போற்றாத பிள்ளை தரணியில் உண்டா?


தமிழா? வடமொழியா? எது உயர்ந்தது என்ற கருத்து மோதல் காலம் காலமாக நடந்து வருகிறது.


தமிழ் வழிபாட்டிற்கும், தமிழர் வீட்டுத் திருமணத்திற்கும் தகாத மொழி என்று தள்ளப்பட்டது. தள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் திருக்கோயில்களில் தேவாரமும் திருப்பாவையும் திருவெம்பாவையும் திருவாசகமும் ஓதுவதை விடுத்து வடமொழியில் மட்டுமே வழிபாடு நடாத்தி தமிழை தமிழன் கட்டிய தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து விரட்டியவர் யார்?

சமய குரவர்களான அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையாரும் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 96,000 தேவாரப் பாடல்கள் ஆகும். அதில் அப்பரடிகள் பாடிய பாடல்கள் 49,000 என்பர். இந்தப் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகள் தில்லைவாழ் அந்தணர்களின் தமிழ் எதிர்ப்பு உணர்வால் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் குடிகொண்டிருக்கும் தில்லையம்பலத்தில் செல்லரித்துப் போயின.

சோழப் பேரரசன் இராசராசன் ( கி.பி. 985-1014) மீட்டெடுத்த பதிகங்கள் வெறும் 796 (அப்பரடிகள் 313 பதிகங்கள்) மட்டுமே. "அரசே கவலற்க! இக்காலத்திற்கு வேண்டியனவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு வேண்டாதவற்றை யாமே செல்லரிக்க விட்டுவிட்டோம்" என இராசராசனுக்கு இறைவனின் வானுரை (அசரீரி) கேட்டதாம்! எனவே அவன் தில்லைவாழ் அந்தணர்களை மன்னித்து விட்டானாம்!

"திருமகள்போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே யுரிமை பூண்டமை மனங்கொள

காந்த@ர்ச் சாலைக் கலமறுத் தருளி

வேங்கை நாடுங் கங்கபாடியுந்

தடிகை பாடியும் நுளம்ப பாடியும்

குடமலைநாடுங் கொலமுங் கலிங்கமும்

முரட்டொழிற் சிங்கள ரீழமண்டலமும்

இரட்டைபாடி யேழரை இலக்கமும்

முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்

திண்டிறல் வென்றித் தண்டாற்கொண்டதண்


..........................................................................

தேசுகொள் கோ ராசகேசரி வர்மரான

உடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு."
படை பல நடாத்தி களம்பல கண்டு வெற்றிவாகை சூடி அதனை மெய்கீர்த்தியாக எழுதிவைத்த இராசராச சோழனே முப்புரி நூலோரின் சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டான் என்பதை நினைக்க நெஞ்சம் கனக்கிறது.

"கோடன்" என்னும் குயவன் தமிழைப் பழித்து ஆரிய மொழியைப் போற்றிப் புகழ்ந்ததைக் கண்டு நக்கீரர் சினங்கொண்டார். அதனால் "இழவு வருக" என அவனை அவர் சபித்தார். அந்தக் குயவன் உடனே செத்து வீழ்ந்தான். நக்கீரர் பாடியதாகச் சொல்லப்படும் அந்தப் பாடல் இது."ஆரியம் நன்று தமிழ் தீ தெனவுரைத்த

காரியத்தாற் காலக் கோட் பட்டானைச் -சீரிய

அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்

செந்தமிழே தீர்க்க சிவா"பின்னர் சினம் ஆறிய நக்கீரர் அவனுக்கு மீண்டும் உயிர் தந்தார். இதன் வாயிலாக வடமொழியை விட ஒருவனை வாழவும் சாகவும் செய்யவல்ல தெய்வ ஆற்றல் தமிழுக்கு உண்டென்பதை நக்கீரர் மெய்ப்பித்தார். தமிழ்மொழியைப் போற்றிக் கற்குமாறு அவனை மாற்றினார். தமிழைப் பழித்த இன்னொரு ஆரியவரசன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த பிரகத்தனாவான். இவனுக்குத் தமிழின் உயர்வையும் சிறப்பையும் எடுத்துச் சொல்ல சங்கப் புலவர் கபிலர் பத்துப் பாட்டுக்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டைப் பாடினார் என்பது கதை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:06 pm


"எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?"குயக்கோடன் தமிழைப் பழித்து ஆரிய மொழியைப் போற்றிப் புகழ்ந்ததைக் கண்டு நக்கீரர் சினம் கொண்டு அவனது உயிரை நீக்கம் செய்ததையும் பின்னர் மீண்டும் பாடி உயிர்த்தெழச் செய்ததையும் பார்த்தோம். அவனை உயிர்தெழச் செய்த பாடல் பின்வருமாறு. இந்தப் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன."முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி

பரண கபிலரும் வாழி - முரணிய

ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்

ஆனந்தஞ் சேர்க்கசுவா கா"திருவிளையாடற் புராணத்தை எழுதியவர் பரஞ்சோதி முனிவர். அவர் இலக்கண வரம்பிலாத ஏனைய சில மொழிகள் போலல்லாது தமிழ்மொழி இலக்கணச் சிறப்புடைய மொழி எனப் போற்றியவர்.


"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து

பண்ணு றத்தெரிந் தாய்நதவிப் பசுந்தமிழ் ஏனை

மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ"
(திருவிளையாடற் புராணம்)


திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் முருகக் கடவுளும் உட்பட 549 புலவர்கள் முதற் சங்கத்தில் உடனிருந்து தமிழாராய்ந்தனர் என்ற செய்தியை முதன் முதலாக இறையனார் களவியலுரை எழுதிய அடியார்க்கு நல்லார் என்ற உரையாசிரியரே தெரிவிக்கின்றார். இவரது காலம் கி.பி. 11 அல்லது 12ம் நூற்றாண்டாகும். சிலர் அவரது காலத்தை 16ம் நூற்றாண்டு என்றும் கூறுகிறார்கள். அடியார்க்கு நல்லார் கருத்தின் அடிப்படையிலேயே பரஞ்சோதி முனிவர் "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து"எனப் பாடியிருக்கிறார்.


திருக்குறளின் சிறப்புப்பற்றி பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். வௌ;வேறு காலத்துப் புலவர்கள் பாடிய இப் பாடல்களைக் மாலையாகக் கோர்த்து திருவள்ளுவ மாலை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடல்கள் சிலவற்றில் திருக்குறளை ஆரிய வேதம் நான்கினோடு ஒப்பிட்டும், தமிழ்மொழியை வடமொழியோடு ஒப்பிட்டும் புலவர்கள் பாடியுள்ளார்கள். உக்கிரப்பெருவழுதியார் என்ற புலவர் பாடிய பாடல் இது."நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்

தான்மலைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த -நூன்முறையை

வந்திக்க சென்னி, வாய், வாழ்த்துக, நன்னெஞ்சம்

சிந்திக்க, கேட்க செவி."
(திருவள்ளுவர் மாலை 4)


நான்முகன் தன் உருவை மறைத்து திருவள்ளுவராகத் தோன்றி நான்கு வேதங்களின் உண்மைப் பொருளை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாற் பொருளாகத் தமிழில் தந்து கூறிய திருக்குறளாகிய திருமுறையை என் தலை வணங்குக, வாய் போற்றுக, நல்ல மனம் தியானிக்க. செவி கேட்க என்பது இதன் பொருள்..


ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் தமிழ் வளம் நிறைந்த மொழி என மிகவும் மகிழ்ந்து பாடியிருக்கிறார்."வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்

தௌ;ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தௌ;ளமுதம்

உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்

வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து." (திருவள்ளுவர் மாலை 53)திருவள்ளுவரது பாட்டினது தீஞ்சுவையைச் சொல்லுமிடத்து, உண்ணப்படுகின்ற தௌ;ளிய அமுதினது தித்திப்பாகிய சுவையும் ஒப்பாகாது. அத்தௌ;ளிய அமுதை உண்டு அதன் சுவையை அறிபவர் தேவர்கள். வளம் பொருந்திய தமிழின் கண்ணதாகிய முப்பாலாகிய சிறந்த பாலை எவ்வுலகத்தாரும் மகிழ்ந்து உண்டு தீஞ்சுவை அறிவார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:07 pm

நத்தத்தனார் என்ற புலவர் "பாயிரம் நான்கு அதிகாரங்களையும் சேர்த்து மொத்தம் அரிய ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களையும் ஓதியுணர்ந்த பின்பு, ஒருவன் போய் ஒருவரது வாயாலே கேட்டறிதற்கு நூலுளவோ? (இல்லை) நிலைபெற்ற தமிழிலே புலமை நிரம்பியோராகிப் பிறர் தம்மிடத்து வந்து கேட்க வீற்றிருக்கலாம்" என்று மொழிகிறார்.


மேலும் வெள்ளி வீதியார் என்ற புலவர் "ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் திருவள்ளுவரால் அருளப்பட்டதன் வழியின் ஒழுகுவோர்க்குப் பயன் விளைவிலே பொய்படாத அவ்வேதம் ஓதுதற்குரியவர் அந்தணரே. பொய்படாத இத் திருக்குறள் ஓதுதற்கு உரியவர் அல்லாதார் உலகத்தில் இல்லை" என்கிறார்.


ஆரிய வேதம் செய்யா மொழி. வேதம் சொல்லளவில், கேள்வி மாத்திரையே நின்று விட்டது. ஏட்டில் எழுதினால் அதன் ஆற்றல் குறையுமென்று எழுதாது விட்டனர். மேலும் அதனை அந்தணர் மட்டுமே ஓதலாம். ஏனைய சூத்திரர் (தமிழர்) அதனைப் படிக்கக் கூடாது. காதால் கேட்கவும் அடாது. ஆனால் பொய்யா மொழியாகிய தமிழ் மறையோ பிறப்பு வேற்றுமையின்றி எல்லோரும் படித்துப் பயன்பெறுமாறு ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது. எனவே வடமொழியைவிட தமிழே சிறப்புடையது என்று வெள்ளி வீதியார் தீர்ப்பளிக்கிறார்!


பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் மகாகவி பாரதியார் போல தமிழ்த் தேசியத்துக்கு கால்கோள் இட்டவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணார் அவரை "தமிழன் பள்ளி எழுச்சிப் பாடகர்" என விழிப்பார்.


சுந்தரனார் ஏனைய புலவர்களைவிட பலபடி மேலே சென்று வடமொழி வழக்கிழந்தமொழி தமிழ்மொழி என்றும் இளமை குன்றாத உயர்தனிச் செம்மொழி என்கிறார். மனோன்மணீயம் என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலில் "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன் சீரிழமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே" என்று தமிழ்த் தாயைப் போற்றிப் பாடியிருக்கிறார். மேலும்"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்துக் கொருநீதி"


என்று தமிழர்கள் கண்மூடித்தனமாகப் போற்றும் மனுநீதியைச் சாடி திருக்குறளை குற்றமறக் கற்பவர்கள் ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுநீதியை நினைக்கமாட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.


மேற்கூறியவை யாவும் ஒருபுறம் ஆரிய வேதமான நால்வேதத்திற்கும் - தமிழ் மறையான திருக்குறளுக்கும், இன்னொருபுறம் வடமொழிக்கும் - செந்தமிழுக்கும் காலம் காலமாக ஒரு பனிப் போர் அல்லது பிரகடனப்படுத்தப் படாத யுத்தம் இடம்பெற்று வந்திருப்பதைச் எடுத்துக் காட்டுகிறது.


வடமொழியோடு சமரசம் செய்து கொண்ட புலவர்களும் இருந்திருக்கிறார்கள். வண்ணக்கஞ் சாத்தனார் என்ற புலவர்-ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்(து) - ஆரியம்

சீரிய தென்தொன்றைச் செப்பரிதால் -ஆரியம்

வேதம் உடைத்து, தமிழ்திரு வள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து"
(திருவள்ளுவ மாலை 43)


வடமொழி வேதமுடைத்து, தமிழ் மொழி திருவள்ளுவ நாயனார் சொல்லிய குறட்பாவுடைத்து. ஆதலால் வடமொழியையும் தென்மொழியையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடையது என்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் கூடாது என்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:09 pm

வண்ணக்கஞ் சாத்தனார் கூடப் பருவாயில்லை. வடமொழி- தென்மொழி இரண்டும் ஒன்றாக வைத்து ஒப்பிடக்கூடியது என்றார். வடமொழியை உயர்த்தி, தமிழைத் தாழ்த்திப் பாடிய பிற்கால இலக்கண ஆசிரியர் ஒருவர் இருந்திருக்கிறார். அவரிடம் அளப்பரிய தமிழ்ப் புலமை இருந்தது. ஆனால் தமிழ்ப் பற்று இருக்கவில்லை. அவர் பெயர் ஈசான தேசிகர். நெல்லை ஈசான மடத்துத் தலைவராக இருந்தமையால் அப்பெயர் பெற்றார் என்பர். அவருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் சாமிநாத தேசிகர் என்பதாகும்.


இலக்கண விளக்க நூலாசிரியராகிய வைத்தியநாத தேசிகரால் "தொல்காப்பிய முதலிய நூல்களை எழுத்ததெண்ணிப் படித்த சுவாமிநாத மூர்த்தி" என்று பாராட்டப்பெற்றவர். "இலக்கணக் கொத்து" என்னும் நூலை வடமொழி இலக்கணம் தழுவி எழுதியவர்.


இவர் "வடநூலை விட்டுத் தனியே தமிழ்நூல் நடவாதது நியமமே" என்கிறார். எப்படி?


"தமிழ்நூற்கு அளவிலை அவற்றுள்

ஒன்றே யாயினும் தனித் தமிழ் உண்டோ?"
"ஐந்தெழுத் தாலொரு பாடையென்று

அறையவே நாணுவர் அறிவுடையோரே!

ஆகையால் யானும் அதுவே அறிக"
திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல். அதில் காணப்படும் 133 அதிகாரங்களிலும்நூற்றுக்குச் சற்று அதிகமான வடமொழி சொற்களே காணப்படுகின்றன. அதாவது ஒரு அதிகாரத்துக்கு ஒரு வடசொல். எனவே திருக்குறள் தனித் தமிழ் நூல்தான்.

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 33 என்று சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிப்போந்தார். இதனைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூல்மரபில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.


முதல் எழுத்துக்கள்எழுத்தெனப் படுவ

அகரம் முதல் னகரம் இறுவாய்

முப்பஃது என்ப,

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையேதமிழ் எழுத்துக்கள் "அ" முதல் "ன" இறுதியாக முப்பது எனக் கூறுவர். சார்பு எழுத்துக்கள் மூன்றும் அல்லாமல்.


சார்பு எழுத்துக்கள்


அவை தாம்

குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன.சார்பு எழுத்துக்கள் குறுகிய ஓசையை உடைய இகரம், குறுகிய ஓசையை உடைய உகரம், ஆய்தம் என்ற மூன்று புள்ளிகளை உடையவை. இவை எழுத்தை ஒத்து அமைவன.

எழுத்தெண்ணி தொல்காப்பியத்தைக் கற்ற சாமிநாத தேசிகர் தமிழில் ஐந்தெழுத்து மட்டும் உண்டு என்று எப்படிக் கண்டுபிடித்தார்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:12 pm

"ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்!"


வடமொழியில் இல்லாமல் தமிழில் மட்டுமே இருக்கும் எழுத்துகள் "ற ன ழ எ ஒ" என்பன. இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டும் தமிழ் எழுத்துக்கள் என்கிறார் சாமிநாத தேசிகர். மற்றவை எல்லாம் தமிழ் எழுத்துக்கள் இல்லை என்பது அவரது வாதம். தமிழ் மொழியில் ஐந்தெழுத்து மட்டுமே இருப்பதால் அவர் நாணுகிறாராம்.


இப்படி வயிற்றைத் தமிழ் மண்ணுக்கு வைத்து உள்ளத்தை வடமொழிக்கு வைத்த சாமிநாத தேசிகர் போன்ற தமிழ்ப் பகைவர்கள் போல் வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள்.வானுயர் வள்ளுவரின் திருக்குறளுக்கு பதின்மர் உரை செய்திருக்கிறார்கள். பரிதியார் அதிலொருவர். இவரது காலம் 13 அல்லது 14 நூற்றாண்டாகும். தமிழ்மறை என்று போற்றப்படும் திருக்குறளுக்கு உரையெழுதிய பரிதியார் சாமிநாத தேசிகரை மிஞ்சும் வண்ணம் தமிழ்மொழியைப் பழித்தும் இழித்தும் எழுதியிருக்கிறார்.


"தமிழ் பைஸாச பாஷை. சமஸ்கிருதம் தேவபாஷை. தமிழ் அபிவிருத்தி அடைந்ததும் அது இந்நாள்வரை ஜீவித்து வருவதும் வடமொழியால்தான். வேதாந்த சித்தாந்த சாஸ்திர பூஜா விதிகளையும் ஸ்தோத்ரா பூஜா விதிகளையும் தவயோக ஸாதனங்களையும் நாடக நாட்டிய கலா ஞானங்களையும் தமிழர் சமஸ்கிருத்திடமிருந்தே ஆஸ்ரயித்துக் கொண்டனர். அதனால் சம்ஸ்கிருதப் பதங்களை லிவிகளைத் தமிழில் வெகுவாக ஸம்பத்தப்படுத்தி தமிழைப் போஷிக்க வேண்டும்."தமிழில் உள்ள வேதாந்த சித்தாந்த நூல்கள், நாடக நாட்டியக் கலைகள் வடமொழியிலிருந்து கடன்பெற்றவை என்று சொல்வதோடு நிற்காமல் வடமொழிச் சொற்களை தமிழில் கூடியளவு கலந்து தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் பரிதியார். இப்படித் தமிழில் "சம்ஸ்கிருதப் பதங்களை வெகுவாகச் ஸம்பந்தப்படுத்தி தமிழைப் போஷிக்க வேண்டும்" என்பதை செயலிலும் காட்டுமாறு தமிழை மணிப்பிரவாள நடையில் எழுதி "போஷிக்கவும்" செய்கிறார்!


தமிழ் உட்பட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை "பைசாச பாகதம்" என்ற வகுப்பினுள் அடக்கி விடுவது வடமொழியாளரது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. திராவிட மொழிகளை மட்டுமல்லாது அக்காலத்தில் வழங்கிய திபத்துப் போன்ற உள்நாட்டு மொழிகளையும் "பைசாச பாகதம்" என்ற தொகுப்பிற் சேர்த்திருக்கிறார்கள். "பைசாச பாகதம்" என்றால் பைசாசம் (பசாசு) அல்லது பேய்களால் பேசப்படும் மொழியென்பது பொருள்.


சாமிநாத தேசிகர், பரிதியார் போன்றவர்களின் உபயத்தால் வடமொழியே இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி என்ற மாயை நீண்ட காலமாக நீடித்து வந்திருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல ஒரு பாரதியும், சுந்தரனாரும், மறைமலை அடிகளாரும், பாரதிதாசனும், வேவநேயப் பாவாணரும் இல்லாத ஒரு காலகட்டத்தில் கல்டுவெலார் என்ற மொழிஞறியர் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (Comparative Grammar of the Dravidian Languages) என்ற நூலை எழுதி மொழித்துறையில் அதுவரை மறைக்கப்பட்டு அல்லது மறுக்கப்பட்டு வந்த ஒரு உண்மையைத் தெளிவாக்கினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:13 pm

தமிழ் மொழிக்கும் ஆரியத்திற்கும் தொடர்பில்லை என்றும் அது ஆரிய மொழிக்கும் முந்தியதும் மாந்தன் முதன்மொழிக்கு நெருக்கமானதும் என்ற பேருண்மையை கல்டுவெலார் பல ஆண்டு காலம் ஆராய்ந்து நிலைநிறுத்தினார். (இதையிட்டு பின்னர் எழுதுவோம்.)


இப்போதெல்லாம் தமிழர்கள் கொஞ்சம் விழித்துக் கொண்டு விட்டார்கள். தமிழ் தமிழ்நாட்டில் சட்டப்படி ஆட்சிமொழி. தமிழ்மொழிக்கு தனிப் பல்கலைக் கழகம் (தஞ்சைப் பல்கலைக் கழகம்) தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இப்போது உலகளாவிய தமிழர்கள் இணைய தளப் பல்கலைக் கழகத்தில் தமிழில் பட்டப் படிப்புப் படித்துப் பட்டம் பெறலாம். அந்தப் பட்டத்தை தஞ்சைப் பல்கலைக் கழகம் வழங்கும்.


இருந்தும் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அன்றுபோல் இன்றும் தமிழின் தொன்மையையும், தண்மையையும், வண்மையையும், தொடர்ச்சியையும் ஒப்புக்கொள்ளாத தமிழ்ப் பகைவர்கள் சிலர் இருக்கிறார்கள்.


ஆதி சங்கரர் (7 ஆவது நூற்றாண்டு) கேரளத்தில் கல்லாடி என்ற ஊரில் பிறந்தவர். ஐந்து வயதில் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றறிந்து எட்டு வயதில் சன்னியாசம் பெற்றுக் கொண்டவர். அத்வைத வேதாந்தத்தை (இருமையற்ற கோட்பாடு) உருவாக்கியவர். இந்தியாவின் நான்கு திசைகளிலும் கால் நடையாகச் சென்று சமயப்பணி ஆற்றியவர். தெற்கில் சிருங்கேரி, கிழக்கில் பூரி, மேற்கில் துவாரகா, வடக்கில் பண்டரிநாத் என நான்கு இந்து மதபீடங்களை நிறுவியவர்.


இந்தியாவில் சமணம், பவுத்தம், உலோகாயுதம் அழிவதற்கும் இந்து மதத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்கும் சங்கரரின் அத்வைத வேதாந்த ஞானமும் வாதத் திறமையும் கைகொடுத்தது.


காஞ்சி காமகோடிபீடமும் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அதன் பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார். அவரும் பரிதியார்போல தமிழ்மொழியை "நீசபாஷை" எனப் பழித்தும் வடமொழியை "தேவபாஷை" எனப் போற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ்மொழி "நீசபாஷை" என்பதால் அது ஆண்டவன் திருச்செவிக்கு ஆகாது என்கிறார்.


அப்பர், சுந்தரர், ஆளுடைப்பிள்ளையார் மூவரதும், அருண்மொழிவாசகரையும் சேர்த்து நால்வரதும், தாயுமானாரதும் தமிழ் கேட்கும் இறைவன் திருட்செவிக்கு வடமொழிதான் பிடிக்கும், தமிழ் பிடிக்காது என்று ஜெகக்குரு சங்கராச்சாரியார் சொல்வது ஆணவமாகும். இது பரம்பரை பரம்பரையாக "அவாளுக்கு" தமிழ் மீது கொண்டுள்ள பகைமைக்கு எடுத்துக் காட்டாகும்.காஞ்சிப் பெரியவர் தன்னுடன் தனக்கு விளங்காத சமஸ்கிருத மொழியிலே பேசியதைப் பார்த்த இராமலிங்கனார் என்ற அரச ஊழியர் அருகில் இருந்தவரைப் பார்த்து "சுவாமிகள் ஏன் தமிழில் உரையடாமல் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்" என்று கேட்டதற்கு "மதியம் பன்னிரண்டெரை மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் பூசை நடக்கிறது. அதுவரை சுவாமிகள் நீச பாஷையில் பேசமாட்டார்கள்" என்று பதில் வந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:15 pm

தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் சைவசமய குரவர்களான நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் (7-8ம் நூற்றாண்டு) அளப்பரிய தொண்டாற்றியிருக்கிறார்கள்.


பாரதியார் பாடியது போல தமிழ்மொழி இனிமையான மொழி என்பதை நாயன்மார்களின் தேவார திருவாசகங்களும், ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் எண்பிக்கின்றன.

தமிழின் இலக்கிய வளத்திற்கு அவர்களது பாடல்கள் அரண் சேர்க்கின்றன.


இவர்கள் இறை பக்தியோடு தமிழ்ப் பற்றையும் ஊட்டி வளர்த்தார்கள். இவர்களில் "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் திருஞானசம்பந்தர்" என ஆளுடைப்பிள்ளையாரை சுந்தரரே பாராட்டுவார், "தமிழோடிசை பாடல்மறந்தறியேன்" என அப்பர் அருளியுள்ளார்."அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா -நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்"எனப் பூதத்தாழ்வார் தனது ஆழமான கடவுள் பக்தியையும் தமிழ் பக்தியையும் காட்டுமாறு ஒருசேரப் போற்றிப் பாடியிருக்கிறார்.


வடமொழியின் மீது ஆழ்வார்களுக்கு மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் உண்டு. அதே நேரத்தில் தமிழின் மீது அவர்கள் கொண்ட காதலும், ஈடுபாடும் அதைவிட உயர்ந்து காணப்பட்டது. செந்தமிழின் முழுவடிவமாகவே அவர்கள் திருமாலைக் கண்டு அனுபவித்துப் பாடினார்கள்.


"செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி" என்ற அடி திருநெடுந்தாண்டகத்தில் உள்ளது. இதன் பொருள் திருமால் தமிழிசையாகவும் வடசொல்லாகாவும் உள்ளான் என்பது. தமிழ் முதலில் சொல்லப்பட்டு வடமொழி பின்னர் சொல்லப்படுவது கவனிக்கத் தக்கது. மேலும் தமிழ் என்று சொல்லும்போது ஓசை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். வடமொழி என்று சொல்லும்போது வெறுமனே வடசொல் என்கிறார்.


வடமொழியிலுள்ள வேதங்களைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்வார்களின் ஈரத் தமிழ்ப்பாசுரங்கள் ஒன்றே போதும் என வேதாந்த தேசிகர் பாடுகிறார்."செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி

தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோம்"
"செந்திறத்த என்ற சொல்லுக்கு இனிமை என்பது பொருள். இனிய தமிழ் என்பது முரட்டு சமஸ்கிருதம் என்பதற்கு மாறுபட்டது" இவ்வாறு "தமிழ் இலக்கியங்களில் வைணவம"; என்ற நூலில் இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கிறார்.


சைவசமய மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவார திருவாசகங்களை பத்தாம் நூற்றாண்டில் (பிற்காலச் சோழர்கள் எழுச்சி பெறத் தொடங்கியதும் இந்த நூற்றாண்டே) வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி வகுத்தும், தொகுத்தும் பண்முறையில் முறைப்படுத்தினார். இவையே சைவ சித்தாந்த தத்துவத்தின் ஊற்றுக்களாக அமைந்தன. இவற்றின் பொதுப் பெயர் பன்னிரு திருமுறை ஆகும்.


நம்பியாண்டார் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததுபோல் அதே பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் தமிழ் வைணவத்தின் திருமுறையான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைக் கண்டு பிடித்து, பகுத்து, பண் அமைத்து ( நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு மட்டும் மதுரகவிகள் ஏற்கனவே பண் அமைத்துவிட்;டார்) முறைப்படுத்தினார். நாதமுனிகள் பெருமளவு தமிழறிவும், தமிழ்ப்பற்றும், வேதாந்த ஞானமும் கைவரப்பெற்றவர். வைணவத் திருமுறையின் கண்டுபிடிப்பே சைவத் திருமுறைகளைக் காணவும் வழிவகுத்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:18 pm


"பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைல்லார்..."அரிஞ்சய சோழரின் மறைவை அடுத்து அவரது மகனும் முதலாம் இராசராசனின் தந்தையுமான சுந்தர சோழர் (கி.பி. 955-985) முடிசூட்டிக் கொண்டார். அதே மூச்சில் தமது வீரத் திருமகன் "வீரபாண்டியன் தலை கொண்ட" ஆதித்த கரிகாலனுக்கும் இளவரசப் பட்டம் கட்டி வைத்தார்.


சுந்தர சோழரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக அமைச்சர் அநிருத்தர் விளங்கினார். இவர் தனது வேலைப் பளுவுக்கு மத்தியிலும் தமது நண்பர் மாதவப் பட்டரோடு திருவரங்கத்திற்கு (ஸ்ரீரங்கம்) அடிக்கடி வந்து கொண்டிருந்தார்.


இப்படி வரும்போதெல்லாம் நாதமுனிகள் தனது சீடர்கள் சகிதம் திருமால் வெளிவீதி எழுந்தருளும் போது நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் இசைப் பொழிவுகளையும் தப்பாமல் கேட்டு வந்தார். நாதமுனிகளிடம் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் மேன்பைபற்றிக் கேட்டறிந்து கொண்டார்.


அதில் திருவாய்மொழி திருமங்கையாழ்வாரின் காலத்தே திருவரங்கத்தில் வேதங்களோடு ஓதப்பட்டதையும் அதனைத் தான் உயிர்ப்பிக்க தமது ஆசார்யராகிய பராங்குசதாசருக்கு அளித்த உறுதி மொழியைப் பற்றியும் நாதமுனிகள் அநிருத்தருக்கு எடுத்துச் சொன்னார்.


அவருக்கு ஏதாவதொரு வகையில் உதவ வேண்டும் என்று எண்ணம் அநிருத்தரது உள்ளத்தில் தோன்றியது. நாதமுனிகளை அழைத்துப் பேசுமாறு நம்பெருமாள் ஸ்ரீகார்யம் அவர்களைப் பணித்துவிட்டு அநிருத்தர் தஞ்சை போய்விட்டார்.


ஸ்ரீகார்யம் நாதமுனிகளை வரவழைத்து பின்வருமாறு பேசினார்.


"ஐய, நாதமுனி! கோவிலுக்கு வரும் மக்கள் எங்கள் கோயில் உற்சவங்கள், பூசைகளைக் காட்டிலும் உங்கள் பிரபந்தப் பாடல்களிலும், சொற்பொழிவுகளிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முன் எப்போதும் இல்லாதவாறு மக்கள் கூட்டம் திருவிழாக்களின்போது அலை மோதுகிறது. அதனால் திருவரங்கமே ஒரு புதிய கலகலப்போடும் களையோடும் காணப்படுகிறது.


இதனால், எங்களில் சிலர் உங்கள் பாடல்களையும் உற்சவத்தின்போது சேர்க்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்கிறார்கள். இது உமது இறைபணியின் விரும்பத்தகாத எதிரொலி. நீர் தனிப்பட்ட முறையில் தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் எங்களுக்கு மறுப்பில்லை. ஆனால் அதைக் கோயில் வேதாத் யயனத்தோடேயே இணைத்துவிட வேண்டும் என்பது என்ன நியாயம்? அனாதியான வேதங்களோடு அண்மைக் காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களை இணைப்பது பிராமணர் என்று கூறிக் கொள்ளும் உமக்கு அடுக்குமா? சொல்லும்?"


சொல்கிறேன் என்ற நாதமுனிகள் உடன் பாடினார்.


"வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு எங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே சரண்"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:19 pm

தொடர்ந்து நாதமுனிகள் மணிப்பிரவாள உரைநடையில் கேள்விகளுக்கான விடையைக் கூறினார். சொல்லிய சொல்லல் என்ற குற்றச்சாட்டுக்கு நான் ஆளாகினாலும் அதன் முக்கியத்துவம் கருதி நாதமுனிகளது பதிலை அப்படியே தருகிறேன்.


"உங்கள் மனத்தில் மூன்றுவித ஆட்சேபங்கள் ஒன்றோடொன்று உரசிக் கிடக்கின்றன. ஸம்ஸ்கிருதம், திராவிடம் - என்ற பாஷைப் பிரச்சினை நாம் முதலில் அறுத்துக் கொள்ளவேண்டும். எனெனில், அதுவே பலரின் அடிமனதில் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை சம்பாஷணைகளில் நான் கவனித்திருக்கிறேன்.


ஸம்ஸ்கிருத மோகம் பிராமணர்களின் கண்ணை மறைக்கும் ஒரு மாயை. அது விலகினால் அன்றி உண்மை புலப்படாது.


ஸம்ஸ்கிருதம் ஒரு தேவ பாஷை என்பதை நான் மறுப்பதாக யாரும் தப்பர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. பூ மண்டலத்திலேயே அதற்கிணையாக இன்னொரு பழைமையான பாஷை இல்லை. வேதங்களைப் போல் அனாதியான, அதாவது இன்ன காலத்தியது என்று அறியக் கூடாத அளவுக்குப் பழைமையான, கிரந்தங்கள் வேறெங்கு மில்லை.


ஆனால், பரத கண்டத்திலேயே ஸம்ஸ்கிருத்திற்கு அடுத்தாற்போலச் சிறந்த பாஷை எது? ஸம்ஸ்கிருதம் சிவபெருமான் ஏந்திய டமருகத்தின் வலப்பக்கத்தில் இருந்தும், திராவிடம் அதன் இடப்பக்கத்திலிருந்தும் தோன்றியதாகச் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டதில்லையா? நாம் வேண்டுமானால் நாராயணனே இரண்டு மொழிகளையும் படைத்தான் என்று கொள்ளலாம். திராவிடத்தின் வியாகரணத்தை அகஸ்தியரே செய்தார் என்கிறார்கள். இவர் வேதகால ரிஷி அல்லாவா?


இன்றுள்ள தமிழ் வியாகரணங்களுள் எல்லாம் பழைமையான தொல்காப்பியத்தைச் செய்தவர் அகஸ்தியரின் பிரதம சிஷ்யர் என்றுதானே சொல்கிறார்கள்.? இந்தத் தொல்காப்பியமும் பாணினியின் அஷ்டாத்தியாயிக்கும் முற்பட்ட இந்திர வியாகரணமான ஐந்திரத்துக்கு இணையானதாம். பாரதப் போரில் உணவளித்த சேரமான் ஒருவனைப் பற்றிய பாடல் ஒன்று புறனானூறு என்ற கிரந்தத்தில் உண்டென்றும், அதில தொல்காப்பிய விதிகளை மீறிய இடங்களும் இருப்பதால், இவ் ஆதி வியாகரணம் குறைந்தது துவாபர யுதத்துக்காகிலும் பிற்படாதென்றும் நான் பல வித்துவான்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


திராவிட சங்கத்தார் முன் திராவிட பாஷையைக் குறைத்து ஸம்ஸ்கிருதத்தை மட்டுமே பாராட்டி வேட்கோ குயக் கொண்டான் பேசியதாகவும், அது கேட்கப் பெறாத வேளாப் பார்ப்பனரான நக்கீரர்


"முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி!
"பரண கபிலரும் வாழி! - அரணிலா
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக் கொண்டான்
ஆனந்தம் சேர்க சுவாகா"எனப் பாடவே அவன் இறந்துபட்டானாம். பின் அவனைச் சேர்ந்தோர் பிழை பொறுக்க வேண்டினராக அவர்க்கிரங்கி அப்புலவர் பெருந்தகை,


"ஆரியம் நன்று, தமிழ் தீ தென உரைத்த
காரியாத்தால் காலக்கோட் பட்டானை -சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால்
செந்தமிழே தீர்க்க சுவாகா"எனவும் பாடி உயிர்ப்பித்தாகவும் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். சோழியப் பிராமணராய் மூங்கிற் குடியிற் பிறந்து விஷ்ணு தருமோத்திர முதலாகிய சிரந்தங்களை எல்லாம் கற்றுத் துறைபோகிய தொண்டரடிப் பொடிகள் தாம் இறைவனைப் பாடப் புக்க போது தமிழாலேயே பாராட்டினார். அது மட்டுமா? அவர் செய்த ஸம்ஸ்கிருத கிரந்தம் ஒன்று கூட இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:21 pm

அபயக்குரல் எழுப்பிய போது கஜேந்திராழ்வார் ஆதி மூலத்தை ஸம்ஸ்கிருதத்திலா அழைத்தார்?"


"ஓய் நாதமுனி! போதும் நிறுத்தும். இது ஸம்ஸ்கிருத சமிதி அல்ல. நீர் திராவிட பாஷா மான்மியம் பற்றி வழக்காட. வேதங்களுக்கு ஆழ்வார்களின் பாடல்கள் எப்படிச் சமமாகு மென்பதே நம் முன் உள்ள பிரச்சனை" - ஸ்ரீகார்யத் தலைவர் சுட்டிக் காட்டினார்.


"நான் மூன்று பிரச்சனைகளைகள் பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? அவற்றுள் இது இரண்டாவது. முதல் பிரச்சனையைப் பற்றி நான் முடிக்கு முன்பே பாஷை வெறும் வாகனம் மட்டும் தான், விஷயமே முக்கியமானது - என்பதை நீங்கள் உணர்ந்து விட்டதை இப்போது நீங்கள் இரண்டாவது பிரச்சனைக்கு தாவி விட்டது காட்டுகின்றது. சந்தோஷம். உங்கள் விருப்பப்படி இந்த இரண்டாம் பிரச்சனைக்கு வருவோம்."


ஏற்கனவே நான் சொல்லியதுபோல ஆரியம் தமிழ் இரண்டுக்கும் இடையில் ஒரு பனிப்போர் நீண்டகாலமாக நிலவி வருகிறது என்பதை நாதமுனிகளுக்கும் ஸ்ரீகார்யத் தவைவர் இடைக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் அல்லது தர்க்கம் எண்பிக்கிறது.


தமிழ் மொழிக்கு ஏற்றம் கொடுப்பதை பிராமணீயம், நாதமுனிகள், இராமனுசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள். பாரதி, கல்கி, உ.வே. சுவாமிநாதையர் போன்றவர்கள் நீங்கலாக, ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. .


நாயன்மார்களில் தமிழை மிகவும் ஏற்றிப் போற்றியவர் திருஞானசம்பந்தர். பிறப்பால் அந்தணர். உள்ளத்தால் தமிழர். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்" என்று சுந்தரர் இவரைப் பாராட்டுவார். தமிழ்மொழிக்குள்ள அடைமொழிகளில் பாதிக்குமேல் ஞானசம்பந்தரின் அன்பளிப்புக்கள். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் அவரது பெயரை வைத்துக் கொள்வதே "நீசம்" என்று தள்ளிவிட்டார்கள்!


அந்தமிழ்
அருந்தமிழ்
ஆரா அருந்தமிழ்
இசைமலி தமிழ்
இன்தமிழ்
ஒண்தமிழ்
நற்றமிழ்
நின்றதமிழ்
சங்கமலி செந்தமிழ்
சந்தமார் தமிழ்
சந்தமாலைத் தமிழ்
செந்தண்டமிழ்
செந்தமிழ்
செய்தமிழ்
தண்தமிழ்
முத்தமிழ்
மூன்றுதமிழ்
ஞானத்தமிழ்
குன்றாத்தமிழ்
குற்றமில்
செந்தமிழ்(இந்தப் பட்டியல் நிறைவானதல்ல. இன்னும் இருக்கின்றன. இடக்குறைவு காரணத்தால் தரமுடியவில்லை)


ஆளுடைப்பிள்ளையாரின் தமிழ்ப் பற்றுக்கு அவரது தேவாரங்கள் சான்று பகருகின்றன. ஒவ்வொரு திருக்கோவிலைபற்றிப் பாடிய பதிகத்தின் கடைசிப் பாடலில் ஞானசம்பந்தன் என்ற பெயரோடு தமிழ் என்ற சொல்லையும் பயன்படுத்த அவர் ஒருபோதும் தவறுவதில்லை. தன்னையே தமிழ்ஞானசம்பந்தன், நற்றமிழ்ஞானசம்பந்தன் என வாய் ஓயாது அழைக்கிறார்.


"தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிதனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பெரியப் புகுவாரே"
(இரண்டாம் திருமுறை 11-11)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:25 pm

"தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்"


மேலும் தமிழ்ஞான சம்பந்தர் தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழவமொந்தை மல்குபாடல் செய்ய வேண்டும் என்கிறார்.


"தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மை யது கொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே."(தலாம் திருமுறை 47-
மீண்டும் சந்திப்போம்


தமிழ் நாட்;டில் சைவ சமய குரவர்களான அப்பரும், சுந்தரரும், ஆளுடைப் பிள்ளையாரும், வைணவ ஆழ்வார்களான பெரியாழ்வார் தொடங்கி திருமங்கை ஆழ்வார் ஈறாகப் பன்னிருவரும் தொடக்கிய பக்தி இயக்கம் (கடவுளை அறிவுத் தளத்தில் இல்லாது உணர்வுத் தளத்தில் இருந்து வழிபடல்) வெற்றி பெற்றதற்கு இரண்டு காரணங்களை முக்கியமாக எடுத்துச் சொல்லலாம்.


முதலாவது பிராமணர்களின் மேலாதிக்க ஆளுமைக்கு உட்பட்டதாக சமயம் வேதகாலத்தில் இருந்தது. இதற்கு மாறாக யாரையும் விட்டு விடாது, எல்லோரையும் அரவணைத்துச்செல்வதாக பக்தி இயக்கம் இருந்தது.


இரண்டாவதாக இறை வழிபாட்டில் மக்கள் மொழியான தமிழுக்கும் தமிழிசைக்கும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கொடுத்த முன்னுரிமை. இவர்களது பணியால் தமிழ் மொழிக்கும் தமிழிசைக்கும் ஒரு புதுப் பொலிவும், வனப்பும், வண்ணமும், வளர்ச்சியும் ஏற்பட்டன. வேறு மொழிகளில் காணப்படாதவாறு சமய இலக்கியம் தமிழ் மொழியை வளப்படுத்தியது.


அப்பர், ஆளுடைப் பிள்ளையார் இருவருக்கும் பிற்காலத்தவரான சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் அப்பருக்கும் ஆளுடைப் பிள்ளையாருக்கும் காசுகள் கொடுத்து தமிழிசை பாடுமாறு கேட்டதாக பாடல் அருளியிருக்கிறார்.


"தெரிந்த நான்மறையோர்க் கிடமாய திருமிழலை
இருந்து நீர் தமிழோடிசை கேட்கும்
இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே"(ஏழாம் திருமுறை 899)


பிற்காலத்தவரான தாயுமானசுவாமிகள் (19ம் நூற்றாண்டு) அப்பரும், சுந்தரரும், ஆளுடைப்பிள்ளையாரும் மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர் சொலும் தேவாரத் தமிழ்மொழியை இறைவன் ஏற்றருளினான், அப்படிப்பட்ட இறைவன் தன்மொழியையும் ஏற்றுக் கொள்வாரா என்று ஏங்குகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:27 pm


"தேவரெல்லாம் தொழச் சிவந்த செந்தாள் முக்கட்
செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக
மூவர் சொலும் தமிழ்மொழி கேட்கும் திருச் செவிக்கே
மூடனேன் புலம்பிய சொல் முற்று மோதான்"அப்பரும், சுந்தரரும், ஆளுடைப்பிள்ளையாரும், அருமணிவாசகரும் தமிழை ஏற்றிப் போற்றுவதில் ஒருவரையொருவர் விஞ்சுகிறார்கள்.


நாவுக்கரசர் ஞானசம்பந்தரது சமகாலத்தவர். எண்பது அகவைகள் நிறைவாழ்வு வாழ்ந்தவர்.சைவத்தில் மருள்நீக்கியாராகப் பிறந்து சமணத்துக்குச் சென்று தருமசேனர் ஆகி மீண்டும் சைவத்துக்கு வந்து திருநாவுக்கரசர் ஆகியவர். நாவுக்கரசர் தமது தமக்கையார் திலகவதியாரால் திருநீறு பெற்றுச் சைவராகித் திருவதிகைப் பெருமானைப் போற்றிப் பாடியபோதுதான் திருநாவுக்கரசு என்ற பெயர் உண்டாயிற்று.


"பாவற்றலர் செந்தமிழ் இன்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கரசு என்று உலகேழினும்; நின்
நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவான்
இடையே ஒருவாய்மை எழுந்ததுவே"என்று பெரியபுராணம் பாடிய சேக்கிளார் செந்தமிழ் இன்சொல்வளப் பதிகத்தொடை பாடியபான்மையினால் நாவுக்கரசு என்ற பெயர் பெற்றார் என்கிறார்.


திருநாவுக்கரசர் நாயன்மார்களிலேயே பெரிய புரட்சிவாதி. மறுமலர்சியாளர். அவர் "காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா" என்று புலம்பி அழுத கூட்டத்தைச் சார்ந்தவர் அல்ல.


யாருக்கும் அஞ்சவேண்டாம், யாருக்கும் அடிமையாக வாழவேண்டாம். நம் ஆற்றலைப் பெருக்கிச் கொண்டு இறைவனை நம்பி நேர் வழியில் நடத்தால் நாம் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. யாருக்கும் அடிமை செய்ய வேண்டியதில்லை. இதனை நாவுக்கரசர் இறுமாப்புடன் இப்படிச் சொல்லுவார்.


"நாம் யார்க்கும் குடிஅல்லோம், நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
நாமார்க்கும் குடிஅல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழைஓர் காதிற்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே"
(மறுமாற்றத் திருத்தாண்டகம் 1)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:28 pm

பிறிதோரிடத்தில் சொல்கிறார்-


"திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை"மேலும் செல்வந்தர்களது செல்வச் செழிப்பை மதிக்க மாட்டோம் என முழங்குகிறார்:


"சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வான்ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்"திருநாவுக்கரசரின் மேற்கூறப்பட்ட பாடல்களுக்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருப்பதாகச்சொல்லப்படுகிறது.


பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 610-630) நாவுக்கரசரின் சமகாலத்தவன்.சமணம் தமிழகத்தில் வளரப் பல்லவர்கள் பேராதரவு நல்கியிருக்கிறார்கள். மகேந்திரவர்மன் சமண சமயத்தவனாக ஆரம்பத்தில் இருந்தவன். இதனால் சைவ சமயத்துக்கு பகையாக இருந்தான்.


வயிற்றுவலியால் வாடிய நாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறியபோது சமணர்கள் ஆத்திரம் அடைந்தார்கள். அவர்களின் தூண்டுதலின் பேரில் மகேந்திரவர்மன் நாவுக்கரசரை கைது செய்து பிடித்து வருமாறு தனது காவலர்களை ஏவினான். காவலர்கள் மன்னன் பணிப்பில் விரைந்து ஏகி நாவுக்கரசரைக் கைதுசெய்ய வந்திருப்பதாகக் கூறியபோதே நாவுக்கரசர் இந்தப் பாடலைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது.


நாவுக்கரசரை கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சியும், நீற்றறையிலே இட்டும் தோல்விகண்ட மகேந்திரவர்மனே மனம்மாறி சைவ சமயத்தைத் தழுவிக் கொண்டான் என்பது வரலாறு.


உள்ளத்தில் உள்ளொளி இல்லாமல் புறச் சடங்குகள் மூலம் இறைவனைக் காணலாம் என எண்ணிக் கங்கையில், காவிரியில் மூழ்கி எழுந்து வேதம் ஓதி வேள்விகள் செய்து காலத்தைக் கழிப்பவரைப் பார்த்து அவற்றால் எந்தப் பயனும் இல்லை என நாவுக்கரசர் இடித்துரைக்கிறார்.


"கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகட லோத நீ ராடிலென்
எங்கும் ஈசனெ னாதவர்க் கில்லையே!"
"வேத மோதிலென் வேள்விகள் செய்கினென்
நீதி நூல்பல நித்தம் பயிற்றிவென்
ஓதி அங்கமோ ராறு முணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே!"
(தனித்திருக் குறுந்தொகை)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:30 pm

இந்த நாவுக்கரசர்தான் "தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்" என்று இறைவனிடம் தன்னை வருத்திய பொல்லா சூலநோயை குணமாக்குமாறு கேட்கும்போது சொல்கிறார்.


"சலம்பூவோடு தூபமறந் தறியேன்
தமிழோ டிசைபாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்
உன்னாம மென்னாவின் மறந்தறியேன்
உலந்தார் தலையிற் பலிகொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலந்தே னடியே னதிகைக்கெடில
வீரட்டானத் துறையம் மானே!
(திருமுறை)


தமிழ் உட்பட இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் தாய்மொழி சமஸ்கிருதம் என்ற மாயை நீண்ட காலமாக நிலவி வந்ததையும் அதனை முறியடித்து தமிழ் மொழிக்கும் ஆரியத்திற்கும் தொடர்பில்லை என்ற பேருண்மையை கல்டுவெலார் ஆராய்ந்து நிலைநிறுத்தினார் என்பதை முன்னர் கூறினோம்.


தமிழ் ஆரியத்திற்கு முற்பட்ட மொழி என்பது தமிழ்விடுதூது முதலிய நூல்களாலும் அறிந்து கொள்ளலாம்.


"செயற்கைப் பொருள்கள் செய்வான் வேண்டின்
இயற்கைப் பொருளின் றியக்கல் வேண்டும்
இயற்கைப்பொருள்க ளிலவேல்
செயற்கைப்பொருள்களு மிலவேயாகும்
படம் வேண்டின் பஞ்சுவேண்டும்
பஞ்சின்றேற் படமில்லை. அதுபோல்
செயற்கை யோசையினின் றியக்கல் வேண்டும்
இயற்கை யோசையிலவேல்
செயற்கையோசையு மிலவேயாகும்"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:39 pm

"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே"

ஒரு மொழியிலுள்ள சொற்களின் ஒலிகளை வரிவடிவில் எழுதுவதற்கு இன்றியமையாத கருவி எழுத்து. தமிழில் எழுத்துக்கும் ஒலிக்கும் ஒற்றுமை உண்டு. வேறு பல மொழிகளில் ஒலிக்கும் எழுத்துக்கும் ஒற்றுமையில்லாது இருக்கிறது.

இன்று உலக மொழி என்ற பெருமைக்குரிய ஆங்கில மொழியில் இந்த எழுத்து ஒலி ஒற்றுமை காணப்படவில்லை. இந்த ஒற்றுமையின்மை காரணமாக ஆங்கில மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் அதில் புலமை எய்துவதிலும் பெரிய இடர்ப்பாடு நிலவுகிறது.

தென்னிலங்கையில் ஓர் ஆண்டு வாழ்ந்தால் சிங்கள மொழியைப் பேசக் கற்றுக் கொள்ளலாம். தில்லியில் ஓர் ஆண்டு வாழ்ந்தால் இந்தியைப் பேசக் கற்றுக் கொள்ளலாம். தமிழும் அவ்வாறே. ஆனால் ஆங்கிலம் பேசப்படும்; அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஆங்கில மொழியை சரியான உச்சரிப்போடு யாரும் பேச முடியாது. ஆங்கில மொழியை இளமையில் கல்லாது இடையில் கற்கத் தொடங்கியவர் அந்த மொழியை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் சரியான உச்சரிப்போடும் பேச முடியாது.

ஆங்கிலத்தில் எழுத்துக்கும் ஒலிப்புக்கும் வேறுபாடு இருப்பதுபோல (Colonel என்ற சொல் கேணல் என்று ஒலிப்பது) வடமொழியில் து:க்கம் என்றெழுதி துஹ்க்கம் என்று ஒலிக்கப்படுகிறது. அவ்வாறே அத:பரம் அதகபரம் என்றும், அந்த:கரணம் அந்தஹ்கரணம் என்றும் ஒலிக்கப்படுகின்றன,

மேலும் ப்ரஹ்ம என்றெழுதி ப்ரம்ஹ என்றொலிக்கப்படுகிறது. அவ்வாறே சிஹ்ம சிம்ஹ என்றும், வஹ்நி: வந்ஹி: என்றும் விஜ்ஞானம் விக்ஞானம் என்றும் ஒலிக்கப்படுகிறது.

இலக்கணத்தை எடுத்துக் கொண்டால் தமிழ்மொழியில் எல்லாப் பொருள்களும் இரண்டு திணைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.

பகுத்தறிவுடைய உயிர்கள் யாவும் உயர்திணையாகப் பகுக்கப்பட்டு, உயர்திணையில் ஆணுக்கு ஆண்பாலும் பெண்ணுக்கு பெண்பாலும். பலருக்கு பலர்பாலும் சூட்டப்பட்டுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:40 pm

(1)

பகுத்தறிவற்ற விலங்கு, பறவை, நீர் வாழ்வன முதலிய உயிர்களையும், மரம், செடி, கொடி, கல், மண் முதலிய சடப்பொருள்களையும் அஃறிணையாகப் பகுத்து அவற்றுள் ஒன்றுக்கு ஒன்றன்பாலும், பலவற்றுக்குப் பலவின்பாலும் கூறப்பட்டுள்ளன.

தமிழில் விலங்கு. பறவை, ஊர்வன இவற்றின் ஆண் பெண்களுக்கு வெவ்வேறு பெயர் கூறப்படினும், அவைகள் பகுத்தறிவற்ற "சாதி"யிற் பட்டனவாதலால் அஃறிணையாகவே கூறப்படுகின்றன.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் உயர்திணை அஃறிணை என்ற வேற்றுமை பாராட்டப்படுவதில்லை. உயிருள்ளவை பகுத்தறிவு, பகுத்தறிவற்ற பாகுபாடு காட்டப்படாது ஆண் பெண் பால் வேற்றுமை மட்டும் காட்டப்படுகிறது. உயிரல்லாத பொருள்களுக்கு பால் கிடையாது. பிரன்சுமொழி இதற்கு விதிவிலக்கு. பிரன்சு மொழியில் சடப்பொருள்களுக்கும் ஆண்பால் பெண்பால் வகுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியில் பெயர்கள் மூன்று பால்களாக வகுக்கப்படுகிறது. அரசன், மனிதன், எருது, சேவல் ஆண்பால் (Masculine gender).

பகுத்தறிவின் அடிப்படையில் உயர்திணை அஃறிணை வேறுபாடு ஆங்கிலத்தில் இல்லாததால் "மனிதன் வந்தான்" "மாடு வந்தது" என்பதற்குப் பதில் மனிதன் வந்தது, மாடு வந்தது என்று எழுதப்படும்.

அரசி, பெண், பசுமாடு, பெட்டைக் கோழி பெண்பால் (Feminine gender) மரம், செடி, கொடி, புத்தகம், வீடு அஃறிணைப் பால் (Nueter gender).

சில சொற்கள் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் வழக்கில் இருக்கும். அவற்றை பொதுப் பால் (Common gender) என வகைப்படுத்தப்படும்.

வடமொழியில் பால் வரம்பின்றிப் பலவாறு கூறப்படுகிறது. எடுத்துக்காட்டு மனைவி பெயர் பார்யா- பெண்பால் (ஒருமை). தாரா - ஆண்பால் (என்றும் பன்மை) களத்தரம் - ஒன்றன்பால்.

கல்லின் பெயர் பாஷாண - ஆண்பால். சிலா - பெண்பால். உபலம் - ஒன்றன்பால்.

தமிழ்மொழியில் வினைச் சொல் ஒருவன், ஒருத்தி, ஒன்றன் செயல்களைக் குறிக்குஞ் சொல் தெளிவாகக் குறிக்கப்படுகிறது.


ஒரு வாக்கியம் என்பது எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பன கூடி ஒரு கருத்தை விளக்குவது. பெயர் வினைகளின் இயலை உரிச்சொற்களாலும், பல பெயர்களை இடைச் சொற்களாலும், பல வினைகளை எச்சத்தானும், பெயர்க்கும் வினைக்கும் உள்ள சம்பந்தத்தை வேற்றுமை உருபாலும் புணர்த்தி தமிழில் விளக்கப்படுகிறது. ஆங்கிலத்திலும் தமிழ் போலவே சொற்றொடர் அமைந்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:41 pm

ஆனால் வடமொழி, இலத்தீன், கிரேக்க முதிலிய மொழிகளில் இந்த ஒழுங்கு இல்லை. பெயர்களின் வேற்றுமைப் பால்களை ஏற்றல், இடைச்சொல் இன்றிக் கூறல் முதலிய அழகின்மை காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு-

தமிழ் - கரிய பெரிய குயிலை வஞ்சகமுடைய காக்கையாக எண்ணினான்.

வடமொழி - "க்ருஷ்ணம் ப்ரஹந்தம் வஞ்சகி நம் காகம் பேனோ"
கரியதை பெரியதை குயிலை வஞ்சகமுடையதை காக்கையை எண்ணினான்.

இதுகாறும் கூறியவற்றால் "வடமொழியிலும் தமிழ்மொழி வியாபகமுடைய தென்பதும், ஆரியம் வருமுன் சகமுழுதும் தமிழிருந்தெதென்பதும், ஆரியத்திற்கு முன்னேயே தமிழ்திருத்துபாடுள்ள தென்பதும், தமிழ்ச் சொல்லில் பொருட்பொதிவுள்ளது என்பதும், தமிழ் திணை பால் முதலியவற்றால் சிறந்ததென்பதும், தமிழ் ஒலியும் எழுத்தும் ஒன்றுபட்டுள்ளது என்பதும், வடமொழி முதலியவற்றினும் தமிழ்ச் சொற்றொடர் அழகுடையது என்பதும், பிறவும் பெறப்பட்டன" எனத் தமிழ்ப் பண்டிதர் மாகறல். கார்த்திகேய (முதலியார்) தாம் இயற்றிய "மொழிநூல்" என்ற நூலில் விளக்கியுள்ளார்.

தமிழ்மொழியின் சிறப்பு இனிமை மட்டுமல்ல தொன்மையும் அதன் சிறப்பாகும். தொல்காப்பியர் இதனை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

(2)

"இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்
தோல் என மொழிப தொன்மொழிப்புலவர்"


(தொல். பொருள் அதிகாரம். செய்யுளியல் 236)


(பொருள்) ஓசை மிகுந்த சொற்களால் வாழ்க்கைக்குரிய உண்மைப் பொருள்களை, ஆசிரியப்பா போன்ற பாக்களாலும் இணைத்துக் கூறுவது தோல் என்று கூறப்படும் எனப் பழைமையை உணர்ந்த புலவர்கள் கூறுவர்.


தொல்காப்பியருக்கு முன்னும் செந்தமிழில் தோலென்னும் பழமை அழகு இருந்தது என்பது இச் சூத்திரத்தால் புலனாகிறது. இஃது தமிழ்மொழியின் தொன்மைக்கு சான்றாகும், அதாவது தமிழ்மொழியின் பழமை தொல்காப்பியத்திற்கும், அகத்தியத்துக்கும் முந்தியதாகும்.


சந்தத் தமிழில் வாய் மணக்க மணக்கத் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் முருகக் கடவுளிடம் "சும்மாஇரு சொல்லற" என்ற மவுன மந்திர உபதேசம் பெற்று நிறுவிகற்ப சமாதியில் வீற்றிருந்த போது முழு முதற்கடவுள் மயில்மிசை தோன்றி "நம் புகழைப் பாடுதி" என்று கேட்க "பெருமானே! மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை "ஏடெழுதா முழு ஏழை" யாகிய அடியேன் எங்ஙனம் பாடுவேன்" என்னலும் சுந்தரருக்கு "பித்தா பிறைசூடி" என்று முக்கண்ணன் முதலடி எடுத்துக் கொடுத்து "பாடுக" என்று அருளியதுபோல செந்தமிழ் செவ்வேட் குமரன் தனது "ஞானமூறு செங்கனிவாய்" மலர்ந்து கனத்த செந்தமிழால் "முத்தைத் தரு" என்ற மதுர மிகுந்த சொற்றொடர் எடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர்-
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:42 pm

(3)

"முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்திக் குருபரன் எனவோதும்

.........................................................................."எனத் தொடங்கி தனது முதற் திருப்புகழைப் பாடி முடித்தார் எனத் திருமுருக கிருபானனந்தவாரியார் உரை கூறுவார். திருப்புகழ் கடவுள் வாழ்த்தில் அருணகிரிநாதர்-


"முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடி செய்த ............


எனக் குறிப்பிடுகிறார். முத்தமிழடைவு என்பது எல்லா மொழிகளுக்கும் முற்படுமாறு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை அகத்தியர் கூற விநாயகர் எழுதினார் என்பது கர்னபரம்பரை.

"முத்தமி ழடவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே" என்பதால் ஆரியத்துக்கு முன்னமேயே தமிழுண்டென்பது அருணகிரிநாதர் முடிவாகும். மேலும்-

"பரிவுடன ழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை - பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதியகணபதி - யிளையோனே"


(திருப்புகழ் 223)

"அறத்தை வளர்த்திடு பரசிவைகுலவதி
திறத்தமிழைத்தரு பழையவளருளிய - சிறியோனே"
"அமரு மிடனனலெனு மொருவடிவுடை
யவனிலுரையவன் முதுதமிழுடையவன்
அரியொடயனுல கரியவனடநவில் - சிவன் வாழ்வே"


(திருப்புகழ் 278)

"முதியமாதமி ழிசையதாகவே - மொழிசெய்தே
நினைந் திடுமாறு"

(திருப்புகழ் 536)

என அருணகிரிநாதர் அருளியிருக்கிறார். அருணகிரிநாதர் "முற்பட எழுதிய முதல்வோன், பழமொழி, பழையவள், முதுதமிழ்,, முதியமாதமிழ்" என அருள்வதால் தமிழ் வடமொழிக்கும் முற்பட்டதெனத் தெளியப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:49 pm

"முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி"

வடமொழி தேவபாஷை, தமிழ் மொழி நீஷபாசை எனவே தமிழ் அர்ச்சனை மொழியாக இருக்கத் தகுதியற்றது என்று தமிழ்ப் பகைவர்கள் மொழிகின்றனர். இந்தத் தமிழ்ப் பகைவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சனாதன தர்மத்தின் (இந்து) பாதுகாவலர் என்று கருதப்படும் காஞ்சி காமகோடிபீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் "மதியம் பன்னிரண்டெரை மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் பூசை நடக்கிறது. அதுவரை சுவாமிகள் நீஷையில் பேசமாட்டார்" என்கிறார் அவரது உதவியாளர்.

ஆனால் தமிழ் மணக்கும் திருப்புகழை வாய் மணக்கப் பாடிய அருணகிரிநாதர்-

"கொன்றைச் சடையார்க் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழாற் பகர்வோனே"
(திருப்புகழ் 137)

என கொன்றைப் பூவை சடையில் சூட்டிக் கொள்ளும் சிவபெருமானுக்கு கொஞ்சித் தமிழால் முருகன் பகர்வதால் தமிழ்தான் கடவுண்மொழி என்கிறார்.

கடவுதல் - செலுத்துதல், உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் நின்று செலுத்துவதனால் இறைவன் கடவுள் எனப்பட்டனன்.

"செலுத்துதல் என்னுஞ் சொல்லே கடவுதல் எனச்செந் நூல்கள்
பலத்துடன் உரைக்கு மாற்றால் பசுக்களின் உளத்தே நின்று
செலுத்துள மாங்குகற்குக் கடவுளென் திருப்பேர் ஒன்றெத்
தலத்தரும் இறும்பூ தெய்தத் தமிழினில் ஏய்ந்ததாமே"
(பாம்பன் சுவாமிகள்)

தமிழ் மிகச் சிறந்த கடவுள் மொழியாகும். தோன்றித் தோன்றி மறையும் ஏனைய மொழிகள் போன்றதன்று. என்றைக்கும் இளமையாகவே விளங்கி எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் உவட்டா இன்பத்தை ஊட்டவல்லது.

"ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிழமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே"


எனத் தமிழன் பள்ளியெழுச்சிப் பாடகர் பேராசிரியர் சுந்தரனார் தாம் பாடிய மனோன்மணீயத் தமிழ்த் தெய்வ வணக்கத்தில் தமிழின் சீரிழைமைத் திறத்தை வியந்துரைக்கிறார்.

பாண்டி நாட்டின் தலைநகரான தென்மதுரையில் முதல் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது. அதில் "அகத்தியனாரும், குன்றமெரித்த விரிசடைக் கடவுளும், கூர்மையுடைய வேலினால் கிரவுஞ்சமலையைப் பிளந்த முருகவேளும், முரஞ்சியூர் முடி நாகராயரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐந்னூற்று நாற்பத்தொன்பர் பாடினர், அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது புலவர்கள் தமிழராய்ந்தனர் என இறையனார் களவியல் உரையாசிரியர் நக்கீரனார் (பெரும்பாலும் 11 அல்லது 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) தெரிவிக்கின்றார்.

இஃது செவி வழிக் கதையென்றாலும் முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகனும் உடனிருந்து தமிழ் ஆராய்ந்தனர் என்று சொல்லப்படுவது தமிழ் கடவுண்மொழி என்று சிறப்பித்துக் கூறதல் வேண்டியே. தமிழ்ச் சங்கம் பற்றிய வரலாற்றைப் பின்னர் விரிவாக எழுதுவோம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:50 pm

அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழைத் தமிழ்மறை என்கிறார் திருமுருக கிருபானந்தவாரியார். திருப்புகழ் மிக மின இனிமையானது. சர்க்கரை, பாகு செய்து தானே உதிர்ந்த மாம்பழம், மாதுளம் பழம், திராட்சைப்பழம், பாலப்பழம், தோடம்பழம், மாதுளம்பழம், திராட்சைப் பழம், பலாப்பழம் முதலிய பழங்களைப் பிழிந்து அதில் நெய்யும் பாலும் விட்டுக் காய்ச்சி இறக்கிவைத்த இளஞ் சூட்டில் கொல்லிமலைத் தேனையும் விட்டுக் கிண்டி வைத்தால் அது எப்படியிருக்குமோ அதைவிடத் திருப்புகழ்; மதுரமானது.

"எதிரும் புலவன் வில்லிதொழ
எந்தை உனக்கந் தாதிசொல்லி
ஏழைப்புலவர் செவிக்குருத்தோ
டெறியுங் கருவி பறித்தெரிந்த
அதிருங் கடல்சூழ் பெரும்புவியில்
அறிந்தார் அறியார் இரண்டுமில்லார்
ஆரும் எனைப்போல் உனைத்துதிக்க
அளித்த அருண கிரிநாதன்
உதிருங் கனிகை நறும்பாகில்
உடைத்துக் கலந்து தேனைவடித்
தூற்றி யமுதி னுடன்கூட்டி
ஒக்கக் குழைத்த ருசிபிறந்து
மதுரங் கனிந்த திருபுகழ்ப்;பா
மாலை புனைந்தான் வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே!"
(திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்)


திருமுருகப் பெருமானுடைய திருமார்பை அலங்கரிக்கும் மதாணி (ஆபரணம்) ஆகும். அவருடைய திருமார்பில் விளங்கும் கடம்ப மலர் மாலை மணக்குமாறு தெளிக்கின்ற தமிழ்ப் பன்னீரும் ஆகும்.

"உரைபெற வகுத்தருணை நகரிலொரு பக்தனிடும்
ஒளிவளர் திருப்புகழ் மாணிக்ரு பாகரனும்"


"பலபல பைம்கொன் பதக்கமாரமும்
அடிமை சொலுஞ்சொல் தமிழ்ப்ப னீரொடு
பரிமளமிஞ்சக் கடம்ப மாலையு மணிவோனே."


வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், உபநிடதம், மருத்துவம், யோகம், இசை, முதலியன எதுவும் வேண்டாம் அவை யாவும் திருப்புகழில் நிறைந்துள்ளது. அதனால் ஓசை நயங்களும் தாளகதிளும் குவிந்திருக்கும் திருப்புகழைக் கற்பார்க்கு வேதம் முதலிய எல்லா வித்தைகளையும் கற்ற பயன் உண்டாகும் என ஒரு பழம் பாடல் தெரிவிக்கிறது.

"வேதம்வேண் டாம்சகல வித்தைவேண் டாங்கீத
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம் - ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் றுள்போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்"


அருணகிரிநாதரைப் போலவே திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் தமிழ் தெய்வமொழி என்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:51 pm

"தொண்டர் நாதனைத்தூதிடை விடுத்தது முதலை
உண்டபாலனை அழைத்தது எலும்பு பெண் ணுருவாக்
கண்டதும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்"


எலும்பு பெண்ணுருக் கொண்டதும், மறைக் கதவு திறந்ததும் கன்னித் தண்டமிழ்ச் சொல்லோ அல்லது வேற்று மொழிச் சொல்லோ கூறுங்கள் என்று கடாவுகிறார் பரஞ்சோதி முனிவர் .

திருச்செந்தூரில் பழைமையான செந்தமிழால் ஆகிய கவிமாலைகளை தரித்துக் கொண்டிருக்கும் செந்தில் குமரன் சந்தத்தோடு நீளமாகக் கோடி கோடியாக எந்நேரமும் பாடிப் பாடி அழிந்து போகின்ற மனிதர்களின் வீட்டு வாசல் தோறும் அவர்களைத் தேடிக்கொண்டு உழன்று அவமே அலையா வண்ணம் திருவருள் புரிய வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழின் சந்தத் தமிழைச் சுவைக்குமாறு அந்தப் பாடலை முழுமையாகவே தருகிறேன்.

"முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடியுழலாதே

முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ்

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்க அநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதிலேயெப் போது வருவாயே

அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார முடிமேலே

அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான

சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான

செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரணசூர சூறைக் கார
செந்தில்நகர் வாழு வாண்மைக்கார பெருமாளே


(திருப்புகழ் - திருச்செந்தூர்)


முந்து தமிழ் என்பது வடமொழிக்கும் தென்மொழிக்கும் ஆசிரியர் சிவபெருமானேயாவர், வடமொழியைப் பாணினிக்கும், தென்மொழியை அகத்தியர்க்கும் சிவபெருமான் அருளிச் செய்தார் என்பது ஐதீகம். சிவபெருமான் இந்த இரு மொழிகளிக் வடிவாக விளங்குகின்றார். சிவபெருமான் ஆசிரியராதலால் தமிழ் தொன்மையுடையது எல்லா மொழிக்கும் முதன்மையுடையது எனினும் அமையும்.

"ஆரியமுஞ் செந்தமிழும் ஆனான் கண்டாய்" என அப்பர் பாடுவது ஈண்டு கவனிக்கத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:55 pm

"சோகாந்தகாரம் கெடத் தமிழாய்வந்து துலங்கிற்றே"

அருணகிரிநாதர் வரலாறு பலருக்குத் தெரிந்ததே. அவரது அருமை பெருமைகளையும் அவர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்களையும் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. இருந்தும் அவரது வரலாறுபற்றிய குறிப்புகள் எதுவும் போதியளவு கிடைக்கவில்லை.

"அதலசேடனாராட" எனத் தொடங்கும்திருப்புகழில் "பிரபுட தேவமாராயன்" எனவரும் குறிப்பினால் இவர் விஜயநகர அரசர்களுள் ஒருவனாக விளங்கியிருந்த பிரபுடதேவராசன் என்னும் மன்னனின் காலத்தில் இருந்தவர் என்பது புலப்படுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள் இம் மன்னன் கி.பி.1450-ல் அரசோச்சியதாகக் கல்வெட்டுக்களைக் கொண்டு ஆராய்ந்து கூறுகின்றனர்.

அருணகிரிநாதர் தனது இளமைக் காலம்பற்றி அவரே ஒளிவுமறைவின்றிப் பாடியிருக்கிறார். ஒன்றல்ல பல திருப்புகழ்;ப் பாடல்களில்.

"விடமடைசு வேலை யமரர்படை சூலம்
விசயன் விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேது மறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீன னிவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே"

பதவுரை

விடம் அடைசு வேலை - நஞ்சு பொருந்திய கடலும்
அமரர்படை - தேவர்படையும்
சூலம் - சூலமும்
விசயன் விடுபாணம் - அருச்சுனன் விடுகின்ற அம்பும்
எனவேதான் விழியும் - சமானம் என்று சொல்லக்கூடிய கண்களும்
அதிபாராவிதமும் உடைமாதர் - கனத்த கொங்கைகளையுடைய பெண்களின்
வினையின் விளைவு ஏதும் அறியாதே - சாகசத் தொழிலால் விளையும்
துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது
கடி உலவு பாயல் - வாசனை மிக்க படுக்கையில்
பகல் இரவு எனாது - பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்
கலவிதனில் மூழ்கி வறிதாய - மோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த
கயவன் - கீழ்மகனும்
அறிவு ஈனன் இவனும் - அறிவில் குறைந்தவனும் ஆகிய அடியேனும்
உயிர் நீடு - உயர்வு நீண்ட
கழல் இணைகள் சேர - இரண்டு திருவடிகளையும் சேர்ந்து இன்புற
அருள்வாயே - திருவருள் நல்கீர்


நோயினால் வாடிய அருணகிரிநாதர் திருவண்ணாமலைக் கோயில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ள விரும்பியபோது அவரை செந்தமிழ்த் தெய்வமாகிய முருகன் தடுத்தாட்கொண்டார் என்று அவரே சொல்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:57 pm

டுத்தாட்கொண்ட முருகன் "நம் புகழைப் பாடுதி" என்று கேட்க "பெருமானே! மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை "ஏடெழுதா முழு ஏழை யாகிய அடியேன்" எங்ஙனம் பாடுவேன்" என்னலும் "முத்தைத் தருபக்தித் திருநகை" எனத் தொடங்கும் திருப்புகழ் வரியை எடுத்துக் கொடுத்து "பாடுக" என்று அருளினார். இதனை அருணகிரிநாதரே சொல்லியிருப்பதில் இருந்து அவ்வுண்மை தெளிவாகின்றது.

"எழுமையும் எனைத்தனது
கழல்பரவு பக்தன்என
இனிது கவி பாடிடப்
பிரசாதித்த காவலன்"


அருணகிரிநாதரின் திருப்புகழ் எதுகை மோனை நிரம்பி வழியும் சித்திர கவித்துவம். வகை வகையான சந்த பேதங்கள் அமைந்து படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையான ஓசை நலம் மிகுதியாக உடையது. தமிழ் உண்மையிலேயே ஒரு இனிமையான மொழி என்பதற்கு அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் அருமையான எடுத்துக்காட்டு.

காலத்தின் கோலத்தால் பிறமொழிக் கலப்பு திருப்புகழில் கூடுதலாகக் காணப்பட்டாலும்தமிழின் சுவை குறையாதவாறு திகட்டுகிறது. திருப்புகழ் அருணகிரிநாதரின் காலத்திலேயே நான்கு திசைகளில் உள்ளவரும் கேட்டும் பாடியும் போற்றியும் மகிழ்ந்தனர் என அவரே பாடியிருக்கிறார்.

இத்தகைய புகழ்வாய்ந்த திருப்புகழைப் பாடும்படி தமக்கு அருள்செய்த திருமுருகனை யான் எப்பொழுதும் மறக்க மாட்டேன் என அருணகிரிநாதரே நவில்கிறார்.

"பச்சிம தட்சிண உத்தர திக்குள
பக்தர்கள் அற்புதம் என ஓதும்
சித்திர கவித்துவ சந்தம் மிகுந்த
திருப்புகழைச் சிறிது அடியேனும்
செப்பன வைத்து உலகிற் பாலத்
தெரிசித்த அனுக்கிரகம் மறவேனே"


"பக்கரை விசித்ரமணிபொற்கலணை யிட்டநடை
பட்சியெனும் உக்ரதுர கழுநீபக்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பாட்டொழிய
பட்டுருவ விட்ருள்கை வடிலேலும்
திக்கது மதிக்க வரு குக்குடமும் ........................
....................................................................................
வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பன எனக்கருள்கை மறவேனே"


எனவும்

"எட்டிரண்டும் அறியாத என் செவியில்
எட்டிரண்டும் இதுவாம் இலிங்கமென
எட்டிரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே"


தாளநுட்பங்களும், அழகிய பற்பல சொற்றொடர் அடுக்குகளும் கொண்ட திருப்புகழைப் பாடி முருகனை வழிபடுதல் சிறந்த உபாசனை எனக் கருதப்படுகிறது.

"வாக்கிற்கு அருணகிரி வாதவூரர் கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
நற்கீரர் தேவர், நயத்திற்குச் சுந்தரனார்
சொற்குறுதிக்கு அப்பர் எனச் சொல்"


என்பதால் வாக்கு வல்லமையில் அருணகிரிநாதர் மிகவும் சிறப்பு வாய்ந்த அவருக்கு வேறு யாரும் இணையில்லை என்பது தெளிவாகிறது. வாக்கிற்கு அருணகிரி மட்டுமல்ல கருணைக்கும் அருணகிரி என இன்னொரு பழம்பாடல் அவரைப் போற்றிப் பாராட்டுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by சிவா on Thu Aug 20, 2009 11:58 pm

"காசுக்குக் கம்பன், கருணைக்கு அருணகிரி
ஆசுக்குக் காளமுகில் ஆவானே - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன், உவக்கப் புகழேந்தி
கூழுக்குஇங்கு அவ்வைஎனக் கூறு"


அருணகரிநாதர் திருப்புகழ் மட்டுமல்ல, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார். வேதாந்த சித்தாந்த சமரச ஞானியாகிய தாயுமான சுவாமிகள்-

"ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்?"


என்று அருணகிரிநாதரை வியந்து புகழ்ந்து போற்றுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மேலும்-

"கந்தர் அனுபூதி பெற்றுக்
கந்தர் அனபூதி சொன்ன
எந்தை அருள் நாடி
இருக்கும் நாள் எந்நாளோ?"


தமிழ்க் காதல் என்று வரும்போது நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தர் வாயெல்லாம் தமிழ் மணக்கத் திருப்புகழ்பாடிய அருணகிரிநாதர்" இந்த இருவரில் யார் காதல் பெரிது என்ற மலைப்புத் தோன்றுகிறது.

தமிழ்ஞான சம்பந்தரது தமிழ்க் காதல்பற்றி முன்னரே எழுதியுள்ளேன். சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களின் தொகை 4,196 ஆகும். இதில் 147 இடங்களில் "தமிழ் ஞானசம்பந்தன்" "முத்தமிழ் விரதன்" என்று தன்னைத் தமிழோடு சேர்த்துச் சொல்லி தமிழ்மொழிக்கு ஏற்றம் கொடுத்திருக்கிறார்.

ஞானசம்பந்தருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரும் இறையருள் கைவரப் பெற்றதாலேயே தமிழ்ப் பாடல் பாடியவர்கள்.

ஞானசம்பந்தர் தனது தந்தையைக் காணாது அழுதபோது உமை சிவஞானமாகிய பாலை உவந்தளித்து ஊட்ட, ஆளுடைய பிள்ளையார் ஞான நாட்டம் கைவரப் பெற்றார் என்பர். சிவஞானம் மட்டுமல்ல அவருக்கு செந்தமிழ் ஞானமும் ஊட்டப்பட்டது என தண்டபாணி சுவாமிகள் நயம்பட அந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறார்.

"சீகாழி ஊர்த்தடம் பொய்கைக் கரையில்
சிறிது அழுத வாகாரும் சேய்க்கு உமை நல்கிய பாலின்
மதுரம் - அன்பர்"


அன்று சீர்காழி திருக்குளக்கரையில் உமை நல்கிய சிவஞான அமுதத்தையுண்ட சம்பந்தரினி வாய்மலரில் பிறந்தவை செய்வத் தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்கள். எனவேதான் "அப்பாலின் மதுரம் தமிழாய் வந்து துலங்கிற்று" என தண்டபாணி சுவாமிகள் வியந்துரைக்கிறார்.

உமை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய அதே காட்சியை சேக்கிளாரும் தனது மனக்கண்ணால் கண்டு உளமுருகிப் பாடுகிறார்.

"கண்மலர்கள் நீர்ததும்பக் கைமலர்களால் பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய் மணிஅதரம் புடைதுடிப்ப
எண்ணிமறை ஒலிபெருக எவ்வுயிருங் குதூகலிப்பப்
புண்ணியங்கள் றனையவர்தாம் பொருமி அழுதருளினார்"
(பெரியபுராணம்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சங்கம் வளர்த்த தமிழ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum