புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
4 Posts - 3%
bala_t
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
296 Posts - 42%
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
6 Posts - 1%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
5 Posts - 1%
manikavi
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 12:51 am

First topic message reminder :

"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.

ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான். "சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:07 am

"அக்கா! அவரவர்கள் தங்கள் தங்கள் வாழ்வு சுகமாக, சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றுதான் எண்ணுவார்கள், அது தவறல்ல! நானும் அதுபோல எண்ணிடுவதிலே குற்றம் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை யோசிக்காமலே நீ பேசுகிறாய். நானும் சந்தோஷமாக இருக்கவும் நீயும் சந்தோஷமாக இருக்கவும் முடியாதா? உன் வாழ்வைக் கெடுத்துத்தானா நான் சுகம் தேடிக் கொள்ள வேண்டும்? ஏன் அக்கா, அதை எண்ணிப் பார்க்கவில்லை நீ?" என்று கேட்டாள்.

"எப்படி முடியும்? நீதான் என் கணவருக்கு மனைவியாகி, மனமகிழ்ச்சி தேடிக்கொள்ள முனைந்து விட்டாயே! சக்களத்தியாகக் கிளம்பிவிட்டு, சாவதானமாகப் பேசிக் கொண்டும் இருக்கத் துணிகிறாய். தங்கம்! இதோ பார். நீ சுகப்படுவதற்காக என் வாழ்விலே வேதனையை அனுபவிக்க வேண்டுமா? ஏனடி உனக்கிந்த கெடுமதி?" என்று பதைபதைத்துக் கேட்டேன்.

"அக்கா! நான் சுகமடைய, வாழ்விலே சந்தோஷம் தேட ஏன் வேறு ஒருவரை மணம் செய்து கொள்ளக்கூடாது! உலகிலே ஆடவரே இல்லையா? இருக்கும் ஆடவர் அத்தனை பேரும் தங்கம் குரூபி என்று தாலி கட்ட மறுத்துவிட்டார்களா? நான் உன் தங்கைதானே! அழகற்றவளல்லவே! செல்வமும் சீரும் நமக்குள் சமமாகத்தானே இருக்கிறது! நான் வேறொருவரைக் கலியாணம் செய்துகொண்டு இன்பமாக இருக்கலாம்; அது போலவே நீயும் இருக்கலாமல்லவா?" என்றாள்.

"என்னடி இது! நான் கேட்கவேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்? உன்னை மணம் செய்து கொள்ள யாருக்குத்தான் மனம் இராது. என்னிலும் நீதான் அழகி! அதைக் கண்டு பூரித்த கண்கள்தானே இவை! உன் வயதும் வசீகரமும் வளர வளர, என் மனதிலே, உன் மீது அன்பும் வளர்ந்தபடிதானே இருந்தது. உனக்குத் தக்கமணாளன் கிடைத்துத் திருமணம் நடக்க வேண்டும், கண்ணால் கண்டுகளிக்க வேண்டும் என்று தானே நான் ஆவலாக இருந்தேன். நீதானே என் ஆசையிலே கல் வீசத் துணிந்தாய். யார் வேண்டாமென்றார்கள், நீ ஓர் மணாளனைத் தேடிக் கொள்வதை?" என்று நான் கேட்டேன்.

"இருவருமே ஒரே விதமான கேள்வியை கேட்டுக்கொள்கிறோமே அக்கா! அதற்குப் பதில்தான் என்ன? அழகு, இளமை, செல்வம், வசதி எல்லாம் இருக்கிறது. வேறு ஒருவரைக் கலியாணம் செய்துகொண்டு சுகப்படலாம்; சந்தோஷமாக இருக்கலாம்; நீ துக்கப்பட்டு அதனாலே நான் சந்தோஷப்பட வேண்டும் என்பதில்லை. இருவருமே சந்தோஷமாக இருக்கலாம். அதற்கான சௌகரியத்துக்குக் குறைவில்லை! ஆனால் அது முடியவில்லை! ஏன் அக்கா?" என்று மறுபடியும் கேள்வி போட்டு மடக்கினாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:07 am

"ஏனா! பேராசை பிடித்த என் புருஷர், பணத்தாசைக்கு அடிமையாகி, நமது குடும்பச் சொத்திலே உனக்கு வரவேண்டிய பாதி பாகம், நீ வேறு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால், அவனுக்குப் போய்விடுமே என்று எண்ணி உன்னையும் தானே கலியாணம் செய்து கொண்டு, மொத்தச் சொத்தையும் தானே அடைய வேண்டுமென்ற கெட்ட எண்ணங் கொண்டு, உன் மீது வலை வீசினார்; நீ அதிலே விழுந்தாய். இருவரும் சதிசெய்து என்னை இக்கதிக்குள்ளாக்கினீர்கள். பேய் பிடித்தவள் பித்தம் பிடித்தவள் என்று தூற்றினீர்கள்" என்று ஆத்திரமும் அழுகையும் பொங்கும் குரலிற் சொன்னேன்.

"நீ சொன்னது அத்தனையும் உண்மை. நான் மறைக்கவில்லை. அத்தான், பணத்தாசை பிடித்துத்தான் என்னை மணம் செய்து கொள்ளத் தந்திரமெல்லாம் செய்தார். அவர் எண்ணத்தையும் ஏற்பாட்டையும், தெரிந்துதான் கூறியிருக்கிறாய்! ஆனால், முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறாயே அக்கா! அத்தான், தன் சுயநலத்துக்காக, இந்தச் சூது செய்திருக்கிறார். அது விளங்கிவிட்டது. நானும் அதனை மறைக்கவில்லை. ஆனால், அந்த ஏற்பாட்டுக்கு அவருடைய தந்திரத்துக்கு, சூதுக்கு, நான் ஏன் சம்மதிக்கிறேன்? அதற்கு காரணம் என்ன? அதை யோசித்தாயா?" என்று கேட்டாள்.

"வலையில் வீழ்ந்துவிட்டாய்" என்று நான் பதில் சொன்னேன். ஆனால், எனக்கே, அந்தப் பதில் திருப்திகரமாக இல்லை. அவள் இலேசாகச் சிரித்துவிட்டு, "அத்தானால், தன்னிடம் வியாபார நிமித்தமோ பஞ்சாயத்துக் காரியமாகவோ வருபவர் மீது வலைவீச முடியும்! அக்கா! என்னைச் சரியாகப் பார்த்து விட்டுச் சொல்லு. என் மீது அவரால் முடியுமா? அவர் அந்தஸ்தின் அறிகுறி, செல்வத்தின் சின்னம், கௌவரமான நடை, நொடி பாவனை, அவரால் ஊரிலே மதிப்புத் தேடிக் கொள்ள முடியும். அவ்வளவுதான் முடியுமே ஒழிய, ஒரு இளமங்கையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவரிடம் என்ன இருக்கிறது! அவர் வலை வீசினார். அதிலே நான் வீழ்ந்தேன் என்று கூறுகிறாய், என்னை அறிந்துகொள்ளாமல். உன் தங்கை ஏமாளியல்ல; அத்தான் மங்கையரை மயக்கிடும் மாந்தரீகரல்ல! அவர் வலைவீசியது என் மீதுமல்ல, சொத்தின் மீது; ஆனால் அந்தச் சொத்தைக் காட்டி அவரைச் சொக்கவைத்து என் அருகே வரும்படி செய்தவள் நான்; வலையை நானும் வீசினேன் அவர் மீது! ஆனால் அவருக்காக அல்ல! அவரிடம் மயங்கி அல்ல! உலகிலே அவரே கடைசி ஆடவர் என்பதற்காக அல்ல! உன் வாழ்வை வேதனையுள்ளதாக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல! எனக்காக - அக்கா - என் உயிருக்காக - நான் பிழைக்க சோதிடன் குறிப்பிட்ட பேராபத்திலிருந்து தப்ப" என்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:08 am

உயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம் பரிதாபம் பிறந்தது. "போடி! பைத்தியக்காரப் பெண்ணே!" என்று கேலி செய்தேன். அவளோ திருப்தி பெறவில்லை. சோகத்துடனேயே பேசலானாள், "அக்கா! சோதிடன் குறிப்பிட்ட ஆபத்திலிருந்து தப்புவதற்கும் அத்தானைக் கலியாணம் செய்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம் என்று நீ கேட்கவில்லையே, ஏன்? அது உனக்கு ஆச்சரியமாக இல்லையா?" என்று தங்கம் கேட்டாள். நான் எவ்வளவு அசடு பார் தம்பி? நானாகக் கேட்டிருக்கத்தானே வேண்டும் அந்தக் கேள்வியை? கேட்கவேண்டுமென்று தோன்றவே இல்லை. அவள், தான் கிளப்பிய கேள்விக்குத் தானே பதிலும் கூறிவிட்டாள்.

"அக்கா! கன்னி கழியாமல் நான் இறந்துபோனால் குடும்பத்துக்கு ஆகாது. ஆகவே, இறந்துபோகு முன்பு, கலியாணம் செய்து கொண்டாக வேண்டும். வேறு யாரையேனும் மணம் செய்துகொண்டு, அவர்கள் மனதை உடைக்க நான் இஷ்டப்படவில்லை. அத்தான் கொஞ்சம் அழுத்தமான நெஞ்சுள்ளவரல்லவா! நான் இறந்துபோனால் அவர் சகித்துக்கொள்ள முடியும். மேலும், நீ இருக்கிறாய். ஆகவே தான், நான் அத்தானைக் கலியாணம் செய்து கொள்ளத் தீர்மானித்தேன். இதை நீ நம்பினாலும் சரி, நயவஞ்சகம் என ஒதுக்கினாலும் சரி, எனக்குக் கவலை இல்லை. என் கவலை எல்லாம் இறக்கும்போது நான் கன்னியாக இருந்து குடும்பத்துக்கு நாசம் ஏற்படும் நிலை வரக் கூடாது என்பதுதான்" என்று சொன்னாள்; இரண்டோ ர் சொட்டுக் கண்ணீர் என் விழிகளிலே இருந்து கிளம்பிற்று. ஒரு இளம் பெண் சொந்தத் தங்கை அவள் எவ்வளவு கெட்ட நினைப்புக்காரியாகத்தான் இருக்கட்டும்; அவள், தான் சாக நேரிடும் என்று தன் வாயாலே கூறினால், எப்படி அதைக் கேட்டுச் சகிக்கமுடியும். தங்கமோ அசடல்ல, புத்தி உள்ளவள்; புத்திக் கூர்மை என் வாழ்வையே துளைக்குமளவு இருந்தது அவளுக்கு.

அவள் பெயரைச் சொன்னாலே எனக்கு ஆத்திரம் பிறக்கும். இருந்தும், அன்று அழுகுரலில் அவள் சொன்ன சேதி கேட்டபோது என் மனம் என்னவோ பாகாகிவிட்டது. என்ன கூறியாவது அவளைத் தேற்றவேண்டும் என்று துடித்தேன். என் மனதிலேயே இரண்டு வகையான எண்ணங்கள் ஏககாலத்திலே கிளம்பித் தீரவேண்டிய நிலை. அவளுக்குத் தைரியம் தர என்ன கூறுவது என்று யோசிக்க வேண்டி இருந்தது. அதே சமயத்தில், அவள் கூறுவது உண்மையா, நடிப்பா; நடிப்பாகவும் உண்மையாகவும் இல்லாவிட்டால், ஒரு சமயம் யாராவது சோதிடன் உண்மையிலேயே ஏமாளியாக்கிவிட்டானா! அப்படியும் இருக்குமானால், சோதிடன் தானாகவே இக் காரியத்தைச் செய்தானா, அல்லது யாராவது தூண்டிவிட்டார்களா? ஒரு வேளை, என் கணவரே இதற்குக் காரணமோ? எவனாவது சோதிடனை ஏவி விட்டுத் தங்கத்தின் மனதிலே, பயத்தைத் தூவ வைத்தாரோ? அவர் எதற்கும் துணிந்தவராயிற்றே. அவர் மட்டுமா! பெண்கள் விஷயத்திலே, ஆடவரில் பெரும்பாலோர் இப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்.

உத்தமபுத்திரர் கூட, இந்த ஒரு விஷயத்திலே மட்டும் ஏனோ எவ்வளவு தலைகீழ் வாதம் புரியவும், தகாத முறையைக் கையாளவும் எண்ணம் பிறக்கிறது. தர்மத்தின் காவலரென்றும், சாது சன்மார்க்கி என்றும் பெயரெடுத்த தர்மபுத்திரர் கூட திரௌபதி விஷயத்திலே எப்படி நடந்து கொண்டார். ஆணழகன் அர்ஜுனனை அடைந்தோம், வில் வீரன் விஜயன் நமக்கு மாலையிட்டான், இனி நமக்கு இன்ப வாழ்வுக்கும் கௌரவத்துக்கும் என்ன குறை என்றுதானே திரௌபதி எண்ணி இருந்திருப்பாள். இதனை, எவ்வளவோ நுட்பமான தத்துவங்களை எல்லாம் ஆராய்ந்தறியும் ஆற்றல் படைத்த தருமர் தெரிந்து கொண்டிருக்க மாட்டாரா! ஆனால் என்ன செய்தார்? தம்பிக்கு மட்டுமல்ல; தனக்குமல்லவா திரௌபதியைத் தாரமாக்கிக் கொண்டார். கர்ப்பிணியைக் கானகத்துக்குத் துரத்திய இராமரை, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றல்லவா கூறுகிறார்கள். அப்பா! பெண்கள் விஷயம் என்றாலே, உத்தமர்கள், தத்துவம் தெரிந்தவர்கள், தபோதனர்கள், திரு அவதாரம் செய்பவர்கள் என்பவர்களெல்லாங்கூடத் தவறு செய்தே இருக்கிறார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:08 am

ரங்கோனில் ஒரு நாள் ஒரு வேடிக்கை நடந்தது கேள். நாயுடு இங்கே இன்று துன்புறுத்தினாரல்லவா, அதுபோல, அங்கேயும் செய்வதுண்டு. ஆனால் சில சமயங்களிலே தந்திரமாகவும் நடப்பார். ஒரு நாள் 'குஷாலாக' இருக்கப் பணம் தேவைப் பட்டது. கேட்டார்; இல்லை என்றேன். உண்மையிலேயே இல்லை. ஆனால் அவர் தம் நண்பர்களிடம் வாக்களித்தார் போலிருக்கிறது; ஆகவே என் கழுத்துச் சங்கிலியைக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார், அடகுவைக்க. நான் மறுத்தேன். அவர் கோபித்துப் பார்த்தார். நான் பிடிவாதமாகவே இருந்து விட்டேன். என்ன செய்தார் தெரியுமோ? பாசாங்கு! பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டு தேம்பலானார். கொஞ்சநேரம் அதனைக் கவனியாமல் இருந்து பார்த்தேன், முடியவில்லை. "இதென்ன சனியன்! ஏன் அழுது தொலைக்கிறீர்கள்" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை. உனக்கென்ன என் விதி விட்ட வழிப்படி நடக்கட்டும்" என்று பலப்பல கூறினார். நெடுநேரத்துக்குப் பிறகு, "ரங்கம்! இன்று ஒரு பெரிய ஆபத்திலே சிக்கிக் கொண்டேன். ராதா, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கேட்டது. அதை வாங்கக் கண்ணாடி கடைக்குப் போனேன். அங்கே ஒரு அருமையான பெரிய நிலைக்கண்ணாடி, நாலு அடி உயரம், இரண்டடி அகலம் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது ஒரு அலங்காரப் படிகட்டின் மீது வைக்கப்பட்டிருந்தது. நான் அதைச் சரியாகக் கவனியாமல், அந்தப் படியைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன். கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. பயத்தால் நான் அசைவற்று நின்றேன். கடை ஒரு பர்மாக்காரனுடையது. அவன் தீப்பொறி பறக்கும் கண்களுடன் என்னை நோக்கி வந்தான். கும்பிட்டேன். கூத்தாடினேன்.

300 ரூபாய் தந்தாக வேண்டும், எடு என்றான். இன்று இரவு கொடுத்து விடுகிறேன் என்று சத்யம் செய்துவிட்டு வந்தேன். நாளைக் காலையிலே அவனுடைய கத்திக்கு நான் பலியாக வேண்டும். என் விதி அப்படி இருக்கும்போது என்ன செய்வது" என்று கூறிக் கோவென அழுதார். மறு வார்த்தை பேசாமல் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தேன். ஏழு நாட்களுக்குப் பிறகே, அவர் அன்று சொன்னது பொய் என்பது தெரிந்தது. வருத்தப்பட்டேன்; வயிறு எரிந்து திட்டினேன். மறு இரவு நாங்கள் மூவரும் நாடகம் பார்க்கச் சென்றோம், வள்ளி கல்யாணம். தமிழ்நாட்டுப் பிரபல நடிகர்கள் என்று விளம்பரம் அன்று நல்ல வசூலைக் கொடுத்தது. நாடகத்திலே, முருகன் வேடுவப் பெண்ணை யானையைக் காட்டி மிரட்டும் காட்சி நடக்கும்போது, நாயுடு என்னைக் குறும்புத்தனமாகப் பார்த்துச் சொன்னார், "ரங்கம் என்மீது பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாயே, இதோ பார், சாட்சாத் முருகன் கூடத்தான், யானையோ, பூனையோ எதையோ காட்டி, எதைப் பற்றியோ பேசி, வள்ளியைத் தன் வழிக்குக் கொண்டு வருகிறார். இது சகஜமான காரியம்" என்றார். உண்மைதான்; ஆண்களே அப்படித்தான் என்று அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன். உன் அப்பா சுபாவத்திலேயே தந்திரக்காரர், அதிலும் சுயநலம். எனவே, எவனையாவது சோதிடனைத் தயார் செய்து தங்கத்தின் மனதிலே மரண பயம் ஏற்படும்படி செய்திருப்பாரோ என்று எண்ணினேன்.

இப்படி இரண்டு வெவ்வேறு விதமான எண்ணங்களை ஏக காலத்தில் கொண்டதால், தெளிவான நிலையே கெட்டு விட்டது. வீண் பயம் - பைத்தியக்காரத்தனம் - சோதிடம் முழுப் பொய் - இதை எல்லாம் நம்பாதே - என்று ஏதேதோ கூறினேனே தவிர, தங்கம் தந்த தகவலை மறுத்துக்கூற என்னால் முடியவில்லை. என் தங்கையின் உயிருக்கு ஆபத்து என்று அவளே கூறிடக் கேட்டால் என்ன தான் பகையிருந்தாலும், மனம் பதறாதா? தங்கம் என் குழப்பத்தைத் தெரிந்துகொண்டாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:09 am

நான் அவள் விஷயமாகப் பரிதாபப்பட்டேனே தவிர, எப்படி என் கணவரை அவளுக்கு மணம் முடிக்க மனம் வரும். எனவே, நான் வேறு ஏதேதோ பேசி அவளுடைய கவலையைப் போக்கப் பார்த்தேன். அவளும் என்னை வற்புறுத்தவில்லை. கொஞ்ச நேரம் சென்றதும், வேலைக்காரியை வண்டி கொண்டு வரச்சொல்லி, நான் வீட்டுக்குப் புறப்பட்டேன். வாசற்படி வரை வந்து, என்னைத் தங்கம் வழியனுப்பி வைத்தாள்.

வம்பு பேசின அந்தச் சோதிடனைக் கண்டுபிடித்து, அவனைத் தூண்டிவிட்டவர் உன் அப்பாதானா என்பதைக் கண்டறிய வேண்டுமென்று ஆசை கொண்டேன். ஆனால் நேரமாகிவிட்டது. லேடி டாக்டர் லாசரஸ் வீட்டுக்கு வந்திருப்பார்களோ என்ற எண்ணம் வேறு. எனவே சோதிடன் விஷயமாகப் பிறகு பார்த்துக் கொள்வது என்று தீர்மானித்து, நேரே வீட்டுக்குச் சென்றேன். உள்ளே நுழையும்போதே, முன்பு கொண்டிருந்த எண்ணத்தின்படி, அவரிடம் மல்லுக்கு நிற்பது என்ற துணிவுதான். அவர்தான், சோதிடனைக் கொண்டு தங்கத்தநயும் ஏய்த்திருக்கவேண்டும் என்ற எண்ணமும் குடிபுகுந்ததால், வலியவேணும் சண்டைக்கு நிற்பது என்ற எண்ணம் மேலும் வலுத்தது.

"வாங்கோ! என்னம்மா, நம்மை, இப்படிக் காக்கப் போட்டுப் போயிட்டிங்க" என்று லாசரஸ் கேட்டார்கள். லேடி டாக்டர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர் உலவிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் சீறி விழுவார். உடனே நாமும் பதிலுக்குப் பதில் சுடச் சுடத் தருவது என்று நினைத்தேன். "லேடி டாக்டரை இங்கே வரச்சொல்லி விட்டு எங்கே போய்விட்டாய்? அந்த அம்மாள் வந்து எவ்வளவு நேரமாயிற்று. இப்படியா அவர்களைக் காக்கப் போடுவது" என்று கேட்பார், அலட்சியமாக ஏதேனும் பதில் கூறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவரோ நான் எதிர்பார்த்தபடி ஒன்றும் கேட்கவில்லை. அதற்கு மாறாக, லேடி டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே போய்விட்டார். நான், லாசரசிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். லேடி டாக்டர் பிறகு என்னைப் பரிசோதித்து, "உடம்புக்கு ஒன்றுமில்லை. ஆனால் சுகப்பிரசவத்துக்குத் தக்க மருந்தை இப்போதிருந்தே தந்து விடுகிறேன். சாப்பிட்டுக் கொண்டிருங்கள்" என்று அன்புடன் கூறிவிட்டுச் சென்றார்கள்.

வெளியே போனவர், இரவு நெடுநேரத்துக்குப் பிறகே வந்தார். எனக்குத் தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டுதான் இருந்தேன். அவர் கதவைத் தட்டினதும் பழைய வழக்கம் காரணமாகச் சரேலென எழுந்தேன், போய்க் கதவைத் திறக்க வேண்டுமே என்று! ஆனால் அறை வாயிற்படிவரை சென்றதும், நான் கையாள வேண்டிய புதிய முறை கவனத்துக்கு வந்தது. உடனே வேலைக்காரியை அதட்டிப் போய்க் கதவைத் திறக்கச் சொல்லிவிட்டு, நான் படுக்கை அறை சென்றேன். கதவைத் தாளிடவில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:10 am

கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக நான் இருந்தது பயனில்லாமற் போய்விட்டது. என் மனதிலே இருந்த கொதிப்பைத் தணிக்கக் கூடவில்லை. அந்தச் சமயத்திலே, எனக்குத் துளசி மீது சென்றது நினைவெல்லாம். அவள் மட்டும் எனக்குத் துணையாக இருந்தால், எவ்வளவோ நிம்மதியாக இருக்குமே என்று எண்ணினேன். அந்தக் கிராமத்திலே, எனக்கு நாள் போவதே தெரியாமல், அவ்வளவு இனிமையாகப் பேசிக் கொண்டிருப்பாள். அவள் இப்போது இருந்தால் கோபம், சோகம் எல்லாவற்றையும் விரட்டி அடிப்பாள். ஏன்! என் புருஷருக்குக்கூடப் புத்தி புகட்டக் கூடியவள் துளசி. கேலியாகப் பேசியே சித்திரவதை செய்துவிடுவாள். அவளோ புரட்டனிடம் வாழ்க்கைப்பட்டுக் கிராமத்தில் இருந்தாள். நானோ, புதுமாப்பிள்ளையாக வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்யும் புருஷனோடு சச்சரவு செய்து கொள்ளக் கூடச் சௌகரியம் கிடைக்காமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன்.

ஒரு சமயம், கடையிலே அவருக்கு ஏதேனும் விசாரம் தரக்கூடிய சம்பவம் நடந்ததோ - அதனால்தான் வாய் திறவாமல் படுத்துக் கொண்டாரோ என்று யோசித்தேன். ஒரு வேளை, வேலை அதிகமோ, அலுப்பினால் அயர்ந்து தூங்குகிறாரோ என்றும் நினைத்தேன். சரி! எந்தக் காரணத்தாலே தூங்கினாலும் என்ன, தூக்கம் மேலிட்டிருக்கும்போது சந்தடி செய்தால் சாதுவுக்குக்கூட அல்லவா கோபம் பிரமாதமாக வரும். அவரோ அலுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய தூக்கத்தைக் கெடுத்துப் பார்ப்போம். கோபித்துச் சண்டைக்கு வருவார்; பதிலுக்குப் பதில் வட்டியும் சேர்த்துத் தருவது என்று எண்ணினேன். உடனே என்ன காரியம் செய்தால், அவருக்குத் தூக்கம் கெடும் என்ற யோசனை. துளசி இருந்திருந்தால் கதை சொல்லச் செய்யலாம்; எதையாவது புத்தகம் படிக்கச் சொல்லலாம். இடையிடையே, அவளுடன் உரத்த குரலிலே பேசிச் சிரிக்கலாம். அந்தச் சிரிப்பும் பேச்சும், அவருடைய தூக்கத்தைக் கெடுக்கும்! கோபம் பிறக்கும். துளசி இல்லையே! வேலைக்காரி இருந்தாள்! அவளிடம் நான் அதிகமாகக்கூடப் பேசுவது கிடையாது. அவள் கதை சொல்லத் தெரிந்தவளோ இல்லையோ என்று சந்தேகம். சரி! எதற்கும் அவளை எழுப்பிக் கதை சொல்லச் சொல்வது, தெரியாது என்றால், நான் சொல்கிறேன் கேளடி என்று நாமே கதை சொல்வது என்று தீர்மானித்தேன். அவள் கொஞ்சத்தில் எழுந்திருக்கவில்லை. எழுந்து மட்டும் என்ன பலன் - நான் நினைத்தபடிதான் இருந்தது. "கதையா, தெரியாது!" என்றாள்.

"தூக்கம் வரவில்லையடி..."

"மத்தியானம் தூங்கினீர்களே அதனால்..."

"ஏன் தூக்கம் வரவில்லை என்றா உன்னைக் கேட்டேன்? தூக்கம் வரவில்லை, என்ன செய்வது இப்போது?"

"படுத்துக்கொண்ட சும்மா கண்ணை மூடிக்கொண்டிருந்தா, தூக்கம் கொஞ்ச நேரத்திலே தன்னாலே வந்துவிடும்."

"போடி மூதேவி! ஏதாவது ஒரு கதை சொல்லடி. கேட்டுக் கொண்டே இருந்தா தூக்கம் வந்துவிடும்."

"எனக்கென்ன கதை தெரியுங்க? முன்னமேயே சொன்னேனுங்களே, கதை தெரியாதுன்னு."

"போடி புளுகி, இவ்வளவு பெரிய பொம்பளைக்குக் கதையா தெரியாது."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:10 am

"நீங்க ஒரு வேடிக்கை. ஏதாவது கதை சொல்றதுதான் கேட்கறதுதான். அதெல்லாம் இப்போ கவனமா இருக்கும். இப்ப என் சமாசாரமே பெரிய கதை! நான் வாழ்ந்த கதையும் வதைகிற கதையும், அந்தப் பாவி என்னைத் தொட்டுத் தாலி கட்டின கதையும், மொந்தைக் குடியனாகி, என் கால் கொலுசு, கம்மல், அட்டிகை, காப்பு எல்லாவற்றையும் கடன்காரன்கிட்டே அழுத கதையும் இதுதான் இப்ப எனக்குத் தெரிஞ்ச கதை."

"அழுமூஞ்சி! அழுமூஞ்சிடி நீ! போகட்டும், உன் கலியாணக் கதையைச் சொல்லு கேட்கலாம்."


"நீங்க ஒரு வேடிக்கை. நான் என்ன தொரபதையா, சீதையா, என் கலியாணத்துக்கு ஒரு கதை இருக்க. பொறந்தேன், பொம்பளையா வளர்ந்தேன். வயசு வந்ததும் ஒருத்தன் கிட்ட பிடிச்சுக் கொடுத்தான் எங்க அப்பன். தாலி கட்டின அண்ணைக்கு மறுநாளே அவன் ஆரம்பிச்சிவிட்டான், அதிகாரம் பண்ண. நின்னா உதை, குனிஞ்சா குத்து, இவ்வளவுதான் கதையே பொம்பளை கதை இவ்வளவுதானேம்மா இருக்கும். அதிலேயும் ஏழை வீட்டுக்கதை ராஜா கதையாட்டமா இருக்கும்! எனக்கென்ன சொயவரம் நடந்துதா, கதை இருக்க."

"போடி திருடி, கதையே தெரியாதுன்னு சொன்னயே, இப்ப நீ பேசறதே கதை சொல்றமாதிரியாகத்தான் இருக்கு, கிடக்கட்டும்! உன்னை உன் அப்பா, கலியாணம் செய்து கொடுக்கறப்போ, உன்னைக் கேட்டாரா?

"என்னையா! என்னை ஏன் கேட்கவேணும்? இது என்ன வழக்கம்? அவரே பார்த்தாரு, எனக்கு வயசாயிடுச்சு. அவ்வளவுதானே. யாரையோ புடிச்சாரு, ஐயரை நாள் கேட்டாரு, கலியாணத்தை முடிச்சாரு; அவ்வளவுதான். வேற என்னை என்ன கேட்டாரு, எந்தப் பெண்ணைத்தான் அவங்க அப்பா கேட்டாரு? அப்பேர்ப்பட்ட சீதையைக்கூட நீ இராமரைக் கலியாணம் செய்துக்க இஷ்டந்தானான்னு அவங்க அப்பா கேக்கலியே! அந்தம்மா புண்யவதி, ஆகையாலே அவங்க குணத்துக்குத் தக்க மாதிரியாய்ப் புருஷன் வந்தாரு. பொம்பளைங்க விஷயம் தாயம் போடற மாதிரியாகத்தானேம்மா."

இப்படி, நானாக அவளிடம், பேசிப் பேசிக் கிளறியும் பார்த்தேன்; பலன் இல்லை. அவளிடம் அந்தப் பேச்சு பேசும் போது கூட, உரக்கப் பேசியும் இடையிடையே பலமாகச் சிரித்தும் பார்த்தேன். அவருடைய தூக்கம் அதனால் கெடட்டும் என்பதற்காக. அதுவும் பயன் தரவில்லை. அவருடைய குறட்டைச் சத்தம் அதிகரித்தது, குறையவில்லை. நெடுநேரத்துக்குப் பிறகு, வேலைக்காரி தானாக, 'ஒரு கதை நீங்கதான் சொல்லுங்களேன்' என்றாள். எஜமானியைக் கதை சொல்லும்படி கேட்பது மரியாதை அல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தாள் போலிருக்கிறது. நான் வேண்டுமென்றே கதைகட்டிச் சொன்னேன்; பெண்ணைக் கொடுமை செய்யும் ஆணைப்பற்றி; அந்த ஆடவன் பிறகு பலமாதிரி கஷ்டங்களை அனுபவித்து பலரால் இம்சிக்கப்பட்டு, கடைசியில் எந்த மனைவியை இம்சித்தானோ அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் என்று என் ஆசையைக் கதையாக்கிச் சொன்னேன். நான் பெண்களை, ஆண்கள் கொடுமை செய்வதைப்பற்றிச் சொன்னபோதெல்லாம், சுவாரஸ்யமாக இருக்கும் வேலைக்காரியின் பேச்சு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:10 am

"அவள் பாபம் சாது. வீண் ஜோலிக்குப் போகிறவளல்ல. தன் புருஷனே தெய்வம் என்று எண்ணிக்கொண்டு, அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தாள். அவள் அவ்வளவு அன்பாக இருந்தாள். அவள் புருஷனோ அவளுடைய அன்பை மதிக்கவில்லை; அவளைப் பிரியமாக நடத்துவதில்லை; எப்போதாவது கொஞ்சிக் குலாவுவான்; குச்சிநாய்க் குட்டியிடம் கோடீஸ்வரன் எப்போதாவது கொஞ்சமாட்டானா, அதுபோல. ஆனால் அவனுடைய மனமோ எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது" என்று நான் சொல்வேன். உடனே சூதுவாது அறியாத வேலைக்காரி, "படுபாவி! கல்நெஞ்சுக்காரன்" என்று கதையிலே வரும் ஆணைச் சபிப்பாள், திட்டுவாள். உடனே நான் "அதோ கூடத்திலே இருக்கிறாரே, ரொம்ப யோக்யஸ்தரோ அவர்" என்று சொல்வேன். வேலைக்காரியோ பதில் பேச மாட்டாள். கதையைச் சொல்லும்படி தூண்டுவாள்.

"இந்த மாதிரியான ஆண்களை வழிக்குக் கொண்டுவர முடியும். பெண்பிள்ளைகள் பைத்தியக்காரத்தனமாக இது வரையில் இருந்துவிட்டார்கள். ஆண் பிள்ளையின் விளையாட்டுப் பொம்மையாகிவிட்டார்கள். அவர்களுக்கும், மானம், மரியாதை, சூடு, சொரணை உண்டு என்று காட்டியிருக்க வேண்டும்" என்று நான் காரசாரமாகச் சொன்னபோது அவள் பயந்தே போனாள். பிசாசு பேசுகிறது என்று கூற எண்ணிக் கொண்டிருந்திருப்பாள். பெருமூச்சுடன், "என்னம்மா செய்வது? தொட்டுத் தாலிகட்டினவன் இட்ட வேலையைச் செய்வது தானே நம் விதி?" என்று அவள் கூறியபோது, நான், "போடி! பெண்களும் சரி, ஆண்பிள்ளைகளும் சரி, அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாலி கட்டினால் என்னடி யம்மா! அது என்ன மாட்டுக்கு மூக்குக் கயிறு போடுவது போலவா! தாலி கட்டினான் என்றால், ஒரு வீட்டுப் பெண்ணை, சுகமாக, கௌரவமாகக் காத்து ரட்சித்து வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தது என்றுதானே அர்த்தம். நேர்மாறாகப் புருஷன் நடந்துகொண்டால், துரோகம் செய்தால், அவன் சண்டாளன் தானே?" என்று கோபமாகச் சொன்னேன். என்ன பதில் சொல்வது என்று தோன்றாமலே திகைத்தாள் வேலைக்காரி. பாவம்! அவள் புருஷனிடம் பட்ட அடியும் உதையும் எவ்வளவோ!

"அடங்கி அடங்கிப் போனால் பயன் கிடையாதடி; அழுதாலும் பிரயோஜனம் இல்லை; அடங்காப்பிடாரி, வாயாடி, துஷ்டை என்று எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் சரி என்று துணிந்து, புருஷனின் போக்குக்கு எதிர்ப்புக் காட்டினால், ஒரு தடவை, இரண்டு தடவை அடித்துப் பார்ப்பான். உதைத்துப் பார்ப்பான், பிறகு பெட்டியிலிட்ட பாம்புதான்" என்று அவளிடம் போர்த் திட்டமே கூறினேன். அவள் மேலும் திகைத்துப் போனாள். "இதோ பாரடி; என் வீட்டுக்காரர்கூட என்னை என்னவோ வாய் செத்தவள், மிரட்டி உருட்டி அடக்கி விடலாம் என்று எண்ணிக்கொண்டு, நான் இருக்கும்போதே, வேறு ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறார். அந்தக் கலியாணம் நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பார், நடக்கப் போகிற வேடிக்கையை. கலியாண மணையிலே மாப்பிள்ளைக் கோலத்தில் அவர் உட்காரட்டுமே, அப்போது தெரிகிறது, ரங்கம் எப்படிப்பட்டவள் என்று. ஆயிரம் பேர் கூடி இருக்கட்டும், அந்தக் கலியாண வாசலில். அப்படியே பாய்ந்து கலியாணத்துக்கு 'ஓமம்' வளர்த்துகிறார்கள் பார், அந்த நெருப்பை எடுத்து, அவர் கண்ணிலே கொட்டாவிட்டால், என் பெயர் ரங்கமல்லடி! பார் நடக்கப்போகிற கூத்தை!" என்று நான் ஆக்ரோஷத்துடன் சொன்னேன். நடுநிசி. எனக்கோ பிரமாதமான கோபம். அந்தச் சமயத்திலே என் பேச்சும், பார்வையும், பாவம் அந்த வேலைக்காரிக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை. "ஐயோ! காளியாயி" என்று ஒரே அலறல்! நான் வாயை மூடப்போனேன், கூச்சல் அதிகரித்தது; அவரும் எழுந்து ஓடிவந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:11 am

அலறி ஓடிவந்த என் கணவர், நான், "அடி பைத்தியமே! அடிமுட்டாள்கள் பலபேர், பிசாசு பிடித்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார்களே, அதுபோலத்தானா நீயும் எண்ணிக் கொண்டாய்?" என்று கூறக்கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு, "கர்மம்! கர்மம்!" என்று அழுகுரலிற் கூவினார். மகனே! நான் ஆனந்தம் கொண்டேன், தலையில் அடித்துக்கொண்டது கண்டு. எத்தனை தடவை நான் அதுபோல் அடித்துக்கொண்டிருப்பேன். புருஷன் இருக்கும் நாட்களிலே தலை தலை என்று தலையில் அடித்துக் கொள்வது, அவன் இறந்தால் மார்பில் அடித்துக் கொண்டு அழுவது என்றபடிதானே பெரும்பாலான பேதைப் பெண்களின் வாழ்க்கை இருக்கிறது. கொடுமைக்கு ஆளாகும்போது, கட்டினவனால் கைவிடப்படும்பொழுது, காமுகரால் தாக்கப்படும்பொழுது, கஷ்டம் தாங்கமாட்டாத வேளைகளிலெல்லாம் பெண்களுக்குத் தலையில் அடித்துக் கொள்வது தவிர வேறென்ன வழி இருக்கிறது. எத்தனையோ பெண்களுக்கு இந்த நிலை. அவ்வளவுக்கும் பரிகாரம் போல எனக்குத் தோன்றிற்று, அவர் என் எதிரே, தலையில் அடித்துக் கொண்டு நின்றபோது. பெண்ணைக் கொடுமை செய்யும் போக்கினரின் பிரதிநிதி அவர். நான் பெண் குலத்தின் சார்பிலே நின்று பழி வாங்கும் அதிகாரி. இந்த நிலைதான் ஏற்பட்டதாக எனக்குத் தோன்றிற்று. அன்றிரவு அவர் அழுதுகூட இருப்பார். நான் கேட்கமுடியவில்லையே அந்தச் சங்கீதத்தை. அவர் தெருத்திண்ணைக்குப் போய்விட்டார்.

இந்தப் போராட்டம் சில நாட்கள் நீடித்தது. போராட்டம் என்றுகூடச் சொல்வதற்கில்லை! அவர்தான் கோழையாகி விட்டாரே! என் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது சில நாட்கள். அவர் ஏதோ பெரிய திட்டமிடுகின்றார். மனத்திலே அதனால்தான் இப்படி அமைதியாக இருக்கிறார்; அஞ்சி இருப்பவர்போல் காணப்படுகிறார் என்று நான் யூகித்தேன். அவருடைய முகத்தில் கவலை படியத் தொடங்கிற்று. ஏன் இராது? அடங்காப்பிடாரி நான்! அவர் என்னைக் கொடுமைப் படுத்துவதன் மூலம், என் கோபத்தை மட்டுமல்ல, மனதிலே உள்ள ரோஷத்தைக் கிளப்பிவிட்டார். அதன் வேகத்தைத் தாங்கும் சக்தி அவருக்கு இல்லை! எங்கும் எதிலும் அதுதானே நிலைமை! கட்டுக்கு அடங்கும் என்று கருதி நாம் வளர்க்கும் மிருகம், சில நேரத்தில் அடக்குமுறை, அதனால் தாங்கமுடியாத அளவு ஆகிவிட்டால், கட்டு அறுத்துக்கொண்டு ஓடவும், திருப்பித் தாக்கவும் செய்யவில்லையா? அந்த நேரத்திலே அதற்குமுன் அதே மிருகத்தைக் கட்டுக்கு அடங்கி நடக்கும்படி செய்தவனே, கிலிகொண்டு ஓடுகிறானல்லவா! மனிதனிடம், மிருக குணம் அடியோடு மாய்ந்து போகவில்லையே! என் மனம் மட்டுமா? யாருக்கும்தான், அந்தக் குணம் இருக்கும். மகனே! நான் நினைக்கிறேன், உலகிலே எவ்வளவு உபதேசம் நடைபெற்றாலும், இந்த மிருக குணம் அடியோடு ஒழிந்துபோகும் என்று கூறமுடியாது.

நல்ல முறைகளால் நட்பு நியாயத்தில் அந்த மிருக குணத்தைக் குறைக்கலாம், மறைக்கலாம், தூங்க வைக்கலாம்; அடியோடு மாய்த்துவிட முடியாது. நான் அடிக்கடி எண்ணிக் கொள்வதுண்டு, வெங்காயம் வெட்டும்போது, இது பார்வைக்குக் கெட்டியான பொருளாகத்தானே இருக்கிறது; தேங்காயையாவது எடுத்துக் குலுக்கிப் பார்த்தால், உள்ளே தண்ணீர் இருப்பது தெரிகிறது; இதனைப் பார்த்தால், அப்படித் தண்ணீர் இருப்பது தெரியக் காணோமே; அப்படி இருந்தும் இதை நறுக்கினால் ஈரம் இருக்கிறதே, எப்படி என்று. ஈரம் மட்டுமா இருக்கிறது தம்பி! நமது கண்களில் இருந்து நீரைக் கொண்டு வருகிற அளவு எரியும்சக்தி இருக்கிறதே அதனிடம். நெருப்புக்கு உள்ள சக்தியும், நீருக்கு உள்ள சக்தியும் கொண்டு, தனியாக இருக்கும்போது மணம் பயன்படாமலும், மற்றவற்றுடன் பதம்பார்த்துச் சேர்த்தால் சுவையும் மணமும் தருவதுமாக இருக்கிறது வெங்காயம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:11 am

நான் பெண்களின் சக்தியை அப்படித்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொள்வதுண்டு. வெங்காயச் சாறு கண்ணில் பட்டால், விழியில் நீர் வழிவதுபோல பெண்களின் கோப உணர்ச்சியும் பழிவாங்கும் எண்ணமும் கிளப்பப்பட்டுவிட்டால், எந்த ஆணும் அழுதுகொண்டுதான் இருந்தாக வேண்டும்! அவர் அழுதுகொண்டிருந்ததிலே ஆச்சரியமில்லை. அவர் என்னுடைய எதிர்ப்பை மட்டும் சமாளிக்க வேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்தால், கொஞ்சம் சிரமப்பட்டாலும், வெற்றி திட்டமாகப் பெற்றுவிட முடியும். அவரோ, என் எதிர்ப்பைச் சமாளிப்பது மட்டுமல்ல, தன் ஆசையை - தங்கத்தைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியவராக இருந்தார். நானோ அடங்க மறுத்துவிட்டேன். அத்துடன் நின்றுவிட மாட்டேன். ஊர் அறிந்தாலும் கவலை இல்லை. உரிமைக்காகப் போராடுவது, கொடுமைக்குச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டவள் - என் ஆர்ப்பாட்டத்தின்மூலம் நான் அவருக்கு என் புதிய நிலையைத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, அவர் புதிய திட்டம் வகுத்தாக வேண்டியவரானார். தம் காரியத்தைச் சுலபத்திலே சாதித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தார். நான் வெற்றிபெற்று வந்தேன் ஒவ்வொரு நாளும்.

நான் வெளியில் போய் வருவேன்; அவர் எங்கே போயிருந்தாய், ஏன் போய் வந்தாய் என்று எதுவும் கேட்கமாட்டார். எனக்கு இஷ்டமான பண்டம் சமைக்கப்படும். இஷ்டமான நேரத்தில் சாப்பிடுவேன். அவருடைய சௌகரியத்தைக் குறைப்பது, இப்படி ஒரு மனப் போக்கு இருந்தது எனக்கு. சிறுபிள்ளைகள் பொன்வண்டு விளையாடுகிறார்களே அதுபோல. ஒருநாள் ஒரு வேடிக்கை கேள். தெருத்திண்ணையிலே யாரோ உள்ளூர்ப் பெரிய மனுஷருடன் பேசிக் கொண்டிருந்தார். கலெக்டர் ஆபீசிலிருந்து ஆள் வந்தார்கள், உன் அப்பாவை அழைக்க. உடனே அவர், "இதோ பத்து நிமிஷத்திலே, குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறினார். அந்தப் பேச்சு காதில் விழுந்தது; உடனே ஸ்நான அறைக்குப் போனேன். பத்துத் தடவை இருக்கும், அவர் "இன்னும் முடியவில்லையா ஸ்நானம்? நேரமாகிறதே, கலெக்டர் காத்துக் கொண்டிருப்பாரே" என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார். என்னிடம் கேட்பாரா! வேலைக்காரியிடம். அவள் என்னிடம் எப்படிப் பேசுவாள்! "அம்மா! அம்மா!" என்று கூப்பிடுவாள். நான் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் சத்தந்தான் அவளுக்குப் பதில்; கதவைத் தட்டுவாள்.

"யாரது, முட்டாள்தனமாக ஸ்நான அறைக் கதவைத் தட்டுவது" என்று பதில்.

"ஐயா..." என்று அவள் பேசத் தொடங்குவாள்.

"என்னடி அக்கிரமம்! ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது அவர் எப்படித் தட்டலாம்" என்று கேட்பேன்; எனக்குத் தெரியும் அவள்தான் தட்டினாள் என்று.

"அம்மா! நான் தான் தட்டினேன், அவரல்ல; அவர் கலெக்டர் ஆபீஸ் போகவேணுமாம்" என்று அவள் கூற, "அதற்கு உத்தரவு கேட்கிறாரா என்னை" என்று நான் கேலி பேச, "இல்லையம்மா, குளித்துவிட்டுப் போக வேண்டுமாம்" என்று அவள் பேச, "சரிதாண்டி! பாதிக் குளியலோடு வந்துவிட முடியுமா" என்று நான் கோபிக்க, எங்கள் பேச்சைக் கேட்டு, அவர் திகைத்துவிட்டுக் கடைசியில், குளிக்காமலேயே அவசர அவசரமாக உடுத்திக்கொண்டு போய்விட்டார். வேலைக்காரி ஒரு 'ஐயோ பாவம்' சேர்த்துச் சேதியைச் சொன்னாள்; களித்தேன். குளித்தேன் என்று மட்டுமா கூறமுடியும் அந்த ஸ்நானத்தை!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக