ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இலக்கிய நயம்

View previous topic View next topic Go down

இலக்கிய நயம்

Post by சிவா on Sat Jan 23, 2010 11:22 pm

"இலக்கியம்" என்றதும் நம் எண்ணத்தில் முதலில் தோன்றுவது "காதல்" என்ற பொருள் தானே? காரணம், "காதல்" மனித உணர்வுகளில் பின்னிப் பிணைந்து, உணர்வுகளை தட்டிச் சீக்கிரம் தூண்டி விடுகிறது. காதல் சுவை சொல்லாத இலக்கியங்களே இல்லை என்று கூறுமளவிற்கு இலக்கியத்தில் "காதல்" பின்னிப் பிணைந்து இழையோடுகிறது.

இங்கு காதலில் கட்டுண்டு, கன்னி ஒருத்தி தன் காதல் ஜெயித்து, திருமணத்தில் கொண்டு வந்து சேர்த்த சேதியை அறிந்து கட்டுக் கடங்காத மகிழ்வினில் துள்ளிக் குதிக்கின்றாள்.

"காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம் போல் கனிந்ததம்மா"
.....

என்று காத்திருந்த காதல், பழம் போல் கனிந்ததை கவிஞர் கூறுகிறார்.

"தாய்" ஒரு பெண்ணிற்கு பிறந்த போதிலிருந்து, அவளிற்குரிய தேவை அறிந்து, நேரம் அறிந்து, அன்பும் பாசமும் கலந்து கொடுத்து, அவள் மனதின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து, அரவணைத்து வளர்க்கின்றாள். அத்தகைய அன்பும் பாசமும், மண நாள் சேதியை காதலன் கூறுவதைக் கேட்ட மாத்திரத்தில் மறைந்து விடும் என்று கூறுகிறாள்.

இதையே கவிஞர்.....

"காதல் உன்பால் இல்லை என்றால்
கன்னி உள்ளம் கருகி விடும்
தேதி வைத்து சேதி சொன்னால்
தாய் முகமும் மறந்து விடும்"
.....என்று கூறுகிறார்.

அடுத்து, பெண்கள் கூந்தலுக்கு பூச்சூடும் அழகு, அந்தக் கூந்தலுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்து, அவர்கள் எழிலுக்கு மேலும் மெருகு சேர்த்து விடுகிறது. தாயானவள் தன் மகளிற்கு கூந்தலில் பூச்சூடி, தன் மகளின் அழகை இரசித்து மகிழ்வாள். அந்தப் பூச்சூடும் உரிமை கூட மணமானதும் கணவனுக்குச் சொந்தமாகி விடுகிறது.

இதையே மிக இயல்பாக, யதார்த்தமாக கண்ணதாஸன் அந்தப் பெண்ணின் உள்ளப் பாங்கில் நின்று....

"தங்க மகள் கூந்தல் என்று
தாய் முடித்துப் பூவும் வைப்பாள்
மங்கை மணம் முடித்து விட்டால்
மணவாளன் பூ முடிப்பான்"
..... என்று வடித்து விடுகிறார்.

அடுத்து இன்னொரு தத்துவத்தை மிக அழகாக, நாமாக விரும்பிக் கொண்டு வந்து இவ்வுலகில் பிறந்து விடுவதில்லை என்பதையும், பிறந்தவர்கள் யாவரும் பெற்றவர்களாலே வளர்க்கப்படுகின்றார்கள் என்பதையும் கூறி, தம்மை விரும்பி மணம் முடிப்பவர்கள் தம்முடைய உயிரில் தம்மை இணைத்து வளர்ப்பார்கள். என்று "தம் கணவனே தமக்கு உயிர்" என்றும், ஒரு கணவனுக்கே மனைவியானவள் சொந்தமாகி விடுகிறாள் என்பதையும், மிக நயமாக, பண்பாடு, நாகரீகம் தவறாமல், காதலால் பிணைக்கப் பட்டு, உயிரோடு கலந்து கொண்ட உறவாக இணைத்து விடுகிறார்.

தாய்க்குப் பின் தலைவனே தனது வழிகாட்டி, வாழ்க்கை என்று கூறிவிடும் அழகு கண்ணதாஸனுக்கே உரிய நடையில் நான்கு வரியில் வடித்து கொடுத்திருக்கிறார்.

"நாம் விரும்பிப் பிறப்பதில்லை
பெற்றவளே வளர்ப்பதில்லை
தாம் விரும்பி மணமுடிப்பார்
தம் உயிரில் நமை வளர்ப்பார்"
.....என்று கூறுகிறார்.

அடுத்து வரும் வரிகளில் "காதல்" என்றாலே தோல்விதான், என்ற ஒரு உண்மையை நாம் உலகில் பரவலாக பார்க்கக் கூடியதாக இருக்கின்ற காலத்தில், இந்தக் கன்னி தன் காதல் ஜெயித்த பூரிப்பில் திளைக்கின்றாள்.

"காதலிலே தோல்வி கண்டோர்
கதைகளை நான் படித்ததுண்டு
காதலிலே வெற்றி கண்ட
கன்னி என்போல் யாருண்டு".....


என்று, களிப்பில், பெருமிதத்தில் இருக்கும் பெண்ணில் தன்னை நிலைப் படுத்தி கவிஞர் கூறுகிறார்.

அடுத்து, ஒரு பெண் ஒருவனுக்கு மனைவியாகி விட்டாலே, அவளைத் தென்றல் தீண்டுவதைக் கூட அவள் விரும்ப மாட்டாள். தன் கணவனன்றி தன் உடலை வருடுவதற்கு தென்றலுக்குக் கூட உரிமை கிடையாது, தன் உடல் முழுக்க முழுக்க தன் கனவனுக்கே சொந்தம் என்று கூறும் பாங்கு தமிழர் பெருமை கூறும் கற்பு நெறி நிலைப் படுத்தப் பட்டிருக்கும் பாங்கு, "கற்பு" என்னும் அணிகலன் பெண்ணிற்கு என்றும் பெருமை தேடித் தரும் என்பதை மிக நயமாக எளிய நடையில் கூறுவதில் கண்ணதாஸனுக்கு நிகர் கண்ணதாஸனே.

"தனித்திருந்த என்னுடலை
தழுவி வந்த தென்றலுக்கு
துணை அடைந்த என் உடலை
தொடுவதற்கும் உரிமை இல்லை"
.....என்று கூறுகிறார்.

அடுத்து வரும் வரிகளில் இலக்கியச் சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச் சென்று விடுகிறார்.

"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்".....


என்று, தன் கண்ணைத் திறந்து விட்டால் தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்ற பயம் கலந்த ஏக்கம் அந்தப் பெண்ணில் பின்னி நிற்கிறது. தன் கணவனை தன்னை விட்டுக் கணமேனும் பிரித்துப் பார்க்க இயலாதவளாக, கண்ணைத் திறந்த நேரத்தில் உள் புகுந்தவர், மீண்டும் கண்ணைத் திறந்து விட்டால் போய் விடுவாரோ என்ற பயத்துடனும், எங்கே கண் திறந்தால் கணவன் வேறு இடம் நாடி விடுவாரோ என்ற தாபமும் இணைந்து நிற்க, தன் கணவனை உள்ளத்தில் நிறுத்தி தனக்கே உரிமையாக்கி வைத்திருக்க விரும்புகிறாள் என்பதை நல்ல நயத்துடன் சிலேடையாக்கி, கவிதையாக்கி அந்தப் பெண்ணின் உணர்வுகளில், ஏக்கங்களில், களிப்பில் நின்று வடித்திருக்கும் நயம் அற்புதம்!... அற்புதம்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கிய நயம்

Post by சிவா on Sat Jan 23, 2010 11:26 pm

"காதல்" மனித உணர்வுகளில் பின்னிப் பிணைந்து, உணர்வுகளை தட்டிச் சீக்கிரம் தூண்டி விடுகிறது. காதல் சுவை சொல்லாத இலக்கியங்களே இல்லை என்று கூறுமளவிற்கு இலக்கியத்தில் "காதல்" பின்னிப் பிணைந்து இழையோடுகிறது. இதோ மீண்டும் ஒரு கண்ணதாசனின் பாடல் ஒன்று பற்றி சற்றுப் பார்ப்போமே..........

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூ முகம் சிவந்தா போகும்

பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு.


உலகத்தில் இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து தோன்றும் உணர்வுகளில் பின்னிப் பிணைந்து காணப்படுவது "காதல்" என்ற உணர்வே. முன் பின் தெரியாத ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது, தம் உணர்வுகளிற்குள் இனம் புரியாத பற்றுப் பாசம் பின்னிப் பிணைந்து; ஒரு வித துடிப்பு ஏற்படுகிறது! இந்தத் துடிப்பு முன் பின் உணராத துடிப்பாகவும், புதுமையான தாகவும் ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் இவர்கள் எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்திருப்பார்கள். இருப்பினும் இந்த உணர்வுகள் சந்தித்துக் கொள்கிறது. ஒன்றை ஒன்று கவ்வியும் கொள்கிறது.

குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது:.............

"யாயும், ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளீர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே"


"நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நானும் நீயும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து, அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது போல்; நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்து விட்டதே" என்கின்றான் அந்தத் தலைவன்.

இது உலகியல்."காதல்" உயிர் வாழும் எல்லா இனங்களிற்கும் இருந்து விடுகிறது. " காதல், காதல், காதல்! காதல் போயிற் சாதல், சாதல்"...என்றான் பாரதி.

காதல் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம். இலக்கியங்கள் யாவும் மனித வாழ்வைப் பின்னிப் பிணைத்துக் காட்டுகின்றன. சங்க கால இலக்கியங்களில் எங்கு பார்க்கும் போதும் காதல்தான் நிறைந்திருக்கின்றன.

சங்க கால இலக்கியத்தை எளிமைப்படுத்தி இலகு தமிழில் எடுத்து வருகின்றன அநேகமான திரை இசைப் பாடல்கள். பாமரரும் புரியும்படி கவி கொடுத்த, பாரதி வழிவந்த கண்ணதாசனும் பல திரை இசைப் பாடல்களில் இணைத்திருக்கிறார். அந்த வகையில் இந்தக் குறுந்தொகைப் பாடலை கண்ணதாசன் இப்படிக் கொடுத்திருக்கிறார்.

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.


என்று "வாழ்க்கைப் படகு" படத்தில் இலக்கியக் காதலைப் புகுத்தியிருக்கிறார்.

அதே வேளை இந்தப் பாடலில் கண்ணதாசன் வள்ளுவனின் குறள் தரும் இலக்கியத்தையும் இணைத்திருக்கிறார் இப்படி:............

"யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்
தான் நோக்கி மெல்ல நகும்.


என்றான் வள்ளுவன். காதலிற்கு மெருகூட்டுவது "நாணம்" என்ற பொருளாகும். காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் பேசிக் கொள்ளும் போது, ஆணானவன் நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்துப் பேசிக் கொள்வான். ஆனால் பெண்ணானவள் ஆண் தன்னைப் பார்க்கும் போது நிலம் பார்த்து காலால் கோலம் போட்டு கொள்வாள். அதேவேளை ஆண் தன்னைப் பாராத நேரம், அவனைப் பார்த்து சந்தோஷித்துக் கொள்வாள். இது காதலில் பெண்மையின் சிறப்பு. அவள் நாணுவதில் காதலில் பெருமை பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதுவே ஒரு பெண்மைக்கும் சிறப்பு என்கிறான் வள்ளுவன்.

இதையே கண்ணதாசன் இந்தப் பாடலில் இப்படிக் கூறுகிறார்.

"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !


என்று மிகவும் அழகாகவும், நல்ல நயத்துடனும் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார்.

சத்தியா


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலக்கிய நயம்

Post by அப்புகுட்டி on Sat Jan 23, 2010 11:59 pm

சிவா அண்ணா உங்கள் இருவருகம்கும் வாழ்த்துக்கள்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: இலக்கிய நயம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum