உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
by T.N.Balasubramanian Today at 10:09 pm

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:36 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» புத்தாண்டு உறுதிமொழி
by ayyasamy ram Today at 6:49 pm

» புத்தகம் தேவை
by Saravana2945 Today at 6:47 pm

» சுற்றுலா பயணியருக்குத் தடை
by ayyasamy ram Today at 6:44 pm

» புதிய உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by ayyasamy ram Today at 6:17 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by சக்தி18 Today at 5:03 pm

» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்?
by ayyasamy ram Today at 2:45 pm

» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,
by ayyasamy ram Today at 9:06 am

» மனமே தினமும் உன் சிந்தனைக்கு
by ayyasamy ram Today at 8:59 am

» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:41 am

» சினிமாவுக்கு முழுக்கு ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:38 am

» ஒரு புத்தகத்தில் படித்தது...
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:25 am

» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:24 am

» ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 am

» யார் வரப் போகிறீர்கள்! – கவிதை
by ayyasamy ram Today at 6:10 am

» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,
by ayyasamy ram Today at 6:08 am

» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்
by சக்தி18 Yesterday at 8:18 pm

» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்
by ManiThani Yesterday at 7:52 pm

» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:35 pm

» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:07 pm

» சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:52 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:43 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:38 pm

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm

» கொத்தனார் சூடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:36 pm

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:35 pm

» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Yesterday at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:54 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Yesterday at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Yesterday at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Yesterday at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Yesterday at 6:15 am

Admins Online

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:01 pm

தேன் கெட்டுப்போகாது, ஆனால் சுவை மாறும். அதனால் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது லாபம் தரும். இதனால்தான் தேனீ வளர்ப்பு அதிகமான லாபம் தரும் என்று சொல்கிறார்கள்.

உணவுப் பொருட்களில் மிகுந்த இனிமையான, சத்தான பொருள்களில் முதலிடம் வகிப்பது தேன். உலகில் தேன் சந்தையில் நிகழும் பணப் பரிமாற்றம் மட்டும் பில்லியன் டாலரைத் தாண்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. கனடாவில் ஓர் ஆண்டுக்கு 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. 2012-ம் ஆண்டு கணக்குப்படி, சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை நிரப்பியிருந்தன. பில்லியன் டாலர் அளவிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில் தேனீ வளர்ப்பு இன்று கலப்படங்களின் வருகையால் மதிப்பிழந்து காணப்படுகிறது.

நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:03 pm

தேவை இருக்கும் பொருளுக்குத்தானே சந்தையில் மரியாதையும் அதிகம் இருக்கும். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர தேனில் மதிப்புக் கூட்டல் பொருட்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார். பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம்  பேசினோம்

தேனில் அடைத்தேன், தேன் நெல்லி, சர்க்கரை நெல்லி, தேன் மெழுகுவர்த்தி எனப் பல பொருட்களை மதிப்புக் கூட்டல் செய்து வருகிறேன். தேனை மட்டும் மக்களுக்குக் கொடுத்தால் லாபம் குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான் மதிப்புக் கூட்டல் முறையில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். சுத்தமான ஒரு கிலோ தேன் 550 ரூபாய்க்கு விற்பனையானால், தேன் நெல்லி கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்

Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:09 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:08 pmதேனீ வளர்ப்புஒரு பொருளை மதிப்புக் கூட்டினால் நிச்சயமாக லாபம் கிடைக்கும். அதிலும் தேனை மதிப்புக் கூட்டினால் இன்னும் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் சந்தையில் கிடைக்கும் தேன்கள் அதிகமாகப் போலியானதாகத்தான் இருக்கிறது. எங்களிடம் விசாரிக்கும் வாடிக்கையாளர்களும் மற்றவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏன் நீங்கள் தேன் கொடுக்கக் கூடாது என்று கேட்பார்கள். அவர்கள் கேட்பதுபோலவே தேன் கொடுத்தால் அது தரமான தேனாக இருக்காது. இத்தாலிய தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேன் ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்கலாம். ஆனால், நாட்டுத் தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேனை ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்க முடியாது. தேன் விலை அதிகமாக இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்கு ஒன்றுதான். குறைந்த விலையில் தேனை எதிர்பார்க்க வேண்டாம். இப்போதுள்ள காலகட்டத்தில் ஒரு கிலோ தேன் எடுப்பதுமுதல் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது வரை அதிகமாகச் செலவாகிறது. மக்கள் குறைந்த விலைக்குக் கேட்கும்போதுதான் கலப்படமும் சந்தையில் அதிகமாகிறது
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:10 pm
எதிர்காலத்தில் சுத்தமான தேன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். உண்மையான தேன் பண்ணைகள் என சொல்லிக் கொண்டு அதிகமான தேன் பண்ணைகள் போலியாக இயங்கி வருகின்றன. நாங்கள் கொடுக்கும் தரமான தேனால் வாடிக்கையாளர்கள் அதிகமாக எங்களிடம் வந்து வாங்கிச் செல்கிறார்கள். வெளி மார்கெட்டில் தேன் 350 ரூபாய்க்கு விலை போனாலும், மக்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள். மேல் நாட்டுத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் வருடம் முழுவதும் கிடைக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நாட்டுத் தேனீக்கள் மூலம் தேன் வருடம் முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்கும். சீசனில் கிடைக்கும் தேனின் அளவு குறையுமே தவிர, முழுமையாக நின்று விடாது. இதுதவிர, நாட்டுத் தேனில்தான் சத்துகளும் அதிகமாக இருக்கும். சுத்தமான தேன் அதிக கெட்டித் தன்மையுடன் இருக்காது. எப்போதுமே நீர்மத் தன்மையுடன்தான் காணப்படும்

Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:12 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:11 pm

இந்தத் தொழிலை ஆரம்பிக்கும்போது வெறும் ஆயிரம் ரூபாயில்தான் ஆரம்பித்தேன். இன்று என்னிடம் இருப்பதுபோல பண்ணை அமைக்கக் 5 கோடி ரூபாய் தேவைப்படும். ஒரு தொழிலை துவங்கிவிட்டால் அதனை விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டுமே தவிர, இதுபோதும் என்று எப்போதுமே நின்றுவிடக்கூடாது. அதேபோல தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழிலை நவீனப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 10 இந்திய தேன் பெட்டிகளை வைத்தால் ஒரு விவசாயி வருடத்திற்குக் குறைந்தபட்சம் இண்டு லட்ச ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம். 10 பெட்டியில் இருந்து வருடத்திற்கு 100 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் விலை 550 ரூபாய். இதன் மூலமாக 55 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வருடத்திற்கு 10 கிலோ மகரந்தம் கிடைக்கும். ஒரு கிலோ மகரந்தத்தின் விலை 2,000 ரூபாய். அது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 10 கிலோ தேன் மெழுகு மூலமா 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலே சொன்ன அனைத்துமே பொதுவாக தேனீ வளர்ப்பாளர்களுக்கு கிடைக்கும் வருமானம்தான். எனக்கு இந்தத் தொழிலில் செலவுபோக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கிறது. அடைத்தேன் கிலோ 1200 ரூபாய்க்கும், சர்க்கரை நெல்லி கிலோ 350 ரூபாய்க்கும், மெழுகுவத்தி 500 ரூபாய்க்கும், தேன் நெல்லி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும், இத்தாலி தேன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். வருமானம் சீசனைப் பொறுத்து மாறுபடும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by T.N.Balasubramanian on Wed Nov 07, 2018 5:48 pm

நல்ல செய்தி. இன்ப தேன் வந்து பாய்கிறது மனதினிலே!
இவரிடம் தேன் வாங்கவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்.?
வியாபார நுணுக்கத்தை பற்றி பேசுகின்ற இவர் இவருடைய முகவரியோ அல்லது பிராண்ட்
பெயரையோ தந்து இருக்கலாம். ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு--யாராவது இருக்கிறீர்களா உறவுகளே??

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23898
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 8:37 pm

@T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி. இன்ப தேன் வந்து பாய்கிறது மனதினிலே!
இவரிடம் தேன் வாங்கவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்.?
வியாபார நுணுக்கத்தை பற்றி பேசுகின்ற இவர் இவருடைய முகவரியோ அல்லது பிராண்ட்
பெயரையோ தந்து இருக்கலாம். ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு--யாராவது இருக்கிறீர்களா உறவுகளே??

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284760
சீக்கிரம் விலாசம் மற்றும் போன் நம்பர்
பெற்று விடுவோம்.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 9:26 am

உங்கள் ஊர் பக்கம்தானே பழ மு .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23898
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 12:32 pm

@T.N.Balasubramanian wrote:உங்கள் ஊர் பக்கம்தானே பழ மு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284889
ஆமாம் ஐயா ஈரோடு குமாரபாளைத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர்
சேலம் அய்யாசாமி ராம் ஐயா ஊர் ஐம்பத்து ஐந்து கிலோ மீட்டர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by ayyasamy ram on Thu Nov 08, 2018 1:42 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 42387
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 3:43 pm

ayyasami ram நன்றி.
ஒரு விதத்தில் நீங்களும் ஒரு தேனீதான்.
முகவரியை தேடி பிடித்து இங்கு பகிர்ந்து கொண்டதற்கு.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23898
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by T.N.Balasubramanian on Thu Nov 08, 2018 3:47 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:உங்கள் ஊர் பக்கம்தானே பழ மு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284889
ஆமாம் ஐயா ஈரோடு குமாரபாளைத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர்
சேலம் அய்யாசாமி ராம் ஐயா ஊர் ஐம்பத்து ஐந்து கிலோ மீட்டர்.
மேற்கோள் செய்த பதிவு: 1284916

நீங்கள் அவ்வளவு அருகில் இருப்பதால்தான் தேனடையில் தோய்த்த பதிவுகளாக உங்கள் பதிவுகள் இருக்கின்றது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23898
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 6:56 pm

@T.N.Balasubramanian wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:உங்கள் ஊர் பக்கம்தானே பழ மு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284889
ஆமாம் ஐயா ஈரோடு குமாரபாளைத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர்
சேலம் அய்யாசாமி ராம் ஐயா ஊர் ஐம்பத்து ஐந்து கிலோ மீட்டர்.
மேற்கோள் செய்த பதிவு: 1284916

நீங்கள் அவ்வளவு அருகில் இருப்பதால்தான் தேனடையில் தோய்த்த பதிவுகளாக உங்கள் பதிவுகள் இருக்கின்றது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284925
எப்படியோ எங்கள் பதிவு இனிப்பாக
இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 6:59 pm

மேற்கோள் செய்த பதிவு: 1284918
நன்றி ஐயா, ரமணியின் அவர்கள் கேட்ட
விலாசம் மற்றும் போன் நம்பர்
வழங்கி உள்ளீர்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 11355
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை