உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Tue Feb 20, 2018 1:47 pm

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by T.N.Balasubramanian on Tue Feb 20, 2018 8:22 pm

ஐந்தடி கவிதைக்கே தனித்திரி
மனதடியில் மறைந்து போனதோ ?
ஈரடி குறள் மன்னன் நீர் ,
ஓரடி கூட்டிடுவீர்
நேரடி வேண்டுகோளைய்யா !
மாற்றிடுவேன் மனமுவந்தே!!
புள்ளி இல்லா அழகு வெண்பாவிற்கு
அழகு புள்ளி வைத்திடுவோம் !

ரமணியன்
@MJagadeesan


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Tue Feb 20, 2018 9:55 pm

ஐயா !

இந்தத் திரியில் எனது கவிதைகள் தொடரும் . எனவே வேறு திரிக்கு இதை மாற்றவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Tue Feb 20, 2018 10:02 pm

மருட்பா
========
வெண்பாவும் , ஆசிரியப்பாவும் கலந்து வருவது மருட்பா எனப்படும் .

பொய்களைச் சொல்லாதே ! பாவங்கள் சேர்க்காதே !
பொய்களினால் நன்மை பிறந்திடு மென்றாலும்
மெய்யே வலிதாகும் ; மேன்மைகள் தந்திடுமே !
உய்யும் வழிக்குன்னை உந்துமே ஆதலினால்
மனத்துடன் வாய்மை மொழிந்தால்
மற்றொரு மகாத்மா உன்றன் உருவே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by மூர்த்தி on Tue Feb 20, 2018 10:09 pm

சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா கேட்க ஆசைப்படுகிறோம் ஐயா.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Wed Feb 21, 2018 5:39 am

சிந்தியல் வெண்பா என்பது தமிழ்ப் பா வகைகளுள் ஒன்றான வெண்பா வகைகளுள் ஒன்று. இது மூன்று அடிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றில் முதல் இரண்டு அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு சீர்களைக் கொண்டுள்ள அடிகள் அளவடிகள் என அழைக்கப்படுகின்றன. சிந்தியல் வெண்பாவின் மூன்றாவது அடி, சிந்தடி என அழக்கப்படும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாக இருக்கும்.

சிந்தியல் வெண்பாக்களில் இரண்டு வகைகள் உண்டு. அவை,

1 . இன்னிசைச் சிந்தியல் வெண்பா
2 . நேரிசைச் சிந்தியல் வெண்பா

என்பனவாம்.

நேரிசை சிந்தியல் வெண்பா , இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று வரும் . இன்னிசை சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெறாமல் வரும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Wed Feb 21, 2018 6:04 am

முதலில் நேரிசை வெண்பாவைப் பார்ப்போம் .

பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .

நேரிசை வெண்பா நான்கு அடிகளைக் கொண்டதாகும் . முதல் மூன்று அடிகள் அளவடியாகவும் ( நான்கு சீர்கள் கொண்ட அடியை அளவடி என்போம் . ) நான்காம் அடி சிந்தடியாகவும் ( மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி ) இருந்து தனிச்சொல் பெற்றுவரும் . இந்த வெண்பாவில் தனிச்சொல் " பாருக்குள் " என்பதாகும் .

இன்னிசை வெண்பா என்பது தனிச்சொல் பெறாமல் வருவது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Wed Feb 21, 2018 7:04 am

அடுத்து இன்னிசை வெண்பாவைப் பார்ப்போம் .

சர்க்கரை நோய் ( இன்னிசை வெண்பா )
==========================================
அல்வாவும் லட்டும் அதிரசமும் ஜாங்கிரியும்
இல்லாத வாழ்வு இருந்தென்ன போயென்ன
மெல்லவே கொள்ளும் மதுமேக நோய்தன்னை
வெல்லும் வழியொன்று கூறு .

இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசை வெண்பாவாகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Feb 21, 2018 7:07 am

@M.Jagadeesan wrote:புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
மேற்கோள் செய்த பதிவு: 1260068
அருமை புள்ளி எழுத்தில்லா வெண்பா.
நீங்கள் வெண்பா பற்றிய விவரங்களை
தொடருங்கள்.
நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Feb 21, 2018 7:14 am

@M.Jagadeesan wrote:அடுத்து இன்னிசை வெண்பாவைப் பார்ப்போம் .

சர்க்கரை நோய் ( இன்னிசை வெண்பா )
==========================================
அல்வாவும் லட்டும் அதிரசமும் ஜாங்கிரியும்
இல்லாத வாழ்வு இருந்தென்ன போயென்ன
மெல்லவே கொள்ளும் மதுமேக நோய்தன்னை
வெல்லும் வழியொன்று கூறு .

இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசை வெண்பாவாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1260113
இன்னிசை வெண்பாவில் அல்வாவும், ஜாங்கிரியும் மற்றும் அதிரசமும் இனிக்கா
வெண்பாவாகிற்று.
நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Feb 21, 2018 7:20 am

@M.Jagadeesan wrote:முதலில் நேரிசை வெண்பாவைப் பார்ப்போம் .

பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .

நேரிசை வெண்பா நான்கு அடிகளைக் கொண்டதாகும் . முதல் மூன்று அடிகள் அளவடியாகவும் ( நான்கு சீர்கள் கொண்ட அடியை அளவடி என்போம் . ) நான்காம் அடி சிந்தடியாகவும் ( மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி ) இருந்து தனிச்சொல் பெற்றுவரும் . இந்த வெண்பாவில் தனிச்சொல் " பாருக்குள் " என்பதாகும் .

இன்னிசை வெண்பா என்பது தனிச்சொல் பெறாமல் வருவது .
மேற்கோள் செய்த பதிவு: 1260111
நேரிசை வெண்பாவில் பேருந்து கட்டண உயர்வை வயிற்று எரிச்சலுடன் -' பாருங்கள்' என்ற தனிச்சொல்
விளக்கம் அருமை
நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Feb 21, 2018 7:27 am

@M.Jagadeesan wrote:மருட்பா
========
வெண்பாவும் , ஆசிரியப்பாவும் கலந்து வருவது மருட்பா எனப்படும் .

பொய்களைச் சொல்லாதே ! பாவங்கள் சேர்க்காதே !
பொய்களினால் நன்மை பிறந்திடு மென்றாலும்
மெய்யே வலிதாகும் ; மேன்மைகள் தந்திடுமே !
உய்யும் வழிக்குன்னை உந்துமே ஆதலினால்
மனத்துடன் வாய்மை மொழிந்தால்
மற்றொரு மகாத்மா உன்றன் உருவே !
மேற்கோள் செய்த பதிவு: 1260103
மருட்பா, அதிமுக ஆட்சியாளர்களுக்கு
பொருந்தியுள்ளது.
பொய்யா?
மெய்யா? உண்மையில் பொய்யே!!
அருமை நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Wed Feb 21, 2018 8:24 am

குறளில் குற்றம் காணாதீர் ( நேரிசை வெண்பா )
===================================================
குறளின்பம் துய்க்காது குற்றங்கள் காணுவது
அறமல்ல என்ப தறிவீர் - திருமகளே !
அப்பத்தைத் தின்னாது ஆழ்குழி எண்ணுவது
தப்பன்றோ சான்றோர் தமக்கு .

பொருள் : சுவையான அப்பம் கிடைத்தால் , அதை ருசித்து சாப்பிடவேண்டுமே தவிர , அதிலுள்ள குழிகளை எண்ணிக்கொண்டு இருப்பது மடமையாகும் . அதுபோல திருக்குறளைப் படிக்குங்கால் , அதன் சொற்சுவை , பொருட்சுவை மற்றும் இலக்கியச் சுவையை அனுபவிக்கவேண்டுமே தவிர , குற்றம் காணுதல் சான்றோர்க்கு இழுக்காகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Wed Feb 21, 2018 8:31 am

தமிழ்த் தாத்தா உ .வே .சா
==============================
ஓடினாய் ஓடினாய் ஓலைச் சுவடிகளைத்
தேடியே உன்றன்கால் சலித்தாய் - வாடும்
பயிருக்குப் பெய்த மழைபோல் தமிழின்
உயிர்செழிக்க வந்தவனே வாழ்க !

இந்த நேரிசை வெண்பா " வாடும் " என்ற தனிச்சொல் பெற்று வந்துள்ளது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan on Wed Feb 21, 2018 8:41 am

பாயில் படுக்கும் சுகம் :
========================
மெத்தையில் தூங்கினால் மேனிக்குக் கேடாகும்
நித்திரை வேண்டா நிலம்தன்னில் - முத்தே நீ
நோயில் படுத்தாலும் நோக்காடு போய்விடுமே
பாயில் படுத்த பொழுது .

பொருள் : முத்துப் போன்ற அழகிய பெண்ணே !
=========
மெத்தையில் தூங்குவது உடல்நலத்திற்கு துன்பம்தரும் . வெற்றுத் தரையிலும் படுத்து உறங்கக்கூடாது . தரையிலே பாய் விரித்துப் படுத்தால் , நோயினால் ஏற்படும் துன்பங்களெல்லாம் போய்விடும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை