உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

திரைப் பிரபலங்கள்

best திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sun Apr 08, 2018 5:05 pm

08.04.2018

விஜயசாந்தி

சூப்பர் ஸ்ட்டார் யார்னு கேட்டா, ஒட்................டனே ரஜினிகாந்த்னு எல்லாரும் சொல்லிர்வோம். சூப்பர் ஸ்ட்டாரினி யார் தெரியுமோ? அதுவும் எல்லாருக்கும் தெரிஞ்சவங்கதான். விஜயசாந்தி. 

ஆதி காலத்தில, ஹிந்தியில நாதியா, தமிழ்ல KT ருக்மணி சூப்பர் ஸ்ட்டாரா இருந்தாங்க. ஆம்பளைங்கள மாதிரி சண்டை காட்சியில ஜோ................ரா நடிச்சாங்க. அப்புறமா ஜோதிலட்சுமி வந்தாங்க, ரிவால்வர் ரீட்டா, கன்ஃபைட் காஞ்சனா படங்கள்ல. அதுக்கப்புறம்தான் லேடி ஜேம்ஸ்பாண்ட் விஜயசாந்தி வந்தாங்க. இவருக்கு லேடி அமிதாப்பச்சன், இந்திய சினிமாவின் பெண் ஜாக்கி சான்னு பேரும் இருக்காமே.

தெலுங்கிலேயும், தமிழ்லயும் நடிச்ச விஜயலலிதா இவரோட சித்தியாம். சித்தியோடு ஷூட்டிங்க்கு போனார். பிரமிப்பா எல்லாத்தையும் பார்த்தார். ஆனா சினிமாவில நடிக்கணும்னு ஆசை வரல. டாக்டர் ஆகணும்னுதான் கனவு கண்டுட்டு இருந்தார். கனவு நனவாகாமலே போயிருச்சு. ஆந்திராவில பிறந்தாலும், சென்னைலதான் வளர்ந்தார்.

1990களிலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகையாமே. 1980ல கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலமா சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தின் ஹீரோயினோட தோழி ரோல் முக்கியமானது. அதுக்கு ஒரு புதுமுகத்தை பாரதிராஜா தேடிட்டு இருந்தார். பட அதிபர் விஜயன் ஒரு ஸ்டூடியோல விஜயசாந்தியின் ஃபோட்டோவை பார்த்தார். பாரதிராஜாட்ட சொன்னார். பாரதிராஜா அந்த போட்டோவில் உள்ள விஜயசாந்தியை தேட ஆரம்பிச்சுட்டார். அப்டீ................... இப்டீன்னுட்டு வீட்டை கண்டுபுடிச்சு, பாரதிராஜா பேசினார்.

அப்போ விஜயசாந்தி எட்டாப்பு படிச்சிட்டு இருந்தார். பாரதிராஜா பேசின பிறகு, விஜயசாந்தி மனசில கொஞ்சம் கொஞ்சமா சினிமா ஆசை வந்துசுசு. பாரதிராஜா படத்தல நடிக்க சான்ஸ் கெடக்காதா...........................ன்னு ஏங்கிட்டு இருந்தாங்க. இப்ப தானாவே சான்ஸ் வீடி தே....................டி வந்திருக்கு. விடுவாரா விஜயசாந்தி? “ம்ம்ம்” சொல்லிட்டார். கல்லுக்குள் ஈரம் படத்ல, ஹீரோயின் அருணாவுக்கு, தோழியா நடிச்சார். இந்தப் படம் நல்லா ஓடலேன்னாலும், நல்ல படம்னு நிறைய பேர் பாராட்டினாங்க.

என்னதான் தமிழ் படத்தில அறிமுகம் ஆனாலும், தெலுங்கிலதான் பேரு கெடச்சுது. தெலுங்கில ஹீரோயினா நடிச்சார். 1988ல ‘பிரதிகடனா’ங்கற படத்ல, புரட்சி பெண்ணா நடிச்சு, அவர் புகழ் உச்சத்துக்கு போயிருச்சு. இந்தப் படம் தமிழ்ல, ‘பூ ஒன்று புயலானது’ படமாச்சு. தமிழ் படம் 100 நாளுக்கு மேல ஓடுச்சு.

விஜயசாந்திக்காகவே........................... அடிதடி உள்ள கதைகளை எழுத ஆரம்பிச்சாங்க. சண்டை படங்கள்ல, சுறுசுறுப்பா நடிச்சு, பாராட்டுகளை பெற்றார். போலீஸ் அதிகாரி கிரண் பேடி, பூலாந்தேவி இவங்க வாழ்க்கையை பற்றி எடுத்த வைஜெயந்தி IPS, அடிமைப்பெண் போன்ற சினிமாக்கள்ல நடிச்சார். ரெண்டுமே நல்லா ஓடுச்சு.

விஜயசாந்தி நடிச்சு, அடிமைப்பெண்னு ஒரு படம் வந்துச்சா?

இவர் நடிச்ச வேற சில படங்கள், முதலமைச்சர் ஜெயந்தி, கவுண்டர் பொண்ணா கொக்கா, மறவன் மகள், போலிஸ் லாக்கப், லேடி பாஸ், ஸ்ட்ரீட் ஃபைட்டர், ஆட்டோ ராணி போன்ற படங்கள் விஜயசாந்தி நடிச்சு வெற்றி பெற்று, அவருக்கு புகழை தந்த படங்கள்.

போலிஸ் லாக்கப் படத்ல, துடுக்கு பொண்ணாவும், அப்பாவிப் பொண்ணாவும் ரெட்டை வேஷத்ல நடிச்சிருப்பார். தமிழ்ல dub செய்யப்பட்ட படங்கள்ல, விஜயசாந்திக்கு நடிகை சரிதா குரல் கொடுத்தார்.

ரொம்ப நா.......................ள் கழிச்சு நடிச்ச படங்கள்ல, ரஜினி கூடவும் நடிச்சிருக்கார். மன்னன் படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தினு நடிச்சிருக்கார். தேசிய விருது ஒரு தடவையும், ஆந்திர மாநில அரசின் விருது நாலு தடவையும் வாங்கியிருக்கார்.  


- ரமணி

Heezulia  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sun Apr 15, 2018 5:12 pm

15.04.2018 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

பாசவலை படத்துக்காக எம்.எஸ்.வி. ம்யூசிக். யாரை பாட்டெழுத   வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தாங்க. அந்த சமயத்தில பட்டுக்கோட்டையார் போயிருக்கார். விஷயத்தை மேனேஜர் எம்.எஸ்.வி.ட்ட சொன்னார்.

“நமக்கு நாள் பத்தாது. இதுல புதுசா யாரையாவது பாட்டு எழுத வைக்க முடியாது. கண்ணதாசனையோ, மருதகாசியையோ எழுத வைங்க” சொல்லிட்டு கோபமா போய்ட்டார். ஏன்னா அந்த சமயத்தில அவங்கதான் ஹை ................. பீக்ல இருந்தாங்க. மேனேஜர் சொன்னதை கேட்ட கல்யாணம் ,

“எனை பார்க்க வேணாம். என் கவிதையை மட்டும் படிக்க சொல்லுங்க”ன்னு சொல்லி எழுதி வச்சிருந்த கவிதையை கொடுத்தனுப்பினார்.

“இவன் விடமாட்டான் போலியே. ஒரு டைப்பான ஆள்தான்”னு யோசிச்சிட்டே, அவர் கொடுத்த கவிதை வரிகளை எம்.எஸ்.வி.ட்ட போய் காட்டினார் மேனேஜர். எம்.எஸ்.வி. கவிதையை வாங்கி படிச்சார்.

குட்டி ஆடு தப்பி வந்தா,
குள்ளநரிக்கு சொந்தம்,
குள்ளநரி மாட்டிகிட்டா,
கொறவனுக்கு சொந்தம்”

இந்த வரிகள்தான். எம்.எஸ்.வி. இதை படிச்சு நெகிழ்ந்து போனார்.

அப்புறமா ஒரு நாள் எம்.எஸ்.வி. சொன்னாராம், 

“பட்டுக்கோட்டையார் கவிதையை முதல் முதல்ல நான் பார்த்தபோ, அன்னிக்கி முழுசும் என்னால சாப்ட முடியல. சாமி ரூம்லயே உக்காந்திருந்தேன்.”ன்னு நெனச்சுட்டு அவரயே அவர் திட்டிகிட்டாராம்.

“டேய் விஸ்வநாதா, உனக்கு ஏண்டா இந்த ஆணவம், அகம்பாவம்? மத்தவங்களை பற்றி மட்டமா நெனைக்காதே. நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? எவ்வளவு பெரிய திறமைசாலி அவர். அவரை நான் அலட்சியபடுத்தியிருக்கேனே”ன்னு வருத்தப்பட்டு, சாமிட்ட மன்னிப்பு கேட்டாராம். பாசவலை படத்லே இருந்துதான் பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கள் புகழ் பெற ஆரம்பிச்சுது. 
 
பாவேந்தர் பாரதிதாசன்ட்ட தமிழ் படிச்சவர். அவரோட குயில் இதழ்ல, உதவி ஆசிரியராக இருந்தவர். பாரதிதாசன்ட்ட சிஷ்யனாக சேர்ந்த புதுசு. தனக்கு கவிதை எழுத தெரியும்னு பாரதிதாசன்ட்ட நேரடியா சொல்ல பயம். அகல்யாங்கற பேர்ல கவிதை எழுதி காட்டினார். பாரதிதாசன் படிச்சு பார்த்துட்டு பாராட்டினார். அதுக்கப்புறம்தான் பட்டுக்கோட்டையாருக்கு தைரியம் வந்து, அது தன்னோட கவிதைன்னு சொன்னார்.
1955ல வந்த படித்த மனைவி படத்லதான் இவர் முதல் பாட்டு எழுதினார்னு படிச்சேன். இல்லேன்னா மகேஸ்வரியா,  எது சரி?  

சினிமாவுக்குள்ள நுழையணும்னு சென்னைக்கு வந்த இவர், சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். ‘கவியின் கனவு’ங்கற நாடகத்தில் நடிச்சார்.  எல்லாரும் அவர் நடிப்பை பாராட்டினாங்க.

அதுக்கப்புறமா சகஸ்ரநாமத்தின் நாடக குழுவில சேர்ந்தார். அங்க வானவில்ங்கற நாடகத்தில நடிச்சார். என்ன ரோல் தெரியுமா?

சொன்னாத்தானே தெரியும்?

முதலமைச்சர்.

மொதல்ல நாடகத்துக்குத்தான் பாட்டு எழுத ஆரம்பிச்சார். ஆகஸ்ட்டு ஒண்ணாம் தேதி, திண்டுக்கல்ல தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு நடந்துச்சு. அப்போ, ‘கண்ணின் மணிகள்’னு ஒரு நாடகத்தை நடத்தினாங்க. அதுக்கு பட்டுக்கோட்டையார்  பாட்டு எழுதினார். மாநாட்டுக்கு தலை தாங்கினவர், “மக்கள் கவிஞருக்குரிய தரம் அவர் பாட்டுகள்ல இருக்கு”ன்னு பேசினார்.  

- விகடன்
- கீற்று

Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Mon Apr 16, 2018 11:33 am

குட்டி ஆடு தப்பி வந்தா,
குள்ளநரிக்கு சொந்தம்,
குள்ளநரி மாட்டிகிட்டா,
கொறவனுக்கு சொந்தம்”

திரைப் பிரபலங்கள்  - Page 7 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 7 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 7 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Mon Apr 16, 2018 2:05 pm

16.04.2018

இதை நிஜம்...................மா  நான் எழுதல.  

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Mon Apr 16, 2018 3:10 pm

அது தெரிந்தது தானே


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Mon Apr 16, 2018 3:34 pm

16.04.2018

கண்டுபுடிச்சிட்டீங்களா? சூப்.........................பர் செந்தில். 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Tue May 01, 2018 6:01 pm

01.05.2018 

TK கலா 

இவர் பின்னணி பாடகி, நடிகை, டப்பிங் கலைஞர்.  12 வயசிலிருந்தே   மேடை கச்சேரிகள்ல பாட ஆரம்பிச்சுட்டார். இவரோட அம்மாவும், அப்பாவும் கூட நாடகத்தில், சினிமாவில நடிச்சவங்களாம்.  அம்மா T சண்முகசுந்தரி, காமெடி நடிகையாம். கலா 750 படங்கள்ல நடிச்சார். MGR கூட என் அண்ணன், கணவன், இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் காதலன்,  படங்கள்ல நடிச்சிருந்தார். 

சிவாஜி கூட லட்சுமி கல்யாணம், வடிவுக்கு வளைகாப்பு படங்கள்ல, ஜெமினி கூட மாலதி படத்ல,  விஜய் கூட குருவி, கில்லி படங்கள்ல நடிச்சார். விக்ரமின் அம்மாவா ஐ படத்ல நடிச்சார்.  ஒரு மரத்து பறவைகள், மொட்டு மல்லி, மகிழ்ச்சி, நீ உன்னையறிந்தால், பிரிவோம் சந்திப்போம், வெயில்  போன்ற 20க்கும் அதிகமான படங்கள்ல நடிச்சார். 

கலா நல்லா பாடுவார்னு எப்டியோ AP நாகராஜனுக்கு தெரிஞ்சுது.  அவர் அந்த சமயத்தில அகத்தியர் படத்தை டைரக்ட் செஞ்சுட்டு இருந்தார். இந்தப் படத்தில ஒரு பிரபலமான பாட்டு இருக்குல்ல.
 
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"

படத்தில மாஸ்டர் சேகர் இந்த பாட்டை பாட்ற மாதிரி வரும்.  சேகருக்காக அந்த பாட்டை கலாவை  பாட வச்சது டைரக்டர்  நாகராஜன்.  பாடியது மட்டுமில்ல.  சேகருக்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்ததும் கலாதான். 

கலாவின் திறமை MGR கா...................து வரைக்கும் போயிருக்கு போல. அதனாலதான், தான் நடிச்ச பல்லாண்டு வாழ்க படத்ல "போய் வா நதியலையே" பாட்டை ஜேசுதாஸுடன் கலாவை பாட வச்சார்.  உழைக்கும் கரங்கள் படத்ல  "வாரேன் வழி பார்த்திருப்பேன்" பாட்டை TMS உடன் பாடினார். ரெண்டு பாட்டும் பிரபலம். அதனால கலாவும் பிரபமாயிட்டார். 

கலா பாடிய சில பாட்டுக்கள் : 

முறுக்கு கை முறுக்கு - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 
ஒரு காதல் சாம்ராஜ்யம் [ஜெய்சந்திரனுடன்]  - நந்தா என் நிலா 
கள்ளிமர காட்டில் கண்ணி வச்சேன் [TL மகாராஜனுடன்] - பாப்பாத்தி 
இந்தப் பாட்டு அப்பப்போ இலங்கை ரேடியோல போட்டாங்களாம்.
குன்றிலாடும் குமரனுக்கு [கிருஷ்ணமூர்த்தியுடன்] - பாலாபிஷேகம் 
ராஜகோபாலா நல்ல தோசை [ராக்கெட் ராமநாதன், தீபன் சக்கரவர்த்தி, சசிரேகாவுடன்] - ஸ்பரிசம்

கல்தானா நீ கடவுள் இல்லையா - பிள்ளையார் 
குளிச்சா குற்றாலம் கும்பிட்டா [SPB யுடன்]- டூயட் 
மாமா மனசில ஒளிஞ்சிருக்குது - கீதா ஒரு செண்பகப்பூ 
செங்காத்தே செங்காத்தே - தாஜ்மஹால் 
ஆடிப்பாரு மங்காத்தா - மே மாதம் 
ஆராரோ ஆரிரரோ - கருத்தம்மா 
பொறந்திருச்சு காலம் பொறந்திருச்சு - சிவப்பதிகாரம் 
சின்ன பொண்ணு ராசாத்தி - சந்தித்த வேளை 

இதை தொடர்ந்து, ரஹ்மான் மியூசிக்ல,  கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, மே மாதம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்கள்ல  பாடியிருக்கார்.  

KV மகாதேவன்,  MSV, குன்னக்குடி வைத்தியநாதன், V குமார், சங்கர் கணேஷ், தேவா, ரஹ்மானின் அப்பா RK  சேகர்,  சூலமங்கலம் ராஜலட்சுமி, வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா இவங்க ம்யூசிக்லல்லாம்  பாடியிருக்கார். தமிழ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டுக்களை பாடினார். 

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஸ்விச்சர்லாந்து, ஃபிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்த்ரேலியா உட்பட்ட வெளிநாடுகளுக்கும் போய்  பாடினார். 

DK பட்டம்மாளை கலாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.  

நாடகம், சினிமா துறைகள்ல சிறந்து விளங்கியதுக்காக, தமிழக அரசால  இவருக்கு கலைமாமணி விருதுகொடுக்கப்பட்டுச்சு. 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை