ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைப் பிரபலங்கள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

best திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sat Dec 16, 2017 9:52 pm

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Mon Dec 18, 2017 1:46 pm

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Mon Dec 18, 2017 1:59 pm

18 .12 .2017

SK

சிவாஜியும், எம்.ஜி.ஆரும் கொடிகட்டி புயலாக அடித்துக்கொண்டிருந்தப்போ, ஜெமினி கணேசன் தென்றலாக வலம் வந்து கொண்டிருந்தாராம். அவரோட சொந்த பேர் ஆர்.கணேசனாம். பி.எஸ்சி. பட்டதாரியாம். அந்தகாலத்து இந்த படிப்பு இப்போ என்னாங்க? சென்னை க்றிஸ்ட்டியன் காலேஜ்ல புரஃபசரா வேல செஞ்சாராம். அந்த சமயத்தில 'மிஸ் மாலினி' ன்னு [1947] ஒரு படம் வந்துச்சாம். அதில ஒரு சின்ன ரோல்ல நடிச்சாராம். அதுக்கப்புறமா 'மனம்போல் மாங்கல்யம்' னு [1953] ஒரு படமாம். அதுலதான் ஹீரோவா அறிமுகமானாராம். கடைசியா 2004 ல 'அடிதடி' ல நடிச்சாராம். சத்தியராஜோட என்ன ஜாலியான படம் தெரியுமா?

ஜெமினி கணேசன் கௌரவ வேஷத்தில நடிச்சிருக்காரான்னு கேட்டீங்கன்னா......................... ஆமாங்க. ‘மர்ம வீரன்’, ‘சதி சுமதி’ & ‘ஜீசஸ்’ இந்த மூணு படங்களிலேயும் கௌரவ வேஷத்தில நடிச்சிருக்காராம். சதி சுமதி மட்டும் தெலுங்குப் படமாம்.

ஜெமினி கணேசன் தமிழில 167, மலையாளத்தில 9, தெலுங்கில 4, இந்தியில 5ன்னு 185 படங்கள்ல நடிச்சிருக்காராம்.


Baby Heerajan
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Fri Dec 22, 2017 4:38 pm

22.12.2017

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் 

இவர் மிகப் பிரபலமானவர்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனாலும் ஒரு ஆச்சரியம். பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் இவர் நடிச்சது மூணே மூணு படம்தானாம்.


ஜெமினி - ஒளிவிளக்கு 
AVM - அன்பே வா 
விஜயா வாஹினி - எங்க வீட்டு பிள்ளை 


மற்ற படங்கள்லாம் சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்களில் நடிச்சதாமே.

இவர்கூட அதிகமா நடிச்சவங்க சரோஜாதேவி [27] & ஜெயலலிதா [28].

சினிமாவில் நடிச்சிட்டு இருந்தாலும், MGR தம் 'MGR நாடக மன்றம்' மூலமா நாடங்களை நடத்திட்டு இருந்தாராம். 'இடிந்த கோயில்', 'இன்பக் கனவு' அவருடைய நாடகங்களாமே. இந்த ரெண்டு நாடகங்களும் நடக்காத ஊரே இல்லியாம்.

"வயசானாகூட ஹீரோவா நடிக்கிறீங்களே" ன்னு ஒரு பேட்டியின்போது பத்திரிகையாளர் கேட்டாராம். அதுக்கு MGR, "20 வயசுள்ள ஒருத்தன் 50 வயசுக்காரனா நடிச்சா அதை ரசிக்கிறீங்கல்ல? அப்படித்தான் இதுவும். 50 வயசான நான் 20 வயசு ஹீரோவா நடிக்கிறதில என்ன தப்பு? நடிப்பை பாருங்க."ன்னு கேட்டாராம். 

தான் நடிக்கும் படங்களின் தலைப்பு மக்களுக்கு ஒரு கருத்தை சொல்ற மாதிரி இருக்கணும்னு MGR கவ்வனமா இருப்பாராம். 'தாய் சொல்லைத்த தட்டாதே', 'திருடாதே' மாதிரி. 


ஜெய்ப்பூர்ல வித்தியாசமான் தொப்பி வித்துச்சாம். அடிமைப்பெண் படத்துக்காக MGR அங்க போயிருந்தபோது, அந்த தொப்பியை பார்த்தாராம். வாங்கித்தான், போட்டுதான் பார்ப்போமேன்னு வாங்கினாராம். போட்டு, நண்பர்கள்ட்ட காட்டியிருக்கார். தொப்பி போட்டா யங்கா தெரீரீங்கன்னு சொல்லியிருக்காங்க. அதுலேயிருந்து தொப்பிய விடாம புடிச்சுகிட்டாராம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Fri Dec 22, 2017 4:44 pm

22.12.2017 

நாடோடி மன்னன் ஓஹோன்னு ஓடினதால, இதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்கிற பேர்ல படம் தொடங்கப்பட்டுச்சாம். ஆனா தொடரல. 

பெண்களுக்கு பிடிக்காத MGR படம்னா அது 'இதயக்கனி' படம்தானாம். 

MGR நடிச்ச 'மலைக்கள்ளன்' படம் ஜனாபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் படம். 

மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட MGR படம் எது தெரியுமா? தேர்த் திருவிழா, வெறும் 16 நாட்களில். 

சாண்டோ சின்னப்ப தேவர் MGR க்கு ரொம்ப பிடிச்ச தயாரிப்பாளர். MGR - ஜானகி கல்யாணத்துக்கு தேவர்தான் சாட்சி கையெழுதது போட்டாராம். 

MGR நடிச்ச படங்களிலேயே MGRக்கு ரொம்ப பிடிச்ச படம் 'பெற்றால்தான் பிள்ளையா'. இதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்காராம். 

முதல்வரான பின்னால MGR க்கு சினிமாவில நடிக்கணும்னு ஆசை வந்துச்சாம். இந்து பற்றி அறிவிப்பும் செஞ்சுட்டாராம். சில காரணங்களால முடியல. அப்படி அவர் கைவிட்ட படம் பேர் 'உன்னை விட மாட்டேன்', இளையராஜா மியூசிக்ல. 


தனது கலையுலக வாரிசுன்னு பாக்கிராயராஜை MGR அறிவிச்சாராம்.

தமிழ் சினிமாவின் சாதனை என்னான்னு MGR ட்ட கேட்டாங்களாம். அதுக்கு அவர் "தமிழ் நடிகர்களை வச்சு ஹிந்தியில் "சந்திரலேகா' படம் எடுத்து, அந்தப் படம் உலக அளவில் பேசப்பட்டதுக்கு காரணமாயிருந்த SS வாசன் செஞ்சதுதான்"னு சொன்னாராம். 

Heezulia   மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Fri Dec 22, 2017 4:45 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Wed Dec 27, 2017 4:52 pm

27.12 .2017 

TS ராகவேந்திரா 

1971ல 'உயிர்' னு ஒரு படம் வந்துச்சு. அந்த படத்தின் டைரக்ட்டர் PR சோமு. இந்தப் படத்துக்கு இசையமைக்க ரெண்டு இசையமைப்பாளர்களை இவர் செலெக்ட் செஞ்சு வச்சிருந்தாராம். ராஜய்யா [இப்போதைய இளையராஜா], ரமணாஸ்ரீதர். என்ன காரணத்தினாலோ ராஜய்யாவுக்கு அந்த சான்ஸ் கிடைக்கல. அதனால 'உயிர்' படம் மூலமா ரமணாஸ்ரீதர் இசையமைப்பாளரான அறிமுகமானார். 

அதுக்கப்புறமா இவருக்கு இசையமைக்க வாய்ப்பு இல்லாம, இசை கச்சேரி நடத்திட்டு இருந்தாராம். கச்சேரிகளில் இவருடைய ஸ்பெஷாலிட்டி என்னான்னா, சிவாஜி, MGR மாதிரி பாவனைகள் செஞ்சு பாடல்களை பாடுவாராம். ஆனா சிவாஜியின் தீவிர ரசிகராம். 

இவர் பேரை விஜயரமணின்னு மாத்திட்டு, யாகசாலை [1980] படத்துக்கு இசையமைச்சு பாடவும் செஞ்சிருக்கார். இதே வருஷத்துல ஒரு முக்கியமான கல்யாணம் நடந்துச்சாம். VIP யா MGR வந்திருந்தாராம். கல்யாண வீட்டில் ஒரு மெல்லிசை கச்சேரி. அதில் பாடிக்கொண்டிருந்தவர் விஜயரமணி. MGR பார்க்கிறார். ரமணி MGR பாட்டுக்களை எடுத்துவிட்றார். அவரை மாதிரியே பாவனைகள், action செஞ்சு பாடுறார். MGR ரசிச்சு பார்க்கிறார். தன் கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசா கொடுத்தாராம். 

அப்புறமா ரமணி, MS விஸ்வநாதன், இளையராஜா இவங்ககிட்ட உதவியாளரா இருந்தாராம். ஒரு சில பாட்டுக்களை பாடினாராம். அப்புறமாத்தான் 1984ல வைதேகி காத்திருந்தாள் படம் மூலமா ராகவேந்திரா பேர்ல நடிகரா அறிமுகமானார். இந்தப் படம்தான் இவரை நடிகரா நிலைநிறுத்தியது. இவர் மற்ற நடிகர்களை போல பாவனைகள் செய்றது பாலசந்தருக்கு பிடிச்சிருந்ததால, அவரை புடிச்சு சிந்து பைரவி 1985 படத்தில இழுத்து போட்டுக்கிட்டாராம். 

இவரைப் பற்றி இன்னொரு விஷயம் தெரியுமா? கல்பனான்னு ஒரு பாடகி. அவங்க அப்பாதான் இந்த ராகவேந்திராவாம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Wed Dec 27, 2017 4:55 pm

27.12.2017

சுரதா :

இவர் உவமை கவிஞராம். இவரின் சொந்தப் பேர் ராஜகோபாலாம். இவருக்கு கவிஞர் பாரதிதாசனை ரொம்ப பிடிக்குமாம். பாரதிதாசனின் சொந்தப் பேர் சுப்பு ரத்தினதாசனாம். இந்தப் பேரை சுருக்கித்தான் தன பேரை சுரதான்னு வச்சுகிட்டாராம். பாரதிதாசனோடு தங்கி, அவரோட கவிதை பணிக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாராம். இப்படித்தான் கவிதை, சிறுகதை, நாடகம்னு எழுத ஆரம்பிச்சாராம். கு.சா. கிருஷ்ணமூர்த்தி அப்போ சினிமாவுக்கு வசனம், பாட்டு எழுதிட்டு இருந்தாராம். இவர்தான் சுரதாவின் கவிதை எழுதும் திறமையை பார்த்து, அவரை சினிமா உலகத்துக்கு கூப்பிட்டு வந்தாராம். 1944 ல ரிலீஸ் ஆன மங்கையர்க்கரசி படத்துக்கு சுரதாதான் வசனம் எழுதினாராம். 100 க்கு மேல சினிமாவுக்கு பாட்டு எழுதினாராம். 

இவருடைய பாடல்கள் சில :

கண்ணில் வந்து மின்னல் போல் – நாடோடி மன்னன்
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா – நீர்க்குமிழி
நானே பனி நிலவு – மேஜர் சந்திரகாந்த்
விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம் – நாணல்
வெண்ணிலா குடை பிடிக்க – அபலை அஞ்சுகம்
காகித ஓடம் கடலலை மீது – மறக்க முடியுமா
வசந்தகாலம் வருமோ – மறக்க முடியுமா
புரியாது புரியாது வாழ்க்கையின் – ஆடிப்பெருக்கு 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Wed Dec 27, 2017 5:42 pm

27.12.2017

TMS பத்தி சில அரிய தகவல்கள் கெடச்சுது. எனக்கு இது புதுசு. உங்களுக்குக் தெரிஞ்ச விஷயமாத்தான் இருக்கும். 

01. 'பலப்பரீட்சை' [1977]ன்னு படமாம். முக்தா சீனிவாசன் படமாம். இந்த ஒரே ஒரு படத்துக்கு மட்டும் TMS இசையமைத்திருக்காராம். 

02. 'உழவன் மகன்' 1987 - மனோஜ் கியான் இசையமைத்தது. ஆபாவாணன் எழுதிய பாடல். "மாலைக்கருக்கலிலே தினம் உனைத் தேடும் தலைவன்" என்கிற பாடலை TMS சசிரேகாவுடன் பாடியிருக்காராம். 

03. 'தாய்நாடு' 1989 - இதுக்கும் மனோஜ் கியான் ம்யூசிக்காம். ஆபாவாணன் 5 பாட்டு எழுதியிருக்காராம். அத்தனை பாடலையும் TMS தான் பாடியிருக்காராம். 

04. ஏ.எம்.ராஜா இசையமைத்த 'வீட்டு மாப்பிள்ளை' [1973] யில் "உலகம் உறங்கும் வேளை" பாட்டும், 'அன்புக்கோர் அண்ணி' [1960] படத்தில "சத்தியமே துணையான போது" பாட்டும் TMS பாடியிருக்காராம். 

05. ஜெயலலிதாவுடன் மூணு பாட்டு பாடியிருக்காராம். 'சூரியகாந்தி' [1973] படத்தில "ஓ மேரி தில்ருபா" பாட்டும், 'வந்தாளே மகராசி' [1973] ல "கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்" பாட்டும், 'அன்பைத்தேடி' [1973] படத்தில "சித்திர மண்டபத்தில்" பாட்டும் பாடியிருக்காராம். 

06. 'பட்டினத்தார்' [1962], 'அருணகிரிநாதர்' [1964] & 'கவிராஜ காளமேகம்' [1978] இந்த மூணு படத்திலேயும் கதாநாயகனாக நடிச்சிருக்காராம். 'தெய்வம்' படத்தில சின்ன ரோல்ல நடிச்சாராம். 

07. 'கல்லும் கனியாகும்' [1968] படத்தை ஏ.எல்.ராகவனோடு சேர்ந்து தயாரிச்சு, கதாநாயகனாக நடிச்சிருக்காராம்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by T.N.Balasubramanian on Wed Dec 27, 2017 6:20 pm

அருமையான அறியாத அரிய தகவல்கள் .தொடருங்கள்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by மூர்த்தி on Wed Dec 27, 2017 11:52 pm

பாடல் கேட்க..............

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

காகித ஓடம் கடலலை மேலே

பதிவுக்கு நன்றி.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Thu Dec 28, 2017 11:41 am

28 .12 .2017 

நன்றி பாலு சார்.

பாட்டுக்களுக்கு நன்றி மூர்த்தி. ஆனா திடீர்னு பாட்டு அனுப்பியிருக்கீங்க.

சரி ............... அது போவட்டும். 

இது எப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க. பாட்டு வரிகள் மேல க்ளிக்கினா பாட்டு பாடுதே. எனக்கு இது கண்டிப்பா தெரிஞ்சாகணும். ஆ ........................மா, சொல்லிபுட்டேன். 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by மூர்த்தி on Thu Dec 28, 2017 10:46 pm

இது ஒன்றும் பெரிய வேலையல்ல. ஒவ்வொரு இணையப் பக்கமும் HTML/CSS/PHP/Java/C++  இப்படி வெவ்வேறு கணினி மொழியைக் கொண்டு எழுதப்படுகிறது.

நீங்கள் கேட்டது ஒரு சிறிய html code ஆகும். அதில், வேண்டிய இணைய முகவரியை (URL) copy and paste முறையில் ஒட்டிக் கொள்ளலாம். பக்கத்தில் உள்ள (தமிழில்) இடத்தில் வேண்டிய தலைப்பை எழுதலாம் அவ்வளவுதான்.

அதற்கான code இது.அதேசமயம்  ஈகரை விதிமுறைகளையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். காணொளி/பாடல்கள்/படங்கள் தவிர வேறொரு இணையத்தள முகவரியை நேரடியாக பதிவிடுவதை ஈகரை அனுமதிப்பதில்லை. அத்துடன் வேறெங்காவது இருந்து பதிவிட்டால் (copy and paste) அதற்கு நன்றி தெரிவிப்பதையும் ஈகரை நாகரீகமாகக் கொண்டுள்ளது. (எழுதிய விதிமுறை சரியென்று நினைகின்றேன்,தவறிருந்தால் அட்மின் திருத்திக் கொள்வார்கள்.)
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Thu Dec 28, 2017 11:53 pm

28 .12 .2017 

நன்றி மூர்த்தி, ரொம்...........ப நன்றி. 

ஆனா பாருங்க, ஒண்.................ணும் புரியல. 
அதேசமயம்  ஈகரை விதிமுறைகளையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். காணொளி/பாடல்கள்/படங்கள் தவிர வேறொரு இணையத்தள முகவரியை நேரடியாக பதிவிடுவதை ஈகரை அனுமதிப்பதில்லை. அத்துடன் வேறெங்காவது இருந்து பதிவிட்டால் (copy and paste) அதற்கு நன்றி தெரிவிப்பதையும் ஈகரை நாகரீகமாகக் கொண்டுள்ளது. 
இது மட்...........................டும்தான் புரிஞ்சுது. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by மூர்த்தி on Fri Dec 29, 2017 12:56 am

இதில் புரிவதற்கு எதுவுமே இல்லையே! ஈகரை விதி முறைகளை  படிக்க சிவப்பு நிறத்தில்
உள்ளதை கிளிக் செய்தால் ஈகரை விதிகள் வரும்.அதுபோல்.....

வெள்ளையாக இருக்கும் படத்தில் உள்ளபடி எழுத  வேண்டியது தான்.அதில் http எனது தொடங்கும் இடத்தில் வேண்டிய முகவரியை (URL ) copy செய்து பேஸ்ட் பண்ணலாம்.தமிழில் உள்ள இடத்தில்
விரும்பிய தலைப்பை எழுதலாம். அவ்வளவுதான்.

உதாரணமாக, திரைக்குப் பின்னால் நடந்தது என்ன? என்ற பதிவுக்கு இங்கிருந்தே செல்ல.இப்படி எழுத  வேண்டும்.

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Fri Dec 29, 2017 1:50 am

29.12.2017 

எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் இருப்பாங்கள். ஆனா சிவாஜிக்கு மட்டும் எல்லா நடிகர்களும் ரசிகர்கள். உண்மைதானே. 

இவரோட உண்மையான பேர் வி.சி.கணேசனாம். சத்ரபதி சிவாஜியா இவர் நடிச்சத பெரியார் பார்த்தாராம். "இனிமே இவர்தான் சிவாஜி" ன்னு அவர் சொல்லிட்டாராம். அந்த பேரே அவருக்கு நிலச்சுருச்சு. 

இவர் முதல்முதலா பெண் வேஷம்தான் போட்டாராமே. உப்பரிகையில நின்னுகிட்டு ராமனை பார்க்கும் சீதை வேஷமாமே. எந்த நாடகமோ? 

பராசக்தியில சிவாஜி ஹீரோவாக நடிச்சார்ல. அவர் ஹீரோவா நடிக்கிறதுக்கு அந்த படத்தோட தயாரிப்பாளர் ப்பி.ஏ.பெருமாள் முடிவு செஞ்சாராம். அது அங்கே யாருக்குமே பிடிக்கலயாம். என்னவெல்லாமோ சொல்லி எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. ஊஹும்........ பெருமாள் அசையலியாம். எதையுமே காதுல வாங்கிக்கலியாம். படம் செம ஹிட். So சிவாஜிய ஹீரோவாக்கின பெருமை பெருமாளுக்கே சேரும். இல்லியா? 

உண்மை, ஒழுங்கு, நேரம் தவறாமல் இருப்பது இதையெல்லாம் சிவாஜி கடைப்பிடிக்கும் முக்கியமானவையாம். ஏழு மணிக்கு ஷூட்டிங்க்னா ஆறேமுக்காலுக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருவாராம். அவர் சினிமா வாழ்க்கையில ஒரு நாள் கூட லேட்டா போனதில்லியாம். 

இவர் கலைஞரை 'மூனா கானா' ன்னும், எம்.ஜி.ஆர 'அண்ணன்' ன்னும், ஜெயலலிதாவ 'அம்மு' ன்னும் தான் கூப்பிடுவாராம்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Fri Dec 29, 2017 2:13 pm

@sk wrote: 'மூனா கானா'

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Thu Jan 04, 2018 12:12 am

03.01.2018

TS பாலையா 

எல்லாவித பாத்திரத்திலேயும் சினிமாவில் நடிச்சவர்.  Character ரோல், காமெடியன், வில்லன், கதாநாயகன்னு எந்த வேஷமானாலும் சரி, அசா................தாரணமா, தனக்கென தனி.................. பாணியில சூப்பரா நடிக்கிறவர். அவருக்கு நிகர் அவர்தான்னு சொல்லலாம்.  36 வருஷமா சினிமாவில தனக்கென தனி இடத்தை புடிச்சிருந்தார். எல்லா முன்னணி நடிகை நடிகர்களுடன் நடிச்சு புகழ் பெற்றவர்.

இவர் நடிக்காத சில படங்களில் சில முன்னணி ஹீரோ நடிக்க மாட்டேன்னு போயிருக்காங்களாம். 


1948 ல வந்த மோகினி படத்தில் இவர் MGR உடன் நடிச்சிருந்தாராம். கதாநாயகன் யார்னு பிரச்சினை வந்துச்சாம். 

"MGRஏ கதாநாயகனா நடிக்கட்டும், நான் வேணும்னா துணை நாயகனா இருக்கேன்"னு 

பாலையா விட்டுக் கொடுத்துட்டாராம். MGR கதாநாயகனா நடிச்சாலும், இந்தப் பட பாட்டு புத்தகத்தில பாலையா பேர்தான் முதல்ல இருந்துச்சாம். 

“உண்மையும் இது இல்லையா ஒருகாலும் மறுக்காதே” 

ன்னு ஒரு பாட்டு மோகினி படத்தில இருக்காம். இந்தப் பாட்டை பாலையா பாடியதாம்.

கற்பகம் [1963] படத்தில கதாநாயகனா நடிக்கிறதுக்கு MGR ட்ட 
KSG பேசினாராம். அந்தப் படத்தில மாமனார் ரோலுக்கு பாலையா நடிச்சா, நான் கதாநாயகனா நடிக்கிறேன்னு சொல்லிட்டாராம். ஆனா SV ரங்காராவைத்தான் மாமனார் ரோலுக்கு KSG நெனச்சு வச்சிருந்தாராம். இதனால்தான் MGR க்கு பதிலா ஜெமினி  கணேசன் நடிச்சிருக்கார்.

இவர் கதாநாயகனாக நடிச்ச படங்கள் சித்ரா 1946,  செண்பகவல்லி 1948, வெறும் பேச்சல்ல 1956. [மாலை மலர்]. மலையாளம், கன்னட படங்களில நடிச்சதோட இல்லாம, சிவாஜி நடிச்ச ஸ்வீகாரம் படத்திற்கு கதை வசனம் எழுதினாராம். ஆனா படம் வெளிவரல.

இவர் நடிச்ச படங்களில் சொந்தக் குரலில் பாடியிருக்காராம். 1954 ல நல்ல காலம்னு படத்தை சொந்தமா தயாரிச்சாராம்.

காதலிக்க நேரமில்லை படத்துக்கு ரீமேக் உரிமையை மனோபாலா ஸ்ரீதர்ட்ட கேட்டாராம்.


ஸ்ரீதர் : கதாநாயகனா யாரை போடபோற ?

மனோபாலா : முத்துராமன், ரவிச்சந்திரன் ரோல்ல நடிக்க ரெண்டு பேரை யோசிச்சு வச்சிருக்கேன்.

ஸ்ரீதர் : யாரு ?

மனோபாலா ரெண்டு ஹீரோக்களின் பேரை சொல்லியிருக்கார்.

ஸ்ரீதர் : அது சரி, இந்த ரெண்டு பேர் இருக்கட்டும். நான் கேக்குறது ஹீரோவா யாரை போட போற ?

மனோபாலாவுக்கு ஒண்ணும் புரியல. முத்துராமனும், ரவிச்சந்தரும் தானே ஹீரோ. இவர் ஏன் இப்படி கேக்குறார்னு குழம்பினார்.

ஸ்ரீதர் : டேய் மடையா, படத்தை பாத்தியா?

மனோபாலா : ஆமா, பார்த்தேனே.

ஸ்ரீதர் : டைட்டில கவனிச்சியா?

மனோபாலா : டைட்டிலா,  பார்த்தேனே.

ஸ்ரீதர் : பார்த்த பின்னால கூடவா யார் ஹீரோன்னு தெரியல ?

மனோபாலா : என்ன சொல்றீங்க ?

ஸ்ரீதர் : டைட்டில்ல மொதல்ல பாலையா பேர்தானே இருக்கு. பின்னே அவர்தானே இந்தப் படத்தின் ஹீரோ ? அவர் அளவுக்கு நடிக்கிறதுக்கு ஆளை தேடு. அப்புறம்தான் ரைட்ஸ் தர்றேன்.

அதுக்கப்புறம் அவர் வரவே இல்லியாம். பாலையா மாதிரி நடிக்கிறதுக்கு ஆள் கிடைக்கல போல. எப்படி கிடைப்பான்?

செந்தமிழ் பேசி நடிச்ச அந்த காலத்தில, பேச்சுத் தமிழ் கொண்டு வந்தது பாலையாதான். சரித்திர நாடகம் ஆனாகூட சாதாரண தமிழ்ல பேசுவாராம்.
[இது உண்மையா]

ஒரு படத்தில MGR நடிக்க வேண்டிய வேஷத்தில பாலையா நடிச்சுட்டாராம். [எந்தப் படம்?] MGRக்கு பாலையா மேல செம கோவம். அப்புறமா MGR 


“பாலையாவுக்கு பதிலா நான் நடிச்சிருந்தா அந்தப் படம் ஓடியிருக்காது” ன்னு 

சொன்னாராம். ‘நான் ஏன் பிறந்தேன்’ சுயசரிதையில் MGR இப்படி எழுதியிருந்தாராம்.

200 படங்களுக்கு மேல நடிச்சிருக்காராம். இவர் நடிச்ச படங்களைப் பத்தி எழுதணும்னா இப்போதைக்கு முடியாது போலியே. அதனால இம்புட்டு போதும்னு நினைக்கிறேன்.

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Thu Jan 04, 2018 12:54 am

03.02.2018

K சாரங்கபாணி
 
நாடகம் & சினிமாவில் காமெடியனான இவர் NSKக்கு இணையான பல்துறை வித்தகர். காமெடி பண்ணும்போது இவர் முகபாவங்களை பார்க்கணுமே, அவ்வளவு திறமையானவர். இவர் வசனங்களை பேசும் பாணி வேற யா..............ருக்கும் வராதாம். காமெடியனா இருந்தாலும் ஒரு சில படங்களில ஹீரோவாவும், சில படங்களில் வில்லனாவும் நடிச்சிருக்காராம். இவருக்கு பாடவும், டான்ஸ் ஆடவும் தெரியுமாம்.
 
1935ல வந்த ‘பக்த ராமதாஸ்’ படத்தின் மூலமா முதல் முதலா தமிழ் சினிமாவுக்கு வந்தாராம். இதன்  ஸ்பெஷாலிட்டி என்னானா, இந்தப் படத்தில பொம்பளங்களே கிடையாதாம். எல்லா.................ருக்கும் சேர்த்து ஆம்பளைங்களே நடிச்சாங்களாம்.
 
1939ல வந்த ‘சாந்தா சக்குபாய்’ படத்தில ஹீரோவா நடிச்சிருந்தாராம். ‘மிளகாய்ப்பொடி’ என்ற கேலியான ஒரு  குறும்படம் எடுத்தாங்களாம். இதில இவர் பெண்ணாய் நடிச்சாராம். 

இன்னொரு கேலியான படத்தில  சாரங்கபாணி 10 ரோல்ல நடிச்சாராம். அப்போல்லாம் இப்படி குறும்படம் எடுத்து, பெரிய படத்தின் நடுவே போடுவாங்களாம். அதே மாதிரி இந்த குறும்படத்தை ஒரு பெரிய படத்தின் இடையே போட்டாங்களாம். 

ரம்பையின் காதல் 1939 படத்தில நகைச்சுவை நடிகரா நடிச்சாராம். 1948லதான், வேதாள உலகம் படத்தின் மூலமா சிறந்த நகைச்சுவை நடிகரா நெலச்சு நின்னாராம். 1949ல வாழ்க்கை படத்தில் இவருடைய காமெடி நடிப்பு புகழ் பெற ஆரம்பிச்சுதாம். இந்தப் படத்தில இவருடைய நகைச்சுவை வசனம் 

“அந்தக் காலத்தில நான் காலேஜ் படிக்கும்பொழுது .................” 

1951ல ராஜாம்பாள் படத்தில துப்பறியும் அதிகாரியா நடிச்சாராம். இந்தப் படத்தில இவருடைய பஞ்ச் 

“மோசம் போனேனே கோபாலா சுடலைமாடன்  தெருவில”

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Thu Jan 04, 2018 1:32 am

03.02.2018 

திருகம்புலியூர் ரங்காராவ் ராமச்சந்திரன்
 
இவர் புகழ் பெற்ற ஒரு சிரிப்பு ஆக்ட்டர். ஆனாலும் இவர் குணசித்திர வேஷங்கள்லேயும் நடிச்சிருக்காராம். சாவித்திரி, வைஜெயந்திமாலா, VN ஜானகி இவங்க கூட ஹீரோவாவும் நடிச்சிருக்காராம். ஆனா நெலச்சு நின்னது காமெடியனா.
 
இவர் முட்டைகண்களை  உருட்டி உருட்டி பேசுவார். ஹாலிவுட்ல இவர மாதிரியே முட்டை கண்களோடு  Eddie Cantorனு      ஒருத்தர் இருந்தாராம். ராமச்சந்திரனை ‘தமிழ்நாட்டின் Eddie Cantor’னு அப்போ சொல்வாங்களாம்.TR ராமச்சந்திரனுக்கு அஞ்ஜாப்புக்கு மேல படிப்பு ஏறல. நாடகத்தில நடிக்க ஆசைன்னு இவர் தன் அப்பாட்ட சொன்னாராம். அப்பாவும் அவரை Boys கம்பெனியில சேர்த்து விட்டுட்டாராம். அதுல சின்ன சின்ன ரோல்ல நடிச்சு ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சுட்டு இருந்தாராம். 

ஆனா அந்த கம்பெனிக்கு சொந்தக்காரார் திடீர்னு ஓடிப்போயிட்டாராம். என்ன செய்றதுன்னு தெரியாம, கம்பெனில இருந்த ஒரு சிலர், இவரையும் சேர்த்துதான், தெருவில ஆடிப் பாடி சம்பாதிச்சாங்களாம். சாப்பிட காசு வேணுமே. 

எப்படியோ, யாரோ ஒருத்தர் அந்த கம்பெனியை வாங்கினாராம். ஆனா அவருக்கு நாடகத்துக்கு தேவையானதை வாங்க பணமில்ல. ராமன், சீதை, முருகன், வள்ளின்னு பல வேஷங்களை போட்டு நடிச்சாங்க. 

எப்படி? கிழிஞ்ச டிரஸ் போட்டுட்டு. சில நேரங்கள்ல எல்லோருமே சட்டை, வேஷ்டி கட்டி நடிச்சாங்களாம். நாடகத்தை பார்க்கிற ஜனங்களுக்கு யார் எந்த வேஷத்தில நடிக்கிறாங்கன்னு தெரியலயாம்.  அதுக்காக நடிக்கிறவங்க “நான் ராமன், நான் சீதா”ன்னு தங்களை அறிமுகப்படுத்திட்டு தான் வசனம் பேச ஆரம்பிச்சாங்களாம். TRR எப்டீல்லாம் கஷ்டப்பட்டிருக்கார், பாவம்.
 
Boys கம்பெனியிலிருந்து வெளியேறிய  SV வெங்கட்ராமன், புதுசா ஒரு நாடக குழுவை ஆரம்பிச்சு, தன்கூட முன்பு இருந்த பாலையா, MR ராதா, TR ராமச்சந்திரன் எல்லோரையும் கூப்ட்டுகிட்டாராம். கொஞ்ச நாள் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சாம். குழு உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வந்து, குழு அம்புட்டுதான். மறுபடியும் சாப்பாட்டுக்கு கஷ்டம். வெங்கட்ராமனோடு சிலர் சேர்ந்துட்டு பெங்களூருக்கு போயிட்டாங்க.
 
அங்கதான் ராமச்சந்திரனுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்க ஆரம்பிச்சுது. 'நந்தகுமார்' படத்துக்காக AVM செட்டியார் பெங்களூருக்கு வந்திருந்தார். எப்படியோ TRR திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில காமெடியனாக சேந்துட்டார், மூணு வேளை  சாப்பாடும் கெடச்சுது.
 
சபாபதி படத்தில அவர் நல்ல நடிகர்னு நிரூபிச்சார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘திவான் பகதூர்’ 1943 படம். இந்தப் படத்தில படிக்காத பணக்காரனா காளி N ரத்தினம் நடிச்சாராம். பெரிய மனுஷங்களை விமர்சிப்பவராக ராமச்சந்திரன் நடிச்சாராம். மீட்டிங்க்ல பேசும்போது இங்கிலீஷ்ல பேசினாராம். அஞ்சாங்கிளாஸ் படிச்சாலும், அவருடைய இங்க்லீஷ் உச்சரிப்பு, பேசும் நடை எல்லாமே அவ்வளவு நல்லா இருந்துச்சாம்.  இங்க்லாந்துல போய் படிச்சுட்டு வந்த TR சுந்தரம், ராமச்சந்திரன் படத்தில பேசிய ஆங்கிலத்தை கேட்டு, அவருக்கு போனஸ் கொடுத்தாராம்.
 
காதல் கல்யாணத்தில நம்பிக்கையுள்ள விசித்திரமான பணக்கார பையனாக 1946 ல வந்த வித்யாபதி படத்தில நடிச்சாராம். தினமும் இந்தப் பையன், பேப்பரில், மணமகன் தேவை பகுதியை பார்ப்பானாம். இந்தப் படத்தில இவருடைய நகைச்சுவை வசனம் “ஊ ... பண்ணி, லவ் பண்ணி, marry பண்ணி”. 

காமெடியனா 1946ல லவங்கி, அஞ்சலிதேவிக்கு ஜோடியாக 1954ல பொன்வயல், 1960ல அடுத்த வீட்டுப் பெண் போன்ற சில படங்கள் அவருக்கு பேர் வாங்கி கொடுத்தவை. வயசானப்புறம், ஹீரோவுக்கு அப்பா போன்ற supporting character ரோல்ல நடிச்சாராம்.   - ஹிந்து பத்திரிகை 
 
Heezulia  
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Thu Jan 04, 2018 10:55 am

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

best திரை பிரபலங்கள்

Post by heezulia on Sat Jan 06, 2018 1:29 am

05.01.2018 


விஜயகுமார் 
[இவர் யார்ன்னு தெரியலேன்னா ஃபோட்டோ அனுப்புறேன்]

ஸ்ரீவள்ளி [1961], ன்னு ஒரு படம், பத்மினி, சிவாஜி நடிச்சது. ராமண்ணா டைரக்ட் செஞ்சார். இந்தப் படத்தில பாலமுருகனாக நடிக்க ராமண்ணா ஆளை 
தேடிட்டிருந்தாராம்.  இந்த சமயத்தில, நாடகங்களில் நடிச்சுட்டு இருந்த  விஜயகுமார்,  ராமண்ணாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கெடச்சுது.  சினிமாவில நடிக்கணும்னே...................  சென்னைக்கு வந்த விஜயகுமாருக்கு அடிச்சுதே  யோகம். 

ஸ்ரீவள்ளி படத்தில பாலமுருகனாக நடிச்ச விஜயகுமார், அடுத்த சான்ஸ் எப்ப வரும்னு காத்துட்டு  இருந்தார். விஜயகுமாருக்கு ஹீரோ சான்ஸ் தர்றதா ராமண்ணா விஜயகுமாரிடம் ப்ராமிஸ் செஞ்சிருந்தாராம். 

அடுத்தாப்பல ராமண்ணா 1974ல 'சொர்க்கத்தில் திருமணம்' படத்தை டைரக்ட் செஞ்சார். லதா ஹீரோயின். விஜயகுமாரை ஹீரோவா போடலாம்னு ராமண்ணா நெனச்சாராம். ஆனா சந்தர்ப்பம் சரியா அமையாம, அது தடைபட்டிருச்சு. ரவிச்சந்திரன் ஹீரோவாயிட்டார். 

AP நாகராஜன் 'கந்தன் கருணை ' படம் எடுத்துட்டு இருந்தார்.  இந்தப்  படத்துக்கு முருகனாக நடிக்க அழகா...................... ன ஒரு வாலிபனை தேடிட்டு இருந்தாராம். விஜயகுமாருக்கு இந்த விஷயம் தெரிஞ்சு, கா ..........க்கா புடிச்சு, குருவி புடிச்சு  நாகராஜனை போய் பார்த்திருக்கார். 

விஜயகுமாரின் உண்மையான பேர் பஞ்சாட்சரம். சினிமாவுக்காக நாகராஜன்ட்ட, தன் பேரை சிவகுமார்னு சொல்லி வச்சிருந்தாராம். 

நாகராஜன்  விஜயகுமாரை ஏ......................... ற இறங்க பார்த்தார். அடுத்தநாள் சாரதா ஸ்டூடியோவுக்கு மேக்கப் டெஸ்ட்டுக்கு  வர, சொல்லி அனுப்பினார். விஜயகுமார் சாரதா ஸ்டூடியோவுக்கு போனாரா? அங்க போனா, சிவாஜி கந்தன் கருணை படத்ல  வீரபாகு வேஷத்துக்கு, மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தார். 

இந்த இடத்தில ஒரு வேடிக்கை. என்னான்னு கேளுங்களேன். கேட்டீங்களா? ஆங்.. சொல்றேன்.  

நாகராஜன் கந்தன் கருணை படத்துக்காக முருகன் வேஷத்துக்கு அழகான வாலிபனை தேடிட்டு இருந்தார்னு சொன்னேன்ல. அந்த முருகன் வேஷத்துக்காக, சிவாஜியின் சிபார்சுல, ஒருத்தர் மேக்கப் போட்டுட்டு இருந்தார். அவர் பேர் என்ன தெரியுமோ? சிவகுமார். ஆமாங்க நம்ம சிந்து பைரவி சிவகுமார்தான். இப்போ விஜயகுமார் @ சிவகுமாரும் மேக்கப் போட வந்திருக்கார். என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே. 

சிவகுமாருக்கு மேக்கப் போட்டு முடிஞ்சதும், விஜயகுமாரை மேக்கப் போட கூப்ட்டாங்க. விஜயகுமாரும் போனார். அவருக்கு அவசர அவசரமாக மேக்கப் போட்டு விட்டுட்டாங்க. மேக்கப் முடிஞ்சு அவர் வெளிய வந்தார். அவரை பாத்தவங்க ஷா............... க்காயிட்டாங்க. ஏன்னா போட்டிருந்த மேக்கப் அப்டி. மேக்கப்மேன்ட்ட கேட்டாக்கா, அவருக்கு டைம் இல்லன்னுட்டார்.  

அந்த அரைகுறை மேக்கப்போடயே நாகராஜன்ட்ட கூட்டிட்டு போயிருக்காங்க. அங்க என்னான்னா, கந்தன் கருணை படத்தில முருகனா நடிக்க சிவகுமாரை செலக்ட் செஞ்சிருந்தாங்க. விஜயகுமாரை ஃபோட்டோ எடுத்துட்டு போகச்சொல்லிட்டாங்க. ஆக, சினிமாவில் நடிக்க மேக்கப் டெஸ்ட் முடிஞ்சிருச்சு. 

கந்தன் கருணை படத்தில சிவகுமார் நடிச்சது தெரிஞ்ச அப்புறமும், விஜயகுமார் கவலைப்படல. சினிமா சான்ஸ் கிடைக்காதுன்னு நெனச்சு சொந்த ஊருக்கு [தஞ்சாவூர்] கெளம்பி போயிட்டாராம். அங்க அவர் அப்பா என்னான்னா, அவருக்கு முத்துக்கண்ணுன்னு ஒரு பொண்ண  கல்யாணம்  செஞ்சு வச்சுட்டார். 

கல்யாணம் ஆன புதுசுல்ல, சினிமாவை மறந்திருந்தார். அந்த ஊர்ல, அவர் friend மு.க.முத்து நடிச்ச 'பிள்ளையோ பிள்ளை ' படத்தை பார்த்த விஜயகுமாருக்கு, மறுபடியும் சினிமாவில நடிக்க ஆசை வந்துருச்சு............. அப்பாட்ட சொல்லியிருக்கா.........ர். அப்பா மொதல்ல ஊஹூம்னு பக்கவாட்டில் தலையசைச்சுட்டார். விஜயகுமார் அவரை சமாதானம் செஞ்சு 

"போய் ஒரு வருஷம் இருந்து  பார்க்கிறேன். சான்ஸ் கெடக்கலேன்னா திரும்பி வந்துர்றேன்"ன்னு சொன்னார். 

இப்போ அப்பா உம் சொல்லி தலையாட்டிட்டார். கையில 20,000/- ரூபாயையும்  கொடுத்தனுப்பினார். விஜயகுமாரும் சென்னைக்கு வந்துட்டார். கஜினி முஹம்மது மாதிரி, சினிமா வாய்ப்பு தேடி தேடி தேடி லோலோ லோலோ...................ன்னு அலஞ்சார். நாடகத்திலதான் சான்ஸ் கெடச்சுது. அப்டீ இப்டீன்னு  பதினோ ...........................ரு  மாசம் ஓடிப்போச்சு. அப்பாட்ட சொன்ன மாதிரி, இன்னும் ஒரு மாசம் பாத்துட்டு, அப்புறமா ஊருக்கு போயிற வேண்டியதுதான்னு முடிவு செஞ்சுட்டார். 

சென்னைல ஒரு பஸ் இஸ்ஸ்டாப்பு. விஜயகுமார் அங்க நிக்கிறார். சைட் அடிக்க இல்லீங்க. பஸ்ஸுக்குத்தான். அந்த வழியா ஒரு டைரடக்கர் போயிட்டு இருந்தார். அவர் விஜயகுமாரை பார்க்கிறார். சினிமா வாய்ப்புக்காக  ஏற்கனவே விஜயகுமார் அவரை போய் பார்த்திருக்கார். தன் படத்தில நடிக்க அவரை தள்ளிட்டு போயிட்டார். என்ன படம்? 

இருங்க வர்றேன், சொல்றேன். அந்த படத்தில் நடிச்ச இன்னொருத்தர் யார் தெரீமோ? கந்தன் கருணைல விஜயகுமார் நடிக்க வேண்டிய முருகன் ரோல்ல  இன்னொருத்தர் நடிச்சாரே, அதே.............................. சிவகுமார்தான். விஜய்குமார் பஞ்சாட்சரம் என்ற தன் பேரை சினிமாவுக்காக சிவகுமார்னு சொல்லி வச்சிருந்தாரே. விஜயகுமாரை இப்போ கூட்டிட்டு வந்த டைரடக்கர், P மாதவன். சினிமாவில ஏற்கனவே ஒரு சிவகுமார் இருக்கிறதால, இவர் பேரை விஜயகுமார்னு மாதவன் மாத்திட்டார். 

'பொண்ணுக்கு தங்க மனசு' , இந்தப் படத்தில்தான் விஜயகுமாரும், சிவகுமாரும் நடிச்சாங்க. 

இப்டீயே ஹீரோவா நடிச்சு, அப்புறமா குணசித்திர நடிகரா நடிச்சு, வில்லனா நடிச்சு, நடிச்சுட்டு இருந்தார். 1988ல அக்னி நட்சத்திரம் படத்தில குணசித்திர வேஷத்தில் நடிச்சதுக்கப்புறம், குணச்சித்திர வேஷம்னாலே "கூப்பிடு விஜயகுமாரை" ன்னு சொல்வாங்களாம். 

'கிழக்கு சீமையிலே"ன்னு ஒரு படம். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க முடிவு செஞ்சார். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு படம். தங்கையாக ராதிகாவை செலக்ட் செஞ்சாச்சு. அண்ணன் ரோலுக்கு, விஜயகுமாரை போடலாம்னு தாணு நெனச்சாராம். ஆனா விஜயகுமாரை வச்சு இயக்கமாட்டேன்னு பாரதிராஜா பிடிவாதமா  சொல்லிட்டாராம். 

"இதென்னடா வம்பா போச்சு" ன்னு தாணுவும், விஜயகுமாரும் நெனச்சங்களாம். மத்தவங்களுக்கும் திகைப்பு. நல்ல நடிகரை வச்சு இயக்கமாட்டேன்னு எதுக்கு சொல்றார்னு, எல்லாரும் அதிர்ந்து போனாங்களாம். கேட்டதுக்கு பாரதிராஜா 
சொன்னாரா .......... ம், 

'16 வயதினிலே ' படத்தின் ப்ரீவியூவுக்கு வரச்சொல்லி கூப்பிட்டேன். அவர் வரல. என்னை மதிக்காதவரை வச்சு நான் படம் எடுக்க மாட்டேன்" ன்னு சொல்லிட்டாராம். அப்புறமா...................... விஜயகுமார், பாரதிராஜா வீட்டுக்கு போயி........, சமாதானம் செஞ்சு..........., சமாதானமாயிட்டாங்கன்னு வைங்க. 

கிழக்கு சீமையிலே படம் சக்க போடு போட்டுச்சு. அதுக்கப்புறம் பாரதிராஜாவின் 'அந்திமந்தாரை ' படத்தில நடிச்சார், விஜயகுமார். இந்தப் படத்துக்கு மத்திய அரசின் விருதும், விஜயகுமாருக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும்  கெடச்சுதாம். சிறந்த நடிகருக்கான மத்திய அரசின்  விருது விஜயகுமாருக்கு கிடைக்காததுக்கு பாரதிராஜா வருத்தப்பட்டாராம். 

இப்போ விஜயகுமார் TV சீரியல்ல நடிச்சிட்டிருக்கார்.

ɒilυzɘɘH
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Sat Jan 06, 2018 1:24 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Mon Jan 08, 2018 5:02 pm

08.01.2018

பிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு ராஜீவலோச்சனா 

  


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி 

என்ன இது, மொழிகள் பேரையா சொல்லிட்டு இருக்கீங்கன்னு கேக்குறீங்களா? இத்தனை படங்களிலேயும் நடிச்சிருக்கார். முன்னணி நட்சத்திரங்களில் ஒருத்தர். 1950 & 1960 களில் தன் நடிப்பு, டான்ஸால சினிமாவில புகழ் பெற்றார். 

Madras and Southern Mahratta Railway ல இவருடைய அப்பாவுக்கு  GM க்கு PA வா ப்ரமோஷன் கெடச்சதனால,  விஜயவாடாவிலிருந்து குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் வந்து குடியேறினார். அங்கேயே படிச்சார். ஸ்கூல்ல சேர்க்க போனப்போ, அம்புட்டு பெரிய பேரை எப்படி ஸ்கூல் ரெஜிஸ்டர்ல எழுதுவாங்க. அதனால சின்...........................ன  பேரா 'ராஜசுலோச்சனா'ன்னு எழுதிட்டாங்க. இந்த பேர்தான் இவருக்கு  நிலைச்சு நின்னுருச்சு. 

திருவல்லிக்கேணியில 'சரஸ்வதி கான நிலையம் ' னு ஒரு ஸ்கூல். அங்கதான் இந்த ராஜசுலோச்சனா பரதநாட்டியம் கத்துக்கிட்டாராம். அப்புறமா குச்சுப்புடி, கதக், கதகளி எல்லாம் கத்துக்கிட்டார். 

அப்போல்லாம், நடுத்தர குடும்பத்தில் உள்ளவங்க, அவங்க பிள்ளைங்கள, மேடையில் ஏற்ற மாட்டாங்களாம். இருந்தாலும் இவர் இவரது டான்ஸை அரங்கேற்றம் செஞ்சாராம். இதுக்கு தல தாங்குறதுக்கு TL வெங்கடராம அய்யர்னு ஒருத்தர் வந்திருந்தாராம். இவர் சாதாரணப்பட்டவர் இல்லிங்க. பிரபல இசை அறிஞர், வக்கீலு, சென்னை உயர்நீதிமன்றம் &  இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஜட்ஜு . அப்பா.................... டா. 

அப்டீ இப்டீன்னு, நம்ம ரா...................ஜசுலோச்சனாவை, சினிமா "வா ..... வா ..."ன்னு கூப்டுச்சு. பிரபல கன்னட தயாரிப்பாளர் குப்பி வீரண்ணா. இவர்தான் நம்மாளுக்கு  'குணசாகரி [1953]' கன்னட படத்தில முதல் சான்ஸ் கொடுத்தாரு. இதன் காரணமாக AVM தயாரிச்ச  'சத்தியசோதனை ' படத்தின் மூலமா தமிழில நொழஞ்சுட்டா...................ர். AVM நிறுவனத்தின் கம்பெனி நடிகையாம். 

1955ல பெண்ணரசி படத்தில அரண்மனை நர்த்தகியாக நடிச்சிருப்பார். இதுல அவர் ஆடிய டான்ஸ்ல பிரபலமாயிட்டார். அதுக்கப்புறமா, ரங்கோன் ராதா, அம்பிகாபதி, அரசிளங்குமரி, ராஜாராணி, நல்லவன் வாழ்வான், சேரன் செங்குட்டுவன், குலேபகாவலி, அப்டீ.......................... போவுது,  போன்ற 60 தமிழ் படங்கள்லயும், மொத்தத்துல 250 படங்களுக்கு மேலும் நடிச்சிருந்தாராம். 

பராசக்தி படத்தில இவர்தான் ஹீரோயினா நடிக்க வேண்டியதாம். அந்த சமயத்தில அவர் கர்ப்பமாக இருந்ததால, தெலுங்கு நடிகை சிவரஞ்சனி நடிச்சுட்டாராம். 

அவருக்கு அந்த சமயத்தில பேர் வாங்கி கொடுத்த படம் 'தை  பிறந்தால் வழி பிறக்கும்'.  நடிப்பு ஜாம்பவான்கள் MGR, சிவாஜி, NTR, நாகேஸ்வரராவ், ராஜ்குமார், SSR, 
AP நாகராஜன், MN நம்பியார் இவங்க கூடல்லாம்  நடிச்சவர்.

பிறகு அம்மா வேஷத்தில் நடிக்க ஆரம்பிச்சார்.  கடைசியா 1992ல TR ன் சிம்பு நடிச்ச 'எங்க வீட்டு வேலன்' படத்தில  நடிச்சிருந்தாராம். 

தெலுங்கு டைரக்டர் புல்லையாவின் மகன் ராவை காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கினாரு. 25 வருஷத்துக்கு முன்னாலயே அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆயிட்டாராம். அங்கேயும் டான்ஸ் ஸ்கூல்களை நடத்திட்டு இருந்தாராம்.  மடிப்பாக்கத்தில ஒரு வீடு கட்டினாராம். அமெரிக்காவில இருந்து இந்தியா வந்தா அங்கதான் தங்குவாராம்.  

சென்னைல 'புஷ்பாஞ்சலி ந்ருத்ய கலா கேந்த்ரம்' னு ஒரு டான்ஸ் ஸ்கூலை 1961ல ஆரம்பிச்சு, 1986ல வெள்ளிவிழா கொண்டாடினாராம். இவருக்கு ஒரே...................... ஒரு வருத்தம் இருந்துச்சாம், காலேஜ் படிக்கலேன்னு. 
- தினமலர், ஹிந்து 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Mon Jan 08, 2018 5:13 pm

@sk wrote:ஒரு வருத்தம் இருந்துச்சாம், காலேஜ் படிக்கலேன்னு.

இப்போ படிக்கலாமே
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum