ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள் .

View previous topic View next topic Go down

இன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள் .

Post by sugumaran on Fri Sep 29, 2017 1:20 pm


இன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள் .
சிவனுக்கு ஒரு ராத்திரிஎன்றால் சக்திகளுக்கோ ஒன்பது ராத்திரிகள்
நவராத்திரி என்பது யோகத்தைக் குறிக்கும் தசமகா வித்தியாவுக்கு உகந்த நாட்கள் .இப்போது சடங்காக மாறிவிட்டது
ஒன்பது சக்திகளையும் மும்மூர்த்திகளின் தேவியர் மூவருக்கும் மூன்று நாட்களாகப் பிறிதெடுத்த தரப்பட்டுள்ளது .
வீரத்தை குறிக்கவே பார்வதி தேவி துர்க்கையாக வடிவெடுத்தார் , இலக்குமி செல்வத்திற்கும் , சரஸ்வதி எனும் காலை மகள் கல்விக்கும் உரியவர் ஆனார்கள் .
சரஸ்வதிக்கு உகந்த நாளாக இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என கொண்டாடப்படுகிறது .
சரஸ்வதிக்கு கோயில் கூத்தனூரில் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே .

ஆனால் திருச்சியிலிருந்து சுமார் 5கி.மீ தொலைவில் பிச்சாண்டவர் கோயில் எனும் அழகிய சிற்றுõரில் சரஸ்வதியின் கோவிலும் வழிபாடும் நடைபெறுகிறது என்பது பலர் அறியாதது .
அது கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது உத்தமர் கோயில். கதம்பவனம், கரம்பனுõர்,திருக்கரம்பனுõர், ஆதிமாபுரம்,பிரம்மபுரி,நீப÷க்ஷத்திரம், நீபவனம்,திருக்கரம்பந்துறை ஆகிய பண்டைய பெயர்களுடன் தற்போது பிச்சாண்டார் கோயில் என்று அழைக்கப்படுகிறது .
புராண வரலாற்றின் படி பிரம்மஹத்தி தோஷத்தில் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான் பிச்சாண்டார் வடிவத்தில் வந்து அவரது
தோஷம் நீங்கப் பெற்றதால் பிச்சாண்டார் கோயில் என்ற பெயர் வந்தது.
இத்திருக்கோயில் படைப்புத்தொழில் புரியும் ஸ்ரீ பிரம்மா தனிசந்நிதியிலும் குருபகவான் ஸ்தானத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளிவருகிறார். அவரது இடப்புறத்தில் கல்விக்கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி அமர்ந்திருந்து கலை,ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்குகிறார்.
வடகிழக்கு மூலையில் விஷ்ணு குருவாகிய வரதராஜப்பெருமாளும், பிரம்ம குருவாகிய பிரம்மதேவரும் கல்விக்கடவுள் ஞானசரஸ்வதியும் தனித்தனி சன்னதிகளில் அருள்புரிந்து வருகிறார்கள்.

சிவன் சிலகாரணங்களால் ஐந்து தலை கொண்ட , பிரம்மாவின் ஒருதலையை மட்டும் கிள்ளி எடுத்து
நான்முகன் ஆக்கினார் . இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு ,பிரம்மாவின் கபால்மும் (மண்டைஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபால் த்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபால்மே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபால்ம் மட்டும் நிறையவே இல்லை. பசியில வாடிய சிவன் அதனை படச்சைபாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள் சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் பூரணவல்லித்தாயார் என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி அளித்தார்.

உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.
சோழர் காலத்து "சரஸ்வதி பண்டாரம்" என விளங்கிய நூலகம்தொடர்ந்து தஞ்சை நாயகர் காலத்தும் தொடர்ந்து விளங்கி மராட்டியர் காலத்தில் விரிந்து பெருகியது.இதனை பாதுகாத்து வளர்த்த பெருமை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசிக்கு உண்டு (1798-1832).
இவ்வாறு சரஸ்வதி தேவி சோழர் காலம் முதல் தமிழர்களுக்கு அறிமுகம் ஆனவராகவே விளங்குகிறார் .


ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார்.
இன்றும் கூட பல அரிய ஆகம மந்திர சாஸ்திர நூல்கள் அங்கேதான் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது .
ராமானுஜர் உடன் அவரது அந்யந்த சீடனான கூரத்தாழ்வான். அங்கே, சரஸ்வதி பண்டாரம் என்ற அமைப்பில் இருக்கும் ‘விருத்தி கிரந்தத்தை’ ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யம் எழுத அவர் முற்பட்டார். அந்த கிரந்தத்தைப் பெற்ற அவர் அதனை வெகு குறைந்த காலமே தாம் வைத்திருக்க முடியும் என்ற நடைமுறை உண்மை காரணமாக, ஆழ்ந்த சிரத்தையுடன் பணியில் இறங்கினார். ஆனால், அவரது முயற்சி கண்டு பொறாமை கொண்ட அப்பகுதி சமயவாதிகள் சிலர் அந்த கிரந்தத்தை குறிப்பிக்க சில நாட்கள் கூட வைத்துக்கொள்ள முடியாதபடி அதனை அமைப்பினரால் திரும்பப் பெற வைத்துவிட்டார்கள்.

இதனால் பெரிதும் வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வானிடம் தமது கவலையைத் தெரிவித்தார். ஆனால், உத்தம சீடனான ஆழ்வானோ அந்த கிரந்தத்தை தாம் ஒரே நாளில் இரவு முழுவதும் கண் விழித்து முற்றிலுமாகப் படித்து விட்டதாகவும், அதனைத் தன்னால் அப்போதே அவருக்குத் தெரிவிக்க முடியும் என்றும், அல்லது ஆசார்யன் விருப்பப்பட்டால் இரண்டாற்றுக்கு நடுவில் வந்தும் சொல்ல முடியும் என்றும் தாழ்மையாக பதிலளித்தார். (இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீரங்கம்). காஷ்மீரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும்வரை தன்னால் அந்த கிரந்தம் முழுவதையும் நினைவில் கொள்ள முடியும் என்ற நினைவாற்றல் நம்பிக்கை, ஆழ்வானுக்கு! ராமானுஜருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடனே ஆழ்வானின் உதவியுடன் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்தார்.

இதையறிந்த சரஸ்வதி மாதா, ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான சிறிய அளவிலான லஷ்மி ஹயக்ரிவர் விக்ரஹ மூர்த்தியை அவருக்குப் பரிசாகவும் அளித்தாராம்.
இன்னமும் கம்பருக்கு அருளிய சரஸ்வதி பற்றியும்
குமரகுருபரர் சகலகலா வல்லி மாலை பாடிய பின் சரஸ்வதியின் அருள் பெற்று விரைவில் இந்துஸ்தானியும் கற்றநிகழ்வு ,
கவி காளிதாசர் ,காளமேகம் போன்று சரஸ்வதி அருள் பெற்று சாதனை படைத்தவர்கள்பலருண்டு .கட்டுரை நீளும் ஆகையால் அவைகளை விவரிக்கவில்லை .
அண்ணாமலை சுகுமாரன்
29/9/17
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 326
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum