ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?

View previous topic View next topic Go down

நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?

Post by சிவா on Tue Oct 23, 2012 12:23 pm
தீய சக்திகளின் மீதான தர்மநெறிகளின் வெற்றியை குறிக்கும் வகையில், ராவணன், கம்சன் மற்றும் மகிஷாசுரன் ஆகிய தீயசக்திகளின் ஆட்சியில் தர்மமும், புனிதமும் அவலமுற்ற போதெல்லாம் அவற்றை காத்து, தர்மத்தின் மேன்மையை சக்தி நிலை நாட்டுவதாக ஐதீகம்.

துர்கா, மகாகாளி, மகிஷாசுரமர்த்தினி போன்ற பல பெயர்களால் சக்தி போற்றப்படுகிறாள்.

மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரன் தலைமையில் அதர்ம சக்திகளின் தாக்குதலை எதிர்க்க சக்தி இழந்த நிலையில் தாங்கள் இருப்பதை தேவர்கள் உணர்ந்தனர். தங்களை பாதுகாக்குமாறு இறைவனிடம் சென்று வேண்டினர். அவர்களது தெய்வசக்திகளின் ஒரு பகுதியைத் திரட்டி, ஒரு புதிய தேவதையை உருவாக்குமாறு இறைவனிடம் வேண்டினர்.

அதன்பயனாக 33 கோடி தேவர்களை ஒன்றிணைந்த வல்லமை மிக்கவளாக மகிஷாசுரமர்த்தினி உருவானாள். அதர்மசக்திகளை அழிக்க போர்தொடுத்த போது, மகிஷாசுரமர்த்தினிக்கு அனைத்து கடவுளும் அவரவர்களுடைய ஆயுதங்களை கொடுத்தனர். அனைத்துவித ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டு மகிஷாசுரனை வீழ்த்திய நாள் நவராத்திரி நாளாகும்.

கலைமகளை வழிபடுகிறோம்

ஆயுதத்தின் உண்மையான பலனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உயிர்உள்ள பொருட்கள் மற்றும், உயிர் இல்லாத பொருட்கள் அனைத்திலும் இறைதன்மை உறைந்துள்ளது. வாழ்க்கையில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை வணங்குவதற்காகவும், தொழில்கள் சிறப்பாக நடந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வரும் காலங்களில் தொழில் சிறப்பாக நடப்பதற்காகவும் வேண்டி ஆயுதப்பூஜை கொண்டாடப்படுகிறது.

நம்மிடமுள்ள மாயை திரையை ஒரு வித கருவியால் (பாணத்தால்) நீக்கி உள்ளே கடவுளை, ஆன்ம தரிசனம் செய்வதே அதனுடைய தத்துவமாகும். ஆணவம், கன்மம், மாயை போக்க இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தியை நவராத்திரியில் கடந்த ஒன்பது நாளும் வழிபட்டோம். மகிஷாசுரன் அழிந்தது போல் நம் மனதின் அறியாமையும் அகன்று அறிவை (ஞானத்தை) தர ஒன்பதாவது நாளான இன்று கலைமகளை வழிபடுகிறோம்.

ஆயுதங்களுக்கு பூஜை

வடமாநிலங்களில் துர்கா பூஜை என்றும், கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா எனவும், தென்மாநிலங்களில் சரஸ்வதி பூஜை என்றும் வழிபடுகிறோம். சரஸ்வதி தேவி புத்தக வடிவில் இருப்பதால் சரஸ்வதிக்கு அறிகுறியாகப் புத்தகங்களையும், ஏடுகளையும் வைத்து வழிபடுவது போல, உடல் வலிமைக்கும், வீரத்திற்கும் திருவுருவமாக விளங்கும் துர்க்கையம்மனின் ஸ்தூல அறிகுறியாக ஆயுதங்களையும் வைத்து வழிபடுகிறோம்.

இந்த கலாச்சாரத்தினாலேயே படிக்கிறவர்கள் தங்கள் புத்தகங்களையும், கணக்கு எழுதுபவர்கள் கணக்கு புத்தகங்களையும், இரும்பு, மண், மரவேலை செய்வோர், தையல்காரர்கள், கட்டிடவேலை செய்பவர்கள், தட்டெழுத்தர்கள், இசைக்கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் தொழில்நுட்ப வேலை செய்யும் எல்லோரும் தங்கள் பயன்படுத்தும் கருவிகளையும் ஆயுதங்களையும் இன்று பூஜையில் வைத்து பூஜிக்கின்றனர்.

உயர்ந்த ஆன்மிக நிலை

தொழிற்சாலைகளில் உள்ள பெரிய இயந்திரங்களையும், வாகனங்களையும் அலங்கரித்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த எளிய விழாவின் நோக்கம் "வேலையை வழிபடு'' என்ற கோட்பாட்டை உணர்த்துவதாகும். இதனை முறையாக செய்வதன் மூலம் கலைமகளின் அருள் கிடைப்பதுடன், கல்வி, கலைகளில் தேர்ச்சி, அறிவு, நினைவாற்றல் போன்றவை கிடைக்கிறது.

கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்களாகும் என்பதை இந்த விழா மூலம் நாம் உணர்கிறோம். "கடவுளை பூஜிப்பது போன்ற உணர்வுடன் செய்யும் எந்த வேலையும், மிக உயர்ந்த ஆன்மிக நிலைக்கு அழைத்துச்செல்லும்'' என ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். என்பதால் தொழிலையும், தொழிலாளர்களையும் போற்றும் ஆயுத பூஜை செய்வதன் மூலம் தொழிலில் சிறந்து மிக உன்னதமான உயர்ந்த ஆன்மிக நிலையை அனைவரும் அடையலாம் என்பது நம்பிக்கையாகும்.

விஜயதசமி விழா

நவராத்திரியின் 10-வது நாள் விஜயதசமி வெற்றி நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு ராமன் ராவணனை அழித்து வெற்றியுடன் அயோத்திக்கு திரும்பிய நாள் விஜயதசமி நாளாகும்.

இந்த நாளில் எந்த செயல் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் தான் முடியும் என்பது ஆன்றோர்களின் வாக்காக உள்ளது. இதனால் விஜயதசமி அன்று கல்வியை தொடங்கும் 3 வயது குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்து சென்று ஏடு தொடங்கப்படுகிறது. சிலர் புதிய தொழில்களையும் தொடங்குகின்றனர்.

குழந்தைகள் சகலகலைகளிலும் கற்று சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதற்காக விஜயதசமியன்று ஏடு தொடங்குவது வழக்கமாக உள்ளது.

குழந்தைகளுக்கு ஏடு தொடங்குவதற்கு கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, சுவாமி முன்னிலையில் தாத்தா, பாட்டி ஆகியோரின் மடியில் குழந்தையை அமர வைத்து, எதிரில் தட்டில் அரிசியை பரப்பி வைத்து, குழந்தையின் கையை பிடித்து அரிசியில் ``அ'', ``ஓம்'', ``அம்மா'', ``அப்பா'' என்று எழுத கற்றுத்தரப்படுகிறது. இதனையே ஏடு தொடங்குதல் என்று கூறுகின்றனர். அதுவும் விஜயதசமி அன்று தொடங்கினால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படும் நற்செயல்கள், அனைத்து வழிகளிலும் வெற்றி அடைகிறது. சரஸ்வதி பூஜையில் பூஜித்த புத்தகங்களை விஜயதசமியான நாளை காலையில் படித்தால் படிப்பு மேன்மேலும் வளரும்.

கோவில்களில் அம்புபோடும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. துர்க்கை அம்மனின் அம்சமாக விளங்கும் வன்னிமரத்தை வலம் வந்து பெண்கள் நவராத்திரி பூஜையை நிறைவு செய்வது வழக்கம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?

Post by பிளேடு பக்கிரி on Tue Oct 23, 2012 5:25 pm

நன்றி தல.. வாழ்த்துக்கள் உங்களுக்கும்
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum