ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

View previous topic View next topic Go down

கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat Aug 22, 2015 1:27 amபாடல் 20 ... கோழிக்கொடியன்

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே.

பாடல் 22 ... மொய் தார் அணி

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

பாடல் 23 ... தெய்வத் திருமலை

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.

ஏன் வேதங்கள் முருகனை கொழிக்கொடியோன் என்கின்றன . கோழியை அவர் ஏன் கொடியாக வைத்திருக்கவேண்டும் ?

உடனே புராணக்கதையை சொல்லிவிடுவார்கள் . சூரன் என்ற கொடிய அரக்கனை முருகன் அழித்தார் . உடனே அவன் என்னை உங்கள் கொடியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியதால் அவனை சேவலாக மாற்றி கொடியாக வைத்துக்கொண்டார்

புராணங்கள் எதிலும் உண்மையில்லாமல் இல்லை ; ஆனால் கோளாறு எதில் வருகிறது என்றால் புராணங்கள் அனைத்தும் அப்படியே உண்மை என நம்பிக்கொள்வதுதான்

சேவல் என்ன செய்யும் ? .சேவல் கூவி உலகத்தை தூக்கத்தில் இருந்து விழிப்படைய செய்யும் . அதுபோல மனித ஆத்மாக்களை விழிப்படைய செய்து உலக மாயைகள் ; பந்தங்கள் ; இருளிலிருந்து விடுவிக்கும் ஞான சற்குரு முருகனே . இன்று உலகில் எத்தனையோ வகையான குருமார்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் முருகனின் வியாபகங்களே. ஆகவேதான் அவர் தனது பணியான ஞான உபதேசம் என்பதை கோழிக்கொடியாக வைத்திருக்கிறார் .

அதுசரி . ஆனால் இந்த துஷ்ட்டன் கொடுமைக்காரன் அரக்கன் சூரன் எதற்காக சேவலானான் ?

அவனா ஞானம் அறிவிக்கிறான் ? இந்த மகான்கள் ஞானிகள் அனைவரும் அரக்கர்களா ? அது ஒருவகையில் உண்மைதான் . யார் இன்றைக்கு ஆன்மீக நாட்டமுள்ளவர்கலாக மாறி ஞானம் பயிலத்தொடங்குகிரார்கள் ?

மிகுந்த பாவத்தில் விழுந்து உலக மாயைகளை அனுபவித்து கெட்டழிந்து துன்பத்திற்கு மேல் துன்பத்தை வினையாக அறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்களோ ; அவர்களே கோவில் குளம் என்று அலைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஞானமடைகிரார்கள் .

இன்னும் கொஞ்சம் பாவம் செய்துகொள்ளலாம் ; பாவம் முற்றவில்லை என்பதுவரை மனிதன் பாவம்தான் செய்வானே ஒழிய அவன் இறைவனை நோக்கி திரும்புவதில்லை . பாவங்கள் முற்றி அடிஉதை மட்டுமே அனுபவிக்கும் பிறவி எடுத்த பிறகுதான் கொடுமையே கொடுமையே என்று மனிதன் கோவிலுக்கு போவான்

அப்படி கொஞ்சம் ஆன்மீகம் பயின்றவுடனேயே ; என்னமோ பெரிய புண்ணிய ஆத்மா போலும் சாட்சாத் தெய்வமே பிறவியெடுத்து வந்துவிட்டதுபோலும் தன்னை கருதிக்கொள்ளவும் தொடங்குவான் .

ஒரு ஆத்மா எவ்வளவு பாவங்களை உணர்ந்து கடந்து தெளிந்து விட்டதோ அவ்வளவு அந்த ஆத்மா ஞானமுள்ளதாகவும் இறைவனின் ஆசி உள்ளதாகவும் இருப்பதால் அந்த நபர் குருத்துவமும் உள்ளவராக இருப்பார் .

பெரிய மகான்கள் கூட இன்னும் எவ்வளவு பாவத்தை கடராமல் செத்துப்போனார்கள் ; அடுத்த பிறவியில் என்னென்ன பாடுபடப்போகிறார்கள் என்பது தெரியாது . அவர் என்ன பிறவி எடுத்தார் என்பதே தெரியாமல் செத்துப்போன அவரை ஒரு கூட்டம் ஆகா ஓகோ என துதி பாடிக்கொண்டு திரியும்

யார் முற்றிய பாவியோ அவன் திருந்தி அடைந்த அனுபவத்தை ஞானமாக உபதேசிப்பான் ; ஆனாலும் அவன் முழுமையடையும் வரை கோழி மட்டுமே

இந்த கோழிகளை அவரவர் தரம் தகுதியுடையோறுக்கு பயன்படுத்துபவர் முருகனே . அவரே ஞான சற்குரு

அருணகிரியார் என்ன சொல்கிறார் ; சாமிகளா நீங்கள் உலக வாழ்வை தாராளமாக நன்கு அனுபவியுங்கள் ஆனால் கொஞ்சம் உங்களுக்கு வரும் உபதேசங்களையும் கற்று தேருகிறவர்களாக இருங்கள் . சற்குருவுக்கும் உபகுருக்களுக்கும் அடிபணியுங்கள் இல்லாவிட்டால் பல பிறவிகளாக நீங்கள் சேர்த்துவைத்துள்ள வலிய வினைகள் யுக முடிவில் வரும் ஊழி காலத்து பேரழிவு சாப்பிட போதுமானதல்ல . நீங்கள் பணம் பணம் என்று பணத்தை சேர்த்து வைக்கிறீர்களே . அது நீங்கள் சாகும்போது உங்கள் கூடவே அடுத்த பிறவிக்கு வருவதில்லையே . ஆனால் உங்கள் பாவமூட்டைகள் உங்கள் ஆத்மாவோடு கூட வந்துகொண்டுதான் உள்ளன . ஆகவே ஞான சற்குருவை சார்ந்து ஞானமடைய முயலுங்கள் .

உடனே நாங்கள் அவ்வளவு புண்ணியம் செய்யவில்லையே ; பல வகையான தவறுக்குள் அல்லவா வாழ்ந்துகொண்டுள்ளோம் ; நாங்கள் எப்படி அந்த முருகனை சார்ந்துகொள்வது ?

அருணகிரியார் சொல்கிறார் ; அந்த முருகன் எப்படிப்பட்டவன் என்றால் குரத்தியை தேடி வருகிறவன் குற்றம் குறை இல்லாத மனிதர்களே இருக்கமுடியாது . ஆனால் அந்த குறைகளை உணர்ந்து அவற்றை கடர வேண்டும் என்ற பக்குவத்தை அடையாமல் முழுமை அடைய முடியாது குற்றம் குறைகளை கடந்து முழுமையடைந்தவர்கள் மட்டுமே தேவராக மாறி பரலோக பிரஜைகளாக அங்கு செல்ல முடியும் பரலோகத்தில் குடும்பமோ பிள்ளை பெற்றுக்கொள்வதோ கிடையாது . பூமியிலிருந்து தேரிய ஆத்மாக்கள் சென்றால்தான் உண்டு

ஆகவேதான் தன்னை உணரத்தொடங்கிய அளவு மொய்தார் அணிகுழல் வள்ளி என மெய்யடியார்களை அழைக்கிறார் அருணையார் . முத்தமிழால் ஒருவரை நாம் வைதால் அம்மொழி வையப்பட்டவரின் பாவங்களை குத்தி கிளறி புரிய வைத்து அவர்கள் திருந்தி வாழ செய்துவிடுமாம் . பெரிய யானை போன்றவனும் கைகள் இருபதும் உடைய ராவணனின் தலைகள் பத்தும் கத்தரித்து விழும்படியாக அம்பெய்த ராமர் வேறு யாரோ அல்ல முருகனே என்கிறார் அருணையார் . சமரச வேதாந்திகள் மட்டுமே ஆதியிலிருந்து ஒரு உண்மையை உணர்ந்தும் சொல்லியும் வருகிறார்கள் . முருகன் என்பவன் மாலோனின் மருகன் அதாவது தேவர் என்ற நிலையை மருக்கி பூமியில் மனிதனாக வரும் பெருமாளின் அவதாரங்களே முருகன் . அவன் பூமியில் மனிதனாக வருவதால் முதல் மனிதனான சிவனுக்கு மகன் அதாவது சிவபாலன் . அருணையார் சொல்கிறார் முருகன் என்பவன் மாலோனின் மருகன் மன்றாடி மைந்தன் .அதாவது ராமர் ; கிரிஷ்ணர் ; இயேசு ஆகியோரே முருகன்

ஆரம்ப நாட்களில் சைவர்களும் வைணவர்களும் சண்டையிட்டு ரத்தக்களறி உண்டாக்கிய காலம் உண்டு . அப்போது வந்த சமரச வேதாந்திகளே இரண்டையும் இணைத்த முருகன் என்ற வழிபாட்டை முன்வைத்தார்கள் . முருகனை ஹரிஹரா ஹரிஹரா என்று கோசம் போட்டு ஊர்சுற்றி வருவார்கள் . இந்த ஹரிஹரா தான் காலப்போக்கில் அரோஹரா அரோஹரா என்று ஆகிவிட்டது ஐயப்பனும் சமரச வேதத்தின் வெளிப்பாடே ஆகும் .

அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் முருகா என ஆரம்பித்து பெருமாளே பெருமாளே என்றுதான் முடியும் .

தெய்வத்திருமலை திருச்செங்கோடு என்கிறார் அருணையார் . அவர் ஊரூருக்கு ஏவப்பட்ட ஸ்தலங்களுக்கேல்லாம் ஷேத்ராடனம் செய்து பாடியவர் . அவர் திருச்செங்கோடு வரும்போது இரண்டு ஆதிஷேசனின் மத்தியில் இம்மலை அவருக்கு தெரிந்ததாம் . ஆதிஷேசனின் இரண்டு வியாபகங்களே செங்கோடன் கார்க்கோடன் . செங்கோடன் முருகன் என்றால் கார்க்கோடன் கணபதி .

இம்மலையின் அடிவாரத்தில் கார்க்கோடனும் உச்சியில் செங்கோடனும் அருள்பாளிப்பார்கள் . இவர்களை தரிசித்தே முருகன் சந்நிதிக்குள் செல்லமுடியும் . வைவைத்த வேற்படை யுடைய வானவன் முருகன் . அதேனென்றால் தேவலோகத்தில் ஞானம் என்ற கூர்மையான வேலால் அசுரர்களை அடக்கிய தேவசேனாதிபதி முருகனே . அதுவேறு யாருமல்ல சாட்சாத் ஆதிசேஷனே . வை என்றால் விஷம் வைத்த கூர்மையான வேற்படை வானவன் . இவரே ஞானகாரகன் . சகல யோக சூத்திரங்களுக்கும் அதிபதி

மேலும் சொல்கிறார் .ஐவருக்கு அதாவது பஞ்சபாண்டவருக்கு இடம் கேட்டு தூதுவன் என்ற பட்டயத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு கிரிஷ்ணன் காலால் அஸ்தினாபுரத்தில் நடந்து சென்றவனல்லவா அவனும் நீதான் என்பதை அறிவேன் என்பது சிலேடை அர்த்தம்

இன்னொரு அர்த்தம் வேண்டுதல் . மனித ஆத்மா பஞ்சேந்திரியம் உடையது . ஐந்து உணர்வுகள் கொண்டது . அது பூமியில் இயங்கவேண்டுமானால் கள் இரண்டும் கை இரண்டும் கொண்ட மனித உடல் அழியாது இருக்கும்வரை இயங்கும் . உடம்பார் அழியின் உயிர் அகல்வாரே என்ற முதுமொழி உண்டு . உடம்பு அழிந்தால் உயிர் அகன்றுவிடும் ; பின்னர் இந்த ஆத்மா இயங்க முடியாமல் ஒரு நித்திரை நிலைக்கு சென்றுவிடும் . மீண்டும் ஒரு கர்ப்பத்தில் இறைவன் நுழைவிக்கும் வரை சிறையில் இருந்து மீண்டும் அடுத்த பிறவியில் ஒரு மனித உடம்பை பெற்று இயங்கமுடியும்

ஆக மரணமில்லா பெருவாழ்வு பெறும்வரை ஒரு ஆத்மா பூமியில் மீண்டும் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும் . அப்படிப்பட்ட மனித உடம்பு பஞ்ச உறுப்புகள் கொண்டுள்ளது . அது அழியாமல் நான் இப்பிறவியிலேயே முக்தி அடையும் வரை காத்தருள்க என்பது அருணகிரியாரின் விண்ணப்பம்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by krishnaamma on Sat Aug 22, 2015 1:44 am

அருமை , நீங்க வரிசையாகவே இதை எழுதலாமே ......எங்கள் வீட்டில் 100 பாடல்களும் பெரிய 'plate ' என்று சொல்லப்படும் ரெகார்ட் பிளேயர் இல் இருந்தது..........அப்போ மனப்பாடமாய் தெரியும் , இப்போ பாடித்தான் பார்க்கணும் புன்னகை...எங்க அப்பாவிற்கு முருகன் இஷ்ட தெய்வம், சீர்காழி இஷ்ட பாடகர் எனவே, இவரின் எல்லா பாடல்களுமே எங்களிடம் இருந்தது புன்னகை ......வெங்கலக் குரலுக்கு சொந்தக்காரர் அவர் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by M.Jagadeesan on Sat Aug 22, 2015 8:16 am

இப்படித்தான் இருக்கணும் ! வைணவமும் , சைவமும் இரு கண்களைப்போல ! இதில் உயர்ந்தது எது என்பது வீண் வாதம் .
அரியும் சிவனும் ஒன்னு ; அறியாதவர் வாயிலே மண்ணு ! தேவாரமும், திவ்ய பிரபந்தங்களும் தமிழ் மொழிக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் !
திருப்பதிக்கும் போகவேண்டும் ; திருவண்ணாமலைக்கும் போகவேண்டும் . பொன்னியின் செல்வனில் வருகின்ற ஆழ்வாக்கடியானைப்போல இருக்கக் கூடாது . அவன் தீவிர வைஷ்ணவன் ! ஆனாலும் அவன் பாசுரங்கள் பாடும்போது , நமக்கு எதிரிலே நின்று பாடுவதுபோல இருக்கும் .கல்கியின் அற்புதமான கற்பனைப் படைப்பு ஆழ்வார்க்கடியான் .!
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by krishnaamma on Sat Aug 22, 2015 12:27 pm

@M.Jagadeesan wrote:இப்படித்தான் இருக்கணும் ! வைணவமும் , சைவமும் இரு கண்களைப்போல ! இதில் உயர்ந்தது எது என்பது வீண் வாதம் .
அரியும் சிவனும் ஒன்னு ; அறியாதவர் வாயிலே மண்ணு ! தேவாரமும், திவ்ய பிரபந்தங்களும் தமிழ் மொழிக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் !
திருப்பதிக்கும் போகவேண்டும் ; திருவண்ணாமலைக்கும் போகவேண்டும் . பொன்னியின் செல்வனில் வருகின்ற ஆழ்வாக்கடியானைப்போல இருக்கக் கூடாது . அவன் தீவிர வைஷ்ணவன் ! ஆனாலும் அவன் பாசுரங்கள் பாடும்போது , நமக்கு எதிரிலே நின்று பாடுவதுபோல இருக்கும் .கல்கியின் அற்புதமான கற்பனைப் படைப்பு ஆழ்வார்க்கடியான் .!
மேற்கோள் செய்த பதிவு: 1158461

நிஜம் ஐயா, என்றாலும் அந்த ஆழ்வார்க்கடியான் கூட கடைசி இல் இதை ஒப்புத்துக்கொள்வாறே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Aug 23, 2015 10:45 am

சீர்காழி பாடிய 1௦௦ பாடல்களையும் அனுப்பிவையுங்களேன்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by krishnaamma on Tue Aug 25, 2015 9:51 am

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:சீர்காழி பாடிய 1௦௦ பாடல்களையும் அனுப்பிவையுங்களேன்
மேற்கோள் செய்த பதிவு: 1158571

இது you tube லிங்க் , https://www.youtube.com/watch?v=YOtOlVLNXrg

ரொம்ப அருமையாக இருக்கும்....சில பாடல்கள் இப்படி யும் கிடைக்கும் புன்னகை

http://www.inbaminge.com/t/murugan/Kanthar%20Alankaram%20-%20Seergali%20Govindarajan/

ரொம்ப அருமையான பாடல்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by krishnaamma on Tue Aug 25, 2015 10:05 am

இதேபோல அபிராமி அந்தாதியும் 100 பாடல்கள், அதுவும் சீர்காழி பாடியது...........அதுவும் ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by krishnaamma on Tue Sep 01, 2015 5:42 pm

இன்னும் பார்க்கலையா கிருபா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by shobana sahas on Tue Sep 01, 2015 9:41 pm

@M.Jagadeesan wrote:இப்படித்தான் இருக்கணும் ! வைணவமும் , சைவமும் இரு கண்களைப்போல ! இதில் உயர்ந்தது எது என்பது வீண் வாதம் .
அரியும் சிவனும் ஒன்னு ; அறியாதவர் வாயிலே மண்ணு ! தேவாரமும், திவ்ய பிரபந்தங்களும் தமிழ் மொழிக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் !
திருப்பதிக்கும் போகவேண்டும் ; திருவண்ணாமலைக்கும் போகவேண்டும் . பொன்னியின் செல்வனில் வருகின்ற ஆழ்வாக்கடியானைப்போல இருக்கக் கூடாது . அவன் தீவிர வைஷ்ணவன் ! ஆனாலும் அவன் பாசுரங்கள் பாடும்போது , நமக்கு எதிரிலே நின்று பாடுவதுபோல இருக்கும் .கல்கியின் அற்புதமான கற்பனைப் படைப்பு ஆழ்வார்க்கடியான் .!
மேற்கோள் செய்த பதிவு: 1158461

நீங்கள் பல இடங்களில் பொன்னியின் செல்வனை மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள் . உங்களுக்கும் பிடிக்குமா அய்யா ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat Sep 05, 2015 1:33 am

பார்த்துவிட்டேன் கிரிஷ்ணமா ஆனால் அதில் 1௦௦ பாடல்களும் இல்லை ஆனாலும் சொற்களை பிரித்து அவர் உணர்வு பொங்க உச்சரித்து பாடியுள்ளார்

உண்மையில் சீர்காழியும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்தான்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by krishnaamma on Sat Sep 05, 2015 11:21 am

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:பார்த்துவிட்டேன் கிரிஷ்ணமா ஆனால் அதில் 1௦௦ பாடல்களும் இல்லை ஆனாலும் சொற்களை பிரித்து அவர் உணர்வு பொங்க உச்சரித்து பாடியுள்ளார்

உண்மையில் சீர்காழியும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்தான்
மேற்கோள் செய்த பதிவு: 1160830

25 x 4 என்று இருக்கும் பாருங்கள் கிருபா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 20 , 22 ,23

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum