ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 12:48 am


கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 12:49 am

உண்மையில் மதுவிலக்கு சாத்தியம்தானா?

மதுவின் கொடுமை குறித்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தனது நூலில் `கள்ளுண்ணாமை` என்று தனி அதிகாரம் எழுதியுள்ளார்.

அதில், " துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்" என்று கூறியிருக்கிறார். கள் குடிப்பது அதாவது மது அருந்துவது நஞ்சு உண்பது என்று கூறியிருக்கிறார்.இது தற்போதைய டாஸ்மாக் மதுவகைகளுக்கு சாலப்பொருந்தும்.கல்லீரல்,சிறுநீரக பாதிப்பு என்று பல்வேறு நோய்களைக் கொண்டுவருவது மதுவகைகளால்தான் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறார்கள். மேலும் குடிப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பு அளவிட முடியாததாகும். இதனாலயே சமூக பெரியவர்களும் அரசியல் கட்சியினரும் மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் ஆளும் அரசு கொள்கை முடிவு எடுத்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமே என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த அரசு தரப்பு தீவிர தயக்கம் காட்டிவருகிறது.அதற்கு முக்கிய காரணமாக இருப்பது திமுக அதிமுக ஆகிய இருகட்சிகள். இரண்டிலும் சாராய ஆலை அதிபர்கள் முக்கிய அதிகார மையமாக இருந்து வருகிறார்கள்.

எலைட்,எஸ்.என்.ஜே.,கால்ஸ்,இம்பெரியல்,மிடாஸ்,ஈகிள் என்று ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை வாரிக் குவிக்கும் மதுபான ஆலைகள் திமுக அதிமுக கட்சியினரின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமானவையே.இதுவே கொள்கை முடிவெடுத்து மதுவிலக்கைக் கொண்டுவர வர பெரும் தடையாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

தமிழகம் அண்மைக்காலமாக பெரிய அளவிலான போராட்டங்களை சந்திக்கவில்லை.கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வைக் கண்டித்து தமிழக அளவில் மாணவர்கள் தரப்பில் எழுந்த தன் எழுச்சியான போராட்டத்தைப் போல தற்போது மீண்டும் தமிழகத்தில் மாணவர் இயக்கங்கள் மதுவிலக்குப் போராட்டத்தில் தாமாகவே முன்வந்து இறங்கியுள்ளன. இது மதுவிலக்குப் போரட்டத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் திருச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.அதே போல அதற்கு முன்பாக புதுச்சேரியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுக்கடை ஒன்றை அடித்து நொறுக்கினர். தற்போது கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது.

டாஸ்மாக் போராட்டம் இன்னும் தீவிரமாக வண்ணமும் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையிலும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்பதுதான் இப்போதைய தேவையும் தீர்வும்.

முடிவு அரசின் கையில்... .

விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 12:50 am

சசிபெருமாளால் மூடப்பட்ட மதுக்கடையை வேறு இடத்தில் திறக்க எதிர்ப்பு: விஜயதாரணி எம்எல்ஏ கைது!

கன்னியாகுமரி: சசிபெருமாள் போராடியதன் மூலம் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் திறக்க எதிர்ப்பு தெரிவித்த விஜயதாரணி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக் கடையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பல வருடங்களாக போராடி வந்தது.

இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி இந்த மதுபானக் கடையை மூடக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அங்குள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் திடீரென மரணம் அடைந்தார்.

இதையடுத்து, அந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டது. மேலும், கன்னியாகுமரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப் பெற்று வருகிறது.

இந்நிலையில், உண்ணாமலைக்கடையில் இயங்கி வந்த மதுபானக் கடை பள்ளியாடிக்கு மாற்றப்பட்டது. பள்ளியாடியில் இந்த டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, காவல்துறையினர் விஜயதாரணி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 12:51 am

கோவையில் சூறையாடப்பட்ட மதுபான கடை!

கோவை: கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடையை சூறையாடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, மேட்டுப்பாளையம் ரோடு புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை (கடை எண் 1565) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விறனையாளராக காசிநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று மாலை 5.30 மணியளவில் இந்த கடைக்கு வந்த 9 பேர் கொண்ட கும்பல், மது விற்பனைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், துண்டு பிரசுரங்களையும் அவர்கள் விநியோகம் செய்தனர். அதில், 'குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும். கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31' என்றும், 'குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே, தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே, மூடு கடையை. எவன் வருவான் பார்ப்போம். நம் ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது' என தலைப்பிட்டு மது விற்பனைக்கு எதிராக 4 பக்கம் அச்சிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து விற்பனையாளர் காசிநாதனை எச்சரித்து கடையை விட்டு வெளியேற்றிய அவர்கள், கடையை சூறையாடினர். கடையில் இருந்த சுமார் 1000 மதுபாட்டில்களை கடைக்கு வெளியே எரிந்த அவர்கள், மதுபாட்டில்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 9 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் ஆயிரம் மதுபாட்டில்கள் சேதமடைந்தன.

கைதானவர்கள் புரட்சி கர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மக்கள் அதிகாரம் எனும் அமைப்பின் பெயரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மது விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துவரும் நிலையில், கோவையில் நடந்த மதுபான கடை மீதான தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma on Tue Aug 04, 2015 12:54 am

//ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//


அடப்பாவிகளா, இதில் சம்பாதித்தது போதலை யா ? ........சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 12:54 am

மதுக்கடைகள் சூறை தொடர்கிறது ; முதல்வர் ஜெ., அவசர ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி போராட்டம் வலுத்து வருகிறது. இன்று சென்னை அமைந்தகரையில் ஒரு டாஸ்மாக் கடையை கல்வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த மது பாட்டல்களை அடித்து நொறுக்கினர்.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடச்சொல்லி பல்வேறு அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்டத்தில் போன் டவர் மீது ஏறிய காந்தியவாதி சசிபெருமான் இறந்தார். நேற்று கலிங்கப்பட்டியில் வைகோ நடத்திய போராட்டத்தில் மதுக்கடை சூறையாடப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கல்வீசி கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். மதுபாட்டல்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் இங்கு பதட்டம் நிலவி வருகிறது.

முதல்வர் அவசர ஆலோசனை: இந்நிலையில் தமிழக சட்டம் ஓழுங்கு நிலைமை குறித்து முதல்வர் ஜெ., தலைமை செயலகத்தில் அவசர ஆலோசானை நடத்தினார். அமைச்சர்கள் , டி.ஜி.பி., தலைமைசெயலர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

செல்போன் டவரில் ஏறி போராட்டம்: தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் பகுதியில் சிலர் டவர் மீது ஏறி டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விருத்தாச்சலம் அருகே மதுக்கடை சூறை: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள காட்டுகூடலூரில் டாஸ்மாக் கடை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் டாஸ்மாக் கடையை தாக்கி உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma on Tue Aug 04, 2015 12:59 am

திடீர் என்று எல்லோருக்கும் பொறுப்பு வந்து விட்டார்போல இருக்கே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:06 am

அதிமுக அரசு அமைதி காப்பது கவலை கொள்ள வைக்கிறது:மு.க.ஸ்டாலின்!

சென்னை: அதிமுக அரசு மதுவிலக்குப் பிரச்னையில் அதிமுக அரசு அமைதி காப்பது கவலை கொள்ளவைக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த நீண்ட காலமாகப் போராடிய காந்தியவாதி சசி பெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினரை அநியாயமாக கைது செய்து காவல்துறை தனது முரட்டுத் தனமான போக்கைக் காட்டியிருக்கிறது.

கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ மீதும், அவர் தலைமையில் போராடிய மக்கள் மீதும் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடே நடத்தியிருக்கிறது காவல்துறை.

இன்றைய தினம் சென்னையில் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். சில மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்து கைது செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அடக்குமுறைகளையும், நியாயமான கோரிக்கைக்காகப் போராடுவோரின் குரல்வளையை நெறிப்பதையும் ஜனநாயக நாட்டில் நிச்சயம் அனுமதிக்க முடியாது. காவல்துறையின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுவுக்கு எதிராக தமிழகத்தில் கிளர்ந்து எழுந்திருக்கும் மக்களின் உணர்வுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளித்துத்தான் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது. மாநிலத்தின் அமைதியையும், வளர்ச்சியையும் சீரழித்து விட்ட டாஸ்மாக் கடைகளின் மீது மக்கள் அந்த அளவிற்கு உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதே வீதி வீதியாக மதுக்கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் மதுவிலக்கு விஷயத்தில் மக்கள் விரோத அ.தி.மு.க. அரசின் அராஜகம் நிறைந்த அமைதியைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

செயலிழந்த அ.தி.மு.க. அரசு, காந்தியவாதி சசிபெருமாளின் துரதிருஷ்டவசமான மரணத்திற்குப் பிறகும் கூட டாஸ்மாக் கடைகளையும், எலைட் டாஸ்மாக் கடைகளையும் திறக்க மும்முரம் காட்டுவது தமிழக மக்கள் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகிறது. மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க. அரசு நித்திரை மயக்கத்தில் இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்திலேயே பெண்களின் துயரங்கள் பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது என்பது வேதனைக்குறியது.

ஜனநாயக ரீதியாலான போராட்டங்களை அடக்க விரும்பும் இந்த அரசின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்ட நிலையைக் காட்டுகிறது. அரசியல் சட்டப்படி மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து விட்டு, தன்னெழுச்சியாகப் போராடும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மக்கள் எழுப்பும் மிக முக்கியமான மதுவிலக்குப் பிரச்சினையில் அதிமுக அரசு அமைதி காப்பது கவலை கொள்ள வைக்கிறது. மதுவிலக்குக் கொள்கையில் அ.தி.மு.க. அரசு விழித்துக் கொள்ளும் முன்பு இன்னும் எத்தனை பேர் இறக்க வேண்டும்? எத்தனை குடும்பங்கள் சீரழிய வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை.

போராட்டக்காரர்கள் மீதும் சசிபெருமாள் குடும்பத்தினர் மீதும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் மதுவிலக்குக் கொள்கை உடனே அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:08 am

போராட்டக்காரர்களுக்கு தமிழக போலீஸ் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நாளை(செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு ம.தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், நாளை மதுக்கடைகளை கட்டாயமாக மூட வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பஸ் சேவையை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நாளை தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:11 am

அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்: விஜயகாந்த் எச்சரிக்கை

அகிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக் கூட வன்முறைக்களமாக மாற்றும் அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கின்றேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்மு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

ஆனால் அதிமுக அரசு அதற்கு செவிசாய்க்க மறுத்ததன் விளைவு, காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பாகும்.

தாய்மார்களின் கண்ணீரை துடைக்கவும், இளைஞர்களைக் காக்கவும், மதுவின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் நாளை நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றகோரிய பொதுமக்களின் போராட்டத்தில், காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தடியடி நடத்தியதோடு மட்டுமல்லாமல், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கலவர பூமியாக மாற்றியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கக்கூடிய செயலாகும். அரசியல் கட்சிகள் அகிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக் கூட வன்முறைக்களமாக மாற்றும் அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கின்றேன்.

உடனடியாக தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:12 am

”உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” - கருணாநிதி வலியுறுத்தல்

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வைகோவின் தாயார், 99 வயதான மாரியம்மாள் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது. சசிபெருமாளின் சொந்த ஊரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும்.

பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில், ஆலங்குளத்தில் இசக்கிமுத்து என்ற ஆட்டோ டிரைவரை டாஸ்மாக் பாரிலேயே காவலர் ஒருவர் நேற்று பாட்டிலால் குத்திக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தியும் வந்துள்ளது.

அதே நெல்லையில் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, வைகோவின் தாயார், 99 வயதான மாரியம்மாள் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது. சசிபெருமாளின் சொந்த ஊரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அதிமுக அரசு உடனடியாக மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நான் அறிவித்திருந்த போதிலும், தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள நிலைமை மாற்று யோசனை எதற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாகவே மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பேராதரவாகவே உள்ளது.

எனவே சசிபெருமாள் போன்று மேலும் பலரது உயிர்களைக் காவு கொடுக்காமல் காப்பாற்ற அதிமுக அரசு இனியும் தாமதிக்காமல், மதுவிலக்கினை உடனடியாக தமிழகத்தில் கொண்டு வருவதற்கான அறிவிப்பினைச் செய்ய வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:12 am

ஆகஸ்ட் 4 முழு அடைப்புப் போராட்டத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த கோரி, ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற உள்ள போரட்டத்திற்கு, முழு ஆதரவு தெரிவிப்பதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உண்ணாமலைக்கடை எனும் கிராமத்தில், செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமெனக் கிராம மக்கள் போராடி வந்தனர்.

அந்தக் கடையை அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மக்கள் போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடையை நடந்தி வந்துள்ளது.

இதனைக் கண்டித்து, காந்தியவாதி சசிபெருமாள், 200 அடி உயர அலைபேசி கோபுரத்தின் உச்சிக்குச் சென்று தீப்பந்தம் ஏந்தி போராடினார். ஐந்து மணி நேர போராட்டத்தின் முடிவில் அவர் மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு அரசின் அலட்சியமே காரணமாகும்.

தமிழகத்தின் ஏழை எளியோர், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துவருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கினை படிப்படியாக அமல் படுத்த வேண்டு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய ஆறு கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், சசிபெருமாள் மரணத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆளும் கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சியினர் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில், தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முழு ஆதரவைத் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:16 am

மதுவிலக்குப் போராட்டங்கள்: அரசியல் கட்சிகளுக்கு தமிழக அரசு கண்டனம்

காந்தியவாதி சசிபெருமாள் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது அருவருக்கத் தக்கதும் கண்டனத்துக்குரியதுமாகும் என்று தமிழக அரசு மதுவிலக்கு போராட்டங்களை கண்டித்துள்ளது.

இது குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"மதுவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தி.மு.க., தாங்கள் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறை․படுத்தாத பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ், மதுவின் துணை கொண்டு மாநாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் உதிரிக் கட்சிகள் எல்லாம் இன்று மதுவிலக்கு குறித்து பேசுவதும், இதற்காக சில அரசியல் கட்சிகள் 4.8.2015 அன்று தமிழ்நாட்டில் "பந்த்" நடத்தப் போவதாக அறிவித்து இருப்பது‥ சாத்தான் வேதம்ஓதுவது போல் உள்ளது.

கடந்த 4 ஆண்டு அதிமுக அரசின் சாதனைகளைபொறுத்துக் கொள்ள முடியாமல் மதுவிலக்கு என்ற ஆயுதத்தை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறும் இதே தலைவர்கள்தான் உடனடியாக அமல்படுத்த முடியாது என்றும் சொல்கின்றனர். இதன் மூலம் முழு அடைப்பு என்பது மதுவிலக்குக்காக அல்ல என்பது தெளிவாகிறது.

கன்னியாகுமரியில் மதுக்கடையை அகற்ற கோரி சசிபெருமாள் செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

7 நாட்களில் கடை அகற்றப்படும் என டாஸ்மாக் மேலாளர் உத்தரவாதம் அளித்தார். அதை தொடர்ந்து சசிபெருமாளை மீட்க கோபுரத்தின் உச்சிக்கு சென்றபோது அவர் நினைவில்லாமல் இருந்தது தெரியவந்தது.

அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் மரணம் வேதனை அளிக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவது காந்திய வழி அல்ல. சசிபெருமாளின் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது கண்டனத்துக்குரியது.

திமுகவைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மது ஆலை நடத்த அனுமதி வழங்கிய கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதி கிடையாது.

ஆகஸ்ட் 1-ம் தேதி கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ தாயார் 2-ம் தேதி பேராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதிலிருந்து அங்கு நடந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மதுவை போன்று புகையிலையும் தீங்கானது. ஆனால், வைகோவின் மகன் துரை வையாபுரி புகையிலை வாணிபத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு வைகோவின் பதில் என்ன?

வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் மதுபான கடைகள் இருப்பதாக கூறுவது தவறானது. மதுபான விற்பனைக்கான விதிகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 504 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எதுவும் இல்லை என்பதால் மதுவிலக்கை கையில் எடுத்துள்ளனர். இவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

மதுவிலக்குப் பற்றி பேசுவதாலும், அதற்கென போராட்டம் நடத்துவதாலும் தேர்தல் களத்தில் வாக்குகளைப் பெற்று விடலாம் என்று நினைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அரசுக்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால், மதுவிலக்கு குறித்து போராட்டம் நடத்தி தமிழக அரசுக்கு களங்கம் கற்பிக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:18 am

டாஸ்மாக் கடை மீது தாக்குதல்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - போலீஸ் கடும் மோதல்சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர். டாஸ்மாக் கடையை கல்வீசி தாக்கி, அடித்து நொறுக்கும்போது போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மாணவர்களை விரட்டி அடிக்க, போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்களைப் பிடித்து அடித்து, பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, மாணவர்களை மீட்பதற்காக மாணவிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் நடத்தினர். போலீஸார் தொடர் தடியடி நடத்தியபோது, ஒரு மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், மாணவிகளை இழுத்து தள்ளிவிட்டு மாணவர்களை சரமாரியாக போலீஸார் அடித்தனர். குண்டுக்கட்டாக மாணவர்களைத் தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர்.

புத்தகத்தை படிக்கவா? சாராயத்தை குடிக்கவா? என்று மாணவிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஹாரிங்டன் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலால் பல மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த போராட்டக் களேபரங்களுக்கு இடையில், சில மாணவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச் சென்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:19 am

மாணவர்கள் மீது தடியடி: காவல்துறைக்கு வைகோ கண்டனம்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முழு மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை போராட்டக் களத்திலேயே மரணம் அடைந்த துயர நிகழ்ச்சி, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தி இருக்கின்றது.

டாஸ்மாக் கடைகளை உடனடியாக இழுத்து மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற போர்க்குரல் ஒட்டுமொத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

கலிங்கப்பட்டியில் மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. இந்நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில், ஹாரிங்டன் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அக்கல்லூரி மாணவர்கள் பலமுறை அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.

ஜெயலலிதா அரசின் அலட்சியப் போக்கைக் கண்டு கொதித்து எழுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டாஸ்மாக் கடையின் உள்ளே இருந்து மாணவர்கள் மீது சிலர் மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மாணவர்கள் மீது மது பாட்டில்கள் வீசப்பட்டதால், அவர்கள் டாஸ்மாக் கடை மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன், மாணவிகளும் முன்நின்று முழக்கம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், காவல்துறையினர் மதுக்கடையை அகற்றக் கோரிய மாணவர், மாணவிகள் மீது ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தி விரட்டி உள்ளனர்.

மாணவிகளை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, மிதித்து அவர்கள் மயக்கம் அடையும் வரை தாக்குதல் நடத்தி உள்ளனர். மாணவர்களை அடித்துக் காயப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களை அடக்குமுறை மூலம் முறியடித்து விடலாம் என்று ஜெயலலிதா அரசு நினைக்குமானால், விளைவுகள் விபரீதமாகும் என்று எச்சரிக்கிறேன்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹாரிங்டன் சாலை டாஸ்மாக் கடை மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கடைகளையும் மூட வேண்டிய நிலைமை உருவாகி வருவதை ஜெயலலிதா அரசு உணர்ந்துகொண்டு, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma on Tue Aug 04, 2015 1:22 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:24 am

மதுவிலக்கு அமலுக்கு வந்தால் மது ஆலைகளும் மூடப்படும்: கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில்

தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தால், திமுகவினர் நடத்துவதாக கூறப்படும் மது ஆலைகளும் மூடப்படும் என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறுகையில், ''காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்தவர்கள் மதுபான ஆலைகளை நடத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கூறுகின்றனர். மதுவிலக்கு வந்துவிட்டால் மது உற்பத்தி ஆலைகளும் மூடப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடக் கட்சிகளுடன் சத்தியமாக கூட்டணி இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணிக்கு வாருங்கள் என அவரை எந்த கட்சியும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை'' என்று ஸ்டாலின் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by krishnaamma on Tue Aug 04, 2015 1:27 am

//தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தால், திமுகவினர் நடத்துவதாக கூறப்படும் மது ஆலைகளும் மூடப்படும் என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.//

ஆஹா..என்ன வொரு தாராளம் ? சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:29 am

வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் மதுக் கடையை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட 152 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வைகோ தலைமையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அக்கடையை சூறையாடினர்.

இந்த சம்பவத்தையடுத்து, போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்போது கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதில், 15 பேர் காயமடைந்தனர்.

12 பிரிவுகளில் வழக்கு: இந்த சம்பவம் தொடர்பாக, வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 152 பேர் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்குதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் என 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 1:47 am

ஆக.10-இல் திமுக ஆர்ப்பாட்டம், ஆக.6-இல் தேமுதிக மனித சங்கிலி

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

திமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், தேமுதிக சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். எனினும், தமிழகமெங்கும் மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள சீரழிவைத் தடுத்து நிறுத்திட, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை கோயம்பேடு முதல் கோட்டை வரை விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலிப் போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by ayyasamy ram on Tue Aug 04, 2015 2:54 am

அந்த நாளில்....
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:16 pm


தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி- வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி ஆகஸ்டு 4 முழு அடைப்புப் போராட்டத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சி, தேசிய முற் போக்கு திராவிடர் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, புதிய தமிழகம், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா, தவ்ஹித் ஜமாத், தமிழ் தேசியப் பேரியக்கம் (மணியரசன்), பால் முகவர்கள் சங்கம், தமிழ்ப்புலிகள் கட்சி, தற்சார்பு விவசாய சங்கம், அணுஉலைக்கான எதிர்ப்பு இயக்கம் ஆகிய பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததின் பேரில், தமிழகத்தில் வணிகப் பெருமக்கள் வருமான நட்டத்தைப் பற்றிக் கவலைப் படாமல், தாங்களாகவே கடைகளை மூடி, முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்து விட் டனர்.

இது மக்கள் போராட்டத்தின் வெற்றி, பொதுநலன் கருதும் வணிகப் பெருமக்களின் வெற்றி இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க., பா.ம.க., விக்கிரம ராஜாவின் வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்க வில்லை.

ஆளும் கட்சி காவல் துறையை ஏவிவிட்டு, நேற்று இரவில் அனைத்து மாவட் டங்களிலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கட்சி களின் நிர்வாகிகளைக் கைது செய்தனர். இன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் காவல்துறையினர் ம.தி.மு.க. நிர்வாகிகளையும், போராட் டத்தில் ஈடுபட்டவர்களையும் தாக்கியதோடு கைது செய் தனர்.

தமிழகம் முழுவதிலும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளைச் சேர்ந் தவர்களை காவல்துறையினர் அடித்தும், உதைத்தும் காவல் துறை வாகனங்களில் ஏற்றி கைது செய்துள்ளனர்.

அரசின் அடக்குமுறையை மீறி முழு அடைப்பு வெற்றி பெற்றது என்றால், முழு மதுவிலக்கு ஒன்றுதான் தமிழ்நாட்டை காக்கும் என்பதற்கான மக்களின் பிர கடனம்தான் போராட்டத்தின் வெற்றி.

டாஸ்மாக் மதுக்கடைகள், ஒயின்ஷாப்புகளின் மது நச்சு வெள்ளமாகப் பாய்ந்து தமிழ்நாட்டை நாசம் செய் கிறது.முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகமே கொந்தளிக்கிறது. கோடானுகோடித் தாய் மார்கள் மதுக்கடைகளை ஒழிக்க வீறுகொண்டு எழும் நிலை ஏற்பட்டு விட்டது.தமிழ்நாட்டுக்கு ஏற்பட இருக்கும் அழிவைத் தடுக்கவே வீரத் தியாகி சசிபெருமாள் உயிர்ப்பலியானார். அவரைச் சாகடித்தது மட்டும் அல்லாமல், கடுகு அளவும் ஈவு இரக்கம் இல்லாமல் சசிபெருமாளின் மகனையும், மகளையும் கைது செய்தது ஜெயலலிதா அரசு.

நேற்று (3-தேதி), சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற முயன்றபோது, காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கினர்.முதலமைச்சர் ஜெயலலிதா, வழிபாட்டுத் தலங்கள் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள், மது பார்களை மூடப்போவதாகவும், மது விற்பனை நேரத்தை குறைக்கப் போவதாகவும் தமிழக மக்களை குறிப் பாக தாய்மார்களை ஏமாற்று வதற்காக ஒரு திட்டத்தைத் தயாரித்துள் ளார். அதனை அறிவிக்க உள்ளார்.
மதுக்கடைகளின் விற் பனை நேரத்தைக் குறைப்பது என்பது பொதுமக்களை ஏமாற்றவும், மது பாட்டில் களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நேரங் களில் அவற்றைக் குடிகாரர்களிடம் அதிக விலைக்கு விற்பதற்கும் இந்த எற்பாடு.

எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்கப் போகும் நடவடிக்கைகளை நம்பி மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. அனைத்து மதுக்கடைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண் டும்.

தாய்மார்களே, டாஸ்மாக் கடைகளை அகற்ற வீறுகொண்டு போராடுங்கள்! எனது அன்பு மாணவக் கண்மணிகளே உங்கள் வாழ்வையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் நாசமாக் கும் டாஸ்மாக் கடைகளை, ஒயின்ஷாப்களை அடியோடு அகற்ற போர்க்கோலம் பூணுங்கள்!

முழு அடைப்புப் போராட் டத்துக்கு ஆதரவு தந்த அரசியல் கட்சிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், மனித உரிமைகள் அமைப்பு களுக்கும், கடைகளை மூடிய வணிகப் பெருமக்களுக்கும் ஆதரவு தந்த மாணவச் செல்வங்களுக்கும், பொது மக்களுக்கும், போராட்ட அழைப்பு விடுத்த அரசியல் இயக்கங்களின் சார்பில் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:17 pm

பூரண மது விலக்கு கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் ஆயிரகணக்கான பேர் கைது

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.தே.மு.தி.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் ,வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையொட்டி பஸ் நிலையங்கள், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்

இன்று பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. ஆட் டோக்களும் ஓடின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க வில்லை. ரெயில் களில் இன்று கூட்டம் அதிகம் இருந்தது.தமிழ்நாடு முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.பெரும்பாலான நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பல ஊர்களில் வழக்கம் போல் கடைகள் திறந்தும் இருந்தன.

மதுராந்தகம் அருகே உள்ள முதுகரை, சூனாம்பேடு சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மதுக்கடை ஷட்டரை கடப்பாரையால் உடைத்தனர். பின்னர் உடைந்த ஷட்டரின் வழியாக வெடிகுண்டை வீசி தப்பிச் சென்று விட்டனர்.

தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஆயிரகணக்கான பேர் கைது செய்யபட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் அரசு பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:22 pm

தமிழக போலீஸ்: ஸ்காட்லாண்ட் யார்டா...டாஸ்மாக் ஸ்குவாடா?

சென்னை: ஒரு காலத்தில் தமிழகக் காவல்துறையை லண்டனின் 'ஸ்காட்லாண்ட் யார்டு' போலீசுக்கு இணையாக மதித்த காலமெல்லாம் மலையேறி, இன்று 'டாஸ்மாக் ஸ்குவார்ட்' என்று அழைக்கும் நிலைக்கு தமிழக காவல்துறை தள்ளப்பட்டு விட்டதே என வேதனைக் குரல்கள் எழுந்துள்ளன.

மதுவிலக்கு கேட்டு மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.கடந்த மாதங்களில் பாமக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் எதிர்ப்பு மற்றும் மதுவிலக்கு போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி, காந்தியவாதி சசிபெருமாள் மார்த்தாண்டத்தில் செல்போன் டவர் மீது ஏறி நின்று பலமணி நேரம் மதுவிலக்குப் போராட்டம் நடத்தி இறுதியில் ரத்த வாந்தியெடுத்து மரணமடைந்தார். அந்த மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மதுவிலக்குக்கு ஆதரவான போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.

அதன் ஒருபகுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் நடத்திய மதுவிலக்குப் போராட்டம், கலவரத்தில் முடிந்தது. அந்தப் போராட்டம் தொடர்பாக போலீசார் வைகோ உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வுகள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு நடத்தி வரும் 6000 த்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடச் சொல்லி, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து போராட வைத்துள்ளன.

ஆனால் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விடுத்துள்ள அறிக்கையில், சசிபெருமாள் மரணத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன என்றும்,இது அருவருக்கத்தக்கது என்றும், கல்விக் கூடங்கள்,கோவில்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பதாகக் கூறுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் இன்று(செவ்வாய்) மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடை அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த பந்த் வெற்றிகரமாக நடந்துவிடக் கூடாது என்றும், டாஸ்மாக் கடைகள் முன்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் திரண்டு விடக்கூடாது என்பதற்காகவும் தமிழக காவல்துறை நேற்று(திங்கள்) இரவிலிருந்தே பாதுகாப்பிற்காக டாஸ்மாக் கடைகள் முன்பு போலீசாரை நிறுத்தி இருக்கிறது. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக, அதை விற்பதற்கும் தாராளமாகக் குடிப்பதற்கும் பாதுகாப்பு வழங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலிருந்து பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக அறிவுக் கூர்மையும்,பலமும் கொண்ட காவல்துறையாக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று சாராயம் குடிக்கவும் டாஸ்மாக் கடையில் சாராயம் விற்கவும் பாதுகாப்பு வழங்கிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறதே என்று பொதுமக்கள் வேதனையுடன் பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன் தமிழக காவல்துறையை இந்த அவல நிலைக்கு தள்ளியதற்கு தமிழக அரசு மீதும் மக்களிடையே கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் அதிருப்தியை போக்குவதற்கான ஒரே நடவடிக்கை என்ன என்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதனை செயல்படுத்துவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by சிவா on Tue Aug 04, 2015 11:29 pm

அடிதடி இல்லாமல் அமைதியாக நடந்த முழு அடைப்பு போராட்டம்!

அரியலூர்: அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்தவித அடிதடியும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது முழு அடைப்பு போராட்டம்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி 4ஆம் தேதி (இன்று) முழு அடைப்புப் போராட்டத்துக்கு ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மற்றும் தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

இதன்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, பல்வேறு இயக்கங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடித்து, உதைத்து கைது செய்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடந்திருக்கிறது. அரியலூர், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சில போரட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் பெயரளவுக்கு நடைபெற்றது. இருப்பினும், இதனால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடியிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அதேசமயம், போக்குவரத்து எந்த ஒரு தடையும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் இயங்கியதால் பயணிகள் பாதிக்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் காலையில் பயத்தின் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த கடைகள் திறக்கப்பட்டன. அங்கும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றிருப்பது, முழு அடைப்பு போராட்டம் இங்கு வெற்றி பெற்றிருப்பதாகவே இருக்கிறது.

இதன் மூலம் இந்த பகுதி மக்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதும் தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum