ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

36 வயதினிலே - விமர்சனம்

View previous topic View next topic Go down

36 வயதினிலே - விமர்சனம்

Post by சிவா on Sat May 16, 2015 4:06 amஜோதிகா, ஜோதிகா சூர்யா ஆனதற்கு பிறகு நடித்து, வெளிவந்திருக்கும் திரைப்படம் என்பதில் இருந்தே தெரிந்திருக்கும் எத்தனை கனமான கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் பொருந்திய படமாக இருக்கும் 36 வயதினிலே என்பது! கணவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மனைவி ஜோதிகாவே நடித்து வந்திருக்கும் 36 வயதினிலே திரைப்படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ மலையாளம் படத்தின் தழுவல் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி தகதக தங்கமாக ஜொலித்திருக்கும் ஜோவின் 36 வயதினிலே படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை இனி பார்ப்போம்...!

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சக மாணவிகளுக்கு எடுத்துக்காட்டாக பொதுப்பிரச்னைகளில் போராடி ஜெயிக்கும் குணம் நிரம்பியவராக திகழ்ந்த வசந்தி எனும் ஜோதிகா, தமிழ் செல்வன் எனும் ரகுமானின் மனைவியாகவும், பருவ வயதை எட்ட இருக்கும் ஒரு மகளுக்கு தாயாகவும் ஆனபின், குடும்ப தலைவியாக பொறுப்புகளை சுமந்து ரெவின்யூ ஆபிஸில் சக ஊழியர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகும் கிளார்க்காக தானுண்டு, தன் வேலையுண்டு என மகளுக்காகவும், கணவருக்காகவும் சராசரி நடுத்தர வர்க்கத்து அம்மாஞ்சி அம்மாவாக சுருக்கி கொண்டு வாழ்கிறார், அதுவே அவருக்கு வினையாகிறது.

ஆசை கணவரும், அன்பு மகளும், அலுவலக ஊழியர்கள் சிலரும் ஜோதிகாவை இஷ்டத்திற்கு அலட்சியப்படுத்த ஏகத்துக்கும் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஜோ, அதிலிருந்து மீண்டு எவ்வாறு? தன் கனவுகளிலும், திறமைகளிலும் ஜெயித்து ஜொலிக்கிறார்.? என்பது தான் 36 வயதினிலே படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

வசந்தி தமிழ் செல்வனாக ஜோதிகா நடிக்கவில்லை.. தமிழ் சினிமாவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் கதாநாயகி யார்.? என்று கேட்டால் ஜோ என்று தான் சொல்ல வேண்டும்! அத்தனை அற்புதமாக வசந்தி தமிழ் செல்வன் பாத்திரத்தை தன்னுள் வாங்கி ஏக்கம், ஏமாற்றம், ஏற்றம் எல்லாவற்றிலும் அது அதற்கு ஏற்புடைய முகபாவங்களை காட்டி நடித்து ரசிகனை சீட்டோடு கட்டிப்போடுகிறார் அம்மணி!

சுயநல கணவரின் ஏச்சு, பேச்சுகளை தாங்கி கொள்ளும் மனைவியாக, பல மாணவிகளுக்கும் ரோல் - மாடல் மாணவியாக, அலட்சியப்படுத்தும் மகளுக்கு அன்பாக புரியவைக்கும் தாயாக, மாமனார்-மாமியாரை மதிக்கும் மருமகளாக, சக ஊழியர்களின் உதாசீனங்களை உதறித்தள்ள முடியாது பொங்கி பொறுமும் அலுவல்வாசியாக, மகளின் சாதனைக்காக ஜனாதிபதியை பார்க்க போய் மயங்கி விழும் பத்தாம்பசலியாக, பின்நாளில் தங்கள் குடியிருப்பு பகுதி வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறி தோட்டம் அமைத்து உதவி, விஷம் பாயாத ஆர்கானிக் காய்கறிகளை மகசூல் செய்து சாதனை படைத்து ஜனாதிபதியை சந்தித்து பரிசு பெறும் பாக்கியசாலி சாதனையாளராக பல்வேறு முகம் காட்டி, 36 வயதினிலே படத்தில் பக்காவாக பவனி வந்திருக்கும் ஜோதிகாவிற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம், பலப்பல சபாஷ் சொல்லலாம்.

ஜோவின் கணவர் தமிழ் செல்வனாக ரகுமான், நடுத்தர வர்க்கத்து சுயநல கணவர்களை தோலுரித்து காட்டியிருக்கிறார்.

ஜோதிகாவின் கல்லூரி சினேகிதியாக, திருப்புமுனை கேரக்டரில் வரும் அபிராமி, அலுவலக தோழி தேவதர்ஷினி, அலுவலக சீனியர் பிரேம், ஜோவின் பருவ வயது மகளாக வரும் அமிர்தா, மாமனார் டெல்லி கணேஷ், போலீஸ் கமிஷனர் நாசர், போக்குவரத்து காவலர் எம்.எஸ்.பாஸ்கர், ஜோவின் மாடித்தோட்டத்து காய்கறி பிஸினஸூக்கு பிள்ளையார் சுழி போடும் வேலைக்காரம்மா அலட்டல் ராணியாக கோலி சோடா சுஜாதா, போஸ்வெங்கட் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்! பலே, பலே.

ஆர்.திவாகரனின் ஔிப்பதிவில் படத்தில் இடம்பெறும் டெல்லியும், சென்னையும் கில்லியாக தெரிவது பலம்! சந்தோஷ் நாராயணின் இசையில், வாடி ராசாத்தி... பாடலும், பின்னணி இசையும் பிரமாதம்.

இன்னொரு வசந்தியாக என் மகள் இருந்திட கூடாதுன்னு... என் கணவர் சொல்றார், அப்படீன்னா.? இத்தனை காலமும் வசந்தி அந்த வீட்டில் என்னவாக இருந்தார், அவர் யார் என கேட்க வைக்கிறார் வசனகர்த்தா விஜி! வாவ் விஜி!!

ரோஷன் ஆண்ட்ரூஸின் இயக்கத்தில், சமூக அக்கறையுடன் கூடிய குடும்ப படமாக வௌிவந்திருக்கும் 36 வயதினிலே திரைப்படம், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ப(பா)டம்!

மொத்தத்தில், பெண் அடிமைத்தனத்தை பேராண்மையுடன் களைய முற்பட்டிருக்கும் 36+ வயதினிலே - அனைத்து வயதினரும் ஆண்-பெண் இரு பாலினரும் பார்க்ககூடிய, பார்க்க வேண்டிய நல்லதொரு படமாகும்!

தினமலர் விமர்சனம்


Last edited by சிவா on Tue May 19, 2015 11:33 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 36 வயதினிலே - விமர்சனம்

Post by சிவா on Sat May 16, 2015 4:07 am

36 வயதினிலே: முதல் நாள் முதல் பார்வை

ஜோதிகாவின் மறுவருகை என்ற ஒற்றை காரணம் போதாதா '36 வயதினிலே' படத்தைப் பார்க்க?

'மொழி‘ படத்தில் சைகைகளால் அபிநயம் பிடித்த ஜோதிகா 8 வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். ஜோதிகாவின் வரவேற்பை ஆமோதிப்பதைப் போல தியேட்டரில் குவிந்திருந்தது பெண்கள் கூட்டம்.

'36 வயதினிலே' திரைப்படம் அந்த அளவுக்கு ரசிகர்களை வசப்படுத்தியதா?

வருவாய்த் துறையில் வேலை செய்கிறார் வசந்தி தமிழ்ச்செல்வன் (ஜோதிகா). தமிழ்ச்செல்வன் (ரஹ்மான்) வானொலி அறிவிப்பாளர்.

ரஹ்மானுக்கு அயர்லாந்து செல்ல விருப்பம். அந்த விருப்பத்துக்கு வரும் சில தடைகளால் மனைவி ஜோதிகாவைத் திட்டித் தீர்க்கிறார். கண்ணை மூடித் தூங்கினா எல்லாருக்கும் கனவு வரும். அது இல்லை. வாழ்க்கையில சில உணர்வுகளால விஷனா பார்க்கிற கனவு என்று மனைவியிடம் கோபமுகம் காட்டுகிறார். அதற்குப் பிறகு கணவனாலும் சமூகத்தாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜோதிகா எப்படி சாதிக்கிறார்?

8 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் 'பேக் டு தி ஃபார்ம்' ஆகி இருக்கிறார் ஜோதிகா. சூர்யா பெயரை டைட்டிலில் போடும்போது எழும் விசில் சத்தத்தைக் காட்டிலும், ஜோ-வை திரையில் பார்க்கும்போது சத்தம் அதிகம் எழுகிறது. ஜோதிகாவின் ஒவ்வொரு ரியாக்‌ஷனுக்கும் பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது அதிசயம்தான்.

டிராஃபிக்கில் சிக்கி ஆபிஸூக்கு லேட்டாக வந்து திட்டு வாங்குவது, தங்கப்பன் பெயரை தங்கப்பெண் என எழுதியதால் டோஸ் வாங்குவது, கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி கூனி குறுகுவது, கிண்டல் செய்பவர்கள் மூக்கை உடைக்க பொறாமையை பொங்க வைக்கும் அளவுக்கு பில்டப் கொடுப்பது, பஸ்ஸில் பயணிக்கும் பாட்டியின் சீட்டை பிடிப்பது, சீட் வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இடித்துவிட்டு பரவாயில்லை என சொல்வது, அயன்பாக்ஸ்ல மூஞ்சியை தேய்க்கிறேன் வா என் பொண்ணா நீ என மகளிடம் கோபப்படுவது என கிடைத்த எல்லா இடங்களிலும் அளவாக ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா.

ஜோதிகாவின் ஃபெர்பாமன்ஸ் ஆஹா என்று சொல்லவைக்கவில்லை. ஆனால், அவ்வளவு பொருத்தமாக அடக்கமாக இருக்கிறது.

ஜோதிகாவின் கணவராக ரஹ்மானின் நடிப்பு ஓ.கே ரகம். ஆனால் கனவு, வாழ்க்கை, லட்சியம் என்று மூச்சு முட்ட பேசுபவர் வார்த்தைகளில் மட்டு மாடுலேஷன் காட்டுறார். அதை உணர்வாக, நடிப்பாக தரவில்லை என்பதுதான் வருத்தம். எனக்குத் தெரியாதுங்கிற ஒரே ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றது இந்த உலகத்துலயே நீ ஒருத்திதான் என ரஹ்மான் ஆதங்கப்படும்போது மட்டும் கவனிக்க வைக்கிறார்.

ஜோதிகாவின் தோழியாக அபிராமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அபிராமியின் எனர்ஜி பேச்சுக்கு ரசிகர்கள் கிளாப்ஸ் அடித்தனர்.

டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பயில்வான் ரங்கநாதன், பிரேம், தேவதர்ஷினி ஆகியோர் சரியான தேர்வு.

திவாகரனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனி இசையும் படத்துக்குப் பெரும் பலம்.

மலையாளத்தில் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் மறு ஆக்கம் செய்திருப்பது படத்தை எந்த விதத்திலும் சிதைக்காமல் பார்த்துக்கொள்கிறது.

மலையாளத்தில் மஞ்சுவாரியருக்கு அம்மா இருப்பதைப் போலவும், அம்மாவின் கிராமத்துக்குச் சென்று ரிலாக்ஸ் ஆகிவருவதைப் போலவும் காட்சிகள் இருக்கும். தமிழில் ஜோதிகாவுக்கு அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை.

ஒரு பெண்ணின் கனவுக்கு எக்ஸ்பைரி தேதியை நிர்ணயிப்பது யார்? ஏன்? இதுதான் படத்தின் ஒட்டுமொத்த கேள்வி.

எந்த வயதிலும் சாதிக்க முடியும். அதற்கு வயது தடையல்ல என்று சொன்னதற்காகவும், இயற்கை விவசாயம் என்பதை வலியுறுத்தியதற்காகவும் '36 வயதினிலே' படத்தை வரவேற்கலாம்.

தமிழில் இப்படிப்பட்ட படங்கள் ரீமேக் மூலமாகவாவது வருவது ஆரோக்கியமான விஷயம். முதல் நாள் வரவேற்பு நீடித்தால், தமிழ் சினிமாவில் இந்த சாதகப் போக்கு முழு பலன் தரலாம்.

தி இந்து
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 36 வயதினிலே - விமர்சனம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat May 16, 2015 6:59 am

நன்று
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: 36 வயதினிலே - விமர்சனம்

Post by சிவா on Tue May 19, 2015 11:32 pm

திரை விமர்சனம்: 36 வயதினிலே

திருமணத்துக்குப் பிறகு, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், குடும்ப வட்டத்துக்குள் முடங்கும் ஒரு பெண், ஒரு காலகட்டத்துக்குப் பின் அதே குடும்பத்தினரால் ஒதுக்கப்படும்போது எப்படி மீண்டும் தன் சுயத்தைக் கண்டடைகிறாள் என்பதே ‘36 வயதினிலே’. ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாளப் படத்தின் ரீமேக். அதை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இதையும் இயக்கியிருக்கிறார்.

பணம் சம்பாதிக்க அயர்லாந்துக்குப் போகவேண்டும் என்பது ரகுமானின் கனவு. மனைவி ஜோதிகாவின் 36 வயது அதற்குத் தடையாகிறது. கணவனும் மகளும் இதனால் எரிச்சல் அடைகிறார்கள். ரகுமான் ஒரு விபத்து நிகழ்த்திவிட, விசா கிடைக்கும் நேரத்தில் தன் மீது வழக்கு வந்துவிடக் கூடாது என்பதால் ஜோதிகாவை விபத்துக்குப் பொறுப்பேற்க சொல்கிறார். சட்டப்படி அதிலும் சிக்கல் வர, ரகுமானின் எரிச்சல் உச்சத்தை அடைகிறது.

ஜோதிகாவின் மகளுடைய பள்ளிக்கு விஜயம் செய்யும் குடியரசுத் தலைவர், அவள் கேட்கும் கேள்வியைக் கண்டு அசந்துபோகிறார். அதை சொல்லிக்கொடுத்தது அவளது அம்மா என்று தெரிந்ததும் அவரைப் பார்க்க வேண்டும் என்கிறார். ஒரே நாளில் ஜோதிகாவின் அந்தஸ்து கிடுகிடுவென்று உயர்கிறது. வீட்டிலும் அலுவலகத்திலும் இளக்காரமாக நினைத்தவர்கள் வாயைப் பிளக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக் கெடுபிடி களால் திணறும் ஜோதிகா, குடியரசுத் தலைவரைச் சந்தித்ததும் மயக்கம்போட்டு விழ, ஊரே அவரைப் பார்த்துச் சிரிக்கிறது. இந்த நேரத்தில் கணவரும் மகளும் வெளிநாட்டுக்குக் கிளம்பிவிடுகின்றனர். வயதான மாமனார், மாமியாருடன் வசிக்கும் ஜோதிகாவைக் கழிவிரக்கம் கவ்வுகிறது.

தனக்கென ஒரு அடையாளமோ, மரியா தையோ இல்லாத வாழ்வில் ஜோதிகாவால் தன் அடையாளத்தை மீட்டுக்கொள்ள முடிந்ததா?

இரண்டு முக்கியமான பிரச்சினைகளை இந்தப் படம் தொடுகிறது. 1. நம் சமூக அமைப் பில் திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல். 2. இயற்கை வேளாண்மை. இந்த இரண்டையும் பொருத்த மான கதையில் இணைத்து விறுவிறுப்பாகச் சொல்லியிருந்தால் குறிப்பிடத்தகுந்த படங் களில் ஒன்றாகியிருக்கக்கூடும்.

பாத்திர வார்ப்புகள், சம்பவங்களில் நாடக தொனி! ஜோதிகாவின் மேல் அனு தாபம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவரது அலுவலக சகாக்கள், கண வன், மகள் என எல் லோரையும் கிட்டத்தட்ட வில்லன்களாகக் காட்டுவது அத்தனை இயல்பாக இல்லை.

கல்லூரிப் பருவத் தோழி அபிராமியின் மூலம் ஜோதிகாவுக்கு உத்வேகம் கிடைப்பது, பேஸ்புக், மாரத்தான் என்று புதிய அத்தியாயம் தொடங்குவது, காய்கறி விற்பனை மூலம் திருப்பம் வருவது என்று எதை எடுத்தாலும் அதிரடி அவசர திருப்பம்தான். ஜோதிகாவின் உரையைக் கேட்டுவிட்டுச் சட்டசபையில் எல்லா உறுப்பினர்களுக்கும் இயற்கை வேளாண்மை பாடம் எடுப்பதாக அமைச்சர் சொல்வதும் குடியரசுத் தலைவரிடம் இருந்து வரும் இரண்டாவது அழைப்பும் நம்ப வைக்கிற அழுத்தத்துடன் சொல்லப்படவில்லை.

மனதைத் தொடும் சில காட்சிகளும் படத்தில் உள்ளன. தன்னைச் சம்பளம் இல்லாத வேலைக்காரப் பெண்ணாக வெளிநாட்டுக்குக் கூப்பிடுகிறார்கள் என்பதை ஜோதிகா உணரும் இடம் அழுத்தமானது. பெரிய கடையில் வேலை பார்க்கும் மூதாட்டியை அவரது வீட்டுக்குச் சென்று ஜோதிகா சந்திக்கும் இடமும் குறிப்பிடத்தக்கது. பாசத்தை வைத்து தன் குடும்பம் விரிக்கும் வலையில் விழாமல் ஜோதிகா உறுதியாக நின்று சாதிப்பது முக்கியமான தருணம்.

திரைக்கதை நைந்து தொங்கும் நேரங்களில் படத்தைத் தாங்கிப் பிடிப்பது வசனகர்த்தா விஜி. நடுத்தர வயதை நெருங்கும் பெண்களின் நிலையைப் பொட்டில் அறைந்ததுபோல் சொல்லும் வசனங்கள் படத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.

சந்தோஷ் நாராயணனின் இசையில் வாடி ராசாத்தி பாடல் திரும்பக் கேட்கத் தூண்டுகிறது.

ஜோதிகாவுக்கு அட்டகாசமான மறுபிரவேசம். படத்தை முழுவதுமாகத் தாங்குகிறார். கணவன் தன்னை இழிவுபடுத்தும்போது அவர் வெளிப்படுத்தும் முக பாவனை இன்றைய பெண்களின் துயரத்தின் அடையாளமாக நம் மனதில் தங்கிவிடுகிறது.

குடும்பத்துக்காகத் தன் அடையாளத்தையும் கனவையும் தொலைத்துவிட்ட பெண்கள், குடும்பச் சுமையில் சிக்கி இயந்திரமயமான வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். குடும்பத்துக்காகவே பல விஷயங்களை இழக்கிறார்கள்.

அவர்களது உழைப்பை உறிஞ்சிக் கொண்டு போதாமைகளைச் சுட்டிக் காட்டிக் குடும்பமே அவர்களை இழிவுபடுத்துகிறது. இவற்றை பொறுத்துக் கொண்டுபோகும் பெண்களின் வலியைச் சொன்னவிதம் சரிதான். ஆனால் அதை இன்னும் யதார்த்தமாகச் சொல்லியிருக்கலாம்.

இந்து டாக்கீஸ் குழு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 36 வயதினிலே - விமர்சனம்

Post by சிவா on Tue May 19, 2015 11:34 pm

'36 வயதினிலே'; ரசிகர்களுக்கு நடிகை ஜோதிகா நன்றி

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் '36 வயதினிலே' படம் வாயிலாக திரையில் தோன்றியிருக்கிறார் நடிகை ஜோதிகா. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.

ரசிகர்களுக்கு அவர் தெரிவித்த நன்றி பின்வருமாறு:-

பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாட விரும்பும் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான் உங்கள் முன் இன்று பெருமையுடன் நின்று கொண்டிருக்கக் காரணம் ரசிகர் பெருமக்களாகிய நீங்கள்தான். உங்களில் ஒவ்வொருவரும் இந்த படத்தை ரசித்திருக்கிறீர்கள். பெண்களை வெற்றியை நீங்கள் போற்றுகிறீர்கள். அதனால்தான், இந்த படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. சமுதாயத்தில் இனி பல வசந்திகள் தங்கள் லட்சியங்களை வெல்ல முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். இல்லத்தரசியாக அன்றாடம் பல பணிகளை ஆற்றி வரும் பெண்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்கிறார்கள். அப்படிபட்ட பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என எனக்குள் ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையே இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்.


இவ்வாறு நடிகை ஜோதிகா தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 36 வயதினிலே - விமர்சனம்

Post by சிவா on Tue May 19, 2015 11:36 pm

விசாரணைக் கைதியுடன் '36 வயதினிலே' ரசித்த 3 போலீஸார் சஸ்பெண்ட்

விசாரணைக் கைதியை சினிமாவுக்கு அழைத்துச் சென்ற விழுப்புரம் போலீஸார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இரு சக்கர வாகனங்களைத் திருடும் கும்பலைச் சார்ந்தவர் என சொல்லப்பட்ட மதன் என்பவரை கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு போலீஸார் விசாரித்து வந்தனர். மணி 10.30 ஆனதும், காவல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது என்பதால், கை விலங்குடன் மதனை ஜீப்பில் ஏற்றி ரவுண்ட்ஸ் வந்தனர்.

அப்போது முருகா தியேட்டரில் '36 வயதினிலே' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அழகேசன், தலைமைக் காவலர் ஞானபிரகாசம், ஜீப் டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும், விசாரணைக் கைதியுடன் படம் பார்த்தனர்.

கைவிலங்குடன் மதன் படம் பார்ப்பதைக் கண்ட பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் தகவலைப் பரப்பினர். இத்தகவல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர நாயர், டி.எஸ்.பி. சீத்தாராமன் ஆகியோரருக்கு சென்றது.

இதனால் விசாரணை நடத்தப்பட்டது. விழுப்புரம் நகர காவல்நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அழகேசன், தலைமைக் காவலர் ஞானபிரகாசம், ஜீப் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்டது தெரிய வந்ததும், மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

போலீஸ் தரப்பில் விசாரித்தால் ''மதனின் கூட்டாளிகள் அங்கு படம் பார்க்க வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனால்தான் மதனை அழைத்துச் சென்றோம்.

மதனின் கூட்டாளிகள் வரவில்லை. நாங்கள் மதனுக்கு கைவிலங்கு போட்டதால் பொதுமக்கள் கண்டுபிடித்துவிட்டனர். மதனுக்கு கைவிலங்கு போட்டதுதான் நாங்கள் செய்த தவறு'' என்று கூறுகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 36 வயதினிலே - விமர்சனம்

Post by krishnaamma on Wed May 20, 2015 1:21 am

நன்றி சிவா புன்னகை.....படம் பார்த்தாச்சா ? ....நான் நேற்றே டவுன்லோட் செய்து விட்டேன் நாளை தான் பார்க்கணும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 36 வயதினிலே - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum