புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_m10சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu May 01, 2014 8:57 am

First topic message reminder :

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி...! இன்று காலை சுமார் 7.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ம் நடைமேடையில் நின்றிருந்த பெங்களுரூவிலிருந்து கவுகாத்தி செல்லும் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. S - 4 பெட்டியில் ஒரு குண்டும், S - 5 பெட்டியில் மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. ரயிலின் S-4 மற்றும் S-5 பெட்டிகள் சேதம். 10 பேர் படுகாயம். ஸ்வாதி என்ற 22 வயது பெண் பலி. இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். சென்னை மாநகரம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உதவி மையம் தொடர்பிற்கு தொலைபேசி எண்: 044 - 25357398.


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 9:51 am

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.45 மணியளவில் குண்டு வெடித்தது.

இதில் ஒரு பெண் உயிரிழந்ததாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது. சுமார் 10 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கவுகாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 9-வது நடைமேடைக்கு வந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்தக் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நேற்று (புதன்கிழமை) பாகிஸ்தாப் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய ஹெல்ப்லைன்: 044 - 2535 7398

-- the hindu - tamil

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 11:59 am

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 WR_20140501112825

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 01, 2014 12:15 pm

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...! - Page 2 01-chennai-blast4511145-600

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu May 01, 2014 3:10 pm

மனிதனால் தடுக்க இயலாத மரணங்கள் மலேசிய விமானம்-300+ கொரிய கப்பல் -200+ என தொடர்ந்து மனம் வருத்தும் செய்திகள் கேட்டும் எப்படி மனிதனுக்கு மனிதனே அழிவைத்தர மனம் வருகின்றது. அவர்களின் வருத்தத்தையும் கோபத்தையும் காட்ட அடுத்தவர்களின் வாழ்வை அரிக்கும் உரிமை இவர்களுக்கு யார் கொடுத்தது?



கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:07 am

சென்னை சம்பவத்திற்கு ஸ்லீப்பர் செல் காரணமா?கடலூரில் பயங்கரவாதி கைது

கடலூர்:சென்னை சென்ட்ரலில், நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தானை சேர்ந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை கடலூரில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

ராஜஸ்தானை சேர்ந்தவன், அஷ்ரப் அலி, 40. தற்போது கடலூரில் தங்கியுள்ள அஷ்ரப் அலியை, ராஜஸ்தான் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு படையினர் பல நாட்களாக தேடி வந்துள்ளனர். அங்கு காலணி வியாபாரம் செய்த அலி, இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவன்.அங்குள்ள இளைஞர்களுக்கு, ஸ்லீப்பர் செல்லாக மாற்றி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தி வந்துள்ளான். ஜோத்ப்பூர், டில்லி உள்ளிட்ட இடங்களில் நடந்த அசம்பாவிதங்களில் அலிக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானிலிருந்து டில்லி சென்ற அலி, அங்கிருந்து ரயில் மூலம் தமிழகம் வந்து கடலூர் மாவட்டத்தில் தங்கியுள்ளான்.

இதுகுறித்து, தமிழக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கடலூரில் தங்கியிருந்த அஷ்ரப் அலியை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் அலிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற வகையில் விசாரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஸ்லீப்பர் செல் முறை கடைபிடிக்கப்பட்டதா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:08 am

குறைந்த சக்தி கொண்ட 'டைம் பாம்'

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்தது, மிக குறைந்த சக்தி கொண்ட, 'டைம் பாம்' என, தெரியவந்துள்ளது.

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கவுகாத்தி ரயிலின் இரண்டு பெட்டிகளில், குண்டுகள் வெடித்ததில், ஒரு பெண் பலியானார்; 14 பேர் காயமடைந்தனர்.சம்பவ இடத்தில் கிடைத்த, வெடிகுண்டுகளின் பாகங்களை, வெடிகுண்டு நிபுணர்கள் சேகரித்து, ஆய்வு மேற்கொண்டனர்.முதல் கட்ட ஆய்வில், அது குறைந்த சக்தி கொண்ட, 'டைம் பாம்' என்பது தெரியவந்துள்ளது.நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும், 'அமோனியம் நைட்ரேட்' கலந்த வெடிமருந்துடன், சில ரசாயன பொருட்களையும், இரும்பு துகள்கள் உள்ளிட்ட சில பொருட்களையும் கலந்து, இந்த குண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை ஒன்றாக கலந்து, இறுக்கி கட்டி, அதனுடன், 'டைமர், பேட்டரி' ஆகியவற்றை சேர்த்துஉள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, வெடிகுண்டு நிபுணர் கள் தரப்பில் கூறப்படுவதாவது:பயணிகள் இருக்கையின் அடியில் குண்டு வைக்கப்பட்டு, பயணிகளின் உடைமைகள் சிலவற்றை கொண்டு அழுத்தப்பட்டுஉள்ளது. இதனால்தான், வெடித்தபோது இந்த அளவு சேதம் ஏற்பட்டு உள்ளது. குண்டு வெளியில் இருந்துஇருந்தால், சேதம் குறைந்திருக்கும். மேலும், இந்த வெடிகுண்டு, சென்னையில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை; பெங்களூரிலோ, வேறு இடங்களிலோ வைத்து ரயிலில் வைக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பீகார் குண்டு உதாரணம்!

சென்னை, சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் போன்றே, கடந்த ஆண்டு, பீகார் மாநிலம், பாட்னாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதை நடத்தியது, 'இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத அமைப்பு என்பதை, போலீசார் உறுதிப்படுத்தினர்.பாட்னா ரயில் நிலையம் மற்றும் பாட்னா காந்தி மைதானம் உள்ளிட்ட, எட்டு இடங்களில், கடந்த ஆண்டு, அக்டோபர், 27ம் தேதி குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், ஆறு பேர் பலியாகினர்; 85 பேர் காயம் அடைந்தனர்.பீகார் சம்பவத்தில், அமோனியம் நைட்ரேட் கொண்டு தயாரிக்கப்பட்ட குறைந்த சக்தி கொண்ட, 'டைம் பாம்' பயன்படுத்தப்பட்டிருந்தது.

சென்னையில் வெடித்தது ஆந்திராவுக்கான குண்டா?பெங்களூர் - கவுகாத்தி ரயில் கால அட்டவணை நேரத்தைவிட, ஒன்றரை மணி நேரம் தாமதமாக, பயணித்ததால், ஆந்திராவில் வெடித்திருக்க வேண்டிய குண்டுகள், சென்னை சென்ட்ரலிலேயே வெடித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆந்திராவில், தேர்தல் நடப்பதையொட்டி, நெல்லூர், குண்டூர், பீமாவரம், மதன பள்ளி, திருப்பதி உள்ளிட்ட, ஆறு இடங்களில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, நேற்று பிரசாரம் மேற்கொண்டார். கவுகாத்தி ரயில் செல்லும் வழித்தடமும், இந்த நகரங்களை ஒட்டியே செல்கிறது.எனவே, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில், ஆந்திராவிற்கு குண்டுகள் அனுப்பப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ரயில் தாமதமானதால், இந்த குண்டுகள் சென்னையிலேயே வெடித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:10 am



சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்பில், ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்; 14 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படை யில், விசாரணையை துவக்கிய தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், கண்காணிப்பு கேமராவில் சிக்கிய, ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

பெங்களூரில் இருந்து சென்னை வழியாக, அசாம் மாநிலம், கவுகாத்தி செல்லும், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12509) நேற்று காலை, 7:05 மணிக்கு, சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது.

பெண் பலி:

ரயில் நிலையத்தின், ஒன்பதாவது பிளாட்பாரத்திற்கு வந்து நின்ற அந்த ரயிலில் இருந்து, பயணிகள் இறங்கத் துவங்கினர். பயணிகள் இறங்கிக் கொண்டிருக்கும் போது, 7:14 மணி அளவில், எஸ் 4 மற்றும் எஸ் 5 பெட்டிகளில், அடுத்தடுத்து, இரண்டு குண்டுகள் வெடித்தன.இந்த சம்பவத்தில், அந்த பெட்டிகளில் இருந்த, 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். எஸ் 4 பெட்டியில், 70ம் எண் இருக்கையில் பயணித்த ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த சுவாதி, 22, சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதிகாரிகள் விரைவு:

அடுத்தடுத்த பெட்டிகளில், குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால், பயணிகள், ரயில் பெட்டியிலிருந்து இறங்கி, பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடினர். சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒன்பதாவது பிளாட்பாரம் பகுதியில், போலீசார், பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு, அங்கு யாரையும் அனுமதிக்க வில்லை. குண்டு வெடிப் பில், காயமடைந்த, 14 பேரை உடனடியாக மீட்டு, ஆம்புலன்சில், ரயில் நிலையம் எதிரில் உள்ள, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தடயங்கள் சேகரிப்பு :

தொடர்ந்து, அங்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், ரயில் பெட்டி களில் சோதனை செய்தனர். ஆறு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, ரயில் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.குண்டுவெடிப்பில் பாதிப்பு அடைந்த. எஸ் 4, எஸ் 5, பெட்டிகளுடன், எஸ் 3 பெட்டியும் அந்த ரயிலில் இருந்து, விடுவிக்கப்பட்டு, ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன.பெட்டிகள் விடுவிக்கப்பட்டவுடன், குண்டு வெடிப்பு நடந்த பெட்டிக்கு கீழே தண்டவாள பகுதியில், வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு கிடந்த ஒயர், மரத்துண்டுகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

வழக்குப் பதிவு :

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து, சென்ட்ரல் ரயில் நிலைய துணை மேலாளர் பாலசுப்ரமணி அளித்த புகாரின் பேரில், கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், தமிழ்நாடு வெடிமருந்து தடுப்பு சட்டத்தின் முதல், இரு பிரிவுகள், ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தொடர்ந்து, தமிழக அரசு உத்தரவுப்படி, இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,யின் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டு, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்ட்ரல் ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில், கவுகாத்திரயிலில், ஐந்து மர்ம நபர்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது பதிவாகி உள்ளது. இந்த ஐந்து பேரையும், போலீசார் தேடி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் சதியா?

சென்னை மண்ணடியில், மருந்து மற்றும் துணி வியாபாரி போல் பதுங்கியிருந்து, தீவிரவாதிகள் உதவியுடன், அமெரிக்க துணை தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை தகர்க்க உளவு பார்த்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., உளவாளி முகமது ஜாகீர் உசேனை, 37, இரண்டு நாட்களுக்கு முன், க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, தமிழக டி.ஜி.பி., அலுவலகத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், 'ஜாகீர் உசேனை, நான்கு மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும். தவறினால், பேரிழப்பை சந்திக்க நேரிடும்' என, மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.இந்த மிரட்டலை தொடர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலைய வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளதால், ஐ.எஸ்.ஐ., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கிடைத்துள்ள சில தடயங்கள் அடிப்படையில், போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:11 am



பிலால் மாலிக்கிடம் விசாரணை :

இந்த சதிச் செயல் தொடர்பாக, அதே ரயிலில் பயணித்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது காலித், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்த் வினய் மற்றும், போலீசாரிடம் சிக்கியுள்ள,

பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் சிலரிடமும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், பெங்களூரில் இருந்து சென்னை வந்து, அதன் பின், சென்னை விமான நிலையத்தில் கைதான, கவுகாத்தியைச் சேர்ந்த, அகமது ஹூசைன் பவுச்சியா, 25, என்பவரையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையில், வேலூர் சிறையில் இருக்கும் பயங்கரவாதி பிலால் மாலிக், சிறை அதிகாரிகளிடம், சென்னை குண்டு வெடிப்பு சம்பவம்; பலியானவர்கள் விவரத்தை கேட்டுள்ளான்.இதையடுத்து, உளவுப் பிரிவு போலீசார், பிலால் மாலிக்கிற்கு இத்தகவல் கிடைத்தது எப்படி என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஒத்திகையா?

கடந்த சில தினங்களாகவே, கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி, தமிழகத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என, மத்திய உளவுப் பிரிவு போலீசார் எச்சரித்திருந்ததனர். இதன் தொடர்ச்சியாக, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால், பயங்கரவாதிகள், சென்னையில், ஒத்திகை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர் விசாரணையில், இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ரூ.1 லட்சம் இழப்பீடு!

''குண்டு வெடிப்பில் உயிரிழந்த சுவாதியின் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ''படுகாயம் அடைந்தவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க, ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்த விசாரணையில், காவல் துறையினரோடு இணைந்து செயல்படுவோம்,'' என்றார்.

ஓடும் ரயிலில் நடந்த விசாரணை:

கவுகாத்தி ரயிலில் குண்டு வெடித்த போது, அந்த ரயிலின், எஸ் 4, எஸ் 5 பெட்டிகள் மற்றும் அருகில் இணைக்கப்பட்டிருந்த, எஸ் 3 பெட்டிகளின் பயணிகள், அலறி அடித்தபடி, தங்கள் உடைமைகளை எடுக்காமல், ரயிலில் இருந்து கீழே இறங்கி, அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பின், உடைமைகளை எடுக்க வந்த ஒருவரை, போலீசார் பிடித்து விசாரித்ததால், பயணிகள்அப்பகுதிக்கு வருவதை தவிர்த்தனர். சம்பந்தப்பட்ட, மூன்று பெட்டிகளும் ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு, அதற்குப் பின், புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டன. ரயிலில் இருந்து பிரிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகளின் உடைமைகள், டிராலி மூலம், ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அடையாளம் அறியப்பட்டு, பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, கவுகாத்தி ரயில், சென்ட்ரலில் இருந்து, காலை, 11:38 மணிக்கு, கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றது. அதில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட, 15 போலீசார் பாதுகாப்பிற்காக சென்றனர்.ஆந்திர மாநிலம், கூடூர் வரை சென்ற அவர்கள், செல்லும் வழியில், பயணிகளிடம், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

ஜெ., அதிரடி என்.ஐ.ஏ., வரவில்லை:

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்த, தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி.,) தடவியல் நிபுணர்களை டில்லியில் இருந்தும் தேசிய புலனாய்வு ஏஜன்சியின் (என்.ஐ.ஏ.,) அதிகாரிகளை ஐதராபாத்தில் இருந்தும், தமிழகத்திற்கு அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா, குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழக உள்துறை கேட்டுக் கொண்டதன் பேரில், என்.எஸ்.ஜி., மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகளை, தமிழகத்திற்கு அனுப்புவதை மத்திய அரசு நிறுத்திக் கொண்டது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:12 am


டிக்கெட் பரிசோதகர் மாரடைப்பால் மரணம்

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த பாலமுரளி, 44, என்பவர், டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார்.ரயில், பெரம்பூர் வந்தபோது, பாலமுரளி, எஸ் 3 பெட்டியில் இருந்து, எஸ் 4 பெட்டிக்கு சென்றார். அப்பெட்டியின் கடைசி பகுதியில், 70வது இருக்கைக்கு கீழ் குண்டு வெடித்ததை பார்த்ததும், அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார்.பாலமுரளியை, ரயில்வே போலீசார் மீட்டு, பெரம்பூர் ரயில்வே மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, பகல், 12:00 மணிக்கு பாலமுரளி இறந்தார்.

ரயில்கள் புறப்படுவதில் தாமதம்:

ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பெங்களூரு 'ஏசி' ரயில், பெங்களூர், பிருந்தாவன், கோரமண்டல், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அரை மணி நேரம் முதல், ஒன்றரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.இதே போல, சென்ட்ரலுக்கு வர வேண்டிய மங்களூர், திருவனந்தபுரம், முசாபர்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. அந்த ரயில்கள், ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தன.

குண்டு வைக்கப்பட்ட ஊர் எது?

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அடுத்ததாக, கிருஷ்ணராஜபுரம் வந்த போது, அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. அடுத்து, பங்காருபேட்டையில், டிக்கெட் பரிசோதகரும், சோதனை செய்து விட்டு சென்று விட்டார்.அதற்குப் பின், முன்பதிவு செய்யாத பயணிகள் பலர், ரயிலில் ஏறியுள்ளனர். ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி போன்ற பகுதிகளிலும், முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறியுள்ளனர்.இதனால், குண்டு இருந்த பை எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து, பயணிகளுக்கு தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

ரகசிய கேமராவில் சிக்கிய 5 பேர் :

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒன்பதாவது பிளாட்பாரத்தில், ஐந்து, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இவற்றில் உள்ள பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்பதாவது பிளாட்பாரத்தில் காலை, 7:05 மணிக்கு வந்து நிற்பது, அதில் இருந்து சிலர் இறங்குவது, சிலர் ஏறுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.அப்போது, 35 வயது மதிக்கத்தக்க, ஐந்து பேர், தோளில் பைகளுடன், ரயிலுக்குள் செல்வது, சிறிது நேரம் கழித்து பைகள் இல்லாமல் இறங்கிச் செல்வதுதெரிந்துள்ளது. அதில் ஒருவர், ரயிலையே திரும்பி திரும்பி பார்த்து செல்வது போன்ற காட்சிகள், அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், ரயில் பெட்டியிலிருந்து கூச்சல், குழப்பம், புகை தெரிவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.இந்த காட்சிகளை கண்ட போலீசார், சம்பந்தப்பட்ட ஐந்து பேரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:12 am



சந்தேக நபரிடம் விசாரணை

ரயில் பெட்டியில் குண்டுவெடித்த போது, அதில் பயணித்த ஒரு வாலிபர், பயந்து வெளியில் இறங்கி ஓடினார். அப்போது, தன் உடைமைகளை, பெட்டிக்கு வெளியில் வைத்து விட்டு சென்று விட்டார்.அதன் பின், முன்பதிவு அல்லாத பெட்டியில் அமர்ந்து கொண்ட அவர், ஒன்றரை மணி நேரம் கழித்து, தன் உடைமைகளை எடுக்க வந்தார். அப்போது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில், அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர், அசாம் மாநிலத்தை சேர்ந்த முமைத் கான். சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார் என்பதும், மொழி தெரியாத நிலையில், போலீசாரையும், துப்பாக்கியையும் கண்டு பயந்து ஓட்டம் பிடித்துள்ளார் என்றும் தெரிய வந்தது.பிடிபட்ட அந்த வாலிபர் தான், வெடிகுண்டு வைத்ததாக வதந்தி பரவியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்பு கொள்ளுங்கள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தகவல் அறிய, தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தொடர்பு கொள்வோர், 044 - -2535 7398 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிந்து கொள்ளலாம்.பெங்களூரு ஹெல்ப் லைனை, 080 - 2235 6409, 080 - 2215 6553 என்ற எண்களிலும், பெங்களூரு ரயில்வே கட்டுப்பாட்டு அறையை, 080 - 2287 6288 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்புகள்

*1984 ஆகஸ்ட்: சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வெடித்ததில் 33 பேர் பலி. 27 பேர் காயம்.

*1987 மார்ச் 16: சென்னை- -திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், அரியலூர் அருகே குண்டு வெடித்ததில் 25 பேர் பலி. 150 பேர் காயம்.

*1991 மே 21: முன்னாள் பிரதமர் ராஜிவ் பங்கேற்ற ஸ்ரீபெரும்புதூர் பிரசார பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ராஜிவ் உட்பட 15 பேர் பலி.

*1998 பிப்.14: கோவையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை குறிவைத்து நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 58 பேர் பலி. 200க்கும் அதிகமானோர் காயம்.

*2014 மே 1: நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த கவுகாத்தி ரயிலில் குண்டு வெடித்து ஒருவர் பலி. 14 பேர் காயம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக