புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
1 Post - 1%
Kavithas
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
1 Post - 1%
சிவா
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
1 Post - 1%
bala_t
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
1 Post - 1%
prajai
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
297 Posts - 42%
heezulia
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
6 Posts - 1%
prajai
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
4 Posts - 1%
manikavi
30 வகை பிரியாணி Poll_c1030 வகை பிரியாணி Poll_m1030 வகை பிரியாணி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை பிரியாணி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:04 pm

1. பைனாப்பிள் பிரியாணி

[noguest]  தேவையானவை: பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
30 வகை பிரியாணி 1
செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்றுசேர்ந்து வந்ததும் இறக்கவும்.[/noguest]

குறிப்பு: சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போதுதான் பாகு கெட்டிப்பதம் வரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:06 pm

2. தக்காளிக் காய் - பழம் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், தக்காளிக்காய், தக்காளிப்பழம், பச்சை மிளகாய் - தலா 2 (நறுக்கவும்),  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பெரிய வெங்காயம் - ஒன்று, பிரெட் ஸ்லைஸ் - 2, முந்திரித் துண்டுகள் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை பிரியாணி 2
செய்முறை: [noguest]   வெந்நீரில் தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து... தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை துண்டுகளாக்கி வறுக்கவும். குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும். மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது. [/noguest]



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:11 pm

3. இளநீர் பிரியாணி



தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, காய்ந்த திராட்சை  - தலா 2 டேபிள்ஸ்பூன், இளநீர் - ஒரு கப், இளநீர் வழுக்கை (ஒன்றிரண்டாக அரைத்தது) - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை.
30 வகை பிரியாணி 4
செய்முறை: [noguest]   பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். முந்திரி, காய்ந்த திராட்சையை நெய்யில் வறுக்கவும். குக்கரில் அரிசியைச் சேர்த்து இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட் ஆகியவற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

தேவைப்பட்டால், சூடாக இருக்கும்போதே பொடித்த சர்க்கரை சேர்க்கலாம். [/noguest]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:12 pm

4. மசாலா முந்திரி பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப்,[noguest]  கடைகளில் கிடைக்கும் முழு மசாலா முந்திரி - 15, பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, கசகசா, லவங்கம் சேர்த்து வறுத்து அரைத்த பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: தோல் நீக்கிய வேர்க்கடலை, தேங்காய் துருவல் - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 4, முந்திரித் துண்டுகள் - 6, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
30 வகை பிரியாணி 5
செய்முறை:  பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் பட்டை மசாலா பொடி சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, மசாலா முந்திரியை லேசாக வறுத்து, வடித்த சாதத்தை அதில் போட்டுப் புரட்டி, பொடித்து வைத்த  பொடியைத் தூவி இறக்கவும்.

சிறுவர்கள் விரும்பும் இந்தப் பிரியாணி, காலையில் செய்தால் மாலை வரை நன்றாக இருக்கும். [/noguest]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:14 pm

5. மாங்காய் பிரியாணி


தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், முற்றிய கிளிமூக்கு மாங்காய் - ஒன்று, வறுத்த வேர்க் கடலை - 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று,  கொத்தமல்லித் தழை - 6 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை பிரியாணி 6
செய்முறை:  பாசுமதி அரிசி யுடன் உப்பு,[noguest]   மூன்றரை கப் நீர் சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை நன்றாகக் கழுவி, கொட்டையை நீக்கி தோலுடன் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி மாங்காயுடன் சேர்த்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, மல்லித்தழையை சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் (நீர் விட வேண்டாம்... நைஸாகவும் அரைக்கக் கூடாது). வாணலியில் எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், வறுத்த வேர்க்கடலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெந்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை.  [/noguest]


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:16 pm

6. நூடுல்ஸ் பிரியாணி



தேவையானவை: கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (பிளெய்ன்)  - 2 கப் (ஒரே சீராக உடைத்தது), பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்ந்தது) - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள: துருவிய தேங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - ஒரு டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) - 3 டேபிள்ஸ்பூன்.
30 வகை பிரியாணி 7
செய்முறை:  அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி... முதலில் காய்கறிகளை வதக்கி, பின்னர் நூடுல்ஸை சேர்த்து வதக்கி, முக்கால் கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் (இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்), அரைத்த விழு தினைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் எல்லாமாகச் சேர்த்து வெந்துவிடும். அப்போது எலுமிச்சைச் சாற்றினை விட்டு கலந்து, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

விருப்பப்பட்டால், இஞ்சி - பூண்டு விழுதை வதக்கி சேர்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:17 pm

7. ஸ்பெஷல் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 4 பல், தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சோம்பு, கிராம்பு, கசகசா, பிரிஞ்சி இலை, மராட்டி மொக்கு ஆகியவற்றை வறுத்துப் பொடித்த பொடி - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, கேரட், உருளைக்கிழங்கு, நூல்கோல் - தலா ஒன்று, நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ் - கால் கப், ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 4 டேபிள்ஸ்பூன், சிறிய சதுரங்களாக வெட்டிய பிரெட் - கால் கப், நெய் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: தேங்காய் துருவல் - முக்கால் கப், உதிர்த்த புதினா இலைகள் - அரை கப், உதிர்த்த கொத்தமல்லி இலைகள் - கால் கப், தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உடைத்த முந்திரித் துண்டுகள் - 10, பச்சை மிளகாய் - 4.
30 வகை பிரியாணி 8
செய்முறை:  கேரட், நூல்கோல், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை வதக்கி, இறுதியில் பூண்டை நசுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு... அரைத்து வைத் துள்ள மசாலா விழுது, உப்பு சேர்த்து, பிறகு அரிசியை சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும் வெயிட் போடுமுன் குக்கரைத் திறந்து, ஊறவைத்த பச்சைப் பட்டாணி, தயிர், மசாலா பொடி சேர்த்து மீண்டும் ஒரு கிளறு கிளறி, குக்கரை மூடி, வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் குக்கரை ஆஃப் செய்துவிடவும். வாணலியில் நெய் ஊற்றி பிரெட் துண்டுகளை வதக்கவும். ஆவி வெளியேறியதும் குக்கரைத் திறந்து பிரியாணியில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து துண்டுகள் உடைந்துவிடாமல் கிளறிவிடவும்.

[noguest] ஹோட்டலின் சுவையை மிஞ்சும் இந்த பிரியாணியை நாம் வீட்டிலேயே செய்து பார்ட்டிகள் மற்றும் வீட்டு விசேஷங்களில் பரிமாறி அசத்தலாம். குருமா, இதற்கு ஏற்ற சைட்டிஷ்.  [/noguest]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:19 pm

8. நாரத்தங்காய் பிரியாணி


தேவையானவை: ஜாதி நார்த்தங்காய் சாறு - 6 டேபிள்ஸ்பூன் (கசப்பில்லாததாக இருக்க வேண்டும்) பச்சரிசி - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - ஒன்று, கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. [noguest]


வறுத்துப் பொடிக்க:  காய்ந்த மிளகாய் - 3, வெந் தயம் - கால் டீஸ்பூன் (மொத்தம் 10  இருந்தால் போதும்) எள் - ஒரு டீஸ்பூன், மிளகு - 10, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
30 வகை பிரியாணி 9
செய்முறை:  பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து... உப்பு, 2 கப் நீர் சேர்த்து, பட்டாணியையும் சேர்த்து உதிர் உதிராக வேகவிடவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாகப் பொடிக்கவும். வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு, கேரட் துருவல் சேர்த்து லேசாக வதக்கி, வறுத்து அரைத்த பொடியைத் தூவி இறக்கிவிடவும். இதனுடன் நார்த்தங்காய் சாறு சேர்க்கவும். பிறகு, உதிர் உதிராக வடிந்த சாதத்தைச் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

கலர்ஃபுல்லான இந்த நார்த்தம்பழ பிரியாணி, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் வாய்க் கசப்பை போக்கும்.   [/noguest]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:20 pm

9. பாகற்காய் - மேத்தி பிரியாணி

தேவையானவை: நீளமான பாகற்காய் - 2, பாசுமதி அரிசி - ஒரு கப், கஸ¨ரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை ) - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2.
30 வகை பிரியாணி 10
செய்முறை:  தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கி, ஒரு தட்டில் வைத்து... வெல்லம், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கால் மணி நேரம் ஊறவிடவும். பிறகு நன்றாகக் கழுவி அலசிவிடவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஒன்றரை கப் நீர் ஊற்றி, அரிசி சேர்த்து... உப்பு, அரைத்த தேங்காய் விழுது, பாகற்காய், கஸ¨ரி மேத்தி சேர்த்துக் கலக்கவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: பாகற்காய், கஸ¨ரி மேத்தி இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. தேவைப்பட்டால், சிறிதளவு இஞ்சி, பூண்டு வதக்கி பிரியாணியில் சேர்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 6:21 pm

10. புதினா - மல்லி பிரியாணி


தேவையானவை: பச்சரிசி - 2 கப், புதினா, [noguest]  கொத்தமல்லி - தலா ஒரு சிறிய கட்டு, தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, வெங்காயம், தக்காளி  - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை பிரியாணி 11
செய்முறை:  வெறும் வாணலியில் பச்சரிசியை வறுக்கவும். புதினா, கொத்தமல்லியைச் சுத்தம் செய்து தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, 3 கப் நீர் விட்டு அரிசி, உப்பு, அரைத்து வைத்த புதினா - கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்றாகக் கலக்கி, குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

அதிக செலவில்லாத இந்த பிரியாணி, அசத்தலான சுவையில் இருக்கும். [/noguest]

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக