புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
30 Posts - 55%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
21 Posts - 38%
Manimegala
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
1 Post - 2%
jairam
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
12 Posts - 4%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
4 Posts - 1%
jairam
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Rutu
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 14 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 29, 2014 10:53 am

கட்சிகளின் கசப்பான தேர்தல் பிரச்சாரம்


நாடு முழுவதும் 7-வது கட்டமாக 89 மக்களவைத் தொகுதிகளுக்கும் தெலங்கானா சட்டமன்றத்துக்கும் (நாளை) புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் கசப்பின் உச்சத்தை எட்டியது.

இந்த வார்த்தைப் போரில் மையத்தில் நரேந்திர மோடி நிற்க, அவரைச் சுற்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டன.

7-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (செவ்வாய்கிழமை) மாலை முடிவுக்கு வந்தது. தான் சற்றும் சளைத்தவர் இல்லை என்பது போல், தன் மீதான விமர்சனங்களுக்கு மோடியும் பிரச்சாரங்களில் பதில் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி: "பொழுதுபோக்குக்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ராகுல் வீடியோக்களை பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். சில நேரங்களில் நீங்கள் மனஇறுக்கத்தில் இருந்தால் உடனடியாக ராகுலின் பேச்சுகளை கேளுங்கள். அவரது கணித அறிவின்படி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையே 6 கோடிதான். இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 125 கோடி. அதையும் தாண்டி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராகுல் கூறுகிறார். எந்த மாதிரியான நபரை தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது என்பது எனக்குப் புரியவில்லை" என பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கான்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி: "குஜராத்தில் ஒரே ஒரு மாதிரி வளர்ச்சித் திட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது. அது பணக்காரர்களுக்கான வளர்ச்சித் திட்டம். மோடி அரசிடமிருந்து பெற்ற சலுகையின் காரணமாக தொழிலதிபர் அதானி, ரூ. 35 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளார். நாட்டில் ஒரு சிலர் மட்டுமே வளம் பெற வேண்டும் என்று மோடி கருதுகிறார் போலும். நாங்கள் (காங்கிரஸ்) அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத்தான் விரும்புகிறோம்" என பேசினார்.

ஆனால், விடாமல் வார்த்தைப் போரை தொடர்ந்த பாஜக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நிலமோசடி புகாரை கையில் எடுத்தது.

"எங்களுக்கு சவால் விடுவதை நிறுத்திக் கொண்டு ராபர்ட் வதேரா மீதான புகார்கள் தொடர்பான எங்கள் கேள்விகளுக்கு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும்" என பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இது தவிர சமூக வலைத்தளங்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரை விமர்சித்து நரேந்திர மோடி பதிவுகள் இட்டிருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 4:10 am

 வரிசையில் நிற்காமல் வாக்களிக்க சென்ற சிரஞ்சீவியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!

வரிசையில் நிற்காமல் வேகமாக வாக்களிக்க சென்ற சிரஞ்சீவியை வரிசையில் நின்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தனர்.

வாக்குப்பதிவு

தெலுங்கானா பகுதியில் இன்று பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் வ் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகரும், காங்கிரஸ் கட்சியின் மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி தனது வாக்கை பதிவு செய்ய ஐதராபத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு பொதுமக்கள் நீண்ட தூரம் வரிசையாக நின்றுள்ளனர்.

தடுத்து நிறுத்தம்

இந்நிலையில் சிரஞ்சீவி வேகமாக வரிசைக்கு முன்னே சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்ற கார்த்திக் என்ற வாலிபர் சிரஞ்சீவி முன்னே சென்று வாக்களிக்க மறுப்பு தெரிவித்தார். கார்த்திக் கூறுகையில் “உங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை தேவையா? நீங்கள் வேண்டுமானால் மந்திய மந்திரியாக இருக்கலாம், ஆனால் நீங்கள் மூத்த குடிமகன் இல்லை. நீங்கள் உங்களுடையை குடும்பத்தினருடன் வரிசைக்கு முன்னதாக செல்லக்கூடாது.” என்று கூறினார். அப்போது சிரஞ்சீவி வாக்காளர்களை சமாதான படுத்த முயன்றார். 

சிரஞ்சீவி விளக்கம்

மற்ற வாக்காளர்களும் எதிர்த்ததை அடுத்து சிரஞ்சீவிக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இதனையடுத்து சிரஞ்சீவி எதுவும் கூறாமல் வரிசையின் கடைசியில் போய்நின்றார். பின்னர் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் “நான் வழிமுறைகளை மீறவில்லை. நான் என்னுடையை பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்கவே சென்றேன். இதனை மீடியாக்களே பெரிதாக்கிவிட்டன” என்று கூறினார்.

இது தொடர்பாக கார்த்திக் கூறுகையில், “நான் சிரஞ்சீவி மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவரும் வழிமுறைகளை பின்பற்றி வரிசையில் நிக்க வேண்டும். அவர் 65 வயதை தாண்டிய மூத்த குடிமகன் இல்லை” என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 4:13 am

 வாக்குச்சாவடி அருகே தாமரை சின்னத்தை காண்பித்ததாக புகார் நரேந்திரமோடி மீது வழக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

பா.ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில்தான் அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஓட்டு உள்ளது.

தாமரை சின்னம்

நேற்று இந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நடந்தபோது மோடி, ரனீப் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் தாமரை சின்னத்தை காண்பித்து, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். இதுதொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாயின.

காங்கிரஸ் புகார்

இதற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் கே.சி.மிட்டல், உடனடியாக தலைமை தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தார்.

அதில் “வாக்குச்சாவடி அருகே பா.ஜனதாவுக்காக மோடி பிரசாரம் செய்துள்ளார். மேலும் பொதுமக்களிடையே கட்சியின் சின்னத்தையும் காண்பித்து இருக்கிறார். இதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி விதிமுறை மீறல் ஆகும். இதற்காக அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்கம் செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார்.

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியாவும் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளார். அதில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மோடியை கைது செய்யவேண்டும் என்று கோரியுள்ளார்.

இதேபோல் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் சுக்தேவ் பட்டேலும் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளார்.

வீடியோ காட்சிகள் ஆய்வு

இதனையடுத்து காந்திநகர் வாக்குச்சாவடியில் மோடி ஓட்டுப்பதிவு செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ காட்சிகளை தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் உடனடியாக டெல்லிக்கு வரவழைத்து அதனை ஆய்வு செய்தனர்.

பின்னர் குஜராத் மாநில அரசு நிர்வாகத்துக்கு அதிரடியாக சில உத்தரவுகளையும் தேர்தல் அதிகாரிகள் பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மோடி மீது வழக்கு

குஜராத் மாநிலம் முழுவதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த நேரத்தில் நரேந்திரமோடி கூட்டம் நடத்தியதும், அதில் அவர் பேசியதும் 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1)(ஏ) மற்றும் 126(1) (பி) ஆகிய பிரிவுகளை மீறும் செயல்களாகவே அமைந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது.

இந்த கூட்டத்தில் தாமரை சின்னத்தை காண்பித்து மோடி பேசும் விதம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்து உள்ளது. இது காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தலை மட்டுமின்றி, இதே நேரத்தில் நாட்டில் தேர்தல் நடக்கும் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்து இருக்கிறது.

எனவே நரேந்திரமோடி மீதும், இந்த கூட்டத்தை நடத்தியவர்கள் மீதும் புகார் அல்லது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிடுகிறது.

தொலைக்காட்சிகள் மீதும் நடவடிக்கை

மேலும் இந்த கூட்டம் தொடர்பாக காட்சிகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1),(பி) பிரிவின் படி தனித்தனியாக புகார்களும் அல்லது வழக்குகளும் பதிவு செய்யப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து காந்திநகர் குற்றப்பிரிவு போலீசார் மோடி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

தலைமை செயலாளருக்கு உத்தரவு

இந்த பிரச்சினை தொடர்பாக குஜராத் மாநில தலைமைச்செயலாளர் விரிவான அறிக்கையை உடனடியாக தங்களுக்கு அனுப்பி வைக்கும்படியும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் காந்திநகர் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரூப்வந்த் சிங், கட்சியின் தேர்தல் சின்னத்தை மோடி காண்பித்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

சட்டப்பிரிவு கூறுவது...

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1), (ஏ), மற்றும் (பி) ஆகிய பிரிவுகளின்படி ஓட்டுப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு அப்பகுதியில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் கூட்டம் நடத்துவது அல்லது அதில் கலந்து கொள்வது, பொதுக்கூட்டத்தில் பேசுவது அல்லது அதில் இணைந்து கொள்வது, ஊர்வலம் நடத்துவது ஆகியவற்றை சினிமா காட்சிகளாகவோ, தொலைக்காட்சி படமாகவோ மற்றும் இதுபோன்ற இதர சாதனங்கள் மூலமாகவோ எவர் ஒருவரும் ஒளிபரப்பு செய்யக்கூடாது எனக்கூறப்பட்டுள்ளது.

விதிமுறைகளை பின்பற்றவேண்டும்

மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 130-வது பிரிவின்படி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்ட உத்தரவில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வாக்குச்சாவடிக்குள் எந்தவொரு கட்சியினரும் தங்களது கட்சியின் தேர்தல் சின்னம் பொறித்த தொப்பிகள், சால்வைகள், உடைகள் ஆகியவற்றை அணிந்து வரக் கூடாது.

இதேபோல் தேர்தல் நடைபெறும் நாளில் யாரும் ஓட்டு கேட்டோ, சின்னங்களை காண்பித்தோ பிரசாரம் செய்யக்கூடாது. இதேபோல் துண்டு பிரசுரங்கள், சமிக்ஞைகள் செய்வதையும் அனுமதிக்கக்கூடாது.

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களிலும் இந்தி விதிமுறைகளை பின்பற்றவேண்டும் எனவும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு அருகே 100 மீட்டர் சுற்றளவு தூரத்துக்கு ஓட்டுக்கேட்டு பிரசாரம் செய்வது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 4:14 am

பாராளுமன்றத் தேர்தல் 2014; 7 வது கட்ட வாக்குப்பதிவு; 89 தொகுதிகளில் காலை வாக்குப்பதிவு தொடங்கியது

நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 9 கட்டமாக அறிவிக்கப்பட்டதில், 6 கட்ட தேர்தல்கள் 349 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துவிட்டன. 7–வது கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாநிலமான தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தலுடன், முதல் சட்டமன்ற தேர்தலும் நடப்பது குறிப்பிடத்தக்கது.

7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், தொகுதிகள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– குஜராத் – 26, பஞ்சாப் – 13, ஆந்திரா – 17, உத்தரபிரதேசம் – 14, மேற்கு வங்காளம் – 9, பீகார் – 7, காஷ்மீர் – 1, யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ தலா ஒரு தொகுதிகள். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள். மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், சோனியா காந்தி உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்கள். பாரதீய ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி (காந்திநகர்), ராஜ்நாத்சிங் (லக்னோ), அருண்ஜெட்லி (அமிர்தசரஸ்), முரளிமனோகர் ஜோஷி (கான்பூர்), உமா பாரதி (ஜான்சி) மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா (ஸ்ரீநகர்) ஆகியோரின் வெற்றி–தோல்வி இன்று முடிவு செய்யப்படுகிறது. இன்றைய தேர்தலில் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த 89 தொகுதிகளில் 1,295 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 4:21 am

ஏப்ரல் 30ம் தேதியை மறக்க மாட்டேன்: மோடி

திருப்பதி: முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த நாளை(ஏப்ரல் 30) மறக்க மாட்டேன் என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது: என் மீது வழக்குப்பதிவு செய்வதில் காங்கிரஸ் காட்டிய தீவிரம், தோல்வியடையப்போகிறோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்து, அதிர்ச்சியடைந்திருப்பதை காட்டுகிறது. தனது வாழ்நாளில் டீ விற்றவர் சவால் விட்டுள்ளார் என கவலை கொண்டுள்ளது. நான் எந்த வித குற்றமும் செய்யவில்லை. பா.ஜ.,வின் தேர்தல் சின்னமான தாமரை இலையை காட்டினேன். எனது வாழ்நாளில் எந்த வழக்கும்பதிவு செய்யப்பட்டதில்லை. தவறான வழியில் இருசக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டியதாகவும், தவறான இடத்தில் காரை நிறுத்தியதாக கூட வழக்குப்பதிவு செய்யப்பட்டதில்லை. ஆனால் இன்று நான் தரையிறங்கிய போது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து தெரியவந்தது. நிச்சயமாக ஏப்ரல் 30ம் தேதியை மறக்க மாட்டேன்.

கத்தி, துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் வழக்குப்பதிவு செய்து மிரட்டும் போது, ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். இன்று என் மீது ஏன்வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியுமா? தாமரையை மக்களிடம் காட்டியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தோற்கும் நிலையில் உள்ளது. தனது வாழ்க்கையில் டீ விற்றவர், சவால் விட்டுள்ளது டில்லி அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நான் ஊழல் மற்றும் முறைகேடு செய்ததில்லை. மற்றவர்களை செய்ய தூண்டியதில்லை. விட்டதுமில்லை. நாட்டையும், ஆந்திராவையும் சுரண்டியவர்கள், தங்கள் தவறுக்கு வருந்தியாக வேண்டும்.

டில்லியில் உள்ள தாய் மற்றும் மகனின் அரசாங்கம், கறுப்பு பணம் குறித்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய மூன்றாண்டு காலம் எடுத்துக்கொண்டது. திறமையான மனித வளம், கேஜி பேசின் கேஸ், நீண்ட கடற்கரை மூலம் இந்த மாநிலம் வளர்ச்சியடைய முடியும். சீமாந்திரா பகுதியை வளர்ச்சியடைய செய்வேன். இந்த பகுதி மக்கள் பா.ஜ.,தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியை ஆதரிக்க வேண்டும். சீமாந்திராவை சிறந்த மாநிலமாக்க சந்திரபாபுநாயுடுவை முதல்வராக்க வேண்டும் என கூறினார்.

இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜன்சேனா கட்சி தலைவரும், மத்திய அமைச்சர் சிரஞ்சீவி சகோதரருமான பவன் கல்யாண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 3:49 am

ஊழலை ஒழிக்கவும், பரம்பரை ஆட்சியை அகற்றுவதற்கும் ராகுலை தோற்கடியுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

அமேதி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டில் ஊழல் ஒழிக்கப்படுவதற்கும், பரம்பரை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் காங்கிரஸ் கட்சியி துணை தலைவர் தோற்கடிக்கப்பட வேண்டுமென பேசியுள்ளார்.

அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குமார் விஷ்வாசை ஆதரித்து ஜக்டிஷ்பூரில் வாக்கு சேகரித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலை அடியோடு அழிக்கவும் பரம்பரை ஆட்சியை அகற்றவும் ராகுலை தோற்கடியுங்கள் என்று பேசினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளை அடித்ததாகவும், ஊழல், மோசமான அரசு மற்றும் பணவீக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 4:02 am


மோடி தனக்குத்தானே பிரதமர் என்று நினைத்துக் கொண்டுள்ளார்: சோனியா காந்தி

நரேந்திர மோடி தனக்குத்தானே பிரதமராக நினைத்து, அதை அறிவித்துக் கொண்டு, தான் ஏற்கெனவே இந்த நாட்டின் பிரதமர் ஆகிவிட்டதாக நடந்துகொள்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

முடிவுகள் எல்லாம் வந்துவிட்டதுபோலும், அவர் முள்ளின் மீது அமர்ந்திருப்பதுபோலும் ஒரு தோற்றத்தை மோடி ஏற்படுத்தி வருகிறார் என்று உத்திரப் பிரதேச மாநிலம் பைஸாபாத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது சோனியா காந்தி கூறினார்.

மோடி அனைத்து வளங்களும் ஒரே கையில் வர வேண்டும் என்றும் தாமே அதிகாரத்தின் ஒட்டுமொத்த மையம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த நாட்டின் மக்களே தேசத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பர் என்பதை அவர் மறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார் சோனியா காந்தி.

அண்மைக்காலமாக இரு தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மே 12ம் தேதி இருவரும் ஒருவருக்கு ஒருவர் கூறிக் கொள்ளும் இந்தக் கூரிய வார்த்தைகள் ஒருவேளை முடிவுக்கு வரலாம். அண்மையில், தாயும் மகனும் பொய்களை யார் சொல்வது என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக மோடி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 4:20 am

மோடி கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ப. சிதம்பரம்

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான மோடி வாக்களித்த பின், வாக்குச்சாவடிக்கு வெளியே தாமரை சின்னத்துடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.

இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

யாரோ ஒருவர் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுதான் கண்ணியமிக்க செயலாகும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மோடி மீதான வழக்குப்பதிவு குறித்துதான் பெயரைச் சொல்லாமல் சிதம்பரம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 5:19 am

தேர்தல் முடிவு வெளியாவது தாமதமாகும்: பிரவீன்குமார் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், ஒவ்வொரு சுற்று முடிவிலும் 14 மேஜைகளில் எண்ணப்பட்ட வாக்குகளை பற்றி விவரம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், வேட்பாளர்களின் முகவர்களுக்கு வாக்கு விவரம் அளிக்க உள்ளதால் இம்முறை தேர்தல் முடிவுகள் வர காலதாமதம் ஆகும் என்றும் கூறினார்.

மேலும் குண்டுவெடிப்பை தேர்தலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் பிரவீன்குமார் கேட்டுக்கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 5:28 am

சோனியா காந்தி பேச்சுக்கு 'அமைதி காத்தது' சீமாந்திரா

சீமாந்திராவில் நடந்த காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பேச்சுக்கு, எவ்வித ஆரவார வரவேற்பும் தரப்படாதது, அப்பகுதி மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதற்குப் பிறகு, முதல் முறையாக சீமாந்திராவுக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களின் அதிருப்தியை நேரில் கண்டார்.

சீமாந்திராவில் இம்மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குண்டூரில் உள்ள ஆந்திர முஸ்லிம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

சோனியா காந்தியின் 30 நிமிடப் பேச்சை வரவேற்கும் வகையில், கூட்டத்தில் இருந்து ஒருமுறை கூட கைத்தட்டலோ, ஆரவாரமோ எழுப்பப்படவில்லை.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது குறித்து உருக்கத்துடன் விவரித்த சோனியா காந்தி, சீமாந்திரா மக்கள் நலனில் கருத்தில்கொண்டே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

பல ஆண்டுகளாக தெலங்கானா மக்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் மதிப்பளித்து, மாநில பிரிவினைக்கு இறுதி முடிவு மேற்கொண்டது என்றும், இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

சீமாந்திரா இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், சீமாந்திரா வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

தனது பேச்சை வரவேற்காமல், சீமாந்திரா மக்கள் அமைதி காத்தது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததாக தெரிகிறது.

இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றாலும்கூட, எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்பதை மிகுதியாக காலியாக இருந்த இருக்கைகளே காட்டின.

Sponsored content

PostSponsored content



Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக