ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Feb 20, 2014 1:51 am


 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Feb 20, 2014 1:52 am

 பாராளுமன்ற தேர்தலையொட்டி, கமிஷனர் அலுவலகத்தில் விசேஷ கட்டுப்பாட்டு அறை

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருவது போல சென்னை நகர போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்து வருகிறார்கள். தமிழக தலைமை தேர்தல் கமிஷன் பிரவீன்குமாருடன் உயர் போலீஸ் அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்தநிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தலுக்காக விசேஷ போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், உதவி கமிஷனர் புகழேந்தி மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15 போலீசார் விசேஷ கட்டுப்பாட்டு அறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Feb 20, 2014 1:53 am

 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பு ரூ.70 லட்சம் ஆகிறது; தேர்தல் கமிஷன் தீவிர பரிசீலனை

வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பினை ரூ.70 லட்சமாக உயர்த்துவது குறித்து தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அரசியல் கட்சிகள் கோரிக்கை

பாராளுமன்ற தேர்தலில், தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பு கடந்த 2009–ம் ஆண்டு ரூ.25 லட்சமாக இருந்தது. 2011–ம் ஆண்டு இது ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இருப்பினும் இந்த மூன்று ஆண்டுகளில் கடுமையாக விலைவாசி உயர்ந்து, பெரும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பினை உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே தேர்தலுக்கு உரிய வரம்பினை விட பல மடங்கு தொகையை வேட்பாளர்கள் செலவு செய்து, கணக்கில் குறைத்துக்காட்டுவதாகவும் புகார்கள் உள்ளன.

1¾ மடங்கு உயர்த்த...

இந்த நிலையில், டெல்லியில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பினை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். தற்போதைய செலவு வரம்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பினை உயர்த்துவது குறித்து தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பில் தற்போதைய அளவை விட 1¾ மடங்கு வரை உயர்த்தலாமா என பரிசீலிக்கப்படுகிறது.

ரூ.70 லட்சம் ஆகிறது

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில், பெரிய மாநிலங்களில் வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பினை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பை தற்போதைய அளவான ரூ.16 லட்சத்தை ரூ.28 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்த பரிசீலனை நடக்கிறது.

இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் இந்த வாரம் முடிவு எடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதும். எனவே வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பு உயர்த்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Feb 20, 2014 1:54 am

 பாராளுமன்றத் தேர்தல்: ப.சிதம்பரம் மீது ஷூ வீசியவருக்கு சீட் கொடுத்தது ஆம் ஆத்மி

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் 48 நாட்கள் பரபரப்பான ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி கட்சி அரசு, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு கிடைக்காததால் பதவி விலகியது. அதன் தாக்கம் மறைவதற்குள், வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் வகுப்பதில் அந்த கட்சி தீவிரம் காட்டியது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களைக்கொண்ட முதல் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சி மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் மீது கடந்த 2009ம் ஆண்டு ஷூ வீசியவருக்கு சீட் கொடுத்துள்ளது. ஜார்னயில் சிங் மேற்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார்.

1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என்று சிதம்பரம் கூறியதற்காக 2009ம் ஆண்டு சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டது. வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் சஜ்ஜன் குமார் மற்றும் ஜெகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டதற்கு சிதம்பரம் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்திய போது அதில் கோபம் அடைந்த ஜார்னயில் சிங் இவ்வாறு செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Feb 20, 2014 1:55 am

 2014 பாராளுமன்றத் தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

புதுடெல்லியில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேறாததால் டெல்லி முதல்–மந்திரி பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகினார். இந்நிலையில் அக்கட்சி பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி 20 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடுவார் என்றும் அசுதோஷ், மத்திய சட்டத்துறை மந்திரி கபில் சிபலை எதிர்த்து போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியிம் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி தமானியா, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நிதின் கட்காரியை எதிர்த்து நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் வங்கி அதிகாரி மீரா சென்யால் தெற்கு மும்பையில் மிலிந் தியோராவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மேதா பத்கார், கோகேந்திர யாதவ் மற்றும் முகுல் திரிபாதி ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அக்கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டம் நடைபெற்றது. அதில் விவாதிக்கபப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Feb 24, 2014 3:15 pm

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு ‘‘நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது’’

பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்

தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் குறித்து சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு

இந்தநிலையில் இது தொடர்பாக, சில கட்டுப்பாடுகளை விதித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் கே.அஜய் குமார் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இலவசங்கள் அறிவிப்பு

தமிழக அரசு இலவசங்கள் வழங்குவது குறித்து சுப்பிரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை 5–ந் தேதி வழங்கிய தீர்ப்பில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வழங்குவதாக அறிவிப்பது குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.

தேர்தல் அறிக்கைகளில் கூறப்படும் வாக்குறுதிகள் ஊழல் நடவடிக்கைகளுக்கு உதவுவதாக கருத முடியாது என்ற போதிலும், இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பது, வாக்காளர்களை கவர உதவும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. இது தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் ஆணிவேரையே அசைப்பது போல் அமைந்து விடும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த இந்த கருத்துகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்க்கப்பட்டு உள்ளன.

வாக்குறுதிகள்

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளிக்கக்கூடாது. நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி மாநில அரசு, மக்களுக்கு தெரிவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் அரசியல் சட்டத்தின் கொள்கைகளுக்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு விரோதமாகவும் இருக்கக்கூடாது.

தேர்தலை நியாயமாக நடத்தும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு முரணாகவும், வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தும் வகையிலான வாக்குறுதிகளையும் அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

மாறுபட்ட கருத்து

சமீபத்தில் தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போது, இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சில கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அறிக்கைகளில் இதுபோன்ற வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு அளிப்பது தங்களுக்கு உள்ள உரிமை என்றும், அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உதவும் என்றும் கூறினார்கள்.

அது ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துதான் என்ற போதிலும், அளிக்கப்படும் வாக்குறுதிகள் வேட்பாளர்களிடம் பாரபட்சமில்லாத நிலையை ஏற்படுத்துவதற்கும், தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தும் தேர்தல் கமிஷனின் நோக்கத்துக்கும் விரோதமாக அமைந்துவிடக்கூடாது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sat Mar 08, 2014 2:10 amஅ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகல்: கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்டு கூட்டாக அறிவிப்பு


பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட் டணியில் இணைந்து போட்டியிட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்து இருந்தன.

இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 4 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தன.

அவசர ஆலோசனை

அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது.

அ.தி.மு.க. சார்பில் அவர்களுக்கு தலா ஒரு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு கம்யூனிஸ்டு கட்சியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் பேட்டி அளித்த கட்சி நிர்வாகிகள் கூட்டணி பற்றி கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிப்பதாக தெரிவித்தனர்.

கூட்டணியில் இருந்து விலகல்

நேற்று மாலை 5 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லகண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் கள், சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்று அழைத்து சென்றார். அதனைத் தொடர்ந்து, இரு கட்சிகளின் நிர்வாகிகளும், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட் டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டுமா?, அல்லது மாற்று அணி அமைக் கலாமா? என்பது குறித்து விவாதித்தனர். இந்த கூட்டம் மாலை 7 மணி வரை நடந்தது. பின்னர் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக இருகட்சியினரும் கூட்டாக அறிவித்தனர்.

இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனித்து போட்டி

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிகளை முறியடிப்பதற்கு, தமிழகத்தில் அ.தி.மு.க.வோடு இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு கண்டு, போட்டியிடுவதென முடிவு செய்தோம். இதற்காக நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் அ.தி.மு.க. வின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை.

மேலும் 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தையும் தனித்தே தொடங்கி விட்ட சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ஒருங்கிணைந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்பாடு ஏற்படாதது ஏன்?

இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்தோம். இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அ.தி.மு.க.வின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை. அதற்குள் அ.தி.மு.க. தலைமை 40 தொகுதிகளுக்கும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தையும் மேற்கொண்டார்கள்.

இதனால் நாங்கள் கட்சியின் அவசர கூட்டத்தை கூட்டி விவாதித்தோம். இந்த கூட்டத்தில் நாங்கள் மக்களவை தேர்தலை இணைந்தே சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கு உங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதா? என்று தா.பாண்டியனிடம் கேட்கப்பட்டதற்கு, ‘நெருக்கடி என்பது எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, சமூகத்திற்கா னது’ என்று பதில் அளித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கு வேறு ஏதாவது காரணம் இருக் கிறதா? என்று கேட்கப்பட்டதற்கு, காரணத்தை குறித்து ஆய்வு செய்கின்ற நேரம் இப்போது இல்லை. எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உங்களை அழைத்து கண்டிப்பாக சொல்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:11 am

ஜெ., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்டாலின் வேண்டுகோள்

அரியலூர்: ""ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' என, மீன்சுருட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., கூட்டணி சார்பாக, சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வி.சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து, அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெறும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு, வரும் லோக்சபா தேர்தல் மூலம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்கள் செயல்பட வேண்டும்.கடந்த முறை சிதம்பரம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன், மீண்டும் போட்டியிடுகிறார். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பாகுபாடு இல்லாமல் செயல்பட்டவர் திருமாவளவன். அவரது வெற்றிக்கு, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:12 am

ஜெ., வை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம் : சிதம்பரம் கிண்டல்

காரைக்குடி:“முதல்வர் ஜெயலலிதாவை, அவர் கடைசியாக நடித்த 'நதியை தேடி வந்த கடல்' என்ற படத்தில் மட்டுமே பார்க்கலாம்,” என, காரைக்குடியில் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசினார்.சிவகங்கை தொகுதி சாக்கோட்டை ஒன்றியத்தில், தனது மகனும், காங்., வேட்பாளருமான கார்த்தியை ஆதரித்து, அவர் பேசியதாவது;'கடந்த ஐந்து ஆண்டில், தொகுதிக்கு என்ன செய்தோம்' என கேட்கின்றனர். அதை தொகுதி மக்களுக்கு பட்டியலாக வழங்கியுள்ளோம். இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிகோ போன்ற நாடுகளில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஆட்சி செய்கின்றனர்.

நம்நாட்டில், 35 வயதிற்கு கீழ், 83 கோடி பேர் உள்ளனர். 'நம் நாட்டை மட்டும், 'குடுகுடு கிழவர்கள்' ஏன் நிர்வகிக்க வேண்டும். எனவே தான், இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும்' என்றேன். அதன்படியே, 'ராகுல் தலைமையில் இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்' என காங்., முடிவு செய்துள்ளது.ஜெ., கால் மண்ணில் படாது. வானம் வழியே வந்து சென்றுவிடுவார். அவர் கடைசியாக, 1980ல் நடித்த 'நதியை தேடி வந்த கடல்' என்ற படத்தில் மட்டுமே அவரை பார்க்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:12 am

கரசேவையை பற்றி பேச கருணாநிதிக்கு அருகதையில்லை : கடலூரில் முதல்வர் ஜெ., ஆவேசம்

கடலூர்:கருணாநிதி, கரசேவைக்கு எதிரான கொள்கையுடையவர் என்றால், ஏன் பா.ஜ., கூட்டணியில் இருந்திருக்க வேண்டும். இதை பற்றி பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது,'' என, முதல்வர் ஜெ., கேள்வி எழுப்பினார்.

கடலூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து பிரசாரம் செய்த, தமிழக முதல்வர் ஜெ., பேசியதாவது:கடலூரில், 1982ல் என் அரசியல் பிரவேசம் துவங்கியது. எம்.ஜி.ஆர்., தலைமையில் நடந்த மாநாட்டில், பெண்ணின் பெருமை பற்றி பேச, அவர், என்னை அழைத்தார். அதே கடலூரில், 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.கடந்த, 10 ஆண்டுகளாக பல கொடுமைகள், இன்னல்கள், துன்பங்களை எதிர்கொண்டு வருகிறோம். இதற்கு, மத்திய காங்., கூட்டணி அரசின் தவறான கொள்கை, சர்வாதிகார போக்கு, தலைவிரித்தாடும் ஊழலும் தான் காரணம்.இந்திய நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அதிலிருந்து மீட்க நமக்குள்ள ஒரே வாய்ப்பு இந்த தேர்தல் தான். இந்த ஜனநாயகப் போரில் மக்கள் விரோத காங்., அரசை நீங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.மத்திய காங்., கட்டணி அரசு, எல்லா விதத்திலும் சாமான்ய மக்களுக்கு எதிரான போக்கை-யே கடைபிடித்து வந்தது. சில மாதங்கள் வரை ஒட்டி உறவாடிய, தி.மு.க., செய்த, '2ஜி' இமாலய ஊழலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தியதை மறந்து விடாதீர்கள்.

தமிழகத்திற்கு மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்துள்ளது இந்த அரசு. கடந்த, 33 மாத காலத்தில் என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் தர முடியுமோ அவ்வளவையும் அளித்து வருகிறேன்.'கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது, அ.தி.மு.க.,' என, கருணாநிதி, மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுகிறார். இதை நான் பலமுறை மறுத்திருக்கிறேன். ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொன்னால் அது உண்மையாகி விடும் என, கூறி வருகிறார்.கரசேவையை ஆதரித்த, ஆட்களை அனுப்பிய, பா.ஜ.,வின், 1999 முதல் 2003 வரையிலான, பா.ஜ., ஆட்சியில் அங்கம் வகித்து, வளமான இலாகாவை தி.மு.க., தானே பெற்றுக் கொண்டது.கருணாநிதி, கரசேவைக்கு எதிரான கொள்கையுடையவர் என்றால், ஏன் பா.ஜ., கூட்டணியில் இருந்திருக்க வேண்டும். இதை பற்றி பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது. இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:13 am

மோடி பிரதமராக வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி: தர்மபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்திய அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:14 am

நாட்டில் ஊழலை ஒழிக்க மோடியை தேர்வு செய்யுங்கள்: விஜயகாந்த் பேச்சு.

சிவகங்கை:“காங்.,- அ.தி.மு.க.,- தி.மு.க., ஆகிய கட்சிகளை வீட்டிற்கு அனுப்பாமல், துாங்கமாட்டேன்,” என, சிவகங்கை தேர்தல் பிரசாரத்தில், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பேசினார்.

பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து, சிவகங்கையில்,அவர் பேசியதாவது:இது மக்கள் கூட்டணி, வெற்றி கூட்டணி. உங்கள் ஓட்டு மோடிக்கு தான். சிவகங்கை, இன்றைக்கும் பின்தங்கியே உள்ளது. சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஏரி, குளம் வறண்டு, குடிநீர் கூட கிடைக்கவில்லை. ஆனால், மத்திய அமைச்சர் ஒருவர் இருப்பதாக பெயர் மட்டும் தான் உள்ளது. இத்தேர்தல் பிரசாரங்களில், அ.தி.மு.க.,- காங்., ஆகிய இரு கட்சிகளும் குறைகளை அடுக்கி கொண்டே செல்கின்றனர். இங்கு, எப்படி சிதம்பரம் ஜெயித்தார். ராஜகண்ணப்பனை, ஜெ., விட்டு கொடுக்க செய்து தான் ஜெயித்துள்ளார். அ.தி.மு.க., - காங்., இடையே தொடர்பு உள்ளது. இங்கு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. மானாமதுரையில், இது வரை ஸ்டீல் பேக்டரி திறப்பதாக சொல்லியும், திறக்கவில்லை. கிராபைட் ஆலை விரிவுபடுத்தும் பணி கிடப்பில் உள்ளது.

நன்கு படித்த சிவகங்கை இளைஞர்கள், பிழைப்பிற்காக வெளிநாடு, பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர்.அடிக்கடி சிவகங்கை வரும், நிதி அமைச்சர் சிதம்பரம்,
வங்கி, ஏ.டி.எம்.,களை மட்டுமே திறந்து வைப்பார்.இவை ஏழைகளுக்கு உதவுமா. நாட்டில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இதற்கு காரணம் ஜெ., மற்றும் காங்., அரசு தான். போலீசார், ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளனர்.சிவகங்கை, சிங்கப்பூர் ஆக்குவேன் என்றார்கள். ஆனால், இன்றைக்கும், இந்த நகரம் குட்டிச்சுவராக தான் உள்ளது.இந்த முறை, சிதம்பரம் நிற்காமல், மகனை நிறுத்தியுள்ளார். தந்தையும், மகனும் அடித்த கொள்கைள் போதாதா?

2011 தேர்தலில், ஜெ., மற்றும் சிதம்பரத்தை நம்பி, இம்மாவட்ட மக்கள் ஏமாந்து விட்டீர்கள். 2016ல் தே.மு.தி.க., ஆட்சிக்கு வரும். நான் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவேன். நாட்டிற்கு ஊழல் வேண்டாம். ஊழலை ஒழிக்க, நரேந்திர மோடியை தேர்வு செய்யுங்கள். கூட்டணிக்குள் சண்டை போடுகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. இங்கிருந்து, இரவு 9 மணிக்கு மேல் பஸ் வசதியில்லை. காரைக்குடி- ராமேஸ்வரத்திற்கு சுற்றுச்சாலை திட்டம் கிடப்பில் உள்ளது.சிவகங்கை, மருத்துவ கல்லுாரியில் போதிய டாக்டர்கள் இல்லை. ஜெ.,ஹெலிகாப்டரில் பறக்கிறார். ரோட்டில் வந்தால் தானே ரோடு, சுகாதாரம் போன்று மக்கள் பிரச்னைகள் தெரியும். அ.தி.மு.க.,- தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், மக்களை ஏமாற்றுகின்றனர். இதுபோதாதென, காங்., கட்சியும், மக்களை ஏமாற்றுகிறது. காங்.,- அ.தி.மு.க.,- தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பும் வரை, துாங்கமாட்டேன், என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:15 am

லோக்சபா தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவுக்கு தைரியம் உள்ளதா? : பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

""பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பிரதமர் கனவில் உள்ள, ஜெயலலிதாவிற்கு, ஏதாவது ஒரு லோக்சபா தொகுதியில் போட்டியிட தைரியம் உள்ளதா?'' என, விஜயகாந்த் மனைவி பிரேமலதா கேள்வி எழுப்பினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு உட்பட்ட, பெரியபாளையத்தில், நேற்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது, அவர் பேசியதாவது:

சகாப்தம் படைக்கும் : ஊழல் கட்சிகளுக்கு, சவுக்கடி கொடுக்கப்போகும் கூட்டணியாக, பா.ஜ., கூட்டணி அமைந்து உள்ளது. இக்கூட்டணி, லோக்சபா தேர்தலில் சகாப்தம் படைக்கும். அ.தி.மு.க., தி.மு.க.,வினர், மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்களே தவிர, அதை நிறைவேற்றவில்லை.

திருவள்ளூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.பி., ஓட்டுக்கேட்க வந்தபோது, காலி குடங்களுடன், மக்கள் குடிநீர் கேட்டு போராடி, அவரை விரட்டி அடித்துள்ளனர். அனைத்து இடங்களிலும், குடிநீர் பிரச்னை உள்ளது. பா.ஜ., கூட்டணி, மாபெரும் வெற்றி அடையும்போது, பல ஆண்டுகால மக்கள் பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்படும். அ.தி.மு.க.,வை, "டில்லி செங்கோட்டைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ்' என, முதல்வர் ஜெ., சொல்கிறார். ஆனால், ஜெயலலிதாவும், கருணாநிதியும், தங்கள் கட்சியின், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. முதலில், தன்னை பிரதமராக முன்னிலைப் படுத்தி, கட்சியினரை பேனர் வைக்க சொன்னார் ஜெயலலிதா. ஆனால், அ.தி.மு.க.,விற்கு வெற்றி கிடைக்காது என, தெரிந்ததும், மத்திய அரசில், அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் என, மாற்றி பேசி வருகிறார். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பிரதமர் கனவில் உள்ள, ஜெயலலிதாவுக்கு, ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தைரியம் இருக்கிறதா? கனவு காணும் உரிமை, அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா கனவிற்கு மட்டும், அளவே இல்லாமல் போய்விட்டது.நாட்டில், காங்., அல்லது பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, பிரதமராக முடியும். ஜெயலலிதா பிரதமர் கனவு காண்பது, வேடிக்கையாக உள்ளது. கடந்த, 10 நாட்களாக, ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர், மக்களை சந்தித்து வருகின்றனர். இதில், யார் சொல்வது உண்மை; யார் சொல்வது பொய்; எதை நம்பவேண்டும்; எதை நம்பக்கூடாது என்ற குழப்பம், மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

பொய் வாக்குறுதிகள் : நல்லவர்களை தேர்ந்தெடுப்பதில், மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, பொய் வாக்குறுதிகளை அ.தி.மு.க.,- - தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் தேவையா அல்லது நீண்ட கால தமிழக பிரச்னைகள் தீர வேண்டுமா என்பதை சிந்தித்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும். மக்களுக்கு தரமான தண்ணீரை, இலவசமாக கொடுக்க வேண்டியது, அரசின் கடமை.
பாட்டிலில் தண்ணீரை அடைத்து, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவல ஆட்சி, தமிழகத்தில் தான் நடக்கிறது. தெரு, சந்து என, எல்லா இடத்திலும், "டாஸ்மாக்' கடைகளை திறந்து, மக்களை குடிக்க வைத்து, சீரழித்ததே, இந்த அரசின் ஒரே சாதனை. பா.ஜ., கூட்டணிக்கு, மக்கள் சிந்தாமல், சிதறாமல் அளிக்கும் ஓட்டே, நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கும். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், நரேந்திர மோடி செய்து கொடுப்பார். ஜெயலலிதா, 45 நிமிடம் பிரசாரம் செய்வதற்காக, தமிழக பெண்கள், ஐந்து மணி நேரம் வெயி லில் காத்திருக்க வேண்டி உள்ளது. அவர் மட்டும், தனி விமானத்திலும், ஹெலிகாப்
டரிலும் வந்து செல்கிறார். இவ்வாறு, பிரேமலதா பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:24 am

7 முறை வென்றும் டிக்கெட் மறுப்பு: அத்வானி ஆதரவு எம்.பி. போர்க்கொடி

குஜராத் மாநிலம் ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற பாரதீய ஜனதா எம்.பி. ஹரின் பதக்கிற்கு கட்சி டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நடிகர் பரேஷ் ராவல் நிறுத்தப்பட்டுள்ளார்.

அத்வானியின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஹரின் பதக்கிற்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் ஆமதாபாத்தில் ஹரின் பதக் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்த தேர்தலில் பாரதீய ஜனதா டிக்கெட் வழங்கும் முறை, தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. வெளியில் இருந்து வந்தவர்களுக்கு கட்சி டிக்கெட் வழங்குவது எனக்கு வருத்தம் அளிக்கிறது” என கூறினார்.

மேலும், “அத்வானி, சுஷ்மா சுவராஜ், ஜஸ்வந்த்சிங் ஆகியோர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். எனினும் எனது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அவர்கள் அறிவுரை ஏதும் கூறவில்லை. எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3 நாளில் முடிவு எடுப்பேன்” எனவும் அவர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:27 am

40 தொகுதிகளையும் வென்று தாய்நாட்டை காப்போம்: கடலூரில் ஜெயலலிதா சூளுரை

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கடலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். மத்தியில் உள்ள சர்வாதிகார, ஊழல் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். தன்னலக்காரர்களுக்கு மக்களவை தேர்தலில் சவுக்கடி கொடுக்கவேண்டும்.

40 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். 40 தொகுதியிலும் வென்று தாய்நாட்டை காப்போம் என்று சூளுரைத்தார்.

மேலும், அதிமுக வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக நலன் பாதுகாக்கப்படும். திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என்று மத்திய அரசு மீதும், திமுக மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:28 am

மக்களவை தேர்தல்: தேமுதிக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முதல் கட்டமாக திருவள்ளூர், வடசென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல் ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு இருந்தார்.

இதில் நாமக்கல் வேட்பாளர் என்.மகேஷ்வரன் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார். இன்று நாமக்கல் உள்பட மீதம் உள்ள 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளரும் உயர் மட்டக்குழு உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் சேலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் தொகுதியில் என்.மகேஷ்வரனுக்குப் பதில் எஸ்.கே.வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2–வது வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:–

1. கள்ளக்குறிச்சி – டாக்டர் வி.பி.ஈஸ்வரன் (மருத்துவர் அணி செயலாளர்)

2. திருப்பூர் – என்.தினேஷ் குமார் (திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்)

3. கரூர் – என்.எஸ்.கிருஷ்ணன் (கரூர் மாவட்ட செயலாளர்)

4. விழுப்புரம் (தனி) – கே.உமாசங்கர் (விழுப்புரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர்)

5. சேலம் – எல்.கே.சுதீஷ் (உயர்மட்டக்குழு உறுப்பினர், இளைஞர் அணி செயலாளர்)

6. மத்திய சென்னை – பேராசிரியர் ஜே.கா.ரவீந்திரன்

7. கடலூர் – பேராசிரியர் ஆர்.ராமானுசம் (ஆசிரியர்– பட்டதாரி அணி துணை செயலாளர்)

8. திண்டுக்கல் – ஏ.கிருஷ்ணமூர்த்தி (திண்டுக்கல் மாவட்டம்)

9. திருநெல்வேலி – எஸ்.சிவனணைந்த பெருமாள் (மராட்டிய மாநில செயலாளர்)

10. நாமக்கல் – எஸ்.கே.வேல் (வழக்கறிஞர் அணி துணை செயலாளர்)

ஏற்கனவே வெளியிடப்பட்ட 4 தொகுதி வேட்பாளர்கள் விவரம்:–

1. திருவள்ளூர்– வி.யுவராஜ்

2. வடசென்னை– எம்.சவுந்தரபாண்டியன்

3. மதுரை – டி.சிவமுத்துக்குமார்.

4. திருச்சி - விஜயகுமார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by ayyasamy ram on Mon Mar 24, 2014 10:13 am

 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by ayyasamy ram on Mon Mar 24, 2014 11:20 am


--
மதுரை நாடாளுமன்ற தேர்தலில்
திருநங்கையான பாரதி கண்ணம்மா சுயேட்சையாக
போட்டியிடுகிறார்.

எம்.பி தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை
வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:46 pm

பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி: ஜஸ்வந்த் சிங் வேட்பு மனு தாக்கல்

ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட ஜஸ்வந்த் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதுவே தனது கடைசி தேர்தல் என்றும், தனது சொந்த ஊர் அமைந்துள்ள பார்மர் மாவட்டத்தில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு பார்மர் தொகுதியை ஒதுக்க கட்சி மேலிடம் மறுத்து விட்டது. சமீபத்தில் காங்கி ரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சோனாராம் சவுத்ரிக்கு அத்தொகுதியை ஒதுக்கப்பட்டது.

இதனால், அதிருப்தியடைந்த ஜஸ்ந்த் சிங், பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார்.

அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த 76 வயதான ஜஸ்வந்த் சிங், அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:47 pm

@ayyasamy ram wrote:
--
மதுரை நாடாளுமன்ற தேர்தலில்
திருநங்கையான பாரதி கண்ணம்மா சுயேட்சையாக
போட்டியிடுகிறார்.

எம்.பி தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை
வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--

யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்! ஆனால் டெபாசிட்டாவது கிடைக்க வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 8:22 pm

அமைச்சர்கள் தன் காலில் விழுந்து கும்பிட்டுவதை ஜெயலலிதா ரசிக்கிறார்: விஜயகாந்த்

திருச்சி: அமைச்சர்கள் காலில் விழுந்து கும்பிடுவதை ஜெயலலிதா ரசிக்கிறார் என்று திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த் கூறினார்.

திருச்சி காஜாப்பேட்டை பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய் குமாரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''கடந்த முறை வெற்றிப் பெற்றவர்தான் திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். எல்லாம் செய்து தருவதாக கூறிய எம்.பி. மீண்டும் ஓட்டுக்கேட்டு வருவார். இப்பவும் அதையே சொல்லுவார். எதுவும் செய்யமாட்டார்.

மின்சாரம், வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட மக்களுக்கு தேவையானதை செய்யாத, அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.வுக்கும் ஓட்டு போடாதீங்க. காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு திட்டத்தில் முதலில் கையெழுத்திட்டது தி.மு.க. இப்போது, அந்த  திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவிக்கிறது. கருணாநிதி ஐந்து முறையும், மூன்று முறை ஜெயலலிதாவும் முதல்வராக இருந்து நாட்டை கெடுத்துவிட்டனர். இந்த இரண்டு பேரையும், இரண்டு கட்சியையும் நாட்டைவிட்டே விரட்டணும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. குறிப்பாக திருச்சியில் மிக மோசமாக உள்ளது. நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை. ஸ்காட்லாந்துக்கு அடுத்தபடியாக ஒப்பிடப்படும் தமிழக போலீஸ் ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்காமல் தடுமாறுகிறது. அம்மா குடிநீர், அம்மா உணவகம்னு பேரு வச்சீங்களே அதைப்போல டாஸ்மாக் கடைகளுக்கும் 'அம்மா டாஸ்மாக்' என்று பெயர் வைக்க வேண்டியதுதானே.

சட்டசபையில் அனைவரும் ஜால்ரா அடிக்கிறார்கள். ஜெயலலிதா போகும்போது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரிசையாக நின்று தரையை பார்ப்பார்கள். ஏன் இங்கு நிற்கிறீர்கள், அனைவரும் போய் உங்களது துறை சம்மந்தமான வேலையை பாருங்கள் என்று சொல்லலாம் இல்லையா? ஆனால், சொல்ல மாட்டாங்க. ஏன் என்றால் அமைச்சர்கள் குனிந்து கும்பிடு போடுவதை அவங்க ரசிக்கிறாங்க. அவர்களை இப்படி பார்ப்பதில் அவருக்கு ஆசை அதிகம்" என்று பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 8:23 pm

குடிப்பழக்கம் உள்ளவர்கள் எனக்காக வாக்கு சேகரிக்க வேண்டாம்: வைகோ கண்டிப்பு!

விருதுநகர்: வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக போலீஸ் ஜீப்பிலும், 108 ஆம்புலன்சிலும் ஆளும் கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் பணம் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ள வைகோ, குடிப்பழக்கம் உள்ளவர்கள் தனக்காக வாக்கு சேகரிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகரில் இன்று (24ஆம் தேதி) தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ''பெரும் வணிகர்களாக விளங்கும் விருதுநகர் வியாபாரிகளைக் காக்க சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க நான் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறேன். இதை நிறைவேற்ற மோடி பிதமராக வேண்டும். தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளையும் சேர்க்காமலேயே மோடி பிரதமராவது உறுதி. பா.ஜ.க. 272 தொகுதிகளில் தனித்தும் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து மொத்தம் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும். இருப்பினும், தமிழகத்தின் ஆதரவை வலுப்படுத்தினால் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

ஜாதி, மதம், இனம் என எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் சமமாகக் கருதுபவன் நான். எல்லோருக்கும் நான் நண்பன். விருதுநகரில் தொழில்களைக் காப்பாற்ற எம்.பி.யாக இருந்தபோதும், இல்லாதபோதும் தொடர்ந்து போராடி வருகிறேன். காமராஜர் மணிமண்டபம் கட்டுவதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்தவன் நான். எங்கே தமிழனுக்குத் துன்பம் வந்தாலும் அதைத் தடுக்க போராடுவேன்.

வாக்காளர்களாகிய நீங்கள்தான் நீதிபதிகள். பணம் வெள்ளமாக வரப்போகிறது. அது உங்கள் பணம்தான். ரூ.1000 கோடிக்கு திட்டம் தீட்டினால் அதில் ரூ.200 கோடி கமிஷனாகப் போய்விடுகிறது. எனவே, அவர்களிடம் பணம் நிறைய உள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக போலீஸ் ஜீப்பிலும், 108 ஆம்புலன்சிலும் ஆளும் கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் பணம் கொண்டு செல்கிறனர். ஆனால் நான் நேர்மையானவன், நாணயமானவன். நீதிபதிகளாகிய நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்குங்கள். பம்பரம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்'' என்றார்.

மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி தாம் வேட்புமனுத் தாக்கல் செய்யப் போவதாகவும், அன்று மாலை விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தன்னை ஆதரித்து தமிழருவி மணியன் பேச இருப்பதாகவும் கூறிய அவர், குடிப்பழக்கம் உள்ளவர்கள் தனக்காக எங்கும் வாக்குக் கேட்கவோ, கட்சி அலுவலகத்திற்கோ செல்லக் கூடாது என்றும் கட்சியினருக்கு கண்டிப்புடன் கூறினார்.

தோப்பூர் பிரசாரம்

இதைத்தொடர்ந்து, விருதுநகர் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் வைகோ பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ''200ரூபாய் வருமானத்திற்காக வெயிலில் கிடந்து இளநீர் விற்கும் ஒரு ஏழை பெண் என்னிடம் வந்து 'என் ஓட்டு உங்களுக்குத்தான்' என்று கூறுகிறாள். அந்த அளவுக்கு ஏழை பெண்கள் மனதிலே, தாய்மார்கள் மனதிலே இடம் பெற்றிருக்கிறேன். இதற்கு என்ன காரணம்? வைகோவுக்கு ஜாதி தெரியாது. மதம் தெரியாது. அவன் மக்களுக்காக உழைப்பான் என நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது'' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 8:25 pm

இரட்டை இலை சின்னம்: தலைமை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார்!

புதுடெல்லி: சென்னையிலுள்ள சிற்றுந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை அழிக்கக்கோரி தி.மு.க. சார்பில் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இயக்கப்படும் சிற்றுந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை அழிக்க வேண்டும்; எம்.ஜி.ஆர். சமாதி நுழைவு வாயிலில் உள்ள இரட்டை இலை சின்னத்தையும் மறைக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம், டி.ஆர்.பாலு  உள்ளிட்ட திமுகவினர் மனு கொடுத்துள்ளனர். மேலும், டி.ஜி.பி. ராமானுஜம் தேர்தல் பணிகளை கவனிக்கக் கூடாது எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 8:29 pm

100 தலைப்புகளில் தி.மு.க., தேர்தல் அறிக்கை ;இந்தியா முழுவதும் மக்கள் நலப்பணியாளர்கள்

சென்னை: நதிகள் இணைப்பு, மத்திய அரசு தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதித்தல், தமிழ் ஆட்சிமொழி, இலங்கை தமிழர் காத்தல், கச்சத்தீவு மீட்பு, சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற உறுதி, நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் நலப்பணியாளர்கள், மகளிருக்கு 33 சத இட ஒதுக்கீடு, தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும், பெண்கள் பாதுகாப்பு சட்டம், சமூநீதி காத்தல், மதச்சார்பின்மை , கல்விக்கடன் விவசாயக்கடன் தள்ளுபடி என 100 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கட்சி தலைவர் கருணாநிதி அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். வெளியிடும் முன்னதாக கருணாநிதி நிருபர்களிடம் பேசியதாவது;

1916 ல் திராவிடர் உரிமைக்காக குரல் கொடுத்த தியாகராயரும், டாக்டர் நடேசனும் இணைந்து துவங்கிய இயக்கம், தொடர்ந்து 1925ல் பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம், தொடர்ந்து இந்தி திணிப்பு எதிர்ப்பு, போராட்டத்தினால் வலுப்பெற்றது. 1949 ல் இருந்து துவங்கிய தி.மு.க., ஏறக்குறைய 65 ஆண்டுகளாக தி.மு.க., மக்களுக்கு அரும்பாடு பட்டு வருகிறது.

இனம், மொழி, சமத்துவம், கலை, பண்பாடு, ஆகியவற்றை பாதுகாத்திட அயராது, ஒயாது தி.மு.க, பணியாற்றி வருகிறது. அன்றுமுதல் கொள்கை, லட்சியம் தடம் புரளாமல், பார்த்து வரும் வற்றாத ஜீவநதியாக தி.மு.க., பணியாற்றி வருகிறது. மாநில அரசியலில் மட்டுமின்றி, இந்தியாவில் வலுவான பொருளாதாரம் ஏற்பட, உலகளவில் நாட்டின் மதிப்பை உயர்த்திட தி.மு.க., பணியாற்றி வருகிறது. ஆல்போல் தழைத்து ஆசானாக விளங்கி வருகிறது. அராஜதாக்குதல், நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் என பல போராட்டங்களை கண்டு மக்கள் தொண்டே மகத்தான தொண்டு என முழங்கி பணியாற்றி வரும் கழகத்தை பாதுகாத்து வரும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இன்று வெளியாகும் தேர்தல் அறிக்கை 100 தலைப்புகளில் வாக்குறுதிகள் அளித்துள்ளோம். தமிழகத்திற்கு தி.மு.க.,எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் எங்களின் சாதனைகளையும் இந்த அறிக்கையில் விளக்கியுள்ளோம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

தூக்குத்தண்டனை ரத்து செய்ய வலியுறுத்தல்: தேர்தல் அறிக்கை முழு விவரம் வருமாறு: மத்திய அரசு அலுவகங்களில் மாநில மொழிக்கு இடம் ; மத நல்லிணக்க வரலாறு படைப்போம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம். தமிழ் உயர்நீதி மன்றத்தில் வழக்காடுமொழியாக்க பாடுபடுவோம் * மத்திய அரசு அலுவலகங்களில் மாநில மொழி ஆட்சி மொழியாக்குதல் * சமூகநீதி காத்தல், மதச்சார்பின்மை * சமத்துவபுரம் அமைத்தல்* மகளிர், முதியோர், குழந்தைகள், அரவாணி, மீனவர்கள், நெசவாளர், தொழிலாளர், சிறுபான்மை என அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு * தனியார் துறையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு*பழங்குடியினர் பட்டியலில் மீனவர்களுக்கு இடம் * ஈழத்தமிழர் காப்பதில் உறுதி * கச்சத்தீவு மீட்க நடவடிக்கை * தூக்குத்தண்டனை ரத்து செய்ய வலியுறுத்தல்* சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு * நெல் , கரும்பு, ஆகியவற்றுக்கு உரிய ஆதாரவிலை * விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல்

வருமான வரி உச்சவரம்பு ரூ. 6 லட்சம்

* 10 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை* 10 லட்சம் இளைஞர்களுக்கு மக்கள் பணியாளர் வேலை * அரசு சாரா அமைபு வாரியம் அமைத்தல் * பொதுத்துறையில் பாதுகாப்பு * ரயில், விமான போக்குவரத்து முன்னேற்றம்* பெண்கள் எதிரான குற்றத்திற்கு கடும் தண்டனை* நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு* தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிக அதிகாரம்* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வலியுறுத்தல்* ஒட்டுமொத்த வருவாயில் 60 சதம் மாநில அரசுக்கு பங்கிட்டு கொடுத்தல்* 10 ம்வகுப்பு படித்த 10 லட்சம் பேருக்கு சாலைப்பணியாளர் வேலை

பாம்பன் பகுதியில் புதிய ரயில்பாலம்

* காவிரி மேலாண் வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு * பெண்கள் வருமானவரி உச்சவரம்பு 7. 20 லட்சமாக நிர்ணயம்* தனிநபர் வருமான வரி 6 லட்சமாக உயர்வு* நதிகள் தேசியமயமாக்கல், நதிநீர் இணைப்பு * சுயமரியாதை திருமணத்திற்கு சட்டப்படி அங்கீகாரம்* சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் * குலசேகர பட்டனத்தில் 2வது விண் ஏவுதளம் அமைக்கப்படும்* தாழ்த்தப்பட்டோருக்கென சர்ச்சார் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தல் *ரங்கநாத்மிஸ்ரா குழு பரிந்துரைகள் இஸ்லாமியர்களுக்கு கிடைக்க வழிவகை * பாம்பன் பகுதியில் புதிய ரயில்பாலம்* புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து

* இந்தியாவை வளர்ந்த நாடுகளுடன் முதன்மையாக்க முயற்சி * சட்டவிரோத தடுப்பு சட்டத்தில் திருத்தம்* சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தல் * கல்வி வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு* திருநங்கைகள் 3வது பாலினமாக அங்கீகரித்தல்* மீனவர்களை பாதுகாத்திட தனி அமைச்சகம்* மத்திய அரசு தேர்வுகள் மாநில மொழியில் எழுத அனுமதித்தல்* குளச்சல் துறைமுகம் நவீனப்படுத்தப்படும்* சென்னை- மதுராவயல் பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றப்படும்*
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 8:30 pm

ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அபத்தம்! நாட்டின் பெயரை மாற்ற ஒப்புக் கொள்ளுமா பா.ஜ.,?

நாட்டின் பெயரை, 'இந்திய ஐக்கிய நாடுகள்' என்று மாற்ற வேண்டும்' என, அபத்தமான கோரிக்கை, வைகோ நேற்று வெளியிட்ட, ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 'தேசிய கட்சியும், தமிழகத்தில் ம.தி.மு.க., இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு தலைமை வகிப்பதுமான, பா.ஜ., இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமா?' என, அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ம.தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான, சென்னை தாயகத்தில், ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ வெளியிட, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.தேர்தல் அறிக்கையில், எட்டாவது பக்கத்தில், 'இந்திய ஐக்கிய நாடுகள் என, நாட்டின் பெயரில் மாற்றம் வேண்டும்; இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் - மறு ஆய்வு தேவை' என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள விவரம்:இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து, 64 ஆண்டுகளாகி விட்டது. தேவைக்கு ஏற்ப, இதுவரை, 98 முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது, அதன் நோக்கம், இந்தியாவில் கூட்டு ஆட்சி முறையை செயல்படுத்துவதாக இருந்தது. ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் முழங்கியவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, மத்திய அரசில் அளவற்ற அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டனர். மாநிலங்களின் கூட்டு அமைப்பு தான், இந்திய நாடாக ஒருங்கிணைத்து காட்சி தருகிறது என்பதை மறந்து விட்டனர். மாநிலங்கள், அதிகாரம் அற்ற வெறும் கூடுகளாகவே இருக்க வேண்டும் என, கருதுகின்றனர். இன்று, இந்தியா ஒற்றை ஆட்சி முறை நாடாக மாற்றப்பட்டு விட்டது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி, உண்மையான கூட்டு ஆட்சியை நிலை பெறச் செய்யவும், கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்த நாடு, 'இந்திய ஒன்றியம்' என, அழைக்கப்படுவதற்கு பதிலாக, 'இந்திய ஐக்கிய நாடுகள்' என, அழைக்கப்பட வேண்டும் என, ம.தி.மு.க., வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை, நிறைவேற்றுவதற்கான முன் முயற்சிகளை, ம.தி.மு.க., மேற்கொள்ளும்.மத்திய, மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டு ஆட்சி முறைக்கும், மாநில சுயாட்சி நிலைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ் மொழி உட்பட, 23 மொழிகளையும், மத்திய அரசு, ஆட்சி மொழியாக்க வேண்டும். இலங்கையில், ஐ.நா., சபை பொது ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதி நீரை நாட்டுடமையாக்கி, தேசிய நதிகளாக அறிவிக்க, மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம்:கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும், இலங்கையில் தமிழர் பகுதியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியாவில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, பல சர்ச்சைக்குரிய கோரிக்கைகள், தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. 'வைகோவின் சில கோரிக்கைகள், இந்திய நாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பவை. அவர் கட்சியை அங்கமாகக் கொண்டுள்ள கூட்டணி தலைமையான பா.ஜ., இது குறித்து என்ன செய்யப் போகிறது? இந்த விஷயத்தை, உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்: வைகோ உறுதி : சென்னை: தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்றால், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.அவரது பேட்டி: லோக்சபா தேர்தலில், தேசியஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி உருவாக காரணமாக இருந்த தமிழருவி மணியன், பொன் ராதாகிருஷ்ணன், ராமதாஸ், விஜயகாந்திற்கு என் நன்றி. தே.ஜ., கூட்டணிக்கான அறிவிப்பை, ராஜ்நாத்சிங் வெளியிட்ட போது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன். விருதுநகரில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், 'தேர்தல் களத்தில், பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த கட்சிகளுக்கு ஓட்டு போடுவதால் பலன் இல்லை; வெற்றி பெற போவதில்லை. உங்கள் ஓட்டுக்களை வீணாக்க வேண்டாம்' என, குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில், தே.ஜ., கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்றால், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும். காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த கட்சியின் ஆதரவில், வேறு எந்த கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும். இவ்வாறு வைகோ கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum