புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
75 Posts - 45%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
73 Posts - 44%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
4 Posts - 2%
bala_t
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
1 Post - 1%
prajai
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
1 Post - 1%
eraeravi
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
306 Posts - 43%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
290 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
6 Posts - 1%
prajai
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
5 Posts - 1%
manikavi
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 20 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 20 of 81 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 50 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 20 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 2:46 am

தாய்லாந்து ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது

தாய்லாந்து நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவ தளபதி பிரயுத் சான் ஓ சா, இன்று தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பின் போது அறிவித்தார். அங்கு கடந்த சில மாதங்களாகவே அரசியல் சூழ்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் ராணுவம் தற்போது ஆட்சியை கைப்பற்றியதாக சா தெரிவித்தார்.

அரசியல் சூழல் மேலும் மோசமாவதை தடுக்கவே ராணுவம் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் சா கூறினார். மக்கள் அமைதியாக நடந்துகொள்ளவேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் தங்களது வேலைகளை வழக்கம் போல் செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளிடம் ராணுவம் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு காணப்படாதது ராணுவத்தின் இம்முடிவுக்கு ஒரு காரணமாகும்.



உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 2:46 am

சீனாவில் 7 பேரை குத்திக் கொன்ற வாலிபர்

சீனாவில் சில மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் கண்ணில் கண்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்தார்கள். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சீனாவில் 7 பேரை வாலிபர் ஒருவர் குத்தி கொன்ற சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் உள்ள பிண்டிங்சன் என்ற இடத்தில் சம்பவம் நடந்துள்ளது. வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். அவர்களை கொன்றவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் அவர் தீவிரவாதி அல்ல என்பது தெரியவந்துள்ளது. உள்ளூர் தகராறில் அவர் 7 பேரை குத்தி கொன்றுள்ளார். நேற்று சீனாவில் பள்ளி ஒன்றில் 8 சிறுவர்களை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. இதற்கிடையே சீனாவின் பக்கத்து நாடான தைவானில் ரெயிலில் கல்லூரி மாணவர் ஒருவர் பயணிகளை சரமாரியாக குத்தினார் இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயமடைந்தனர்.




உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 3:28 am

சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தை தொடங்க ராஜபக்சே உத்தரவு!

கொழும்பு: சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை உடனடியாக தொடங்கும்படி இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே சம்பூரில், 500 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும் இதுவரை இந்த திட்டத்தை தொடங்க இலங்கை அதிபர் ராஜபக்சே ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மோடியை கடந்த 27ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து பேசினார். இதையடுத்து, இலங்கை திரும்பிய ராஜபக்சே சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தை உடனடியாக தொடங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 3:44 am

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் கர்ப்பிணி கல்லால் அடித்து கொலை

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காதல் திருமணம் செய்து கர்ப்பிணியான பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை உடனே எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். லாகூருக்கு அருகே உள்ள பைசலாபாத்தை சேர்ந்தவர் பர்சானா பர்வீன். இவர் 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி, ஜாரன்வாலாவை சேர்ந்த முகமது இக்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தனது மகளை முகமது இக்பால் ஏமாற்றி கடத்தி சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டதாக பர்சானாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை லாகூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு 2 தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கணவருடன் சாட்சியம் அளிக்க உயர் நீதிமன்றத்துக்கு பர்சானா வந்தார். அங்கு பர்சானாவின் தந்தை மற்றும் சகோதரர்கள் உட்பட 20 பேர் அவர்களை திடீரென சூழ்ந்து, பர்சானாவை வலுகட்டாயமாக அழைத்து செல்ல முயற்சித்தனர்.

அவர்களது முயற்சி தோற்று போகவே, உயர் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே பர்சானாவையும் முகமது இக்பாலையும் அந்த கும்பல் கல்லால் அடித்தனர். கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த கும்பலை தடுக்க முயற்சித்தனர். அப்போது அடி தாங்காமல் முகமது இக்பால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால், அவரது மனைவி பர்சானா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், பர்சானாவின் தந்தையை கைது செய்தனர். தப்பியோடிய சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் இதுபோன்ற குடும்ப கவுரவ கொலைகளுக்கு இதுவரை 900 இளம்பெண்கள் பலியாகி உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.

இது பற்றி விரிவாக விசாரணை நடத்தி, கவுரவ கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இளம்பெண்ணை கவுரவ கொலை செய்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அந்த சம்பவம் பற்றி உடனே விசாரித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப்புக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த கொடூரமான குற்றத்தை பொருத்துக் கொள்ள முடியாது. சட்டப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்Ó என்று நவாஸ் ஷெரீப் கூறினார்.



உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 3:50 am

விபத்தில் சிக்கி கொண்ட் அமெரிக்க தொழிலதிபரை காப்பாற்றிய மிஸ்டர் பீன்

தொலைக்காட்சியில் நடித்து குழந்தைகளை மகிழ்விக்கும் மிஸ்டர் பீன் விபத்தில் சிக்கிய தொழிலதிபர் ஒருவரையும் அவருடைய டிரைவரையும் காப்பாற்றியுள்ளார்.

தொலைக்காட்சியில் மிஸ்டர் பீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைப்பவர் நடைகர் ரோவன் அட்கின்சன்(வயது 59) இவர் நேற்று இத்தாலியில் தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது சாலை ஓரத்தில் ஒரு கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதை பார்த்தார். உடனடியாக காரை விட்டு இறங்கிய அட்கின்சன் விபத்து நடந்த காரினுள் சிக்கியவர்களை மீட்க உதவி செய்தார்.

பின்னர் உடனடியாக இந்தாலிய போலீசாருக்கும் மீட்புப்படையினர்களுக்கு போன் செய்து விபத்து குறித்த விவரங்களை கூறி உதவி கேட்டுள்ளார். விபத்தில் சிக்கியது அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர் என தெரிந்தது. மிஸ்டர் பீன் உதவியால் சரியான நேரத்தில் அமெரிக்க தொழிலதிபரும், அவருடைய டிரைவரும் காப்பாற்றப்பட்டனர்.டிரைவர் படுகாயம் அடைந்து உள்ளார் அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டார். மேலும் விபத்து நடந்த் இடந்ததியும் விபத்தில் பாதிக்க்பட்ட காரையும் அட்கின்சன் படம் எடுத்து கொண்டார்.

தொழில் அதிபர் ஓட்டி வந்தது.மெக்லர்ன் எப் 1 ஸ்போர்ட்ஸ் வகைகாராகும். இதே போல் ஒரு காரில் செல்லும் போது நடிகர் அட்கின்சன் 2011 விபத்தில் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிட தக்கது.

மிஸ்டர் பீன் அவர்களின் மனிதாபமானத்தை மீட்புக்குழுவினர்கள் பாராட்டினார்கள். நேற்றைய ஊடகங்களில் மிஸ்டர் பீன் செய்திகளே அதிகளவு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.



உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 30, 2014 11:45 am

மகிழ்ச்சி



கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 31, 2014 6:40 am


ஜப்பானில் சரக்கு கப்பல் வெடித்து சிதறியது

ஜப்பான் நாட்டின் மேற்கு கடற்கரையில் ஆயில் டேங்கர்களை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் வெடித்து சிதறியது.

ஹமேஜி துறைமுகம் அருகே நடந்த இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். மேலும் ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கிய 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 4 பேர் பலத்த தீக்காங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காணாமல் போன நபர் அந்த கப்பலின் கேப்டன் என்றும் கூறப்படுகிறது.

கப்பல் வெடித்ததற்கான காரணம் குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாக கடற்படை செய்தி தொடர்பாளரான கோஜி டக்கராடா தெரிவித்துள்ளார்.

கப்பல் வெடித்தவுடன் அதன் நடுப்பகுதி உடைந்ததாகவும், இந்த ஷோகோ மாரு கப்பல் 998 டன் சுமையை ஏற்றி செல்லும் திறன் கொண்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 31, 2014 6:40 am


அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்டதாக 5 இந்தியர்கள் மீது வழக்கு

அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் அமைந்துள்ள மைக்ரோபவர் கேரியர் இன்ஸ்டிடியூட் என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் சுரேஷ் ராநந்தானி (வயது 60), லலித் சாப்ரியா (54), அனிதா சாப்ரியா (49), சீமா ஷா (41), சமீர் ராநந்தானி (27).

இந்தியர்களான இவர்கள் விசா மோசடி, கல்வி நிதி உதவி மோசடி உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அரசாங்கத்தை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் பேரில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேன்ஹட்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 31, 2014 6:51 am

மதம் மாறிய திருமணத்துக்காக தூக்கு: சிறையில் பிரசவித்த மனைவியை சந்தித்த கணவர்

ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார். இதற்கிடையே இவர் மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஜோர்டான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இந்த வழக்கில் கடந்த 15-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மதம் மாறி திருமணம் செய்த மெரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நிறைமாத கர்ப்பிணியான 27 வயது மெரியம் தனது 20 மாத மகனுடன் கர்டோம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரசவ காலம் நெருங்குவதால் வெளி ஆஸ்பத்திரியில் அனுமதித்து மகப்பேறு பார்க்க வேண்டும் என்று அவரது கணவர் விடுத்த வேண்டுகோளை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை, சிறை ஆஸ்பத்தரியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவித்த மனைவியையும், பிறந்த குழந்தையும் பார்க்க மனு செய்த கணவர் டானியல் வானி-யின் கோரிக்கையை சிறை அலுவலர்கள் முதலில் மறுத்து விட்டனர்.

பின்னர், உயர் அதிகாரிகளை அணுகிய அவர், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சிறைக்கு சென்று மனைவியை பார்த்துப் பேசும் அனுமதியை பெற்றார். அதன்படி, நேற்று சிறைக்கு சென்ற அவர், மனைவியையும், மூத்த மகன் மற்றும் புதிதாக பிறந்த இளைய மகள் ஆகியோரையும் சந்தித்தார்.



உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:09 am

நரேந்திர மோடி கோரிக்கையை இலங்கை நிராகரித்தது ‘‘தமிழ் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் வழங்க முடியாது’’

மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற நரேந்திர மோடியின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

ஒப்பந்தம்

இந்தியா–இலங்கை இடையே 1987–ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, அரசியல் சட்டத்தில் 13–வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம், நில அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க இத்திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம், தமிழர்–சிங்களர் இடையிலான பதற்றம் தணியும் என்று கருதப்பட்டது.

ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த 13–வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை.

கோரிக்கை

இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது, தமிழர்களுடன் இணக்கமான உறவு நிலவ, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களுக்கு போலீஸ், நில அதிகாரங்களை வழங்க வேண்டும், 13–வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வற்புறுத்தினார்.

நிராகரிப்பு

இந்நிலையில், இந்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இலங்கை பாராளுமன்றத்தில் இதுபற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் கூறியதாவது:–

நரேந்திர மோடியுடன் அரசியல் சட்ட பிரச்சினைகள் குறித்து ராஜபக்சே விரிவாக விவாதிக்கவில்லை. ஆனால், மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெளிவாக கூறி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவுன்சிலர் கருத்து

அதே சமயத்தில், சட்டம்–ஒழுங்கை பராமரிக்க மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் அவசியம் என்று தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண சபையின் கவுன்சிலர் பிரிமஸ் சிரைவா கூறியுள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 20 of 81 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 50 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக