ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகச் செய்திகள்!

Page 5 of 26 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26  Next

View previous topic View next topic Go down

உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலிஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: உலகச் செய்திகள்!

Post by ராஜா on Mon Dec 30, 2013 12:25 pm

@சிவா wrote:காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு
ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. .
சரியான ரவுடி பாம்பா இருக்கும் போல , கொன்னுட்டு தப்பி ஓடியிருக்குது , இப்ப போலீஸ் வலைவீசி தேடிவருவார்களே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Dec 30, 2013 4:19 pm

டிசம்பர் 31 பேரணியில் சமரசம் கிடையாது – சாஹிட் எச்சரிக்கைவிலையேற்றத்தை மையமாக வைத்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு எந்த ஒரு கருணையோ அல்லது சமரசமோ காட்ட மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியுள்ளார்.

டத்தாரான் மெர்டேகாவில் நாளை நடக்கவுள்ள இந்த பேரணியில் மக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த பேரணி எதிர்கட்சியினரின் ‘சூழ்ச்சி அரசியல் கலாச்சாரம்’ என்றும் சாஹிட் விமர்சித்துள்ளார்.

இது போன்ற எதிர்மறையான அரசியல் கலாச்சாரத்தை தவிர்த்து பேரணியை உடனடியாக நிறுத்துமாறும், எதிர்கட்சியினர் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் சாஹிட் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே பாஸ் உலாமா தலைவர் ஹாரும் தாயிப் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தில், “இந்த புதுவருட பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு அல்ல. அரசாங்கம் தான் அப்படி கூறிக்கொள்கிறது. இந்த பேரணியில் எந்த ஒரு கலகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒருவேளை அரசாங்கம் அடாவடித்தனமாக ஏதாவது செய்தால் கலகம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது ” என்று தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Dec 31, 2013 4:10 pm

வங்காளதேசத்தில் தொடரும் வன்முறை; அரசியல் கட்சிகள் பேசி தீர்வு காண வேண்டும் - அமெரிக்கா

வங்காளதேசத்தில் வருகிற 5-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதை முன்னாள் பிரதமர் கலிதா ஜியா புறக்கணித்து விட்டார். அதோடு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பேரணி, போராட்டம் நடக்கிறது. இதனால் வன்முறை வெடித்து பலர் உயிர் இழந்தனர். தேர்தல் அமைதியாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வன்முறை சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அமைதியா தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Dec 31, 2013 4:12 pm

  புதுவருட பிறப்பை முன்னிட்டு பாம் ஜுமேரா தீவில் மிகப்பெரிய வானவேடிக்கை - துபாய் திட்டம்

உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக புர்ஜ் துபாய் அல்லது "புர்ஜ் காலிஃபா"  திகழ்கிறது. அமீரகங்களின் வெற்றிச் சின்னமாக இக்கட்டிடம் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்டப்பட்டது.  இக்கட்டடத்தில் உலகின் மிகப்பெரிய மசூதி, நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் என பல வசதிகள் உள்ளன. மேலும் மணல்,  பாறைகளை கொண்டு புதிய தீவை உறுவாக்கியும் துபாய் ஆச்சரியப்படுத்தியது.

பல்வேறு சிற்ப்பான செயல்களை செய்த துபாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் மிகப்பெரிய வானவேடிக்கையை நடத்த துபாய் திட்டமிட்டுள்ளது.

புதுவருடம் பிறப்பதை முன்னிட்டு இன்று இந்த வானவேடிக்கையை துபாய் நடத்த உள்ளது. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனை மிஞ்சும் அளவுக்கு,  ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000  வெடிகளை வெடித்து மிகப்பெரிய வானவேடிக்கையை காட்ட உள்ளது. இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வான்வேடிக்கையை நிகழ்த்தப்பட உள்ளது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவில் இந்த வானவேடிக்கை நடத்தப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Dec 31, 2013 4:12 pm

 கிழக்கு ஜப்பானில் 5.4. அளவுள்ள நிலநடுக்கம்; டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின

கிழக்கு ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 3.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 8 நிமிடங்கள் கழித்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் தலைநகர் டோக்கியோவில் கட்டிடங்கள் குழுங்கியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. புகுஷிமா அணு உலைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Dec 31, 2013 4:13 pm

 இலங்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கடற்படை வீரர்

இலங்கையில் திரிகோணமலை மாவட்டம்- குச்சவெளி பகுதியில் உள்ள திரியாய் கடற்படை முகாம் அருகே உள்ள வீட்டில் 4 வயது சிறுமியை , கடற்படை வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது சகோதரி சத்தமிட உள்ளார் உடனே அந்த வீரர் கடற்படை முகாமுக்குள் தப்பி சென்று விட்டார்.  சிறுமி பரிசோதனைக்காக  திரிகோண மலை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் கடற்படை வீரர் இல்லை என்றும் அவர் முகாமின் சமையல்காரர் என்றும் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Dec 31, 2013 4:13 pm

 தேவயானி வழக்கை கைவிடும் எண்ணத்தில் அமெரிக்கா இல்லை ’மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை’

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த தகவல் கிடைத்த உடனேயே அமெரிக்க தூதர் நான்சிபவலை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும், தேவயானி மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இங்கு பணியாற்றி வருகிற அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இந்தியா பறித்துள்ளது. இந்த விவகாரம் காரணமாக இரு தரப்பு தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையிலும் இல்லாத அளவுக்கு இந்தியா இந்த பிரச்சினையில் இப்படி உறுதியான நிலைப்பாட்டினை எடுத்திருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில் தேவயானி வழக்கு விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா வந்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. தேவயானிக்கு எதிரான வழக்கை தொடரவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஜனவரி 13ம் தேதிக்குள் தேவயானி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் தேவையான ஆவணங்களை அமெரிக்கா சேகரித்து வருகிறது.

ஐ.நா.வின் அந்தஸ்து தேவயானிக்கு கிடைத்துவிட்டால் வழக்கு தொரப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. ஆனால் வழக்கு ரத்து செய்யப்படாமல் நிலுவையில் இருக்கும். தேவயானி விவகாரத்தில் சமரச தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் இத்தகைய தகவல்கள் வெளியாகியுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Feb 19, 2014 3:59 pm


23 ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு தலிபான்களோடு பேச்சு வார்த்தை ரத்து: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் எல்லையில் இருந்து தலிபான்களால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்கள் 23 பேரின் தலையை தலிபான்கள் துண்டித்தனர். இதனையடுத்து தலிபான்களோடு பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தலிபான்களோடு கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் அரசின் குழுவினர் ரகசிய இடத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனாலும் தலிபான் தரப்பில் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் நிகழ்த்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தலிபானின் ஆதரவு அமைப்பான மொகந்த் ஏஜென்சி என்ற அமைப்பு வீடியோ டேப் ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்த 2010ம் ஆண்டு 23 ராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் சார்பில் உருது மொழியில் எழுதப்பட்ட ஒரு பக்க அறிக்கை ஒன்று வெளியானது.

அந்த அறிக்கையில் எல்லை பகுதியில் இருந்து அவ்வாறு கடத்தி கொண்டு செல்லப்பட்ட 23 ராணுவ வீரர் களையும் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக தலை துண்டித்து கொன்று விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Wed Feb 19, 2014 8:59 pm

@சிவா wrote:
23 ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு தலிபான்களோடு பேச்சு வார்த்தை ரத்து: பாகிஸ்தானில் பரபரப்பு


வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Feb 19, 2014 11:32 pm

 சிகிச்சையில் அதிருப்தி; டாக்டர் இரும்பு கம்பியால் அடித்து கொலை

சீனாவில் சிகிச்சையில அதிருப்தி அடைந்த நோயாளி ஒருவர் சிகிச்சை அளித்த டாக்டரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டார்.

சீனாவின் ஹிலாங்ஜியங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கண், காது மற்றும் தொண்டை பிரிவிற்கான தலைமை டாக்டராக இருந்தவர் சன் டாங்டோ. அவர் காலை மருத்துமனையில் வேலை செய்ய தொடங்கிய போது அவரை ஒருவர் இரும்பு தடியால் பலமாக அடித்துவிட்டார். இதில் காயம் அடைந்த சன் டாங்டோ உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சன் டாங்டோ சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.

அவரை அடித்தவர் அவரிடம் மூக்கு பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றவர் என்று தெரிவந்துள்ளது. அவரின் சிகிச்சையில் அதிருப்தி அடைந்த நபர் அவ்வாறு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Sat Mar 01, 2014 8:40 am

.

.ரஷ்சிய துருப்புகள் உக்ரைனி நாட்டில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ஏறத்தாழ கைபற்றி விட்டனர் ..அங்கு உள்ள இரு விமான நிலையங்கள் இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது ..உக்ரைனின் இடைக்கால பிரதமர் அவர்கள் வெளியேற 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளார் ..இல்லையெனில் ரஷ்ய துருப்புகளை தாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக செய்தி

போர் மூளும் சூழல் நிலவுவதாக ஆய்வாளர்கள் கருத்து
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by ராஜா on Sat Mar 01, 2014 11:33 am

@SajeevJino wrote:.

.ரஷ்சிய துருப்புகள் உக்ரைனி நாட்டில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ஏறத்தாழ கைபற்றி விட்டனர் ..அங்கு உள்ள இரு விமான நிலையங்கள் இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது ..உக்ரைனின் இடைக்கால பிரதமர் அவர்கள் வெளியேற 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளார் ..இல்லையெனில் ரஷ்ய துருப்புகளை தாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக செய்தி

போர் மூளும் சூழல் நிலவுவதாக ஆய்வாளர்கள் கருத்து
 சோகம் சோகம் 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Mar 07, 2014 11:30 pm

மலேசியா: கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடையால் 3.6 மில்லியன் பேர் பாதிக்கப்படுவர்

சிலாங்கூர் நீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் மார்ச் 10-இல் அமல்படுத்தப்படும்போது 3.6 மில்லியன் பேர் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படலாம் என தேசிய தண்ணீர் சேவை ஆணையம்(ஸ்பான்) கூறியது.

சிலாங்கூர் அரசு, சுங்கை சிலாங்கூர் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடும் நீரின் அளவை மேலும் குறைக்க முடிவு செய்திருப்பதன் விளைவு இது என ஸ்பான் தலைமை செயல் அதிகாரி தியோ யென் ஹுவா கூறினார்.

“இரண்டாம் கட்டத்தில் 431,,000 வீடுகள் பாதிகக்ப்பட்டன. மூன்றாம் கட்டத்தில் 722,032 வீடுகள் அதாவது 3.6 மில்லியன் பேர் பாதிக்கப்படுவர்”, என்றாரவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Mar 07, 2014 11:34 pm

இளம் ஜோடி சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்இளம் ஜோடி சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்ஷா ஆலாம்: திருமண கோலம் காணவிருந்த இளம் ஜோடி நேற்று முந்தினம் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்

இருவீட்டார் சம்மதத்துடன் இல்லறத்தில் இணைய இருந்த இவர்கள் இப்படி விபத்தில் பலியாவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை சுரேஸ்சின் தந்தை நேற்று கிள்ளான், தொங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனைச் சவக்கிடங்கில் தெரிவித்தார்.

அடுத்த வாரம் 13 ஆம் திகதி ஷா ஆலாம் திருமண பதிவிலாகாவில் பதிவு திருமணம் செய்ய இருந்த சுரேஸ் த/பெ பாலகிருஸ்ணன் ( 21 வயது ) மற்றும் லோகேஸ்வரி த.பெ முனியாண்டி ( வயது 20 ) ஆகியோர் பத்து தீகா கூட்டரசு பிரதேச நெடுஞ்சாலையில்,நேற்று முன்தினம் இரவு 9. மணிக்கு நிகழ்ந்த சாலை விபத்து நடந்தத அதே இடத்தினிலேயே உயிர் இழந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

கிள்ளான், தாமான் கெம்பீரா தெலுக்காடோங் குடிருப்பைச் சேர்ந்த பாலக்கிருஷ்ணன் – வசந்தி தம்பதியினரின் மூன்று பிள்ளைகளின் 2 ஆவது மகன் சுரேஸ்.

கோலாலம்பூர்,ஜாலான் அம்பாங் ஜிராத்தி டத்தோ கிரமாட் DPKL அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த முனியாண்டி–வசந்தி தம்பதியினரின் 4 ஆவது மகள் லோகேஸ்வரி ஆவார்.

இன்று தாமான் கெம்பீரா தெலுக்காடோங், என்ற முகவரியில் உள்ள எங்கள் இல்லத்திலிருந்து சுரேஸ்சின் நல்லுடல் எடுத்துச் சென்று கிள்ளான், சிம்பாங் லீமா மின்சுடலையில் எரியூட்டப்படுமென்றார் பாலக்கிருஷ்ணன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Mar 24, 2014 2:34 am

மலேசியா: காஜாங் இடைத்தேர்தல்: வான் அஸிஸா 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!மார்ச் 23 – இன்று நடைபெற்ற காஜாங் இடைத்தேர்தலில், பிகேஆர் மீண்டும் வெற்றி பெற்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.

பிகேஆர் வேட்பாளர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சியூ மெய் பன் -ஐ விட 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விபரம் பின்வருமாறு:-

பிகேஆர் வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் - 16,741

தே.மு வேட்பாளர் டத்தின் படுகா சியூ மெய் பன் – 11,362

பெரும்பான்மை – 5,379
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Mar 24, 2014 3:55 am

சிரியா விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி

சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கசாப் பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராளிகள் அரசுத்துருப்புகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசுத்துருப்புகளின் உதவிக்கு வந்த போர்விமானம் ஒன்றை தங்களின் வான்எல்லைக்குள் வந்ததாகக் கூறி துருக்கி அரசு இன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.

துருக்கியில் தனது ஆதரவாளர்கள் நடத்திய தேர்தல் பேரணியில் இந்தத் தகவலைத் தெரிவித்த துருக்கி பிரதமர் தையிப் எர்டோகன் தங்களுடைய வான் எல்லைக்குள் சிரியா விமானம் நுழைந்ததால் அதன் விளைவு கடினமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

ஆனால், போராளிகளின் நடவடிக்கை துருக்கி அரசால் ஆதரிக்கப்பட்டது என்று கூறும் சிரியா அரசுத்தரப்பு போராளிகளைக் கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபட்டிருந்த தங்களின் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றும் சிரியா தெரிவித்துள்ளது.

சிரியாவின் எல்லைப்பகுதிக்குள் தான் அந்த விமானம் இருந்ததாக ஆரம்பத் தகவல்கள் குறிப்பிட்டன என்று சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது.விமானம் சுடப்பட்ட போது விமானி தப்பித்ததாகவும் சிரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் நட்பு பாராட்டும் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் தொலைக்காட்சிப் பிரிவான அல் மனார் சிரியாவின் ஜெட் விமானத்தின் மீது துருக்கி இரண்டு ஏவுகணைகளை வீசி அழித்ததாகத் தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by ayyasamy ram on Mon Mar 24, 2014 7:47 am

மாயமான மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை
அதைத் தேடும் பணி தொடரும் என்றும், கறுப்புப் பெட்டியின்
சுழல் விளக்குகளுக்கு மின்னாற்றல் வழங்கும் மின்கலங்களின்
வாழ்நாளான 30 நாட்களைத் தாண்டினாலும் அது தொடரும்
என்றும் மலேசிய தற் காலிகப் போக்குவரத்து அமைச்சர்
ஹிஷாமுதின் ஹுசேன் தெரிவித்து உள்ளார்.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by ayyasamy ram on Mon Mar 24, 2014 7:49 amநடால்:
தென் ஆப்பிரிக்க அரசுப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு,
ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழி கள்
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாடத்திட்டத் தில்
சேர்க்கப்பட்டுள்ளன.

இங்குள்ள இந்திய வம்சா வளி மக்கள் 14 லட்சம் பேரின்
கோரிக்கையை அரசு ஏற்றது. இந்த மொழிகள் முதல்
கட்டமாக இந்திய வம் சாவளியினர் பெரும்பான்ம யாக
வசிக்கும் கவாசுலு - நடால் மாகாணத்தில் மூன்றாவது
மொழிப் பாடமாக, விருப்பப் பாடமாக கற்பிக்கப் படும்.
-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Apr 03, 2014 2:27 am

உக்ரைன் எல்லையில் இருக்கும் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுங்கள்: ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல்

உக்ரைனின் கிழக்கு எல்லைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்களை ரஷியா குவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. பாரீசில் அமெரிக்க மற்றும் ரஷிய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் எதிரொலியாக உக்ரைன் எல்லையில் இருந்து 10 ஆயிரம் வீரர்களை வெளியேற்ற ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.

ஆனால் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் அனைத்து வீரர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் எல்லையில் அதிக அளவில் வீரர்களை ரஷியா குவித்துள்ளது. அதில் சொற்ப அளவிலான வீரர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். இது போதுமானது அல்ல என்று தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Apr 03, 2014 2:27 am

 புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு

புகுஷிமா அணு உலையில் இருந்து வெளிப்படும் அதிக கதிர்வீச்சால்   குழந்தைகள் தைராய்டு புற்று நோயால் பாதிக்கபடட்டுள்ளனர் என ஐ.நா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
 
எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என   புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட ப்பத்து குறித்து ஆராய்ந்த  ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில்  கூறி உள்ளது.

 18 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் உள்ளனர் நடத்திய ஆய்வில்   1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள்  கதிரியக்கத்தால் பாதிக்கப்ட்டு உள்ளனர்.

கதிரியக்கம்  ஜப்பான் மக்களிடம் வெளிப்படுகிறது.   இதனால் தைராய்டு ,ரத்தம், மார்பகம்  மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் புற்று நோயின் விகிதம் அதிகரிக்கும்

ஜப்பானிய மக்கள்  சரியாக  இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் குழு தலைவர் கார்ல்-மேக்னஸ் லார்சன் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Apr 03, 2014 2:28 am

 அமெரிக்காவில் தந்தை மற்றும் வளர்ப்பு தாயால் கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவில் 5 வயது சிறுவனை மாடிப்படிகளுக்கு கீழே உள்ள பகுதியில் அவனது தந்தை மற்றும் வளர்ப்பு தாய் ஆகியோர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் தந்தை கைது செய்யப்பட்டார்.  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாரீஸ் கவுண்டி பகுதியில் வசித்து வரும் தம்பதியர் பிராட்லி பிளெய்மியர் மற்றும் டம்மி பிளெய்மியர்.

டம்மிக்கு வயது 33.  இவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்த தம்பதியரில் தந்தை பிராட்லிக்கு பிறந்த 5 வயது சிறுவன் ஒருவன் உள்ளான்.  டம்மி வளர்ப்பு தாயாக இருந்துள்ளார்.  ஆனால், சிறுவனை கொடுமைப்படுத்துவதாக போலீசாருக்கு கடந்த பிப்ரவரி 20ந்தேதி அருகில் இருப்பவர்களால் புகார் தெரிவிக்கப்பட்டது.  அப்பொழுது சிறுவனின் வீட்டிற்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பினர் மற்றும் போலீசார் அது குறித்து விசாரித்து விட்டு சென்றனர்.

அப்பொழுது அவர்கள் அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு சென்றதால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.  ஆனால், மீண்டும் கடந்த வியாழக்கிழமை போலீசாருக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்து சிறுவனை விசாரிக்க வீட்டுக்கு சென்றனர்.  அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய செய்தது.  அந்த சிறுவன், மிக குறைந்த எடையுடன் போதிய உணவு வழங்கப்படாமல், உடம்பில் காயங்களுடன் இருந்துள்ளான்.

வீட்டின் மாடிப்படி பகுதியின் கீழே உள்ள சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்தது.  இதனை அடுத்து வளர்ப்பு தாய் டம்மி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  எனினும், 2 ஆயிரம் அமெரிக்க டாலர் ஜாமீன் தொகை அளித்து அவர் தண்டனையில் இருந்து தப்பினார்.  பிராட்லிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சிறுவன் அவனது உண்மையான தாயிடம் தற்பொழுது ஒப்படைக்கப்பட்டு உள்ளான்.  பாதுகாப்பு கருதி தாய் மற்றும் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.  கடந்த 2 வருடங்களாக தாயை விட்டு பிரித்து வைக்கப்பட்ட சிறுவன் மீண்டும் தனது தாயுடன் சேர்ந்து விட்டான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Apr 03, 2014 2:30 am

 நிலநடுக்கத்திற்கு நன்றி கூறி தப்பி ஓட்டம் பிடித்த 300 பெண் கைதிகள்

சிலியில் 8.3 அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்த்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் பலியாகினர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கத்தை நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு அங்கு சிறையில் இருந்த 300 பெண் கைதிகள் நிலநடுக்கத்திற்கு நன்றி கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கைதிகள் தப்பி ஓடியதை அந்நாட்டு உள்துறை மந்திரி தெளிபடுத்தியுள்ளார். மேலும், 45 பெண் கைதிகளை போலீசார் விரட்டி பிடித்துவிட்டனர் என்றும் மற்றவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Apr 03, 2014 2:31 am

பர்வேஸ் முஷாரபுக்கு மரண தண்டனை?- தேசத் துரோகக் குற்றச்சாட்டை ஏற்றது நீதிமன்றம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.

1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் நாட்டை ஆண்டு வந்தார்.

அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் மற்றும் துபையில் தங்கி இருந்தார். ஏறக்குறைய தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டார் முஷாரப். எனினும், பதவி ஆசை அவரை விடவில்லை. கடந்த ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர் அங்கு தேர்தலில் நிற்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பாய்ந்தன.

இந்நிலையில், இதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். தன்னுடைய நோயைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்தார். மார்ச் 31-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் கட்டாயமாக ஆஜராக வேண்டும், இல்லையெனில் ஜாமீன் இல்லாத கைதுக்கு ஆளாக நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. இதையடுத்து திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது முஷாரப் ஆஜரானார்.

இந்த வழக்கில் இதுவரை 35 முறை வாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் முஷாரப் ஒரே ஒரு முறை மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்.

இதனிடையே துபாயில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தன் தாயைக் காண்பதற்கு முஷாரப் அனுமதி கேட்டிருந்தார். முஷாரப் வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

முஷாரபின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், அவரை வெளிநாடு செல்ல அனுமதிப்பதா வேண்டாமா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து விட்டது.

'நான் என் நாட்டின் நலனுக்காகத்தான் செய்தேன். ஆனால் என்னைக் கொடுங் கோலன் என்று சொல்வதைக் கேட்டு நான் வருந்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் பர்வேஸ் முஷாரப்.

மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க அளவுக்கு அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். அல்லது குறைந்தபட்சம் தன் ஆயுள்காலம் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க நேரிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Apr 03, 2014 6:14 pm

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்தார் முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.

ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான இருதய நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பர்வேஸ் முஷாரப் இன்று அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு மாற்றப்பட்டார்.

பாதுகாப்பு நிறைந்த பைசாபாத் - ரவால் டாம் சவுக் சாலையில் பர்வேஸ் முஷாரப் பாதுகாப்பு வாகனம் கடந்து சென்ற போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் ஒரு அடி அளவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் முன்னாள் அதிபர் முஷாரப்பை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் வெடிகுண்டு சாலை ஓரத்தில் இருந்த சாக்கடை அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்ப்குதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் மேலும் வெடிகுண்டுகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிரவாதிகள் குறி:

பர்வேஸ் முஷாரப்புக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேச துரோக குற்றச்சாட்டு:

பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் கடந்த 31-ம் தேதி ஏற்றுக் கொண்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் நாட்டை ஆண்டு வந்தார்.

அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் மற்றும் துபையில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Apr 03, 2014 6:15 pm

சிலியில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

சிலி நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று (புதன் கிழமை) 8.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 17 அதிர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்பட்டன என சிலி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சில அதிர்வுகள் சில நாட்களுக்கு இருக்கும் என சிலி பல்கலைக்கழக நில அதிர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 26 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum